முல்லை., கிளிநொச்சியிலிருந்து வருவோருக்கு அரச பகுதிகளில் வீடுகளை அமைக்க முடிவு அமைச்சரவை அங்கீகாரம்.
முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகின்றவர்களுக்கென தற்காலிக உறுதியான வீடுகளை நிர் மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதி யுதீன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 8ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சார்க் அபிவிருத்தி நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
0 comments :
Post a Comment