காயமடைந்தவர்களில் மேலும் ஒரு தொகுதிமக்கள் இன்று திருமலை வருவார்கள்.
முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம் பெற்று வரும் மோதல் காரணமாகக் காயமடைந்த மக்களின் ஒரு தொகுதியினர் இன்று (16) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு முன்னர் அழைத்து வரப்பட்ட 700 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் மேலும் ஒரு தொகுதியினர் இன்று (16) திருமலையை வந்தடைவரெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment