Saturday, October 26, 2019

கோத்தாவை தோற்கடிப்பதாக நினைத்து சஜித்திற்கு வாக்களித்து ஆகப்போவது ஒன்றுமில்லை! -அநுரகுமார

கோத்தபாய ராஜபக்ஷாவை தோற்கடிப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பது முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது என ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கூறுகிறார்.

அக்கறைப்பற்றில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று மாலை அக்கறைப்பற்றில் பேரணி இடம்பெற்றது.

அவர், அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,


'சிங்களத் தலைவர்கள் சிங்களப் பகுதிகளில் இனவாதத்தைத் தூண்டுகின்றார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பகுதிகளில் இனவாதத்தைக் கக்குகின்றார்கள். இனவாதத்தை அழித்தொழிக்க சஜித்திற்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்கள். நான் சஜித்திற்கு ஒரு சவால் விடுக்கிறேன். அதுஎன்னவென்றால், கோத்தபாயவை எங்காவது விமர்சித்ததுண்டா? இனித்தான் விமர்சிப்பாரா?

நாங்கள் சம உரிமைகளுக்காக எழுந்துள்ளோம். ஒரு தாய்மக்கள் போன்ற நாட்டை உருவாக்குவோம்... எங்களுடன் சேருமாறு அனைவரையும் அழைக்கிறோம்.' எனவும் குறிப்பிட்டார்.

Read more...

Friday, October 25, 2019

தமிழ் தேசிய கட்சிகள் இந்திய எடுபிடிகள் என்று கூறுகிறார் கஜேந்திரகுமார். வ. அழகலிங்கம்

உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்.

ஐயகோ! அம்மவோ!! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட சுரங்கப் பாதையின் மறுமுனையில் ஒளி கதிர்களைக் கண்டுவிட்டார்.

பாம்பின் கால் பாம்பறியும். உலகிற்தோன்றிய மனிதப் பிறவிகளில் தாம் தாம் இஸ்ரவேலர்களுக்கடுத்த புத்திசாலிகள் என்று இறுமாப்போடு இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களே உலகிலேயே மிகவும் இலகுவாக ஏமாற்றப்படக்கூடிய அதிசயப் பிரகிருதிகள். கடந்த 70 வருடமாகத் தமிழ் அரசியல்வாதிகளால் மேய்சுத் தண்ணிக்கு விடப்பட்ட வரலாற்றை மீண்டும் மீண்டும் நிரூபிக்க உதவியவர்கள். தந்திரமான அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் பிரயோகிக்கும் மறு செய்கை செயல்பாட்டைப் iteration process பயன்படுத்துகிறார்கள்.

அரசியல்ரீதியில் எடுப்பார் கைப் பிள்ளையும் ஏதுமறியாத அப்பாவிகளான யாழ்பாணத் தமிழர் எவரும் இன்றுவரை ஜனநாயகம்பற்றி ஒரு புத்தகமாவது வாசியாதவர்கள். ஏனெனில் தமிழிலே இன்றுவரை வரை ஜனநாயகம் பற்றி ஒரு புத்தகம்கூட எழுதப்படவில்லை. அதைப்பற்றி எவரும் கவலைப் படுவதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழுத்தமாக வலியுறுத்திக் கூறிய பேருண்மை:

„ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்திய தூதுவர்களிடம் அனுமதி பெறாமல் மசலத்திற்குக் கூடப் போக மாட்டார்கள்.' 21.10.2019 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சாத்திட்டனர என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குக்கு தெரியாமல் இந்த ஆவணம் தயாரித்திருக்க வாய்ப்பில்லை ஏன் எனில் அவர்கள் எப்பொழுதுமே இந்தியாவின் முகவராக செயல்படுபவர்கள். நாங்கள் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கேட்கும்போது கையொப்பம் போடாதவர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு கோத்தபாயவை இந்தியாவின் எண்ணத்துக்கு இழுக்கும் முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள. இது மீண்டும் மீண்டும் இந்தியா நலனிலேயே கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் அக்கறை செலுத்துகின்றனர்.

மற்றும் இந்த தேர்தல் வெறுமனவே இலங்கை சனாதிபதி தேர்தல் அல்ல இது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடக்கும் தேர்தலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.'

ஜானாதிபதி தேர்தல் அறிவித்த நாள் தொடக்கம் மக்களுக்கு என்ன கூறுவது என்று பிதற்றிக் கொண்டிருந்த பவுத்த சிங்கள பேரினவாத ஏகாதிபத்திய எடுபிடி வாதிகள் இந்த தமிழர் சாகசவாதக் கோரிக்கையின் பின் மூசி மூசி தமிழ் விரோதம் கக்கத் தொடங்கி விட்டனர்.

உதித்த ஞாயிறு குண்டுவெடிப்பை அடுத்தும் நிலாவரைப் பிள்ளையார் கோவில் புத்த நாறும்பிணத்தை எரித்த ஆத்திரமூட்லாலும் உசும்பாத சிங்கள மக்கள் தமிழர் கூட்டக் கோமளிகளின் சாகசக் கோரிக்கைகளால் புத்தி பேதலித்தனர். நொவெம்பர் 17 இல் யூ.என்.பி தோற்றால் யூ.என்.பி காடையர்கள் தமிழர்களைக் கொல்லுவார்கள். பொது ஜனப் பெருமுனை தோற்றால் பொதுஜனப் பெருமுனைக காடையர்கள் தமிழர்களைக் கொல்லுவார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் ஒருகாலமும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நிறைவேறமுடியாத பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சாகசவாத கோரிக்கை வைத்த தமிழ் தேசியக் கூட்டணியென்ற தமிழர்களின் இயமன்களும் அவர்களின் வாலில் தூங்கும் எந்தவிதவேட்டகமோ வேதனையோ இல்லாத மற்றய அரசியல்வாதிகளுமே பொறுப்பு.

Read more...

சுமந்திரனின் குண்டர்களுக்கு இனியும் கீழ்ப்படிய முடியாது... கெட்ட வழியிலேனும் பாடம் புகட்டுவோம்! - ஞானசார

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சக்திகளின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்க முடியாது எனவும் அவர்கள் விதைக்கும் அடிப்படைவாதத்தை சொல்லிக் கேட்காவிட்டால் நல்ல அல்லது தீயவழியிலேயே ஒழிக்க வேண்டும் என்றும் பொதுபல சேனா பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் அதிக அரசாங்கங்களும் மேலும் சட்டத்துறைக்குள் மற்றும்பல சட்டங்கள் இங்குள்ளன.இந்த நிலைமையை மாற்ற நாட்டு மக்கள் தேர்தலில் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டு்ளளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று நவாலா வீதி ராஜகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ சதர்மராம ரஜமகாவிகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே தேரர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருகந்த விகாரை அறக்கட்டளைச் சபையின் செயலாளர் மணிக் கருணாரத்ன இன்று அவரது பெற்றோரது மரணத்தையும் கருத்திற்கொள்ளாது இங்கு வந்துள்ளார். முல்லைதீவில் என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவுறுத்தவே அவர் இங்கு வந்துள்ளார்.

உண்மையில் வடக்கில் இராணுவம் செயற்படுகின்ற முறையைப் பார்க்கும்போது அவர்களின் செயற்பாடானது வடக்கு ஒரு தனி மாநிலம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது. சட்டத்திற்கு அதிகமாகத் தலைவணங்க முடியாது. கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வது அதனை விட நல்லது.

சிறைக்குச் சென்ற எங்களுக்கு மீண்டும் சிறைக்குச் செல்வது பெரிய விஷயமே அல்ல. சட்டத்தைக் கையில் எடுத்திருப்பவர்கள் அதனைச் சரிவரச் செய்யுமாறே நாங்கள் கோருகின்றோம். குருகந்தயில் பெரும் தவறு நிகழ்ந்தது. அதனால் பிரதமரும் அரசாங்கமும் மகா சங்கத்தினரிடமும் இந்நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

வடக்கு பிரிவினைவாதத்தால் மூழ்கியுள்ளது. பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க பொறுப்புள்ளவர்களை நாங்கள் அழைக்கிறோம். யாழில் ஒரு தனி அரசாங்கம் நடைபெறுகின்றது.

சுமந்திரன் இங்கு வந்து செட் அணிந்து நீதிமன்றம் செல்லலாம். சம்பந்தன் கொழும்பு வரை வரலாம். அனுராதபுரத்திற்கு செல்லும் வழியில் அவர்கள் எங்களுக்கே ஐயாவாதை நாங்கள் அனுமதிக்க முடியுமா? இந்த அடிப்படைவாதிகள் எங்கள் தூசுக்குச் சமன்....

சுமந்திரன் ஒரு கிறிஸ்தவ மத போதகர். இவர் போன்றவர்களுக்கு நாம் அடிபணிய முடியாது. நாம் இரண்டில் ஒன்றை நலவாகவோ தவறாகவோ சொல்லியே ஆகவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த நாட்டு மக்கள் அதற்கு தயாராக உள்ளனர். எந்த அரசாங்கம் வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் நாங்கள் முல்லைத்தீவில் குடியேறுவோம். பொலிஸார் கழற்றிய சீ.சீ.டீ.வி கேமராக்களை நிறுவுவோம். ஜனாதிபதித் தேர்தலின் போது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் இதனை நாங்கள் செய்யவில்லை.

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரலாறு எங்களிடம் உள்ளது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் நாங்கள் புத்த மதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

மேதாலங்காரதிஸ்ஸ தேரரின் தகனம் குறித்த பிரச்சினை தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. இதனைக் காரணம் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்குகளைப் பெற தீவிரமாகச் செயற்படுகின்றது. வெலிஓயாவில் உள்ள குருகந்த விகாரை மற்றும் சிங்களக் குடும்பங்களை ஜனகபுரத்திற்குப் புறந்தள்ளவே முயற்சிக்கின்றனர். தமிழ்த் தேசியத்தின் கனவு காண நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அங்கு இதுதொடர்பில் கருத்துரைத்த முல்லைத்தீவு குருகந்த விகாரையின் அறக்கட்டளைச் சபையின் செயலாளரும், முன்னாள் வங்கி அதிகாரியுமான மாணிக் கருணாரத்ன குறிப்பிடும்போது:

'குருகந்த புராண விகாரை 2000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட விகாரையாகும். இந்த விகாரைக்கு புத்தராண்டு 244 இல் பெயரிடப்பட்டது. இந்த விகாரையில்தான் முதன் முதல் புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்தை முதலில் பார்வையிட்ட இடம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பெயர் நாகனகல அல்லது முலதீவ் என்பதாகும். முலதீவ் என்பது முல்லைதீவின் பெயராகும். பாளி மொழியில் நாகனகல நானோரு என்று அழைக்கப்படுகிறது. இது இப்போது நயாருவாக மாறியுள்ளது.

குருகந்த புராண விகாரை பற்றி எழுதப்பட்ட சான்றுகள் பல உள்ளன. இலங்கை வரைபடத்தின் சிவப்பு மலை, 1832 பழுப்பு நிற மண் காரணமாக இது சிவப்பு மண்ணாக மாறியுள்ளது. இது போன்ற எழுதப்பட்ட சான்றுகள் அதிகம் உள்ளன. எனவே குருகந்த வரலாற்றை யாரும் திரிபுபடுத்தவே முடியாது என்று சவால் விடுகின்றேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

-கலைமகன் பைரூஸ்

Read more...

சஜித் பிறேமதாஸ முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளதற்கான ஆதாரத்தை கேட்கின்றார் அனுர குமார!

இனவாத சம்பவங்களின் போது சஜித் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதற்கான ஆதாரங்களை முஸ்லிம்களால் முன்வைக்க முடியுமா? என்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொத்துவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (24) மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலான பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

கேட்கப்படுகின்ற கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளிக்கின்ற அல்லது பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றன 82, 84 வயதை உடைய முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதை 65 ஆக கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு கட்சியில் தேர்தல் கேட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பின்னர் கட்சி தாவுகின்ற கலாச்சாரம் இல்லாதொழிக்க படவேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில் எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கோரி நிற்கின்றார்கள் இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும் தான் கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார் அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தினால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மிகத் திறமையான பொலிஸ் திணைக்களம் எமது நாட்டில் இருக்கின்றது அவர்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாமல் இருப்பதற்கு பிரதான காரணம் ஊழலில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களுமே. வசீம் தாஜுதீனின் கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட ஆகியோரின் கொலை பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பிரதானமான காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் நீதியை நிலைநாட்ட முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன். எமக்கு தேவையானது எல்லாம் நிம்மதியாக வாழக்கூடிய நமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அதற்காகவே தான் நான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னர் கண்டி திகன அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அல்லது ஊடகங்கள் முன்னிலையில் வாய்திறந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். அப்படி அவர் பேசி இருப்பதற்கான ஆதாரத்தை உங்களிடம் இருந்தால் சமர்ப்பிக்க முடியுமா என்று சவால் விடுக்கின்றேன் என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

எஸ்.அஷ்ரப்கான்

Read more...

தேர்தல் மேடைகளில் காட்சிதரப்போகிறார் மைத்திரி!

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 28 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாட்டுக்கு வந்தவுடன், ஜனாதிபதி குறித்ததொரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து அரசியல் களத்தில் நுழைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஜனாதிபதி சுதந்திரமாக இருப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தபோதும் ஆனால் ஜனாதிபதி தனது முடிவை மாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்த ஏற்கனவே 25000 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.க. அண்மையில் பல ஊடக சந்திப்புகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, October 24, 2019

தமிழீழக் கனவு ஒருபோதும் நனவாகாது... தமிழ் மக்களே கோத்தாவுக்கு வாக்களியுங்கள்! - மங்களாராம விகாராதிபதி

தமிழ் மக்கள் வீணான கனவு காணாமல் - இருட்டில் விழுந்தது போல பகலிலும் விழாமல் நல்லிணக்கமாக வாழ்வதற்காக, சமாதானத்தை வரவழைத்த யுத்தத்தைப் பூண்டோடு அழித்த ஆட்சியாளருக்கே வாக்களிக்க வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி - இதுவும் ஒரு சிறிய தேர்தல் எனக் கருதாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் குறிப்பிட்டார்.

இன்று (24) ஊடகங்களை வரவழைத்து அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

புத்த தர்மத்தையும் சாசனத்தையும் உச்சாணியில் நிறுத்துவதாகவும், கோயில்களையும் தாகபைகளையும் அதிகரிப்பதாகவும் பேசுகின்ற சஜித் பிரேமதாச, எங்கள் நாட்டில் இரு கைகளும், கால்களும் இழந்த இராணுவ வீரர்களுக்காக என்னதான் செய்தார்? என வினா எழுப்பினார்.

ஒன்றுமட்டும் உண்மை... அவர் எங்கெங்கெல்லாம் புதையல்கள் இருக்கின்றனவோ அவ்வாறான இடங்களைத் தேர்ந்து விகாரைகளை நிர்மாணிக்கின்றார் என்று அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் குற்றம் சுமத்தினார்.

அவர் ஒருநாளாவது மங்களாராம விகாரைக்கு காலடி எடுத்து வைத்தாரா? இல்லவே இல்லை. சிறிய விகாரைகளுக்கு குறைந்தளவு ஒரு மலசலகூடத்தையாவது அவர் கட்டிக் கொடுத்தாரா? இவர் ஜனாதிபதியானதும் விகாரைகளைக் கட்டுவதாக மேடைகளில் சொல்லித் திரிகிறார்.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் கோத்தபாய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும். அதற்கு மூவின மக்களும் சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

2009.05.17 இற்கு முன்னர் இது நடந்திருந்தால் குருக்களின் இன்றைய நிலை என்ன?

நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நாமல் ராஜபக்ச வடகிழக்கின் மூலை முடுக்கெங்கும்; உலாவி வருவதுடன் அங்குள்ள மதத்தலைவர்களால் அவர் ஆசீர்வதிக்கவும் படுகின்றார்.

இந்நிலையில் வரலாற்றின் சுமார் 12 வருடங்களுக்கு முந்திய காலப்பகுதிக்கு இலங்கைநெற் உங்களை எடுத்துச் செல்கின்றது. கடந்த 2007 ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கு முழுவதும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்காக 2007.02.03 அன்று வாகரைப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

மிகவும் ரகசியமாகவும் பாதுகாப்பு வேலிகளுக்கும் மத்தியில் சென்றிறங்கிய மஹிந்த ராஜபக்சவிற்கு அங்கு வரவேற்பு நிகழ்சி நிரல் ஒன்றும் ஏற்பாடாகியிருந்தது. தமிழர் பிரதேசம் ஆகையால் பிக்குகளை கொண்டுசெல்லவில்லை. ஆலயபூசகர் ஒருவரையே அழைத்துச் சென்றனர். (நன்றாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள் அழைத்துச் சென்றனர்) எதற்கு எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பது கூட சந்திவெளி பிள்ளையார் கோயில் ஆலய குருக்கள் ஐயா செல்லையாவிற்கு தெரியாது. குருக்களை அழைத்துத்தான் சென்றார்கள் என்பதும் ஈ புகாத மூலை முடுக்குகள் எல்லாம் புகுந்து வெளியே வரக்கூடியவர்கள் என்று கூறிக்கொண்ட பிலிகளின் புல-நாய்வுத்துறைக்கு தெரிந்திருக்காமலும் இல்லை.

அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட குருக்களுக்கு அவ்விடம் சென்றபோதுதான் நாட்டின் ஜனாதிபதி அங்குவருகின்றார் என்பதும் அவருக்கு ஒரு ஆசீர்வாத பூசை செய்யவேண்டும் என்பதும் தெரியவந்தது. சுற்றிவர கனரக ஆயுதங்களுடன் நிற்பவர்களிடம் முடியாது என்று சொல்லமுடியுமா? இல்லை, அது இந்து தர்மமும் ஆகுமா?

நாட்டின் தலைவரின் நெற்றியில் விபூதி பூசினார். மஹிந்த வந்த ஹெலிக்கொப்டர் தொடரணி கிளம்பிச் சென்றது. ஐயா வையும் அழைத்துவந்த விதமாக கொண்டுசென்று விட்டுவிட்டனர்.

08.02.2007 8.30 மணியிருக்கும் தனது இரவுபோஷனத்தை எடுத்துக்கொண்டிருந்தார் குருக்கள். இருவர் நுழைந்தனர். வெளியே வா கதைக்கவேண்டும் என்றனர். சாப்பிடுகின்றேன் தம்பி என்றார். அதெல்லாம் அவர்களுக்கு எதற்கு.. தங்களுக்கே உரித்தான பாணியில் அழைத்தனர்.. சாப்பாட்டுக்கோப்பையை வைத்துவிட்டு எழுந்து சென்றார் பூசகர்.. வீட்டுக்கு பின்புறமாக அழைத்துச் சென்றனர்.. சில நிமிடங்களில் வீட்டுக்கு பின்னால் டும் டும் கேட்டது.. வீட்டார் சென்று பார்த்தபோது பூசகர் இரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

அந்த மூன்று பிள்ளைகளின் தந்தை செய்த குற்றம் என்னவென்று இன்றும் எமது சமூகம் அறியவில்லை. எவராவது கேள்வி எழுப்பினால் சிறு சிறு தவறுகள் நடந்துதானாம் இருக்கின்றது. தமிழீழ மக்களுக்கு கொலை சிறிய தவறு.

இவ்வாறு நிறையவே சிறிய சிறிய தவறுகள் இடம்பெற்றது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் இன்று அந்த தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக இன்று மக்கள் பேசவிரும்பும் ஆனால் பேச மறுக்கும் விடயம் யாதெனில் எதற்காக 2009 மே 17 வரை காலம் காத்திருந்தது என்பதாகும்.

காலம் இதை 1987 லேயே, அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தபோது செய்திருந்தால், குருக்களது உயிருடன் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதை எம் சமூகம் ஆய்வுக்குட்படுத்த மறுகின்றது. 1987 ல் சில நூறு உயிரிழப்புக்களை மாத்திரம் கொண்டிருந்த எம்சமூகம் 1987 இலிருந்து 2009 மே வரை எத்தனை உயிர்களை விலை கொடுத்துள்ளது என்பதை மாத்திரம் பேச விரும்புகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்னும் ஒரு பூசகருக்கு டும் டும் விளாது என்ற உத்தரவாதத்தை காலம் மஹிந்த ராஜபக்சவின் நாமத்தால் தமிழ் மக்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

அந்த உத்தரவாதம் கிடைத்திருக்காவிட்டால் இன்று இந்த பூசகரின் நிலை என்ன?






Read more...

பிரபாகரன் நடுத்தெருவில் செத்துக்கிடப்பார் என்றேன், நடந்தது. மார்தட்டுகின்றார் அதாவுல்லாஹ்

கடந்தகாலங்களில் நடந்தவற்றை தாம் முற்கூட்டிய எதிர்வுகூறியதாகவும் அந்த அடிப்படையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடுத்தெருவில் செத்துக்கிடப்பார் என்றுகூறியதுபோல் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்.

நேற்று புதன்கிழமை இரவு நிந்தவூர் அட்டப்பளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது இலங்கையை பொருத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் நாட்டின் இறைமைமை பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும். அந்த வகையில் 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ந ராஜபக்ச குடும்பத்தின் ஒருவரே நாட்டிற்கு ஏற்ற ஜனாதிபதியாவார். அந்த வகையில் தேசிய காங்கிரஸான எமது கட்சி கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியானது சிங்கள மக்கள் மத்தியில் 72 தொடக்கம் 80 வீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவது உறுதியாக உள்ளது. இந்த வெற்றியில் முஸ்லிம்களாகிய நாமும் பங்காளர்களாக வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் விடயத்தில் நிதானமாக உள்ளனர். அவர்களது மனநிலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ மாற்ற முடியாது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் தேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக தான் காணப்படுகின்றனர். வியாபாரம் முடிந்தவுடன் கடையை அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். மீண்டும் அடுத்த முறை அதே கடையுடன் தான் வருவார்கள். இவர்கள் முஸ்லிம் மக்களை தங்களது சொந்த இலாபங்களுக்காக கறிவேப்பிலையாக பயன்படுத்துகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அவர்கள் செய்யாத குற்றங்களுக்கு மாட்டிக்கொள்வது என்பது இறைவனின் தண்டனையே ஆகும். இவர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக என்ன திட்டம் வைத்துள்ளனர்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சிறந்தது என நானும் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபும் கூறியுள்ளோம். ஆனால் இந்த நிறைவேற்று அதிகார முறைமை மாற்றப்பட வேண்டும் என உறுதியாய் இருந்தவர்கள் தான் எமது முஸ்லிம் அமைச்சர்கள். தொடர்சியாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி தோல்வி கண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தடவையும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதனாலே இத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.

சஜித் பிரேமதாசவினால் குச்சிப்பெட்டி போன்ற வீடுகளை கட்டிக்கொடுக்க முடியமே தவிர நாட்டை பாதுகாக்க முடியாது. ஏனென்றால் தான் ஜனாதிபதியாக வந்தால் பாதுகாப்பு சம்மந்தமான அனைத்தையும் சரத் பொன்சேகாவிடம் கையளிப்பேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதியின் கீழ் வருகின்ற பாதுகாப்பு அமைச்சை தன்னால் மேற்கொள்ள முடியாது என்ற நிலையானது அவரது தோல்வியை உறுதிப்படுத்துகின்றது.

மக்கள் யாரும் கோத்தபாய ராஜபக்சவை கண்டு பயப்படவில்லை இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தான் மக்கள் மத்தியில் பயத்தை வரவழைக்கின்றனர். நமது நாட்டின் தலையெழுத்து மாற்றப்பட வேண்டும். 2015ல் நல்லாட்சியை உருவாக்குவதற்கு 100 வீதம் பாடுபட்டு மறக்க முடியாத ஆட்சியை உருவாக்கியதற்கான பங்கு முஸ்லிம் மக்களுக்கு உண்டு. பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் , தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள், தொப்பி பிரட்டிகள் என நகையாடப்படுகின்றனர்.

இந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட அங்கத்தவராகிய நாங்கள் ரவூப் ஹக்கீமை நாட்டுக்காக, மக்களுக்காக செயற்படக்கூடியவர் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கினோம். ஆனால் அவரது செயற்பாடுகள் பிழையானதால் தான் நாங்கள் அந்த கட்சியை விட்டு ஒதுங்கினோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளுத்கமை சம்பவத்தை தொடர்ந்து மக்கள் முன்னைய ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை எடுத்தனர். ஆனால் இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்த தீர்மானம் அல்ல. தேர்தல் நிலைமை மாறுகின்ற சந்தர்பத்தில் மாட்டு வண்டிக்கு கீழால் செல்லும் நாய் போல ஆட்சியமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்றார் .

அமைச்சர் ரிசாட் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் என்னை சம்பந்தப்படுத்தி பேசியுள்ளார். ஆனால் அவருக்கு அதன் அகலம் நீளம் கூட தெரியாது. நான் இதை தடுப்பது பற்றி ஜனாதிபதி மைத்திரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புகின்றேன். என்னுடைய பிரதேச மக்களின் பிரச்சினை இது. எனது பிரதேச மக்கள் வாழவேண்டிய பூமி அக்கரைப்பற்று பிரதேசத்தின் காணி அது. அதனால் எனக்கு நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகல, நீளம் தெரியும். அமைச்சர் றிஸாத்தின் சொந்த பிரதேச பிரச்சினைகளே அவருக்கு தெரியாது. (சிரிக்கிறார்)

கடந்தவாரம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் றிசாத், சவூதி அரேபிய நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாத நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க விடாமல் ஜனாதிபதியிடம் பேசி தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தடுப்பதாக குற்றம் சாட்டிய கருத்திற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இப்ராஹிமும் அவருடைய மகன்மாரும் அமைச்சர் றிசாத் அவர்களுடனே தான் இருந்தார்கள். அவர்களையே அறியாத அவருக்கு அவர்களினால் இயக்கப்பட்ட செம்பு தொழிற்சாலையை அறியாத அவருக்கு நுரைசோலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிச்சைக்காரனின் புண்ணைப்போல அவருக்கு இந்த பிரச்சினை இப்போது தலைக்கு வந்துள்ளது. தொடந்தும் நாங்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளை போல அல்லாது கடந்த காலங்களில் மஹிந்த அரசில் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் வடகிழக்கு பிரிப்பும், யுத்த முடிவும் நிறைவடைந்துள்ளது மீதமாக இருக்கும் சகல இலங்கை மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய யாப்பை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன வேட்பாளர் கோத்தாபாயவை ஆதரிக்கிறோம்.

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தியில் செத்து கிடப்பார் என்றோம் அது நடந்திருக்கிறது, வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்றோம் பிரிந்தது, உலகமே நம்பாத மஹிந்த-மைத்திரி இணைவை பற்றி பேசினோம். எங்களுக்கு தலைகழண்டுவிட்டது. பைத்தியம் பிடித்துவிட்டது இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றார்கள். காலம் அவர்களுக்கு பதிலளித்தது போல எங்களுடைய இப்போதைய கோரிக்கைகளும் வெல்லும் என குறிப்பிட்டார்.

பாறுக் ஷிஹான்

Read more...

Wednesday, October 23, 2019

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து இறக்கப்பட்டவராம் ஞானசார தேரர் !!

சு. க. வின் காரைதீவு முஸ்லிம் அமைப்பாளர் ஜாஹிர்

மஹிந்த் ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து ஞானசார தேரர் இறக்கப்பட்டார், மேற்குலகின் சதி திட்டத்துக்கு முஸ்லிம்கள் பலியாகி எதிராக வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைய நேர்ந்தது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச முஸ்லிம் அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான ஏ. எம். ஜாஹிர் தெரிவித்தார்.

இவரின் மாளிகைக்காடு இல்லத்தில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை மதியம் நடத்தப்பட்ட பொது கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

இந்நாட்டில் மூன்று தசாப்தங்களாக கொடூர யுத்தம் நிலவியது. அதில் எமது சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நமது சமூகத்தை மாத்திரம் அன்றி இலங்கை மக்கள் அனைவரையும் யுத்த அரக்கனின் பிடியில் இருந்து மீட்டு தந்த பெருமைக்குரிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஆவார். நிலையான நீடித்த அபிவிருத்திகளை மேற்கொண்ட ஒரே தலைவரும் இவரே ஆவார். நாம் முஸ்லிம்கள். நன்றி உடையவர்கள். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏதோ சில காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கவே இல்லை.அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ சுமார் நான்கரை இலட்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார். அவருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க தவறியது வரலாற்று தவறாகும்
.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு நாலரை வருடங்கள் கழிந்து விட்டபோதும் நாட்டில் எங்குகூட அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, வாழ்வாதார ஊக்குவிப்பு எவையும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவே இல்லை. பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் தருவதாக வாக்களித்தார்கள்.மட்டக்களப்பில் இருந்து அம்பாறை அல்லது பொத்துவில் வரை ரயில் பாதை அமைத்து தருவார் என்று அமைச்சர் தயா கமகே மேடைகளில் முழங்கினார். வை ஃபை இலவசமாக தருவதாக சொன்னார்கள்.ஆனால் எவையும் நடக்கவே இல்லை. இலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு உள்ளன. கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில், ஒலுவில் என்று ஒவ்வொரு இடங்களிலும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இந்நாட்டில் கிடையாது என்பது போல அரசாங்கம் நடக்கின்றது.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தர முயலாமல், அதற்கான உத்தரவாதங்களை பெறாமல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியில் தேர்தல் கேட்டால்தான் ரவூப் ஹக்கீம் கண்டியிலும், றிசாத் பதியுதீன் வன்னியிலும் எம். பியாக வர முடியும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காகவே உடன்படிக்கை எதுவும் செய்யாமல் இவர்கள் ஐ. தே. கவை ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களை காட்டி கொடுத்து அழித்தாலும் பரவாயில்லை, சொந்த இருப்பை இவ்விதம் பாதுகாத்து கொண்டால் சரி என்று இப்படுபாதகமான ஈன செயலுக்கு துணிந்து விட்டனர்.

மஹிந்த் ராஜபக்ஸ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நோர்வேயில் இருந்து ஞானசார தேரர் இறக்கப்பட்டார். முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. யுத்தத்தை முடிவுறுத்திய மஹிந்த ராஜபக்ஸ மீது தமிழ் மக்களுக்கு பாரிய அதிருப்தி காணப்பட்டது. தமிழ் மக்களோடு சேர்ந்து முஸ்லிம்களும் எதிராக வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வி அடைந்தார். மேற்குலகின் சதி திட்டத்துக்கு முஸ்லிம்கள் பலியாகி எதிராக வாக்களித்ததால் மஹிந்த தோற்க நேர்ந்தது. நாம் மஹிந்த ராஜபக்ஸவால் நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்குகளை அள்ளி வழங்குவதன் மூலம் கடந்த கால தவறை திருத்தி சரி செய்வதோடு எமது எதிர்காலத்துக்கான விடியலுக்கான பாதையையும் வகுத்து கொள்ள வேண்டும். கோத்தாபய ராஜபக்ஸவை தவிர பாதுகாப்பு செயலாளராக வேறு ஒருவர் இருந்திருந்தால் இந்நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது. ஆனால் இப்போது குடும்ப ஆட்சி என்று கூக்குரல் போடுகின்றனர். மஹிந்த ராஜபக்ஸ விட்டு சென்ற இடத்தில் இருந்து கோத்தாபய ராஜபக்ஸ அபிவிருத்திகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்.

Read more...

வெலிகம நகர சபையை மாநகர சபையாக மாற்றுவதற்கு முன்மொழிவு

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம நகர சபையை மாநகர சபையாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெலிகம நகரசபை உட்பட்ட பிரதேசத்தில் சனத்தொகை இருபத்தேழாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் காணப்படுவதால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அதாவது அது 35 ஆயிரத்தைத் தாண்டும் பட்சத்தில் வெலிகம நகரசபையை மாநகர சபையாக மாற்றவுள்ளதாக வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நகரசபை - மாநகர சபையாக மாற்றப்படும்போது அதன் எல்லைப் பரப்பு அதிகரிக்கப்படும் அதேவேளை, வெலிகம பிரதேச சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்கள் மாநகரசபை எல்லைக்குள் உள்வாங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

சஜித்தினால் இரண்டுபடுகிறது தமிழ்க் கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அக்கட்சியின் உள்ளகப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிட்டதையிட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புளொட், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளாகச் செயற்பட்டுவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்புக்கள் முன்னர் அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்காக முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தன. ப்ளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தர்மலிங்கம் இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, தமிழ்த் தேசிய கூட்டணி சென்ற காலப்பிரிவில் தற்போதைய அரசாங்கத்திற்குத் தேவையான முறையிலேயே செயற்பட்டு, வடக்கு கிழக்கு மக்களுடைய எந்தவொரு விடயத்திலும் கரிசனை காட்டாதிருந்து வந்தது எனக் குறிப்பிட்டார்.

கூட்டணியின் உள்ளகப் பேச்சுவார்த்தைகளில் ஆர். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்பவே செயற்பட்டார்கள். தற்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றார்கள். அதனால் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்க முடியாது என மேலும் குறிப்பிட்டார்.

Read more...

கோத்தாவின் வெற்றிக்காக ஒன்றுபடுகிறது மொட்டும் ஸ்ரீசுகவும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டுவதற்காக கூட்டுக் கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்தக் கமிட்டிக்கு இரு தரப்பிலிருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்கமிட்டியானது தினந்தோறும் ஒன்றுகூடி தேவையான முடிவுகளை எடுக்கின்றது.

மேலும் இரு கட்சிகளினதும் தொகுதிஅமைப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு மாவட்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதுடன், இக்கமிட்டியானது வாரத்தில் ஒருநாள் ஒன்றுகூடி அடுத்த வாரச் செயற்பாடுகள் பற்றி முடிவுகள் எடுக்கின்றது எனவும் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் மாவட்டக் கமிட்டி ஒன்றுகூடுவதற்கு முன்னர் அதனது செயற்பாடுகள் பற்றி அலசப்படும்.

இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் இன்று 23 ஆம் திகதியிலிருந்து ஊடக பேச்சுக்காக ஒன்றிணைந்த ஊடக செயற்பாட்டு நிலையம் ஒன்றையும் செயற்படுத்துவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தில் இந்த ஊடக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதனது முதலாவது ஊடகப் பேச்சினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பட்டாளர் டளஸ் அழகப்பெரும மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இருவரும் ஒன்றிணைந்து நடாத்துவர்.

Read more...

சஜித் ஜனாதிபதியானதும் 'சிகரட்'டுக்கு ஆப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவரது முதலாவது பணி சிகரட் விற்பனை செய்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதேயாகும் என சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்தியர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதாரப் பிரிவின் கீழ் மேம்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடாத்திய கலந்துரையாடலில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

சகல அரச ஸ்தாபனங்களிலும் வினைத்திறன் மிக்கவர்களை நியமித்து நிறுவனங்களை லாபம் பெறும் நிறுவனங்களாக்குவேன். கோத்தா

கடுவல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் பேசும்போது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில் :

நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் சகல அரச நிறுவனங்களிலும் வினைத்திறன் மிக்கவர்களை நியமிப்போம். அவர்களுக்கு சரியான இலக்குகளை கொடுத்து அவர்களின் செயற்பாடுகளை நெருக்கமாக மேற்பார்வை செய்வோம். நாம் எமது நிறுவனங்களை லாபம் பெறும் நிறுவனங்களாக்கவேண்டும். அதை விடுத்து அந்த நிறுவனங்களை வெளியாருக்கு விற்பனை செய்யமுடியாது.

இந்தநாட்டின்மேல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டுமாக இருந்தால் நாம் ஒரு நிலையான கொள்கைகளை கொண்டிருக்கவேண்டும். நாங்கள் சவால்களை ஏற்றுக்கொண்ட குழு. அத்துடன் அந்த சவால்களை வெற்றிகண்டவர்களும்கூட. எனவே நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் நாங்களே என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்சியடைகின்றேன் என்றார்.

Read more...

முஸ்லிம்களுக்கு எதிராகக் செயற்படுவோரின் பின்னணியில் கோத்தாவே இருக்கிறார்! - மகேஷ்

முஸ்லிம்களுக்கு எதிரான அலையொன்றை ஏற்படுத்திய குழுவின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளரானதைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக இடம்பெற்று வந்த வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் அச்சுறுத்தல்களும் உடனடியாகவே காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல்மஹேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறும் போது கூறியதாவது,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் அன்றாடம் மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களே பதிவு செய்யப்பட்டு வந்தன. தம்பியா, ஹம்பயா போன்ற அனைத்து சொற்களையும் பயன்படுத்தி குரோதத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் திடீரென அச்செயற்பாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நின்று போனது.

இன்று நீங்கள் கூறுங்கள், இன்று உங்களால் அவ்வாறான பதிவுகளைக் காண முடிந்ததா என்று? இப்போது அவற்றைக் காண முடியாது. ஏன் காண முடியவில்லை? அவற்றைச் செய்தவர் இம்முறை வேட்பாளராக களமிறங்கியிருக்கின்றார்.

அவரும், அவரைச் சூழயிருப்பவர்களும்தான் இதனை ஏற்படுத்தினார்கள். இல்லாவிட்டால் அவைகள் ஆகஸ்ட் மாதத்துடன் நின்று போயிருக்காது.

இன்னமும் அவைகள் தொடர்ந்திருக்க வேண்டும். இதுதான் இந்த அரசியலின் தோற்றுப் போன குடும்பக் குழுக்கள், திருடர்கள் ஒன்று ​சேர்ந்த அரசியலாகும்” என்றார்.

Read more...

13 கோரிக்கைகளுக்கும் தமிழரசுக் கட்சி ஆப்பு.

எதிர்வரும் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமிழ் கட்சிகள் 5 இணைந்து 13 கோரிக்கைகளை முன்வைப்பதென தீர்மானித்திருப்பதாக பெருமெடுப்பில் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்த விடயம். ஐந்து கட்சிகளும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறித்த 13 கோரிக்கைகளையும் வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து எவர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களே அவரையே தேர்தலில் ஆதரிப்பெதென தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் பிரச்சராத்தில் ஈடுபட்டுவந்தனர்.

குறித்த பிரச்சாரத்தை அடுத்து தமிழ் கட்சிகள் மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம் இலக்குகளை அடைய பொதுவான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்கவுள்ளனர் என திருப்தியடைந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இச்செயற்பாட்டில் கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரன் , மாவை , சரவணபவான் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

கம்பரெலிய மூலமாகவும் பின்கதவால் பெட்டிகள் மூலமாகவும் தமது மடியை நிரப்பிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிருவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமது ஆதரவு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக இலங்கைநெட் நம்பகரமாக அறிகின்றது.

Read more...

Tuesday, October 22, 2019

முகநூல் மூலம் விஜேதாசவை அவமதித்தவரை சட்டத்துறையிலிருந்தே நீக்குவதற்கு நடவடிக்கை

சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல எனும் பெயருடைய ஒருவர் முகநூல் பக்கமொன்றின் மூலமாக அடிக்கடி ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை அவமதித்து சிற்சில விடயங்களை வெளியிட்டுள்ளதாக விஜயதாசவின் ஊடகச் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதனால், விஜயதாசவின் புகழ்நாமத்திற்கும் கெளரவத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நட்டஈடாக 100 மில்லியன் ரூபா வழங்குமாறு கூறி சட்டத்தரணிசனத் விஜேவர்த்தன மூலம் சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல எனும் பெயருடைய நபருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஏ. ரணகல என்பவர் சட்டத்தரணியாக நின்று இவ்வாறான கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளமையானது சட்டத்தின் 42 (3) பிரிவின்படி மற்றும் சட்டத்தரணிகளின் சட்டக்கோவைக்கு எதிரானது மட்டுமன்றி அதியுயர் நீதிமன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள 56, 58, 60 மற்றும் 61 ஆம் இலக்கச் சட்டங்களை மீறியிருப்பதாகவும் பியதாச ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதனால் சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல என்பவர் சட்டத்துறைக்குப் பொருத்தமற்றவர் என்பதால் அவரை சட்டத்துறையிலிருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

மேலும், இதுதொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸ் இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற குற்றவியல் தொடர்பில் ஆய்வுநடாத்துகின்ற பிரிவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

Read more...

ஸஹ்ரான் பயன்படுத்திய 'திரிமார்' தொழிநுட்பம் இலங்கையில் இல்லை - புலனாய்வுப் பிரிவு

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் சிரியாவிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் 'திரிமார்' தொழிநுட்பத்தின் மூலமே தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளான் எனவும் அந்தத் தொழிநுட்பம் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர்களின் பார்வைக்கு உட்படாது எனவும் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கணனி இணையத்தளத்திற்குள் உள்நுழையவோ, அதனது செயற்பாடுகளைக் குறைக்கவோ இலங்கையில் அதற்குரிய தொழிநுட்ப வசதிகள் இல்லை என உயர் பாதுகாப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த திரிமார் தளத்தைத் தடைசெய்வதற்கு புரோகோல் சர்வதேச பொலிஸாரால் கூட இதுவரை முடியாதுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாத் என்பவனும் திரிமார் தளத்தின் மூலம் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றான் என மேலும் தெரியவருகின்றது.

Read more...

மொட்டில் இருப்பவர்கள் மடையர்கள்... ஐதேகவில் இருப்பவர்களோ கற்றறிந்த மேதைகள்!

மொட்டுக் கட்சியில் இருப்பவர்கள் அறிவில்லாத மூட அடிமைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டார்.

என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்களோ கற்றறிந்த மேதைகளே எனவும் சஜித் பிரேமதாச போன்ற ஒரு தலைவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கான அதிட்டமே எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலானபொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

Sunday, October 20, 2019

ஹக்கீமிற்கெதிரான முறைப்பாடு. வை எல் எஸ் ஹமீட்

ஹிஸ்புல்லாஹ் சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். எனவே, அவரும் ஒரு பயங்கரவாதி அல்லது சஹ்ரானின் பயங்கரவாதத்திற்கு துணைபோனவர்; என்ற ஒரு பிரச்சாரம் இனவாதிகளால் அப்போது முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்தவர்களும் நம்மவர்கள்தான் என்பதும் ஒரு கசப்பான உண்மை.

இவ்விடயத்தில் தெரிவுக்குழுவிலும் ஏனைய விசாரணைகளிலும் நடந்தவைகளை ஹிஸ்புல்லாஹ் விபரித்திருந்தார். அதில் தேர்தல் காலத்தில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடந்த ஒரு சம்பவம் அது; இதில் மு கா உட்பட பல கட்சிகள் பங்குபற்றியிருந்தன; என்பதை ஹக்கீமின் முன்னால் தெரிவுக்குழுவிலேயே விபரித்திருந்தார்.

அதேநேரம் பொலிஸ் விசாரணையில் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஹிஸ்புல்லாஹ் விடுவிக்கப்பட்டார். அதாவது சஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக பல குழுக்களையும் சந்திப்பது, அவர்களுடன் உடன்பாடுகள் செய்வது இயல்பானது; என்பதை விசாரணையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அது காட்டியது.

அதே அடிப்படையிலேயே மு கா வும் சந்தித்திருந்தது. அது அப்பொழுதே தெரிவுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. அதன் யதார்தத்தன்மை புரிந்ததன் காரணமாக யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு தேர்தல் சமயத்தில் அது மீண்டும் தூக்கிப் பிடிக்கப்படுவதேன்? இது மிகப்பிரதானமான கேள்வியாகும்.

இன்று சஹ்ரானை சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப்பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் முறைப்பாடு செய்ததேன்?

அரசியல் சதி:

சில வேட்பாளர் தரப்புகள் தனி சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றிபெற வேண்டும்; என்று பலவிதமான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். ஆனாலும் தற்போதைய களநிலவரம் அதற்கு சாதகமாக இல்லை; என்பதை தற்போது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அநுர, மகேஷ் சேனாநாயக்க போன்றவர்கள் களத்தில் குதித்தது; சமன்பாட்டை மாற்றியிருக்கிறது.

மறுபுறம், அடுத்த தரப்பு கூட்டங்களுக்கு கூடும் சனத்திரள், தாம் நினைத்தது; போன்ற ஒரு பாரிய விகிதத்தில் சிங்கள பௌத்த வாக்குகள் தமக்குக் கிடைக்கப்போவதில்லை; என்ற யதார்தத்தையும் உணர்த்தியிருக்கின்றது. இந்நிலையில் இரண்டு உத்திகள் பாவிக்கப்படுகின்றன. ஒன்று, சிறுபான்மை வாக்குகளைக் கவருவது அல்லது சிதறடிப்பது; இரண்டு, பௌத்த வாக்குகளை மேலும் கவருவது.

பௌத்த வாக்குகளைக் கவருகின்ற விடயத்தில் தாமே நேரடியாக இனவாதத்தை கக்குவது இச்சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமல்ல. எனவே, முஸ்லிம்களுக்குள்ளிருந்தே இதற்கான ஒரு சாதகசூழ்நிலையை உருவாக்க முடியுமா? என்ற ஒரு முயற்சியாக இது இருக்கலாம்.

இன்று முஸ்லிம் தலைவர்களில் ஒரு சில முஸ்லிம் தலைவர்களை இனவாதிகளாக சிங்கள மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே முத்திரை குத்திவிட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கு பொதுமேடைகளில் கூட ஏறமுடியாத நிலை.

இவர்களில் எஞ்சி இருப்பது ஹக்கீம் மாத்திரமே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஹக்கீமின்மீது வெறுப்புக்கொண்ட பலர் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சிலர் அடுத்த தரப்பை ஆதரிப்பதற்கு இந்த முஸ்லிம் தலைமைகளிலுள்ள வெறுப்பும் ஒரு காரணம்; குறித்த வேட்பாளரிலுள்ள நல்லபிப்பிராயம் என்பதற்குப்பதிலாக.

இந்த முஸ்லிம் தலைவர்கள்மீது இவர்களுக்கு இருக்கின்ற ஆத்திரம் நியாயமானதே! உண்மையில் தமது முட்டில் தங்கியிருந்த இந்த ஆட்சியில் இவர்கள் மனசு வைத்திருந்தால் முஸ்லிம்களின் 90 வீத பிரச்சினைகளையாவது தீர்த்திருக்கலாம். மட்டுமல்ல, முஸ்லிம்களின் முட்டில்தான் தங்கியிருக்கின்றோம்; என்கின்ற உணர்வு இந்த ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் இவ்வாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஏன், திகன கலவரம் ஐந்து நாட்கள் நீடித்திருக்காது; என்பதைவிட அது இலகுவாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அரசுக்கு முஸ்லிம்களின், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு என்பது “ சும்மா ஓசியில்” கிடைப்பதுதானே என்கின்ற ஆட்சியாளர்களின் எண்ணம்தான் அவர்கள் பாராமுகமாக செயற்பட்டதற்கான காரணம்.

உண்மையில் இந்த முஸ்லிம் சமூகத்தின் ஆணைபெற்ற முஸ்லிம் தலைமைகள் தம்கடமைகளை இந்த ஆட்சியில் செய்யத்தவறிய, முஸ்லிம்களின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிய குற்றத்திற்கு இவ்வுலகில் தப்பினாலும் மறுமையில் தப்பமுடியுமா? என அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பாரிய அமானிதத்தை அவர்கள் பாழ்படுத்தவில்லையா? என அவர்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே, இவர்கள் மீதான பலரின் கோபம் நியாயமானதுதான். அதற்காக இன்று இவர்கள் செய்திருக்கின்ற கைங்கரியம் ஹக்கீமைப் பழிவாங்குவதாக நினைத்து ‘சமூகத்திற்கு’ செய்த அநியாயமாகும்.

இன்று யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீமிற்கு ஓரளவு ஏற்புடமை இருக்கின்றது. ஏனைய முஸ்லிம் தலைவர்கள்மீது இருக்கின்ற வெறுப்பு ஹக்கீம்மீது இல்லை. அவரை ஒரு மிதவாதத்த தலைவராக சிங்கள மக்கள் பார்க்கிறார்கள்.

இந்நிலையில் இவ்வாறான அர்த்தமற்ற முறைப்பாடுகள்மூலம் சட்டரீதியாக, ஹக்கீமிற்கு பாதிப்பேதுமில்லாதபோதும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீம் மீதும் ஒரு வெறுப்பும் ஏற்புடமை இல்லாத ஒரு நிலையும் ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் ஒரு இணைப்பாக செயற்பட ஒரு தலைமை இல்லாமல் போகலாம்; என்பது மாத்திரமல்ல, இன்று ஓரளவு நல்லபிப்பிராயம் உள்ள ஒரு முஸ்லிம் தலைவர்மீதும் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுமாயின் அது முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இன்னும் அதிகமாகவாக்கவே செய்யும்.

இன்று முஸ்லிம்கள்மீது சிங்களவர்களுக்கு இருக்கின்ற கணிசமான வெறுப்பிற்கு சில முஸ்லிம் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகளும் ஒரு காரணம்; என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவ்வாறு முஸ்லிம்களின் மீது ஏற்படுகின்ற வெறுப்பு அடுத்த தரப்பிற்கு அதிக சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம். ஆனால் அது முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள மக்களின் அதிகரித்த நிரந்தர வெறுப்புக்கு காரணமாகிவிடும்.

எங்களுக்கு ஹக்கீமுடன் பல முரண்பாடுகள் இருக்கலாம்; இருக்கின்றன. ஆனாலும் இன்றைய யதார்த்தம் முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியில் அதிக பட்சமுஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாக அவர் இருக்கின்றார். அவரை அந்நிலையில் இருந்து முஸ்லிம்கள் விரும்பினால் கீழே இறக்கலாம். அதற்காக நியாயமான முறையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். அவையெல்லாம் ஜனநாயக உரிமை.

அதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் பொய்யாக, “ அவரை ஒரு பயங்கரவாதியாக, அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவானவராக” காட்டமுற்படுவது முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களே வெட்டுகின்ற குழியாகும்.

எனவே, குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக ஹக்கீமிற்கென நினைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு இந்த அநியாயத்தைச் செய்யாதீர்கள்.

Read more...

இலங்கையில் 3582 பேருக்கு எலிக்காச்சல் சுகாதார திணைக்களம்

இலங்கையில் 3582 பேர் எலிக்காச்சலால் பீடிக்கப்பட்டள்ளனர் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக இத் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதில் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடளாவியரீதியில் 3582பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கணிப்பீட்டின் பிரகாரம் களுத்துறை மாவட்டத்தில் 460பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காய்ச்சல் கண் சிவத்தல் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

சத்தியமாகக் கூறுகின்றேன் வரியை இல்லாது செய்யமாட்டேன். அனுர குமார திஸாநாயக்க

தேர்தல் பிரச்சார மேடைகளில் யார் வாக்குறுதிகளை அதிகம் வழங்குவது என்ற போட்டி நிலவுகின்ற நிலையில் தான் ஜனாதிபதியானால் மக்களுக்கான வரியை இல்லாது செய்யமாட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரச்சார மேடையொன்றில் பேசிய அவர் :

இந்த தேர்தல் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஆனால் எனது பார்வையில் இது சிறந்த நத்தார் பாப்பாவை தேர்ந்தெடுக்கும் தேர்தல்போல் விளங்குகின்றது. கோத்தபாய தான் வந்தவுடன் உரத்தினை இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கின்றார். மறுபுறத்தில் சஜித்தும் விடுவதாக இல்லை நான் வந்தவுடன் பால்கோப்பை தருவேன் என்கின்றார். இன்னுமொருவர் கூறுகின்றார் நான்வந்தவுடன் வரியை இல்லாது செய்வேன் என்கின்றார்.

நான் கூறுகின்றேன் நாங்கள் நிச்சயமாக வரியை இல்லாது செய்யமாட்டோம். ஆனால் வரிக்கொள்கையை மாற்றியமைப்போம். வரி நிர்ணயிக்கவேண்டிய இடத்தில் அதை சரியாக நிர்ணயித்து , வரி குறைக்கவேண்டிய இடங்களில் அவற்றை குறைத்து மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அகற்றி புதிய வரிக்கொள்கையை உருவாக்குவோம்.

இறுதியாக கூறுகின்றேன் நாம் எதிர்கொள்வது இந்நாட்டின் ஆட்சியாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல். நான் உங்களுக்கு தெளிவாக கூறுகின்றேன் இந்த நாட்டை எங்களால் கட்டியெழுப்ப முடியும் என்றார் அனுரகுமார திஸாநாயக்க.

Read more...

கோத்தாவுக்கு ஆதரவு தேடும் கூட்டம் இன்று வெலிகமவில்....

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (20) ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.

வெலிகம பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானபொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read more...

பேராயரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக கோத்தபாய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேடுதல் நடாத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஆவன செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (19) பிற்பகல் நீர்கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார்.

சிறந்த பார்வை - பணிபுரியும் நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் கூட்டமொன்றும் கிரிபத்கொடையிலும், ராகமையிலும் இடம்பெற்றன. அக்கூட்டங்களிலும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார்.

Read more...

Saturday, October 19, 2019

கோத்தாவின் வெற்றிக்காக அலி சப்ரியும் உதய கம்மன்பிலவும் மெல்போனுக்குப் பறக்கவுள்ளனர்!

'2020 கோத்தபாயவுடன் இலங்கையின் எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் மிக முக்கிய உரையொன்று இம்மாதம் 20 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெறவுள்ளது.

மெல்போன் நகரின் டீக்கின் பல்கலைக்கழகத்தின் பர்வூட் கலாசலையில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கையின் அரசியல், சட்டம், சமூக பொருளாதார துறைகளை உள்ளடக்கும் வகையில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில, ரியர் அத்மிரால் சரத் வீரசேக்கர, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளன இந்நிகழ்ச்சியை மெல்போர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இலங்கையர்களின் உதவியைப் பெற்றுக்காெள்ளும் நோக்கிலேயே உலகில் அதிகமாக வெளிநாட்டில் இலங்கையர்கள் வசிக்கும் மெல்போன் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ...............................

Read more...

இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்! அட்டாளைச்சேனையில் கருத்தரங்கு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் "இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றபோது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) சட்டத்தரணி எஸ்.எம்.சப்ரி ஆகியோரினால் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்து வைக்கப்பட்டது.

இதில் அமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா, தேசிய ஐக்கிய ஊடவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலளருமான மீரா எஸ். இஸ்ஸடீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் “நான் நேர்மையானவன்” என்ற சின்னத்தை பெற்றுக்கொண்டார்என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்:

பைஷல் இஸ்மாயில்




Read more...

கோட்டாபய ராஜபக்ச சில்லறை வாக்குறுதிகள் கொடுப்பவர் அல்லவாம்.. கூறுகின்றார் டலஸ்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சில்லறை வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் நபர் அல்லவென்றும் அவர் அதிகம் பேசாத செயல்வீரன் என்றும் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் பிரதம அமைப்பாளர் டலஸ் அலகப்பெரும.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில் :

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவினால் பல்வேறு விதமான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் இன்று அவர்களது கையிலேயே ஆட்சியதிகாரம் இருக்கின்றது. அவர் அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சர்களில் ஒருவர். அவ்வாறாயின் குறித்த வாக்குறுதிகளை இப்போதே ஏன் நிறைவேற்ற முடியாது என்ற கேள்வியை எழுப்பினார்.

Read more...

ரவூப் ஹக்கீம் சஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வீடியோ வெளியானது. கைது செய்யக்கோரி பொலிஸில் முறைப்பாடு

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவனுடன் 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தின்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளதுடன் குறித்த வீடியோவை கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்த குழு வொன்று அவரை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

பயங்கரவாதியான சஹ்ரானுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்;டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறியளவிலேயே அவனுடன் தொடர்பினை பேணியுள்ளனர். ஆனால் மக்கள் பிரதிநிதியாக பெரும் பதவிகளில் இருந்து கொண்டு சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த பெரும்புள்ளிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே ரவூப் ஹக்கீம் உடனடியாக கைது செய்யப்பட்டு அவருக்கு சஹ்ரானுடனிருந்த உறவு தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும் என்று அந்த அமைப்பினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் 2000 வாக்குகளுக்காக பேச்சுவார்த்தை நாடாத்தி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்திருந்தார் என குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

‘‘TNA வின் பிரேரணைகள் அடிப்படைவாதத்தின் ஆரம்பமோ என சந்தேகிக்க வைக்கிறது! - அஸ்கிரிய பீடம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரேரணைகள் அவர்களின் மோசமான எதிர்ப்பார்க்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டவை என அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவர் வெடருவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்காக விசேட செய்தியொன்றை வழங்கியுள்ள அவர், இந்தப் பிரேரணைகள் வரவேற்பது தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் மட்டுமன்றி, தெற்கில் உள்ளவர்களும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்துப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரேரணைகள் 30 வருடங்கள் தொடர்ந்து நடாத்திய யுத்தத்தின் அடிநாதமான கொள்கைகளுக்கும் அப்பாற்சென்ற பிரேரணைகளாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தனிநாடு எண்ணப்பாடு, பெடரல் தீர்வுப் பிரேரணை, சிங்களக் கிராமங்களை வடக்கிலிருந்து அகற்றுதல் முதலிய பிரேரணைளும் உள்ளடங்கியுள்ளன. இது யாரின் தேவைப்பாடு என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரேரணைகள் அரச சார்பற்ற அமைப்புக்களினது அறிவீனமற்ற பிரேரணைகளே எனவும், இந்தப் பிரேரணைகள் அடிப்படிடைவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த தமிழ் அடிப்படைவாதத்தின் ஆரம்பமோ எனச் சந்தேகிக்க வைக்கின்றது எனவும் அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவர் வெடருவே உபாலி தேரர் அவ்வூடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more...

நீண்ட பட்டியலைக்கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோர்....


நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 35 பேரின் பெயர்களும், அவர்களுடைய கட்சிகள், சின்னங்கள் என்பனவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒருபோதும் போட்டியிடாத அளவு வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களின் பெயர்கள் அடங்கிய வாக்குச்சீட்டின் அளவு 24 அங்குலமாகும்.

இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களினதும். அவர்களுடைய சின்னங்களும் அடங்கியுள்ள வர்த்தமானி அறிவித்தல் கீழே காணப்படுகின்றது.






Read more...

Friday, October 18, 2019

கிளிநொச்சி கருணா கொள்ளுப்பிட்டியில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வி.. விடுதியில் குத்தாட்டம்..

புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் குத்தாட்டம் போட்ட விவகாரங்கள் அக்காலத்தில் வைரலாகி இருந்ததுடன் அதுவே கருணாவின் அரசியல் இருப்புக்கும் காலனாக மாறியது என்பது யாவரும் அறிந்தது.

இன்று கருணாவின் சாதனையை முறியடித்துக்கொண்டு முன்னணியில் நிற்கின்றார் கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரன். வன்னிப்பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்காக குத்திமுறியும் கட்டப்பஞ்சாயத்து தலைவன் ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கொள்ளுப்பிட்டியிலுள்ள விடுதியொன்றில் மது அருந்தி குத்தாட்த்தில் ஈடுபட்டுள்ள காட்சியை இங்கு காண்கின்றீர்கள்.



குறித்த குத்தாட்ட விடுதியில் காணப்படும் தாய்லாந்து வி.மாதுவுக்கு பின்பக்கத்தில் முட்டுக்கொடுத்தவாறு மதுக்கிண்ணத்தை சுவைக்கும் எமது தமிழ் தேசியவாதி அவ்விடத்திற்கு தமிழ் தேசிய உடையிலேயே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படம் வெளியான பின்னர் எவ்விடம் சென்றாலும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காத எங்கள் வாத்தியார் என்று அவரது ஊடக அடிவருடிகள் இக்காட்டிக்கொடுப்பை நாளை நியாயப்படுத்தலாம்..

மேலும் குத்தாட்ட நிகழ்வு கட்சிதாவிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு என்றும் அங்கே பல பெட்டிகள் மாறப்பட்டதாகவும் மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் சிறிதரன் தான் தமிழரசுக் கட்சியிலிருந்தோ தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோ விலகமாட்டேன் என்றும் உள்ளிருந்தவாறே உங்களுக்கு உதவி புரிவேன் என்று தெரிவித்ததாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் சிறிதரனுடன் குத்தாட்ட விடுதிக்கு தமிழ் பெண்களின் கலாச்சார உடையில் கையில் கௌரிகாப்புடன் சென்றுள்ள குறித்த பெண்ணது அடையாளத்தை வெளிக்காட்டுவதை இலங்கைநெற் தவிர்த்துக்கொள்வதுடன் அது தொடர்பாக கேள்வி எழுப்புவதிலிருந்தும் பின்வாங்குகின்றது.

சுகபோகங்களுக்கு அடிமைப்பட்ட எமது தலைமைகளிடமிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்ற கேள்விக்குரிய பதிலை பின்னூட்டத்தில் பதிவிடுமாறு இலங்கைநெற் வேண்டுகின்றது.

Read more...

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சி விஜயம்

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் குறித்த வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

இதன்போது கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய உள்ளிட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இராணுவ தளபதியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நலிவுற்ற மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் போராளி குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன், இன்றைய நாளின் நினைவாக மரக்கன்றும் இராணுவத்தளபதியினால் நாட்டப்பட்டது

Read more...

கிழக்கு மாகாண சுகாதார துறையில் பணிப்பாளர்கள் நியமனம் இரத்து

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ .சுகுணன் அவர்களும், அக்கரைப்பத்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி.ஐ. எம் . ஜவாஹீர் அவர்களும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீன் அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் அழுத்தத்தின் பெயரில் நியமனம் வழங்கப்பட்டு இன்று(16) பதவியேற்று இருந்தனர்.

எனினும் இந்த நியமங்கள் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் தொடர் அழுத்தத்தின் பெயரில் வழங்கப்பட்ட நியமங்கள் என அரச மருத்துவர் சங்கத்தால் கடும் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் காலத்தில் இவ்வாறான அரசியல் நியமனங்கள் வழங்கப்பட முடியாது எனவும் இவை சுகாதார சேவையில் உள்ள சேவை தகுதி, மூப்பு அடிப்படையிலான நியமன விதிமுறைகளுக்கும் , பொதுசேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கும் முற்றிலும் முரணானது எனவும் ,அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக மேற்படி முறையற்ற நியமங்களை மீளப்பெறாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதோடு மட்டுமல்லாமல் தேர்தல் ஆணைக்குழுவினை நாடி மேற்படி முறையற்ற அரசியல் நியமங்களை மீளப்பெற வேண்டிவரும் என சுகாதார அமைச்சிடம் அரச மருத்துவர் சங்கத்தால் கூறப்பட்டதை அடுத்து மேற்படி முறையற்ற அரசியல் நியமனங்கள் சுகாதார அமைச்சால் இன்று 16-10-2019 இரத்துச் செய்யப்பட்டது

நியனமங்கள் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து தங்கள் பதவிக்காலத்தை 24 மணி நேரத்துக்குள் வரையறுத்துக் கொண்டு வைத்திய கலாநிதி ஜீ .சுகுணன் அவர்களும் , வைத்திய கலாநிதி ஐ. எம் . ஜவாஹீர் அவர்களும், வைத்திய கலாநிதி எஸ் . ஆர் . ஷகீலா இஸடீன் அவர்களும் தங்கள் பழைய பதவிகளுக்கு மீளத்திரும்பினர்.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார துறையில் அதிகரித்து அரசியல் தலையீடுகள் காரணமாக பாரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com