இந்திய மருத்துவக் குழு திங்கட் கிழமை இலங்கை வந்தடைகின்றது.
கடந்த சார்க்நாடுகளுக்கான உயர்மட்ட குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க இந்திய மருத்துவக்குழு நாளை மறுதினம் திங்கட் கிழமை இலங்கை வந்தடைகின்றது.
இவர்கள் வன்னியிலே புலிகளுக்கும் இராணுவத்தினரும்கும் இடையில் இடம்பெறும் யுத்ததில் அகப்பட்டு காயமடைந்தோர் மற்றும் அப்பிரதேசத்தில் முடக்கப்பட்ள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் திருமலை மாவட்ட புல்மோட்டை பிரதேசத்தில் வைத்திய நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளனர். அத்துடன் இக்குழுவினர் தமது தேவைகளுக்காக 7 கோடி இலங்கை ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கொண்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment