Tuesday, December 3, 2019

தனது நாட்டு பெளத்த உரிமைகளைப் பாதுகாக்க இலங்கையுடன் கைகோக்கிறது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் சாத் மஃமூத் குரேசி, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷைவைச் சந்தித்தார்.

தனது நாட்டினதும் தனதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார அபிவிருத்தி, வியாபாரம் மற்றும் பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்பு உதவி மற்றும் வலயத்திற்கான உதவி போன்ற துறைகளில் இரு நாடுகளினதும் தொடர்பை மென்மேலும் வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தானின் விருப்பத்தைத் தெரிவித்தார்.

'தற்போது இருநாடுகளுக்கும் இடையே அண்மித்த நண்பும் ஒருமைப்பாடும் இருக்கின்றது. உதவி ஒத்தாசைகளை விரிவுபடுத்தி அதனை மென்மேலும் வலுப்படுத்துவதே பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக உள்ளது' என வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

தங்கள் நாட்டிலுள்ள பெளத்த பாரம்பரியங்களை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாகவும் அமைச்சர் குரேசி குறிப்பிட்டார். ...............................

Read more...

இங்கிலாந்து கொன்சவேட்வ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழம்

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் கொன்சவேட்வ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரண்டு அரசுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதன் ஊடாகதமிழீழம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது எனவும்

இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது.

அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை.

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read more...

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் வெளிநாடு செல்லத்தடை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்று கூறப்படும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பெண் ஊழியருக்கு, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு, இம்மாதம் 9ஆம் திகதி வரை தடை விதித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், 9ஆம் திகதிக்கு முன்னர், சி.ஐ.டியினருக்கு வாக்குமூலத்தை அளிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்தவாரம் சுவிஸ் தூதரக பெண் ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலயங்களின் விடுவிக்கப்பட்டிருந்தார். சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையின் குற்றபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுவிஸ் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார் என்ற வகையில் அச்சுறுத்தும் நோக்கில் குறித்த சுவிஸ்தூதரக பெண் கடத்தப்படடிருக்கலாம் என பலரும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கோட்டாபாயவுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா, சீனா உள்ளிட்ட மேற்குலநாடுகள் தீவிரம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாயவுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா,சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்குலநாடுகள் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி கடும்போக்கு கொண்டவர் எனவும் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் தனது சகோதரன் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவை பேணியது போன்று கோட்டாபாயுவும் சீன சார்பு கொள்கையினை எடுப்பார் எனவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில் தற்போது புதிய ஜனாபதி அவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து விடுப்பட்டவராக இருப்பதாகவும் அவர் அனைத்து நாடுகளுடன் சுமூகமான உறவை பேண விருப்பம் கொண்டவராக காணப்படுவதாகவும் குறிப்பிடும் அரசியல் அவதானிகள், நடைமுறைக்கு சாத்தியமான யாதார்த்த அரசியல்வாதியாக கோட்டாபாய காணப்படுகிறார் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான், நியூலாந்து,ஐக்கிய அரபு இராச்சியம், ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து தங்களது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானிய,கனடா, போன்ற பல மேற்குலநாடுகளின் பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாகவும் தங்களின் நல்லெண்ண தகவல்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இலங்கையின் புதிய அரசுடன் அண்டைய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்களின் உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more...

தமிழர் அரசியலில் மாற்று அணியென்றால் அது நாம்தான் - மார்தட்டுகின்றார் பொன்னம்பலத்தின் மகன்..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே தவிர அது மாற்று அணியாக இருக்காது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.

நேற்றுவரைக்கும் கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன , எத்தனையொ முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றபோது கொள்கை ரீதியாக கதைக்காதவர்கள் தற்போது கதைப்பது தான் ஏன் மாற்று என்று சொல்வது எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பதவிகள் சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு அவர்களை வெளியேற்றப் போகிறார்கள் அல்லது பதவிக்காலம் முடிகின்ற தறுவாயில் வேறு வழியைத் தேடுவதற்காக எடுக்கும் முடிவுகள் மாற்று அணியாக இருக்கப்போவதில்லை.

Read more...

Monday, December 2, 2019

சுவிஸ் தூதரகஊழியர் விடயம் முற்றுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன தூதரக வாயலில் உண்ணாவிரதம்.. வீடியோ

கடந்த 25ம் திகதி இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் , வீதியில் 2 மணிநேரம் அவரது விருப்புக்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முறையிட்டிருந்தது.

இம்முறைப்பாட்டினை தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையில் பரஸ்பர கருத்துப்பரிமாறல்கள் முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்திருந்தது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் தூதரக அதிகாரிகளை சந்தித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயரதாகாரிகள் தாங்கள் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அவ்வாறானதோர் சம்பவம் இடம்பெறவில்லை என்பதை தொழில்நுட்;ப ரீதியாக எடுத்துரைத்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்;டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம், இடம், சம்பந்தப்பட்ட வீதிகள், மற்றும் கடந்தப்பட்டதாக கூறப்படும் ஊழியரின் தொலைபேசி என்பவற்றை கொண்டு சீசீரிவி காட்சிகள், தொலைபேசி , ஜீபிஸ் ஆய்வுகளை மேற்கொண்டபோது முரண்பாடான மற்றும் ஒவ்வாத பெறுபெறுகள் கிடைக்கப்பெறுவதாக அரசதரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டுனெ பொலிஸார் வேண்டுதல் விடுத்துள்ளனர். ஆனால் குறித்த ஊழியர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைக்கு முகம்கொடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்றும் தூதரகம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த ஊழியரை பொலிஸாரின் விசாரணைக்கு பாரப்படுத்துமாறு கோரி இன்று தூதரகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன. இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த அவரது போராட்டம் நள்ளிரவு 11 மணியையும் தாண்டி தொடர்ந்து செல்கின்றது.

அவர் பதாதை ஒன்றை தாங்கியுள்ளார். அப்பதாதையில், „தூதுவரே, எம் தாய்நாட்டின் நற்பெயருக்கு தீங்கு செய்யாதீகள். பெண்மணியை பொலிஸாருக்கு வாய்முறப்பாடு வழங்க விடுங்கள்.' ‘the Ambassador of Switzerland, don’t tarnish the good name of my motherland. Let the lady give a statement to police,’ ' என எழுதப்பட்டுள்ளது.




Read more...

கடும் மழையினால் நாடெங்கிலும் 14 164 பேர் பாதிப்பு

13 மாவட்டங்களில் 4,153 குடும்பங்களைச் சேர்ந்த 14,164 பேர் பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

946 குடும்பங்களைச் சேர்ந்த 3149 பேர் 29 பாதுகாப்பான இடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இயக்குநர் (ஊடகம்) பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,மன்னார், முல்லைதீவு, கேகல்லை, கண்டி, புத்தளம், மாத்தளை, கிளிநொச்சி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,634 குடும்பங்களைச் சேர்ந்த 5,335 நபர்களை பாதித்த புத்தளம் மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதியைப் புகழ்ந்து தள்ளும் ரஞ்சன் பெல்டி அடிப்பாரா?

தேர்தல் காலத்தில் எதிரணி வேட்பாளரை தோற்கடிப்பதற்காக முயற்சி செய்வதாகவும், தங்களது வேட்பாளரை உயர்த்திப் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு அருகில் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''நாங்கள் அவருக்கு (கோட்டபாய ராஜபக்ஷ) எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். நாங்கள் அவரை பல்வேறு விதமாக விமர்சித்தோம்.எங்கள் வேட்பாளரை வர்ணித்தோம். அதுதான் வழக்கம்.

என்றாலும் கால்களால் இழுக்காமல், டொபி தாள் ஒன்றைக்கூட வீதியில் வீசாமல், சூழலைப் பாதுகாக்கின்ற அவரின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் நாங்கள் எதிர்க்கட்சியின் பொறுப்புக்களைச் செய்வோம். தவறான செயல்களை விமர்சிக்க வேண்டும்.

கொழும்பை சுத்தமாக வைத்திருப்பது, அலுவலக உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வாகனங்களைக் குறைப்பது போன்றவை தொடர்பில் நாங்கள் அவரைப் புகழத்தான் வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரபகிர்வை கோட்டாபாய காணவேண்டும் - சம்மந்தன்

பிளவுப்படாத ஒருமித்தநாட்டுக்குள் உச்சபட்ச அதிகாரபகிர்வை ஜனாதிபதி கோட்டாபாய காணவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.


பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் கூறினார்.

Read more...

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி - கருணா அம்மான்

முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று (01) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர். முதல் தடவையாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லாத அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் ஆட்சி செய்யும் அத்துடன் எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு பொற்காலமாகும்.

தமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடிய காலங்களில் சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னை சந்தித்து உங்களது போராட்டம் சர்வதேச மட்டத்தில் தெரியப்பட வேண்டும் என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்றும் இதற்காக தமிழ் மக்கள் சார்பில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூறினார்.

இவரது இந்த யோசனை குறித்து நான் பல தடவைகள் தலைவர் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது வேண்டுகோளிற்கு இணங்கவே இறுதியில் தலைவர் ஒத்துழைத்தார். அவ்வாறு எங்களால் உருவாக்கப்பட்ட கட்சி தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.அன்று எங்களால் ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைகள் அற்றுபோயுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது.குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழ் மக்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் புறந்தள்ளப்பட்டனர். ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்த இனத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கவில்லை எனவும் தெரைிவித்தார்

Read more...

பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறுத்தினார் கோட்டாபாய

இலங்கை பாராளுமன்றக் கூட்டத் தொடரை நிறுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அரச அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று(02) நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடரை நிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் ஒப்பத்துடன் தமக்கு கிடைத்துள்ளதாக அரச அச்சு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாபதி பொறுப்பேற்றவுடன் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இது நடப்பது என்றும் இதன் அர்த்தம் பாராளுமன்றத்த கலைத்தல் ஆகாது எனவும் புதிய ஜனாபதி பிரிதொரு தினத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றி மீண்டும் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

13 ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது இந்தியாவில் வைத்தே அறிவித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த முடியாது என 13 பிரசவித்த மண்ணில் வைத்தே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக 13 வது அரசியலமைப்பில் உள்ள சில விடயங்களை அமுல்படுத்த முடியாது.அதற்கு மாறாக மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதியை அபிவிருத்தி செய்யவோ அல்லது வேலைவாய்ப்புகளை வழங்கவோ சிங்கள மக்கங் மறுப்புத் தெரிவிக்கமாட்டார்கள் எனவும்,குறிப்பிட்ட அவர் அரசிலமைப்பின் 19 வது திருத்தம் தோல்வியை ஏற்படுத்தியிருக்கிறது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அதனை நீக்கிவிடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசிலமப்பின் 13 மூலம் மாகாணங்களுக்கு காணி பொலீஸ் அதிகாரங்கள் வழங்க்கப்பட்டிருந்தன. 13 வது அரசிலமைப்ப திருத்தத்தை கொண்டு வருவதற்கு இந்தியாவே முழுமையான காரணகர்த்தாவாக இருந்தது. ஆனால் 1987 முதல் 13 வது அரசிலமைப்பு மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை மத்திய அரசு மாகாணங்களுக்கு வழங்காது இன்று வரை இருந்து வரும் நிலையில் இந்தியாவில் வைத்தே ஜனாபதியின் இவ்வறிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

Read more...

சஜித்திற்கு வாக்குகள் கிடைக்காது போனதற்கான காரணம் பற்றி EPRLF!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்ற ஒரு தலைமையை வழங்கவியலாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதனால், மிக விரைவில் தமிழ் மக்களுக்குச் சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மாற்றுத் தலைவர் ஒருவர் தேவை என ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் அக்கட்சியின் பிரமுகர்கள் ஊடகச் சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து பிரேமச்சந்திரன் கருத்துரைக்கும்போது,

‘‘ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றியீட்டுவதற்கு மூல காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் கூட்டங்களை நடாத்தியமை, வடக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் விருப்புக்கு வாக்களிக்காது அவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நடந்துகொண்ட முறையானது சிங்கள வாக்குகள் குறைவதற்குக் காரணமாகியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன், மாவை சுமந்திரன் போன்றோர் எடுக்கும் முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முடிவாக இருந்தது. இதனால்தான் கஜேந்திர குமார் பொன்னம்பலம், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியைப் போலவே ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கினோம். இதற்கு தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாகினர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போதும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் இதைப்போல பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன் எதிர்க்கட்சியாக ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அரசாங்கம் பிரச்சினைகளைச் சந்தித்த போதெல்லாம் அரசாங்கத்தைப் பாதுகாத்தனர். ஜெனீவாப் பிரச்சினையின் போதும் அரசாங்கத்தைப் பாதுகாத்தனர்.

அன்று மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவர செயற்பட்டிருந்தால், தமிழ் மக்களின் மனித உரிமைப் பிரச்சினையை மனித உரிமைப் பேரவையின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சமர்ப்பித்திருக்கலாம். தேசிய பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறும்வகையில் புதிய அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதாகவும், அதுவரை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதியதொரு யாப்பினைக் கொண்டுவரவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். என்றாலும், இன்றுடன் நான்கரை ஆண்டுகள் சென்றுவிட்டன. அரசியல் வரைவும் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுள்ளது. இதனைச் சொல்லிச் சொல்லி தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை முதலிய அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றில் கவனவீனமாக இருந்து தமிழ்க் கூட்டணி செயற்பட்டது.

2000 ஏக்கர் பெற்றுக்கொண்டதாகச் சொன்னார்கள். என்றாலும் பல ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை முதலியன அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய யாப்பில் தீர்வு கிடைக்கும் என்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியாகவே தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அதனைச் நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் தெரிய வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் 50% வீழ்ச்சி கண்டுள்ளது.

சென்ற நான்கரை ஆண்டு கால செயற்பாடுகளின் மூலம் தான் தோல்வியடைந்துள்ளதை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தோல்வியின் பின்னரும் மீண்டும் ஐக்கியம் பற்றிப் பேசி மக்களைப் பகடைக்காய்களாக மாற்றிவருவது வாக்குக் கொள்ளையிடுவதற்கே என்று நான் நினைக்கிறேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது. வடக்கு கிழக்கு அரசின் பிரதிநிதிகளாக செயற்பட்டு வந்தது. என்றாலும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை.

பிரதான இரு கட்சிகளுக்கும் தென்பகுதி சிங்கள மக்கள் வாக்களித்தாலும்கூட, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பெரும்பாலும் அவ்வாறு வாக்களிக்கவில்லை. இதனால் மாற்றுச் சக்தி அல்லது பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதை நிறுத்துவதற்குத் தேவையில்லை.

புதிய அரசு மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தால் 19 ஆவது யாப்புத் திருத்தம் இல்லாமலாகும். ஒருவர் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதன் மூலம் சிங்கள மக்களே துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும். தமிழ் மக்கள் பல்வேறு முறைகளில் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர். எங்கள் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் சிரத்தையோடு இருப்பதைத் தவிர, மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முயற்சிப்பதை நிறுத்துவதற்கு ஆவன செய்வதாகச் சொல்வது சுமந்திரனின் சூழ்ச்சியில் தமிழ் மக்களுக்கான ஏமாற்றமே‘‘ எனவும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

(கலை)

Read more...

சஜித்துக்கு ஆப்பு:எதிர்கட்சித் தலைவராக கரு ஜயசூரிய?

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியி;ன மூத்த உறுப்பினரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை நியமிப்பதற்குப் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே கட்சிசியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டிருந்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் டுவிட்டரில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தைக்கும், கடந்த வாரம் இடம்பெற்றிருந்த சமரசப் பேச்சுவார்த்தைக்கும் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாதமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அவர் இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு எதிர்கட்சித் தலைவரான கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டால், அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதுவும் அங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

புலம்பெயர்ந்தோர் வாக்களிக்ககூடியவாறு சட்டதிருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றார் மஹிந்த.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தபால்மூலம் வாக்களிப்பை மேற்கொள்ளும் முறையைத் தயாரிக்க 2025 ற்குள் கட்டாயமாக சட்டத்தை உருவாக்கு வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தெரண தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் கருத்து மேலும் கருத்து தெரிவிக்கையில்:
2020 மார்ச் மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதாயின் ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அது தொடர்பான இறுதி முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தான் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும் அதன் உறுப்பினராக தொடர்ச்சியாக கடமைபுரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் அதிகரித்த சிக்கல் தன்மையை தீர்ப்பதற்காக கட்டுப்பணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான சட்டமூல வரைவு தயாரித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

Sunday, December 1, 2019

இன்று மதகுருமார்கள் அரசியல்வாதிகளின் கைப்பாெம்மைகளாகவே உள்ளனர்! பேராயர்

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் கல்வியியலாளர்களையும், அறிஞர்களையும் அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிடுகின்றார்.

உருகுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொBR/>ண்டு உரையாற்றும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று உருகுணைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. அங்கு அவர் உரையாற்றும்போது,

முன்னர் நாட்டை ஆட்சிசெய்த அமைச்சர்கள் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றியே சதாவும் சிந்தித்தார்கள். மேலும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் தியாக சிந்தையோடு செயற்பட்டார்கள். இன்று எங்கள் மதகுருமார்கள் சில உறுப்பினர்களின் அரசியல் கைப்பொம்மைகளாக உள்ளனர்.

எங்கள் நாடு உலகில் முதன்மையான ஒரு நாடாக மாற வேண்டும். அவ்வாறு மாற வேண்டுமானால் நாங்கள் எங்களது கல்வி, மதம், இனம், மொழி வகுப்பு போல பிரிக்கப்படாமல் பொதுவான ஒரு கொள்கைக்குள் உள்வாங்கச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். அனைவருக்கும் ஒன்றுபோல சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்களாக கல்வியியலாளர்களும், அறிஞர்கள் மற்றும் பயிற்சிபெற்ற சிறப்புத் தேர்ச்சியுடையோரும் அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

பட்டியலுக்குள் உள்ள அனைவரையும் தெரிவு செய்ய வேண்டியதில்லை. தலையைப் பாவித்துத் தெரிவுசெய்யுங்கள். நாட்டுக்குத் தேவையான நீதி, நேர்மை என்பவற்றை இவரிவரால் கட்டியெழுப்ப முடியுமா? என சிந்தித்து வாக்களியுங்கள் என்றார். <
BR/> சும்மா அலைபோல் ஒன்றுகூடுவதல்ல விஷயம். நாங்கள் அரசியல் மேடைகளுக்கு போவதாயின் அது நாட்டுக்குச் செய்யும் அநியாயமேயாகும்.

மதகுருமார்களாகிய நாங்கள் எங்கள் தலைமைத்துவத்தை அரசியல் மேடைக்கு வெளியால் இருந்தே வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

மண்சரிவில் சிக்குண்டு நாளை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் குடும்பத்துடன் பலி

நாளைய தினம் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்விருந்த மாணவன் ஒருவன் மண் சரிவில் சிக்குண்டு குடும்பத்துடன் பலியான சோகம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மற்றும் பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன.

இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,மற்றும் 18 வயதுடைய தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.

சடலமான மீட்கப்பட்ட மாணவன் நாளைய தினம் கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுத தயாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கோத்தபாயவின் செயற்பாடுகளுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். - ஐனாதிபதி செயலகம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மக்களின் பாராட்டு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல், 15 வீதமாகக் காணப்பட்ட வட் வரியினை 8 வீதமாகக் குறைத்தல், தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 வீதத்தினால் குறைத்தல், அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல் போன்ற ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16 ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல், சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம், 9 மாகாணங்களினதும் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல், இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எமது நாட்டிற்கு வருகைத் தந்து, எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல், ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல் மற்றும் கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல் என்பவற்றையும் மக்கள் வரவேற்றுள்ளனர்.

Read more...

வடக்கில் 100-150 மி.மீற்றர் பலத்த மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் அதிகளவாக 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என வழிமண்டலவியல் திணை்கள்ம அறிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு அனர்த்த நிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 643 குடும்பங்களைச் சேர்ந்த 2,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மண்முனை வடக்கில் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1,116 பேரும், காத்தான்குடியில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், நாவற்குடா கிழக்கு பாலர் பாடசாலையிலும், காத்தான்குடி பதுரியா மற்றும் காத்தான்குடி பல்தேவை கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அம்பாறையில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

Read more...

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல்: நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்படுமாம்! சஜித்

சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெள்ளை வானில் கடத்தப்பட்டமை குறித்து உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் பதிவாகிய இந்த சம்பவத்தினால் நாட்டின் நற்பெயரே சர்வதேச அரங்கிற்கு முன்பாக பாதிக்கப்படுவதாகவும் அதனைக் கருத்திற்கொண்டு உடனடி ஆழமான விசாரணை அவசியம் என்றும் சஜித் பிரேமதாஸ நேற்று அறிக்கை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை வாக்காளர்கள் தெரிவுசெய்த இந்த அரசாங்கத்திடம் இருந்து ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம் என்பவற்றையே எதிர்பார்க்கின்றார்கள்.

அந்த வகையில் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது புதிய அரசாங்கத்தின் தலையாயக் கடமை என்பதையும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல திட்டமிட்ட வகையில் திறமையான பொலிஸ் அதிகாரிகள் மீது பழிவாங்கும் படலமொன்று ஆரம்பிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் சஜித் பிரேமதாஸ அறிக்கையில் நினைவுப்படுத்தியுள்ளார்.

சில ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இவ்வாறான செயற்பாடுகள் தகவல் அறியும் உரிமையை பறிக்கின்ற அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு சமமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இப்படியான நிலைமைகளை கருத்திற்கொண்டு உடனடி நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதையும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


Read more...

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளையும் இணைக்க நடவடிக்கை!

தற்போது நாட்டில் செயற்படுகின்ற அனைத்துப் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளும் இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆவனசெய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

முக்கியமாக அரச புலனாய்வு அலகு, தேசிய புலனாய்வுப் பணியகம், மேல்மாகாண புலனாய்வுப் பிரிவு என்ற மூன்றையும் ஒன்றிணைத்து அந்தப் புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினூடாக ஆய்வுசெய்து தேடல்களை மேற்கொள்வதே அரசின் திட்டமாக உள்ளது.

கடந்த காலத்தில் புலனாய்வுத் தகவல்களைச் சரியான முறையில் தெரிந்து கொள்வதற்கும், சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் முடியாது போனதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்று தெளிவாகியிருப்பதால், யுத்தத்தில் மட்டுமன்றி அதன் பிறகும் பாதுகாப்பு தொடர்பில் மாபெரும் பங்களிப்பை நல்கிய இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் குறித்த புலனாய்வுப் பிரிவுகளையும் ஒன்றிணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more...

என் கடைசி மூச்சுவரை அரசியலில் நின்றுபிடிப்பேன்! - முன்னாள் ஜனாதிபதி

“எனது பதவிக்காலம் முடிவடைந்ததனால் சிலர் நினைக்கிறார்கள் என்கதி அதோகதிதான் என்று. இல்லை...இல்லை... நான் அரசியலில் மீண்டும் பிறப்பெடுப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.

கடந்த கால செயற்பாடுகள் பற்றிய ஜனாதிபதியின் கருத்துக்களுக்காக பொலன்னறுவை புலதிஸி பெளத்த மண்டபத்தில் இடம்பெற்ற மைத்திரிக்கான நன்றி நவிலல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது,

“தற்போது சிலர் பேசுகின்ற பேச்சுக்களும்... செய்கைகளும் எனக்குத் தெளிவினைத் தந்துள்ளது. அவர்கள் நினைக்கிறார்கள்... எனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால் நான் ஒழிந்துவிட்டேன் என்று. இல்லை... இல்லை... நான் அரசியலில் மீண்டும் பிறப்பெடுப்பேன். எனது உடம்பில் பலம் உள்ளவரை.... எனது கடைசிமூச்சு வரை நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் என்னாலான பணிகளைச் செய்வேன். அதனை இல்லாதொழிக்க எவராலும் இயலாது” எனவும் குறிப்பிட்டார்.

Read more...

Saturday, November 30, 2019

2020 பெப்ரவரி 3 ஆம் வாரம் பாராளுமன்றம் கலைக்கப்படும்!

தற்போதைய பாராளுமன்றம் நான்கரை ஆண்டுகளைக் கடந்தவுடனேயே அதனைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் இதுதொடர்பில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் கலந்தாலோசித்தாகத் தெரியவருகின்றது.

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிபாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டதுடன், 19 ஆவது அரசியல் யாப்பிற்கு ஏற்ப நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு இயலாது. தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியே நான்கரை ஆண்டுகளைப் பூர்த்திசெய்கின்றது. எனவே, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர்கள் பிரேரணை முன்வைத்துள்ளனர்.

அதற்குக் காரணம் தற்போதைய சபாநாயகர் தனது பதவியிலிருந்து விலகமாட்டேன் எனக் குறிப்பிட்டிருப்பதேயாகும். கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதனால், சிறப்பாகப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுத்தேர்தல் நடாத்தப்படுவது அவசியமானது என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 96 பா.உறுப்பினர்களின் ஆதரவும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (சபாநாயகர் தவிர) பா.உ 106 பேரினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 15 பேரினதும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 6 பேரினதும், பா.உ குமார வெல்கமவினதும் ஆதரவு கிடைத்துள்ளது.

Read more...

ஆரம்பித்தது சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான வாக்குப்போர்.

சுமந்திரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் அதிகாரத்துடன் இருநதால் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இல்லாது போய்விடும் என சிறிதரன் கட்சி ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதோடு சுமந்திரனுக்கு எதிராக கிளிநொச்சி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கோரியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் நடவடிக்கைகள் தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்களுடையே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது


பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மைய நாட்களாக கிளிநொச்சியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். கிளிநொச்சிக்கு வருகை தரும் அவர் கிளிநொச்சியில் இளைஞர்களை சந்தித்து தனது ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தி வருகின்றார். அத்தோடு கௌதாரிமுனை மணல் பிரச்சினைக்காக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார். அத்தோடு தனது ஆதரவாளர்களை அதிகரிக்கும் படியும், எதிர்காலத்தில் தனித்துவமாக செயற்பட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைக்கப்பட்டு ஆறு பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகிறது. எனவே இனி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியிக்கு மூன்று ஆசணங்களே கிடைக்க கூடிய வாய்ப்புள்ளது. எனவே அந்த மூன்றுக்குள தெரிவு செய்யப்படுகின்றவர்கள் தனியே கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்குகளையோ, அல்லது யாழ் மாவட்டத்தின் வாக்குகளையோ தனியே பெறுகின்ற ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது

எனவே யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குளை பெறுகின்ற ஒருவரே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. ஆகவே சுமந்திரன் கிளிநொச்சியில் தனது ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுப்படத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் சிறிதரனின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ளவர்களை இலக்கு வைத்து செயற்படத் தொடங்கியிருக்கிறார். அதற்கான சுமந்திரன் அவர்கள் கரைச்சி பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் என்பவரை பயன்படுத்திவருகின்றார். குமாரசிங்கம் கடந்த வருடம் வரை சிறிதரனோடு சேர்ந்தியங்கியவர் .


எனவே குமாரசிங்கத்தின் மூலம் கிளிநொச்சியில் கடந்தவாரம் சுமார் இருபது வரையான இளைஞர்களை கிளிநொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சுமந்திரன் சந்தித்திருந்தார்' தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளராக பளை பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் உள்ள போது அரை தவிர்த்து இச் சந்திப்பு இடம்பெற்றது. இதனால் சிறிதரன் சுமந்திரன் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதோடு, சுமந்திரனுக்கு எதிராக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சுமந்திரன் ஐக்கியே தேசிய கட்சியுடனும், ரணிலுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார்

எனவும் அவரின் தனிப்பட்ட நலனுக்காகவே தமிழரசு கட்சியினை ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியாக மாற்றினார் எனவும் அவர் தொடர்ந்து கட்சியில் இருந்தால் எதிர்காலத்தில் பாரம்பாரிய மிக்க தமிழரசு கட்சி என்ற ஒன்று இருக்காது எனவும் எனவே சுமந்திரனை தமிழ் மக்கள் அரசியலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கட்சி தொண்டர்களிடம் கூறி ய சிறிதரன் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


இதன் விளைவாக தற்போது சிறிதரனின் ஆதரவாளர்களால் அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் சுமந்திரனுக்க எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு கிளிநொச்சியில் சுமந்திரனை சந்தித்த குமாரசிங்கம் உட்பட இளைஞர்களை மீண்டும் தன்னுடைய ஆதரவுக்குள் கொண்டு வருவதற்கும் சிலரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் சிறிதரன். இந்த வகையில் சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பணிப்போர் ஆரம்பித்து நடைப்பெற்று வருகிறது.

Read more...

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் ஆரம்பம்! பிச்சைக்காரர்களுக்கு 'நோ எக்ஸிகியுஸ்'

பிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் தெளிவுறுத்தியுள்ளது.

பதில் கடமையாற்றும் பொலிஸ் மாஅதிபரின் கட்டளையின் பேரில் இந்த அறிவுறுத்தலை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் அபேசிரி குணவர்த்தன வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் மேல் மாகாணத்தினுள் பிச்சையில் ஈடுபடுகின்ற நபர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகம பிரதேசத்தில் அமைந்துள்ள பிச்சைத் தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் நாளை முதல் புகைவண்டியினுள் பிச்சையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதச் சேவைத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறாதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வீதி புனரமைப்புக்கு ஒதுக்கிய பணத்தை ஆட்டையைப்போட்டார் சிறிதரனின் சகா வேழமாலிகிதன்!

கிளிநொச்சியில் வீதி புனரமைப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ. வேழமாலிகிதன் முறைக்கேடனா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சட்டத்தின் ஊடாக இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

குறித்தி விடயம் தொடர்பில் தெரியவருவதாவது

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரிக்கு பின் வீதி புனரமைப்பு தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடமும், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரிய போது இரண்டு நிறுவனங்களும் இருவேறு தகவல்களை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரி பின் வீதியானது ஒப்பந்தகாரர் ஒருவரினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தீடிரென வீதி புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. ஆதாவது செலவு திட்டமதிப்பீடுகளோ புனரமைப்பிற்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்படாது தவிசாளரின் வாய்மொழி மூல அறிவித்தலுக்கு அமைய எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் கணக்காய்வு திணைக்களத்திற்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.


எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஊடாக வினவிய போது குறித்த வீதியானது தங்களினால் புனரமைக்கப்படவில்லை எனவும் அதற்கான மதிப்பீடுகளோ, ஒப்பந்தமேமா கைச்சாத்திடப்படவில்லை என பதிலளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் ஊடாக வினவிய போது குறித்த வீதி புனரமைப்பு யாரால் மேற்காள்ளப்பட்டது என்று ஆராயுமாறு கரைச்சி பிரதேச சபை செயலாளரினால் தொழிநுட்ப உத்தியோகத்தரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது எனவும், குறித்த வீதியானது யாரால், எந்த நிதியில், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற ஆவணங்களுடன் தொழிநுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையினையும் பெற்று அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளனர்.

ஆனால் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் எவ்வித சட்டநடைமுறைகளுக்கும் உட்படாது இதுவரைக்கும் 10 இலட்சம் ரூபா வரை செலவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தொடர் அபிவிருத்திக்குரிய கண்டக் கல் என்பனவும் இறக்கப்பட்டும் காணப்படுகிறது.

எனவே குறித்த வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இருப்பதனால் உரிய திணைக்களங்கள் விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.

Read more...

அடித்தார் கமால் அந்தர் பல்டி! குற்றம் புரியாத இராணுவத்தினரே விடுவிக்கப்படுவார்களாம்!!

குற்றங்கள் புரிந்ததாக சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் நிரபராதிகளான இராணுவத்திரே விடுவிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண.

பாதுகாப்பு செயலாளராக கடமையேற்ற பின்னர் இன்று முற்பகல் கண்டியிலுள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளான சங்கைக்குரிய தேரர்களை சந்தித்த பின்னர், உறுதிவழங்கியவாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் எப்போது விடுவிக்கப்படுவர் என ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது மேற்கண்டவாறு கூறிய கமால் குணரட்ண மேலும் தெரிவிக்கையில்:

தேர்தல் பிரச்சாரங்களின்போது நீதிக்குப்புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை நான் பதவிக்கு வந்தவுடன் விடுதலை செய்வேன் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தது உண்மைதான். அதன்பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நிரபராதிகள் யார் என்பது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டுவருகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம் பணிப்பு விடுத்துள்ளார். அக்கருமங்களை நாம் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு பணிந்து மேற்கொண்டு, அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் வடக்கிலுள்ள இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்படுவார்களா என கேட்கப்பட்டபோது, அங்குள்ள முகாம்களை அகற்றுவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறிய அவர் முகாம்கள் இருப்பது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்றார்.

அத்துடன் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சங்கைக்குரிய தேரர்களுக்கு விளக்கிய பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தினரை நாடுபூராக வைத்திருப்பதாகவும், குற்றங்களை கட்டுப்படுத்தவும் நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணவும் தாம் பொலிஸாரையே ஈடுபடுத்துவதாகவும் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத கருமங்களை விசேட அதிரடிப்படையினரை கொண்டு கையாளவுள்ளதாகவும், அவர்களாலும் கையாள முடியாத நிலை ஏற்படின் இராவத்தினரின் சேவையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

Read more...

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி பல்கலைகழக மாணவன் பலி

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி வவுனியா தொழில்நுட்டபீடமுதலாம் தர மாணவன் பலியாகியுள்ளார். 22 வயதான குறிதத் இளைஞன் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் குறி்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. வெள்ள நீரை நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. .

மின் தாக்கத்திற்கு உள்ளான குறித்த இளைஞனை மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞன் வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் வருட மாணவனான விக்னராசா சாரங்கன் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read more...

எங்கள் நாட்டு ஆளும் வர்க்கத்தினருக்கு மக்கள் ஏழைகளாக மாறுவதில் நன்மையுள்ளது!

தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற செயற்பாடுகள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளை - ஹாலிஎலப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் நாட்டுஆளும்வர்க்கத்தினருக்கு மக்கள் ஏழைகளாகும் அளவிற்கு இலாபம் மற்றும் இலகு எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டினுள் இனவாத வடு உள்ளவரை அதனை விற்பனை செய்வதற்கு இலகுவாக உள்ளது எனக் குறிப்பிட்ட வித்யாரத்ன, அது துரதிர்ஷ்டமே எனவும் குறிப்பிட்டார்.

என்றாலும் அவர்கள் சொல்வது என்னவென்று பொதுமக்களுக்கு விளங்குவதில்லை எனவும், எதிர்வரும் காவங்களிலேனும் இந்த உண்மை இந்த உண்மையை மக்கள் தெரிந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் 'நல்ல பிள்ளை' பாத்திரமேற்று செயற்படுகின்றது எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இந்த 'நல்ல பிள்ளை'த்தனம் இருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தொடர்பில் தான் வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதியினால் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவை தொடர்பில் தனது விமர்சனங்கள் மேலெழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

வரி குறைந்தாலும் வாகனத்தின் விலையில் குறைவில்லை!

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பல்வேறு வரிகள் குறைக்கப்படவுள்ளன. என்றாலும் வாகனங்களில் விலையில் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாது என இலங்கை வாகனங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.

அச்சங்கத்தின் செயலாளர் நாயகம் பிரசாத் குலத்துங்க குறிப்பிடும்போது, வாகனங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரிகளில் எந்தவிதமாற்றமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.

சென்ற காலங்களில் வாகனங்கள்.தொடர்பில் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன. எனவேதான் வாகனங்களின் விலை கூடிக்கொண்டே சென்றது. அதேநிலையில்தான் தற்போதும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால் வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது, விலை குறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Friday, November 29, 2019

நிஸாந்த டி சில்வா மற்றும் தூதரகப் பெண் விவகாரம், சுவிஸ் - இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் யாரும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நிகழ்ந்திருந்தது. குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரியான நிஸாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறினார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பல்வேறு கொலைகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பிரதான பொலிஸ் அதிகாரியின் வெளியேற்றம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி கூட தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

அவ்வாறு அந்த அதிகாரி வெளியேறிய விடயம் தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகங்கள் பல்வேறு விதமான ஊகங்களை வெளியிட்டிருந்தது. குறிப்பாக நிஸாந்த த சில்வா தான் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான பல மூலப்பிரதிகளை சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் , இலங்கையை சர்வதேச சமூகத்தின் முன்நிலையில் அவமானப்படுத்தலாம் என்ற கோணத்திலும் கட்டுரைகள் வரையப்பட்டதுடன் மக்களையும் குழப்பத்திற்குள் தள்ளியது.

மறுபுறும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் ஒருவர் கொழும்பு வீதியில் வைத்து கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பதிவாகின. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட பிரதமர் தமக்கு இவ்விடயத்தில் சுவிட்சர்லாந்து தூதரகம் ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

பிரதமரின் குற்றச்சாட்டை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளதுடன் , தாம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவே கூறியுள்ளது.

அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் விவகாரத்திலும் கரிசனை கொள்வதாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தற்போதைய உடல்நிலையானது, விசாரணைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்கு அடைக்கலம் கோரி சென்றபின்னர் இலங்கை அரசு அவரை நாடுகடத்துமாறு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளதாகவும், ஆனால் தமக்கு அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் இலங்கை அரசிடமிருந்து உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை என சுவிஸ் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் அப்பெண்ணை கடத்தல்காரர்கள் எனக்கூறிப்பிடுவோர் பலவந்தமாக தெருவில் தடுத்து வைத்திருந்ததாகவும் அவரது விருப்புக்கு எதிராக வாகனம் ஒன்றில் ஏற்றி அவரிடம் தூதரக செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை கோரி விசாரணை மேற்கொண்டதாகவும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருந்தபோது குறித்த பெண்ணிடம் நிஸாந்த சில்வா எவ்வாறு வீசாவை பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பாகவே வினவப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சுவிட்சர்லாந்து இலங்கை அரசிடம் முறையிட்டுள்ளதுடன் பூரண விசாரணை ஒன்றை கோரி நிற்கின்றது. அவ்விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாதுவிடின் அது நிச்சயமாக சுவிட்சர்லாந்து-இலங்கை இராஜதந்திர உறவில் ஒரு கறுப்பு புள்ளியை உருவாக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை..

Read more...

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக மோடி அரசாங்கம் 50 மில்லியன் டொலர் வழங்கவுள்ளது!

இலங்கையில் அதிகாரத்தில் உள்ள புதிய அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் செயற்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களைச் சரிசமமாக மதித்து அவர்களுக்கு நீதி மற்றும் சுதந்திரத்தை வழங்கி ஒருமைப்பாட்டை செயற்படுத்தி முன்னோக்கிச் செல்லும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் மிகவும் தெளிவாகத் தான் உரையாற்றியதாகவும், கோட்டபாய ராஜபக்ஷ தனது அரசியல் முன்னெடுப்புக்களைக் குறிப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்ற போதே இந்தியப் பிரதமர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜனாபதி தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் எனக் குறிப்பிட்ட மோடி, 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை மிகக் குறைந்த கடன் திட்டத்தில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் அமரிக்க டொலர்களைப் பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்டார்.

Read more...

மக்கள் நிராகரித்தவர்களுக்கு ஏன் இராஜாங்க அமைச்சு....? கேள்விக்கணை தொடுக்கிறார் கெவிந்து!

சென்ற பொதுத்தேர்தலின் போது தோல்வியைத் தழுவிய, தேசியப் பட்டியலில் மந்திரிப் பதவியைப் பெற்றுக்கொண்டோருக்கு, புதிய அரசாங்கத்தில் இராஜங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்காெள்ள முடியாது என 'யுத்துகம' அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரத்துங்க தெரிவித்தார்.

இன்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"தேசிப் பட்டியலைத் திருடினார்கள். மக்கள் நிராகரித்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கினார்கள். அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குவது பிழையாகும்" எனவும் குறிப்பிட்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com