சாலை மோதலில் புலிகளின் 33 சடலங்கள் மீட்பு
முல்லைத்தீவு சாலை தென் கரையோரப் பகுதியில் நேற்று அதிகாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற கடும் மோதலில் 50 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இவர்களுள் 33 வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடி யர் உதய நாணயக்கார தெரிவி த்தார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்று ள்ளது.
அப்பகுதியினூடாக முன்னேறிவரும் இராணுவத்தின் 55 ஆம் மற்றும் 58 ஆம் படையணியினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.படையினர் இதற்கு பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்குமிடையே நீண்ட நேரம் கடும் மோதல் இடம்பெற்றதாகவும் பிரிகேடியர் கூறினார்.
படையினரின் பதில் தாக்குதலில் புலிகள் தரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த புலி உறுப்பினர்களைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு தப்பியோடியிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவி த்தார்.
மோதல்கள் முடிவுக்கு வந்ததையடுத்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின்போது புலிகளின் 33 சடலங்களும் பல வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
33 ரி-56 தோட்டாக்கள், 03 எல்.எம். ஜி, 60 மில்லிமீற்றர் 03 மோட்டார் குண்டுகள், ஒரு எம்.பி. எம்.ஜி, 03 ஆர்.பி. ஜிகள், ஒரு ஜி.பி.எஸ், 05 திசைகாட்டிகள், 13 கிரனேற் கைகுண்டுகள், 13 இடைப்பட்டிகள், 05 வானொலிகள் ஆகியனவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment