கனடாவில் புலிகளின் நிதிசேகரிப்பாளரின் செவிப்பறை வெடித்துள்ளது.

கனடா மொன்றியல் பிரதேசத்தில் புலிகளுக்காக நிதிசேகரிப்பில் ஈடுபட்டுவரும் ஒருவரது செவிப்பறை வெடித்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்கள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஓருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிலநாட்கள் சிகிச்சையின் பின் சிகிச்சை பலனளிக்காது உயிரிளந்துள்ளார். அவரின் சகோதரர் கனடா மொன்றியல் பிரதேசத்தில் வசித்து வருவதுடன் பல ஆண்டுகளாக புலிகளுக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளார். தனது சகோதரனின் மரணச் செய்தியையும் மரணத்திற்கு புலிகள் காரணம் என்பதையும் அறிந்து கொண்ட அவ் ஆதரவாளர் உடனடியாக மொன்றியலில் தான் புலிகளுக்கு நிதி வழங்கும் முகவரிடம் சென்று தனது சகோதரனுக்கு நடந்துள்ள சம்பவம் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன் அத்தாக்குதலுக்கான விளக்கத்தையும் கோரியுள்ளார்.
அதற்கு நிதிசேகரிப்பாளர் விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தவிர்கமுடியாதவை என பதிலளித்த போது அவரது பதிலுடன் இணங்க மறுத்த ஆதரவாளருக்கும் நிதிசேகரிப்பாளருக்கும் இடையில் வாதம் முற்றி பொறுமையிளந்த ஆதரவாளர் நிதிசேகரிப்பாளருக்கு காதைப் பொத்தி ஒன்று கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். நிதிசேகரிப்பாளரது செவிப்பறை வெடித்துள்ளதாகவும் விடயத்தை பொலிஸாருக்கோ அன்றில் வைத்தியருக்கோ தெரிவித்தால் நிதிசேகரிக்கும் குற்றத்திற்காக கம்பி எண்ண வேண்டி வரும் என தெரிந்து கொண்ட நிதிசேகரிப்பாளர் இரவு விடுதி ஒன்றிற்கு சென்று வரும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக வைத்தியருக்கு தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment