மல்லாவியில் இருவர் காணமல்போன செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. உதய நாணயக்கார.
மல்லாவிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக, அல்லது காணமல்போயுள்ளதாக சில இணையத்தளங்களும் இணைய வானொலிகளும் செய்திகளை வெளியிட்டிருந்தது. அத்துடன் அவர்களது குழந்தைகள் இருவர் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமொன்றில் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறன சம்பவங்களுக்கு இடமில்லை என செய்தியை முற்றாக மறுத்ததுடன், வன்னியிலே மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள இடங்களில் சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ளதாகவும் மீள் குடியேறியுள்ள மக்கள் சிவில் அதிகாரிகளின் நிர்வாகத்திலேயே அங்குள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு அவ்வாறு புதிதாக குழந்தைகள் கொண்டுவரப்பட்டதான எவ்வித தகவல்களும் இல்லை என தெரிவித்த அவர், அதை வவுனியா அரசாங்க அதிபர் மட்டத்திலும், ஏனைய தொண்டர் நிறுவனங்களுடாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளமுடியும் எனவும் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment