Monday, September 7, 2009

அக்கரைப்பற்றில் TMVP காரியாலயத்தை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் .

அக்கரைப்பற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தை அகற்றக்கோரி அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பெரும் ஆர்பாட்டம் ஒன்றை நேற்று நண்பகல் நடாத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியநீலைவணை தொட்டு பொத்துவில் வரை பரந்து வாழும் தமிழ் மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டதை தொடர்ந்து அம்பாறைத் தமிழ் மக்கள், தொடர்சியாக தமது எதிர்ப்பைக் காட்டிவந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் பிள்ளையானுக்கு எதிராக பல கோஷங்களை கிளப்பியதுடன் பிள்ளையானது கொடும்பாவியினையும் எரித்து தமது பூரண எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் „அம்பாறை மாவட்டத்தில் வர்ஷாக்கள் இல்லை' பச்சிளம் பாலகியை கொன்ற கொலைஞர்களே வெளியேறுங்கள் என்றும் கோஷசம் எழுப்பியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தமது பாதணிகளை களற்றி பிள்ளiயானது காரியாலயத்தினுள் வீசினர்.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போவதை அறிந்த பிரதேச பொலிஸ் அத்தியட்சர் ஸ்தலத்திற்கு விரைந்து நாளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள காரியாலயத்தை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கலைந்து சென்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com