Monday, July 1, 2019

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சவின் எண்ணம் ஈடேறுமா?

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலர் கோத்தபய ராஜபக்ச அதிபர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, ``எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்'' என்று முழக்கமிட்டார்.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, போர்க்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள், குறிப்பாக தீவிர எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள்.

அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் 2005 முதல் 2015 வரையில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார் கோத்தபய ராஜபக்ச. ஆனால் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், எதிர்ப்பாளர்கள் காணாமல் போனது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற புகார்கள் அவருடைய பதவிக் காலத்தில் அதிகமாக இருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, தீரமிக்கவராகக் கருதப்படும் கோத்தபய ராஜபக்சவால் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கை மக்கள் பலரும் கருதுகின்றனர்.

தாக்குதலைத் தொடர்ந்து கொழும்புவில் தனது இல்லத்தில் பிபிசிக்கு பேட்டியளித்த ராஜபக்ச, ``எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம்'' என்று கூறினார். ``இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் கலைத்துவிட்டார்கள்'' என்றார் அவர்.

தாங்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஈஸ்டர் நாள் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு, புலனாய்வுத் துறைகளின் தோல்விதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை செயலாளராக தாம் இருந்த காலத்தில், அடிப்படைவாத கருத்துகள் பரப்புவதைக் கண்காணிக்க சிறப்பு ராணுவப் புலனாய்வு இருந்தது என்றும், குறிப்பாக இன்டர்நெட் மூலமான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன என்றும் கோத்தபய ராஜபக்ச கூறுகிறார். இதற்கு சிறப்புப் பயிற்சிக்காக ராணுவ அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஜிகாதிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அரபிக் பேசும் நபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் சில பிரிவுகளை இப்போதைய அரசு கலைத்துவிட்டது என்று ராஜபக்ச குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் மைத்ரிபால சிறிசேன அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதை மறுக்கிறார். அவை மாற்றி அமைக்கப்பட்டு, தற்போதும் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு நகரில் ராஜபக்சவை முதன்முறையாக நான் சந்தித்தேன். அந்த சமயத்தில் முன்கோபம் கொண்டவராக அவர் கருதப்பட்டார். கடினமான கேள்விகளை, குறிப்பாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்புடையதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் புகார்கள் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்பதற்கு செய்தியாளர்கள் மிகவும் அச்சப்படுவார்கள்.

ஆனால் மிக சமீபத்தில் நாங்கள் சந்தித்தபோது, ராஜபக்ச நிறைய மாறிவிட்டதைப் போல தெரிந்தது. சுற்றிலும் புத்தகங்கள் இருந்த நிலையில் நடுவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர், கடினமான கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் அளித்தார் - தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். கடந்த பல ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்கு அவர் பதில் அளித்தே தீர வேண்டும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட அவர் உத்தேசித்துள்ளார்.

``பிரதான எதிர்க்கட்சியான எஸ்.எல்.பி.பி.யின் (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளராக நான் இருப்பேன். மற்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்'' என்று அவர் கூறுகிறார்.

எஸ்.எல்.பி.பி. கட்சி அதிகாரப்பூர்வமாக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்கலாம் என்ற விதிமுறை இருப்பதால், அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கூறுகிறார். ஆனால் மக்கள் முன் செல்வதற்கு முன்னால் சில தடைகளை அவர் தாண்டியாக வேண்டியுள்ளது.

முதலாவது தடையாக இருப்பது அவருடைய ஆரோக்கியம். இந்த நேர்காணலைத் தொடர்ந்து, ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று, சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குணமடைவதற்கு ஆறு வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருடைய இரட்டைக் குடியுரிமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சினையும் உள்ளது. அவர் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகள் வைத்துள்ளார். இலங்கை அரசியல் சட்டத்தின்படி, அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தரும் வரை அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது தொடர்பாக கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்ப ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் அடுத்த பிரச்சினையாக இருக்கும். ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட முதலாவது வழக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்ய அவர் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது. போர்க்காலத்தில் தமிழ்க் கைதி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது அவருக்கு எதிரான இரண்டாவது வழக்காக உள்ளது.

சன்டே லீடர் என்ற பிரபலமான பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்தா விக்ரமதுங்கா, ராஜபக்ச சகோதரர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தபோது, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றதாக தொடர்ச்சியாக அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார்.

