முல்லைத்தீவில் 3 தற்கொலை படகுகள் அழிப்பு.
முல்லைத்தீவுக்கு வடக்கே விமானப் படையினர் நேற்று நடத்திய கடும் விமானத் தாக்குதலில் கடற்புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
அரசாங்கத்திடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர் புலிக ளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரா 3’ எனும் கப்பலுக்கு அருகில் கடற் புலிகளது மூன்று தற்கொலைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனை விமானப் படையின் உளவுப் பிரிவினர் அவதானித்தனர்.
இதனையடுத்து அப்பகுதி இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது. விமானப் படையின் ‘ஜெட்’ ரக விமானங்களே தாக்குதலை மேற்கொண்டன. இவ்விமானத் தாக்குதல் சம்பவம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.
விமானத் தாக்குதலினால் புலிகளின் ஒரு தற்கொலைப் படகு தீப்பற்றி எரிந்ததுடன் ஏனைய இரண்டு படகுகளும் கடலுக்குள் மூழ்கியதனை விமான ஓட்டிகள் உறுதி செய்ததாகவும் ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.
0 comments :
Post a Comment