ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரிக்கப்படலாம்.
முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்க hழஅநöயனெ பாதுகாப்பு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க கிறீன்காட் எனும் நிரந்தர வதிவிட உரிமை கொண்டுள்ளவரான ஜெனரல் சரத்பொன்சேகா தனது வதிவிட அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள தனது துணைவியார் அனோமா சகிதம் அமெரிக்கா சென்றுன்றுள்ளபோது இந்நிலைமைய உருவாகியுள்ளது.
இலங்கையில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றபோது புலிகளினாலும், அரச தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், பயங்கர மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் கடந்த 22ம் திகதி 68 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 4ம் திகதி அமெரிக்க அதிகாரிகள் தமது அறிக்கையின் பிரகாரம் ஜெனரல் பொன்சேகாவுடன் கலந்துரையாடவுள்ளாக தெரியவருகின்றது.
அதேநேரம் ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள தனது சட்டத்தரணியின் ஆலொசனையை நாடியுள்ளதாகவும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட றேகன், ஜோர்ச் டபிள்யூ புஸ் ஆகியோருக்கான ஆலோசகராக செயற்பட்ட அனுபவம் கொண்டுள்ள அவரது சட்டத்தரணி நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுக்குமாறும், சகல வினாக்களுக்கும் நேர்மையாக பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளதாவும் மேலும் தெரியவருகின்றது.
அதே நேரம் குறிப்பிட்ட நேர்முகப்பரீட்சைக்கு ஜெனரல் சரத்பொன்சேகாவின் சுயவிருப்பின்பேரிலேயே வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளாரா என்பது தொடர்பாக இதுவரை சரியான தகவல்கள் வெளியாக வில்லை. அவர் குறிப்பிட்ட நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுக்க மறுத்தால் அமெரிக்க அதிகாரிகள் எவ்வாறான வழிமுறைகளை கையாள்வர் என்பது தெளிவில்லை.
அதே நேரம் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை ஜெனரல் சரத் எழுதியுள்ளதாகவும், அக்கடிதத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாதுகபாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சாட்சியம் கூறுமாறு தான் வேண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அக்கடிதத்தில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் தன்னை தனது மருமகனின் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டாக குறிப்பிடப்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment