Monday, July 15, 2019

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்


சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேவிட் அஸ்மன் மற்றும் நான்கு பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர்.

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் மத்திய படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய படைகளின் கட்டளைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வாதுகேயுடன் இவர்கள், பிரதானமாக, இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், சிறிலங்காவின் முப்படைகளுடன் பிரித்தானிய இராணுவம் நடத்தவுள்ள ‘மனிதாபிமான உதவி மற்றும் இடர் மீட்பு’ ஒத்திகை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.




Read more...

அம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

2017ம் ஆண்டு திவிநெகும சந்தை நிகழ்வு மாவட்டச் செயலகத்திற்கு அருகில் ஒழுங்கு செய்யப்படிருந்தது அதற்கான தளபாட வசதிகள் கோயிற்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் இருந்து பெறப்பட்டு அதற்கான செலவாக 98000 ரூபாய் நிதி திவிநெகும திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த 98000 ரூபாய் நிதி கோயிற்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் பெறப்படாமல் சமுர்த்தி அதிகாரி ஒருவரின் நெருங்கிய சகாவின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 98000 ரூபா நிதி கோயிற் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் தளபாடங்கள் என்பவற்றை காட்டியே பெறப்பட்டுள்ளதாகவும். கோயிற் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் ரூபா 2000 மட்டுமே சமுர்த்திக்கு பொறுப்பான மாவட்ட அதிகாரியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 96000 ரூபா நிதிக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளதாக அக்கிராம மக்களும் கிராம அபிவிருத்தி சங்கமும் விசனம் தெரிவித்துள்ளனர்

மேலும் இவ் ஊழல் மோசடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ரணில் கையாலாகாதவராம். ஜே.ஆர் ஆக இருந்திருந்தால் ஜேவிபியை தடை செய்திருப்பாராம் !

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஜேவிபி செய்ய வேண்டியது மற்றவர்களுக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதை விட ஒரு கட்சியாக நாட்டை முன்நேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாகவது:

"ஜேவிபி அவர்களின் குற்றங்களை மறைக்க நாலாபக்கமும் விரல்களை நீட்டுகிறார்கள்"

இப்போது, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களில் அதிக அரசியல் தொடர்புகள் யாருக்கு உள்ளன? நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் ஒருவர் மட்டுமே.அது இப்ராஹிம். ஜேவிபி பட்டியலில் இருந்து இப்ராஹிம் தேர்தலுக்கு வந்தார்.

இப்ராஹிமின் வீட்டில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று போலீசார் கொல்லப்பட்டனர். வேறு என்ன? இப்ராஹிமை சட்டத்தின் முன் சுத்தம் செய்ய முடியாது. இந்த உண்மையை மறைக்க ஜேவிபி போராடுகிறது.

ஜே.வி.பியின் தேசிய பட்டியல் எடுப்பவர்களில்நாடாளுமன்றத்திற்கு வர தயாராகி இருந்த ஒருவரே இவ்வாறு மிகப்பெரிய சந்தேக நபராக மாட்டிக்கொண்டுள்ளார்.

இது அவர்களின் வேலை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. அவர்கள் குழந்தையாக செயற்பட முடியாது.

ரணில் என்பதால் நல்லது.ஜே.ஆர் போல இருந்திருந்தால் மொத்தமாக எல்லாம் சேர்த்து ஜேவிபியை தடை செய்திருப்பார்.83 ஆம் ஆண்டில் தடை செய்தது இது போன்ற ஆதாரங்களை கொண்டே.

எனவே அவருக்குத் தெரியும், தனக்குத் தெரியும் என்று யாரும் அவரை நோக்கி விரல் காட்ட மாட்டார்கள், கட்சியின் மிக உயர்ந்த மட்டத்தில் நீங்கள் யாருடன் இருந்தீர்கள் என்று ஜே.வி.பி சுயவிமர்சனம் செய்ய வேண்டும். ஒரு வார்த்தையில் கூறினால் அவர்களின் மக்கள் யார்?

நாங்கள் அரசியலை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். நாமும் எல்லாவற்றையும் அறிவோம். தெரியாத நபர்கள் தேசிய பட்டியலில் சேர்ப்பதில்லை. என குறித்த பிரமுகர் தெரிவித்தார்.

மேலும் அவர், "ஜே.வி.பி மக்கள் மக்களுடன் கூட்டுறவு கொள்ளலாம். அரசியல் எதுவாக இருந்தாலும் நாங்கள் கோபப்பட விரும்பவில்லை. எனவே, எனக்கு பெயர் வைக்க வேண்டாம். இந்த கதையை மட்டும் சொல்லுங்கள்" என்றார்.

Read more...

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 9 - யஹியா வாஸித்

யாரிந்த முகம்மது நபி- இவர்ர தொழில் என்ன ?

எண்ட ஆண்டவன் ஒரு கில்லாடிதான். இந்த ஒலகத்துல, எங்க,எந்த மூலையில சொல்லுக் கேட்காத, ஒண்டுக்கும் அடங்காத மனுசனுகள், மனுஷ மிருகங்கள் இருக்கானுகளோ, அங்க நீ போகணும், நீ அங்க போய்
அவனுகள திருத்தோணும். This is your duity.Yes, you must go there.

எந்தவித கல்வியறிவும் இல்லாத, ஒரு சுத்த சூனியத்தை, அறிவிலிகள் வாழ்ந்த மக்காஹ் நகருக்கு அனுப்பி, ஏய் முஹம்மதே, நீ அவர்களை மனிதனாக்கோணும்.this is my order.,கட்டளை.

பிறந்த பெண்குழந்தைகளை சுடு மணலில் உயிரோடு புதைப்பது, பல தார மணம், மது, கொலை,வழிப்பறிக் கொள்ளை என வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தை திருத்தோணும்.

மனுஷன் நிண்டு, நிமிர்ந்து, திருத்தினார். ரொம்ப சிரமங்களின் மத்தியில் திருத்தினார். மெள்ள, மெது மெதுவாக திருத்தினார். கத்தி, கோடாலி, கம்பு, தடி ஆவேசப்பேச்சு எதுவுமின்றி திருத்தினார்.

எந்த கெடுபுடியும் இல்ல. அடியுழுந்தது, விரட்டி, விரட்டி கல்லடித்தார்கள், மேஜிக் மேன், கண்கட்டி வித்தைக்காரன் என்று ஊர விட்டே தொரத்தினார்கள்.

அல்லாஹ் எண்டு ஒருத்தன் இருக்கான், அவன் கண்ணுக்கு தெரியாதவன், எனக்கு அறிவித்தல்கள் தந்து கொண்டிருக்கின்றான். அவன் சொல்றதத்தான் நான் ஒங்களுக்கு சொல்லுறன் எண்டெல்லாம், இவர் சொன்ன
கதைகளை கேட்க எந்த மக்காஹ் வாசியும் தயாராயில்லை.

ராவோட ராவா ஆள விரட்டினார்கள், முஹம்மது நபி அவரை நம்பிய சிலருடன் மதீனாவுக்கு தப்பி ஓடினார்.

அந்தக்காலத்துல ஆம்புளைகளை விட பொம்புளைகள்ற வீதாசாரம் மிக அதிகமாக இருந்தது. அதனால் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்தது. அவளும் மனிசிதானே, அவளுக்கும் காமம் இருக்கத்தானே செய்யும், ஆம். பாவம்.

பண முள்ளவன் வசதி உள்ளவன் ரெண்டு பொண்டாட்டிய, மூண்டு பொண்டாட்டிய வச்சி சோறு குடுக்கிற தைரியமிருந்தா வச்சிக்கோ எண்டார். ஆம் விபச்சாரம் அடியோடு குறைந்தது.

பணமுள்ளவன் வச்சிக்கிட்டான். கருணாநிதி சின்ன வீடு வச்சிக்கிட்டா அது திறமை, எம்ஜீஆர் பல வீடுகள் வச்சிருந்தா அது பசுமை, நம்ம எம்பிமார், மந்திரிமார், கொஞ்சம் சொத்துபத்து உள்ளவன், மலையகங்களில் மூணரை கோடி, நாலு கோடிகளுக்கு வீடுகள் வாங்கி பெரிய வீடுகளில், சின்ன வீடுகளை வச்சிருந்தா அது கெத்து, பாவம் இந்த சின்ன வீடுகளின் குழந்தைகள்.

நோ சின்னவீடு, நீ பெரிய வீடாகவே வச்சிக்கோ, உன்னால் முடிந்தால் வைத்துக்கொள். களவுல அங்கொண்டும், இங்கொண்டும் வச்சிக்கிட்டு, அவள்ற புள்ளைக்கும் வாப்பா இல்லாம, இவள்ற புள்ளைக்கும் வாப்பா இல்லாம, கள்ள பேர்த் செர்ட்டிபிகட் செய்துக்கிட்டு, வேருத்து விறுவிறுத்து ஒளிச்சி திரியிரத்த விட, this is my first wife, she is second one.Thats all. தைரியமாக சொல்லு என்றார்.

பக்கா ஜெனுவினிட்டி, ஆண் பிள்ளைகள் பொறந்த உடன் சுன்னத்து வை. ஆண் குறியை இழுத்துவச்சு ஒரு அங்குல அளவுக்கு வெட்டி உடு. அதை வெட்டவும் கத்தி பாவிக்கச் சொன்னார்.

அதை வெட்டாம விட்டா அவசரத்துக்கு நீ சிறுநீர் கழித்துவிட்டு ஓடும் போதும், சிறுநீர் கழித்து விட்டு கழுவாம உடும் போதும், அந்த கழிவுநீர் கிருமிகள் ஆண் குறியின் நுனியில் தங்கி நோயை ஏற்படுத்தும். அது அழுகிப்போகும்.

இது உடலுறவுக்கு பாரிய தொந்தரவைத்தரும். அப்புறம் சோனவன் மலட்டுமெசினை எங்க பெண்களுக்கு பொருத்திட்டான் எண்ட எந்த தொந்தரவும் வராது. சோனவனுகளோட அந்நிய பெண்கள் வெளியில பாயிர
பிரச்சனையும் இருக்காது, சிறிலங்காவின் ஏனைய சமூகத்தவரின் சனத்தொகை பரம்பலும் கூடும். சோனவன் ஸீரோ பெர்செண்டேஜ் ஆயிடுவான்.

காத்தான்குடி வரவேற்கின்றது, அதாஉல்லாஹ் மண்டபம், அமீரலி விளையாட்டரங்கு, ஹிஸ்புல்லாஹ் ஹோள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஊரா ஊட்டு கோழியறுத்து வாப்பா பேருல கத்தம், விருந்து கொடுக்கிற சோனவனே இருக்க மாட்டான்.

இவர்கள் எல்லாம் மவுத்தாகி ஆறுக்கு, மூணரடி குழியில பொதைக்கும்போது, இதுகளையும் கட்டி அணைத்து எடுத்து செல்ல அனுமதிப்பேன் என, எந்த இடத்திலும் எண்ட அல்லாஹ் கூறவில்லை. இஸ்லாத்தில் எந்த இடத்திலும் போது சொத்துக்களில், உங்கள் தனிப்பட்ட பெயர்களைப்போட்டு தம்பட்டம் அடியுங்கோ என்று சொல்லவே இல்லை.

இவனுகள்ற சனத்தொகை கூடினதாலதானே ஊரெல்லாம் பெயர் பலகைகளும் , தெருவுக்கு நாலு பள்ளிவாசல்களும்.

இது மாதிரி ஆயிரம் வழிகளை அந்த படிக்காத மேதை சொன்னார். மேலும் ரெண்டு கைகளையும் நன்றாக உயர்த்தி கமுக்கட்டுக்குள் உள்ள மொத்த மயிரையும் வாரா வாரம் வழிச்சு உடு. அந்த கமுக்கட்டு வாசம் / நாத்தம் பறந்து போகும். அப்புறம் மனைவியை அருகில் அழை, அவள் நூறு தரம் உன்னை நெருங்குவாள், அழைப்பாள், உறங்குவாள், உணருவாள், புள்ளகள பெத்து தள்ளுவாள்.

ஏழைகளுக்கு இரங்கு, வட்டிக்கு பணம் வாங்காதே, கொள்ளை லாபம் உழைக்காதே , உழைப்பாளியின் ஊதியத்தை அவனதுவியர்வை வற்ற முதலே கொடுத்து முடி.

ஆசைப் படாதே, ஆசைப்படாதே, ஆசைப்படாதே, இந்த உலகில் ஓரு தூசும் உனக்கு சொந்தமில்ல. என்றெல்லாம் அந்த முஹம்மது நபி சொன்னது அந்த அறிவிலிகளுக்கு புடித்திருந்தது. பக்கென்று பற்றிக்கொண்டார்கள்.

ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு முன்னூற்றி பத்துக் கோடியான கதைய பொறவு பாப்பம். இப்ப நாங்க இந்த நாட்டுக்கு வந்த மிச்ச கதைய பாப்பம்.

இந்த முகம்மது நபி பற்றி, வழிப்போக்கர்களும், வியாபாரிகளும் நாடுநாடாக கதை சொல்ல, அவரை பார்க்கவும், தரிசிக்கவும், சண்டை புடிக்கவும் என வந்த பலர் இவரது மார்க்கத்தை, way of life ஐ பற்றி புடித்துக்கொண்டனர். அவ்வாறு சூடான், சோமாலியா, எஜிப்த், துருக்கிஇலிருந்து வந்தவர்கள் எல்லாம் இவரை இறைவனின் தூதர் என நம்பினர். இவரது மார்க்கத்தை பின்பற்றினர்.

இவர்கள் போகுமிடமெல்லாம் உண்மை, நேர்மை என்ற ஒரே பிடிவாத்தத்துடன் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு நாடுநாடாக, வியாபார நோக்கமாக, குறிப்பாக வாசனைத்திரவியத்துக்காக வந்தவர்கள் பலர் சிறிலங்காவில் காலி தங்கல்ல, ஹம்மான்தொட்டே பகுதிகளில்தான் இறங்கினர்.

அப்பகுதியில் உள்ள சிங்கள மக்களின், அன்பும், அரவணைப்பும், விருந்தோம்பலும் அவர்களை கவர, பலர் அங்கேயே குடியேறினர். சிங்களப் பெண்களை திருமணமும் செய்தனர்.

இப்போது சிறிலங்காவில் இருந்து மாணிக்ககல், வியாபாரத்துக்காகவும், ஏனைய வியாபாரத்துக்காகவும் தன்சானியா, மடகாஸ்கார், நைஜீரியா, போன்ற நாடுகளுக்கு சென்ற பல சோனக வியாபாரிகள், கடந்த பத்துவருடங்களாக அங்கேயே வசிக்கத்தொடங்கி விட்டனர். இது உலக நியதி.

வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் பெயர் பதிவுகளையும், வீட்டு உறுதிகளையும் தோண்டி துருவிக்கிட்டுபோனால் அது ஒரு முதியான்சலாவிலோ, உடகெதரவிலோதான் போய் முடிகின்றது.

சோனவன் யாரும் இங்கு வானத்தில் இருந்து வந்து குதிக்கவில்லை. வேடுவர் தவிர மற்ற எல்லா மத, மார்க்கத்தவர்களும் எவ்வாறு இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்தார்களோ, அவ்வாறே முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஹம்மன்தொட்டை, தங்கல்லவில் வந்து இறங்கிய வர்களின் வாரிசுகள்தான் ஸ்ரீலங்கா முழுக்க வலம் வந்துள்ளார்கள்.

ஹம்மான்தொட்டை - கதிர்காமம் -கதிர்காமம் ஊடாக பிபில கொட்டபோவ கிராமத்தை அடைந்தவர்கள்தான் அதிகம். இந்த கொட்டபோவேயில் இருந்துதான் நிறையப்பேர் அம்பாறை - கொண்டைகட்டுவான் ( கொண்டைவெட்டுவான் ) ஊடாக சம்மாந்துறை -கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று ), கரைவாகுப்பற்று - கல்முனைஇல் குடியேறியுள்ளனர்.

காரியப்பர் பெமிலி, கொட்டபோவையில் இருந்துவந்த கொஞ்சம் சூடான், கொஞ்சம் இந்தோனேசியா கலந்த இவர்களுக்கும், ஜாதி வெறியால் நசுக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களுக்கும் எப்போதுமே
ஒரு ஊடலும், கூடலும் நடந்து கொண்டே இருக்கும். அதுதான் இன்றும் தொடருகின்றது.

சாய்ந்தமருது, கரைவாகுப்பற்று, கல்முனைக்குடியில் வாழும் அனைவருமே சோனவன் but இவர்களுக்குள்ளும், தினமும் ஒரு முறுகல் நடந்து கொண்டே இருக்கும். அந்த முறுகல் இந்தியாவில் இருந்து கள்ளதோணி
ஏறி வரும்போது இடையில் சாதி மாறி, மதம்மாறி யதால் ஏற்பட்ட முறுகல்.

கரைவாகுப்பற்று என்கிற, கல்முனை என்கின்ற பகுதியில் உள்ள இந்த முஸ்லிம் ஆண், பெண்களையும் அவர்களது தொழில், கிராம அமைப்புகளையும் தான்சானியாவிலும், சூடானிலும் நேரடியாக காணலாம். அதே கெத்து, அதே முறுக்கு, அதே புத்திசாலித்தனம்.

பிபில கொட்டபோவையில் இருந்தவர்கள், குடியேறியவர்கள் அனைவருமே முஹம்மது நபியின் வழிகாட்டலில் வாழ்ந்த , வளர்ந்த சஹாபாக்களின் நேரடி வாரிசுகள், வழித்தோன்றல்கள், எஜிப்து, சூடான், தான்சானியா, துருக்கி நாட்டவர்கள். இவர்கள் அனைவரும் வாசனைத்திரவிய வியாபாரத்துக்காக வந்தவர்கள். இங்குள்ள சிங்கள, தமிழ் பெண்களைதிருமணம் செய்து சிறிலங்கவிலேயே வாழ்ந்தனர்.

இவர்கள் குட்டி, குட்டி ஆறுகள் , குளங்கள், பாரிய காடுகள், மரச்சோலைகள் உள்ள இடங்களில் குடியேறியதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்களுடன் மிக அன்பாகவும், நீண்ட நட்புடனும் வாழ்ந்துள்ளனர்.

இவர்களது வாழ்க்கைமுறை, மக்களுடன் பழகும் விதங்களைப் பார்த்து சிங்கள மன்னர்களும், பரம்பரை பணக்காரர்களும், காணிகளையும், நிலங்களையும் வழங்கி அவர்களை அங்கேயே குடியேற விட்டனர்.

ஆம், ஹம்மான்தொட்டே, கதிர்காமம், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஒலுவில், கல்முனை (கடத்கரைப்பள்ளி ), காத்தான்குடி தொடக்கம் கண்டி, கம்போல பேருவளை, பலாங்கொட(ஜெய்லானி ) ஊடாக மன்னார்,
ஜாவகர்சேரி (சாவகச்சேரி , வெள்ளைமணல் என ஸ்ரீலங்கா முழுக்க வாழ்ந்துள்ளனர்

இவ்வாறு வாழ்ந்தவர்கள் மரணித்தபின், அப்போது இருந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் பள்ளிவாசல்களையும், அடக்கஸ்தலங்களையும் அமைத்தனர்.

பின்னாளில் அமெரிக்க நாகரீகம், மேற்கத்தேய நாகரீகம், இஸ்ரேல் நாகரீகம், அரபு நாகரீகம், எகிப்து யுனிவெர்சிட்டி நாகரீகம், மதீனா யுனிவெர்சிட்டி நாகரீகம், இந்திய அரபு மதரசா நாகரீகம் எல்லாம் சிறிலங்காவுக்குள் புகுந்து, இப்போது தேரேர்கள் பலரது கையில் சிறிலங்காவில் உள்ள சோனக நாகரீகம் தொய்யோ தொய்யென தொய்கிறது. ஆனால் என்ன ஒரு வெட்கக்கேடு 2000 / 2500 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியனையும், சாக்ரட்டீசைய்யும், கான்பூசையும், திருவள்ளுவனையும், புத்தனையும், நாங்கள் படித்து புசித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு சிறு துளியாவது என் அப்பன் முஹம்மது நபியை பற்றியும், அவனது மார்க்கத்தையும் பற்றி படிக்காமல், எவ்வாறய்யா மொத்த சோனவனும் டம்மிப்பீசு என்கிறீர்கள்.

இதற்கல்லாம் முழு முதல் காரணம் எமது அரசியல்வாதிகள்தான். அவர்களது சொந்த வாக்கு வங்கிகளுக்காக எல்லாத்துக்கும் ஆமா போட்டதன் விளைவுதான் இது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்துக்காக வாழாமல், தமது சொந்த சுக, சங்கல்பங்களுக்காக வாழும் இவர்களை எப்படி, எந்த சோப்பு போட்டு கழுவி துடைப்பது ? Think Big.

( அடுத்தவாரம் அகில இலங்கை ஜிஹாத் அமைப்பு பற்றி விரிவாக பார்ப்போம் )
( இன்ஷாஹ் அல்லாஹ் என் இறைவன் நாடினால் தொடருவேன்..... )
yahiyawasith@ymail.com
13-7--2019

Read more...

Sunday, July 14, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.

'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ரணிலின் தலையை மீண்டும் காப்பாற்றியுள்ளனர்.'

– இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

அவர் மேலும் கூறியதாவது:-

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவில்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருத்தேன். அதற்கமைய எல்லாம் நடந்து முடிந்துள்ளது.

பிரேரணை தொடர்பில் ரணிலுடன் அவரின் செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுகள் நடத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு அவரின் தலையை மீண்டும் காப்பாற்றிவிட்டனர்.

பிரேரணையை கூட்டமைப்பினர் எதிர்ப்பார்கள் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அதன்படி அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தீர்மானம் தோற்றாலும் இந்த அரசு கவிழ்வது உறுதி. அது விரைவில் நடக்கும்' – என்றார்.
இதேநேரம் 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.' என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
அவர் மேலும் கூறியதாவது:-

'அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ரணில் அரசைக் கவிழ்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லாமலாக்கி விட்டார்கள். கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தபடியால் ரணில் அரசு மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்று ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவர்களுக்குத்தான் வெட்கக்கேடு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியே ஆட்சியமைக்கும். அழிவடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு நல்ல காலம் விரைவில் பிறக்கும்' – என்றார்.

Read more...

பைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.

கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை காப்பாற்றி தருமாறு கோரி, முஸ்தபா தனது கையை பிடித்து கெஞ்சியதாகவும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தான் சம்பந்தப்படுவதற்கு முன்னர், சேவைகளை வழங்கிய 24 நிறுவனங்கள் சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இந்த விற்பனையாளர்களில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தகவல் வெளியிட்டுள்ள நிஷசங்க சேனாதிபதி,

' பல்சர் ஷிபிங் என்று ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் பணிப்பாளரே பைசர் முஸ்தபா. பல்சர் ஷிப்பிங் நிறுவனம் போலி கடிதம் ஒன்றை தயாரித்து, இலங்கை அரசுக்கு தெரியாமல், பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான ஆயுதங்களை எங்கும் அறிவிக்காமல், செங்கடலில் கப்பல் ஒன்றில் ஏற்றியுள்ளது.

இந்த ஆயுதங்கள் கடல் வழியாக கொண்டு செல்லும் போது ஈரானிய கடல் பகுதியில் அமெரிக்காவில் 7வது இராணுவ அணியிடம் மாட்டிக்கொண்டது. அவர்கள் நடு இரவில் எம்மை தொடர்புக்கொண்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக எமக்கு அறிவித்தனர்.

நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கோரி, அதிகாலை மூன்று மணிளவில் 50 ஆயிரம் டொலர்களை செலுத்தி, படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அனுப்பி, கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்களை கரைக்கு கொண்டு வந்தோம். பல்சர் ஷிப்பிங் நிறுவனத்தை தடை செய்ய முயற்சித்தார்கள்.

இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஒரு முஸ்லிம் இனத்தவருக்கு சொந்தமானது. நான் இது குறித்து முறைப்பாடு செய்ததும், அமைச்சர் எனது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கோரினார்.

இங்கு வருவதற்கு வெட்கமில்லையா என்று நான் கேட்டேன். நான் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனது அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறினேன்.

என்னை வெளியில் சந்திக்குமாறு நான் பைசர் முஸ்தபாவுக்கு கூறினேன். சட்டவிரோதமாக ஆயுதம் விற்பனை செய்தது ஒரு முறை, இரண்டு முறையல்ல, நிறுவனத்தை மூடுமாறு கூறினேன்.

எனது கையை பிடித்து கெஞ்சினார். அந்த இடத்தில் மேலும் சிலரும் இருந்தனர். சாட்சியாளர்களை நான் வரவழைக்கின்றேன். எனது அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

இலங்கையின் ஆயுதங்களை நாம் அறியாமல், பயங்கரவாதிகளுக்கு முதலில் விற்பனை செய்து உதவியரே பைசர் முஸ்தபா. கோப்புகளுடன் என்னிடம் விபரங்கள் உள்ளன. தேவையானால், நான் காட்டுகிறேன் எனவும் நிஷசங்க சேனாதிபதி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் சேனாதிபதி, சிங்கள வானொலி ஒன்று வழங்கிய செவ்வியில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Read more...

மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை கொண்டுவந்தால் அந்நாளை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவேன். மிரட்டுகிறார் மைத்திரி

மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும் நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்றும், அப்படி ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (14) முற்பகல் வளவை வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மரண தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் சிலரினது தேவையின் பேரில் பாராளுமன்றத்தில் சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதன் மூலம் வெற்றியடைவது நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமேயாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த நாட்டின் இளம் தலைமுறையினரது எதிர்காலத்தை சீரழிப்பதற்கு தான் இடமளிக்க போவதில்லையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், மரண தண்டனை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மரண தண்டனை வழங்குவது பற்றிய தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனவே மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்பதை நாட்டையும் இளந் தலைமுறையினரையும் நேசிக்கின்றவர்கள் மத்தியில் விரிவான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நோக்கத்திற்காக ஒன்றிணையுமாறு தான் அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாக குறிப்பிட்டார்

நாட்டை வளப்படுத்தி நாட்டுக்கு உணவை வழங்கும் மகாவலி விவசாய சமூகத்திற்கு அவர்கள் நீண்டகாலமாக இருந்து வந்த காணிகளின் சட்ட ரீதியான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தில் உள்ள ஐயாயிரம் விவசாயிகளுக்கு காணி உறுதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 4 சமய ஸ்தாபனங்களுக்கான கொடுப்பனவு பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

அனைத்து இலங்கையர்களுக்கும் காணி உறுதியையும் வீட்டு உரிமையையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு தமது வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.

சங்கைக்குரிய ஓமல்பே சோபித்த நாயக்க தேரர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ஹேஷான் வித்தானகே, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள்போல் த.தே.கூ செயற்படுகின்றார்களாம்! கூறுகின்றார் அங்கஜன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றுள்ளதுடன் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள் போன்று செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில் :

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவினையே வழங்கி வருகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். அவர்கள் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினையே வழங்குகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என பல்வேறு கருத்துக்களை கூறியவர்கள், நாடாளுமன்றில் எவ்வித நிபந்தனையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எமது அபிலாலைகளை விட்டுவிட்டு காணக்காளர் நியமனத்தில் நிற்கின்றனர். எமது அபிலாசைகள் இல்லாது போய்விட்டது. இப்போது இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு அந்த நியமனம் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுமென ரணில் விக்கரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

தேசிய கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்து செயற்படாது தமது நன்மைகளிற்கானவும், தமது நலன்களிற்காகவும் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

எஞ்சி இருக்கின்ற காலத்திலாவது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடியவாறு அவர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தேர்தல் நெருங்குகின்றபோது மாத்திரம் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவது போன்று காட்டி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Read more...

Saturday, July 13, 2019

முஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.

இந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் பல்வேறு சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளை சவாலுக்குள்ளாக்கியுள்ளனர். அந்தவகையில் இலங்கையில் திருமணமாவதற்கு பெண்கள் 18 வயதினை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்ற சட்டம் முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் இணங்குவதென ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

மேற்படி விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராகும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் ராஜனாமா செய்துகொண்ட பதவிகளை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வதெனவும் தீர்­மா­னித்­துள்ளனர்.

திருமணங்கள் விவாகரத்து தொடர்பான 1951ம் ஆண்டு சட்டத்தில் முஸ்லிம் பெண்கள் 12 வயதில் திருமணமாகலாம் என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவானது வயதெல்லையை 16 அல்லது 18 ற்கு உயர்த்தவேண்டும் என பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா? பீமன்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகியுள்ளது. அவசரத் தீர்வாக பிரதேச செயலகத்துக்கான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளருக்கான நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றது.

இச்செய்திகளை தொடர்ந்து இவ்வெற்றியின் முழுப்புகழும் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ராஜன் என்பவரையே சாரும் என பிரதேச இளைஞர்கள் ராஜனை தோழில் சுமந்தவாறு பட்டாசு கொழுத்தி மகிழ்துள்ளனர். மறுபுறத்தில் யாழ் மேலாதிக்க ஊடகங்கள் தீர்வுக்கான சகல புகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளார் பா.உ சுமந்திரனையே சாரும் என்று புகழ்கின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆசனம் எதிர்பார்த்து நிற்கும் ஊடகவியாபாரிகள் தற்போது சுமந்திரன் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் அதன் பின்னணி. முன்னொருகாலத்தில் சப்ரா நிதிநிறுவனத்தினூடாக ஏழைகளின் கண்ணீரை பாணமாகக்குடித்த வித்தியாதரன் அந்த துரோகத்திலிருந்து தப்புவதற்காக பிரபாரன் புகழ்பாடினார் என்பது ஊர் அறிந்த விடயம். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல்வேறு வழிகளில் மிரட்டி தனக்கு ஆசனம் பெற்றுக்கொள்ள முனைந்தார். அது கைக்கூடாத நிலையில் ஆசனம் பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் புகழ்பாட ஆரம்பித்துள்ளார்.

செயலகத்திற்கென்ற தனியான கணக்காளர் கிடைத்துவிட்டார் என்பதற்காக பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் பதில்கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு தரப்புக்களுடன் கடந்தகாலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது என்றும் அவற்றில் எத்தனை குப்பைத்தொட்டிக்கு சென்றுள்ளது என்பது தொடர்புமான வரலாற்றை புரட்டிப்பார்ப்போமானால் குறித்த பிரதேச செயலகம் அவ்வளவு இலகுவாக தரமுயர்த்தப்பட்டுவிடுமாக என்பதை ஊகித்துக்கொள்ளமுடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தலைதப்பியுள்ள யுஎன்பி அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் என்ன நிலையை எடுக்கப்போகின்றது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள்.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழி பெற்றுக்கொண்டுவிட்டோம் என கொக்கரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செம்பு காவிகள் அவ்வாறான உறுதி மொழி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலையை உருவாக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையை பற்றி மறந்து விட்டனர். ஜேவிபி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதிமொழியை பெற்றிருக்கமுடியுமா என்பதும் கேள்வியே. எனவே உறுதிமொழிக்கு காரணம் ஜேவிபி யா அன்றில் த.தே.கூ வா?

Read more...

Friday, July 12, 2019

மலேசியாவுக்கு ரோஹிங்கியா அகதிகளை கடத்தி செல்லும் மனித கடத்தல்காரர்கள் கைது !

ரோஹிங்கியா அகதிகளை மலேசியாவுக்குள் கடத்தி வந்து போலியான ஐ.நா. அகதிகள் ஆணைய அடையாள அட்டைகளை வழங்கி வந்த கும்பல் ஒன்று மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

பெனாங் மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தேடுதல் வேட்டையின் போது 5 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் இரு மனித கடத்தல்காரர்களும், ஒரு ஏஜெண்ட்டும் சிக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெனாங் மாநில காவல்துறை தலைவர் நரேனசாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெனாங் மாநிலத்துக்குள் ரோஹிங்கியாக்களை கடத்தி வரும் வேலையில் மூன்று ரோஹிங்கியாக்கள் ஈடுபட்டதாக நம்புகிறோம். விசாரணையின் போது, இவர்களில் ஒருவர் போலியான அகதிகள் ஆணைய அடையாள அட்டையை தயாரிக்கும் ஏஜெண்டாக செயல்பட்டதும் தெரிய வந்தது,” என தெரிவித்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு கடத்தி வரப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்துடன் வேலை செய்வதற்கான இடங்களை மனித கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக காவல்துறை குறிப்பிடுகின்றது.

மனித கடத்தலில் ஈடுபட்ட 3 ரோஹிங்கியாக்கள் பாதுகாப்பு குற்றங்களுக்கான சட்டத்தின் அடிப்படையிலும் கடத்தி வரப்பட்ட 2 ரோஹிங்கியாக்கள் குடியேற்ற சட்டத்தின் அடிப்படையிலும் விசாரிக்கப்படுவார்கள் என காவல்துறை தலைவர் நரேனசாகரன் கூறியுள்ளார்.

ஐ.நா. ஆவணங்களின் படி, மலேசியாவில் போர் மற்றும் வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா, சிரியா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150,024 பதிவு செய்யப்பட்ட அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ரோஹிங்கியா அகதிகள் மட்டும் சுமார் 1 லட்சத்து 33 பேர் இருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 7 பேர் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்படுவதற்காக அந்நாட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 6 ஆண்டுகளுக்கு மேலாக நவுருத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியேற்ற மாட்டோம் என சொல்லி வரும் ஆஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை மீள்குடியேற்றவதற்கான ஒப்பந்தம் ஒன்றை 2016ல அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1250 அகதிகளை மீள்குடியமர்த்துவது என்று ஆஸ்திரேலியா- அமெரிக்காவுக்கு இடையேயான ஒருமுறை ஒப்பந்தமாக கையெழுத்தானது.

அதன்படி, இதுவரை ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த 580 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில், 1250 என்ற எண்ணிக்கையை அடைவது சாத்தியமற்றது என அண்மையில் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பெடரல் தேர்தலில், ஆளும் லிபரல் கூட்டணி அரசு அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனால் படகு வழியாக வரும் அகதிகளை கையாளும் கொள்கையில் தொடர்ந்து இறுக்கமான போக்கே நடைமுறையில் இருக்கின்றது. அதே சமயம், லிபரல் கூட்டணி அரசின் வெற்றியினால் பல அகதிகள் தற்கொலை முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

Read more...

Thursday, July 11, 2019

ISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா!

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.

21/4 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் சிறிலங்கா பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்றும் அவர்கள் கூறினர்.

புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவி, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

9/11 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை, குடியியல் நீதிமன்றங்களில் விசாரிப்பதில் தாங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் என்பது, சாதாரண குடியியல் நீதிமன்ற முறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய சாதாரண குற்றம் அல்ல என்றும், அத்தகைய சந்தேக நபர்களைத் தண்டிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டதாகவும், அவர்கள் கூறினர்.

அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பாக எல்லை கட்டுப்பாட்டு தரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அமெரிக்க நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) சிறிலங்காவுக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு கோரியிருந்தார் என்பதை, அமெரிக்க குழு கண்டுபிடித்திருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளது.

Read more...

இந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்! யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.

சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆணையம் அமைந்திருக்கும் வீதியில் வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 30 பேர் அகதிகள் ஆணையம் உள்ள கட்டிடத்துக்கு எதிரே வசித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரான ஆப்கான் அகதி லிசாவுக்கு 15 வயது. தாய் மற்றும் சகோதரருடன் தற்காலிக டெண்டில் உள்ள லிசா, “எங்களதுதஞ்சக்கோரிக்கை மனு ஐ.நா.அகதிகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களிடம் பணம் இல்லை, பணம் இருந்தால் இப்படி வீதியில் ஏன் படுத்திருக்க போகிறோம்,” என கேள்வி எழுப்புகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லிசா குடும்பம் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கிறது. சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு லிசாவின் தந்தைக்கு வீடு அளித்துள்ள போதிலும் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் தந்தையுடன் வசிக்கவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சூடானிய அகதியான அப்துல் நஜிப் என்ற 35 வயது இளைஞரும் இதே நிலையை பகிர்ந்து கொள்கிறார். “நான் ஓராண்டுக்கு மேலாக இந்தோனேசியாவில் இருக்கிறேன். 10 மாதங்களாக வீதியில் தான் வாழ்ந்து வருகிறேன். அகதிகள் ஆணையத்தின் உதவிக்காக காத்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

தங்கள் குடும்பம் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர விரும்புவதாகவும், அதே சமயம் வேறொரு பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்தப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதாக லிசா குறிப்பிடுகிறார்.

“7மாத கர்ப்பிணி மனைவியுடன் மிருகங்களை போல வீதிகளில் வாழ்ந்து வருகிறோம்,” என வருந்துகிறார் அப்துல்.

இது தொடர்பாக, ஜகார்த்தாவில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையம் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

ஜூன் 2017 கணக்குப்படி, ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பின் கீழ் 5,274 தஞ்சக்கோரிக்கையாளர்களும் 8,819 அகதிகளும்இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.


இவ்வாறு மக்கள் துன்பப்படுகின்றபோதும் அவர்களுக்கு உரிய உதவி புரிய முடியாதவர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகராலயம் செயற்படுவதன் ஊடாக அவர்களது இயலாமையும் உண்மைமுகமும் வெளிப்பட்டு நிற்கின்றது. vv

படங்கள்: வீதிகளில் வசித்து வரும் அகதிகள் .




Read more...

த.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்

சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த சபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்த சபை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும், பின்னர் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதற்காக அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.

இதுவரை காலமும் இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்துவந்த கட்சிகளும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர் என்று சுயவிமர்சனம் செய்து இந்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி அமைத்தனர்.

இதன் பயனாக சர்வதேச சமுதாயத்திடமும் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிட்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.

ஆனால் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கம் எமது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களைக் காப்பதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதிலேயுமே இன்னமும் குறியாக இருக்கின்றது.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பெற்றுக்கொண்ட மக்களின் ஆணைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அதனைப் போன்றே புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.

நாளாந்த பிரச்சினை தொடக்கம் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி அதுவும் மக்களின் ஆணையை மீறியுள்ளது.

சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பிரதமரும் அதனை தனது செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

நாம் குறிப்பிட்ட எந்த விடயத்தையும் பிரதமர் நிறைவேற்றாததுடன், தனது பதவி காப்பாற்றப்பட்டதன் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் புத்தர்சிலையை வைத்து அதனை வலுக்கட்டாயமாக பௌத்தசமய வழிபாட்டிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், காணிகளை விடுவித்தல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியபோது தான் ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவித அணுகுமுறையையும் தனது பாதுகாப்புத்தரப்பினர் விடயத்தில் ஒரு அணுகுமுறையையும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. முன்னர் குற்றமிழைத்தவர்கள் எத்தகைய பதவிநிலையில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று

கூறியவர்கள் பின்னர் ஒரு சிப்பாயைக்கூட சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவருகின்றனர். அதனையே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். எனவே எமது மக்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காது என்பது தற்பொழுது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்திலும் இதய சுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிங்கள நாடு என்றும் ஏனையவர்கள் அவர்கள் தயவில் தங்கியிருக்க வேண்டியவர்கள் என்றும் பௌத்தபிக்குகள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு இன்றுவரை இந்த அரசாங்கம் பதில் வழங்கவில்லை.

வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த சில நல்ல திட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்தமுறை பிரதமரை ஆதரிப்பதற்காக நானும் எனது கட்சியின் தலைவரும் முன்வைத்த நிபந்தனையின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிய ஆதரவினாலேயே இன்றைய அரசாங்கம் இன்னமும் பதவியில் தொடரமுடிகிறது. ஆனால் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது வலுக்கட்டாயமான பௌத்தமயமாக்கலையோ அல்லது அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களையோ தடுக்க முடியாதவர்களாகவே உள்ளனர்.

இந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எமது பிரதிநிதிகளின் ஆதரவைப்பெற்றுவிட்டு எமது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசாங்கத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நல்லாட்சியூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்களையும் படையினரையும் காப்பாற்றிவிட்ட திருப்தியில் நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று இந்த நாட்டில் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் புறக்கணிக்க முயல்கின்றீர்கள்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் எமது வாக்கினை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாட்டைப் பற்றியும் விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனம் பற்றியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள்.

எனவே நீங்கள் பதவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றே. இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்பதை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும் என்றார்.

Read more...

கல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்து அரசினை கவிழ்க்கவேண்டும் என்பது கிழக்கு மக்களின் ஒருமித்த வேண்டுதலாக காணப்படுகின்றது. தமது இவ்வேண்டுதலை முன்நிறுத்தி கிழக்கு மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில், எவ்வித நிபந்தனையுமின்றி இன்று அரசுக்கு ஆதரவளிக்கவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஊடகக்கூலிகள் மூலம் கல்முனை மக்களுக்கு அம்புலி மாமா கதை கூற முனைந்துள்ளது. அவ்வாறு அரசிற்கு ஆதரவு வழங்குவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக எழுத்துமூல உறுதி மொழியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவ்வூடகங்கள் கதை சொல்கின்றது. அவ்வாறாயின் முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கடிதத்தை பகிரங்கப்படுத்துமாறு யாழ் மேலாதிக்க ஊடகங்களிடம் இலங்கைநெட் பகிரங்க சவால் விடுக்கின்றது.

இவ்விடயத்தில் கல்முனை தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காட்டிக்கொடுப்பதுடன் அவர்களை நட்டாற்றிலும் விட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கல்முனை தமிழ் மக்களுக்காக முஸ்லிம் மக்களை பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற பொருள்பட பாராளுமன்றில் பேசியதிலிருந்து கல்முனை மக்கள் சிறந்ததோர் பாடத்தினை கற்றுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை தனது அடுத்த தேர்தலுக்கான வாங்குவங்கியை பலப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் கோடீஸ்வரன் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நாளை கல்முனைக்கு உடையுடுத்து செல்லமுடியாது என்ற நிலையில், குறித்த கடிதக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நுனிக்கதிரையில் உக்காரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இவ்வாறானதோர் வேண்டுதலை அவரிடம் வைக்க முடியாது என்பதனை இலங்கைநெட் மிகவும் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்கின்றது.


Read more...

தமிழ் மக்களை ஐ.தே.க அரசிடம் த.தே.கூ அடகு வைக்கும் ஒப்பந்தம் இதோ!

அரசுக்கெதிராக ஜேவிபி யினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைய கொண்டுள்ளது என்பதை நேற்றைய மற்றும் இன்றைய பாராளுமன்ற உரைகள் தெளிவுபடுத்தியுள்ளது.

நேற்யை தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது மன்னார் மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் ஆட்கள் குடி போகாமை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமை தொடர்பில் பேசினர். இவ்விடயத்தில் வழமைபோல் கத்தி கூச்சலிட்டு தாங்கள் வீர ஆவேசப் பேச்சுக்களால் சபையை அதிரவைத்தனர்.

ஆனால் மக்களுக்கு உதவாத அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்க தயங்கும் அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதற்கான எந்த சமிக்கைகளும் காண்பிக்கப்படவில்லை. அதாவது மக்களை ஏமாற்றுவதற்காக ஆவேஷப்பேச்சுக்களை பேசும் அவர்கள் நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்து ஐக்கிய தேசியக் கட்சியயை காப்பாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நேற்று முன்தினமிரவு அலறிமாளிகையில் வாய்மூலமாக செய்து கொள்ளப்பட்டுள்ள அவ்வொப்பந்தத்தில் :

1.கம்பெரலியா வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் எஞ்சிய நிதிகளை உடனடியாக விடுவிப்பதாகவும்.

2.பனை அபிவிருத்தி நிதியத்திற்கான நிதியை விரைவில் விடுவிப்பதாகவும்

3.பிரதமரின் கீழ் உள்ள மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிபாரிசின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும்

4.வரவிருக்கும் பொது தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலுக்கான தேர்தல் செலவுகளை ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் நேற்றும் த.தே.கூ பா.உ க்கள் பாராளுமன்றில் பேசும் உணர்ச்சி பேச்சுக்களை தமது அடிவருடிகளின் ஊடகங்களில் நாளை பிரசுரித்து வழமைபோல் தமது காட்டிக்கொடுப்புக்களை மறைத்துவிடுவர்.

அந்தவகையில் இன்று பாராளுமன்றில் அரசினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள வரலாற்றுத்துரோம் பத்தோடு ஒன்று பதினொன்றாக மக்களால் மறக்கப்படும்.

Read more...

Wednesday, July 10, 2019

ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

ஜனாதிபதியின் தீர்மானம் தனது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக கூறி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

அதன்படி மனுவை செப்டம்பர் 10ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more...

Tuesday, July 9, 2019

பூஜித – ஹேமசிறிக்கு பிணை! தீர்ப்பை எதிர்த்து சட்ட மா அதிபர் மீள் பரிசீலனை மனுத்தாக்கல்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியதான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்கு எதிராக சட்டமா அதிபரால் மீள் பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more...

ஞானசார தேரர் சிங்கள, பெளத்த இனவாதி முதலில் அவரது கைகளை சுத்தப்படுத்தட்டாம் என்கிறார் வாசு!

ஞான­சா­ர­தேரர் சிங்­கள பெளத்த இன­வாதி. அப்­ப­டி­யா­னவர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவரின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதத்தை கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்­பது அனை­வ­ரதும் கோரிக்­கை­யாகும். என்­றாலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தம், இன­வா­தம் தொடர்பில் பகி­ரங்­க­மாகப் பேச முன்­வ­ரு­ப­வர்கள் ஆரம்­ப­மாக அவர்­களின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். ஞான­சார தேரர் ஒரு சிங்­கள பெளத்த இன­வாதி என்­பது யாரும் அறிந்­த­வி­டயம்.

அத்­துடன் இன­வா­திகள் என்­போர் தனது இனத்­தை­விட மற்ற இனம் கீழா­னது என எண்­ணு­ப­வர்­க­ளாவர். அல்­லது ஓர் இனத்தின் உரிமை மற்ற இனத்தின் உரி­மை­யை­விட உயர்ந்த நிலையில் இருக்­க­வேண்டும் என நினைப்­ப­வர்­க­ளாவர். அதனால் இஸ்­லா­மிய இன­வா­தத்­துக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­கள, தமிழ் இன­வா­தத்­துக்கு எதி­ராக நாங்கள் செயற்­ப­ட­வேண்டும். அவ்­வாறு செயற்­ப­டு­ப­வர்கள் சகல இனங்­களின் உரி­மைகள் தொடர்பில் நடு­நி­லை­யாக செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்டும்.

ஆனால், தற்­போது ஞான­சார தேரர் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் தொடர்பில் கதைத்து வரு­கின்றார். அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் எந்த மதத்­தி­லி­ருந்­தாலும் அதனை கட்­டுப்­ப­டுத்­த­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு. அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் எல்லை மீறும்­போ­துதான் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆனால், ஞான­சார தேரரின் கடந்­த­கால நட­வ­டிக்­கைகள் சிங்­கள அடிப்­ப­டை­வாதம் அல்­லது இன­வா­தத்தை தூண்டும் வகையிலே இருந்துவந்துள்ளன. அப்படியானவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக செயற்படத் தகுதி இருக்கின்றதா என்பதே எமது கேள்வியாகும். அதனால் ஞானசார தேரர் ஆரம்பமாக தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli.

Read more...

P625 இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சீனாவின் அன்பளிப்பான P625 என்ற அதிவேக ரோந்துப்படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 18 அதிகாரிகள் மற்றும் 92 கடற்சிப்பந்திகளுடன் வந்தடைந்த குறித்த நவீன சிறிய கப்பலை இலங்கைக்கான சீனத்தூதுவர் மற்றும் இலங்கையின் கடற்படைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். அதேநேரம் குறித்த கப்பலை வரவேற்கும் பிரமாண்ட நிகழ்வொன்று நேற்று சீனத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கடற்பாதுகாப்புக்கான பிரதான ரோந்துப்படகாக செயற்படவுள்ள குறித்த நவீன கப்பல் 1994 ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் இதன் நீளம் 112 மீற்றர்களும் அகலம் 12.4 என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட இக்கப்பலில் 100 மி.மி கலிபர்களும் 37 மி.மி கனரக ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

வான் மன்றும் கடல் எச்சரிக்கை ராடர்கள் பொருத்தப்பட்டுள்ள அதி இலத்திரனியல் மயகமாக்கப்பட்ட இக்கப்பல் இலங்கை எதிர்கொள்ளுகின்ற கடல்வழி அபாயங்களை எதிர்கொள்வதில் பாரிய பங்குசெலுத்தும் என நம்பப்படுகின்றது. குறித்த கப்பல் தொடர்பான பயிற்சி நெறிகள் 110 கடற்படை அதிகாரிகளுக்கு ஷங்காயில் வைத்து வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பயிற்சிகள் திருமை கடற்படைத்தளத்தில் வழங்கப்படவுள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் 21 ஏப்பரல் தாக்குதல்களின் பின்னர் இதனை உடனடியாக வழங்க சீன அரசு முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த அதிவேக படகானது கடல்எல்லைப்பபாதுகப்பு , கப்பல்பாதுகாப்பு , காலநிலை அவதானிப்பு , கடற்கொள்ளை முறியடிப்பு என்பவற்றில் ஈடுபடவுள்ளது.






Read more...

Monday, July 8, 2019

சிங்கள ராஜ்ய எனும் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும்..

சிங்கள ராஜ்ய எனும் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும் எனவும் ஞானசாரரின் இந்த பிரகடனத்தை சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்வாறு கையாளப்போகின்றது எனவும் கலாநிதி நல்லையா குமரகுருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள ராஜ்ய ஞானசாரரின் பிரகடனம் இன்றைய பல்லினம், பல்மதம் கொண்ட ஒன்றுபட்ட இலங்கை அரசை சிதைக்கும் சதி கொண்ட கலவர முயற்சியாகும் என்பதை இலங்கையர் ஒவொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஞானசாரரின் பிரகடனத்தை இலங்கையின் சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை சம உரிமை கொண்ட பச்சை தமிழினம் இலங்கையனாக எதிர்பார்த்து நிற்கின்றது எனவும், தமிழ் தேசிய பணி குழுவின் தலைவர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராஜ்ய பிரகடனம் ஏற்றுக் கொள்ள கூடியது என்றால் பல தமிழ் ராஜ்யங்கள் பற்றி பேச முடியும். 1815 ற்கு முன்னான சிங்கள ராஜ்யம் பற்றிய ஞானசாரரின் பிரகடனம் 1811 ஆன யாழ்ப்பாண ராஜ்யத்தையும் வன்னி ராஜ்யத்தையும் நினைவூட்டும்.

அந்த வகையில் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும். சிங்கள ராஜ்யம் பற்றிய ஞானசாரரின் பிரகடனம் இன்றைய பல்லினம், பல்மதம் கொண்ட ஒன்றுபட்ட இலங்கை அரசை சிதைக்கும் சதி கொண்ட கலவர முயற்சியாகும்.

ஞானசாரரின் பிரகடனத்தை எமது நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்விதம் கையாள போகின்றது என்பது முக்கியமானது. பிரிவினை வாதமாகவும் பார்க்க முடியும் இன சௌஜன்யத்தை குலைக்க தூண்டுவதாக கருதப்பட முடியும் எனவும் நல்லையா குமரகுருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more...

எமது காலத்தில் ஆகாயத்திலிருந்தும் குண்டு வீசப்பட்டது. ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ளவில்லை. மஹிந்தர்.

நாம் இந்நாட்டிலிருந்த யுத்தத்தை நிறைவு செய்து மக்களின் அச்சத்தை போக்கி பத்து வருடங்கள் நிறைவாவதற்கு முன்னர் மீண்டும் இந்நாட்டில் குண்டு வெடித்துள்ளது. அதன்காரணமாக மக்கள் தீவிரவாதத்தை எண்ணி பயந்து கொண்டு வாழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல், வாரியபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் இருப்பினும் மக்கள் இவ்வாறு பயப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் தமது காலத்தில் கொழும்பில் ஆகாயத்திலிருந்து குண்டுபோடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்:

இன்று நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு என்றார் மஹிந்த ராஜபக்ச.

Read more...

Sunday, July 7, 2019

சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். -பொதுபல சேனா

இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

கண்டியில் இன்று பிற்பகல் நடந்த பொதுபலசேனாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சார கூட்டத்தின்போதே இலங்கை உலமாசபை மீது ஞானசார தேரோ மேற்படி குற்றம் சுமத்தினார்.

பொதுபலசேனாவின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்துகொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.

இன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கை என்று பல பிரச்சினைகள்.

இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும்போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கவுரவமான இனம்.

இன்று எமது வீட்டிற்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டிற்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். அதில் வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.அப்படியான அடிப்படைவாதம் இது.

நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்கள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் – தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகிறது.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா , மலேசியா , இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளனர்.இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர் ஆன் உள்ளது. அந்த குர் ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
அரசுக்குள்ளே அரசு , சட்டத்திற்குள்ளே சட்டம் , நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம், வெவ்வேறான சட்டங்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுலுகமவில் இன்று தப்லீக் ஜமாத் செயற்படுகின்றது. தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது.

உலமாக்களின் கொஞ்சம் ஓட்டுக்களுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர். சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களை காண முடியாது. இனத்துக்கு தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும். ஜனநாயகத்தின் காப்பரணான பாராளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் – சிங்களவரின் பாராளுமன்றம் இன்று தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அது நமக்கான பாராளுமன்றம் வேண்டும்.

காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன. 7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும். நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன் தான் வந்துள்ளோம். எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.

இன்று சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும் என்றார் தேரர்.

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ள அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதாமதமின்றி அரசு தடைச்செய்ய வேண்டும் என தெரிவித்து 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

01. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

02. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே நீதி

03. பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல்.

04. தேசிய பாதுகாப்பு

05. தேசிய உரிமை பாதுகாப்பு

06.நிலையான பொருளாதாரம்.

07. தேசபற்றினை கொண்ட கல்வி

08.வீடமைப்பு , உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம்

09 சுகாதாரம் மற்றும் போசனை.

ஓன்று கூடலில் கலந்து கொண்டிருந்தவர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்த தேசியக் கொடிகளை சுமந்து நின்றனர். அக்கொடிகளில் சிறுபாண்மை இனங்களை பிரதிபலிக்கின்ற மஞ்சள் பச்சை நிறங்கள் நீக்கப்பட்டிருந்தது. மேலும் அவ்வாறான கொடியை தாங்கி நின்றவர்கள் கூட்டம் நிறைவடையும் தறுவாயில் மேடையிலேறி அக்கொடிகளை அசைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மக்களின் நம்பிக்கையை சிதைத்த அரசாங்கமே உடனடியாக பதவி விலகு! ஜேவிபி பாதச் சமர்.

ஐக்கிய அமெரிக்க உள்ளிட்ட உலக வல்லரசுகளிடம் நாட்டைக் காட்டிக்கொடுக்கிகின்ற , வரிச் சுமையாலும் விலையேற்றத்தினாலும் மக்களை வதைக்கின்ற, துறைமுகம், எண்ணெய் குதங்கள், நிலம் உள்ளிட்ட மக்களுக்கு சொந்தமான வளங்களை வெளிநாடுகளுக்கு பலி கொடுக்கினற அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியால் இன்று „மக்களின் நம்பிக்கையை சிதைத்த அரசாங்கமே உடனடியாக பதவி விலகு' என்ற சுலோகத்துடன் „பாதச்சமர்' ஒன்று ஆரம்பமானது.

களுத்துறை நகரத்திலிருந்து ஆரம்பமான குறித்த பாதச்சமர் மொரட்டுவையை வந்தடைந்ததுடன் நாளை அங்கிருந்து புறப்பட்டு நுகேகொடையை அடையும் என்றும் நுகேகொடையில் மா பெரும் ஜனத்திரள் மத்தியில் இலங்கை அரசை பதவிவிலகக்கோரும் மக்கள் செய்தி விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பநாந்தோட்டை எங்களது துறைமுகம் அன்று கொடுத்தார்கள் அதை அடிமாட்டு விலைக்கு..

இப்போது கொடுகின்றார்கள் கொழும்பு ஜெட்டியை இந்தியாவை சந்தோஷப்படுத்த..

புல்மோடைக்கும் நாக்கை கொங்கப்போடுகின்றார்கள் ஹகட்ட ஹகாட்டத் விலைபேசுகின்றார்கள்..

காணிகளுக்கு வேலைக் கொடுத்து விட்டார்கள்...

எண்ணைகுதங்களையும் கொடுக்கப்போகின்றார்கள்..

நாளாந்த செலவைக் கொண்டு செல்ல நாட்டின் வளங்களை விற்கும் அரசே.. வெட்டமில்லையா வெளியேறு..

மக்களின் உயிர்கள் மீது அக்கறையில்லாதிருந்த அரசாங்கம் எதற்கு எங்களுக்கு வெறியேறுங்கள் தாமதமின்றி..

மக்களை பலிக்காடாக்கள் ஆக்குவார்கள்..

தங்களுக்கு குண்டுபுகா வாகனம் கொண்டுவருவார்கள்..

பயித்தியம் ஆடுவார்கள் மத்திரிகள் அமைச்சர்கள்.. போதும் ஆடியது போங்கள் வீட்டுக்கு..

அக்க்ஷா , சோபா ஒப்பந்தங்களை கைச்சாத்திடுகின்றார்கள் , நாட்டை பலி கொடுக்கின்றார்கள் ஜேஆர் இன் வாரிசுகள்..

யுத்தத்துக்கு இடம்கேட்கிறார்கள்.. ரணிலும் மைத்திரியும் தொடை நடுங்குகின்றார்கள்..

என்று கோஷமிட்டவாறு கொட்டும் வெயிலில் ஆயிரக்கணக்கான மக்களுடன் மொறட்டுவையை வந்தடைந்த பாதச் சமரில் கலந்து கொண்டவர்கள், இப்படியே போனால் நாடு முடிந்துவிடும் விரைவில்.. அனுப்புவோம் இவர்களை விரைவில் வீட்டுக்கு என்று வானுயரக் கத்தினர்.






Read more...

ஜனாதிபதியின் பதவிக்கால ஆரம்பம் எப்போது ? வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பது 19 அமுலுக்கு வந்த திகதியிலிருந்தா? அல்லது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா? என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் 19 அமுலுக்கு வந்த திகதி இலிருந்து ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சர்வஜன வாக்கெடுப்பின்றி பதிக்காலத்தை 5 வருடமாக குறைத்தது பிழையென்றும் சுட்டிக்காட்டியதாக இன்றைய Sunday Times தெரிவிக்கின்றது.

இந்த வாதத்தின் பின்னணி அரசியலமைப்பு சட்டம் முன்னோக்கியே அல்லாது பின்னோக்கி தாக்கம் செலுத்தாது; என்பதாகும். அதாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு முன் நடந்தவைகளில் அவை தாக்கம் செலுத்தாது; என்பதாகும். இது பொதுவான நிலைப்பாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் விதிவிலக்கில்லாத விதிகளும் கிடையாது.

மறுபுறம் இலங்கையில் post enactment judicial review இல்லை. ஒரு சட்டம் ஆக்கப்பட்டபின் அதன் வலிவுத்தன்மை தொடர்பாக கேள்வியெழுப்ப முடியாது. இந்தியாவில் முடியும்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 19 இற்குமுன் ஆறு வருடம் என சரத்து 30(2) கூறியது. 19 இன் கீழ் திருத்தப்பட்ட சரத்து 30(2) இன்படி 5 வருடங்களாகும். இங்கு கேள்வி இந்த 5 வருடமென்பது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா? அல்லது திருத்தம் அமுலுக்கு வந்த தினத்திலிருந்தா? அரசியலமைப்புச்சட்டம் அமுலுக்கு வரமுன் நடந்தவைகள் மீது தாக்கம் செலுத்தாதே; என்பதாகும்.

இங்குதான் நாம் தற்காலிக சரத்துகளுக்குள் ( transitional provisions) செல்லவேண்டும். இதன் பிரகாரம் ( S 49(1)(b) குறித்த திகதிக்குமுன் ( அமுலுக்கு வந்த திகதி ) பதவியில் இருந்த ஜனாதிபதி இதனால் ( 19 வது திருத்தத்தால்) திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கேற்ப பதவி வகிப்பார்.

இங்கு அவதானிக்க வேண்டியவை:

(1) 19 இற்கு முன்பிருந்த ஜனாதிபதியின் பதவி தொடர்வதையே 19 கூறுகிறது. எனவே ஜனாதிபதியின் பதவி 19 இல் இருந்து ஆரம்பித்திருக்க முடியாது. இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற continue என்ற சொல்லிற்கு தொடர்வது என்ற அர்த்தமே தவிர ஆரம்பித்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. 19 இற்கு முன் ஆரம்பிக்காத ஒன்று 19 வரும்போது இருந்திருக்க முடியாது தொடர்வதற்கு.

(2) பதவிக்காலம் 19 ஆல் திருத்தப்பட்ட சரத்தின்படி என்று கூறுவதால் அத்திருத்தத்தின்படி பதவிக்காலம் 5 வருடம்.

ஆரம்பித்தது தேர்தல் நிறைவடைந்தவுடனாகும். எனவே, சந்தேகமில்லாமல் பதவிக்காலம் தேர்தல் முடிந்ததிலிருந்து 5 வருடமாகும்.

எனவே, இவ்வருட இறுதிக்குள் தேர்தல் நடக்கவேண்டும்.

அடுத்தது, ஆறு வருடம் மக்கள் ஆணைபெற்றவரின் பதவிக்காலத்தை மக்கள் அங்கீகாரமின்றி பாராளுமன்றம் 5 வருடங்களாக குறைக்க முடியாது; என்பது.

உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் பதவிக்காலத்தை மக்களின் அங்கீகாரமின்றி நீட்டமுடியாது; ஆனால் சுருக்கலாம்; ஏனெனில் அது அம்மக்களிடம் மீண்டும் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. எனவே மக்களின் இறைமை மீறப்படாது; என்று குறிப்பிட்டிருக்கின்றது.

Read more...

த.தே.கூ மக்களை அடகு வைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். சாடுகின்றார் அங்கஜன் ராமநாதன்.

மக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிராமசக்தி வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி என கூறும் சுதந்திரகட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைத்தபோது பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாம் கதைத்துதான் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறினர். ஆனால் பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா மீண்டும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என வினவியபோது, இங்குள்ள அனைத்து பிரதிநிதிகளும் கதைத்துதான் காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசாங்கத்தில் நல்லது நடக்கும்போது தமக்கு பங்குண்டு எனவும், கெட்டது எனில் தமக்கும் அரசுக்கும் பங்கில்லை என்றது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்ப செயற்படுகின்றது எனவும், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் செய்பாடுகளை விட்டுவிட்டு, மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஜனாதிபதி அடுத்த மாதமளவில் வருகை தரவுள்ளார். ஆளுநரும் முமையாக காணிகளை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தினை செய்துகொண்டுள்ளார்.

பலாயில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மெற்கொண்டு வருகின்றனர். அது உண்மையில் சிறந்த விடயம். ஆனால் இன்று பலாலி விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை நிப்பாட்டி மயிலிட்டி ஊடாக கொண்டுவருவதற்கு முயல்கின்றனர். அங்கால் உள்ள காணிகளை விடுவிக்கப்படாமல் வைத்திருப்பதற்கே இவ்வாறு மாற்று வீதியை அமைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான திட்டங்களிற்கு குறிப்பாக காணியை விடுவிக்காது இருப்பதற்கு எம்மவர்களேதான துணைபோகின்றனர் எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார். இவ்வாறான அபிவிருத்தி எமக்கு தேவை. ஆனால் மக்களின் முன்னேற்றத்தை தடுத்து எமக்கு அபிவிருத்தி தேவை இல்லை. எங்களுடைய காணிகள் எங்களிற்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டினார். எனவே எமது மக்களிற்கு என்ன விடயத்தை நிறைவேற்றுவோம் என மக்களிற்கு கூறி இந்த நல்லாட்சியை உருவாக்கினார்களோ, அதை நிறைவேற்றிட்டு அடுத்த விடயங்களிற்கு செல்லலாம் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இன்றைக்கு சீமெந்து தொழிற்சாலையானாலும் சரி, தையல் தொழிற்சாலையானாலும்சரி எதுவென்றாலும் வந்தால் பரவாயில்லை. 5 வருடமாக ஆட்சியமைத்த அரசு முடிவுக்கு வரப்போகின்றத. இன்றுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் அதைக்கொண்டு வருவோமா அல்லது இதை கொண்டு வருவோமா என தெரிவித்தே 5 வருடம் முடிந்துவிட்டது. இவர்கள் புதிய தொழிற்சாலைகளை திறக்கும் முன்னர் இயங்குகின்ற பல தொழிற்சாலைகளையும் மூடும் வகையில் செயற்படுகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த தொழிற்சாலைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை திறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Read more...

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 8 - யஹியா வாஸித்

எப்போது உருப்படும் இந்த தேசம், இனி என்ன செய்வதாய் உத்தேசம் 1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை, வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல, பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது, ஆனா நேரம் போக போகத்தான் நாடி, நரம்பு, மூளை, முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.

but we all are fully safe. வடகிழக்கு புள் சேப், அடி முழுக்க வடகெளக்குக்கு வெளியதான். இந்த போராட்டத்துக்கு எவ்வித சம்பந்தமுமில்லாத அனைத்து தமிழனும் அடி பட்டான். ஆனா அப்போது உண்மையான,
நேர்மையான ஊடக வியலாளர்களும், ஊடகங்களும் இருந்தன. இப்போது போல பச்சைப் பொய்களை மெருகேற்றும் ஊடகங்கள் இருக்கவில்லை.

மொனராகல மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் பலர் சகலதையும் தொலைத்துவிட்டு வந்து அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் குவிந்தனர், உயிர் மட்டும்தான் அவர்களிடமிருந்தது, இன்னொரு தொகையினர் மாத்தளையில் இருந்து வந்து குவிந்தனர்.

மாத்தளை யில் இருந்து வந்த குருப் கொஞ்சம் ஹெல்த் தியாகவும், வெல்த்தியாகவும் இருந்தது. அந்த குரூப்பை மெதுவாக பெரிய கல்லாறுக்கு கொண்டு போய் விட்டோம். அப்போது பெரிய கல்லாற்றில் நம்முடன் பேஷ் to பேஷ் சண்டை புடிக்க கூடிய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். நிறைய வாட்டி இந்த பெரிய கல்லாற்றான் , சின்ன கல்லாற்றான், ஒந்தாச் சிமடத்தான் எல்லாருடனும் பேஷ் to பேஷ் தடியடி சண்டை பட்டுள்ளோம். but ஒரு பிரச்சனை எண்டு வந்தா இந்த நன்றி உள்ள நாய்கள் வீட்டில் போய்தான், அவனுகள்ற அம்மாக்களிடம் தைரியமாக போய் ஒரு கவளம் சோறு வாங்கி தின்போம். யெஸ், வீ ஆர் ஓள்வேய்ஸ் பிறண்ட்ஸ். பட் வில்லன்களும் கூட. கல்முனையானையும், காரைதீவானையும், நட்பிட்டிமுனை யானையும்,பற்றி பின்னர் பேசுவோம்.

மொனராகல, பிபில ,பதுள இல இருந்து வந்தவங்க கொஞ்சம் வசதி கொரஞ்சவங்க. உண்ணக்கூட வசதி இன்றி வந்தனர். அப்போது அக்கரைப்பற்று சந்தை கிட்டத்தட்ட 345 கடைகளுடனும், ஆரோக்கியமான மனிதர்களுடனும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. எட்டு தமிழர்களுடைய கடைகள், நாலே நாலு சிங்களவர்களுடைய கடைகள், மீதம் எல்லாமே அக்கரைப்பற்று முஸ்லிம்களுடைய கடைகள்.

தமிழண்ட ஈரக்கொலக்குள்ள, சோனிகளும், சோனவண்ட நெஞ்சுக் கூட்டுக்குள்ள தமிழனும், இந்த ரெண்டு பேருடைய உள்ளங்கைக்குள்ள ஹப்புஹாமி, உப்பாசுகாப்பு, சாரா, சரணபால என்ற நாலு சிங்கள வியாபாரிகளும் வாழ்ந்த காலமது.

நம்மளுக்கு அப்போது வயது கிட்டத்தட்ட இருபத்தி மூணு என்பதாலும், மார்க்கட்டுக்குள்ள ஒரு மதிக்கத்தக்க மொதலாளிர மகன் என்பதாலும் சனம் என்னையும் கொஞ்சம் நம்பும், நம்பினாலும் நமக்கு, குறிப்பாக எனக்கு மரியாத என்பது கொஞ்சமும் கெடையாது. எந்த நேரமும் அந்த சந்தைக்குள்ளேயே சுத்திக்கொண்டு வீணாக திரிவதாலும், படிப்பு நம்மளுக்கு சுத்த சூனியம் என்பதாலும், நம்மள சந்த மாடு, சோத்துமாடு எண்டுதான் யாவாரிகள் கூப்பிடுவாங்க.

ஆனால், இந்த நேரம் மானம் மரியாத ஒண்டும் பார்க்கேலாது. வந்திருப்பது தமிழ் அகதிகள், நானோ சோனவன்,உடனடியாக நமது தமிழ் நண்பர்கள் நாலு பேரை அழைத்து, என்னடா செய்வது என கேட்டேன். வழமை போல் தைரியமாக கையை விரித்தார்கள்.

உடனடியாக அப்புஹாமிட பெக்கேரிக்கு போய் வாப்பாட பேரை சொல்லி பாணும், பருப்பு கறியும் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே அப்புஹாமிட மருமகன் ஓடி வந்து, நிலைமைகளை பார்த்துவிட்டு, முப்பத்திரண்டு சோத்துப்பார்சலும், என்ட பொக்கட்டுக்குள்ள இருநூறு ரூவா காசும் பொத்தி
வச்சிப்போட்டு போனான். மல்லி மாமா கிவ்வா, கேமக்கட்ட சல்லி எப்பாலு ( தம்பி, சாப்பாட்டுக்கு சல்லி வேணாம் எண்டு மாமா சொல்ல சொன்னார் என்றார்- ஆம்.இதுதான் இந்த நாட்டின் உண்மையான சிங்களவனின் குறுக்கு வெட்டு முகம் )

மொதலாளிர மகனோட கொஞ்சம் தமிழ் அகதிகள் வந்து நிற்காங்க, என்று அவன் போய் சோனவ மொதலாளிமாருக்கிட்ட சொல்ல , ஒவ்வொருவரும் பறந்து வந்து, இரண்டு மணிநேரத்திற்கும் முப்பத்தி ஏழாயிரம்
ரூபாயை என் கையில் ஒப்படைத்தனர். இது 1983 july 26 ஆம் திகதி அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் நடந்த ஒரு சோக வரலாறு.

ஆறு தமிழ் நண்பர்களை ( அப்புறம் இவர்கள் எனது எதிரிகளானார்கள், நான் அவர்களது துரோகி ஆனேன், ஒவ்வொரு இயக்கமும் எனக்கு மரண தண்டனை விதித்தது, எட்டப்பனையே மிஞ்சிவிடும் ஒரு பயங்கர
எட்டப்பனாக நான் என பட்டம் சூட்டப்பட்டேன், பல நூறு முறை இவர்கள் என்னை நோக்கி திருப்பிய, அந்த நீண்ட நெடிய தடிகளால் என்னை குறி பார்க்க முடியாமல் போனது ) அழைத்து, அக்கரைப்பற்றில் இருந்து இருபத்தி நாலு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, சங்கமான்கண்டி பிள்ளையார் கோயிலடிக்கு அவர்களை கொண்டு போய் நிறுத்துமாறு அனுப்பி வைத்தேன்.

நாளை அவர்களுக்கு இருப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி அனுப்பி வைத்தோம். அடுத்தநாள் இவர்களுக்காக அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பகுதிகளில் பிச்சை எடுத்தோம்.

அக்கரைப்பற்றில் இருந்த வடமாகான தமிழர்களின் கடைகளானா சண்முகநாதன் ஸ்டோர்ஸ், விநாயகன் ஸ்டோர்ஸ், மணியம் ஸ்டோர்ஸ், முதலாளிகள் -சொறி, தம்பி, வீ காண்ட் ஹெல்ப் தெம் என்று சந்தோஷமாக
சொன்னார்கள்.

அக்கரைப்பற்று பெரிய ஆஸ்பத்திரியில் அப்போது பெரிய டாக்குத்தராக இருந்த ஒரு வடமாகாண டாக்டர் ஒரு ரூபா தந்தார். அதையும் அன்பாக தரவில்லை. ஒரு ரூபாவை தூக்கி என் முகத்தில் வீசி எறிந்தார்.
மாஸா அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ்.

என்ன இனிமையிது. அகதியாக வந்திருப்பது மொனராகல தமிழன், அவர்களுக்கு உதவுங்களேன் என்று பிச்சை எடுப்பது ஒரு கேடு கேட்ட சோனகன், பலாலி ரோட், தின்னவேலி சந்தியில எக்ஸ் புளோடற வச்சி, பதினாலு ஆமிய கொன்றது( 1983-July ), நாசமாப்போன புலி, பாவம் அவனுகளுக்கு பசியாற கொடுங்க எண்டு பாணும், சாப்பாடு பார்சலும், இருநூறு ரூவா காசும் தந்தது ஒரு சிங்களவன். என்ன இது, என்ன இது, என்ன கூத்து இது. ஊழிக்கூத்தா...ஆழிக்கூத்தா ....

ஆனா நமக்குத்தான், ரோசம், மானம் மரியாத என்பது கிஞ்சித்தும் கிடையாதே, பல படிகள் ஏறினோம். எல்லாதத்தமிழனும் பணம் தந்தான், சோத்துக்கு வழியில்லாதவன் கூட கம்பு, தடி, கத்தி, சட்டி, பானை என அள்ளித்தந்தனர். இது கிழக்கு தமிழனின் பண்பாடு.

அக்கரைப்பற்று, கோளாவிலை சேர்ந்த சீனித்தம்பி மாஸ்டரின் வீட்டுக்கு அருகில் வந்ததும், நமது தமிழ் நண்பர்கள் எல்லாம் ஜகா வாங்கிட்டானுகள்.

இது கொஞ்சம் வெசர் புடிச்ச கேஷ், இவர் ஒரு மேத்ஸ் மாஸ்டர், பணக்காரர், அக்கரைப்பற்றில் அப்போது இருந்த தமிழ் பணக்காரர்களில் ஒருவர், காணி, வயல், மாடு என ஒரு இறுமாப்பு புடிச்ச தமிழன். காசு விடயத்தில் ரொம்ப கறாரானவர், சோனவனுகளை இந்தாள்ற கண்ணுலேயே காட்ட முடியாது. மோட்ட சைக்கிளை கொண்டுவந்து, எங்கிட கடையடிய நிற்பாட்டி, டேய் சீனி தா, தேயில தா என இறங்காமல் நிண்டு கொண்டு சாமான் கேப்பார். எண்ட வாப்பாவ எல்லாம் "டேய் வெங்காயம் றாத்தல் என்ன வெல" என டேய் போட்டே கேப்பார். தில்லு. தில்லு. தில்லு, அதோடு சேர்த்து கம்பீரம்.

சீனித்தம்பி மாஸ்டர் எண்டா பள்ளிக்கூடமே நடுங்கும். டேய் காக்கா இவன உட்டுப்போட்டு மத்த எடங்களுக்கு போவம்டா, அடிச்சிப்போட்டுத்தான் வெளக்கம் கேப்பான்டா, வாடா எண்டார்கள்.

நம்மளுக்கிட்ட ஒரு கேடு கேட்ட புத்தி இருக்கு. அதான் சோனிப்புத்தி. நடக்காது என ஆராவது சொன்னா, அத நடத்தி காட்டுற. அதுதான். மயிர கட்டி மலைய இழுக்கிற.

சீனித்தம்பி மாஸ்டர்ர ஊட்டுகதவ தட்டினேன். டீ கிளாசுடன் வந்து கதவை திறந்தார். அதே டேய் ? விடயங்களை அக்குவேறு ஆணிவேறாக வெளங்க படுத்தினேன். நாங்க ஆறு பேர் வந்திருக்கம்.

டேய் நீ எப்படிடா தமிழர்களுக்காக பிச்சை எடுக்கிறாய் ? சேர் எல்லாரும் மனிசன்தானே சேர். பாவம் சேர், சீனித்தம்பி மாஸ்டர் எழும்பி என்னை கட்டி பிடித்தார். அழுதார். ஓரு செக்கன். அதை ஒரு செக்கன் என்று கூட சொல்ல முடியாது, அதையும் விட குறைவு.

அவரது வீட்டு சாமி அறைக்குள் என்னை அழைத்து சென்று, இரண்டு லைசென் துப்பாக்கிகளையும், ஆறு பெட்டி தோட்டாக்களையும் ( SG 12 AND SG 16 ) காட்டி இது உனக்குத்தான், any time you can come and collect it.

காசாக எட்டாயிரம் ரூபா எண்ணி தந்தார், நாளைக்கு நாலு றக்டருல கிடுகும், கம்பும் சங்கமங்கண்டிக்கு அனுப்புறன், இனி என்ன வேணுமெண்டாலும் என்னை கேளு, இந்த முன்னுக்கு நிற்கிற மோட்ட சைக்கிள
எடுத்துக்கு போங்க, வேல முடிஞ்சதும் கொண்டு வந்து தாங்க என்றான் அந்த அக்கரைப்பற்று தமிழன். கோளாவில் தமிழன், கிழக்கு தமிழன்.

காலங்கள் கடக்க, கன்னி கழியாத விடலைகளுல்லாம் சுடலைப் பயித்தியம் பிடித்து, அந்த மகானின் கதவுகளை எகத்தாளத்துடன் தட்டி பணம் கேட்டுள்ளனர். Go back... Go back.... இதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல இந்த சீனித்தம்பி என்று சொல்லி இருக்கின்றான் எனது இன்னொரு அப்பன். அவன் நம்ம ஜா(சா)தி.

ஆம். அவரை, எனது இன்னொரு அப்பாவை, நண்பனை, ரத்தத்தை பல துண்டுகளாக அறுத்து சாக்கில் கட்டி, இந்த பயித்தியம் புடித்த சூரர்கள், சூரசம்ஹாரம் ஆடி உள்ளனர்.

ஆரோக்கியமான கிழக்கு, அப்பழுக்கற்ற தமிழ், முஸ்லிம் உறவு, ஏதோ ஒரு சகதிக்குள் சிக்கிக்கொண்டு, அது பணமா, பதவியா, பகட்டா, படா டோபமா, பச்சை புள்ளைக்கும் பாவம் நினைக்காத எங்கள் உறவுகள்,, ஒரே கூட்டுக்குள் வெள்ளைகருவும், மஞ்சள் கருவுமாக வாழ்ந்த எங்கள் நண்பர்கள்,

இரவு ரெண்டரை மணிவரை அவர்கள் ஊட்டு குசினிக்குள் நாங்களும், அதிகாலை மூணரை மணிவரை எங்க ஊட்டு குசினிக்குள் அவனுகளும் குசு குசு என கதைத்துக் கொண்டு திரிந்த அந்த ஆரோக்கியமான காலம் இனி நமது அடுத்த சந்ததிக்கு கிடைக்குமா ? இந்த வடகிழக்கு அரசியல் பம்மாத்துகள் கிடைக்க விடுவார்களா ?

ஆம். துப்பரவு செய்யப் பட வேண்டும். மிக மிக நிதானமாக, ஆரோக்கியமான கரங்களால் நமது வீடுகளும், வீதிகளும் துப்பரவு செய்யப்பட வேண்டும். yes. clean wash.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com