புலிகளின் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மற்றொன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளது.
நேற்று இரவு 9.45 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து புறப்பட்ட புலிகளின் இரு விமானங்களும் நாசமாகியுள்ளது. இவ்விமானங்கள் மன்னார் பிரதேசத்தை கடந்து வந்த போது அவை ராடர்கள் மூலம் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்புப் பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் விமான எதிர்ப்பு ஏவகணைகள் இயக்கப்பட்டுள்ளது.
முதலாவது விமானம் இலங்கை விமானப்படைத் தலைமையகத்தை குறிவைத்து வந்து அதன் இலக்குத் தவறி அண்மையில் உள்ள இறைவரித் திணைக்கள கட்டிடத்தில் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இதில் 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது விமானம் கட்டுநாயக்க வெரலவத்தை பிரதேசத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பிரதேசத்தில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கழுத்தில் இரு சயனைட் குப்பிகள் காணப்படுவதாகவும் பாதுகாப்பச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விரு விமானங்களும் தற்கொலைத் தாக்குதலுக்கே வந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தாக்குதலுக்காக ஒவ்வொரு விமானத்திலும் இருவர் வந்துள்ளதாவும் ஆனால் இம்முறை இருவிமானங்களிலும் ஒவ்வொருவரே வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment