Sunday, June 21, 2009

இனி நமது சொந்தக்காலில் நிற்போம். – யஹியா வாஸித்- ( பாகம் – 4 )

( வவுனியாவிலிருந்து)

வடக்கின்வசந்தம்.180 நாட்களுக்கிடையில்இ நீங்கள் ஏது செய்கின்றீர்களோ எது செய்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வடக்கை வசந்தபுரி ஆக்கிகாட்ட வேண்டும். திஸ் ஓடர் புறம் அவர் பிறசிடன்ட். இவ்வாறுதான் சிறிலங்காவில் உள்ள அத்தனை அமைச்சர்களும், அமைச்சு உயர் அதுகாரிகளும், வர்த்தகநிறுவன உரிமையாளர்களும் சொல்லி வைத்தால் போல் ஒரே குரலில் சொல்கின்றார்கள்.

இல்லையே சிங்கள அரசுகள் தமிழ் முஸ்லீம் மக்களின் தலையைத்தடவி கழுத்தை அறுக்கப் போவதாக அல்லவா எல்லோரும் பேசிக்கொள்கின்றார்கள் என இடக்கு மடக்காக கேள்விகளை கேட்டபோது அந்த சுத்த சிங்கள அதிகாரிகளும்இ சிங்கள கிராமப்புற மக்களும் மனம்விட்டு பேசுகின்றார்கள்.

அது மாத்தறை பெலியத்த கிராமம். மகிந்த சகோதரயாவின் தாய்மண். ஜூன் 6ஆம் திகதி அக்கிராமத்தை ஒரு சுற்று வந்த போது யாழ்ப்பாணத்தில் 40வருடகாலமாக பேக்கரி வைத்துக் கொண்டிருந்தவரும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இறந்தவருமான ரணசிங்க முதலாளியின் (பேக்கரி நடாத்தியவர்) மகன்கள் மகள்கள்இ பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளம் யாழ்ப்பாணமக்கள், யாழ்ப்பாண சுருட்டு வாசனை, யாழ்ப்பாண பனாட்டு வாசனை, யாழ்ப்பாண கல்வி வாசனை, யாழ்ப்பாண மண்ணின் வாசனை என இரண்டு நாட்கள் கதை கதையாக சொல்லி அழுகின்றனர். இவ்வளவிற்கும் அவர்கள் 1982களில் அந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டவர்கள், அல்லது வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டவர்கள். அன்று தொடக்கம் சாகும் வரை மனநோயாளியாகவே இருந்து இறந்துள்ளார் றணசிங்க முதலாளி.

ஆனால் இன்னும் அவர்கள் யாழ்ப்பாணம் போக வேண்டும், அந்த மனிதத்தை நேசிக்கும் மக்ககளுடன் வாழவேண்டும், என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிப்பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறியதும் மூதூருக்கு வந்து வியாபாரத்தை தொடங்கியுள்ளார்கள், விதி அங்கும் அவர்களுடன் விளையாடியிருக்கின்றது. அங்கிருந்தும் ஒரு சுப யோக, சுப தினத்தில் நம்மவர்களால் விரட்டப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சளைத்துவிடவில்லை வாழ்க்கையுடன் போராடி, இன்று மாத்தற, பெலியத்த, கொழும்பு என பல பெக்டரிகளுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் சொந்தக்காறர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு விழுந்த ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு பாடமாக எடுத்து வாழ்க்கையை வழமாக்கிக் கொண்டதாக ரணசிங்க முதலாளியின் மூத்த மகள் மெனிக்கே ரொம்ப அடக்கத்துடன் சொல்கின்றார். அந்த அடக்கத்தையும் தான் யாழ்ப்பாண பாடசாலைகளில்தான் படித்ததாக அவர் சொல்கின்றார்.

இவ்வாறு ஆயிரம் ரணசிங்க முதலாளிகளும் அப்துல் லத்தீப்களும் தனியாட்களாக தனிநபருக்காக அனைத்தையும் தொலைத்துவிட்டு, தான்தோன்றிகளாக உருவாகியுள்ளார்கள். உருப்பெற்றும் உள்ளார்கள். ஆனால் இந்த மூன்றுலட்சம் வன்னித்தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகளென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அரசே அவர்களுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதினை சந்திக்கவே முடியவில்லை. அவரது அதிகாரிகளோ அவரைவிட பிசியாக இருக்கின்றனர். வன்னிமக்களுக்கு பாண் வேண்டும் அரிசி வேண்டும், உடைவேண்டும், நீர் வேண்டும், பருப்பு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அவர் ஒரு பக்கம் அலைய, சிலோன் எலக்றி சிற்றி போர்ட் அதிகாரிகளோ அந்த மக்களுக்கு 180 நாட்களுக்கிடையில் பரிபூரணமாக மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கூறிக் கொண்டுஇ ஒரு மெகா வோட் தொடக்கம் 15 மெகா வோட் மின்சாரம் ஜெனரேட்டர்களை எங்கிருந்து தருவிக்கலாம் என ஜப்பானிடமும்இ சிங்கப்பூரிடமும் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு நிறைய நிறைய அபிவிருத்தி வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வேளை போய் அரசுடன் மல்லுக்கு நிற்பதில் விவேகமில்லை. யாரோ செய்த பாவத்துக்கு யாரோ எல்லாம் பாதிக்கப்பட்டு, இன்று எங்கேயோ முகம் தெரியாத அதிகாரிகள் அந்த வன்னி மக்களுக்காக உழைப்பதை நேரே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதில் முக்கியமாக முழுக்க முழுக்க உழைக்க வேண்டியவர்கள் இந்த புலன் பெயர் தமிழர்கள்தான்.

இங்கு நடந்துள்ள அனைத்து வேண்டத்தகாதவைகளுக்கும் முழு முதற்காரணம் இந்த புலம் பெயர் புத்திசாலிகள்தான். ஐயா புத்தி ஜீவிகளே மகிந்த ராஜபக்ச என்கின்ற பெலியத்த சிங்கள மகன் தானும் தன் பரிவாரங்களும் தெரிந்தும், தெரியாமலும் செய்த போர் வடுக்களுக்கு பிராயசித்தம் தேடத் தொடங்கிவிட்டார்கள். மனம் திறந்துஇ மடை திறந்து செய்கின்றார்கள். அதற்கு இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. மூன்று லட்சம் மக்கள் வாழும் ஆறு மனிதப் புனிதர்கள் முகாம்இ விபரம் தெரியாமல் வாழ்வைத் தொலைத்த 2850 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளஇ அந்த வேப்பங்குளம் முகாம் அனைத்துக்கும் ஒரு மாறு வேட விசிட் அடித்தாயிற்று. அங்கு யாரும்இ யாரையும் இரண்டாம் கண் கொண்டு பார்க்கவுமில்லை நோக்கவுமில்லை.

100 வீதம் மனிதாபிமானப்பணிகள் நடக்கின்றது. நீங்கள் எப்போது தொடங்கப் போகின்றீர்கள் உங்களது பங்களிப்பை ? அடுத்த ஆறுமாதகாலத்துக்குள் வீதி புனரமைப்பு, மின்சார வினியோகம், வடிகால் அமைப்பு, விவசாயப் புனர் நிர்மாணம் என தலை கொள்ளாத புறஜக்ட்டுகளுடன் அரசு திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது.

இவ்வேளை அரசை குறை கூறுவதை விட்டுஇவிட்டு இந்தப் பணிகளில் நாமும் நமது பங்களிப்பை செலுத்த வேண்டும். இதுவரையும் எவ்வித இலாபமும் இல்லாமல் முதலிட்டு விட்டோம். இம்முறை இலாபத்துடன் இறங்கலாம். இது முழுக்க முழுக்க வடக்கின் வசந்தம்.
நீங்கள்தான் முதலிட வேண்டும் நீங்கள்தான் உழைக்க வேண்டும்.

மின்சார சபைக்கு பாரிய ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றது. ஒவ்வொன்றும் ஒரு மெகாவோட் தொடக்கம்இ 15 மெகாவோட் வரை கொள்ளளவு கொண்டது. அரசிடம் உடனடியாக அதற்கு முதலிட பணமில்லை. ஒரு மெகா வோட் ஜெனரேட்டரின் இன்றைய மார்கட் விலை நாலு கோடி ரூபா. யாராவது இதை நிறுவினால் அரசு மாதத்துக்கு 22 லட்சரூபா வாடகை வழங்கும். 4 வருட கன்றக்ட். டீசல் செலவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அரசே கவனித்துக் கொள்ளும். 4 கோடி ரூபா முதலிட்டால்இ நான்கு வருடத்தில் 10 கோடி 56 லட்ச ரூபா வாடகையாக கிடைக்கும். நிகர இலாபம் ஆறு கோடி 56 லட்ச ரூபா.

இவ்வாறு நிறைய தேவைகள் அரசை நெருக்கிக் கொண்டிருக்கின்றது. வீதிப் புனரமைப்புக்குத் தேவையான ஜேபீசி, இயந்திரங்கள் கருங்கல் உடைக்கும், கருங்கல் அரைக்கும் கிறஷர்கள் தொடக்கம் நீர்ப்பாசன நீர் வடிகால் அமைப்புகளுக்குத் தேவையான மோட்டர்கள், நீர்தாங்கிகள்,
தண்ணீர் குழாய்கள் என பல தேவைகள் அரசுக்கு இருக்கின்றது.

வவுனியாவில் எற்கனவே கிறஷர் இயந்திரங்களை நிறுமானிக்கும் வேலைகளை சிலர் தொடங்கி விட்டார்கள். ஏன் இதை நீங்களே செய்யக் கூடாது. யாழ்ப்பாண வடமாகாண மக்கள் ஒவ்வொருவரும் இதில் முதலிட வேண்டும். தலையிட வேண்டும். அந்த மண்ணில் இதுவரையும் நரமாமிச நாற்றத்தை நுகர்ந்தாயிற்றுஇ இனி பசுமை வாசனையைத்தான் நாம் நுகர வேண்டும். செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவதுடன் அந்த மண்ணை அந்த மக்களை அந்த பிரதேசத்தை ஒரு சொர்க்க புரியாக்க வேண்டும்.

மக்கள் மக்கள் கூட்டம், மக்களை நேசிக்கும் கூட்டம், மக்களை நேசிப்பதாக கூறுபவர்கள் கூறியவர்கள் எவ்வித சங்கடமுமில்லாமல் இப்பணிகளில் இறங்க வேண்டும். தாங்களாகவோ தங்கள் முகவர்கள் ஊடாகவோ தங்கள் அபிமானிகளூடாகவோ, தங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த மக்ளுக்காக முதலீடுகளில் இறங்கி பிராயசித்தங்களை தேடவேண்டும்.

அரச அதிகாரிகள் அமைச்சர்களை வட மாகாணத் தமிழர்கள் தொடர்பு கொண்டு ஒவ்வொரு கன்றக்ட்டுகளையும் அவர்களே எடுத்து இந்த வடக்கின் வசந்தத்தை ஒரு மனிதாபிமான வசந்தமாக்கிக் காட்டவேண்டும். இது ஒவ்வொரு வடமாகாணத்தவனின் கடமையும் கூட.

தொடரும்.. ..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com