கிழக்கு கரையோரப் பிரதேங்களை இலக்கு வைக்கும் படையினர். மோதல் உக்கிரம். புலிகளின் நான்கு உடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள 58ம் படையணி மற்றும் 8 ஆவது கொமாண்டோ படையணியைச் சேர்ந்தோர் கிழக்கு கரையோரப்பகுதியை இலக்கு வைக்கத்தொடங்கியுள்ளனர். வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எதிர்த்துத் தாக்குவதை விட எவ்வித தெரிவுகளும் இல்லாத புலிகள் அகோர எதிர்ப்பை காட்டி வருவதாக தெரியவருகின்றது.
புதுக்குடியிருப்பு சந்தியில் தமது முன்னணி நிலைகளை அமைத்திருந்த 58ம் படையணியினர் மேலும் கிழக்கு நோக்கி முன்நகர்ந்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெற்ற சண்டைகளில் 4 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் ஆயுதங்களும் ஆர்பிஜி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment