Sunday, July 7, 2019

சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா?

சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா? நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது பாதுகாப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூற முடி­யாது என சீறுகின்றார் எதிரகட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.

மேலும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நுகே­கொடை – கோட்டே வீதியில் புத்­தி­ஜீ­விகள் சங்­கத்தின் தொழிற்­சங்க தலைமைக் காரி­யா­ல­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சித் தலைவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்­கையில்,

தேர்­தல்­களில் வெற்றி பெறு­வ­தற்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக ஏனைய கட்­சிகள் மக்கள் மத்­தியில் பொய் பிர­சா­ரங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றன. பொது­ஜன முன்­னணி மாத்­தி­ர­மல்ல எந்த கட்­சி­யாக இருந்­தாலும் வாக்­குகள் தேவை­யில்லை என்று கூற முடி­யாது. கூறி­யதும் இல்லை. அர­சியல் கட்­சி­யொன்­ றுக்கு அனைத்து இன, மதங்­க­ளி­னதும் ஆத­ரவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

நாட்டின் எதிர்­கா­லத்தைப் பற்றி நினைக்கும் போது பய­மாக இருக்­கி­றது. பொரு­ளா­தாரம் மற்றும் ஏனைய பிரச்­சி­னை­களைப் பார்க்கும் போது 4 வருட காலத்­திற்குள் இவ்­வாறு நாட்டை சீர­ழிக்க முடி­யுமா என்று ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இதற்கு முன்னர் இது போன்று பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­தில்லை. அவ்­வாறு சில பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் அவற்­றுக்கு முகங்­கொ­டுத்­தது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தாகக் கூறி ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­ததன் பின்னர் அபி­வி­ருத்­தி­களை இலக்­காகக் கொண்டு செயற்­பட்டோம். அதன்போது 30 வருட கால யுத்­தத்­தினால் எவ்­வித அபி­வி­ருத்­தியும் இன்றி காணப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் கூடுதல் கவனம் செலுத்­தப்­பட்­டது. அதற்­கி­ணங்க அப்­பி­ர­தே­சங்­களில் அதி­க­ளவு அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அடுத்த தேர்­தலில் நாம் தோல்­வி­ய­டைந்தோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சா­ரங்­களும், வெளி­நாட்டு அழுத்­தங்­களும் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தின.

இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் மற்றும் அதன் உறுப்­பி­னர்கள் என்னை சந்­தித்து சோபா மற்றும் ஏனைய ஒப்­பந்­தங்கள் குறித்து எமக்கு தெளி­வு­ப­டுத்­தி­னார்கள். இதன்போது நாட்டில் நில உரிமை, உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு, அதனால் இலங்­கைக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் இன்றும் சர்­வ­தேச தலை­யீ­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் வெளி­நாட்டு சம்­ப­ளத்தைப் பெறும் அதி­கா­ரிகள் இருக்­கின்­றார்கள்.

இலங்கை வர­லாற்றில் பாரா­ளு­மன்ற சேவை­யா­ளர்கள் அல்­லது அதி­கா­ரி­க­ளுக்கு நாட்டு நிதி­யி­லி­ருந்து தான் சம்­பளம் வழங்­கப்­பட்­டது. வெளி­நாட்டு சம்­ப­ளத்தைப் பெறும் அதி­கா­ரிகள் எதற்­காக பாரா­ளு­மன்ற கட­மைக்கு நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விலும் இது போன்ற அதி­கா­ரிகள் இருக்­கின்­றனர். இதில் பல ஊழல்கள் காணப்­ப­டு­கின்­றன.

இவற்றின் மூலம் தான் சர்­வ­தேச அழுத்­தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே நாட்டிலுள்ள புத்திஜீவிகள் நாட்டை நேசிக்கும் அனைவரும் இதற்கு எதிராக போராட வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறுவதாகவும், நாட்டுக்கு பொறுப்பு கூறுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறானதொரு அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தை வீழ்த்து வது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.

Read more...

ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம் என்றால் என்ன?

இலங்­கையில் தற்­போது, ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் கீழ் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதி­ரு­மான வாதப்­பி­ரதி வாதங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்து பீபீஸீ சிங்­கள சேவை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் த சில்­வா­வுடன் நடத்­திய நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது.

ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­மூலம் என்றால் என்ன?

2007– 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வாயம் (ICCPR). உள்­நாட்டு யுத்த காலத்தைப் போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் இடம்­பெற்ற கைதுகள் தொடர்­பாக ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் குறித்து பலத்த வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­துள்­ளன.

இந்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­படை விதி­யாக அமை­வது, “சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வா­ய­மா­னது, யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டில்­லாத மனித உரி­மை­க­ளுக்குப் பொருத்­த­மான யாப்­ப­தி­காரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தோடு, அத­னுடன் தொடர்­பான அல்­லது அதற்­க­னு­ச­ர­ணை­யாக அமையும் விதத்­தி­லான சட்­டதிட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­ட­தான சட்­ட­மூ­ல­மொன்­றாகும்” என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில், இலங்கைப் பிர­ஜை­க­ளுக்­கான அடிப்­படை உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

30 வரு­ட­கால யுத்­தத்தின் கார­ண­மாக ஒரு சில அடிப்­படை உரி­மைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன. யுத்த கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் மீண்டும் அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கக்­கூ­டாது என்­ப­தற்­காக சர்­வ­தே­சத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட திட்டம் ஒன்­றுக்கு கட்­டுப்­பட்டு நடக்கும் நிலைக்கு இலங்கை தள்­ளப்­பட்டது.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையில் 2007 ஆம் ஆண்டு முதல் ஐஸீ­ஸீ­பிஆர் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் அடங்­கப்­ப­டா­துள்ள மனித உரி­மைகள் இதன்­மூலம் உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.

1966 டிசம்பர் 16 ஆம் திகதி இச்­சட்டம் ஐக்­கிய நாடுகள் சபையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தொன்­றாகும். 1976 மார்ச் மாதம் முதல் சிவில் மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பான சர்­வ­தேச சம­வா­யத்தில் ஓர் உறுப்பு நாடாக இலங்­கையும் இணைந்­துள்­ளது.

1980 ஜூன் 11 ஆம் திகதி மேற்­படி சர்­வ­தேச சம­வா­யத்தின் சட்ட திட்­டங்­க­ளுக்கு உடன்­பாடு தெரி­வித்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­களின் குறிப்­பி­டத்­தக்க அளவை இலங்கை தனது அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது போன்றே பாரா­ளு­மன்­றத்­திலும் கொண்­டு­வந்து சட்­ட­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இதற்கு முன்னர் சிறி­த­ள­வுக்­கேனும் யாப்பில் ஏற்­கப்­ப­டா­தி­ருந்த சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து சட்­ட­மாக்கிக் கொள்­வ­தற்கு அர­சுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது.

சர்­வ­தே­சத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை இலங்கை மக்கள் பெற்­றுக்­கொள்­ளவும் உரி­மை­களை உறு­தி­செய்து கொள்­ளவும் இச்­சட்­ட­மூலம் வழி­வ­குத்­துள்­ளது.

இந்தச் சட்­ட­மூ­லத்தால் மக்­க­ளுக்குப் பாதிப்பா?

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் பொல்­க­ஹ­வெல பகு­தியைச் சேர்ந்த பிக்­குகள் செய்த முறைப்­பாடொன்றுக்­க­மைய விரு­து­பெற்ற எழுத்­தா­ள­ரான சக்­திக சத்­கு­மார என்­பவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். அவ­ரது முக­நூலில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள சிறு­க­தை­யொன்றில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விடயம் பொது­மக்­களை கொந்­த­ளிப்பில் ஆழ்த்­தக்­கூ­டி­ய­தென்றே சக்­தி­க­வுக்கு எதி­ரான முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் இன்னும் பொலிஸில் கைதி­யா­கவே உள்ளார்.

இதே­போன்றே ரஹீம் மஸா­ஹினா அணிந்­தி­ருந்த நீண்ட மேலா­டையின் பின் பகு­தியில் “தர்ம சக்­க­ரத்தின் வடி­வி­லான” சின்னம் பொறிக்­கப்­பட்­டி­ருந்ததாகக் கூறி ஹஸ­லக பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டார்.

ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் ஷரத்தில் காணப்­படும் கடுமையான சட்ட திட்­டங்­க­ளுக்­க­மை­யவே இக்­கை­துகள் இடம்­பெற்­றுள்­ளன.

இதனால் பெரும்­பா­லானோர் இச்­சட்ட மூலம் “மக்­களைக் கட்­டுப்­ப­டுத்தும்” ஒரு செயற்­பா­டா­கவே கரு­து­கின்­றனர். அதே­போன்றே தேவை­யற்ற விதத்தில் மக்­களைக் கைது­செய்­வ­தற்கும் இச்­சட்ட மூலம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர்.

சட்ட மூலத்தின் 3 (1) உறுப்­பு­ரையின் உள்­ள­டக்கம் பெரும்­பாலும் மேற்­படி கருத்­துக்கு உர­மி­டு­வ­தா­க­வுள்­ளது. மேலே குறிப்­பிட்ட கைதுகள் 3 (1) உறுப்­பு­ரையின் விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.

3 (1) உறுப்­பு­ரையில், எந்­த­வொரு நப­ராலும் யுத்­தத்தைத் தூண்­டவோ, வேறு­ப­டுத்தும் விதத்தில் எதிர்­வாதம் புரி­யவோ, அல்­லது வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதோ, ஒன்று திர­ளு­வதோ, இன, மத குரோ­தங்­களை முன்­னெ­டுப்­பதோ கூடாது என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­போன்றே, 3 ஆவது உறுப்­பு­ரையின் (4) ஆவது உப பிரிவில், “இந்த உறுப்­பு­ரையின் கீழ் உள்ள குற்றச் செயல் பார­தூ­ர­மா­னதும் பிணை வழங்­க­மு­டி­யா­த­து­மான குற்­ற­மாகும். இத்­த­கைய குற்­றச்­சாட்டு புரிந்­துள்­ள­தாக சந்­தே­கப்­படும் அல்­லது முறைப்­பாடு சுமத்­தப்­பட்­டுள்ள நபர் விசேட சந்­தர்ப்­பங்­களில் உயர்­நீ­தி­மன்­றத்­தி­னூ­டா­க­வே­யன்றி வேறு நீதி­மன்­றங்­க­ளூ­டாக பிணையில் செல்ல முடி­யாது” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய 3(1) உறுப்­பு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்றச் செயலில் ஈடு­ப­டுவோர் பிணை வழங்­கு­வ­தற்­கு­ரிய முதல்­படி உயர்­நீதி மன்­ற­மே­யாகும். இதனைத் தவிர அதன் கீழுள்ள வேறு எந்த நீதி­மன்­றத்­தாலும் பிணை வழங்க முடி­யா­தென்­ப­தாகும்.

இதற்­க­மைய 1997– 30 ஆம் இலக்க பிணை சட்­ட­மூலம் இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் செய­லி­ழந்­த­தா­கவே காணப்­படும்.

“மேற்­படி உறுப்­பு­ரைக்கு விரி­வா­னதும் குறு­கி­ய­து­மான இரு­வேறு விளக்­கங்­களை அளிக்க முடியும் அவ்­வாறு விளக்கும் போது, சட்­ட­மூ­லத்­தி­லுள்ள இதர விட­யங்­க­ளையும் வாசித்துப் பார்ப்­பது அவ­சியம்” என்று பிர­சன்த லால்த அல்விஸ் கூறு­கிறார். இங்கு முத­லா­வது உறுப்­பு­ரையில் “யுத்­தத்தைத் தூண்­டுதல்” என்­றுள்­ளது. அதனைத் தொடர்ந்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது எதிர்­வாதம் புரி­தலும் குரோ­தத்தை உரு­வாக்­கு­தலும் என்­ப­தாகும். இவை­யி­ரண்டும் யுத்­தத்தை மூளச்­செய்யும் அள­வுக்­கான செயற்­பா­டாக அமைய வேண்டும்.

உதா­ர­ணத்­திற்கு, எனது புத்த சமயம் தான் உல­கிலே மிகவும் உன்­ன­த­மான தர்மம் என்று நான் சொன்னால், சட்ட மூலத்­திற்­க­மைய இது­வொரு குற்றச் செயல் என்று எவ­ராலும் எண்­ண­மு­டியும். ஆனால் அது குரோ­தத்தை உண்டு பண்­ணு­ம­ள­வுக்கு நெருங்­கு­வ­தில்லை என்று அவர் கூறு­கிறார்.

சட்ட மூலத்தை விரி­வாக ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தல்ல. உரி­மை­களை மேலும் உறு­தி­செய்­வ­தா­கவே உள்­ள­தாக சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் மேலும் கூறு­கிறார்.

ரஹீம் மஸா­ஹி­னாவின் ஆடை­யி­லுள்ள சின்னம் கார­ண­மாக அவர் கைது­செய்யப் பட்­டுள்­ளமை குறித்து பிர­சன்த லால் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் இந்த சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். இதற்குப் பல கார­ணங்­களை முன்­வைக்­கலாம். முதன் முத­லாக குறித்த ஆடையில் உள்­ளது தர்­ம­சக்­கரம் அல்ல. அது கப்­ப­லி­லுள்ள சுக்கான் என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது.

பௌத்த கொடியைக் கொண்டு தைக்­கப்­பட்ட சட்டை சந்­தையில் விற்­கப்­ப­டு­வதை நான் கண்­டி­ருக்­கிறேன். தர்­ம­சக்­க­ரத்தைப் போல அதுவும் குற்றம் தானே! ஆனால், சம்­பந்­தப்­பட்ட பெண் முஸ்லிம் என்­பதால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

மக்கள் தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட சட்­டை­களை அணி­வது போன்றே அணி­க­லன்­க­ளாக தர்­ம­சக்­கர சின்­னங்­க­ளையும் அணி­கி­றார்கள். எனவே இவற்­றையும் இவற்றைத் தயா­ரிக்­கிற நிறு­வ­னங்­க­ளையும் அல்­லவா குற்­ற­வா­ளி­க­ளாகக் கணிக்­க­வேண்டும்.

சட்­டத்­த­ரணி திஷ்ய வேர­கொட என்­பவர் சண்டே ஒப்­சேவர் பத்­தி­ரி­கைக்கு கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது, மக்­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக அறி­மு­கப்­ப­டுத்­திய ஐஸீஸீ­பிஆர் சட்ட மூலம் சிவில் சுதந்­தி­ரத்தை கட்டுப் படுத்­து­வ­தற்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், சக்­தி­கவின் கைது சுதந்­தி­ரத்­திற்கு வரை­யறை போட்­டுள்­ள­துடன் ரஹீம் மஸா­ஹி­னாவின் கைதில் சட்­ட­மூ­லத்தின் எக்­கா­ர­ணியும் பேணப்­ப­டா­ம­லேயே இடம்­பெற்­றுள்­ளது என்று அவர் மேலும் கூறி­யுள்ளார்.

ஐஸீ­ஸீ­பிஆர் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட சந்­தர்ப்பம் எது?

2018 மார்ச் மாதம் திகன வன்­செ­யல்­களின் பின்னர் மஹ­சொஹொன் அணியின் அமித் வீர­சிங்ஹ உள்­ளிட்ட இதர நபர்கள் நீண்­ட­நாட்கள் சிறையில் அடைக்கப் பட்­டி­ருந்­தமை மேற்­படி சட்ட மூலம் மற்றும் அவ­சர கால சட்ட விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.

அவ­ச­ர­கால சட்­ட­விதி போன்றே இந்த சட்­ட­மூலம் செயற்­படும் போது சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் ஆகிய எல்லா இனத்தைச் சேர்ந்த மக்­களும் அவ்­வப்­போது இடம்­பெற்ற சண்டை, குழப்­பங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எவ்­வா­றி­ருந்­த­போ­திலும் ஐஸீ­ஸீ­பிஆர் சட்ட மூலத்தில் பல்­வேறு வகை­க­ளிலும் உரி­மைகள் பேணப்­பட்­டுள்­ளன. 4(1) உறுப்­பு­ரையில் முறைப்­பாட்­டுக்கு இலக்­காகி யுள்ள நபரின் உரி­மைகள் குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

தாமரை மலர் ஒன்றில் வீற்­றி­ருப்­ப­தான புத்­தரின் உரு­வப்­படம் ஒன்றை தனது கையில் பச்சை குத்­தி­யி­ருந்த நயோமி கோல்மன் என்ற வெளி­நாட்டுப் பெண்­மணி, 2014 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து கட்­டு­நா­யக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட அவர், பெரும்­பான்மை மக்­களை சினம் கொள்ளச் செய்யும் வகையில் பச்சை குத்­தப்­பட்­டுள்­ளதால் இவர் கைது செய்­யப்­பட்டார் என்று நீதி­மன்­றத்தில் பொலிஸார் குற்­றத்தை முன் வைத்­தனர்.

பின்னர் நீதி­மன்ற பணிப்­பு­ரைக்­க­மைய அவர் இலங்­கை­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால், மனித உரிமை மீறல் என்ற அடிப்­ப­டையில் பிரித்­தா­னிய பிர­ஜை­யான அப்பெண், உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் இறு­தியில் அப்­பெண்­ணுக்கு நஷ்ட ஈடா­கவும், வழக்குச் செல­வா­கவும் எட்டு இலட்சம் ரூபா செலுத்­தும்­படி உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இலங்­கைக்கு பல தட­வைகள் உல்­லா­சப்­ப­ய­ணி­யாக வருகை தந்­துள்ள நயோமி, தான் ஒரு தூய்­மை­யான பெளத்த பெண் என்றும், புத்­த­பெ­ருமான் மீதுள்ள பற்­றி­னா­லேயே தான், தனது கையில் அவ­ரது உரு­வப்­ப­டத்தை பச்சை குத்­தி­யுள்ளேன் என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டுள்ளார்.

எவ்­வா­றி­ருந்த போதிலும் மேற்­படி உறுப்­பு­ரைக்­க­மைய, ஒரு­வ­ருக்­கெ­தி­ராக வழக்குத் தொடரும் போது பொலிஸார் மிகவும் கவ­ன­மாக நடந்து கொள்­ள­வேண்டும். இது நீதி­மன்­றத்­துக்குக் கூட சில கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் சட்ட மூல­மாகும் என்று பிர­சன்த லால் அல்விஸ் தெரி­வித்தார்.

3(1) உறுப்­பு­ரையின் கீழ் வழக்குத் தொடரும் போது மேல் நீதி­மன்­றத்தில் பிணை கோரும் சந்­தர்ப்­பத்தில் விசேட கார­ணிகள் முன் வைக்­க­வேண்டும். ஆனால் குறித்த அந்த விசேட கார­ணிகள் எவை என்று சட்­டத்­தினுள் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

இதற்­க­மைய வழக்­கு­களில் நீதி­ப­தி­க­ளுக்கு அதி­வி­சேட கார­ணிகள் எவை­யென்­பது குறித்து ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு பூரண சுதந்­திரம் உள்­ளது.

அடிப்­படை உரி­மை­களின் கீழ் வழக்குகள்

சக்­திக சத்­கு­மார மற்றும் மஸாஹிமா ஆகிய இரு­வரும் தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர் நீதி­மன்­றத்தில் வழ்க்குத் தாக்கல் செய்­துள்­ளனர்.

1978 ஆம் ஆண்டின் இலங்கை அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் பிர­ஜை­க­ளுக்­குள்ள மனித உரி­மைகள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இலங்­கையில் வதியும் மக்கள் சந்­த­திகள் மத்­தியில் தார்­மீக சுதந்­திர சமூகம் ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்­பவும் அவர்­களைப் பேணிப் பாது­காக்­கவும் அச்­சந்­த­தி­யி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு உதவ முன்­வரும் அனைத்­து­லக மக்­க­ளி­னதும் அபி­மானம் மற்றும் செல்வம் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்தும் அப­ரி­மி­த­மான உரி­மை­யாக சுதந்­திரம், சம­நி­லைத்­தன்மை, நேர்மை, அடிப்­படை மனித உரி­மைகள் மற்றும் நீதித்­து­றையின் சுயா­தீனம் என்­பன சகல மக்­க­ளுக்கும் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தான ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ர­சாக இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­காக….” என்றே யாப்பு விதி கூறு­கி­றது.

அதே போன்றே யாப்பின் 4(ஈ) அடிப்­படை உரிமை தொடர்­பாக பின்­வ­ரு­மாறு கூறுகிறது:

“அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் யாவும் நிர்வாக நிறுவனங்களால் பேணப்பட வேண்டும். மதித்து ஒழுக வேண்டும், வளர்க்கப்பட வேண்டும். மேலும் அந்த அடிப்படை உரிமைகள் இங்கு இதன் பின்னர் வரும் விதிமுறைகள் வலிந்துரைக்கும் விதத்திலும் அதன் அளவை மிகைத்தோ வரையறுத்தோ மேற்கொள்வதும் அல்லது வலிதற்றதாக்குவதும் கூடாது.”

அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் பேச்சுச் சுதந்திரம் அல்லது கருத்து வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்றே அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய சுதந்திரமும் நம்பிக்கை கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரம் உள்ளது.

வழங்கப்பட்டுள்ள உளச் சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பதற்கும் எந்தவொரு மதத்தையும் ஒழுக்கப்பண்புள்ள எந்தொவரு சிந்தனையையும் பின்பற்றுவதற்குரிய உரிமையும் உள்ளது.

எவ்வாறானபோதிலும் மேற்கண்ட சகல உரிமைகளையும் அடுத்தவருக்கு பாதிப்பேற்படாதவாறே அனுபவிக்க வேண்டும். அடுத்தவரின் சுயகௌரவத்தைப் பாதிக்காதவாறும் அவர்களது உரிமைகள் பேணப்படும் வகையிலுமே நடந்துகொள்ள வேண்டும்.

தனிநபர் உரிமைகள் அளவு கடந்து பயன்படுத்துவதற்கெதிராக இலங்கையில் பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் பலவும் உள்ளன.


சிங்­க­ளத்தில்: தஹமி ரண­வீர
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
விடிவெள்ளி.

Read more...

Saturday, July 6, 2019

பூஜிதவை தொடர்ந்து மேலும் 6 உயரதிகாரிகள் கைது செய்யப்படலாம்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆறு பேர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தும் அவை தொடர்பில் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியதாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர் கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட அத்தியட்சகர் உள்ளிட்ட சிலர் இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்

சட்ட மா அதிபர் தப்புல லிவேராவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.

Read more...

அகதிகள் மீதான உலகளாவிய போர்! Will Morrow

உலகெங்கிலுமான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் அகதிகளைத் திட்டமிட்டு முறைகேடாக கையாள்வதன் மீதும் மற்றும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மீதும் எழுந்த பாரிய சீற்றத்தை, கடந்த இரண்டு வாரகால தொடர்ச்சியான சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

அகதிகள் மீட்பு கப்பல் Sea Watch 3 இன் 31 வயதான ஜேர்மன் கடல் மாலுமி கரோலா ராக்கேற்ற (Carola Rackete) ஐ இத்தாலிய அரசாங்கமும் மற்றும் அதன் பாசிசவாத உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியும் சனிக்கிழமை கைது செய்ததன் மீது நூறாயிரக் கணக்கானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜூன் 12 இல் மத்திய தரைக்கடலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 52 ஆபிரிக்க அகதிகளை மீட்டு, அவர்களை இத்தாலிய எல்லையில் லாம்பெடுசாவுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததே ராக்கேற்ற மீது கூறப்படும் "குற்றமாக" இருந்தது.

இரண்டு வாரங்களாக, Sea Watch கப்பல் ஐரோப்பிய ஒன்றியத்தில் தரை ஒதுங்க ஒரு துறைமுகத்தைத் தேடி மத்திய தரைக்கடல் நெடுகிலும் பயணம் செய்திருந்தது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உட்பட எந்த ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கமும் அந்த ஒருசில டஜன் அகதிகளை ஏற்கவில்லை — இதனால் தஞ்சம் கோரி வருபவர்களின் அனைத்து கப்பல்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தாலிய அரசாங்கத்தின் சட்டவிரோத தடையை மீறி, லாம்பெடுசாவில் தரை ஒதுங்குவதைத் தவிர அந்த கப்பல் சிப்பந்திகள் வேறு வழியின்றி விடப்பட்டனர்.

இத்தாலிய நீதிபதிகள் நேற்றிரவு ராக்கேற்றவை விடுவிக்க உத்தரவிட்டமை, தொழிலாள வர்க்கத்தில் அப்பெண்மணிக்கு இருந்த அளப்பரிய மிதமிஞ்சிய மக்கள் ஆதரவுக்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது. நேற்றைய தினமே, Sea Watch இன் சட்டபூர்வ அபராதங்களுக்கு உதவ ஒரு ஜேர்மன் நகைச்சுவையாளர் ஏற்படுத்திய ஒரு நிதியம் 800,000 யூரோக்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியதுடன், பேஸ்புக் மூலமாக 25,000 இக்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து மற்றொரு 400,000 க்கும் அதிகமான யூரோக்கள் திரட்டப்பட்டன. ராக்கேற்றவை உடனே விடுவிக்க வேண்டுமென கோரி 330,000 க்கும் அதிகமானவர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

ஆகவே அந்த இத்தாலிய தீர்ப்பானது அகதிகளைக் காப்பாற்ற முயல்பவர்கள் அனைவரையும் இலக்கு வைத்த ஒடுக்குமுறையிலிருந்து எந்த வழியுமின்றி ஒரு பின்வாங்கலாகும். ராக்கேற்ற இத்தாலியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பதோடு, சட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளார். இத்தாலி, 14,000 பேரை காப்பாற்றிய லூவெம்பா (Luvempa) கப்பல் மாலுமி பியா கிளெம்ப் (Pia Klemp) மீது, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதற்காக மற்றும் துணை போனதற்காக" என்று குற்றஞ்சுமத்தி உள்ளது, இவர் 2017 இல் கைது செய்யப்பட்டார். இப்பெண்பணி 20 ஆண்டுகள் சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.

வெறுப்பூட்டும் பாசாங்குத்தனத்துடன், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிராங்க் வால்டர்-ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்டனர் உள்ளடங்கலாக ஐரோப்பிய அதிகாரிகள் மென்மையாக சல்வீனியை விமர்சித்ததுடன், அகதிகளுக்காக முதலை கண்ணீர் வடித்தனர். ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முன்னணியில் நிற்க, ஐரோப்பிய ஒன்றியம் தான் முள்கம்பி சுருள் வடம் மற்றும் எந்திர துப்பாக்கிகளுடன் "ஐரோப்பாவை சுற்றிய கோட்டை" ஐ எழுப்பியது என்பதும், மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியது என்பதும், ஐரோப்பாவின் தெற்கு கடற்பகுதியை ஒரு பரந்த கல்லறையாக மாற்றியது என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். சல்வீனி, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அப்பட்டமான மற்றும் குரூரமான கொள்கையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

2015 இல், ஐரோப்பிய ஒன்றியம் "ட்ரிட்ரொன் நடவடிக்கை" என்பதை அறிவித்தது, அதேவேளையில் அது ஐரோப்பாவுக்குத் தப்பி வரும் அகதிகளைப் பிடித்து அவர்களை லிபியாவின் சித்திரவதை முகாம்களுக்கு திரும்ப அனுப்ப லிபிய ஆயுதக் குழுக்களை கடற்படை ரோந்துப்படையாக பயிற்சி அளித்தது. அத்தகைய முகாம்களில் சித்திரவதை, கற்பழிப்பு, படுகொலை மற்றும் அகதிகள் அடிமைகளாக விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்ட அதேவேளையில், மனிதாபிமான அரசு-சாரா அமைப்புகளைச் சேர்ந்த கப்பல் சிப்பந்திகளும் கப்பல் மாலுமிகளும் வழக்கில் இழுக்கப்பட்டு, அவர்களின் கப்பல் ஓட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டன.

கடந்த மூன்றாண்டுகளில், குறைந்தபட்சம் 14,000 பேர் ஐரோப்பா வந்தடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். அகதிகள்-சார்பான ஸ்பானிய அமைப்பு Caminando Fronteras கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, ஜனவரி 2018 இல் இருந்து ஜூன் 2019 வரையில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு இடையே ஜிப்ரல்தர் ஜலசந்தியில் மட்டும் 70 கப்பல் கவிழ்வுகளில் குறைந்தபட்சம் 1,020 பேர் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கண்டறிந்தது.

1930 களின் ஐரோப்பாவில் நாஜி ஆட்சியின் அண்மித்து-நிச்சயமான மரணத்திலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு சர்வதேச அளவில் அரசாங்கம் முகம் திருப்பி எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு ஒரு சேதியை அனுப்ப பாரிய படுகொலை கொள்கை ஒன்றை ஏற்று வருகிறது: அதாவது, ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கான அவர்களின் சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கு முயல்வது, கடலில் மூழ்கி உயிரிழப்பதற்கு இட்டுச் செல்லக்கூடும்.

அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டிற்கு உள்ளேயும் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டியும் புலம்பெயர்ந்தோர் அடைப்பு முகாம்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி உள்ளது, கடந்த வாரம் டெக்சாஸில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு விஜயம் செய்த ஒரு குழந்தைகளுக்கான மருத்துவர் டாக்டர் லூசியோ சேவியர் அவை பெரிதும் "சித்திரவதை மையங்களுக்கு" ஒத்திருப்பதாக கூறினார், அந்தளவுக்கு அங்கே நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.

நேற்று, ஜனநாயகக் கட்சி செனட்டர் அலெக்ஸாண்ட்ரியா-ஒகாசியோ கோர்ட்டெஸ் டெக்சாஸின் ஒரு தடுப்புக்காவல் மையத்திற்கு செய்த விஜயம் குறித்து தெரிவித்தார், அங்கே சிறை அறைகளில் பெண்கள் நீரின்றி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், கழிவறைகளில் இருந்து நீர் எடுத்து குடிக்குமாறு எல்லை பாதுகாவலர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ProPublica ஒரு இரகசிய பேஸ்புக் குழுவை வெளிப்படுத்தியது, அதில் பாசிசவாத எல்லை பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வன்மமான ஏளனங்களையும், கோர்ட்டெஸ் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எதிராக பாலியல் அச்சுறுத்தல்களையும் பதிவிட்டிருந்தனர்.

ட்ரம்பின் பாசிசவாத குடியேற்ற கொள்கைகள் மீது மக்களின் மனக்குமுறலும் எதிர்ப்பும், ஞாயிறன்று நியூ ஜெர்சியின் ICE தடுப்புக்காவல் மையத்திற்கு வெளியே 200 இக்கும் அதிகமான அமெரிக்க யூதர்கள் "மீண்டும் ஒருபோதும் வேண்டாம் என்றால் இப்போதே வேண்டாம் என்று அர்த்தம்!” என்று கோஷமிட்டவாறு நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. முப்பத்தி ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், அதில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் பெண் போராட்டக்காரர் அவர் "நல்லதாக" உணர்வதாக தெரிவித்தார், ஏனென்றால் நாஜிக்களுக்கு எதிராக சண்டையிட்ட அவரின் பாட்டனார்கள் "சித்திரவதை முகாம்களுக்கு எதிராக நான் எதிர்த்து நிற்பதை விரும்பி இருப்பார்கள்,” என்றார்.

அகதிகள் மீதான உலகளாவிய தாக்குதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைக் கடந்தும் தொலைதூரத்திற்கு விரிகிறது. ஜூன் 27 இல், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆஸ்திரேலிய தாராளவாத/தேசிய கூட்டணி அரசாங்கம் மற்றும் எதிர் கட்சியான தொழிற் கட்சியின் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளைப் பாராட்டினார். இருகட்சிகளது ஆதரவுடன் கூடிய ஆஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை கொள்கையில் இருந்து "நிறைய கற்றுக் கொள்ள முடியும்" என்று ட்ரம்ப் அறிவித்தார், அக்கொள்கை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் அகதிகள் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி தடுப்பதற்கும் மற்றும் இடைமறிப்பதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.

அகதிகள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுப்போக்காக உள்ளது என்ற உண்மை, அது ட்ரம்ப் மற்றும் சல்வீனி போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பாசிசவாத தனிமனிதயியல்புகளின் காரணமாக அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அது குறிப்பாக முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு புதிய, வரலாற்றுரீதியிலான முறிவின் படுமோசமான ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தொடுத்த ஒரு கால் நூற்றாண்டுகால போரால் தோற்றுவிக்கப்பட்ட சமூக முறிவு மற்றும் பாரிய படுகொலைகளில் இருந்து பத்து மில்லியன் கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தப்பிக்க முயல்கின்றனர்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் வேறெந்த காலத்திலும் இல்லாதளவில் இன்று அதிக அகதிகள் உள்ளனர். கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று உலகெங்கிலும் பலவந்தமாக இடம் பெயர்த்தப்படும் மக்களின் எண்ணிக்கை 2009 இல் 43.3 மில்லியனாக இருந்ததில் இருந்து 2018 இல் 70.8 மில்லியனாக இரட்டிப்பாகி இருப்பதாக குறிப்பிட்டது. 2018 இல் ஒவ்வொரு நிமிடமும், 25 பேர் அவர்களின் வீடுகளை விட்டு தப்பி செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். மனிதகுலத்தில் 1 சதவீதத்தினருக்கும் சற்று குறைவானவர்கள், ஒவ்வொரு 108 பேருக்கு ஒருவர், அகதிகளாக உள்ளனர்.

1940 இல், ஐரோப்பாவின் பாசிசவாத ஆட்சிகள் யூதர்கள் மீது "இறுதி தீர்வு" இனப்படுகொலை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலைசிறந்த ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: “இன்று வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவ சமூகம் அதன் எல்லா துவாரங்களிலும் யூதர்களை நசுக்கித் தள்ள வேட்கை கொண்டிருந்தது; இரண்டு பில்லியன் உலக மக்கள் தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானபேருக்கு, இந்தப் பூமியில் இடம் காண இயலவில்லை! பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்றுவிட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றிவிட்டிருக்கிறது” என்றார்.

இன்று முதலாளித்துவ அரசுகள், ஆழமடைந்து வரும் உலகளாவிய ஒழுங்கமைப்பு நெருக்கடியையும் அதிகரித்து வரும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, 1930 களில் பாசிசவாத வலதைக் குணாம்சப்படுத்திய தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தின் வகைகளை ஊக்குவித்து வருகின்றன. உலகளவில் மிகக் கடுமையான அகதிகள்-விரோத கொள்கைகள் ஏற்படுவது என்பது வழிவகையாக உள்ளது, அதைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கள் அதிதீவிர வலதைப் புத்துயிரூட்டி வருகின்றன.

1930 களில் யூத-எதிர்ப்புவாதத்தில் இருந்ததைப் போலவே, அகதிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டவை ஆகும். இன்று அகதிகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள், நாளை தொழிலாளர்களுக்கு எதிராகவும் போர், இராணுவவாதம், சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

அகதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் உள்ள பலமான ஆதரவை அணித்திரட்ட முடியும்; அணித்திரட்டப்பட வேண்டும். ஆனால் அகதிகள் மீதான பாசிசவாத தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே, காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நுழைவதிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழிவகையாகும். இதன் அர்த்தம், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிப்பது மற்றும் ஒவ்வொரு தொழிலாளியும், பயணம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை உட்பட முழு குடியுரிமைகளுடன் அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான அவரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதாகும்.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, பெருவணிக செல்வந்த தட்டுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமூகத்தின் ஆதாரவளங்களை விடுவித்து, உலகில் ஒவ்வொரு நபரும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமாகவும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதை உத்திரவாதப்படுத்த முடியும்.

Read more...

குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக காடையர்களுக்கு எதிராக நடவடிக்கை. 7 பேர் தடை செய்யப்படலாம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராகஇ கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து அந்தப் பீடத்தின் மாணவர் குழுக்களிடையே கடந்த செவ்வாய்கிழமை (2)இரவு அடாவடி சண்டைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களில் 07 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி பெற்று மறுநாள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளிட்ட நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் வாரம் அவர்களில் ஆகக் குறைந்தது 07 பேருக்கு கல்வித் தடை விதிக்கப்படுவதோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கும் தீர்மானத்தினை பல்கலைக்கழக நிருவாகம் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read more...

முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் பாணியை மாற்ற வேண்டி வருமாம்! மிரட்டுகிறார் ஹரிஸ்

எங்களின் நியாயத்தை மறுத்து அனாவசியமாக முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் எங்களின் பாணியை மாற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு (06) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீமின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. தயா கமகே, கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம் ரஸ்ஸாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 1100 பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,

ஒரு கையால் தட்டி சத்தம் வராது இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டுமானால் முஸ்லிம்களை சீண்டாமல் எங்களோடு இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள்.


இந்த மாவட்டத்தின் எல்லா மத மக்களுக்கும் இந்த உதவி கிடைக்க வழிசமைத்த அமைச்சருக்கு மக்கள் பிரதிநிதியாக என்னுடைய நன்றிகள். இருந்தும் இந்த நாட்டில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

நாட்டில் பல நல்ல திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் வர இருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்தி எமது பிள்ளைகளை நன்றாக கல்விகற்க வைப்பதன் மூலம் நாம் அரேபிய நாடுகளுக்கு எமது பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பவேண்டிய நிலை வராது.

ஸஹ்ரான் எனும் சிறிய குழுவினர் செய்த தாக்குதலின் பின்னராக அண்மைக் காலங்களில் எமது மக்களின் மீது நடக்கும் அநீதிகள் மனவேதனையாக உள்ளது. ஹபாயா, ஹிஜாப் அணிவதில் எமது பெண்களுக்கு வந்த சிக்கலையும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.

கண்டியில் எமது அமைச்சர்களில் ஒருவரான றிசாத் அவர்களையும் முஸ்லிம் ஆளுநர்களையும் குறிவைத்து அத்துரலிய ரத்ன தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அது நாட்டுக்கு சமூகத்துக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் எல்லோரையும் ஒன்று திரட்டி 09 அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய வைத்து நாம் இணைந்து பாதுகாத்தோம். இல்லாது போனால் இந்த நாடு இனவாதத்தில் தீக்கீரையாகி இருக்கும்.

இப்போது எமது பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முன்வருகிறது. ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ள இந்த காலகட்டத்தில் எமது இருப்புக்கு பாரிய சவால் இருக்கிறது.

எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமத், ஏ.ஆர்.எம். மன்சூர், தலைவர் அஷ்ரப், போன்றோர்கள் கல்முனை மாவட்ட காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை அடங்கிய முக்கிய நகரமாக மாற்றியமைத்தவர்கள். கல்முனையை செதுக்கியத்தில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது. இதனை அறியாமல் தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்து கல்முனையை கூறுபோட மூன்றாம் தரப்பின் உதவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெளிமாவட்ட அரசியல் தலைவர்கள் இதனை வழிநடத்தி செய்கிறார்கள். அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளோம். கல்முனை பிரிப்பதாக இருந்தால் ஆங்கிலயரின் ஆட்சி காலத்தில் இருந்தது போல பிரியுங்கள்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, போன்ற பல நகரங்கள் தமிழ் மக்களின் பிரதான நகரங்களாக இருக்கிறது. ஆனால் கல்முனை மாநகரம் முஸ்லிம்களின் தாயகம் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வுத் திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் தலைமைகள் நியாயமில்லாமல் நடக்கிறார்கள், அவர்கள் இதன் பின்விளைவுகளை சிந்திக்க வேண்டும். யாழில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தழுதலுத்த குரலில் "தமிழர்களின் தீர்வு திட்டம் மழுங்கடிக்கப்படுகிறது, அரசாங்கம் ஏமாற்றுவதாக பேசினார்" தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோர்க்க வேண்டிய உணர்வு முஸ்லிம்களுக்கு இருந்தது. ஆனால் சிறு பிரச்சினையை தீர்ப்பதற்காக முயற்சித்து தமிழ், முஸ்லிம் உறவில் நீண்ட இடைவெளியுள்ள விரிசலை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.




Read more...

பிரபாகரனை நிரகாரிக்கின்றோம், 13 ஏற்கின்றோம்! அமெரிக்காவிடம் முன்னாள் புலிகள்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இணைந்து ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இவர்கள் நேற்று யாழ்பாணத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு 13 ஓர் ஆரம்ப புள்ளியாக அமையும் என தாம் நம்புவதாகவும் அவர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தாம் முன்னர் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் தற்போது ஜனநாயக வழியை விரும்புவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தொடர்ந்து அங்கீகாரம் கேட்டு வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களை தனித்தரப்பாக கூட்டமைப்பில் உள்வாங்க தயக்கம் காட்டி வருவதுடன் தனிநபர்களாக சிலரை இணைத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இவர்களை மேற்குலகின் ராஜதந்திரிகள் சிலர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மேற்குலகு தமது நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்னாள் புலிகளை இயங்க வைப்பதற்கான உத்தியாகவே இச்சந்திப்புக்கள் அமைவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் புலிகள் மேற்குலகில் தஞ்சம் கோருகின்றபோது, பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் என காரணம்காட்டி அவர்களுக்கான அரசியல் தஞ்சக்கோரிக்கையை நிராகரிக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் இலங்கையில் இரட்டைவேடம் போடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



Read more...

Friday, July 5, 2019

உலகம் போரின் விளிம்பில் இருப்பதை ஜி20 வெற்றுரைகளால் மூடிமறைக்க முடியவில்லை. Nick Beams

“நாசகரமான தசாப்தம்" என்றறியப்படும் 1930 களின் போது, வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் இராஜதந்திர, சர்வதேச மட்டத்திலும், அத்துடன் பொருளாதார மற்றும் வர்த்தக துறையிலும், அனைத்து விதமான வளைவுகளும் திருப்பங்களும் இருந்தன.

ஒரு நாள் உடன்படிக்கைகளைச் செய்வதும் அடுத்த நாளே அதை முறித்துக் கொள்வதுமாக இவற்றால் குணாம்சப்பட்டிருந்த அந்த ஒன்றுக்கொன்று முரணான செயல்பாடுதான் ஓர் இன்றியமையா புறநிலை உள்ளடக்கமாக இருந்தது. அது, செப்டம்பர் 1939 இல் உலக போர் பிரளயம் வெடிப்பதற்கு முன்னதாக ஏகாதிபத்திய சக்திகள் வெறித்தனமாக சதியாலோசனைகள் செய்யும் வடிவத்தை எடுத்தது.

மாற்றத்தேவையானதை மாற்றினால், இங்கே இன்றைய காலகட்டத்துடன் அதன் நேரடியான சமாந்தரங்கள் உள்ளன. ஈரான், வட கொரியா மற்றும் சீனா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னுக்குப்பின் முரண்பாடான நடவடிக்கைகள் —ஒருநாள் போரைக் கொண்டு அச்சுறுத்துவதும், மறுநாளே ஓர் உடன்படிக்கை அறிவிப்பதும், அதற்கடுத்த நாள் இன்னும் அதிக அச்சுறுத்தல்கள் வெளியாவதும்— அதே தர்க்கத்தை கொண்டுள்ளன. அவை தவிர்க்கவியலாமல் ஒரு புதிய போர் வெடிப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கும் நெருக்கடியால்-பிளவுபட்ட ஒரு புவிசார் அரசியல் ஒழுங்கின் ஒரு வெளிப்பாடாக உள்ளன.

இது கடந்த வியாழக்கிழமை மிகப்பெரியளவில் பென்டகனுக்கு அதிகாரமளிக்கும் 750 பில்லியன் டாலர் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது. அமெரிக்க செனட் சபையில் அது 86-8 என்ற இருகட்சிகளது வாக்குகளுடன் நிறைவேறிய அந்த சட்டமசோதாவின் நோக்கம், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு தலைவர் Jim Inhofe ஆல் வெளிப்படுத்தப்பட்டது.

உலகம் “எனது வாழ்நாளில் வேறெந்த காலத்தையும் விட மிகவும் ஸ்திரமின்றியும், மிகவும் அபாயகரமாக" இருப்பதாகவும் வர்ணித்த அவர், தேசிய பாதுகாப்புத்துறை மூலோபாயம், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் அத்துடன் ஈரான் மற்றும் வட கொரியா போன்ற "அடாவடி நாடுகளிடம்" இருந்து வரும் அச்சுறுத்தல்களுடனும் "மூலோபாய போட்டியை" உருவாக்கி, "எமக்கு நேரடிப்பாதையை" வழங்கி உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மிகப்பெரியளவில் இராணுவ செலவினங்களைத் தீவிரப்படுத்துவதைக் குறித்த Inhofe இன் கருத்துக்களும் இருகட்சிகளது ஆதரவும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் இன்றியமையா நிலைப்பாட்டை அடிக்கோடிடுகின்றன. அது உலகின் மற்ற பகுதிகளை உயிர்வாழ்வுக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது.

இரண்டாம் உலக போர் முடிந்ததில் இருந்து சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை அனுபவித்து வந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதன் பொருளாதார பலத்தின் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதைக் கொண்டு அதன் மேலாதிக்க நெருக்கடியை எதிர்கொள்ள முயன்று வருகிறது. இது மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றது.

பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்களும் பதட்டங்களும் அனைவருக்கும் எதிராக அனைவரினதும் ஒரு போராக இந்த வாரயிறுதியில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டத்திலும் வெளிப்பட்டது. இந்த மாநாடு, கணக்கிடவியலா விளைவுகளுடன் ஒரு கட்டுப்பாட்டை மீறிய இராணுவ மோதலை ஏற்படுத்த அச்சுறுத்திய ஈரான் மீதான ஒரு தாக்குதலை ட்ரம்ப் இரத்து செய்து ஒரு வாரத்திற்கும் சற்று அதிக நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றது.

உலகளாவிய பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்த முயற்சிக்கவும் மற்றும் இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்த மோதல்கள் போன்றவை, மிகவும் குறிப்பாக கட்டுப்பாடான வர்த்தக நடவடிக்கைகளை மற்றும் பாதுகாப்புவாதம் வெடிப்பதைத் தவிர்க்கவும் முயற்சிப்பதற்காக, ஓர் இயங்குமுறையை உருவாக்குவதற்காக, இந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டங்கள் 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தொடங்கப்பட்டது.

பைனான்சியல் டைம்ஸ் பொருளாதாரப் பிரிவு கட்டுரையாளர் மார்ட்டீன் வொல்ஃப் குறிப்பிட்டதைப் போல, உலகளாவிய கூட்டுறவுக்கான அடித்தளத்தை விரிவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜி20 “பொதுவான ஒழுங்கு குலைவுக்குப் பலியாகி உள்ளது. ஜி20 உறுப்பினர்கள் தம்மைத்தாமே குணமாக்கிக் கொள்ள வேண்டிய மருத்துவர்கள் போலிருக்கின்றனர். அவர்களால் முடியுமா? இன்று முடியவில்லை என்பதே நிச்சயமான பதிலாக உள்ளது.” உண்மையில் என்றும் முடியாது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் போட்டியாளர்களை, சீனாவை மட்டுமல்ல, மாறாக ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனியையும் இலக்கு வைத்து வருவதுடன், உலகமே அதன் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலுக்கு அடிபணிய வேண்டுமென கோருகின்ற நிலையில், அந்த உச்சிமாநாடு அதன் அடிப்படை தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற தவறியது.

அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜப்பானின் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, வர்த்தகம் சம்பந்தமான பதட்டங்கள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு அபாயம் என்றும், போருக்குப் பிந்தைய சுதந்திர வர்த்தக முறை "ஒருவேளை தள்ளாடுகிறதோ" என்ற கவலைகள் இருப்பதாகவும் எச்சரித்தார். இது இங்கே குறிப்பிடத்தக்களவில் குறைத்துக் காட்டப்படுகிறது.

ஆனால் "பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான" முந்தைய கடமைப்பாடுகள் கைவிடப்பட்டு, அந்த உச்சிமாநாட்டு அறிக்கை சுதந்திரம் மற்றும் நேர்மையின் அவசியம் குறித்து வெறுமனே தொடர்ச்சியாக மழுங்கலான கருத்துக்களையே கொண்டிருந்தது. அபே குறிப்பிட்டவாறு: “ஜி20 நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதை விட, நாம் பொதுவான களத்தைக் காண செயல்பட வேண்டும்,” என்றார்.

அதாவது, வர்த்தக மற்றும் பொருளாதார மோதல்கள் —அவற்றின் பின்னால் இராணுவ மோதல்களுக்கான தயாரிப்புகள்—தீவிரமடைகின்ற நிலையில், அவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது.

பத்து நாட்களுக்கு முன்னர் ஈரான் மீதான தாக்குதல்களில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கிய நடவடிக்கை, சீனாவுக்கு எதிரான வர்த்தக போர் சம்பந்தமான முக்கிய பிரச்சினையில் நேரடியான சமாந்தரங்களைக் கொண்டிருந்தன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்றில், ட்ரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு மேலே, கூடுதலாக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான கூடுதல் வரிகள் விதிப்பதை, சாத்தியமானளவுக்கு 25 சதவீதத்திற்கு மிகாமல், நிறுத்தி வைத்தார்.

ஆனால் ஈரான் மற்றும் வட கொரியா உடனான மோதல்களில், எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதோடு, சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் "விறைப்பாக தயாராக" இருக்கின்றன.

அச்சுறுத்திய புதிய நடவடிக்கைகள், அமெரிக்காவுக்குள் நடைமுறையளவில் சீனாவின் அனைத்து இறக்குமதிகளையும் உள்ளடக்கும் இவை "இப்போதைக்கு" தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்க ட்ரம்ப் உடன்பட்டார், அதேவேளையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால் இன்றிமையா கேள்விகள் மீது —அனைத்திற்கும் மேலாக இப்போதிருக்கும் வரிவிதிப்புகளை நீடித்து வைக்க அதற்கு உரிமை இருப்பதாகவும், எந்தவொரு உடன்படிக்கையிலும் சீனா விருப்பத்திற்கு இணங்க செயலாற்றுவதாக அது ஒருதலைபட்சமாக தீர்மானித்த பின்னர் தான் அவை நீக்கப்படும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மீது— அங்கே எந்த அசைவும் இல்லை, இந்த கோரிக்கை பெய்ஜிங்கால் ஏற்க முடியாததாக கருதப்படுகிறது.

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய்க்கு எதிரான தடைகளை நீக்க வேண்டுமென்ற அதன் கோரிக்கைகளை அமெரிக்கா பூர்த்தி செய்யாவிட்டால் விவாதங்களைத் தொடர முடியாது என்று அக்கூட்டத்திற்கு முன்னதாக சீனா வலியுறுத்தி இருந்தது.

ஹூவாய் இறக்குமதி தடை பட்டியலில் (Entity List) வைக்கப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் ஹூவாயின் அத்தியாவசிய துணை பாகங்களை விற்பனை செய்ய விரும்புகின்ற அமெரிக்க நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்நடவடிக்கை அந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை முடக்க நோக்கம் கொண்டிருப்பதுடன், அது அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய வாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டிருக்கிறது.

ஹூவாய் மீது தொங்கி கொண்டிருக்கும் இந்த அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது. வர்த்தகத்துறையின் முடிவை ட்ரம்ப் இன்னும் மாற்றவில்லை — பேச்சுவார்த்தைகளின் முடிவில் தான் பொருட்களின் பட்டியல் பிரச்சினை தீர்க்கப்படுமென கூறிவிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாய்க்கு பண்டங்களை அனுப்புவதற்கு அனுமதிப்பது மீதான ஒரு வெற்று பொறுப்புறுதியை மட்டுமே அவர் வழங்கினார். இதன் அர்த்தம் என்ன என்பது சிறிதும் தெளிவாக இல்லை, ஏனென்றால் ட்ரம்ப் அவரே கூறுவதைப் போல "மிகப் பெரியளவில் ஒரு தேசிய அவசரகாலநிலை பிரச்சினையை தன்னுள் கொண்டிருக்காத சாதனங்களை குறித்து பேசி வருகிறோம்” என்றார்.

ஆனால் உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தைப் பொறுத்த வரையில், அத்துடன் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டு கட்சிகளிலும் உள்ள அதன் செய்தி தொடர்பாளர்களைப் பொறுத்த வரையிலும் கூட, ஹூவாயின் இருப்பும் மற்றும் சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை விரிவாக்குவதற்கான அதன் முன்நகர்வுக்கு அது என்ன முக்கியத்துவம் கொண்டுள்ளதோ அதைக் குறித்தும், அமெரிக்கா அதற்கு அவசியமான அனைத்து வழிவகைகளையும் பூர்த்தி செய்ய தீர்மானமாக இருக்க வேண்டிய "ஒரு மிகப்பெரிய தேசிய அவசரகாலநிலையில்" இருப்பதாக அவை கவலை கொண்டுள்ளன.

ஹூவாய் மீதான ட்ரம்பின் "விட்டுக்கொடுப்பு" அரசியல் வட்டாரத்தின் இருதரப்பில் இருந்தும் உடனடியாக தாக்கப்பட்டது.

“வர்த்தகத்தில் சீனாவை நியாயமாக செயல்படச் செய்வதற்கான ஒருசில ஆற்றல்வாய்ந்த நிறைவேற்று சாதனங்களில் ஒன்று ஹூவாய். ட்ரம்ப் பின்வாங்கினால், அவர் அவ்வாறு செய்வதாக தான் தோன்றுகிறது, அது சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மாற்றுவதற்கான நமது திறமையைக் கடுமையாக குறைத்துவிடும்,” என்று செனட் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர் சார்லஸ் சூமர் தெரிவித்தார்.

செனட் சபையின் பிரபல குடியரசு கட்சியாளரும் சீன-விரோத போர்வெறியருமான மார்க்கோ ரூபியோ இன்னும் ஒருபடி மேலே சென்றார். “ஜனாதிபதி ட்ரம்ப் உண்மையில் ஹூவாய் மீதான சமீபத்திய தடைகளை நீக்குவதற்குப் பேரம்பேசி இருந்தால், பின்னர் நாங்கள் அந்த தடைகளை சட்டமசோதா மூலமாக மீண்டும் கொண்டு வர வேண்டியிருக்கும். மேலும் அது வீட்டோ தடுப்பதிகாரத்தாலும் தடுக்க முடியாதவாறு மிகப்பெரும் பெரும்பான்மையில் நிறைவேற்றப்படும்,” என்று ட்வீட் செய்தார்.

ஜி20 கூட்டம், சர்வதேச உறவுகளில் முழுமையான ஸ்திரமின்மை, உடன்படிக்கைகள் செய்வதும் பின்னர் முறித்து கொள்வதும், இத்துடன் சேர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார மோதல்கள் ஆகியவை உலக மக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்குகின்றன: ஒரு புதிய உலக போருக்கான நிலைமைகள் வேகமாக முதிர்ந்து வருகின்றன என்பதோடு அது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையையும் மற்றும் எதிர்விரோத தேசிய-அரசு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளாக உலகம் பிளவுபட்டிருப்பதையும் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக அதன் மூலாதாரத்தில் உள்ள பிரச்சினையை கையாள, உலகத் தொழிலாள வர்க்கத்தினது ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே தற்போதைய இந்த மிகத் தெளிவான அபாயத்தைத் தோற்கடிக்க முடியும்.

Read more...

மரண தண்டனையை இடைநிறுத்தி வைக்க உச்ச நீதிமன்று உத்தரவு.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் அதனை நிறுத்தும்பொருட்டு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இவ்வறிவித்தலையடுத்து மரண தண்டனை வழங்குவதற்கு பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி வரை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீது இடம்பெற்ற விசாரணைகளின்போது மன்றில் ஆஜராக விளக்கமளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்ளியூ. தென்னகோன், மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளின் பெயர், காலம், இடம் என்பன அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.

குறித்த மனு இன்று தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த 25ம் திகதி நான்கு போதைப் பொருள் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதுடன், அது நடைமுறைப்படுத்தும் திகதி குறித்து அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார்.

Read more...

புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ வை ஓராண்டு கம்பி எண்ண இந்திய நீதிமன்று உத்தரவு.

இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசிய தேசத்துரோகக் குற்றத்திற்காக வை. கோபாலசாமிக்கு இந்தியத் நீதிமன்றினால் ஒராண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று வழங்கப்பட்டுள்ள இத்தண்டனை தொடர்பாக இந்திய ஊடகச் செய்திகள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது.

திமுகவுடன் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் வைகோ வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதுள்ள வழக்கு ராஜ்யசபா உறுப்பினர் ஆவதற்கு இடையூறாக இருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் - திமுகவிற்கு எதிராகவும் பேசினார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேசியதாக கூறப்பட்டது.

இதைக் காரணம் காட்டி, இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியிருப்பதாகக் கூறி, திமுக ஆட்சியில் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகாலம் நடந்து வந்த இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் தீர்ப்பு இன்று வெளியானது. நீதிபதி சாந்தி வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்தார். தீர்ப்பை இன்றே சொல்லவா அல்லது திங்கட்கிழமை சொல்லவா என நீதிபதி வைகோவிடம் கேட்டார். இன்றே அளிக்கும்படி வைகோ தெரிவித்தார். அதன்படி வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பொதுவாக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே ஒருவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆவார். அதன்படி ஓராண்டு சிறை தண்டனை என்பது வைகோவின் மாநிலங்களவைத் தேர்வு பாதிக்கப்படுமா? என்பது வேட்பு மனுவைப் பரிசீலிக்கும் தேர்தல் அதிகாரியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று ஒருசாரரும், 8(3)-ன் கீழ் இரண்டு ஆண்டுக்குள் தண்டனை பெற்றிருந்தால் பிரச்சினை இல்லை என ஒருசாரரும், ஒருவேளை 8(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியிழப்புக்கு ஆளாகிறார் எனவும் தீர்ப்பு குறித்து தெரிவிக்கின்றனர்.

தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படி வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு மாதத்துக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Read more...

கிழக்கிலங்கையில் இனநல்லுறவை ஏற்படுத்த இசைநிகழ்கிகளை நடாத்தும் படையினர்!!

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளில், இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் மாபெரும் இசை நிகழ்ச்சி அம்பாறை 24ம் விஜயபாகு படைப்பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகேவின் ஒழுங்கமைப்பின் கீழ் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புக்களுடன் கல்முனை, பொத்துவில், அம்பாறை, உகனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் வர்த்தக பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், கிழக்கு மற்றும் அம்பாறை பிராந்திய முப்படை அதிகாரிகள் பொலிஸ் பிரதானிகள் என பலர் பங்குபற்றியதுடன் இப்பகுதியின் மூவின மக்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை இந்த இசை நிகழ்ச்சியானது நாட்டின் சுமூக நிலையை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பாக அம்பாறை பிராந்திய பிரதேச மக்களிடையே பாதுகாப்பு உறுதிப்படுத்துவதாகவும் அமைந்ததோடு படையினரின் துரித செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுவதாக பொது மக்கள் கருத்து வெளியிட்டனர்.

பைஷல் இஸ்மாயில்






Read more...

Thursday, July 4, 2019

சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய பிளாவில் புளித்த கள்ளு.

எதிர்வரும் 4 மாதங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என பல்வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தல்களின் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக அரசியல் கட்சிகள் தமது வழமையான வியூகங்களை வகுக்க தொங்கியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ' நாங்கள் ஆயுதம் தூக்குவதற்கும் தயங்கமாட்டோம்' என்று தேர்தல் குண்டு போட்டுள்ளார்.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் , சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல் கூட்டமைப்பது தொடர்பில் பலசுற்று பேச்சுக்களை நடாத்தி முடித்துள்ளது. அப்பேச்சுக்கள் வெற்றியளித்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் 'சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன' என தமது கூட்டணிக்கு பெயரிட இரு தரப்பும் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தேர்தல் கூட்டுக்கள் என்பது மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் கூட்டுச் சதி என்பது வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கூட்டுச் சேரும் கட்சிகள் கதிரைகளை பெற்றுக்கொண்ட பின்னர் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஒன்றிணைந்து பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பீமன்.

Read more...

படையினரின் தடையை மீறி பாடசாலையினுள் நுழைய முனைந்த நபர் சுட்டுக்கொலை.

பாடசாலை ஒன்றின் முன்னால் பாதுகாப்பு கடமையில் நின்றிருந்த இராணுவ வீரர் ஒருவரின் கட்டளையை மீறி பாடசாலையினுள் நுழைய முனைந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அக்கீமன பிரதேசத்தில் இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் இராணுவத்தினால் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

குறித்த நபர் பாதுகாப்புக்கு நின்றிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகள் சுகயீனமுற்றிருப்பதாக பாடசாலை நிர்வாகத்தினர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த நபர் இராணுவத்தினரின் கட்டளையை மீறிச் சென்றபோதே சம்பவம் நிகழந்ததாக அறியக்கிடைக்கின்றது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

Wednesday, July 3, 2019

எனது கணவன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எனது சட்டையை பிய்த்து அடித்தனர்.

சிங்கள இளைஞன் ஒருவனை திருமணம் முடித்திருந்த அப்துல் ஹசாத் பாத்திமா ஹைபம் (38) என்ற பெண் தனது கணவன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் தனது வீட்டினுள் புகுந்த பள்ளிவாயல் நிர்வாத்தினர் சட்டையை பிய்த்து அடித்து துன்புறுத்தினர் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் முன் தோன்றிய அவர்:

நான் எனது சுயவிருப்பின் பெயரில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவரை திருணம் செய்திருந்தேன். நான் எனது மதத்தையும் அவர் அவரது மதத்தையும் தழுவிவந்தோம்.

பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எனது கணவரை இஸ்லாத்திற்கு மாறுமாறு பலமுறை வற்புறுத்தினர். அதற்கு பிரதியுபகாரமாக வாகனங்களையும் வீடுகளையும் தருவதாக கூறினர்.

அவர் மாற விரும்பாத போது அவரை விட்டுவிட்டு வரும்படியும் என்னை மறுமணம் செய்ய நிறைய முஸ்லிம்கள் காத்திருப்பதாகவும் கூறினர். பிரபல்யலமான செல்வந்தர்களான காஜியார்மார்கூட என்னை நேரடியாக அணுகினர். என்னையும் எனது மகளையும் பாரமெடுப்பதாக கூறினர்.

இச்சமயத்தில் இருப்பது மரணிப்பதைவிட வேதனையானதாகவே நான் உணர்கின்றேன். நீங்கள் தான் இஸ்லாத்தை விட்டுவிட்டீர்கள் உங்களது 11 மகளை முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள் என்றனர்.

எனது கணவனின் தாய் தந்தையரிடம் சென்று அவர்களையும் இஸ்லாத்திற்கு மாறுமாறு வேண்டினர்.

இவை யாவும் நிறைவேறாதபோது எங்கள் மீது வன்முறைகளை பிரயோகித்தனர். தெருவால் செல்லும் போது கல்லால் அடித்தனர். நான் துவிச்சக்கர வண்டி ஓடும்போது இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்றும் என்னை பார்த்து ஏனைய முஸ்லிம் பெண்களும் அதனை செய்ய முனைவர் என்று அச்சுறுத்தினர். இச்செயல்கள் அத்தனைக்கும் பின்னால் பள்ளிவாயல்களே உள்ளது.

ஒரு நாள் வீட்டை சுற்றிவளைத்தனர். கதவுகளை உடைத்தனர். வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டிருந்தபோது, கூரைமீதேறி ஓடுகளை கழட்டி நானும் பிள்ளைகளும் அழுதுகொண்டிருக்கும்போது வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து எமக்கு உளவியல் தாக்கத்தை தந்தனர்.

ஒருநாள் கதவை உடைத்துக்கொண்டுவந்து எம்மை தாக்கி இழுத்துச் சென்றனர். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றபோது பொலிஸார் எங்களை கூட்டில் அடைத்தனர். நான் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தபோது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர் நான் ஞானசார தேரரை அணுகினேன். அவர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தபோது வெறும் ஆறுபேரை பிடித்து நீதிமன்றில் நிறுத்தினர். நான் 14 பெயரின் பெயர்களை கொடுத்துள்ளேன் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்த பெண். அவர் ஊடகங்கள் முன் தெரிவித்தவற்றை இங்கு கேட்கலாம்.



விடயங்களை பகிரங்கமாக இப்பெண் தெரிவித்ததை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காக பொலிஸ் உத்தியோகித்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வீசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அது தொடர்பான பூரண விபரம் நாளை தரவேற்றம் செய்யப்படும்.


Read more...

அமெரிக்க இராணுவத்தால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கு முழுப்பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும். நாலக தேரர்.

அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொள்ளவுள்ள சோபா ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு எற்படவுள்ள பாதிப்புக்கான முழுப்பொறுப்பையும் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக்கொள்ளவேண்டும் என தேசிய உரிமைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பின் தலைவர் பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

சோபா ஒப்பந்தத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் மக்களுக்கு விளக்கும் ஊடகச் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்காவிற்கு இலங்கையில் தளம் அமைக்கும் நோக்கம் இல்லை என்று கூறுகின்றார். அவ்வாறாயின் அமெரிக்கப்படைகள் இந்நாட்டினுள் வீசா இன்றி நுழையலாம் என்று எதற்காக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியதுடன் ' அமெரிக்க தூதுவரிடம் பொய் பேசவேண்டாம் என்று கூறிக்கொள்வதாகவும்' தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட துடிக்கின்ற அரசாங்கமே அதனால் ஏற்படவுள்ள அனர்த்தத்திற்கு முழுப்பொறுப்பையும் எற்கவேண்டும் என்றும் மேலும் கூறினார்.

Read more...

ஷஹ்ரான் குழு பயன்படுத்திய டொல்பின் ரக வான் வண்டி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு.

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வான் வண்டி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை (03) திகதி நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் சாய்ந்தமருது பகுதியில் தாக்குதல் இடம்பெற முன்னர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்த ஷஹ்ரான் குழுவினர் வாடகை வான் வண்டி ஒன்றின் மூலம் மீரி­கம ஹந்­தா­முல்ல பகு­தி­யி­லுள்ள ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர்.

இவ்வாறு வாடகை மூலம் பெறப்பட்ட வான் வண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடரபான வழக்கு மன்றில் நீதிவானினால் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்பட்ட போது கடும் நிபந்தனைகளுடன் ரூபா 50 இலட்சம் பிணையில் குறித்த வான் வண்டி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது விடுவிக்கப்பட்ட வான் வண்டி வாடகை அடிப்படையில் பெறப்பட்ட போதிலும் பிணையில் விடுவித்த நீதிவான் உரிமையாளரிடம் வழக்கு தவணை நிறைவுறும் வரை வாகன ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்தல் விற்பனை செய்தல் கைமாற்றுதல் உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்துள்ளார்.

குறித்த வான் வண்டி அம்பாறை விசேட பொலிஸாரினால் காலை மன்றிற்கு கொண்டு வரப்பட்டதுடன் இவ்வாகனத்தை வாடகை அடிப்படையில் செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இன்று வரை வைக்கப்பட்டுள்ளார்.இச்சாரதி தனது வாகனம் இன்னுமொரு தரப்பிற்காக வாடகைக்கு வழங்கியதாக கூறி மேற்குறித்த பிணையில் விடுவிக்கப்பட்ட வாகன உரிமையாளரை அணுகி அதிக விலையில் வாடகை ஒன்று வந்துள்ளதாக கூறி வாகனத்தை கைமாறி எடுத்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும் வாகனத்தின் ஆவணங்களில் தனது மனைவியின் பெயரை பதிந்துள்ளமையினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டியை குறித்த பெண்ணே நீதிமன்றிற்கு வந்து எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விசாரணை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாறுக் ஷிஹான்.





Read more...

பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை கைது செய்யக்கோரி பௌத்த பிக்குகள் இணைந்து கண்டனம் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இனவாத உபதேசத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் ஸ்ரீதலதா மாளிகை வரை பேரணியாக சென்று கலாநிதி பாக்கியசோதியை கைதுசெய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

கண்டி யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமெவன் ரஜமகா விகாரையில் யூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், மருத்துவர் சாஃபிக்கு எதிராக சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை செய்ததாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக்காக கல்லெறிந்து படுகொலை செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்திருந்தார்.

அதுமாத்திரமன்றி முஸ்லீம்கள் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக உணவுகளிலும், பாணங்களிலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதனால் முஸ்லீம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது என்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சிங்கள மக்களுக்கு உபதேசமும் செய்திருந்தார்.

மகாநாயக்கரின் இந்த இனவாதக் கூற்றுக்களுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இருவரும், அதேபோல் இனவாதத்திற்கு எதிரான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

அஸ்கிரிய மகாநாயக்கரின் இந்தக் கருத்தானது முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கூற்று என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டு சட்டமான ICCPR இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலைத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜனாதபிதி, பிரதமர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

அதேபோல திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா, அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆகியோரின் கருத்துகளுக்கு எதிராக கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள், எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேரணி கண்டி நகரிற்கு மத்தியில் ஆரம்பமாகி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக சென்று முடிவடைந்தது.

பௌத்த தலைமைத்துவத்தினை சர்வதேச ரீதியில் அகௌரவப்படுத்தியிருக்கும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேரணிக்கு தலைமை தாங்கிய முப்பீடங்களின் பிக்குகள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான லியங்வெல சாசன ரத்தன தேரர் வலியுறுத்தினார்.

Read more...

கொலை அச்சுறுத்தல்! ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜர்

நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த முறைப்பாடு தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி இன்பராச என்ற நபர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு ஹிஸ்புல்லா அங்கு ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

Read more...

Tuesday, July 2, 2019

சஹ்ரானின் மனைவி வீசி, எறிந்த தொலைபேசி கண்டெடுப்பு!

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் திட்­ட­மிட்டு நடத்­திய அடிப்­ப­டை­வாத குழுவின் தலை­வ­ரான சஹ்­ரானின் மனை­வி­யினால் வீசி­யெ­றிந்­த­தாகக் கூறப்­படும் கைய­டக்கத் தொலை­பே­சியின் சில பகு­திகள் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படைப் பிரி­வி­னரால் திவு­லப்­பிட்­டிய – மீரி­கமை வீதியின் ஹல்பே குருல்­ல­கம, உலு­கடை சந்­திக்கு அருகில் வயல் வெளியில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­களின் போது கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சஹ்­ரானின் மனைவி, இந்த பாதை­யி­னூ­டாக பய­ணித்த போது கைய­டக்கத் தொலை­பே­சியை உடைத்து இந்த வெளியில் வீசி­யெ­றிந்­த­தாக இர­க­சிய பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தி­னை­ய­டுத்து பொலி­ஸாரும், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை பிரி­வி­னரும் அப்­ப­கு­தியில் புற்­களை வெட்டி தேடு­தல்­களை மேற்­கொண்ட போதே குறிப்­பிட்ட கைய­டக்கத் தொலை­பே­சியின் பகு­திகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இர­க­சியப் பொலி­ஸாரின் தடுப்­புக்­கா­வலின் கீழ் இருந்­து­வரும் சஹ்­ரானின் மனைவி இந்தப் பகு­திக்கு அழைத்து வரப்­பட்­ட­தா­கவும், அவர் இனங்­காட்­டிய குறித்த பகு­தியில் தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­கவும், அச்­சந்­தர்­ப்பத்­திலே கைய­டக்கத் தொலை­பே­சியின் பகு­திகள் என சந்­தே­கிக்­கப்­படும் சில­வற்றை கடந்த 30 ஆம் திகதி மாலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு மீரி­கம பொலி­ஸாரும், பிர­தே­சத்தின் பொது மக்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கினர்.

முகத்தை மறைத்து ஆடை அணிந்த முஸ்லிம் பெண்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி மீரி­கம, ஹந்­தா­முல்ல பகு­தி­யி­லுள்ள ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர்.

இதே­வேளை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது சுனாமி குடியேற்ற கிரா­மத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து பலி­யான வீட்டில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆடை கொள்­வ­னவு செய்­யப்­பட்ட கடையின் விப­ரங்கள் தொடர்­பாக நடாத்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் போது இந்த விப­ரங்கள் வெளி­வந்­தன.

அவ்­வி­டத்தில் சஹ்ரானின் மனைவி காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சி.ஐ.டி.யின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்க - இலங்கை சோபா ஒப்பதந்தத்தின் ஆபத்தான பாகங்கள் இதோ!

அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ள முயற்சிக்கின்ற சோபா ஒப்பந்தமானது இலங்கையின் இறையாண்மையை முற்றிலும் நிராகரிக்கின்றது என்பதை அவ்வொப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள சரத்துக்கள் உறுதி செய்கின்றது.

இலங்கையின் தேசப்பாற்றாளர்கள் பலராலும் எதிர்க்கப்படும் குறித்த ஒப்பந்தத்தில் பின்வரும் மிகவும் ஆபத்தான சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது:

இலங்கையினுள் நுழையும் அமெரிக்க சிப்பாய்களுக்கு செல்லுபடியான கடவுச்சீட்டோ இலங்கைக்கான வீசாவோ அவசியமற்றதாகின்றது.

இந்நாட்டினுள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் , விமானங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர்களை எவரும் சோதனையிடமுடியாது.

விமான நிலையத்தினூடாகவோ அன்றில் துறைமுத்தினூடாகவோ எடுத்துவரப்படும் பொருட்களுக்கு எவ்வித வரிகளும் அறவிடமுடியாது.

இங்கே அமெரிக்க வாகனங்களை பயன்படுத்துகின்றபோது அவற்றுக்கு இலங்கையின் அனுமதிப்பத்திரமோ அன்றில் இலங்கையின் சாரதி அனுமதிபத்திரமோ பெற்றிருக்கவேண்டியதில்லை.

அமெரிக்கப்படையினர் நாட்டின் எப்பாகத்தினுள்ளும் அமெரிக்க இராணுவ உடையில் ஆயுதங்களுடனும் யுத்த உபரகணங்களுடனும் நடமாட முடியும்.

இலங்கையின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் நிலம் என்பவற்றை அமெரிக்கா தனது தேவைக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதற்காக இலங்கையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை கிடையாது.

அமெரிக்க படையினர் இங்கு எதாவது குற்றம் புரிந்தால் அங்குற்றத்திற்கு இலங்கை நீதியின் பிரகாரம் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது, மாறாக அமெரிக்க நீதியின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையினுள் நுழையும் அமெரிக்கப்படைகள் பிராந்தியத்தில் யுத்தம் ஒன்று தோன்றுகின்றபோது இங்கிருந்து தாக்குலை தொடுக்கும்போது மேற்கொள்ளப்படக்கூடிய எதிர்த்தாக்குதலில் இந்நாடு எரிந்து சாம்பலாகும் என்பதை சற்றும் சிந்திக்காத ஆட்சியாளர்கள் இவ்வாறானதோர் ஆபத்தான ஒப்பந்தத்தை செய்து கொள்ள முயல்கின்றனர்.

இலங்கை அணிசேரா கொள்கை கொண்ட ஒரு நாடாகும். யுத்தம் ஒன்று இடம்பெறுகின்றபோது நாம் எந்தவொரு பக்கத்தையும் தெரிவு செய்யாத பட்சத்தில் எம்மை நாம் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம் அமெரிக்கப்படைக்கு யுத்தம் புரிய எமது நிலத்தையும் கடலையும் வழங்கிவிட்டு அணிசேரா கொள்கையை கொண்டுள்ளோம் என்பது அர்த்தமற்றதாகின்றது.

எனவே பாரிய அழிவு ஒன்றுக்கு வழிவிடும் குறித்த ஒப்பந்தம் எவ்வித நிபந்தனையும் இன்றி எதிர்க்கப்படவேண்டியதாகும். இதை எதிர்ப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்புகட்கு நாட்டுமக்கள் யாவரும் தமது ஆதரவை வழங்குவது தலையாய கடமையாகும்.

பீமன்.

Read more...

பூஜித – ஹேமசிறி ஆகியோரை வைத்தியசாலைக்குச் சென்று விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் லங்கா ஜெயரட்ண உத்தவிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்படி இருவரையும் வைத்தியசாலையில் கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அங்கு வைத்து விசாரணை செய்து வாய்முறைப்பாடுகளை பதிவு செய்தனர். அதன் பிரகாரம் மஜிஸ்ரேட் அவர்களுக்கு அறிக்கையிடப்பட்டதை அடுத்து வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்த பிரதான மஜிஸ்றேட் லங்கா ஜெயரட்ண அவர்களை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் பாரமெடுக்கப்பட்டுள்ள ஹேமசிறி மற்றும் பூஜித ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்ககளை உரியநேரத்தில் மேற்கொள்ளாததன் ஊடாக கடமையை உதாசீனம் செய்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளகியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் டப்புல டி லிபேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இவ்விருவரும் கடமையை தட்டிக்கழித்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகவும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அவர்கள் புரிந்திருப்பது மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றச் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்;கு 52 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Read more...

பூஜித - ஹேமசிறி நெஞ்சுவலியென வைத்தியாசாலையில் தஞ்சமடைந்திருந்தபோது சீஐடி யினரால் கைது.!

ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்ககளை உரியநேரத்தில் மேற்கொள்ளாததன் ஊடாக கடமையை உதாசீனம் செய்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளகியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் தமக்கு நெஞ்சு வலிப்பதாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் டப்புல டி லிபேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இவ்விருவரும் கடமையை தட்டிக்கழித்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகவும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அவர்கள் புரிந்திருப்பது மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றச் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்;கு 52 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

பிபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடகவே இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்கினார். மைத்திரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சட்டவிரோத போதைப் பொருட்களின் ஊடாகவே தமக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத கொள்வனவு உள்ளிட்ட தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்றே, சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுக்கும், போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் அமைப்புக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மேற்கொண்டு வருவதாகவும், அதனை தாம் முழுமையாக நிறைவேற்றுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் தனது தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தமது நாட்டுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன நாடொன்றின் மீது எந்தவொரு தரப்பிற்கும் அழுத்தங்களை மேற்கொள்ள முடியாது என கூறிய ஜனாதிபதி, இலங்கை சுயாதீன நாடாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, வெளிநாடுகளின் உதவிகள் அத்தியாவசம் என சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் சுயாதீன செயற்பாடுகளை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி, உதவிகளை பெற்றுக் கொள்ளும் தேவை தமக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மரண தண்டனை நிறைவேற்றும் தனது தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தன்னுடன் தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு வினவியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வளிப்பதற்கான இடவசதிகள் கூட கிடையாது எனவும் தான் ஐநா பொதுச் செயலாளருக்கு தெளிவூட்டியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, துஷ்பிரயோகங்கள், நோய்களின் அதிகரிப்பு, வறுமை நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு பேதைப்பொருள் பயன்பாடு காரணம் என்பதையும் தான் ஐநா பொதுச் செயலாளருக்கு தெளிவூட்டியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான இதுவரை தனக்கு எந்தவொரு தரப்பினரும் உதவிகளை வழங்கவில்லை என கூறிய ஜனாதிபதி, தனது தீர்மானத்திற்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் சட்டவிரோதமான முறையில் 50 பில்லியனுக்கும் அதிக தொகை போதைப்பொருள் வர்த்தகர்கள் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 80 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் கூறினார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 11,000 பேர் மாத்திரமே தங்க வைக்க முடியும் என கூறிய ஜனாதிபதி, சிறைச்சாலைகளில் தற்போது 24,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு ஆண்களை விட, பெண்களே அதிகளவில் அடிமையாகியுள்ளமை, ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவ்வாற நிலைமையில், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நாட்டை சிறந்த வழிக்கு முன்கொண்டு செல்ல மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

(பிபிசி தமிழ்)

Read more...

Monday, July 1, 2019

செல்வத்திற்காக சக உறுப்பினரை கொன்று சிறைசென்று மீண்டவர் செல்வத்தின் சமயலாளியாக!

தமிழீழ விடுதலை போராட்ட இயக்கங்களில் உட்படுகொலைகள் சர்வ சாதாரணமானவை. இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள் தமது கொள்கைகளை பாதுகாப்பதற்கு பதிலாக தலைமையை பாதுகாக்க புறப்பட்டதன் விளைவாகவே இயக்க மோதல்களும் உட்கட்சி படுகொலைகளும் இடம்பெற்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

அந்த வரிசையில் ரெலோ அமைப்பின் தலைவருக்காக சக உறுப்பினர் ஒருவரை கொலை செய்து பத்து வருடங்கள் விளக்கமறியலிருந்த நபர் ஒருவர் தற்போது பிணையில் விடுதலையாகி அவ்வியக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு கூலியாளாக வேலைபுரிவதாக அறியக்கிடைக்கின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகளுக்கு எதிராக செயற்படுகின்றோம் என இலங்கை இராணுத்திடம் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்ட ரெலோ அமைப்பானது அக்காலப்பகுதியில் மக்களின் சொத்துக்களை சூறையாடிவந்ததுடன் செல்வம் அடைக்கலநாதன் தனது போதைப்பொருள் வியாபாரத்திற்கு இயக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதாகவும் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அவ்வாறு போதைப்பொருள் மற்றும் மக்களிடம் பறிக்கப்பட்ட பணத்தினை பகிர்ந்து கொள்வதில் அமைப்பின் தலைமையுடன் முரண்படுகின்றவர்கள் செல்வம் அடைக்கலநாதனால் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறியோர் தெரிவிக்கின்றனர்.

செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளில் முரண்பட்டு வெளியேற முற்பட்ட றமேஸ் என்ற உறுப்பினரை செல்வத்தின் ஏவலின் பெயரில் கொலைபுரிந்த சீலன் என்ற கொலைஞனே இறுதியில் செல்வம் அடைக்கலநாதனின் சமையல்காரனாகவும் செல்வத்தின் உடுதுணிகள் தோய்கும் வேலைக்காரனாவும் மாற்றப்பட்டுள்ளதாக ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கற்குழி பிரதேசத்தின் மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையில் செல்வம் அடைக்கலநாதன் மாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இருந்தபோதும்இ அச்சந்தர்ப்பத்தில் தனக்கு படையினர் மற்றும் பொலிஸாருடனிருந்த உறவை பயன்படுத்தி செல்வம் தப்பித்துக்கொண்டதுடன் கொலையாளியான சீலன்; பத்து வருடங்கள் சிறையிலிருக்க நேரிட்டது.

குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமானது புலிகளால் செல்வத்திற்கு வழங்கப்பட்டிருந்த 9 எம்எம் கைத்துப்பாக்கி என்று தெரியவருகின்றது. இத்துப்பாக்கியை தனக்கு செல்வம் அடைக்கலநாதனே தந்ததாக சீலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தபோதும்இ பொலிஸார் செல்வம் அடைக்கலநாதனை குற்றவாளியாக இணைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுயலாபங்களுக்காக சக உறுப்பினர்களையே கொன்று கைகளில் இரத்தக் கறையுடன் உள்ள இவர்கள் இன்று சிங்கள அரசியல்வாதிகளின் சேவகர்களாக வெள்ளை உடையணிந்து வலம்வருகின்றனர்.


Read more...

விஜயகலாவின் பிரதேசவாதம்! போர்க்கொடி தூக்குகின்றது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்.

அண்மையில் வடகிழக்கை சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் 1019 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த நியமனம் வழங்கும் விடயத்தில் மண்ணெண்னை மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாகவும், அவர் மலையத்தில் நிரந்தர நியமனம் இன்றி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக 10000 ரூபாவிற்கு கடமை புரியும் 3021 ஆசிரியர்களை புறக்கணித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் மலையக ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடி நியமனத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அக்கடித்தில் மிக குறுகிய அரசியல் இலாபத்திற்காக மிக கஷ்டமான சூழலுக்கு மத்தியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள துன்ப வாழ்கையை மேற்கொள்ளும் தோட்டபுர மக்களின் பிள்ளைகளுக்காக, அர்ப்பணிப்போடு கஷ்டத்துக்கு மத்தியில் சேவை புரியும் இவ் ஆசிரியர்களின் சேவையை உடனடியாக நிரந்தரமாக்கும் படி கேட்டுக் கொள்ளும் எமது சங்கம், குறுகிய காலத்தில் இக்கோரிக்கையை நிறைவேற்றாவிடின் எவ்விதமான முன் அறிவிப்புகளும் இன்றி சகல ஆசிரியர்களையும் ஒன்றினைத்து பாரிய போராட்டம் ஒன்றிற்கு செல்ல வேண்டிவரும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com