வன்னியில் உக்கிர மோதல். சாலைப்பிரதேசத்தில் படையினருக்கு சேதம், சாலைக்கு மேற்கு புறமாக படையினர் முன்னேற்றம்.
நேற்றுக்காலை (பெப் 27) சாலைப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் படையினருக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் சாலைப் பிரதேச்திற்கு மேற்குப் புறமாக முன்னேறும் படையினர் நேற்று பிற்பகல் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக 8 மணித்தியாலயங்கள் போராடி இன்று காலை (பெப் 28) புலிகளின் பாதுகாப்பு அணைக்கட்டின் ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர் என பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்னிக் களத்தில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் புலிகள் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள யுத்த தவிர்ப்பு பிரதேசங்களில் இருந்து ஆட்லறி செல்களை ஏவவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment