ரத்னம் மாஸ்ரர் முன்னரங்குகளில்.
பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவரும் அண்மையில் ராதா படையணியின் தளபதியுமாக நியமிக்கப்பட்டிருந்த ரத்னம் மாஸ்ரர் புலிகளின் முன்னணியில் நின்று படைகளை நகர்த்துவதாக தெரியவருகின்றது. படையினரின் இடைவிடாத முன்னகர்வை தடுத்து நிறுத்துவதற்காக புலிகள் பல்வேறு வியூகங்களை மேற்கொண்டும் அவை படுதோல்வி கண்டுள்ள நிலையில் புலிகளின் முன்னணித் தளபதிகள் முன்னரங்குகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
வன்னி களமுனையில் புலிகளின் தளபதிகள் ஒருவரை ஒருவர் தவறுகளுக்காக குற்றஞ்சாட்டிவருவது புலிகளின் தொடர்புசாதனங்களை ஒட்டுக்கேட்கும் போது தெரியவருவதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரபாகரனின் உள்ளக புலனாய்வு வேலைகளிலும், பாதுகாப்பு வேலைகளிலும் ஈடுபட்டுவந்த ரத்னம் மாஸ்ரர் முன்னரங்குகளுக்கு வந்திருப்பது தலைவருக்கு எந்த தளபதியாலும் இனிமேல் போரை வெல்ல முடியாது என விழங்கியுள்ளது என அர்த்தப்படுகின்றது.
மேற்படி ரத்னம் மாஸ்ரரே புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் பொறுப்பாக இருக்கின்றார் எனவும் அனுராதபுரம் விமானப்படைத்தளம் மற்றும் வவுனியா கூட்டுப்படைத்தளம் போன்ற தாக்குதல்களுக்கு இவரே பொறுப்பானவர் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment