புலிகளின் சுகபோக வாழ்கையின் சாட்சியம்: அடர்ந்த காட்டுப்பகுதியில் நீச்சல் தடாகங்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை தொகுதி தொகுதியாக தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து கொண்டிருக்கும் படையினர் நேற்று (பெப் 25) புதுக்குடியிருப்பின் அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மிகவும் நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தாடாகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
50 அடி நீளமும் 30 அடி அகலமும் 7 அடி ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடாகம் புதுக்குடியிருப்பில் புலிகளால் அதிபாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தியிருந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. மேற்படி நீச்சல் தடாக விடயம் வன்னியில் உள்ள மக்கள் எப்போதும் அறிந்திருக்கவில்லை என்றும் இவ்வாறான சுகபோக வாழ்வின் அந்தரங்களை மக்கள் அறிவதை தடுப்பதற்காகவே புலிகளால் பாதுகாப்பு வலயங்கள் பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது என்பது தற்போது உறுதியாவதுடன் இவை புலிகளின் உயர் மட்ட தளபதிகளின் சுகபோக வாழ்வின் ஒரு பகுதியாகும்.
0 comments :
Post a Comment