Saturday, November 9, 2019

இந்நாட்டில் தமிழீழக்கொடியேற்றியவன் கோத்தாவின் மடியில்! விஜிதமுனி சொய்சா ஆவேஷம்

ராஜபக்சர்கள் முழங்கும் தேசப்பற்றானது போலியானது என்றும் இந்நாட்டினை இரண்டாக உடைத்து, தமிழீழக் கொடியினை ஏற்றி ஈழப் பிரகடனம் செய்து வைத்த வரதராஜப்பெருமாள் இன்று தோத்தபாய ராஜபக்சவின் மடியில் செல்லப்பிள்ளையாகவுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் பாரளுமன்ற உறுப்பினர் விஜித முனி சொய்சா.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டநாள் உறுப்பினரான விஜிதமுனி சொய்சா 2015ம் ஆண்டு மஹிந்த தோற்கடிக்கப்பட்டவுடன், இப்போது மஹிந்த செத்தபிணம், செத்த பிணத்தை வீட்டிற்குள் வைத்திருப்பதில்லை தூக்கி எறியவேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்து ராஜபக்சர்களின் பலத்த ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். அவர் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் ராஜபக்சர்களுக்கு எதிரான பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்பிரச்சார மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் பேசுகையில்:

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக 40 வருடங்கள் தொடர்ச்சியாக உழைத்து அக்கட்சியின் உபதலைவர் பதவியை எட்டியிருந்தேன். ஆனால் இந்நாட்டின் பிக்குளை அறுந்தலாவையில் வெட்டிக்கொன்றொழித்து, பின்னர் தலதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியான கருணாவை மஹிந்த ராஜபக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக்கினார். இவர்கள்தானா இந்நாட்டை நேசிக்கின்றவர்கள்? இதுதானா இவர்களது தேசப்பற்று என்று கேட்டார்.

மேலும் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை தூக்கிக்கொண்டு திரிகின்றனர். ஏப்பரல் 21 ம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட மிலேச்ச பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற நாட்டை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றனர். இங்கே இருக்கின்ற றிசார்ட் , ரவூப் ஹக்கீம் தொடர்பாக பேசுகின்றனர். அவர்களை மதவாதிகள் என்கின்றார்கள். நான் ராஜபக்சர்களின் முகாமில் வளர்ந்தவன். அன்று றிசார்ட் பதுயுதீன் பசில் ராஜபக்சவை 'பசில் ஐயா (அண்ணே)' என்றுதான் அழைப்பார். அப்போது அவர்கள் அண்ணன்-தம்பி, இப்போ அவர்கள் எதிர் அரசியலுக்கு வந்துவிட்டால் மதவாதிகளாம் என்றார்.

Read more...

ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வுபெறும் உத்தியோகபூர்வ நாள் எதிர்வரும் 14!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமான முறையில் ஓய்வுபெறுவதையடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை 11.00 க்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்படவுள்ளதுடன், சிறுவர்களுக்கான விசேட லாெத்தர் ஒன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் அன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் கடமையாற்றியோருக்கு பகல் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகாெள்ளும் இறுதி அமைச்சரவைச் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

Read more...

அடிப்படைவாதிகளின் கழுத்துக்களில் ஏறாமல் சீரிய வழிச்செல்ல தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே இயலும்! - அநுர

அடிப்படைவாதத்தையும், இனவாதத்தையும் நாட்டிலிருந்து இல்லாதொழித்தால் மட்டுமே நாட்டைச் சீரிய பாதையில் காெண்டு செல்லவியலும். அதனை தேசிய மக்கள் சக்தியினால் மட்டுமே செய்யவியலும்... என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அம்பலங்கொடையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக. இருப்பது அடிப்படைவாதம் எனவும், தேசிய பாதுகாப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதியுடையதாக மாற்ற வேண்டுமானால் அடிப்படைவாதத்தையும், இனவாதத்தையும் பூண்டோடு அழிக்க வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அடிப்படைவாதத்தையும் இனவதத்தையும் அழிக்க இயலுமான ஒரேயொரு அரசியல் மேடை தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு அடிப்படைவாதியினதும் கழுத்திலும் ஏறாது, மக்களிடத்துச் செல்லவியலுமான ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர் மிகவும் தெளிவான முறையில் எடுத்துச் சொன்னார்.

(கேஎப்)

Read more...

Friday, November 8, 2019

மாெட்டுக்கட்சி விரும்பாவிட்டாலும் கோத்தாவின் வெற்றியின் புகழ் ஸ்ரீசு கட்சியையே சாரும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ பெறவுள்ள வெற்றியின் அனைத்து பாரிய கெளரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டு்ளளார்.

'தேசத்திற்காக கோத்தபாயவுடன் கரங்களைப் பிணைப்போம்' எனும் கருப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தெஹிவளையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று சேராது விட்டால் இரு கட்சியும் காணாமற் போய்விடும். சென்ற ஐந்தாண்டுகள் பற்றிய புத்தகம் ஒன்று எழுதினால் நோபல் பரிசு கிடைக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதாரவாளர்கள் செய்கின்ற அன்பளிப்பு என்னவென்றால், நாட்டின் வெற்றிக்கு, செளபாக்கியம் அவசியமாகின்றது. வெற்றியின் முழு கெளரவமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். மொட்டுக் கட்சி இதனை விரும்பாது. என்றாலும் உண்மை அதுதான்'

Read more...

சஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாவலப்பிட்டி மகிந்தானந்த அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் உரையாற்றும்போது:

'புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் மற்றும்கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ 60 வீதத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சேற்றினைப் பூசுவதற்கு பணத்தை இறைத்துக்கொண்டிருக்கின்றது. 21 ஆந் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் நடாத்திய ஸஹ்ரானின் மனைவியின் விஷேட உரையொன்றுடனான காணொளியொன்றைத் தயாரித்து எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஒளி - ஒலிபரப்ப இருக்கின்றது. அதன்மூலம் ஸஹ்ரான் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ இருவருடனும் சிநேகபூர்வமாக இருந்துள்ளனர் என்பதை வெளிக்காட்டவுள்ளனர்.

இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரியிருந்தார். எங்களுக்கு எவ்விதத்திலும் இரண்டாவது விருப்பு வாக்குத் தேவையில்லை. 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புற்ற எவரது அநுசரணையும், ஒத்துழைப்பும் இந்தத் தேர்தலில் எங்களுக்குத் தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெளிவாகவே கூறியிருக்கின்றார்.

சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களது வாக்குகளை நாங்கள் பிச்சையாக ஏற்க மாட்டோம் என, கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதாக அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷ ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் மலையக வாக்குகள் தற்போதை அரசாங்கம் ஆட்சிக்கு வர வாக்குகளை வழங்கின.

வடக்கிற்கு அரசியல் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் வடக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் இம்முறை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கவே அப் பிரதேச மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், அம்மக்களின் எண்ணப்பாடுகளை மாற்றுவதற்காகத்தான் அமைச்சர் ராதா கிருஷ்ணன் இவ்வாறான செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கின்றார்.' எனக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் மிகையானதாம்! கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..

„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?'

இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ் மக்களால் ஜனநாயக தேர்தல் ஒன்றினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி மதியாபரணம் சுமந்திரன்.

எதிர்பார்த்த அனைந்தும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மைதான், அவ்வாறு அனைத்தும் கிடைக்கவேண்டும் என்றோ அல்லது அனைத்தும் கிடைத்துவிடும் என்றோ மக்களும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானது என்றால், அது அடையமுடியாதவை என்றால் அவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் யார்? அல்லது அதற்கான அங்கீகாரத்தை தமிழ் மக்களிடம் கேட்டவர்கள் யார்?

வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்து சிங்களவனின் தோலை கொண்டு காலுக்கு செருப்பு தைத்துப்போடப்போகின்றேன் என முழக்கமிட்டவர்கள் யார்? வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து அத்தனை தேர்தலிலும் எதற்காக ஆணைகேட்டீர்கள்? 2015 இல் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியேற்றி அதனை அந்த ஆட்சியிலிருந்து இறங்காதவாறு பொதியாக சுமந்த கழுதைகளிடம் இன்று மக்கள் இவ்வாறாதோர் பதிலை எதிர்பார்க்கவில்லை.

தமிழ் மக்களின் விருப்புக்கள் என்ன அவர்களது அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை தமிழ் தலைமைகள் மக்களிடம் வினவியுள்ளதா? இல்லை மாறாக தமிழ் மக்களுக்காக என என்றுமே அடைமுடியாத இலக்கொன்றை தயாரித்து அந்த இலக்கை அடைவதற்கு மக்கள் ஆணைவேண்டும் என்றும் அந்த ஆணையை மக்கள் சர்வதேசத்தின் முன்னால் வழங்கினால் மக்களின் விருப்பின் பெயரில் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடமுடியும் என்று தமிழ் மக்களுக்கு லாஜிக் படிப்பித்த தலைமைகள் இன்று தாங்கள் சுமந்து செல்லும் எஜமானர்களை காப்பதற்காக தமிழர்களது எதிர்பார்ப்புக்கள் அதிகமானது என்று மக்கள் கைகளில் குற்றப்பத்திரிகையை திணிக்கின்றனர். மிஸ்டர் சுமந்திரன்! தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை தாங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் அந்த கணிப்பு எவ்வாறு எங்கு இடம்பெற்றது என்பதை சற்று தெளிவாக கூறமுடியுமா?

ஓவ்வொரு தேர்தல் வரும்போது வட்டுக்கோடையில் ஏந்திய அதே அழிவுப்பத்திரத்தை தூக்கிக்கொண்டு இன்றுவரை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் வழித்தோன்றல் சுமந்திரனுக்கு இன்று சுடலை ஞானம் பிறந்துள்ளது. ஆம் நாங்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகமானவை என்று கூறவில்லை. மாறாக தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்கள் யாது என்று எவருக்கும் தெரியாது. அது இன்றுவரை அறியப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காக குத்திமுறிவதை விட்டுவிட்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் யாது என்பதை இதயசுத்தியுடன் அறித்து கொள்ள முயற்சியுங்கள்.

மேலும் „முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?'
இதுவும் ஒரு புதிய லாஜிக் தான். பதினாறு பேரை பாராளுமன்றுக்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தது எவ்வாறு பிழையாகும். தேர்தல் ஒன்று வரும்போது, கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டே இல்லா நீங்கள் மக்களாகிய எம்மிடம் வந்து யாது கூறினீர்கள்? மக்களே நீங்கள் ஒற்றுமையாக வாக்களித்து எம்மை அதிக எண்ணிக்கையில் பாராளுமன்று அனுப்பினால்தான் எமது இலக்குகளை அடையமுடியும் என்றுதானே கூறுனீர்கள். அதன் பிரகாரம் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டைத் தவிர்த்து மக்களாகிய நாம் உங்களுக்கு தந்தபின்பு தற்போது ஏன் இந்த பித்தலாட்டம்.

இவ்விடயத்தை நீங்கள் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தால் மக்கள் இலங்கையின் தேசியக் கட்சிகள் என்று கருதப்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிபந்தனை அடிப்படையில் வாக்குகளை அளித்து பெற்றுக்கொண்டிருக்க மாட்டார்களா?

Read more...

இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தோற்கடித்தாலே இந்நாட்டினை பாதுகாக்கலாம்..

அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தோற்கடிப்பதன் மூலமே எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அடிப்படைவாதிகளால் எமது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக, திகனவில், தர்காவில் மற்றும் அக்குரனையில் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டனர்.

இன்று எமது பாதுகாப்பின் அச்சுறுத்தல் அடைப்படைவாதிகள்.

அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தோற்கடிப்பதன் மூலமே எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.

நாம் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். இந்நாட்டின் அடிப்படைவாதம், இனவாதத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே தோற்கடிக்க முடியும் என்று.

சம்பந்தனின் தோளில் கை போட்டுக் கொண்டு சஜித் வடக்கிற்கு செல்கிறார். இல்லையென்றால் வடக்கிற்கு செல்ல முடியாது. ஹக்கீம் அல்லது அமீர் அலியின் தோளில் ஏறிதான் அவர்கள் கிழக்கிற்கு செல்ல முடியும்.

எனினும் எந்தவித அடிப்படைவாதத்தின் தோளிலும் ஏறாமல் பொதுமக்களிடம் எமக்கு செல்ல முடியும்.

எங்களுக்கு காத்தான்குடிக்கு செல்ல முடியாது என்று கூறினார்கள்.

எனினும், எந்த அடிப்படைவாதிகளின் உதவியும் இல்லாமல் நாங்கள் இரண்டு கூட்டங்களை காத்தான்குடியில் வெற்றிகரமாக நடத்தி காட்டினோம்.

அனைவரையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தால், இந்நாட்டின் அடிப்படைவாதம் அந்த இடத்தில் தோற்கடிக்கப்படும் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.



Read more...

Thursday, November 7, 2019

நாம் ஏன் சஜித்துக்கு வாக்களிக்கின்றோம்...? விளக்குகின்றது ரீஎன்ஏ!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுக்கொண்டவராகவும் சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லக்கூடிய அதிகாரவாதத்திற்கு எதிரானவராகவும் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போன்று, தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச்சென்று சகல பிரஜைகளுக்கும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தை பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் ஜனாதிபதி இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பொருத்தமான கணிப்பொன்றை மேற்கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவருடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் கடந்த கால செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நீக்கி 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித்துறைக்கான உயர் நியமனங்களை முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொண்டமை, பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பை திருத்தியமைத்தமை என்பன கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் சர்வாதிகார ஆட்சியை தொடர்வதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பிற்கு முரணாக அவர்கள் பாராளுமன்றத்தில் செயற்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காக பாராளுமன்றத்தில் உறுதியாக நின்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதல் சம்பவங்களும் வௌ்ளை வேன் பீதியும் மக்களுக்கு நினைவில் இருக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் பேச்சுவார்த்தையை ராஜபக்ஸ அரசு கைவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அந்த அரசாங்கம் நிறைவேற்ற தவறியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அவர் சார்ந்த அரசியல் இயக்கமும் அத்தகைய முறைப்பாட்டிற்கு இடமளிக்கவில்லை என கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயம், காணாமலாக்கப்பட்டோரின் விடயம், தடுப்புக் காவலிலுள்ள கைதிகளின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அவசரமாக தீர்வு காண வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கூட்டமைப்பு ஆராய்ந்ததாகவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதே சரியான விடயம் என தீர்மானித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பு கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-நன்றி:ஜப்னா முஸ்லிம்-

Read more...

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியும் ஹிஸ்புல்லாவுக்கு கதவை இழுத்து மூடியுள்ளது.

அண்மையில் அழையாவிருந்தாளியாக அல்-ஹாமியா அரபுக் கல்லூரியினுள் நுழைந்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா அங்கு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை தனது தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.

இவ்விடயத்தினை அறித்த கல்லூயின் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா விஜயம் செய்தமை கண்டிக்கத்தக்கது என அறிவித்துள்ளார்.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி (கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் அமைப்பின்) பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 04.11.2019 அன்று அல்-ஹாஹாமியா அரபுக் கல்லூரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புள்ளா விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவற்றை தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது அவரது கேவலமான அரசியலை பிரதி பலிக்கின்றது.

மௌலவி மும்தாஜ் மதனி என்பவர் கல்வி நடவடிக்கைக்களுக்காக கல்லூரிக்கு விஜயம் செய்யவிருப்பதாகவே ஏற்கனவே அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஹிஸ்புள்ளா வருகை தந்திருந்தார் என்பதுடன் இந்நடவடிக்கைக்கு மத்ரஸா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

இனி ஒருபோதும் ஐதேக வுடன் இணைய மாட்டேன்... ! வசந்த

இனி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கான எண்ணப்பாடு இல்லை எனவும், தன்மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டு இருக்கவியலாது எனவும் அமைச்சர் வசந்தா சேனாநாயக்க குறிப்பிட்டார்.

நாடு எதிர்பார்க்கும் அரசியல் முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று (07) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

கட்சியை விட்டு வெளியேறிய போதிலும் அரசியலில் இருந்து விலகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் பிரேமதாசவுக்கான வெற்றிக்கு ஒத்துழைப்பதிலிருந்து தூரத்தில் நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

எதிர்வரும் 11 ஆம் திகதி விசேட பாராளுமன்றக் கூட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு விசேட பாராளுமன்றக் கூட்டத்தை நடாத்த பாராளுமன்றம் விவகாரங்கள் தொடர்பிலான செயற்குழு முடிவு செய்துள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பிலான குழுவில் இன்று (07) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு தொடர்பான தவறான நடத்தை தடுப்பு மசோதா அன்று விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கண்டுபிடிப்பு தொடர்பிலான முகவர் நிறுவனத்தை நிறுவுவதற்கான மசோதா இரண்டாவது வாசிப்புக்கு வழங்கப்படும்.

Read more...

TNA சஜித்திடம் பணம் பெற்றுக்கொண்டார்களா? நாமலுக்கு சந்தேகமாம்..

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கான எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாதபோதும், அவர்கள் அக்கட்சியின் வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்க கோருகின்றார்கள் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ள அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சொந்த நலன்களுக்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்பட்டு மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் உள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டனர்.

நான் வடக்கில் இருக்கும்போது இதனை கூறுகிறேன்., தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமல்லாமல், இங்குள்ள பொதுமக்களின் கஷ்டங்களை தொடர்ந்து கேட்பதற்கும், எந்த வகையில் அவர்களுக்கு உதவி என்பதற்காகவும் இதனை கூறுகிறேன்.

2015 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சொந்த நலன்களுக்காக செயற்பட்டதே தவிர குறிப்பாக வடக்கு தமிழர்களுக்கு வேலை செய்ய தவறிவிட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடத்தியபோது, ​​மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதன் மூலம் இதனை தெளிவாக காண முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்துடன் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்து விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த மக்களை சந்திக்காமல் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, ​​ஆர்ப்பாட்டகாரர்கள் அவர்களை தாக்க முயன்றனர். வடக்கில் காணாமல் போன பலர் இருக்கின்றனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஏன் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர், ஏன் இதற்கு காரணமான ராஜபக்சவினரிடம் கேள்வி எழுப்புவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர் என தெரிவிப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அண்மையில், வடக்கிற்கு தொடர்ச்சியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட நமல், கடந்த மாதம் அரசாங்கத்தினால் மிகவும் அவசரமாகவும் திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் கிளிநொச்சி விளையாட்டு வளாகம் என்பன மோசமாக பராமரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழ் மக்களுக்கு காட்டும் அவமதிப்பை அம்பலப்படுத்தியுள்ளது.

விமான நிலையம் சர்வதேச தரத்தில் இல்லை, கன மழை பெய்யும் போது ஓடுத்தளத்தில் வெள்ளம் ஏற்படும். இது விமானங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கிளிநொச்சி விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீரில் பாசி பிடித்துள்ளது. பிள்ளைகள் பயன்படுத்தும் வகையில் அது பராமரிக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இலங்கை தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் மீது வெறுப்பை கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கு மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்ததில் நிதி கொடுக்கல் வாங்கல் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாசவின் மகன். ரணசிங்க பிரேமதாச இலங்கையின் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கை தமிழர்கள் மற்றும் ஜே.வி.பி புரட்சியாளர்களுக்கு சித்திரவதைகள் நடந்jதுடன் கொலை செய்யப்பட்டனர். இதற்காக எந்த நடவடிக்கைகளும் எடுக்காமை தொடர்பாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

தமிழ் மக்களின் குரல் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவை அனைத்தையும் மறந்து விட்டது.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த பின்னர், கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யார் வெல்ல வேண்டும் யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமது தீர்மானத்தின் அடிப்படை என கூறியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஐ.தே.கட்சியை விட்டுவிட்டுச் செல்லவேண்டாமென வசந்த சேனாநாயக்கவிடம் தூதுசென்ற சுமந்திரன்..

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான டட்லி சேனநாயக்கவின் பேரன் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றார். அவர் இத்தேர்தலில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காத நிலையில் காணப்படுகின்றார்.

இந்நிலையில் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் இழுத்துக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகர் சுமந்திரன் தூதுசென்றுள்ளார். இவ்விடயத்தினை சேனநாயக்க வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது, சஜித் பிறேமதாஸவின் வெற்றியானது நாளுக்கு நாள் பின்நோக்கிச் செல்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாத நிலையிலேயே நான் உள்ளேன்.

இங்கு எனக்கு வியப்புத்தரும் விடயம் யாதெனில் என்னை கட்சியை விட்டுச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வந்தார் என்று சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியொன்றின் கனிஷ்ட உறுப்பினர் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறிச்செல்லும்போது சிரேஸ்ட உறுப்பினர்கள் சென்று சமாதானம் செய்து பிணக்குகளை தீர்த்துவைப்பது அரசியலில் சர்வ சாதாரணமானது. இங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கனிஷ்ட உறுப்பினர் ஒருவர் வெளியேற முற்படுகையில் சமாதானம் பேசச்சென்றுள்ளது யார்? அவ்வாறாயின் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது..

Read more...

தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் என டுவிட்டர் செய்தி...! இரான்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெறும் எனவும், இதற்காக குழுவொன்று மும்முரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் டுவிட்டர் செய்தியொன்று தனக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சர் இரான் விக்கிரமத்ன நேற்று (06) தேர்தல் ஆணையகத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு டுவிட்டர் செய்தி வந்துள்ளதாகவும், இவ்வாறு டுவிட்டர் செய்தியைவெளியிட்டுள்ள நபரை உடனடியாக பாதுகாப்புச் சபைக்கு வரவழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இரான் விக்கிரமரத்ன முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தனது முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தேர்தல்கள் ஆணையகத்திற்குத் அனுப்பிவைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


Read more...

Wednesday, November 6, 2019

றிசாட்டுக்கு எதிராக மொட்டுக்கு வாக்களிப்போம்! மன்னாரில் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த மக்கள்!!

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஒன்று கூட்டி நேற்றைய தினம் 04.11.2019 மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டிலும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

மேலும் இக் கூட்டத்தின் போது அங்கு வருகைதந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பொது மக்களும் சுமந்திரனை நோக்கி சரமாரியான கேள்விகளை தொடுத்தனர். மன்னாருக்கு எதற்காக நீங்கள் வருகை தந்தீர்கள் எனவும் நீங்கள் கூறி நாம் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை மக்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் முடிவெடுத்துவிட்டார்கள் என அங்கு வருகைதந்திருந்த ஓய்வு நிலை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் சுமந்திரனை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் றிசாட்டின் திட்டமிட்ட காணி சுவீகரிப்பு,வேலைவாய்ப்பில் முறைகேடு,திட்டமிட்ட வகையில் மன்னாரில் தமிழ் மக்களை ஓரங்கட்டும் றிசாட்டின் செயற்பாட்டை ஆதரிப்பது போலவே தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. அதனால் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் றிசாட்டுக்கு எதிராக தாமரை மொட்டுக்கே வாக்களிக்கப்போகின்றோம் என அங்கு வருகை தந்த இளைஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

மேலும் கடந்தமுறை மைத்திரிக்கு வாக்களியுங்கள் தமிழர்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவார் என்று கூறி எம்மை வாக்களிக்க சொன்னீர்கள் ஆனால் தமிழ் மக்கள் சார்ந்த விடயத்தில் எதாவது முன்னேற்றகரமான செயற்பாட்டை தங்களால் மேற்கொள்ள முடிந்ததா எனவும் நிபந்தனை இன்றி அரசாங்கத்தை ஆதரித்து தங்களால் என்ன பெறமுடிந்தது என அங்கு வருகைதந்தவர்கள் கேள்விகளை தொடுத்தனர்.

இதன் காராணமாக கூட்டம் நடைபெற்ற இடத்தில் சிலமணி நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன் கூட்டத்தை ஒழுங்கு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அவர்கள் நிலைமையை சரி செய்ய கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்.

மேலும் குறித்த கூட்டத்தில் சட்டத்தரணிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more...

MCC ஒப்பந்தத்தில் அவசரமாகக் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா அழுத்தம்!

சர்ச்சைக்குரிய எம்.சி.சி ஒப்பந்தத்தில் கூடிய விரைவில் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது என கடந்த சில நாட்களாக பேசப்பட்டுவருகின்றது.

இதற்கிடையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் உட்பட நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், இலங்கையின் பிரமுகர்கள் குழுவொன்று ஒன்றிணைந்து இலங்கையின் இறையாண்மை மற்றும் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி இன்று காலை அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு மகஜர் கையளித்துள்ளனர்.

ஏராளமான மதகுருமார்கள், முக்கிய பிரதிநிதிகள், கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் மூத்த உயிரியல் ஆசிரியர் திஸ்ஸா ஜனநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இலங்கையின் இறையாண்மை மற்றும் இலங்கையின் இறையாண்மை மீதான அத்துமீறலை நிறுத்துமாறு கோரியே இந்த மகஜர் கையளிக்கப்பட்டிருப்பதாகத் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் இலங்கைக்க்கான ஓர் ஆதரவு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உடன்படிக்கையில் அவசரமாகக் கைச்சாத்திடப்பட வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

இந்த மகஜரைக் கையளித்துவிட்டுப் பின்னர், இந்தக்குழுவானது அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக அமைதியானமுறையில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடாத்தியது.

Read more...

தங்களது கோரிக்கைகளையே நிறைவேற்றிக்கொள்ளத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களியுங்கள்...! - துமிந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக் கொடுக்கும் அரசியலுக்கு எதிராக வாக்கினை உபயோகிக்க வேண்டும் என ர் முன்னிலை சோசலிஸக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டார்.

முன்னிலை சோசலிஸக் கட்சியானது கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்ததாகவும், அந்தக் குரலைப் பலப்படுத்தும் நோக்கத்திலேயே ஜனாதிபதித் தேர்தலில் களம் குதித்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது குறிப்பிட்டார்.

விசேடமாக ஆளும் கட்சியினருக்குச் சோரம்போய், அவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் துன்பத்தில் துவள்கின்ற தமிழ் மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமது ஆரம்பக் கோரிக்கைகளையே வென்றெடுக்காத நிலையில் அவ்வாறான ஒரு போராட்டத்திற்காக முன்னிலை சோசலிஸக் கட்சி தொடர்ந்தும் பங்களிப்புச் செய்யும் என்றும்அவர் அங்கு தெளிவுறுத்தினார்.

Read more...

S.B திஸாநாயக்க பொதுஜன பெரமுன மேடையில் ஏறுவதை தடுத்தோர் மீது துப்பாக்கிச்சூடு. இருவர் காயம்.

நாவலப்பிட்டிய கினிகத்ஹென பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொது ஜன பெரமுன கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி திசாநாயக்க கலந்து கொண்டபோது கட்சி ஆதரவாளர்கள் சிலர் அவரை நுழைய விடாமல்தடுத்துள்ளனர்.

அதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் இதனால் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

சந்திரிக்கா செல்லாக்காசாம்! கூறுபவர் SB திஸாநாயக்க.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெருமுனவுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்போம் என்ற கோஷத்துடன் கட்சியின் மூத்த உறுப்பினர்களான குமார் வெல்கம , அதாவுட செனவிரத்தின போன்றோரது தலைமையில் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.

இக்குழுவானது நேற்று ஒன்றுகூடல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தலைமையில் மேற்கொண்டு தமது கட்சியை எவ்வாறு காக்கவேண்டும் என ஆதரவாளர்களுக்கு விளக்கியதுடன், கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்தால் , சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடியோடு அழிந்துவிடும் எனவும் கட்சி தப்பிப்பிழைக்க வேண்டுமாகவிருந்தால் சஜித் பிறேமதாஸ வெற்றியடையவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அட்டன் பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனைத்து சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராகவே செயற்பட்டார்.

அவரின் தாய் சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, அவரது கணவரான விஜய குமாரதுங்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் டி.பி.இலங்கரத்ன ஆகியவர்களுடன் கட்சியில் இருந்து விலகி இலங்கை மக்கள் கட்சியினை உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திரிக்கா அம்மையார் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், அவரது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது சகோதரரான அனுர பண்டாரநாயக்க மற்றும் அவரது சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோரை எதிரியாக பார்த்தவர். சந்திரிக்கா அவர்கள் ஜனாதிபதியாக ஆகுவதற்கு முன்பாக அவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு எதிராகவே அன்று செயற்பட்டனர்.

அவரை ஆதரித்து கட்சிக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என பாடுபட்டவர்களில் நானும் மங்கள சமரவீரவும் அடங்குவர்.

இவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இணைத்து இவருக்கு பதவிகளை வழங்க வேண்டும் என நுவரெலியாவில் இரண்டு நாட்கள் சந்திப்புகளும் என்னால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு வருகை தர கோரிய முக்கிய உறுப்பினர்கள் கூட வருகை தராது. இவரை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் அத்துலத் முதலியின் மறைவை அடுத்து அத்தனகல பிரதேச அமைப்பாளராக சந்திரிக்காவை நியமனம் படுத்த நாம் திட்டமிட்டோம். அதன் பின்னர் தென் மாகாண சபை தேர்தலுக்கு இவரை முன்னிலைப்படுத்தி இவரை வெற்றியீட்ட வைத்தோம். பின் படிப்படியாக அவரை முன்னேற்றி ஜனாதிபதியாகவும் ஆக்கினோம்.

ஆனால் இவரை கட்சிக்குள் இணைத்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அவரின் வாக்கு பெட்டியில் அவருக்கு ஆதரவாக 11 வாக்குகளே இருந்தது.

இவ்வாறாக அனைவராலும் வெறுக்கப்பட்ட சந்திரிக்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது ஒரு பெரிய விடயமாக கருத முடியாது. அவரை கணக்கில் எடுக்கவும் போவதில்லை. காரணம்

அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட மாற்று கட்சியினருக்கு இவர் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளார் என தெரிவித்த எஸ்.பீ.திசாநாயக்க இம்முறை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச அதிகபடியான வாக்குகளால் வெற்றியீட்டுவார்.

ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்காக இ.தொ.கா ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளமை எமக்கு தெரியும். அதேநேரத்தில் அமைச்சர் திகாம்பரம் மலையக மக்களுக்கு எதை கொண்டு வந்து திணித்துள்ளார் என்பது எமக்கு தெரியும்.

அந்த வகையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து சென்ற இ.தொ.காவை விட மலையகத்திற்கு குடு, கேரளா கஞ்சா என கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார் என்றும் இம்மக்களுக்கு தெரியும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் பொது பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்ற வாக்குகளுடன் கூட்டும் பொழுது ஐக்கிய தேசிய கட்சியை விட இரண்டு மடங்குகளான வாக்குகளை பெற்றுள்ளது. ஆகையால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இ.தொ.கா ஆகியோர் பெறும் வாக்குகளுடன் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

ஹிஸ்புல்லா வின் கலாநிதி பட்டம் காசுக்கு வாங்கப்பட்டது. தில்லுமுல்லு திடுக்கிடும் ஆதாரங்களுடன் அம்பலம்!

மோசடியின் முழுவடிவம் ஹிஸ்புல்லா என்றும் மோசடி எவ்வாறு இருக்குமென்று அறியவேண்டுமென்றால் ஹிஸ்புல்லாவின் முகத்தினை பார்த்தால் தெளிவாக தெரியும் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துவருவது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் ஹிஸ்புல்லாவின் கலாநிதிப்பட்டம் பணம்கொடுத்து வாங்கப்பட்ட பெரும்மோசடி என ஆதரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷம்பியாவிலுள்ள பட்டங்களை விலைக்கு விற்கும பல்கலைக்கழகமொன்றில் அவர் அதனை கொள்வனவு செய்துள்ளதாகவும், அவ்வாறு கொள்வனவு செய்துகொள்ளும்போது அப்பல்கலைக்கழகம் அந்நாட்டினால் தடைசெய்யப்பட்டிருந்தாகவும் சகல ஆதாரங்களுடன் லங்காமுரசு என்ற இணைத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவ்விணையம் 7 ஆதாரங்களை கட்டம்கட்டமாக முன்வைத்துள்ளது. கீழுள்ள வீடியோவில் அதன் தர்க்கத்தினை பார்க்கலாம்...




Read more...

கோத்த வெல்வது உறுதி... தீர்க்கதரிசனம் சொல்கிறார் பிமல்!

இம்மாதம் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், சுமார் 40 இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமரானதும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அவருக்கு ஆதரவளிக்கமுன்வந்ததாகவும், மற்றொரு குழு அவருக்கு ஆதரவாக முன்வந்தபோது, அவர்களுக்கு பணத்தைக் காட்டி அவர்களை நிறுத்தியதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டுகிறார்.

பிமல் ரத்நாயக்கவும், துன்னெத்தி இருவரும் இருக்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அவர்களிடத்து வந்து ஆதரவளிக்கவிருந்தவர்களை பணம்கொடுத்து அவ்வாறு செய்யவேண்டாம் எனக் குறிப்பிட்ட செய்தியைச் சொன்னதாகவும் பிமல் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது பேரை பணம் கொடுத்து மிகவும் கஷ்டத்துடன் நிறுத்திவைத்திருப்பதாகவும் , இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 70 பேருக்குப் பணம் கொடுக்க வேண்டிவரும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய அமைச்சர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Read more...

சந்திரிக்காவின் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு ஆப்புவைக்கிறது ஸ்ரீசுக மத்தியகுழு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்காவின் ஆதரவின் கீழ் நேற்று (05) சுகததாச உள்ளக மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தொகுதிகளின் அமைப்பாளர்களுக்குப் பதிலாக தொகுதிகளுக்கு பதில் கடைமபுரியக்கூடிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மத்திய குழு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில்கடமையாற்றும் தலைவர் பேராசிரியர் ரோஹான லக்ஷ்மன் பியதாசவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அவரது கட்சி உறுப்புறுமையை நீக்குவதற்கும் கட்சி உயர்பீடம் தீர்மானித்ததாக பரவலாக செய்தி அடிபட்டிருந்தபோதும், நேற்றிரவு கூடிய கூட்டத்தில் அதுதொடர்பில் எந்தவிதக் கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, November 5, 2019

சோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.

ஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி வேட்பாளருக்கும் வாக்களிக்கக்கூடாது என்கிறார். ஆதாவது இப்படிச்செய்தால்(தேர்தலைப்பூறக்கணித்தால்) கோத்தா வெல்வது உறுதியாகும்.

ஜோதிலிங்கம் வேறு யாருமல்ல. மாற்றுக்கட்சி EPRLF இன் பழைய தோழர். 90 களில் புலிகள் இவர்களை வேட்டையாடியபோது கொழும்புக்கு குடும்பத்தோடு ஓடிவந்தவர். பாடசாலையில் உயர்தரத்துக்கு அரசியல் ஆசிரியராக இருந்துகொண்டு புலிகளை விமர்சித்த சரிநிகரில் புலிகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதியவர். 1996 க்குப்பிறகு சரிநிகர் அன்ரன் பாலசிங்கத்தின் Grand Design படி புலிப்பாசிசத்தால் விலைக்கு வாங்கப்பட்டோது இவரும் புலிகளின் லாபியிஸ்ட்- பிரச்சாரகர் ஆனார். புலிகளின் வெளிநாட்டு ஊடகங்களில் கருத்துரைக்கும் ஸ்ரார் "அரசியல் விமர்சகர்" ஆனார். கொழும்பில் சட்டம் படித்து சட்டத்தரணியும் ஆனார்.

2009ல் புலிகள் அழிவதுவரை சனரஞ்சகமான "அரசியல் ஆய்வாளராக" புகழ் அனுபவித்தார். புலி அழிந்ததும் அதுவரை அனுபவித்த சொத்து சுகம் புகழ் இழந்தபின் யாழ்ப்பாணத்துக்குப்போய் வழக்கறிஞராக உழைத்ததோடு தன் இழந்த புலிப்பாசிச சாம்ராஜ்யத்தை மறுபடி மீட்க சைக்கிள் கட்சியின் தீவிர ஆதரவாளரானார்.

"ஆய்வு" இவருக்கு ஒரு தனிப்பட்ட பிழைப்பு. தொழில். யாவாரம்.

இவரைப்பொறுத்தவரையில் ஆய்வு ஒருபால் கோடாமை அல்ல. இவரது தனிப்பட்ட வாழ்வே ஒரு சுயநலமான Hypocrisy. 90 களில் வடகிழக்கு குழந்தைகள் புலிப்பாசிச ஆட்சிக்குள் வாழ்கிறபோது புலிப்பாசிசத்தை நிலுநிறுத்த குழந்தைப்போராளிகளாக வரவேண்டிய நிர்பந்தத்திலிருந்தார்கள். இவரது குழந்தைகளோ கொழும்பில் சுதந்திரமான சூழலில் கல்விகற்றார்கள். இவரது இரண்டு பெண்பிள்ளைகளும் சிறப்பான சமூகவிஞ்ஞானக்கல்விபெற்று இன்று வெளிநாடுகளில் பின்நவீனத்துவ பெண்ணியல்வாதிகளாகவும் சமூக விஞ்ஞானிகளாகவும் கலைஞர்களாகவும் இருக்க இவரோ இன்று K.T கணேசலிங்கம் என்ற ஒரு 13 வயதுக்குழந்தையை வல்லுறவுசெய்த விரிவுரையாளனின் நெருங்கிய நண்பராக இருக்கிமார். 2005 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளராக இருந்த கணேசலிங்கம் தன்வீட்டு மலையக 13 வயது குழந்தை Servant முத்தையா கோகேஸ்வரியை 40 தடவைகளுக்குமேல் பாலியல் வல்லுறவுசெய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். கணேசலிங்கம் புலிகளின் ஆதரவாளர் என்பதால் புலிகள் பாதிக்கப்பட்ட குழந்தையை எப்படியோ வன்னிக்கு வரவைத்து வழக்கை நடத்தமுடியாதவாறு ஆக்கிவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர் வழக்குக்கு சமூகமளிக்கமுடியாததால் வழக்கு கைவிடப்படவேண்டியதாயிற்று.

இன்று ஜோதிலிங்கம் தனக்கு ஒரு யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழில் பெறுவதற்காக குழந்தை வல்லுறவாளன் கணேசலிங்கத்தோடு நெருங்கிப்பழகுகிறார். சமகால மலையக அரசியல் ஆய்வாளர் சரவணன் நடராசாவை ஒரு ஆய்வாளராக உருவாக்கியதே இந்த ஜோதிலிங்கம் தான். சரவணன் 2017 ல் யாழ்ப்பாணத்துக்கு போனபோது அவனை யாழ்பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வல்லுறவுக் குற்றவாளி கணேசலிங்கம் தலமையில் நடந்த கருத்தரங்கில் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக பேசவைத்து சரவணனை பரிசுகெடவைத்தும் கணேசலிங்கத்துக்கு பாவவிமோசனம் அழித்ததும் இந்த ஜோதிலிங்கம்தான். (சரவணன் கோத்தா ஆட்சிக்கு வந்தால் இலங்கை எப்படி மோசமான ரணகளமாகும் என்று இன்று ஆயிரம் கட்டுரை எழுதிவிட்டார்)

பிரசித்தமான உலகத்துப்பல்கலைக்கழகங்களில் பெண்விடுதலையை பேசுகிற தமிழினி ஜோதிலிங்கமும் யாழினி ஜோதிலிங்கமும் தங்கள் தகப்பன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த குழந்தையை 40 தடவைகள் வல்லுறவுசெய்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரோடு தன் தனிப்பட்ட நலன்களுக்காக ஒட்டி உறவாடுவதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஜோதிலிங்கம் உட்பட்ட ஏறத்தாள அனைத்து ஈழத்தமிழ் ஆய்வாளர்கள் அல்ல. ஜோதிலிங்கம், நிலாந்தன், ஜதீந்திரா, சிவராசா கருணாகரன் முதலியவர்கள் எல்லாரும் லாபியிஸ்டுகளே(Lobbyist) .
தமிழ்த்தேசியம் என்ற மந்திரத்தை போதிக்கிற மந்திரவாதிகள். தங்கள்டைய எழுத்துக்கள் மத்திரவலிமை மிக்கவை என்று நம்புகிறார்கள். இவர்களுக்கு தேவை தாம் "ஆய்வாளர்களாக" இருந்த 1990- 2009 வரையான இவர்களின் பொற்காலமான புலிப்பாசிச காலமே. போருக்குப்பின் மக்கள் அனுபவித்த சுதந்திரமும் சுகமும் இவர்கள் பிழைப்புக்கு ஆகாது. அதிலும் குறிப்பாக 2015 சனவரிப்புரட்சி ஆட்சிமாற்றத்தின் பின்னான காலங்கள் இவர்களுக்கு மரணத்துச்சனி.

விடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கு பகிரங்கமாக நினைவேந்தலையும் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதையும் 2015 சனவரிப்புரட்சி அனுமதித்தது. ஆனால் ஜோதிலிங்கத்துக்கு கோத்தாவின் ஆட்சிதான் தேவை. அப்பதான் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரின் நண்பர்களான வல்லுறவாளன் கணேசலிங்கம், மொட்டைமாடியில மாணவியை மிரட்டி வல்லுறவு செய்த என் சண்முகலிங்கம் முதலியவர்களின் செல்வாக்கு கூடும். ஜோதிலிங்கம் பின்கதவால ஒரு அரசியல் விரிவுரையாளராக வருவார்.

ஜோதிலிங்கத்துக்கு பிடித்த வியாதி அரிதானது. கொட்டையில் வரவேண்டிய ஓதம்(விரைவீக்கம்/Hydrocele) இவருக்கு மூளையில் வந்திருக்கிறது.

- நட்சத்திரன் செவ்விந்தியன்.
(இவரும் கொழும்பில் ஜோதிலிங்கத்திடம் அரசியல் படித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

Tamil Tigress: The fake memoirs எனும் பக்கத்திலிருந்து மீள்பதிவு



Read more...

ஹரின் பர்னாந்துவை தேடி கொடுப்பவர்களுக்கு யானை அளவுக்கு பரிசு!

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுவை பெற்று தருவதற்காக பாடுபட்ட நபர்களுக்கு இடையில் முன்னிலையில் இருந்த அமைச்சர் ஹரின் பர்னாந்து இப்போது பிரதான பிரச்சார நடவடிக்கைகளில் செயலற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UNPயின் துணைத்தலைவராக நியமிக்க ஹரின் பர்னாந்து விடுத்த கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்தமையே இதற்கான காரணம் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்கு அதிகமாக பாடுபட்ட நபராக தனக்கு UNPயின் துணைத்தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதால் அதை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த சந்தர்ப்பத்தில் தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றும், கட்சி செயற்குழுவின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள இயலாது என்றும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றிபெறும் வரை பொறுமையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதுடன், ஹரின் பர்னாந்து இது தொடர்பாக கலக்கமுற்ற நிலையில் பிரதான பிரச்சார நடவடிக்கையில் இருந்து சற்று விலகி செயற்படுவதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மலிக், கபீர், மங்கள மூவரும் அரங்கிற்கு வெளியே

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவை வேட்புமனுவுக்கு உயர்த்திய கட்சியின் பல மூத்தவர்கள் அவரது மேடையில் காணக்கூடியதாக இருப்பதில்லை. மங்கள சமரவீர, கபீர் ஹசீம், மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகிய மூவரும் இவ்வாறு பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

அரங்கில் இருப்பவர்களை மட்டும் பார்வையிட்டு அவர்களுக்கு பதிலளிப்பது மட்டும் தலைமைத்துவம் அல்ல எனவும், தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராமங்கள் நினைவில் வரும் பாரம்பரிய சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் பாத்திரத்தில் நுழைவது ஒரு முடிவின் ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Read more...

MCC ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்கு உண்ணாவிரதப்போராட்டம்..

அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation - MCC) உடன் செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று (05) ஆரம்பித்துள்ளார்.

குறித்த உண்ணா விரதப்போராட்டம் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளது. பௌத்த தர்மத்தை இந்நாட்டில் நிலைநிறுத்தும் பொருட்டு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் மேற்படி தேரர், நாட்டை வெளிநாட்டு சக்திகளிடம் அடகுவைக்கின்ற குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவ்வொப்பந்தத்தை கைவிடுவதாக நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமரிடமிருந்து எழுத்துமூலமான உறுதிமொழி கிடைக்கும்வரை தனது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அமெரிக்க இராணுவம் இந்நாட்டினுள் நுழையுமாகவிருந்தால் அவர்கள் எமது உடலங்களின் மீதே செல்லவேண்டிவரும் என உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள பிக்குகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ்வொப்பந்தத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அந்த அமைச்சரவையின் அங்கத்தினரான சஜித் பிறேமதாஸவே இன்று இந்நாட்டின் ஜனாதிபதியாக போட்டியிடுவதாகவும் குறிப்பிடும் அவர்கள், ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிறேமதாஸ மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.





Read more...

தன்னை விடுதலை செய்தமையையிட்டு CID இனருக்கு நன்றி தெரிவிக்கார் Dr. ஷாபி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷஹாப்தீன், சிங்களத் தாய்மார்கள் கர்ப்பம் தரிக்காதிருப்பதற்காக ஆவன செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் அல்லது பிற அழுத்துங்களினால் அண்மையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். மிகவும் அமைதியாக இருந்த அவர் நேற்று முன்தினம் சண்டே டைம்ஸ் பத்திரிகை நேர்காணலில் இரண்டு முக்கிய நபர்களுக்குத் தனது விஷேட நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாணி அபயசேக்கர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திஸேரா இருவருக்குமே அவர் நன்றி தெரிவித்துள்ளார். வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின்போது நடுநிலைமையாகச் செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, November 4, 2019

சஜித் நாட்டின் ஜனாதிபதியானால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் வருவார் என்பதால் எதிர்த்து வாக்களித்தோம்..

கிளிநொச்சியிலிருந்தோர் குரல்..

இலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒடிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலை மக்கள் இன்னும் 12 நாட்களில் எதிர்கொள்கின்றனர். அதேதேர்தலுக்காக அரச ஊழியர்கள் தபால்மூல வாக்குகளை அளித்துள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளியாகியிராவிட்டாலும் வாக்காளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் பெறுபேறுகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து வேறுபட்டதாக அமையும் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்துள்ளது. எவ்வாறான மாற்றம் என்பதை வெளிப்படையாக கூறப்போனால் கடந்த தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களித்த பலர் இம்முறை தாமரை மொட்டை முத்தமிட்டுள்ளதாக இலங்கைநெட் ன் ஆய்வு உறுதிப்படுத்துகின்றது.

இந்த மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய காரணம் யாதெனில், அரச ஊழியர் ஒருவரிடம் பேசும்போது, இவ்வாறு கூறினார்: நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிறேமதாஸ வந்தால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் செயற்படுவார் என்ற ஒரே காரணத்திற்காக சஜித்தை தோற்கடிக்க அரச ஊழியர்கள் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் நான் தோத்தபாய ராஜபக்சவிற்கு எவ்வித தயக்கமுமின்றி புள்ளடியிட்டேன் என்றார்.

சிறிதரன் மீதான மேற்படி விரக்தி தொடர்பாக சற்று தோண்டியபோது, நாங்கள் அரச ஊழியர்களாக சுயாதீனமாக கடமைகளை மேற்கொள்ளமுடியாத நிலைமையே இங்கு காணப்படுகின்றது. சகல திணக்களங்களின் விவகாரங்களிலும் மூக்கினை சிறிதரன் நுழைப்பதுடன் திணைக்களங்களுள் நுழைந்து திணைக்கள பிரதானிகளின் ஆசனங்களில் அவர் உட்கார்வதை ஊழியர்கள் மிக அருவருப்பாகவே பார்கின்றனர். சிறிதரன் ஒரு அரசியல்வாதி. அவனுடைய கல்வித்தரம் என்பது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தை தாண்டவில்லை. ஆனால் அவன் இங்கு காரியாலங்களுக்கு வந்து நிர்வாக சேவை உத்தியோகித்தர்களின் மற்றும் உயர் பதவிகளில் உள்ளோரின் ஆசனங்களில் உட்காருகின்றான் என ஆத்திரப்பட்ட தொனியில் பதில்வந்தது.

இவ்வாறாக சிறிதரன் மீதான அதிருப்தி சாதாரண மக்களிடையேயும் காணப்படுகின்றது. பலர் சிறிதரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிறேமதாஸவை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களது எதிராளிக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

தொடரும் வாக்கு எண்ணிக்கை குழப்பம் 50% இற்கு மேல் முதற்சுற்றில் தேவை என்பது ஏன்? வை எல் எஸ் ஹமீட்

அண்மையில் நடந்த அதிர்வு நிகழ்ச்சியில், குறித்த சுயேட்சை வேட்பாளர், இத்தேர்தலில் முதற்சுற்றில் யாரும் 50% மேல் பெறமாட்டார்கள். ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பவர்களும் இரண்டாம் வாக்கைப் பாவிக்க மாட்டார்கள். ஜே வி பி யிற்கு வாக்களிப்பவர்கள்கூட, பெரிதாக இரண்டாம் வாக்கை அளிக்க மாட்டார்கள். எனவே, தனது இரண்டாம் வாக்கே வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கும்; என்ற கருத்தை முன்வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியை நடாத்தியவர்களில் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார். அதாவது:

வாக்குகள் 100
A 48
B 40
ஏனையோர் 12 அதில் உங்களுடைய வாக்குகள் 3

இப்பொழுது இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்கு செல்லவேண்டும். இரண்டாம் சுற்றில் உங்களது இரண்டாவது வாக்குகள் A யின் வெற்றியைத் தீர்மானிக்க அவசியமில்லை. B யிற்கு அளித்தாலும் அவர் வெற்றிபெற போதாது. எனவே, நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு வேட்பாளரின் பதில் பலவாறாகவெல்லாம் அமைந்திருந்தது. ஒன்று, முதல் சுற்றில் A,B இருவரும் தோற்று இரண்டாம் சுற்றில் அவர்களில் ஒருவரை நாம் வெல்லவைப்போம்; என்பதாகும்.

நிகழ்ச்சி நடத்துனர் மீண்டும் கணக்கைச் சொல்லி, A யின் வெற்றிக்கு உங்கள் வாக்கு தேவையில்லை; B உங்கள் வாக்கு கிடைத்தும் வெற்றிபெறமுடியாதே!, என்றபோது அது முதலாவது சுற்றில் பயன்படுமே; என்றார்.

இரண்டாவது வாக்கு முதற்சுற்றில் எவ்வாறு பயன்படும்?

அதன்பின், நாம் வெற்றிபெறும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்; என்றார்.

அவர் வெற்றிபெறும் வேட்பாளர் என்றால் நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பது?

நீங்கள் தீர்மானிப்பதாக இருந்தால் உங்களது இரண்டாம் வாக்கு கிடைக்காதபோது அவர் தோல்வியடையக்கூடிய வேட்பாளராக அல்லவா இருக்கவேண்டும்.

அதாவது முதலாம் சுற்று எண்ணிக்கையில் யார் இரண்டாவதாக வருவார்; என நீங்கள் கணிக்கின்றீர்களோ, அவருக்கு உங்கள் இரண்டாம் வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யவேண்டும்?

சுருங்கக்கூறின், நீங்கள்/ உங்களது சிவில் அமைப்பு யாருக்கு இரண்டாம் வாக்கை வழங்கச் சொல்கிறீர்களோ அவர் முதல் சுற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கே வருவார்; என பிரகடனப்படுத்துகிறீர்கள்; என்பது பொருளாகும்.

முதல் சுற்றில் 50% மேல் என்பது என்ன?

அளிக்கப்படுகின்ற செல்லுபடியான வாக்குகள் 100 எனக் கொள்வோம்.

முதல் சுற்று எண்ணிக்கையில்
A 51 வாக்குகள்
B 30 வாக்குகள்
ஏனையோர் 19 வாக்குகள் எனக்கொள்வோம்.

முதல் சுற்றில் 50% மேல் எடுத்தாலும் இரண்டாம் சுற்று எண்ணத்தான் வேண்டும்; என சட்டம் சொல்கிறது; என கற்பனை செய்வோம்.

இப்பொழுது இரண்டாம் சுற்றில் ஏனைய 19 பேரும் தமது இரண்டாம் வாக்கை B யிற்கே அளிக்கிறார்கள்; எனக்கொள்வோம். இப்பொழுது B யின் கூட்டுத்தொகை என்ன? 49 ஆகும். இப்பொழுதும் A தான் வெற்றியாளர்.

இப்படிப்பார்ப்போம்
எஞ்சிய 19 பேரில் 10 பேர் தமது இரண்டாம் வாக்கை B யிற்கு அளிக்கின்றனர். ஏனைய 9 பேரும் A, B தவிர்ந்த ஏனையோருக்கு தமது இரண்டாம் வாக்கை அளிக்கின்றனர்.

இப்பொழுது அந்த 9 பேரும் தமது மூன்றாம் வாக்கை B யிற்கே அளிக்கின்றனர். இப்பொழுது Bயின் கூட்டுத்தொகை என்ன? இப்பொழுதும் 49 தான். எனவே, வெற்றியாளர் இப்பொழுதும் A தான்.

உண்மையில் அந்த 19பேரும் B யிற்கே இரண்டாம் வாக்கை வழங்குவார்கள்; என்று கூறமுடியாது. அவ்வாறு வழங்கினாலும்கூட அவரால் 49 ஐத் தாண்டமுடியாது.

எனவே, சிந்தித்துப் பாருங்கள். முதல் சுற்றில் ஒருவர் 50% மேல் பெற்றுவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணுவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா? இல்லை. காலநேரம்தான் வீணாகும். எனவேதான் முதல் சுற்றில் ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர்தான் வெற்றியாளர். தாண்டாவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணவேண்டும்; என்று சட்டம் கூறுகின்றது.

சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமல் முதல் சுற்றில் 50% இற்குமேல் என்பது “ கட்டாயம்”. அவ்வாறு பெறாவிட்டால் அவர்கள் முதல் சுற்றில் தோல்வியடைகிறார்கள். அதன்பின் இரண்டாம் சுற்றில், இரண்டாம் மூன்றாம் வாக்குகள் மூலம்தான் வெற்றிபெறுகிறார்கள்; என்று கற்பனை செய்துகொண்டு பகிரங்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள்.

இன்னும் சில சகோதரர்கள் இரண்டாம் சுற்றில் 50% இல் மேல் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கேட்கின்றார்கள்.

எனவே, புரிந்துகொள்ளுங்கள், எந்தவொரு சுற்றிலும் “50% இற்குமேல்” என்பது கட்டாயம் இல்லை. அது வெறும் எண்கணிதம் மாத்திரமே!

தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ‘ தான் தெரிவுசெய்யப்பட்டால் செய்வதற்கு உத்தரவாதமளிக்கின்ற வேலைத்திட்டங்களும் அவற்றிற்கு வழிகாட்டுகின்ற கொள்கைத் திட்டங்களுமாகும்.

நீங்கள் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற வேட்பாளர்தானே! உங்களுக்கேன் விஞ்ஞாபனம்? என்ற கேள்வியை நடுவர் தொடுத்தபோது அநுர, மகேஷ் சேனாநாயக்கா போன்றவர்களும் வெளியிட்டுத்தானே இருக்கிறார்கள்; என்பது அவரின் பதிலாக இருந்தது.

தேர்தல் முறையில்தான் அவருக்குத் தெளிவில்லை; குழப்பம் என்றுவிட்டுவிடுவோம். அவர் நீண்ட அனுபவமுள்ள அநுபவசாலி. தான் அரசியல் துறையில் உயர்கல்வி கற்றிருப்பதாக கூறுகின்ற ஒருவர். ஒரு சராசரி மனிதன்கூட கூறமுடியாத பதிலை எவ்வாறு கூறினார்.

அவர்கள் தம்மை வெற்றியடையச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்வோம்; என்று விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்கள். இவரும் என்னையும் ஜனாதிபதியாக்குங்கள், நான் இவற்றைச் செய்கிறேன்; என்றா விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்? அவர்களை ஒப்பிட்டு இவர் ஏன் அந்தப் பதிலைக் கூறினார்?

இவரது விஞ்ஞாபனத்தை அடுத்தவேட்பாளரிடம் கொடுத்து அவர்கள் அமுல் படுத்த வேண்டுமாம். ஆனால் அவை கோரிக்கைகளும் இல்லையாம். demand உம் இல்லை. request ம் இல்லை என்கின்றார்.

சமூகத்தின் சார்பில் போட்டியிடுகிறேன்; எனக்கூறிக்கொண்டு இவ்வாறு சொல்வது தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் கேலிக்குரியதாக்காதா?

இந்த விஞ்ஞாபனம் வெளியிடல் முஸ்லிம்களுக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பம் என்பதுபோல் கூறுகிறார். தமிழ்க்கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் கிடைத்த விளம்பரத்தில் 100 இல் ஒரு பங்கு விளம்பரமாவது கிடைத்ததா? ஐந்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு அனுப்பி அவர்கள் என்ன செய்வது.

இதைவிட இவற்றை முஸ்லிம்களின் கோரிக்கையாக முன்வைத்து நேரடியாக ஒரு வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கமுடியாது? ஏன் வேட்பாளர் வேடம்?

இந்த சமூதாயத்தை எத்தனைபேர் எத்தனை பக்கம் ஏமாற்றுகிறீர்கள். பாவம் இந்த சமுதாயம்.

அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு நான் எதிரானவன் அல்ல. அரசியல்வாதி சுயநலமே இல்லாத பொதுநலவாதியாக இருக்கவேண்டுமென்ற வரட்டுத் தத்துவம் நான் பேசுவதில்லை. ஏனெனில் அது நடைமுறைச் சாத்தியமல்ல.

இது கலீபா உமர் ( ரலி) அவர்களின் காலமல்ல. இங்கு அரசியலில் யாரும் அவ்வாறு இல்லை. அவ்வாறு யாராவது இருக்க முற்பட்டால் அவர்களுக்கு இந்த அரசியலோ, இந்த சமூகமோ இடம் கொடுக்காது. ஆனால் உங்கள் சுயநலம் பொது நலத்தை மேவாததாக இருக்கட்டும்.

சமூகத்திற்கு தீங்கு இல்லாதவரையில் எதை வேண்டுமானாலும் அனுபவித்துக்கொண்டு செல்லுங்கள்.

இந்தத்தேர்தல் இந்த சமூகத்திற்கு இக்கட்டான ஒருதேர்தல். இதைப் புரியாமல் வேதாந்தம் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது. அதற்குள் நீங்களும் குளிர்காயாதீர்கள்.

Read more...

எவ்வித நிபந்தனைகளுமின்றியே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றோம். சுமந்திரன் இறுமாப்பு..

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி நேற்று அறிவித்திருந்தது. இது தொடர்பாக அரசியல்வெளியில் பல்வேறு கோணங்களில் தமிழரசுக் கட்சி விமர்சனங்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாம் எவ்வித நிபந்தனைகளுமின்றியே ஆதரவினை வழங்க முடிவுசெய்துள்ளதாக அக்கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக வழங்கிய ஆதரவுக்காக தமிழ் மக்கள் எதைப்பெற்றுக்கொண்டார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கப்படாத நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு இறுமாப்புடன் பதலளித்துள்ளார்.

தேர்தல்களில் கூட்டு சேர்கின்றவர்கள் அல்லது கூட்டுக்கு வெளியேயிருந்து ஆதரவுவழங்குகின்றவர்கள் நிச்சயமாக நிபந்தனைகளுடனேயே ஆதரவினை வழங்குவது வழமையாகும். குறிப்பாக நிறைவேற்றப்படவேண்டிய தேவைகள் பலவற்றை சுமந்து நிற்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் இருக்கையில் அச்சமூகம் தமது வாக்குகளின் வலிமையை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாகவுள்ளபோதும் தமிழ் மக்களின் அரசியல்தரகர்கள் தமது சுகபோகங்களுக்காக எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை மக்களை அடிமாட்டுவிலைக்கு விற்பன செய்யும் செயற்பாடாக நோக்கப்படுகின்றது..

சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத்தருவோம் என்று கூறிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நிபந்தனைகள் இன்றி ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றது என்றால், தமிழ் மக்களுக்கு இலங்கையில் எந்த பிரச்சினைகளும் இல்லை அதன் தீர்வை நிபந்தனையாக வைப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளலாமா?

Read more...

Sunday, November 3, 2019

கோதா வென்று ஜனாதிபதியான பின்னர் தமிழ் தலைமைகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் - இதுவே வியூகம் என்கிறார் பஷீர்.

சஜித் பிறேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோத்தாபய ராஜபக்ஸ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று அவர்கள் பேசுவார்கள் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ரஜபக்ஸவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இதில் பிரதம உரை ஆற்றியபோது, பஷீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தவை வருமாறு,

இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிறேமதாஸ ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள் 78 சதவீதத்தினர் சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஸவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலைவரம் ஆகும். சிறுபான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளையும், பெரும்பான்மை மக்களின் சிறுபான்மையான வாக்குகளையும் பெறுபவர் ஜனாதிபதியாக வரவே முடியாது. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது.மேலும் பிறேமதாஸவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிறேமதாஸவுக்கு கிடைக்க போவதும் இல்லை.

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க, அவற்றுக்கான தீர்வுகளை பெற்று தர கோதாபய ராஜபக்ஸ ஒருவரால் மாத்திரமே முடியும். ஏனென்றால் அவர் சொன்னால் சிங்கள பெரும்பான்மை சமூகம் செவிமடுக்கும். சிங்கள பௌத்த ஜனாதிபதியால்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தைப்ப்படுத்த முடியுமே தவிர பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒருவரால் அது முடியவே முடியாது. 70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.

அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன். கிழக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். 10 தமிழ் கட்சிகள் கிழக்கில் இருந்து கோதாவை ஆதரிக்கின்றன. பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகியோர் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் 11/2 இலட்சம் தமிழ் வாக்குகளை நிச்சயம் கோத்தா பெறுவார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 75000 தமிழ் வாக்குகளை பெறுவார். கோதா தைரியமானவர். ஆகவேதான் யாழ்ப்பாணத்துக்கு சென்று 276 தமிழ் கைதிகளையும் விடுதலை செய்து தருவார் என்று சொல்ல அவரால் முடிந்தது. சஜித்தால் அவ்வாறு சொல்ல முடியாது. கோதா சொன்னால்தான் சிங்கள மக்கள் கேட்பார்கள்.

முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டாம், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என்று கோதா சொன்னால் நிச்சயம் சிங்கள மக்கள் கேட்பார்கள். முஸ்லிம் சமூகத்தின் உயிர், சொத்து, மார்க்கம், சமூக கட்டமைப்பு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்களும் கோதாவுக்கே வாக்களிக்க வேண்டும். சஜித்தால் இப்பாதுகாப்புகளை பெற்று தரவே முடியாது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 13 அம்ச கோரிக்கைகளை எழுத்துமூலம் பொதுஜன பெரமுனவுக்கு முன்வைத்து, அவர்கள் அவற்றை நிறைவேற்றி தருவதற்கு இணக்கம் தெரிவித்து உள்ள நிலையில்தான் கோதாவை ஆதரிக்கின்றது. ஆனால் ரவூப் ஹக்கீமால் இவ்வாறான பாதுகாப்பை பெற்று தர முடியாது. சமூகத்தை மாத்திரம் அன்றி அவரையும் ரவூப் ஹக்கீமால் பாதுகாக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டாவது அவர்கள் ஆதரிக்கின்ற சஜித் வெற்றி பெறவே மாட்டார். சஜித்தை ஆதரிக்கின்ற ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தல் கேட்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இனி மேல் சந்தர்ப்பம் கொடுக்கவே மாட்டார். அதே போல ராஜபக்ஸக்களும் அவரை சேர்க்கவே மாட்டார்கள். ஆனால் அமைச்சரவை அமைச்சராக பிள்ளையானும், கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சராக வியாழேந்திரனும் வருவார்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவார்.

கோதாபய ராஜபக்ஸ இராணுவத்தில் இருந்தவர். அவர்கள் சொல்வதை செய்வார்கள், செய்வதையே சொல்வார்கள். அந்த வகையில் இன பிரச்சினைக்கான தீர்வை நிச்சயம் கோதா வழங்கி வைப்பார். . உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக ஒதுக்கீடுகள், அபிவிருத்திகள், காணி அதிகாரங்கள் ஆகியன கையாளப்பட்டு அதன் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும். ஆனால் ரவூப் ஹக்கீம், றிசாத் ஆகியோரால் தீர்வை பெற்று தர முடியுமா? என்று நான் கேட்கின்றேன். எம்மை போன்றவர்களுக்கு அரசியலில் நல்ல பெயர் இருக்கின்றது. நாங்கள் பெயரை கெடுத்து கொள்ளவில்லை. கட்சி தாவல்கள் செய்யாமல் பற்றுறுதியுடன் ஒரு இடத்திலேயே இருந்து வந்திருக்கின்றோம். எனவே நாங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள். அந்த வகையில் எம்மால் ஏறாவூர் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்தி தரமுடியும். ஏறாவூர் மத்திக்கு நகர சபையை பெற்று தர முடியும். அலிகார் தேசிய பாடசாலை எதிர்கொண்டு உள்ள காணி பிரச்சினைக்கு கோதாபய மூலமாக நிரந்தர தீர்வு பெற்று தர முடியும். எனவே ஏறாவூர் உறவுகள் கோதாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். முஸ்லிம் சமூகம் கோதாபய ராஜபக்ஸவையே ஆதரிக்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம்கள் இத்தேர்தலில் அவர்களுடைய வாக்குகளை கோதாபய ராஜபக்ஸவுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்பது முக்கியமான விடயம் ஆகும். நண்பர் ஹிஸ்புல்லாவின் வியூகம் வெற்றி பெற போவதில்லை. ஏன்ன்றால் 50 வீதத்துக்கு மேல் எந்த வேட்பாளரும் இத்தேர்தலில் வாக்கு பெற மாட்டார் என்கிற நிலைப்பாடு ஒரு மாயையே ஆகும். ஹிஸ்புல்லாவுக்கு வாக்குகள் இருக்கின்றன. ஆனால் அவருக்கு வழங்கப்படுகின்ற வீண் விரயமாகி பயன் அற்று போய் விடும். தமிழ் மக்கள் தெளிவடைந்து விட்டார். அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பத்ற்கு முடிவெடுத்து விட்டார். அபிவிருத்தி, வேலை வாய்ப்பு ஆகியன எமக்கும் தேவைப்படுகின்றன. எனவே முஸ்லிம்களும் தமிழ் மக்களுடன் சேர்ந்து நின்று மொட்டு கட்சியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவுக்கு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும்.இதன் மூலமாக அவரவர் பங்கை அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களும், முஸ்லிம்களும் பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்.

எஸ். அஷ்ரப்கான்

Read more...

அரசியல்வாதிகளிடம் நாட்டை மீண்டும் மீண்டும் ஒப்படைப்பது மன்னிக்க முடியாத பாரிய குற்றம்!

- முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ்

அரசியல்வாதிகளிடம் மீண்டும் மீண்டும் இந்நாட்டை ஒப்படைப்பது நாட்டு மக்கள் அறிந்து கொண்டே திரும்ப திரும்ப செய்கின்ற மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக இருக்கும் என்று தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

இவர் இந்நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்ந்தேச்சையாக இந்நாட்டை கெடுத்து கெடுத்து குட்டி சுவராக்கிய சிறுமை அரசியல்வாதிகளையே சேரும். இந்நாட்டில் நடந்தேறிய கசப்பான அனைத்து சம்பவங்களுக்கு பின்னாலும் அரசியல்வாதிகளின் கறை படிந்த கரங்கள் நிச்சயம் இருக்கின்றன. இந்நாட்டு மக்களை இனத்துவ ரீதியாக பிரித்து நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருப்பவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான்.

பிச்சைக்காரனின் புண்ணை போல இனங்களுக்கு இடையிலான பிரிவினைகளையும், பிரச்சினைகளையும் என்றென்றைக்குமாக வைத்து கொண்டு சுய இலாப அரசியல் செய்வதை இவர்களின் பிறவி பலனாக கொண்டிருக்கின்றனர். பிரேத பெட்டிக்காரனுக்கு எப்போதும் மரணங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வதை போல இவர்களுக்கு எப்போதும் இனங்களுக்கு இடையில் குரோதங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆகவே இனங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரச்சினைகளை இவர்கள் ஒருபோதும் தீர்த்து தரவே மாட்டார்கள். மாறாக இவ்வாறான பிரச்சினைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்தி கூர்மைப்படுத்தியவாறு இருப்பார்கள். ஏனென்றால் இவையே இவர்களின் அரசியலுக்கான இலவச முதலீடு ஆகும். இவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து தருவார்கள் என்று மேடைகளில் வாய் வீரம் பேசுவதெல்லாம் ஆடு மழைக்கு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையே ஆகும்.

ஆனால் இவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் அரசியவாதிகள் தீர்த்து தருவார்கள் என்று எமது மக்கள் இன்னமும் நம்பி கொண்டுதான் இருக்கின்றார்கள். மாறி மாறி அரசியல்வாதிகளை ஆதரிப்பதையே பழக்க தோஷமாக கொண்டிருக்கின்றனர். அதாவது ஒரே குழிக்குள் மீண்டும் மீண்டும் தெரிந்து கொண்டே விழுவதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். நெருப்புக்குள் அவையாகவே சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாகத்தான் பாவம் எமது மக்களை பார்க்க வேண்டி உள்ளது.

ஆயினும் தேச பற்றாளனும், மக்கள் நேசனும் ஆகிய நாம் வேடிக்கை மனிதர்களை போல வெறுமனே பார்வையாளனாக இருந்து விட்டு செல்ல விரும்பவே இல்லை. அதனால்தான் நாட்டையும், மக்களையும், அரசியல்வாதிகளின் அரக்கு மாளிகைக்குள் இருந்து மீட்பதற்காக அரசியல்வாதி அல்லாத நாம் இந்த தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக களத்தில் குதித்து அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருக்கின்றோம். எம் மீது எந்த அரசியல்வாதியும் எந்த வகையிலும் விரல் நீட்டி குற்றம் சொல்லவே முடியாது. அவர்களை போல் அன்றி எமது இதயம் தூய்மையானது. கரங்கள் சுத்தமானவை. நோக்கம் நன்மையானது.

இத்தேர்தலில் போட்டியிடுகின்ற சக வேட்பாளர்கள் அனைவரை காட்டிலும் நாட்டையும், மக்களையும் வழி நடத்தி செல்வதற்கான தகுதிகள், தகைமைகள் அனைத்தும் எமக்கு அதிகப்படியாகவே இருக்கின்றன. விடுதலையின் அடிப்படை விழிப்பு ஆகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் விழிப்படைந்து அரசியல்வாதி அல்லாத எமக்கு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும். மாறாக அரசியல்வாதிகளிடமே மீண்டும் மீண்டும் இந்நாட்டை ஒப்படைப்பது எமது மக்கள் அறிந்து கொண்டே செய்கின்ற மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் ஆகி விடும்.

Read more...

ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டு தமிழ் மக்களின் செருப்படியிலிருந்து தப்பியோடிய தலைவர்கள்..

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர். இன்று வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசுக்கட்சியின் உயர்பீடம் இம்முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்களுக்கு அக்கட்சியின் பிரமுகர் சுமந்திரன் அறிவித்தார்.

13 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய நகல்ஒன்றை வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்த வேட்பாளர் அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாரோ அந்தவேட்பாளருக்கே தமது ஆதரவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகளை நிராகரித்து தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியினரின் இம்முடிவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உடன்படவில்லை என தெரியவருகின்றது.

எவ்வித நிபந்தனையும் இன்றி கடந்தமுறைபோல் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கூடியிருந்த கட்டிடத்தை சுற்றிவளைத்து அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அவர்களை வழிமறித்து போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இதன்போது தப்பியோடிய இ.த.க பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி பெண்கள் தமது பாதணிகளை கழற்றி வீசினர். வரலாற்றில் இல்லாதாவாறு தமிழ் மக்களின் நேரடி எதிர்ப்பினை தமிழ் தலைமைகள் எதிர்கொண்டுவருகின்றது என்பதனை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் தலைவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் பெண்களை அடக்குவதற்காக பெரும் பொலிஸ் அணி ஒன்று வவுனியாவில் களமிறக்கப்பட்டு அவர்கள் அப்பெண்களை பிடித்து முறித்து அடக்கினர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.



Read more...

சிவனொளிபாத மலையின் சர்ச்சைக்குரிய மணி தொடர்பில் கண்ணாற்கண்ட சாட்சியங்கள்

"எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஒருபோதும் சோரம்போகாத நான் அமைதியான ஒரு வாக்காளர். அவ்விடயம் தொடர்பிலான உண்மைத்தன்மையை எனது முகநூல் சாட்சியளிக்கும். நான் இணைப்பாளராகக் கடமையாற்றும் ஸ்ரீ பாதஸ்தானத்தின் அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பிலான ஒரு விடயம் தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது சுமத்தப்பட்டுள்ள பழி தொடர்பில் இதுவரை அமைதியாக இருந்த நான், உண்மையொன்றை வெளிச்சத்திற்கு கொண்டுவர நினைக்கின்றேன். அவ்வாறு நான் செய்யாதிருந்தால் பெரும் பாவம்செய்த குற்றத்திற்கு ஆளாவேன்.

ஸ்ரீபாதஸ்தான அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் கெண்ட் சிட்டி சென்டர் உரிமையாளர் துசித்த விஜயசேன என்பவர். நீண்டகாலமாக அவரது உள்ளத்தில் இருந்த விருப்பத்தை ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பெங்கமுவே தம்ம தின்ன தேரரின் ஆசிர்வாதத்துடன் நிறைவேற்ற முடிந்தது. இச்செயற்றிட்டத்தின் இணைப்பதிகாரிகளாக அரசாங்கத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஜே.எஸ்.எம். பண்டார என்பவரையும் என்னையும் துசித்த விஜயசேன என்பவரே நியமித்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நாள் முதல் எங்கள் இருவரினதும் மேற்பார்வையிலேயே அனைத்துப் பணிகளும் நடந்தேறின.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி துசித்த விஜயசேன உள்ளிட்ட 50 பேருக்கும் மேற்பட்டோர் ஆரம்பக் கட்ட ஆய்வுகளுக்காக ஸ்ரீபாதஸ்தானத்திற்கு வருகை தந்தனர். அங்கு வந்து ‘பன்னிரு பெரும் விளக்குகள், மணி, புதிய மின்னிணைப்பு, இயற்கைக் கற்சுவர் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

அதற்கேற்ப, ஸ்ரீ பாதஸ்தானத்தின் ‘சலபதல’ முற்றத்தில் இயற்கைக் கல் பதிப்பதற்கும், புதிதாக ஒரு பன்னிரு விளக்கு, புதியதெரு செப்பு விளக்கு, அதைச் சுற்றி இரண்டு புதிய படிக்கட்டுகள், புதிய மணியுடன் கூடிய புதிய மணிக்கோபுரம், இயற்கை கல் சுவர், புதிய மின்சார ஒளிவிளக்கு ஆகியவற்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பன்னிரு பெரும் விளக்குகள் (தொலஸ் மகா பஹன) மற்றும் கொப்பரா விளக்கு என்பவற்றை உருவாக்குவதற்கு இரத்தினபுரி லொல்லுபிட்டியைச் சேர்ந்த கஸுன் ஹேவகே எனும் இளைஞனுக்கும், மணிக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு அத்துல பெரேரா மற்றும் சுனில் ஜயசிங்க என்போருக்கும், இயற்கைக் கல் பதிப்பதற்கு அவிஸ்ஸவெல்ல விஜித்த கற்செதுக்கல் நிறுவனத்திற்கும், பலகையினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த படிகளை மீள் நிர்மாணிப்பதற்கு வத்துருகம திலகரத்ன என்பவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. மின் விளக்குத் தொடருக்குத் தேவையான மின்கம்பம் மற்றும் மின்விளக்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிலிருந்து கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழில்: கலைமகன் பைரூஸ்

தொடரும்....

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com