Saturday, December 26, 2009

சென்ற் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பரபரப்பு பாப்பரசரை மோதிய பெண்.

கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வத்திக்கான் நகரில் புனித பீட்டர் தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.

நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 82 வயதான அவரை பலத்த பாதுகாப்புடன் ஆலய பாதுகாவலர்கள் அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதி அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது. பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் மீது பெண் ஒருவர் மோதி அவரை தரையில் தள்ளிவிட்ட சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார். போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
போப் ஆண்டவரைபின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த 87 வயதான பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதக்குரு ரோஜர் கிட்கரே கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் காலில் முறிவு ஏற்பட்டது. அவர் ஏற்கனவே உடல் நலக் குறைவுடன் இருந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com