பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கு.
உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்து கொள்கைகளுக்கான கற்றல் நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா உல்லாச விடுதியில் கருத்தரங்கொன்று நடைபெறவுள்ளது.
2008ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் நிதிச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உலகிலுள்ள பல நாடுகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளன. இதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் அதனை நிவர்த்திசெய்வதற்கான வழிவகைகள் குறித்து இந்தக் கருத்தரங்களில் கலந்துரையாடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி நெருக்கடியால் பாரிய நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் பாதிப்படைந்திருப்பதுடன், தொழிலாளர்கள் பலர் வேலையிலிருந்து நீக்கட்டுள்ளனர். இந்த நிலையில், பலமான நாடுகள் நிதிச் சரிவிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக மீட்புத் திட்டங்களை முன்வைத்துள்ளன.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இந்த நிதி நெருக்கயானது இலங்கையின் பொருளாதாரத்திலும் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், வேலை வாய்ப்பற்றோரின் வீதத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இலங்கையிலிருந்து பொருள்களை கொள்வனவு செய்வது குறைவடையுமென்பதுடன், ஏற்றுமதிப் பொருள்களுக்கான கேள்வி குறைவடையும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளால் எதிர்வரும் மாதங்களில் இலங்கை எதிர்கொள்ளக் கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஒருநாள் கருத்தரங்களில்
0 comments :
Post a Comment