சிறி-ரெலோ அமைப்பை சேர்ந்த மூவர் வவுனியா பொலிஸாரால் கைது.
வவுனியா குறுமன்காடுசந்தியில் உள்ள சிறி- ரெலோ காரியாலயத்தில் வைத்து அவ்வியக்கத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களைக் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்றுக் காலை 9.30 மணிக்கு மேற்படி காரியாலத்திற்கு சென்ற பொலிஸார் வின்னசன், குணா, கொன்சன் என அழைக்கப்படுகின்ற அவ்வியக்க உறுப்பினர்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் அவர்கள் பாவித்து வந்த வான் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் கடந்த காலங்களில் பலதரப்பட்ட சட்ட விரோத பணவசூல் இடம்பெற்றுவருகின்ற நிலையில் மேற்படி கைது இடம்பெற்றிருக்கின்றது. எது எவ்வாறாயின் பொலிஸார் இதுவரை கைதுக்கான காரணத்தை வெளியிடவில்லை என வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment