மஹறகம புற்றுநோய் வைத்தியசாலை ஊழியர்கள் பகிஸ்கரிப்பில்.
நோயாளி ஒருவருடன் வந்திருந்த குழுவினர் மஹறகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரையும் ஊழியர்கள் இருவரையும் தாக்கி விட்டுச் சென்றதை கண்டித்தும் அவர்களை கைது செய்யக்கோரியும் ஊழியர்கள் இன்று பகிஸ்கரிப்பில் இறங்கியுள்ளனர். இப் பகிஸ்கரிப்பில் வைத்திர்கள் தொடக்கம் சிற்றூழியர்கள் வரை சகலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்படி பகிஸ்கரிப்பினால் நோயாளிகள் பலத்த அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். வைத்தியசாலையில் உள்ளக செயற்பாடுகளும் அதி அவசர சேவைகளுமே இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
மேற்படி குழுவினரை கைது செய்வதற்று நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய ஊழியர்கள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர். உப்புல் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment