தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்புகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமது அரசியல் சுத்துமாத்துக்களை தொடர இலங்கை திருப்பவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த காலங்களில் பல வெளிநாடுகளுக்கும் சென்று புலிகள் சார்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், குதிரை கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் இலங்கை அரசிற்கு எதிரான மிகவும் சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.
புலிகள் சார்பாக தாம் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கையின் இறைமையை மீறியதும், சட்டரீதியாக அணுகப்படும்போது தண்டனைக்குரிய குற்றமாக நிரூபனமாக்கூடியது என்பதையும் உணர்ந்திருந்த இவர்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நாடு திரும்பாமல் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அஞ்சாவாசம் புரிந்து வந்தனர்.
இவர்களில் குதிரை கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், செல்வம், சிவாஜிலிங்கம் ஆகியோர் நாடு திரும்புகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சக்திகள் ஊடாக அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நாடு திருப்புவதாக நம்பப்படுகின்றது.
நாடு திரும்பும் இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி அல்லது அக்கூட்டமைப்பினுள் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கு வழங்குவார்கள் என இவர்கள் சார்பாக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சக்கிகள் அரசிற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
புலிகளை தமிழ் மக்கள் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உலகிற்கு பறைசாற்றும் நோக்கில் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் ஆயதக்குழுக்களான ரெலோ, ஈபிஆர்எல்எப், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் புலிகளின் அரசியல் துறையின் வழிநடத்தலில் பொம்மைகளாக களம் இறங்கிய வேட்பாளர்களில் 22 பேர் வடகிழக்கில் இருந்து பாராளுமன்றம் சென்றனர். இவர்களில் பத்துபேர் மேற்குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சிளையும் சாராதவர்கள் என்துடன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என, தமது சுய லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கூத்தமைப்பினுள் புகுத்தப்பட்டவர்கள் ஆகும். புலிகளின் சிபார்சின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஈழவேந்தன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிபார்சில் வேட்பாளர் பட்டியலினுள் சேர்க்கப்பட்வர் என்பது முக்கியமான விடயமாகும்.
0 comments :
Post a Comment