குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்-
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கறுப்புப்பட்டி அணிந்து போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்றுகாலை 9மணிமுதல் கறுப்புப் பட்டிகளை தங்களது கைககளில் கட்டிக்கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வதிகாரிகள் சம்பள உயர்வு மற்றும் கடந்த 10வருடகாலமாக குறித்த திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் பதவியுயர்வு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் பகுதிகளிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளே இவ்வாறு கறுப்புப்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக பணியாற்றும் தமக்கு உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைவும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment