இலங்கை கிறிக்கட்வீரர் இந்தியாவில் நைட் கிளப்பில் போட்டோசிராப்பரை மிரட்டினார்.
4-வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள நைட் கிளப்பிற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கை வீரர்களில் 7 பேர் போலீசுக்கு தெரிவிக்காமல் எந்த பாதுகாப்பும் இன்றி நள்ளிரவு 11 மணி அளவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியில் சென்றனர். இதில் 5 வீரர்கள் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி விட்டனர். ஆனால் சீனியர் வீரர் ஜெயசூர்யாவும், நட்சத்திர வீரர் தில்ஷனும் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு திரும்பவில்லை. அவர்கள் கிளப்பில் உள்ள பாரில் நன்றாக மது அருந்தி விட்டு கும்மாளமிட்டுள்ளனர். இளம் பெண் ஒருவருடன் உற்சாகமாக டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.
இந்த காட்சியை உள்ளூர் போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து விட்ட தில்ஷன் கோபத்துடன் அவரை நோக்கி வந்தார். `நான் யார் தெரியுமா? எப்படி நீ போட்டோ எடுக்கலாம் என்று அவரை திட்டினார். எடுக்கப்பட்ட படங்களை உடனடியாக அழிக்காவிட்டால் இங்கிருந்து போக முடியாது என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் படங்களை அழித்து விட்டார். இருப்பினும் தில்ஷன் கவனிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு போட்டோவை மட்டும் அவர் ரகசியமாக `சேவ்` செய்து இருந்தார். அந்த போட்டோ இப்போது வெளியாகி இருக்கிறது.
அதிகாலை 2 மணி வரை கிளப்பில் ஜாலியாக நேரத்தை செலவிட்ட தில்ஷனும், ஜெயசூர்யாவும் 4-வது ஒரு நாள் போட்டியில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment