மீண்டும் ஒருமுறை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுகின்றார் ஐ.நா செயலாளர் நாயகம்.
இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தை உடனடியாக முடிவு கொண்டுவருமாறு ஐ.நா செயலாளர் நாயம் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் யுத்தம் இடம் பெறும் பிரதேசங்களில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் குறிப்பாக சிறுவர்களின் இறப்பில் கவனம் செலுத்தியுள்ள செயலாளர் நாயகம் யுத்தத்தை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசு மற்றும் புலிகளை கேட்டுள்ளார்.
அவரது வேண்டுதலில் புலிகள் உடனடியாக தமது ஆயுதநிலைகளையும் போராளிகளையும் மக்கள் மத்தியில் இருந்து விலத்திக் கொள்ளவேண்டும் எனவும் யுத்தத்திற்காக சிறுவர்களை இணைப்பதை கைவிடவேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.
0 comments :
Post a Comment