Tuesday, February 17, 2009

இன்டர் பொல் 'லைக்காடெல்'லுக்கு கொக்கி போடுகிறதா? - அ.விஜயகுமார்.

நமது கிராமங்களில் திருமண மற்றும் பூப்புனித நீராட்டு நிகழ்ச்சியின் போது மின்சார வசதி இல்லாத வீட்டுக்காறர்கள் திருட்டு மின்சாரம் எடுப்பார்கள்.அதாவது வீதியில் உள்ள மின்சாரக் கம்பிகளில் இரண்டு வயரை கொழுவி திருட்டுத் தனமாக மின்சாரத்தை திருடி திருமண விழாவை சிறப்பாக நடாத்துவார்கள்.

இந்த மின்சாரக்கணக்கு நகரசபையையோ,மாநகரசபையையோ பாதிக்குமே தவிர எந்த ஒரு தனிநபரையும் பாதிக்காது. வருட முடிவில் இலாப நட்டக்கணக்கு (வருமானச் செலவுக் கணக்கு ) எழுதும் கணக்காளர்கள்தான் மூளையைக் கசக்கி வழி தெரியாமல் விழிபிதுங்கி அறவிடமுடியாக்கடன் என எழுதிவிட்டு ஐந்தொகை(பலன்ஸ் சீட்) தயாரித்து மின்சார சபைக்கு அனுப்பி வைப்பர்.

இப்படி வருடா வருடம் வரும் கணக்குகளை மின்சார சபையும் மத்தியவங்கியில் சமர்ப்பித்து பணம் பெற்றுக் கொள்ளும். மத்திய வங்கிங்கிக்கும் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.அப்போது மத்திய வங்கி அரசிடம் கோரிக்கை வைக்கும். அரசு உலக வங்கியிடமும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் கையேந்தும். அவர்கள் வந்து மின்சாரத்துக்கு இவ்வளவு பணம் செலவாகின்றதா? எனக் கேட்டு புள்ளி விபரங்களை திரட்டி ஒரு அலசு அலசுவார்கள். அப்போதுதான் மொத்த அறவிடமுடியாக்கடன்களின் தாற்பரியம் தெரியவரும். கொக்கி போட்டு நம்மவர்கள் திருடிய கள்ளக் கரண்ட்டின் மொத்த உருவமும் அரசைப் பாதாளத்துக்கு கொண்டுபோய் விடும்.

அதே திருட்டைத்தான் லைக்காடெல் செய்துள்ளதா? இல்லை ஆசியாவையே உலுப்பி எடுத்த தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் 'சத்யம்'பாணி விளையாட்டா என கொஞ்சம் மூக்கை நுழைத்து அறிய வேண்டும். உலகிலேயே போன் கார்ட் வியாபாரத்தில் நம்பர் ஒன் என்று சொல்லப்படுகின்ற ஐ.டி.ரி. போன்கார்ட் கம்பனிக்குத்தான் முதலில் இந்த காய்ச்சல் எடுத்திருக்க வேண்டும்.

உலகம் முழுதும் கிளைகளைப் பரப்பியுள்ள ஐ.டி.ரி. உலகில் உள்ள அத்தனை நாட்டுத் தொலைபேசி நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களை செய்து கோடிக்கணக்கான (றில்லியன்) நிமிடங்களை விலையாக வாங்கியுள்ளது. இந்த திமிங்கிலத்திற்கே ஒரு நிமிடத்திற்கு ஒரு பென்ஸ் ( இங்கிலாந்து பென்ஸ்) என்ற ரீதியில்தான் பிரிட்டிஷ் பிரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம்மிடையே உலவும் சகல போன் கார்ட்களும் 4 பவுண்டில் 1200 நிமிடங்கள் வேலை செய்கின்றன. நிமிடத்திற்கு ஒரு பெனி என வைத்துக் கொண்டால் கூட 4 பவுண்டுக்கு 400 நிமிடம்தான் பேச முடியும்.மீதி 800 நிமிடம் எங்கிருந்து வந்தது ? கள்ள கரண்ட் மாதிரி, கள்ள கொக்கி எங்கேயாவது போட்டிருப்பார்களோ?

பிரிட்டிஷ் அரசும் , இன்டர்பொல்லும் இந்த விடயத்தில் டூலேட் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கொக்கி போடும் விடயத்தை ஹக்கிங் சிஸ்டம் என்று சொல்லுவார்கள். இந்த ஹக்கிங் ஊடாக நிறைய திருட்டுத்தனங்கள் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மறுவடிவம்தான் அமெரிக்காவிலும்,ஐரொப்பாவிலும் இன்று தோன்றியுள்ள பாரிய வேலை வாய்ப்பின்மை, வங்குரோத்து. ஆர்பி.எஸ், லாயிட்ஸ்,
பார்க்ளேஸ் வங்கிகளும் லேமன்ஸ் பிறதர்ஸ்ஸூம் ஒன்னுமே புரியல என கைவிரிக்க அரசுகள் கண்திறக்க இண்டலிஜன்ட் ரொம்ப லேட்டாக லைக்காவுக்கு கொக்கி போடுகின்றது.

இங்கு யுரோப்பில் கம்பனிகள் திறப்பது திறந்த கம்பனிகளை படாடோபமாக நடாத்திவிட்டு
பேங்றொப்சி எனக்கூறி அடுத்த வருடம் மூடிவிடுவது என்பது சர்வ சாதாரணம். இப்படித்தான் கடந்த பல வருடங்களாக நம்மிடையே பல வகையான போன்காட்டுகள் பல பெயர்களில் வந்து சென்றன. கடந்த 4 வருடங்களில் 100க்குமதிகமான பெயர்களில் போன்கார்ட்டுகள் வந்துள்ளன. யார் உரிமையாளர்,எங்கே தலைமைக் காரியாலயம் இருக்கின்றது? என எதுவுமே தெரியாது. இப்போதுதான் புரிகின்றது. மொத்தமாக யுரோப்பிலும் கொக்கி போட்டுள்ளார்கள் என்று.


இன்டர்பொல்லும் ,பிரிட்டிஷ் அரசும் இந்த விடயத்தில் கொஞ்சம் ஆழமாக செல்ல வேண்டும். ஏனெனில் இந்த ஹக்கிங் சிஸ்டம் ஊடாக தினமும் பல றில்லியன் பணம் பிரிட்டிஷை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த முறையை முதலில் பாகிஸ்தானியர்கள்தான் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் இந்தியர்களின் கைக்குமாறி இப்போது புலிகளின் கையில் சிக்கி இங்கிலாந்து அரசுக்குத் தினமும் பல பில்லியன் பவுண்ஸ் இழப்பை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றது.

வங்கியில் ஒருவரின் வைப்பிலுள்ள மொத்தப் பணத்தையும் வங்கியின் உதவியின்றியும் ,வைப்பிலிட்டவரின் உதவியின்றியும் அப்படியே லாவகமாக இன்னொருவரின் (தங்களுக்கு வேண்டியவரின்) கணக்குக்கு மாற்றிவிட்டு இரவோடு இரவாக தங்களது அமைப்பின் அல்லது அமைப்பு சார்ந்தவரின் நகைக்கடை ,கேஷ் அண்ட்கரி போன்றவற்றில் பொருள் வாங்குவது போல் பணத்தை மொத்தமாக உருவிவிடுவார்கள். இதில் புலிகளுக்கு 50 வீதம,; புறோக்கருக்கு 10 வீதம், நகைக்கடைக்கு 40 வீதம்.

இங்கு லைக்கா சுண்டைக்காய்தான்.சுரக்காய்களைல்லாம் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. அஸ்டா, மார்க்ஸ்பென்ஷர், பி.சி.வேர்ல்ட் போன்ற கம்பனிகளும் ஆர்பி.எஸ், லாயிட்ஸ் ,பார்க்ளேஸ் , அபே நெஷனல் போன்ற வங்கிகளும் கடந்த ஐந்து வருடங்களாக எப்படி லொஸ்ட் ஆயின என்ற கணக்கை இன்டர் பொல் உட்கார்ந்து இருந்து படித்து எந்தெந்த எக்கவுண்ட் ஊடாக பணம் போயிருக்கின்றது என தூசு தட்டினால் அது புலிகளில் வந்து முடியும். பல பில்லியன்கள் காணாமல் போயுள்ள கதை தெரியவரும். தேவை ஏற்பட்டால் இதை நாம் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்.

இப்படி ஒருசிலர் செய்வதால்தான் பிரிட்டிஷிலும் ,அமெரிக்காவிலும் என்றுமில்லாதவாறு பணமின்மையும் ,வேலையின்மையும் ஏற்பட்டுள்ளது. அது எப்படி? பங்கு சந்தை சரிவினால்தானே இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என பல பேர் சொல்லலாம். பங்கு சந்தையில் இழந்துள்ளது 25 வீதம்தான். கொக்கி போடுவதில் ( இந்தியர்கள் இதை பட்டை போடுவது என்பார்கள்)இழந்துள்ளதோ 75 வீதம். இந்த ஒரு சிலரின் நடவடிக்கைகளால்தான் இன்று பல பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். நம்மிலும் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது நம்மவரை நாளைக்கோ அல்லது நாளை மறுதினமோ 'வெறிசொறி' இங்கு எங்களுக்கே வேலையில்லை. உங்களுக்கு வேலைதர முடியாது என்பதுடன் அகதி அந்தஸ்தும் மறுக்கப்படலாம். அதில் ஒரு கட்டம்தான் சென்றமாதம் இரவோடிரவாக அனுப்பிவைக்கப்பட்ட 150 பேரினதும் ஆரம்பம்.

இங்கு 'சத்யம்;' போட்ட கொக்கி வேறு விதமானது. யுரோப்பில் உள்ள சகல கம்பனிகளும் 'மூளை சாலிகள்' 'ச்சீப் அண்ட் பெஸ்ட்' எனக் கூறிக்கொண்டு இந்தியாவுக்கு ஐ.ரி. உலகைத் தேடி செல்ல ளூ இங்கு சத்யம் என்னவோ முதல் இடத்தைப் பிடித்தது உண்மைதான். சத்யத்தின் பங்குகள் விண்ணைத்தொட கறுப்புப் பணக்காறர்களும் சத்யத்தை அண்டியுள்ளதாக தெரிய வருகிறது.

அதாவது, யுரோப்பில் மூட்டைகளில் கறுப்புப் பணத்தைக் கட்டிக்கொண்டு இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் கொண்டு செல்ல வழி தெரியாமல் இருந்தவர்கள் இவர்கள். ஆம்! சத்யம் பல பினாமிகம்பனிகளை இங்கு திறந்து 'ஸ்ராப்சலரி' என்ற பெயரில் இங்கிருந்து பணத்தை கத்தை கத்தையாகவும் மிக ஓப்பனாகவும் அனுப்பியுள்ளதாம். அதே நேரம் இந்தியாவிலும் பினாமி கம்பனிகள் திறக்கப்பட்டது. இந்திய வங்கிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம். தினமும் இந்த பினாமி கம்பனிகளுக்கு கோடிக்கணக்கான ரூபா யுரொப்பில் இருந்து சட்டப்படி வரத்தொடங்கியது. வந்த பணத்தை ஓரிரு நாளில் தனது கொமிஷன் போக உரியவரிடம் ஒப்படைத்து விடுவர். இது புரியாத இந்தியன் வங்கிகள் பல பில்லியன் ரூபா டேர்ன் ஓவரைப் பார்த்துவிட்டு சத்தியத்தையும் அதேபோல் பல பினாமி கம்பனிகளை திறந்தவர்களையும் நம்பி பல றில்லியன் கடன் கொடுத்திரிக்கின்றார்கள். .இங்கிருந்து சென்ற பணத்தில் புலிப்பணம்தான் அதிகம் என்று பேசிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.

இப்போது இது பற்றி சத்யம் வாயேதிறக்க முடியாது. அதனால்தான் பொய்யான கணக்கு எழுதி விட்டேன், பொய்யான பங்குப்பத்திரத்தை அடவு வைத்து விட்டேன் என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றார் போல் தெரிகின்;றது. இதைப் பலோ பண்ணித்தான் புலிகளும் பல ஐ.ரி.கம்பனிகள் திறந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பியுள்ளார்கள். இதை விட பூதாகாரமாக ஹவுசிங் லோன் (புரொப்பட்டி லோன் )விடயத்திலும் ஐரொப்பிய அமெரிக்க அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். வெறும் பத்திரத்திற்கெல்லாம் வங்கிகளும், லேமன்ஸ் பிறதர்சும் கடன் கொடுத்துள்ள பூதம் கிளம்பும். இல்லாத சொப்பிங் கொம்பிளக்ஸ்ஸூக்கும் கேஸன் கரிக்கும். கடன் வழங்கப்பட்டுள்ள சங்கதி தெரியவரும். அதன் பின்னராவது நம்மில் பல பேருக்கு வேலை கிடைக்கும். அசைலம் அங்கீகரிக்கப்படும்.VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com