Friday, December 25, 2009

உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் அவர்களுடையது. நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மனிதர்களுடையை தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார். மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தவறுகளையும் மன்னிக்க மாட்டார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது (வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள் நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு போதும்.

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.

ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள். மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள். மரமானது அதன் கனியால் அறியப்படும்.

விவிலியம், மத்தேயு, அதிகாரம் 5 முதல் 12.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com