Friday, October 2, 2009

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கேரிய 9 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் இருந்து படகுமூலம் அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கேரியிருந்த 12 இலங்கையர்களில் 9 பேர் நாடு கடத்தப்படுகின்றனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியதை தொடர்ந்து
கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் அரசியல் தஞ்சம் தொடர்பான விசாரணைகள் மாநில நிதிமன்றில் இடம்பெற்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

நிராகரிப்புக்கு எதிராக அவர்களால் அவுஸ்திரேலிய அரசியல் தஞ்சம் தொடர்பான வீசேட நீதிமன்றில் மேல் முறையீடு செய்யபட்பட்டது. முறையீட்டை விசாரணை செய்த வீசேட நீதிமன்று அவர்கள் தொழில்தேடி வந்தவர்கள் என ஊர்ஜிதம் செய்து கொண்டதுடன் அவர்களை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கடந்த நவம்பரில் தஞ்சம் கோரிய 12 பேரில் இருவர் சுயவிருப்பின்பேரில் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர்.

ஓருவர் விமானப்படையின் விமானி.

இவர்களில் ஒருவர் விமானப் படையின் விமானி தென்னக்கோன் என தெரியவந்துள்ளது. அவர் தனது அரசியல் தஞ்சத்திற்கான காரணமாக, தான் விமானப்படையில் கடமையாற்றியபோது, இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்தமை புலிகளுக்கு தெரியவந்ததை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி Mr Rintoul, தென்னக்கோனை நாடுகடத்துவதனால் அவரது உயிருக்கு மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என மேல் முறையீடு செய்யதுள்ளதை தொடர்ந்து அவர் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவு பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விமானி தொடர்பாக எவ்வாறான முடிவை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுக்கும் என திட்டவட்டமாக எதுவும் கூறமுடியாது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயரிஸ்தானிகர் சேனக்க வலகம்பாய, நாடுகடத்தப்படுபவர்கள் 9 பேரும் சிங்களவர்கள் எனவும் அவர்கள் கரையோரப் பிரதேசங்களான சிலாம், நீர்கொழும்பு, மாறவில, கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com