Tuesday, October 6, 2009

பிரிட்டிஷ் அமைச்சர் /போஸ்டர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

மன்னாருக்கும் சென்று நிலைமைகள் ஆராய்வு.
சரணடைந்த புலிகளுடனும் கலந்துரையாடல்.


இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபோஸ்டர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு விஜயம் செய்தார்.

சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக்ஃபோஸ்டர் நேற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

எம். ஏ. ஜி. என்ற அமைப்பினர் நிலக்கண்ணி வெடி, மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கும் சென்று அவற்றின் பணிகள் குறித்தும் ஆராய்வார். மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான முன்னேற்பாடுகளாக நடைபெறும் மிதிவெடிகள் அகற்றும் பணியின் முன்னேற்றங்கள் குறித்து கண்டறியும் அவர் மெனிக் பாஃம் வலயம் இரண்டுக்கும் விஜயம் செய்வார்.

இங்கு பிரிட்டனின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் நடவடிக்கை கள் பற்றியும் ஆராய்வார்.

பிரிட்டனின் நிதி உதவியின் கீழ் இயங் கும் சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாம்களுக்கும் விஜயம் செய்தார். இறுதியாக பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு சென்ற அவரை அங்குள்ள சிறுவர், சிறுமியர்கள் வரவேற்ற னர்.

சரணடைந்தவர்களுள் சிறுமிகள் மற்றும் யுவதிகளின் தையல் கண்காட்சிகளையும் பார்வையிட்டார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக் போஸ்டருடன் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் கலாநிதி பீட்டர் ஹேய்ஸ் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தள்ளாடி முகாமுக்குச் சென்றார்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com