"புதிய புலிகள்" பாரிய மனித பேரவலம் ஒன்றை உருவாக்க சதிமுயற்சி
முன்னாள் புலிப்போராளிகள் தங்கியுள்ள தடுப்பு முகாம் ஒன்றைத்தாக்குவதற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் புலியாதரவாளர்களால் உருவாக்கப்பட்ட
"புதிய புலிகள்" அமைப்பினர்கள் பாரிய திட்டம் நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பு முகாம்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் பலரை படுகொலை செய்து மாபெரும் மனிதபேரவலத்தை உண்டுபண்ணி நடைபெறவிருக்கும் ஐனதிபதி தேர்தலை குழப்பியடிக்கவும் அந்த பழியை இராணுவத்தினரின் மேல்போட்டு நாட்டை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டுவருவதற்கு பாரிய தாக்குதல் திட்டமொன்று
திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மனிதவுரிமை மீறல்கள் போர் குற்றசாட்டுகள் போன்றவற்றில் சிக்கியுள்ள இலங்கையரசை இந்த தாக்குதல் திட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்திடம் சரணடைய வைப்பதற்கான ஒரு திட்டமாகவே இத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய புலிகள் அமைப்பு படையணி ஒன்றுதான் இந்த திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள-பெயர் குறிப்பிட விரும்பாத-முகம் காட்ட விரும்பாத மனிதவுரிமை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
சரத்பொன்சேகா இராணுவத்தளபதி பதவியிலிருந்து விலகி அரசுடன் முரண்பட்டதிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டாக பிளவுபட்டுளதாகவும் அதில் ஒரு பகுதியினர் மகிந்த கோத்தபாய சார்பாகவும் மற்றைய பகுதியினர் சரத்பொன்சேகா சார்பாக இயங்குவதாகவும் தெரியவருகின்றது. இராணுவத்தினரில் பெரும்பான்மையினேர் சரத்பொன்சேகாவே ஐனாதிபதியாக வரவேண்டும் என எண்ணுவதாகவும் அவரையே வரவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேற்குல நாடுகளில் (குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த) உள்ள புலம்பெயர் புலியமைப்பினர்கள் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து நிதியும் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில்தான் சரத்பொன்சோகா தனது முதலாவது பத்திரிகையாளர் மாகாநாட்டிலியே புலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் சரி முன்னாள் புலி உறுப்பினர்கள் என்றாலும் சரி எனக்கு ஆதரவளிக்க முன்வந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன் என்பதை
தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் புலிகள் அமைப்பினரும் சரத்பொன்சேகா சார்பாக இயங்கும் இராணுவ புலனாய்வு பகுதியினரும் ஒருங்கிணைதே முன்னாள் போராளிகள் தங்கியிருக்கும் தடுப்பு முகாமொன்று எதிரான தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளது. அனேகமாக ஜனவரி 26க்கு முன்பாக நடத்தபடவுள்ள இத்தாக்குதல் மூலம் அப்பாவி சிறார்கள் பல ஆயிரக்கணக்கானோர்கள் அனியாயமாக பலியாகப்படப்போகிறார்கள்.
(புலம்பெயர் புலிகளை பொறுத்தவரை தலைவரை அம்போவென கை விட்டுவிட்டு படையினரிடம் சரணடைந்தவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகளாகும்.அதுவும் கழுத்தில் மாட்டியிருந்த சைனைற் குப்பியை எறிந்துவிட்டு படையினரிடம் சரணடைந்தவர்களை அவர்கள் எப்பவுமே மன்னிக்கபோவதில்லை. அவர்களை வைத்து கொண்டு யாராவது மீண்டும் போராட்டத்தை தொடங்குவார்கள் என மனப்பால் குடித்தவர்களுக்கு அதுவும் நிறைவேறவில்லை. புலம்பெயர் புலிகளை பொறுத்தவரை நாட்டில எப்படியாவது நாலு ஆமிக்காரர்களை யாராவது சுட்டுக்கொல்லவேண்டும் அப்பதான் அவர்கள் எனிவருங்காலங்களில் விழித்துக்கொள்வார்கள்)
இந்த புதிய புலி படையமைப்பினர் அவுஸ்ரேலியாவிலும் இந்தோநேசியாவின் சில தீவுப் பகுதிகளிலிருந்தும் இயங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் வன்னியிலிருந்து அடிக்கடி பயணம் செய்து வந்தவர்களாயினும் கடைசிகட்ட போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் நாடு திரும்பவில்லை என்பதோடு இவர்கள் கே.பி தலமையில் இயங்கி வந்தவர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இன்றும் இந்தோநேசியா கடல்வழியாக அவுஸ்திரோலியாவுக்கு
தப்பிபோகும் அகதிகளில் கணிசமானோர் முன்னாள் புலிகள் என்பதும், இவர்கள் பயணம்செய்யும் கப்பல்கள் யாவும் புலிகளுக்கு சொந்தமானவை. என்பதும் குறிபிடதக்கதாகும்
இந்த புதிய புலிகளின் அமைப்பானது 'தமிழ்நேசன்" தலைமயில் இயங்குவதாகவும் அதில் முக்கிய தளபதிகளாக கானகன் , கபிலன் போன்றோர் முக்கிய பொறுப்பிலிருந்த
இந்த அமைப்பை இயக்குவதாகவும் அவஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் முக்கிய
தமிழ் இணைய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment