பூரண சமய அனுஸ்டானங்களுடன் ஏ 9 பாதை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 19 ஜனவரி 1985ம் ஆண்டு யாழ்தேவி புகையிரதத்தை குண்டுவைத்துத் தகர்த்த புலிகள் யாழ் கொழும்பு வீதியில் தரைவழிப் பயணத்தை முடக்குவதற்கு முற்பட்டனர். நாளடைவில் 1990 யூலை மாதத்திற்கு பின்னர் ஏ9 பாதையின் ஒருதொகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்த புலிகள் கடந்த 2002 ஆண்டு யுத்த நிறுத்த ஓப்பந்தத்தின் போது அப்பாதையின் இருமருங்கிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கப்பம் அறவிட்டு மக்களை துன்புறத்தி பல கோடி ரூபாய்க்களை சம்பாதித்து வந்தது யாவரும் அறிந்த விடயம்.
இலங்கையில் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என கூறிவந்த அனைத்து ஆய்வாளர்களது கண்முன்னும் புலிகள் தமது கட்டுப்பட்டில் வைத்திருந்து 90 சதவீத நிலப்பரப்பை அடித்துப் பறித்துள்ள படையினர் 25 வருடங்கள் புலிகளின் ஆளுகையில் இருந்த ஏ9 பாதையூடாக இன்று சுயாதீனமாக தமது இராணுவ வழங்கல் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். முதல் முறையாக 40 பஸ்வண்டிகளில் விடுமுறையில் வந்திருந்த படையினர் தரைவழியாக யாழ் சென்றுள்ளனர்.
இன்றைய இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க நிகழ்வு சகல சமய பெரியார்களதும் ஆசீர்வாதத்துடன் ஆரப்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பல இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு பால்சோறும் இனிப்பு பாண்டங்களும் பரிமாறப்பட்டுள்ளது. ஏதிர்வரும் காலங்களில் தரைவழியா யாழ் மக்களுக்கு தேவையான வழங்கல் பொருட்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment