ஐரோப்பிய ஒன்றியம் அவசர யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இக்கட்டான நிலையில் உள்ள வன்னி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கும் பொருட்டும் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றும் பொருட்டும் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தினர் அவசர யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களது அந்த வேண்டுகோளில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பயங்கரவாதத்தையும் வன்செயல்களையும் நிரந்தரமாக கைவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment