Tuesday, March 24, 2009

தலையைவிட்டு தும்பை பிடித்துள்ள சிங்களம். - உளறுவாயன் -

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தை தடை செய்து சிங்களயா மோடயா கெவல் கண்ட யோதயா என்பதை மீண்டும் நிரூபித்து தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பது மொத்த உலகுக்கும் குடும்பி கட்டி, நாமம் போட்டு, மல்லிகைப் பூக்களை சரம் சரமாக காதுகளில் சுற்றிய நிறுவனம்.

சிறி லங்காவில் சிங்கள கிராமங்களில் சுனாமியின் போது நிதிகள் வளங்கியது மட்டுமல்லாது மலையக மற்றும் சிங்கள கிராமங்களில் குட்டிக் குட்டி டொனேஷன் கொடுத்து "நாங்கள் ரொம்ப சுத்தம்" என தலைகளைத் தடவி மொத்த பௌத்தத்திற்கும் நாமம் போட்ட புண்ணிய நிறுவனம்.

கொழும்பில் பாரிய தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் முதலில் ஊ கொட்டியவர்கள் இந்த
அமைப்பினரே. பாவம் "அகிம்சக மினிஸ்ஸூ" (அப்பாவி மனிதர்கள்) இந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் எனக் கூறி தங்களுடன் கூட்டி வந்து தாக்குதல்களை நிறைய அதிகாரிகள் வேடிக்கை பார்த்த காலமும் உண்டு. பதுளையில் இந்த அமைப்பினருக்கு நிறைய தொடர்புகள் உண்டு. ஏன் இவர்களுக்கு ஆபீஷே உண்டு என அடித்து சொல்வோரும் உண்டு.

ரீ.ஆர்.ஓ.சம்பந்தமாக இரண்டரை வருடத்துக்கு முன்னர் சேலான் வங்கியில் வேலை செய்த ஒரு ஜே.வி.பி.சகோதரயாக்கு சந்தேகம் வந்தது. அதாவது வவுனியா சேலான் வங்கி மனேஜர் ஊடாக ரீ.ஆர்.ஓ. ஒரு மொத்த தொகையை ( 70 மில்லியன் -7கோடி) கடனாகப் பெற்றுள்ளது. ஆனால் அந்த மனேஜருக்கு அந்த அளவுக்கு ஒரு 'பவர்'கிடையாது. அதை மெதுவாக தோண்டிய போது கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் உள்ளவரும், பதுளையைச் சேர்ந்தவரும், வட மத்திய, வட மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பானவருமான ஒரு 'சாதுவான' மனேஜரின் அணுசரணையுடன் பற்பல கோடி கடன் பிளஸ் வெளிநாட்டு பணக் கொடுக்கல் வாங்கல்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.

விடயம் தோண்டப்படப் போகின்றது என்பதை அறிந்து கொண்ட பிரதான நபர்கள் மூவர் கொழும்பு சிங்கள நபர்களின் உதவியுடன் எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் 20 மாதத்திற்கு முன்
ஐரோப்பிய நாடொன்றிற்கு பறந்து விட்டார்கள். இவர்கள் பறந்த பின்னர்தான் டெய்லி நியூஸ்,
தினமின,சிலுமின பத்திரிகைகள் எல்லாம் ரி.ஆர்.ஓவைப்பற்றிய முழுப்பக்க செய்திகளை வெளியிட்டன.

ஆனால் சிங்கள மத்திய வங்கியும், சிங்கள துப்பறிவாளர்களும் வழமை போல் துப்பறிந்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். ரி.ஆர்.ஓவைச் சேர்ந்த ஏழு பேரில் ஆறு பேர் வன்னிக் காட்டுக்குள் இருக்கிறார்களாம். ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபா சரீரப்பிணையாம். ஐரொப்பாவில் 'பாடி காட்கள்' சகிதம் திரியும் அந்த மூவரும் இந்த செய்தியை பார்த்து சிரிக்கப் போகின்றார்கள். மற்ற மூவரும் ஏற்கனவே கடல் கடந்து தாய் நாடு வந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடாக பெல்ஜியம் வர ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்போது உள்ளே இருக்கும் சேலான் வங்கி முன்னாள் தலைவருடனும் இவர்களுக்கு தொடர்புகள் உண்டு. பல முறை சேலான் வங்கி தலைமைக் காரியாலயத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பாரிய உணவுச்சாலையில் ( இதை கமே கேம என சிங்களத்தில் சொல்வார்கள். முழுக்க முழுக்க மண்சட்டியில் சமைத்த உணவு ) வவுனியா கிளை முகானையாளர், வட மாகாண ரீஜனல் மனேஜர், தேசமான்ய கொத்தலாவல, ஜென்றல் மனேஜர் ஆகியோருடன் உட்கார்ந்து உணவருந்திய அனுபவமும் உள்ளவர்கள்.

ஒரு முறை தேஷமான்ய கோத்தலாவல அவர்களுக்கு வெள்ளி யானைக்குட்டி ஒன்றை பரிசாக அளித்து சிறிலங்கா பொருளாதாரத்துக்கு சங்கும் ஊதியுள்ளார்கள். அண்மையில் சிறிலங்காவில் தளம் பதித்துள்ள எயார் டெல்லின் முழு உரிமையும் பெற இதே ரி.ஆர்.ஓ.அமைப்பு ஏ.ஆர்.ரகுமானின் மாமனார் ஊடாக பல முயற்சிகளை செய்தது. ஏ.ஆர்.ரகுமானின் மாமனாரும் எயார் டெல் மார்கட்டிங் டிரக்டரும் (இந்தியா)நண்பர்கள். மேலும் சில வருடத்துக்கு முன்னர் சிறிலங்கா கொழும்பு துறை முகத்தில் கன்டய்னர்களை பரிசோதிப்பதற்காக பாரிய மெட்டல் டிரக்டர் (20 மில்லியன் யுஎஸ் டொலர்) தேவை என விளம்பரங்கள் வந்த போது முதலில் விண்ணப்பம் செய்தவர்களும் இந்த ரி.ஆர்.ஓ.அமைப்பினரே.

இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. சிங்களம் கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டுக் கொண்டு தேடி ஆங்காங்கே தெரியும் பாரிய திடப்பொருட்களை (கட்டிடங்கள் அல்ல) விற்றாலே 200 கோடி ரூபா தேறும்.



...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com