இங்கினியாகலை மக்கள் மீது புலிகள் புரிந்த கொடூரம் : பலியானோர் எண்ணிக்கை 21 ஆக நேற்று உயர்வு.
அம்பாறை இங்கினியாகலையில் புலிகளின் ஆயுதக் குழுக்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களுள் இரண்டு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச் சாளர் தெரிவித்தார்.
இங்கினியாகலையிலிருந்து 35 கிலோமீற்றர் தொலை விலுள்ள கிரிமிட்டியாவ என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 தொடக்கம் 5 மணிக்கிடை ப்பட்ட நேரத்தில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
கிராமத்துக்குள் புகுந்த புலி ஆயுதக்குழு கண் மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மற்றும் வாள் வீச்சுக்களை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அன்றையதினம் மேலதி கமாக ஆறுபேர் உயிரிழந்தனர். நேற்றுடன் இச்சம்பவத் தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து ள்ளது. உயிரிழந்துள்ள இரண்டு சிறுவர்களுள் இரண்டு வயதுக் குழந்தையும் எட்டு வயது சிறுவனும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment