பன்னிரண்டு ஆட்லறிகளை சீனா இலவசமாக வழங்கியிருந்தது. சரத் பொன்சேகா.
சீன அரசாகங்கம் 12 ஆட்லறிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கியதாக ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று சிரச ரிவிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது, இவ் யுத்தத்தின் நிமிர்த்தம் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பாரிய செலவுகள் எதையும் செய்யவில்லை எனவும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவிற்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மிகவும் ஆர்வம் இருந்ததாக தெரிவித்த அவர், அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சாரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தை தாம் ஜெயசிக்கு சண்டையில் ஈடுபட்டிருந்தபோது யுத்த முனைக்கு வந்து தம்முடன் பதுங்கு குழிகளில் நித்திரை கொள்ளாமல் பதுங்கியிருந்துள்ளார் எனவும் கூறியதுடன் சந்திரிகாவின் ஆட்சியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களே யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், சில துவக்குகள் , இயந்திர துப்பாக்கிகளை இவ்வரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் 125 மிமி ரக ஆட்லறி எறிகணைகளை பாவித்தாகவும் அதன் இருப்பு முடிந்தபோது வேறு வர்க்க எறிகணைகளை (தோட்டாக்கள்) சீனாவிடம் கொள்வனவு செய்தபோது அதற்கான ஆட்லறிகள் 12 இனை சீனா இலவசமாக வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஆட்சிக்குவந்தால் உங்களுடைய கடந்கால இராணுவ அனுபவம், உங்களிடம் இருக்கக்கூடிய இராணுவசிந்தனைகள் மற்றும் உங்களுக்கு பக்கபலமாக உள்ளோர் என்பவற்றை கொண்டு நீங்கள் இராணுவ ஆட்சி ஒன்றுக்கு செல்வீர்கள் எனப்பேசப்படுகின்றது. இதுபற்றி என்ன கூறுவீர்கள் எனக் கேட்டபோது. இராணுவ பலத்தை கொண்டு நாட்டை ஆட்சிசெய்யவேண்டும் என்ற மனநிலை உள்ளவராக நான் இருந்தால் இத்தனை காலமும் நான் காத்திருந்திருக்கவேண்டிய தேவை இல்லை, கடந்த காலத்தில் அதை சுலபமாக செய்திருப்பேன். 150 க்கு மேற்பட்ட பட்டாலியன்களை உருவாக்கி அவர்களை யுத்தமுனைக்கு அனுப்பியிருந்தேன். அவற்றில் 4 பட்டாலியன்களை கொழும்புக்கு இரவோடு இரவாக அழைத்து விடிவதற்கு முதல், ஆட்கள் நித்திரையால் எழுவதற்கு முன்னர் முழுக்கொழும்பையும் இராணுவ ஆட்சியினுள் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் நாம் ஒழுக்கமான இராணுவக் கட்டமைப்புடன் வழர்ந்து வந்திருக்கின்ற காரணத்தினால் அவ்வாறான ஒர் மனநிலை என்னிடம் எப்போதுமே உருவாகாது எனத் தெரிவித்துள்ளதுடன் தற்போதைய அரசாங்கம் ஒருவகையான இராணுவ ஆட்சியையே மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக 23 மேஜர் ஜெனரல் , பிரிகேடியர் தர அதிகாரிகள் அரசின் உயர் மட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒருவகையான இராணுவ ஆட்சியேயாகும். அத்துடன் எதிவரும் பொதுத் தேர்தலில் இராணுவ உயர் அதிகாரிகள் ஐவர் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெனரல் மல்லவாராச்சி அனுராதபுரத்திலும், ஜெனரல் தென்னக்கோண் குருநாகலிலும், ஜெனரல் சொய்சா ரத்தமவிலும், ஜெனரல் கருணாரத்ன களுத்தறையிலும், மேலும் ஒர் ஜெனரல் இன்னுமொரு தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். இவ்வாறான நிலையில் இன்றுள்ள அரசிற்கும் இராணுவ ஆட்சிக்கும் இடையேயான வேறுபாடு கிடையாது எனக் கூறினார்.
இந்திய அரசியல்வாதிகள் தொடர்பாக கடந்தகாலத்தில் நீங்கள் தெரிவித்திருந்த கருத்து மிகவும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. அது தொடர்பாக என்ன கூறுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் பொன்சேகா, இந்தியாவின் தமிழ் நாட்டிலே மிகவும் மதிப்புக்குரிய அரசியல்வாதிகள் உள்ளனர் எனவும், தான் அவ்வாறு தெரிவித்திருந்தது தமிழ் நாட்டில் உள்ள சகல அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாது எனவும் அக்கருத்து புலிகளை ஆதரித்து நிற்கின்ற இரு அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவுடன் தனக்கு பிரத்தியேகமாக நல்ல நட்பு உள்ளதாகவும் இந்தியா பிராந்தியத்திலே நன்மதிப்புள்ள எதிர்காலத்தில் மிகவும் பெரும் சக்தியாக திகழக்கூடயதொரு நாடு எனவும் அந்நாட்டுக்கு தனது மதிப்பு என்றும் உண்டெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா இப்பிராந்தியத்திலே உள்ள வல்லரசு அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பாடாமல் செயற்படவேண்டியது எமது கடமையாகும். அவ்வாறே அவர்களும் செய்படுகின்றார்கள் எனவும் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment