Friday, September 20, 2019

கவிஞரும் ஊடகவியலாளருமான இனியவன் இசார்தீன் கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக தொடர்சியாக தனது குரலை எழுப்பி வந்த ஊடகவியலாளரான இனியவன் இசார்தீன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் இலங்கைநெட்க்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 10ம் திகதி அதிகாலையில் வெளியே சென்ற அவர் அன்று மாலை வரை வீடு திரும்பாத நிலையில் அவர்கள் மேற்கொண்ட தேடுதல்களின் பயனாக அவர் இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆசன முன்பதிவை செய்யச் சென்றிருந்தபோது அங்குவைத்து அவர் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சமீப காலமாக அவர் முஸ்லீம்களுக்கெதிரான அரசாங்கத்தின் இனவாதம் அடக்குமுறை, முஸ்லீம் பெண்களின் கலாசார ஆடை எதிர்ப்பு, அரச படையினரின் வன்முறை ஆகியவற்றை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கி எழுதிவந்தமையால் அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு வழிகளில் சமூக சேவைகளை மேற்கொண்டுவந்த இசார்தீனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என குடும்பத்தினர் வேண்டி நிற்கின்றனர்.

Read more...

மாதகல்லில் பிடிபட்ட தங்கத்தில் புத்தர் சிலை! கோத்தாவை மாட்ட வலை பின்னப்படுகின்றதா?

பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஆலோ­சனை மற்றும் கோரிக்­கைக்கு அமைய, அனு­ரா­த­புரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்­ப­தற்­காக தங்­கத்­தி­னா­லான சமா­தி­நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை தங்­கத்தில் 8 கிலோவை கடற்­ப­டைக்கு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்ட இரு­வரைக் கைது­செய்ய சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இது தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அறை இலக்கம் 8 பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­னாண்டோ தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலை கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு, சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை தொடர்­பிலும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே இந்தக் கைது உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்கை சுங்கம் மற்றும் கடற்­படை தொடர்­பு­பட்ட இந்த தங்க மோசடி தொடர்பில் முதன் முதலில் மோசடி தடுப்புக் குழு­வுக்கு அனா­ம­தேய முறைப்­பாடு கிடைத்­துள்­ளது. இந்த முறைப்­பா­டா­னது அக்­கு­ழுவின் தலைவர் ஆனந்த விஜே­பால ஊடாக கடந்த 2016 மே 13 ஆம் திகதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து அது­கு­றித்த விசா­ர­ணைகள் எப்.சி.ஐ.டி. எனப்­படும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தற்­போது இது­கு­றித்த விசா­ர­ணைகள் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. ஆகி­ய­வற்றின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஆகி­யோரின் ஆலோ­சனை மற்றும் மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அனுர பிரே­ம­ரத்­னவின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­னாண்டோ தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி வடமேல் கடற்­படை புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்த தக­வ­லின்­படி 45.03 கிலோ தங்கம் யாழ். மாதகல் கடலில் வைத்து பட­கொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது. இதன்­போது இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். பின்னர் சந்­தேக நபர்­களும் தங்­கமும் யாழ். சுங்கப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில் மேல­திக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது கடத்த முயன்ற தங்கம் அர­சு­டை­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே அப்­போ­தைய கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் எஸ்.என்.ஜே.பெரேரா சுங்கப் பணிப்­பாளர் நாய­கத்­திற்கு கோரிக்கை கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்ள நிலையில் தங்க புத்தர் சிலை ஒன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்தில் 8 கிலோவை மீளக் கோரி­யுள்ளார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக அதனைக் கோரு­வ­தா­கவும் அக்­க­டி­தத்தில் அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார். அத்­துடன் ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்ற பாது­காப்புக் கூட்­டத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் முடி­வெடுக்கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டியே இந்த தங்கத் தொகை கோரப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அப்­போ­தைய சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீ­ரவை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­டுள்ள பாது­காப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சின் முன்னாள் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, குறித்த தங்­கத்தை கடற்­ப­டைக்கு கைய­ளிக்­கு­மாறு ஆலோ­ச­னையும் வழங்­கி­யுள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே அப்­போ­தைய சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர அப்­போ­தைய கடற்­படை தள­ப­தியின் கோரிக்கை கடி­தத்தை மேல­திக சுங்கப் பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்­ன­வுக்கு இந்த விட­யத்தைக் கையாள அனுப்பி வைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை தொடர்பில் நீதி­மன்­றுக்கு நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விரி­வான அறிக்­கை­களை சமர்ப்­பித்­துள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சட்­டமா அதி­ப­ரிடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு இந்த விவ­கா­ரத்தில் சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஆலோ­ச­னையும் கோரி­யது.

அந்த ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்ற நிலையில், அதில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை நம்­பிக்கை மோசடி மற்றும் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோகம் ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களில் கைது செய்ய ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அது தொடர்பில் கோட்டை நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே முன்னாள் சுஙப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க உத்­த­ர­விட்­டுள்ளார். சுங்­கப்­பி­ரிவின் பொறுப்பில் எடுக்­கப்­படும் எந்தப் பொருளும் 30 நாளுக்­குமுன் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் விடு­விக்­கப்­பட முடி­யா­தென சுங்க கட்­டளைச் சட்டம் குறிப்­பிடும் நிலை­யி­லேயே கைப்­பற்­றப்­பட்டு 24 மணி­நே­ரத்­திற்குள் இந்த தங்கம் மீள­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. 2014 ஒக்­டோபர் மாதம் கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்­தி­லி­ருந்து கடற்­படை பெற்­றுக்­கொன்ட 8 கிலோ தங்­கத்தில் சமா­தி­நிலை புத்தர் சிலை அமைக்­கப்­பட்டு, அது 2014 நவம்பர் 23 ஆம் திகதி அனு­ரா­த­புரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை கடற்படைக்கு கொடுக்க ஆலோசனை, உத்தரவு வழங்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க எப்.சி.ஐ.டி. நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதற்கு முன்னதாக குறித்த இரு சுங்க அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ஜாதிப்பிரச்சினை.. அய்யோ நானே பிறேமதாஸவிற்கு உதவியவன் என்கின்றார் ரணில்..

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது இர ண்டாக பிளவுபட்டு நிற்கின்றது. வேட்பாளர் நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அக்கட்சியில் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிறேமதாஸ பல்வேறு வழிகளில் நெருக்குதல்களை கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி ஜாதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜாதி பிரச்சினை காரணமாகவா சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற கேள்வி முக்கிய அமைச்சர் ஒருவரால் காரசாரமாக எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க 'தான் ஜாதி அடிப்படையில் செயற்படும் நபரில்லை என்றும் தானே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாவதற்கு உதவியதாகவும் மேலதிகமாக 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவிற்கு தான் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.'

எவ்வாறெனினும் சஜித்தின் தந்தை ஆர். பிரேமதாசவிற்கு எதிராக கிளர்ச்சி செய்த காமினி திஸாநாயக்கவின் புதல்வர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வரும் தரப்பின் முக்கியமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவராக நவீன் திஸாநாயக்க திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை சேர் என விளிப்பதற்கு சில உயர் சாதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் தெரிவித்துள்ளார்.

Read more...

றிசார்ட் பதுயுத்தீனின் கைக்கூலியான வவுனியா பிரதேச செயலரின் காணி மோசடி அதாரங்கள் கசிந்தது!

அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காணி நிர்வாக அதிகாராங்கள் பிரதேச செயலர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பிரதேச செயலர்களால் பெரிதும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதுடன் இக்காணிகள் தமது முதிசச்சொத்து என்ற கணிப்பிலும் அவர்கள் செயலாற்றி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் வவுனியாவின் யு9 வீதியை அண்டிய பகுதியில் காணப்படும் பெறுமதிக்க காணிகள் பல வவுனியா பிரதேச செயலாளர் உறவினர்களுக்கு சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் மாறாக வழங்கியிருந்தமை பல ஆதாரங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு இருந்தது.

றிசார்ட் பதுயுதீனின் கைக்கூலியான குறித்த பிரதேச செயலாளரின் மேற்படி செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரச அதிபர் தவறியிருந்தார். இதற்கான காரணம் குறித்த செயலாளருக்கு றிசார்ட் பதுயுதீனுடனுள்ள தொடர்பு காரணமான அச்சமே எனத் தெரியவருகின்றது.

எது எவ்வாறாக இருந்தபோதும் பிரதேச செயலாளர் மற்றும் அவரது நெருங்கிய உத்தியோகத்தர்களின் முறையற்ற காணி அபகரிப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் மேலதிக அரசாங்க அதிபரினால்(காணி) அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் குறித்த அறிக்கையும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து அரச அதிபரால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த காணி மோசடி தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் பலமாக பிரயோகிக்கப்பட்டுவருகையில் மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் இதோ!




Read more...

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்பது அரசியல் சூழ்ச்சியாம்.. கூறுகின்றார் வேலுகுமார்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை ‘அரசியல் சூழ்ச்சி’ திட்டமாகவே பார்க்கவேண்டியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி மடுல்கல பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் இன்று (20) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் 1972 ஆம் ஆண்டில் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அக்காலகட்டத்தில் பிரதமர் பதவியே நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக இருந்தது. எனினும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவால் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.

மிக முக்கிய அதிகாரங்கள் எல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கரங்களுக்குள் சென்றடைந்தன. அப்பதவியை வகிப்பவர்களை சட்டரீதியாக சவாலுக்குட்படுத்த முடியாத நிலையும் உருவானது. குறிப்பாக ஒரு ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர ஏனைய அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் செய்ய முடியும் என அன்றே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒழிப்போம் என சபதமெடுத்து இரண்டு தடவைகள் ஆட்சி பீடமேறிய சந்திரிக்கா அம்மையார், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி வசம் அதிகாரம் செல்வதை தடுப்பதற்காக குறித்த அதிகாரத்தை அவர் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.

இதனையடுத்து அதே பல்லவியை பாடிக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவும் அரியணையேறினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் அமர்ந்ததும் அவரின் மனநிலைமையும் மாறிவிட்டது. ‘ஒழிப்போம்’ என சூளுரைத்தவர், 18 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மேலும் பல அதிகாரங்களை கையகப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றியமைத்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் பேரம் பேசும் சக்தியை வழங்குகின்றது. தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியென்பதால் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லவே அரசாங்க தலைவர் முற்படுவார்.

நிலைமை இப்படியிருந்தம் ஜனநாயகத்தைகருத்திற்கொண்டு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு நாம் நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்கினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றெல்லாம் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நம்பியே நேசக்கரம் நீட்டினோம். ஆனால், பிரதான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையானதொரு தீர்வை வழங்காமல், மேலும் பல பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காணாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமானால் அது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிசமைத்துக்கொடுக்கும்.

ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிமீது கைவைக்க நினைப்பது பொருத்தமற்ற செயற்படாகும். அதிலும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தேசிய முக்கியத்துவமிக்க விடயத்தில் கையடிக்க நினைப்பது மீண்டும் அரசியல் ஸ்தீரமற்றதன்மையையே உருவாக்கும்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகின்றது என்ற விம்பத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும். அது எதிராளிக்கே சாதகமாக அமைந்துவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கோத்தபாயவுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் செலுத்தியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, அவரது இரட்டை பிரஜா உரிமை காரணமாக போட்டியிட முடியாது என்ற கருத்தாடல்கள் நிலவி வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாயவால் போட்டியிடமுடியுமா என்ற கேள்விகள் இன்றும் மக்கள் மத்தியில் தொடங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

பிரச்சாரங்களுக்காக அரச சொத்துக்கள் பயன்படுத்துவதற்கு தடை! தேர்தல் ஆணையாளரின் அதிரடி வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தேர்தல் நிறைவடையும் வரை அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.

இதற்கமைய இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், அரச நிறுவனங்களுக்கான புதிய நியமனங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

எனினும் மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற குறிப்பிட்ட மிக முக்கியமான நியமனங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறான நிகழ்வுகளுக்கு குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களே தலைமை தாங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

Thursday, September 19, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தர்ப்ப வாதிகள். போட்டுடைக்கின்றார் சஜித் பிறேமதாஸ!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதை எதிர்க்கும் நல்லாட்சிக் குழுக்களுக்காக வருத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு ட்விட்டர் செய்தி மூலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பில், அக்குழுவின் சந்தர்ப்பவாதம் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவுள்ள கூட்டத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி ஏற்கனவே ஒரு தனித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நல்லாட்சி குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அகற்ற பிரதமர் மூலோபாய ரீதியில் செயல்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திரு. பிரேமதாச ஒரு வேட்பாளர் என்றாலும், அவர் ஏற்கனவே ஒரு மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார் என்பது அவர்களின் கருத்தாகும்.

Read more...

ஐ.தே.மு பாராளுமன்ற குழு கூட்டத்தில் முக்கிய முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஐம்பதிற்கும் அதிகமானோர் கடிதமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த கடிதம் நாளை (20) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தப்படவுள்ளது.

இன்றைய சந்திப்பில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட சில ஐ.தே.மு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ள போதிலும், குறித்த கடிதத்தில் கைச்சாத்திடவில்லை.

Read more...

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அரச ஊழியர்கள் இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு குறித்த ஆணைக் குழு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திறைசேறியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காக முறைசாரா நியமனங்களை வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விவகாரம் குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரியவுக்கும் ஆணைக் குழுவின் பொலி பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more...

ரெஜினோல்ட் குரே மொட்டுவுக்குள். கோட்டாவுக்கான வட மாகாண ஒருங்கிணைப்பாளராம்..

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று பொது ஸ்ரீ லங்கா ஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவிடம் இவர் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை வெற்றியடைச் செய்வதற்காக, வட மாகாணத்தின் சகல ஒருங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பிரேரணை அமைச்சரவையால் நிராகரிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (19) மாலை கூட்டப்பட்ட விஷேட அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய சிறு கட்சி அமைச்சர்களான மனோ கணேஷன், பி.திகம்பரம் மற்றும் ரவூப் ஹக்கிம் ஆகியோர் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பிரேரணைக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ராஜித சேனரத்ன ஆகியவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பினும் ஏனைய அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பிரேரணையை கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என விஷேட அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான விஷேட அமைச்சரவை கூட்டத்தை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவது கேவலமான செயல் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Read more...

ஓய்வுப்பெற்ற தளபதிகளுக்கு பதவியுயர்வு

முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திலும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப் த எயார் போஸ் தரத்திலும் முன்னர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2009 மே மாதத்தில் முடிவடைந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது தேசத்திற்கு வழங்கப்பட்ட துணிச்சலான சேவை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, September 18, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித்தே... அதில் மாற்றமில்லை! அசோக்க அபேசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவது நிச்சயம் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைகள் தோல்வி அடைந்துள்ளனவா? என ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்கவிடம் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை நிறைவடையவில்லை என தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியை அமைக்கவும் அதன் செயலாளர் பதவியை ஐ.தே.க.வுக்கு வழங்கவும் இணங்கியுள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் சஜித் பிரேமதாசவை கோருவதாகவும் அதற்கமைய அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கூறினார்.

அது குறித்து சஜித் பிரேமதாச எழுத்து மூலம் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் ஐ.தே.க சார்பில் போட்டியிட எவரும் இல்லை எனவும் அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கட்சியின் தலைமைக்கு கட்டாயம் சஜித்தை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரட்ன போன்ற தலைவர்களும் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

Read more...

ஹிஸ்புல்லா வின் வங்கிக்கணக்கு மோசடி கோப் கமிட்டி முன்னிலையில் அம்பலம்..

பெட்டிகலோ கெம்பஸ் மற்றும் ஹிரா அறக்கட்டளை நிதியத்தின் உரிமையாளர் என அடையாளப்படுத்தி கொள்ளும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலங்கை வங்கியில் கணக்கை ஆரம்பிக்க அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது நிறுவனக் குழு நேற்று (17) கூடியபோது இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை நேற்று குறித்த குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் பெட்டிகலோ கெம்பஸ் மற்றும் ஹிரா அறக்கட்டளை நிதியத்தின் வங்கிக் கணக்குகள் குறித்து இலங்கை வங்கியின் அதிகாரிகள், உயர் கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அந்த குழுவில் முன்னிலை ஆகியிருந்தனர்.

இந்த தெரிவு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி குறித்த வங்கியில் வெவ்வேறு பெயர்களில் பேணப்பட்ட கணக்குகள் தொடர்பில் வினவியுள்ளார்.

இதற்கு இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் கே.பி.எஸ். பண்டார மற்றும் வங்கியின் மூத்த சட்ட அதிகாரி தயஞ்சனி பீரிஸ் ஆகியோர் பதிலளித்தனர்.

இது குறித்து அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரும் கோப் குழு உறுப்பினருமான சுஜிவ சேனசிங்கவிடமும் பொது நிறுவனக் குழு நேற்று விசாரணை நடத்தியது.

Read more...

தாமரை கோபுரம் விடயத்தில் தவறான தகவல்களை கொண்டே ஜனாதிபதி கருத்துக்களை தெரிவித்துள்ளார்

தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (16) கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊடாக, பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு இரண்டு பில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளாக அது தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் தற்போதுவரை சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனம் மாத்திரமே ஈடுபட்டு வருவதாகவும் குறித்த இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து கொடுப்பனவுகளும் பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மாத்திரமே செலுத்தப்படுவதை ஆணவங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை ஜனாதிபதி கூறியுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட நேற்று (17) கருத்து வெளியிட்டிருந்தார்.

Read more...

இலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை நடந்திய சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு தொகை ஆயுதங்களை இன்று (புதன்கிழமை) போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தகவலை போலீஸ் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் துறைமுக வீதியிலுள்ள வளவு ஒன்றினுள் மேற்படி ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

அரசு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை போலீஸார் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

ரி56 ரக துப்பாக்கி - 01, துப்பாக்கி ரவைகள் - 23, டெட்டனேட்டர் குச்சி - 07, யூரியா - 02 கிலோகிராம் உள்ளிட்ட பல பொருட்கள், இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.



ஏற்கனவே பாலமுனை பகுதியில் சஹ்ரான் குழுவினரின் 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை - ஹுசைனியா நகரிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த மே மாதம் 31ஆம் தேதி, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 லட்சம் ரூபாய் பணமும், நகைகள் சிலவும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதேவேளை, பாலமுனையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிருந்தே சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிக்கணிணி ஒன்றினையும் சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்

BBC Tamil

Read more...

தாமரை கோபுரம் தொடர்பில் விசாரணை - நாடாளுமன்ற குழு

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணிகளில் ஒப்பந்தம் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு (கோப் - COPE) இன்று (18) தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உள்ளிட்ட தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள் மிக விரைவில் கோப் குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் என, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (16) கருத்து வெளியிட்டிருந்தார்.

தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை ஜனாதிபதி கூறியுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட நேற்று (17) கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் தற்போதுவரை சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனம் மாத்திரமே ஈடுபட்டு வருவதாகவும் குறித்த இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Read more...

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைக்கப்படவுள்ளது - ஆளுநர்

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , கிளிநொச்சி பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் , அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் விவசாய அமைப்புக்களின் பிரநிதிதிகள் உள்ளிட்ட விவசாய சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

Read more...

நாட்டில் உள்ள ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் பொருத்தமற்றவர்கள் - மைத்திரிபால சிறிசேன

நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 280,000 பேரில் சுமார் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Read more...

நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி தோ்தல்

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது. Patrick Martin

ஏழை அமெரிக்கர்கள் வயதாகும் போது இறப்பது பணக்கார அமெரிக்கர்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். இதுதான், அமெரிக்காவில் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வுகள் விரிவடைவதன் தாக்கம் பற்றி காங்கிரஸின் புலனாய்வு அமைப்பான, அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (Government Accountability Office - GAO) இந்த வாரம் வெளியிட்ட ஒரு ஆய்வின் கொடிய முடிவாகவுள்ளது. இந்த ஆய்வு, சமூக பாதுகாப்பு நிர்வாகத்தால் 1992 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரம் மற்றும் ஓய்வூதியங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 1992 இல் 51 மற்றும் 61 வயதிற்கு இடைப்பட்டவர்கள் அடங்கிய மக்கள்தொகையின் உபதொகுப்பை ஐந்து படிநிலைகளாக பிரித்து ஆய்வு செய்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள ஒரு தெருவில், பணியாளர் குழு ஜூலை 1, 2019 திங்களன்று சுத்தம் செய்ய தயாரான போது அங்கிருந்து வீடற்ற ஒருவர் தனது உடமைகளை எடுத்துச் செல்கிறார்

(ஏபி புகைப்படம் / ரிச்சார்ட் வோஜெல்)

உடன் வரும் விளக்கப்படம் காண்பிப்பது போல, ஏழைப் பிரிவினரில் பாதி பேர் (48 சதவிகிதத்தினர்) 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர்களது 73 மற்றும் 83 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டிருப்பதையும், அதேவேளை செல்வந்தப் பிரிவினரில் கால் பகுதியினர் (26 சதவிகிதத்தினர்) மட்டுமே இறந்திருப்பதையும் GAO கண்டறிந்தது.

வருமானம் மற்றும் இறப்பு விகிதங்களுக்கு இடையிலான தொடர்பு அச்சுறுத்துவதாகவும் மறுக்கமுடியாததாகவும் இருந்தது: அதாவது படிநிலைக்கு படிநிலை வருமானம் குறைகின்ற நிலையில், இறப்பு விகிதங்கள் உயர்கின்றன. ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட வயது தொகுப்பினரில் ஐந்து படிநிலைகளில் இரண்டாவது ஏழ்மை நிலையினர், 2014 வாக்கில் 42 சதவிகித இறப்புடன் கூடிய இரண்டாவது படுமோசமான இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். ஐந்து பிரிவினரில், நடுநிலை வயதினரும், இரண்டாவது அதிகபட்ச வயதினரும் முறையே 37 சதவிகித மற்றும் 31 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர்.

ஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்தாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.

இந்த புள்ளிவிபரங்கள் வறுமை மற்றும் சமத்துவமின்மை காரணமாக அதிர்ச்சிதரும் வகையிலான நீண்டகால மனித இழப்பு பற்றிய நுண்ணறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த அறிக்கை, உணர்ச்சிவசப்படாத, அதிகாரத்துவ மொழியில், “GAO இன் பகுப்பாய்வு… வருமானம், செல்வம் மற்றும் மக்கள்தொகை பண்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள், நீண்ட ஆயுளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புபட்டவை என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறது. இதில், வறுமையும் சமத்துவமின்மையும் கொல்கின்றன என்று எளிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட பிற புள்ளிவிபரங்கள் அமெரிக்காவில் மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியின் மேலதிக அறிகுறிகள் பற்றி தெரிவிக்கின்றன. GAO அறிக்கையும் கூட, 1989 முதல் 2018 வரை, 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்ந்திருந்ததை, அதாவது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருந்ததை கண்டறிந்தது. இது, தேக்கமடைந்து வரும் வருமானங்களின் விளைவுகளையும் மற்றும் பாரம்பரிய ஓய்வூதிய திட்டங்களின் உண்மையான மறைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. வயதான தொழிலாளர்களிடம் தொடர்ந்து வாழ்வதற்கு போதுமான பணம் இல்லாத நிலையில், நீண்ட காலம் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், ஓய்வு பெறுவதும் தாமதமாகியது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அறிக்கை, 2018 இல் வறுமை விகிதத்தில் ஒரு சிறிய சரிவைக் காட்டியது, ஆனால் பிற சமூக குறிகாட்டிகள் சாதகமானதாக இல்லை. அமெரிக்காவில் வறுமையில் வாடும் மொத்த மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 38 மில்லியனாக இருந்தது.

சராசரி வீட்டு வருமானம் 63,200 அமெரிக்க டாலர்கள், இதனால் 2018 உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மாறாமல் இருந்தது. நீண்ட வரலாற்று காலத்தில், 1999 முதல், வாழ்க்கை செலவினங்களின் உயர்வினால் ஊதிய உயர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக உண்மையான ஊதியங்களில் கிட்டத்தட்ட எந்தவித அதிகரிப்பும் நிகழவில்லை என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டறிந்தது.



1992 இல் 51 முதல் 61 வயதிற்கு இடைப்பட்ட ஏழ்மையான ஐந்தாவது பிரிவு மற்றும் பணக்கார ஐந்தாவது பிரிவு அமெரிக்கர்களின் உயிர்வாழ்வு விகிதத்தை இந்த விளக்கப்படம் காட்டுகிறது. 2014 ஆம் ஆண்டளவில், ஏழைக் குழுவில் 48 சதவிகிதம் பேர் இறந்து போயிருந்ததுடன் ஒப்பிடுகையில், பணக்காரக் குழுவில் 26 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

2010 இல் ஒபாமா பாதுகாப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக 2018 இல், சுகாரதார காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 25.6 மில்லியனிலிருந்து 27.9 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதற்கு, மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளின் சுகாதார காப்பீட்டு திட்டம் (CHIP) ஆகியவற்றால் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதே முக்கிய காரணமாக இருந்தது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் பின்வரும் இரண்டு கொள்கை மாற்றங்களும் இந்த வீழ்ச்சிக்கு பங்களித்தன: மருத்துவ உதவிக்கான தகுதியைக் கட்டுப்படுத்தும் புதிய அரசு விதிமுறைகளை ஊக்குவித்தல், மற்றும் மருத்துவ உதவி அல்லது CHIP க்கு விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு "பொதுச் செலவுதாரர்கள்" ஆகிவிட்டார்கள் என்ற அடிப்படையில் கிரீன் கார்ட் (ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் மற்றும் சலுகைகள் பெறவும் அனுமதிக்கும் பத்திரம்) மறுக்கப்படுவதாக அச்சுறுத்துவது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அறிக்கை, அமெரிக்காவின் பொருளாதார சமத்துவமின்மையின் பேரழிவுகரமான பரிமாணங்களையும் உறுதிப்படுத்தியது. ஆண்டு வருமானம் 25,600 டாலர் வரை கொண்ட கீழ்நிலை ஐந்தாவது பிரிவு குடியிருப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த வீட்டு வருமானத்தில் 3.1 சதவிகித வருமானம் மட்டுமே உள்ளது என்றாலும், முதல்நிலை ஐந்தாவது பிரிவினர் 130,000 டாலருக்கு அதிகமான ஆண்டு வருமானத்துடன், பாதிக்கு மேற்பட்டவர்களாக, அதாவது 52 சதவிகிதமாக உள்ளனர். முதல் 5 சதவிகிதத்தினர், 248,700 டாலர் ஆண்டு வருமானத்துடன் மொத்தத்தில் 23.1 சதவிகிதமாக உள்ளனர்.

அதிகரித்துவரும் சமத்துவமின்மை, தொடர்ச்சியான வறுமை, உழைக்கும் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருதல், வசதியான ஓய்வு பெறுவது பற்றிய கனவு மறைந்து போதல்: இதுவே, அமெரிக்காவை மீண்டும் “உயர்ந்தது” ஆக மாற்றுவதற்கான பாதை என்று ட்ரம்ப் மீண்டும் பாராட்டியதன் உண்மை நிலையாகவுள்ளது. கேள்விக்குரிய காலப்பகுதியின் பாதியில் வெள்ளை மாளிகையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஜனநாயகக் கட்சியினரும் எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை. வாஷிங்டனில் உள்ள இரு கட்சிகளும் ஒரே ஆளும் உயரடுக்கிற்குள் போட்டியிடும் கன்னைகளாக இருக்கின்றன, அவை இரண்டும் இந்த சமூக தீமைகளுக்கு மூல காரணமான அமெரிக்க முதலாளித்துவத்தை பாதுகாக்கின்றன.

GAO அறிக்கை என்பது உண்மையில், வறுமைக்கும் அகால மரணத்திற்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்த காங்கிரஸால் நியமிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, இந்த “உரிமை” திட்டங்களுக்கான செலவை நீண்ட காலத்திற்கு குறைப்பதற்கு, இரு கட்சிகளின் ஆதரவுடனான காங்கிரஸின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றால் உருவான ஆயுட்கால மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

GAO அறிக்கை வறுமைக்கும் அகால மரணத்திற்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய காங்கிரஸால் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அதன் நோக்கம் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார காப்பீட்டில் ஆயுட்காலம் மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்வதாகும். மக்கள்தொகை உரிமையுள்ள இந்த திட்டங்களுக்கான நீண்டகால செலவினங்களைக் குறைப்பதற்கான இரு கட்சிகளின் காங்கிரஸின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்த அறிக்கை கருதப்பட்டது.

அறிக்கையின் ஆசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் காங்கிரஸில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சங்கடமாக இருக்கக்கூடும் என்பதை நன்கு அறிவார்கள். “வருமானம் அல்லது செல்வம் எந்த அளவிற்கு நீண்ட ஆயுளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் பகுப்பாய்விலிருந்து தீர்மானிக்க முடியாது” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது] என்பதை சேர்த்துக் கூறி, வறுமைக்கும் அதிக இறப்பு விகிதங்களுக்கும் இடையில் ஒரு “புள்ளிவிபர இணைப்பை” மட்டுமே அவர்கள் கண்டறிந்ததாக அறிவிக்க அவர்கள் விரைகிறார்கள்.

ஏழைகளின் ஆயுட்காலம் குறைவாக இருந்தாலும், “அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால், தனிநபர்கள், அதிலும் குறைந்த வருமானம் அல்லது கல்வி போன்ற குறைந்த ஆயுளுடன் தொடர்புடைய காரணிகளைக் கொண்ட தனிநபர்கள் கூட நீண்டகாலம் நீண்டகாலம் வாழக்கூடும், ஓய்வு பெறுவதில் குறைவான நன்மைகளைப் பெறுபவர்கள் சமூக பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு நிகர திட்டங்களை முதன்மையாக நம்ப வேண்டியிருக்கும்” என அறிக்கை எச்சரிக்கிறது. இதை எளிமையாகச் சொல்வதானால: இந்த திட்டங்களை நீக்குவதற்கான திட்டங்கள் பரவலான எதிர்ப்பை உருவாக்கக்கூடும், ஏனென்றால் மில்லியன் கணக்கானவர்கள் அதிகரித்தளவில் நம்பியிருக்கும் உயிர்நாடியாக அவை இருக்கின்றன.

இந்த அடிப்படை சமூக முரண்பாடுகளே தொழிலாளர் வர்க்கம் வரலாற்றுப் போராட்டங்களுக்குள் நகர்ந்து கொண்டிருப்பதன் பின்னணியாகும். ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் ஃபியட் கிறைஸ்லரின் 155,000 தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் போன்ற எந்தவொரு பெரிய தொழில்துறை வேலைநிறுத்த நடவடிக்கையும் 1930 களில் இருந்து அமெரிக்காவில் காணப்படாத அளவிலான வர்க்க மோதல் வெடிப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்.

அமெரிக்க முதலாளித்துவம் பல தசாப்தங்களாக இத்தகைய அரசியல் வெடிப்புக்கான மூல ஆதாரங்களைக் குவித்து வருகின்றது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தேக்க நிலையில் உள்ளது. உலகின் பணக்கார நாட்டில் டஜன் கணக்கான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் பணிபுரியும் இளைஞர்கள், பெற்றோர்களையும் தாத்தா பாட்டிகளையும் விட மோசமாக வாழும் அமெரிக்கத் தொழிலாளர்களின் முதல் தலைமுறையாக உள்ளனர். GAO அறிக்கை காட்டுவது போல், இந்த பழைய தலைமுறையினரின் உயிர்வாழ்க்கையும் பெருகிய முறையில் கடினமாக இருக்கும்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் தடுக்க ஆளும் உயரடுக்கு பயன்படுத்தும் பழைய அமைப்புக்களிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளவதே தீர்க்கமான கேள்வியாகும். இதன் அர்த்தம், பெருநிறுவன முதலாளிகளின் ஊழல் மோசடிகளால் நடத்தப்படும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதும், மற்றும் தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் குழுக்களை அமைத்தல் என்பதுமாகும். மேலும், உலகெங்கிலுமுள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்களை தூண்ட முற்படும் தொழிற்சங்கங்களால் வழிநடத்தப்படும் தேசியவாத கண்ணோட்டத்திலிருந்து உடைப்பதும் இதன் அர்த்தமாகும்.

முதலாளித்துவம் என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளிகளை திறம்பட எதிர்த்துப் போராட முடியாது. எனவே, இந்த போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாள வர்க்கத்திற்கென ஒரு சொந்த கட்சியை சர்வதேச அடிப்படையில் ஒழுங்கமைத்து, ஒவ்வொரு நாட்டிலும் சோசலிசத்திற்காக போராட வேண்டியது அவசியமாகும்.




Read more...

Tuesday, September 17, 2019

போலிச் செய்திகளை தடுக்க புதிய சட்டம் - நீதி அமைச்சர் தலதா அத்துகோரல

போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல, தெரிவித்தார்.

இரத்தினபுரி - பலாங்கொடையில், நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் 13 வருட கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளதெனவும் சட்டம் பற்றிய தெரிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அறியாதவர்களே தவறுகளை செய்வதாக தெரிவித்த அவர், போலிப்பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்டமூலம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் அதனூடாக பொய்பிரசாரம் செய்வோருக்க எதிராககட கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் இரத்தினபுரியிலுள்ள பாடசாலையொன்றுக்கு வந்த சிறுவர்கள், ஹெல்மட் அணிவித்து அனுப்பட்டிருந்தனர் என்றும் இவை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயல்கள் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறானச் செயற்பாடுகளை முகநூலில் பிரசாரம் செய்வதால், அரசாங்கம் நெருக்கடிக்கு ஆளாகபோவதில்லை எனவும் தெரிவித்தார்.

அதேபோல், அண்மையில் கல்தொட, தியவின்ன பகுதியில் வசிக்கும் சிலர் கம்பியொன்றின் ஊடாக பாலத்தை கடக்கும் காணொலிகள் வெளியிடப்பட்டிருந்தென தெரிவித்த அவர், அந்த பிரதேசக்கு 4 பாலங்கள் அமைத்து கொடுக்கபட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை எனவும், தற்போதைய அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை வழங்கிவிட்டு அதற்கான பிரதிபலன்களையும் அனுபவித்து வருகிறது என்றார்.

Read more...

கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை மற்றும் அரசர்கேணி ஆகிய பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன் டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் பளை அரசர் கேணி பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்;பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுட்டுள்ளனர்.

இன்று (17) காலை; 11.30 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர் குறித்த பகுதிகளின் நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், கண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் குறித்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் அரச காணிகள் என்பன உள்ளடங்கலாக வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 28 வரையான பணியாளர்களை கொண்டு நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முன்னாள் பொலீஸ்மா அதிபரின் அடிப்படை உரிமை மீறல் மனு வழக்கு நவம்பர் 13 இல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தான் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டமை சட்டத்துக்கு முரணானது எனவும், அதன் ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் குறித்த உத்தரவை இரத்து செய்யுமாறும் தன்னை பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக இடைக்கால தடை ஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரியே பொலிஸ் மா அதிபர் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read more...

ரணில், சஜித், கரு தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரே களமிறங்குவார்? - பசில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது.தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்..

தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. ஐ.தே.க சார்பில் எவர் களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல. ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்காக சாத்தியக் கூறுகளும் காணப்படுகிறது, எவ்வாறாயினும் அவற்றை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக இருந்தால் தான் போட்டியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்று குறிப்பிடுவது வெறும் தேர்தல் பிரசாரமேயாகும். தற்போதைய ஜனாதிபதியும் இதனையே குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தார். ஆகவே இவ்விடயத்தில் மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Read more...

தான் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகார்தை ஒழிப்பேன் - கரு ஜயசூரிய

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த சில வாரங்களில் மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னை தொடர்பு கொண்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சில முக்கிய விடயங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு என்னை தொடர்பு கொண்டவர்கள் கோரியதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினுள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தை போக்கி கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டிற்கு தேவை என்பதால், குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் அணிகளுடன் மாத்திரமே தான் இணைந்து செயற்படவுள்ளதாக சபாநாயகர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மூவர் பதவிப் பிரமாணம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த ஷாந்த பண்டார, டி.பி.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் இன்று (17) இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

Read more...

நாடு பிளவுபடாமல் காப்பது 13 ஆவது திருத்தச் சட்டமே!

13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் நாடு கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸா தேரர் குறிப்பிட்டார்.

நவீன பத்துச் சட்டங்கள் குறித்த பொது ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவதில் பங்கேற்றபோதே தேரர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 13 ஆவது திருத்தத்தின் சில பிரிவுகள் நாடு பிளவுபடுவதைத் தடுத்துள்ளது என்றும், மேற்கத்தேய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளில் தொடர்பில் மிகக் கவனமாகச் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய பிக்கு சங்கத்தின் பொது ஆலோசனையைத் தொடர்ந்து பொது மக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்காக இடம்கொடுத்துவிட்டுப் பின்னர், புதிய பத்துச் சட்டங்களை செயல்திறன் ஆணையக அறிக்கை இன்று வெளியிட்டது.

மகா சங்கத்தினரின் ஆதரவின் கீழ் இந்நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

Monday, September 16, 2019

உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துகிறான் கஞ்சிப்பான இம்ரான்!

பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக கோஷ்டியின் முக்கிய நபர் கஞ்சிப்பான இம்ரான், தனது தந்தை மற்றும் சகோதரன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளான்.

சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களை விடுதலை செய்யும்வரை தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இம்ரானுக்கு உணவு எடுத்துச்சென்ற பிளாஸ்ரிக் வாளியில் மறைவாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் குறித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனியாக விசாரணை ஆரம்பித்துள்ளது.

குறித்த வாளிக்குள் மறைவிடம் ஒன்றைத் தயாரித்த தாெழிற்சாலை குறித்தும் பொலிஸார் தேடிவருகின்றனர். இலகுவில் கண்டுபிடிக்க இயலாதவகையில் இந்தத் தொலைபேசிகளும், 'சார்ஜர்'களும் வைக்கப்பட்டிருந்தன எனத் தெரியவருகின்றது.

Read more...

இலங்கையின் குறியீடான தாமரைக் கோபுரம் இன்று திறந்து வைக்கப்பட்டது!

தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமான தாமரை கோபுரம் இன்று (16) திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்திறப்பு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிரு

சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கடனிலிருந்து 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2012 இல் தொடங்கப்பட்டது.

Read more...

நீங்கள் அதே கதிரையில் உட்காருங்கள்.. ஒன்று, வேட்பாளர் சஜித் எனச் சொல்லுங்கள்!

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமித்துவிட்டு, ரணில் விக்ரமசிங்கவுக்கு அதே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருக்குமாரே நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், ரணில் விக்ரமசிங்கவினதும், கரு ஜயசூரியவினதும் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என்பதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடி குறித்து நேற்று (15) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com