விக்ரமதுங்கவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தனது மரணத்துக்கு முன்னதாக அதுகுறித்து அவர் தலையங்கம் எழுதியுள்ளார். அரசு தன்னை கொலை செய்யக் கூடும் என்று அதில் அவர் குறிப்பிட்டிரு்தார். 2009 ஜனவரியில் கொழும்பு நகரில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் அந்தப் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.

ராஜபக்சவுக்கு எதிராக அவர் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில் நடந்த படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா இதுதொடர்பாக கலிபோர்னியாவில் தொடர்ந்துள்ள வழக்கில், அளவு குறிப்பிடப்படாத இழப்பீடு கோரியுள்ளார். தனது தந்தையின் கொலையை தூண்டியவர் என்றும், அதற்கு ஒப்புதல் அளித்தவர் என்றும் ராஜபக்ச மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கனடா குடியுரிமை பெற்றிருந்த தமிழரான ராய் சமந்தனம் தொடர்பானது இரண்டாவது வழக்கு. போர் முடிவதற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். 2010ல் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக, தாம் கொடுமைபடுத்தப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. ``இவற்றை நான் செய்யவில்லை என்பதால், இரு வழக்குகளுமே அடிப்படை ஆதாரமற்றவை'' என்று ராஜபக்ச கூறுகிறார்.

விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களைக் கைது செய்ய, தமது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிடுகிறார்.

ராஜபக்சவுடன் பிபிசி நேர்காணல் நடத்திய பிறகு, அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜபக்சவிடம் இருந்து நஷ்டஈடு கோரி ஜூன் 26 ஆம் தேதி, மேலும் 10 வாதிகள் கலிபோர்னிய நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கொடுமைபடுத்தப்பட்டதாக சில புகார்களும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சில புகார்களும் அதில் உள்ளன.

தனக்கு எதிரான இந்த அனைத்துப் புகார்களும் ``அரசியல் காரணங்களுக்காக'' கூறப்படுபவை என்று பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் கூறுகிறார். ``நான் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்குச் சென்று வருகிறேன். அவர்கள் ஏன் இப்போது அந்தப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ராஜபக்சவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாமல் அவரைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய அரசியல் எதிரிகள் இந்த காலக்கட்டத்தை தேர்வு செய்து வழக்குகள் தொடர்கிறார்கள் என்று அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.

அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுற்ற 10வது ஆண்டு தினத்தை நாடு கடைபிடிக்கவிருந்த நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன.

சுமார் மூன்று தசாப்தங்களாக அந்த உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை ஆரம்பித்த பிறகு, கடைசிகட்டத்தில் குறைந்தபட்சம் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வும் வேறு சில அமைப்புகளும் கூறுகின்றன.

இறுதி நிலையில் வடகிழக்கில் கடலோரப் பகுதியில் சிறிய நிலப் பகுதியில் பல ஆயிரம் பொது மக்களும், விடுதலைப் புலிகள் பலரும் சிக்கிக் கொண்டனர். அந்தப் பகுதி மீது ராணுவம் தொடர் குண்டுவீச்சுகள் நடத்தியது. தப்பியோட முயன்ற பொது மக்களை, விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

படுகொலைகள் நடக்கும் என்ற எச்சரிக்கைகள், நிஜமாகிவிட்டன என்று, அந்த காலக்கட்டத்தில் கொழும்பு நகரில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் வசமிருந்த பகுதிகளில் இருந்து சரணடைந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் என்னவானார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

சண்டையின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரால், பரவலாக தமிழர்கள் எவ்வாறெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்று விவரிக்கும் விடியோக்களும், நேரடி சாட்சியங்களும் போர் நிறைவுற்ற பிறகு வெளியாயின. இவற்றின் அடிப்படையில், மக்களுக்கு எதிராக, ராணுவத்தாலும், விடுதலைப் புலிகளாலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றி விசாரிக்க போர்க் குற்றங்கள் டிரிபியூனல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா.வும், பிற மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், உள்நாட்டு அமைப்புகள் மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை, அடுத்தடுத்து வந்த அரசுகள் தடுத்து நிறுத்திவிட்டன.

ஆனால் போருக்குப் பிறகு நீதியை நிலைநாட்ட எதுவுமே செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குழுவினரை சந்தித்தேன். ராணுவத்திடம் சரணடைந்த தங்களுடைய மகன்கள், சகோதரர்கள் மற்றும் மகள்களின் கதி என்னவாயிற்று என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

சரணடைந்தவர்களைக் கொலை செய்துவிட்டதாகக் கூறும் இந்தக் குற்றச்சாடுகளை ராஜபக்ச கடுமையாக மறுக்கிறார்.

``எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். எல்லாமே அவசரமாக நடந்தன. எல்லாமே குழப்பமான சூழ்நிலையில் நடைபெற்றன'' என்று அவர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த சுமார் 13,000 விடுதலைப் புலிகளுக்கு, போர் முடிந்த பிறகு மறுவாழ்வு வசதிகள் செய்து தரப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். விடுதலைப் புலிகளில் சிலர் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற புகார்களையும் அவர் மறுக்கிறார்.

``இல்லை. ரகசிய சிறைகள் எதையும் நாங்கள் நடத்தவில்லை. இந்த நாட்டில் ரகசிய சிறைகளை நடத்துவது எளிதானதல்ல'' என்கிறார் அவர்.

அவரை விமர்சிப்பவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். போர் முடிந்த பிறகு, செய்தியாளர்கள், மனித உரிமைக் குழுவினர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் ராணுவ முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் என்னவானார்கள் என்பதை சுதந்திரமான அமைப்பு எதுவும் உறுதி செய்யவில்லை.

2015 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த போது சிறுபான்மை தமிழர்களும், மனித உரிமை போராளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.

போர் முடிவுக்கு வந்த ஆண்டில் அமைதி நிலவியது. போரின் வடுக்கள் மறைவதற்கான அவகாசமாக அது அமைந்தது.

ஆனால் அந்த எண்ணங்களை தகர்ப்பதாக ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் அமைந்துவிட்டன. சமீபத்தில் அரசியல் நெருக்கடிகளுடன், இந்தத் தாக்குதல்களும் நடந்ததால், மக்களின் எண்ணங்கள் மாறிவிட்டன.

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அரசுக்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இப்போதைய அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டதால் இலங்கை மக்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இலங்கையிலும், உலக நாடுகளிலும், இந்தப் பிரச்சனையை அரசு சரியாகக் கையாளாதது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பலம் மிக்க ஒரு தலைவர் வேண்டும் என இலங்கை மக்கள் பலரும் ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. இதைச் செய்வதற்கு சரியான நபர் தாம்தான் என்று ராஜபக்ச கூறுகிறார். ஸ்திரத்தன்மையை மீண்டும் தம்மால் உருவாக்க முடியும் என்கிறார்.

ஆனால் பலமான தலைவர் வேண்டும் என்ற ஆசை, மக்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர ஆபத்தை மிஞ்சியதாக இருந்துவிடக்கூடாது என்று மனித உரிமை போராளிகள் எச்சரிக்கின்றனர்.

ராஜபக்சவுக்கு வாய்ப்பு கிடைக்குமானால், உயர்ந்த பதவிக்கு கடினமானவராகவே இருப்பார்.

பிபிசி-அன்பரசன் எத்திராஜன்

Read more...

பூஜித மற்றும் முன்னாள் பாதுகப்பு செயலரை மன்றில் ஆஜர்செய்ய ஆலோசனை. கைது செய்யப்படுவார்களா?

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபர்களாக குறிப்பிட்டு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளபோதும், இதுவரை அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று (01) மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பிய சட்டமா அதிபர் அறிவுறுத்தல் தொடர்பில் இதுவரையில் செயற்படாமை தொடர்பில் காரணங்களை இன்றை தினத்திற்குள் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் சட்ட மா அதிபர் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முரண்பட்டுக்கொள்ளுகின்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தபோதும், அழிவினை தடுப்பதற்கு போதிய நடவடிக்கையை மேற்கொள்ளாது கடமையை உதாசீனம் செய்துள்ளார்கள் என்ற குற்றச் சாட்டுக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தமிழரசுக் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார் சிறிதரன். புதிய நிர்வாக குழுவில் எந்தப்பதவியும் இல்லை!

கடந்த 29 (சனிக்கிழமை) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடும், வாலிப முன்னணி மாநாடும் யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுத் தெரிவும் இடம்பெற்றுள்ளது.

இத்தெரிவின்போது தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவிக்கும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்படாது தூக்கியெறியப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

ஆங்கு இடம்பெற்ற பொதுக்குழு நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின்போது, கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவும் பொதுச் செயலாளராக கி.துரைராஜசிங்கம் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

துணைத் தலைவர்களாக பொன். செல்வராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இணைப் பொருளாளர்களாக பெ.கனகசபாபதி, வ.கனகேஸ்வரன் ஆகியோரும், உப தலைவர்களாக க.துரைரெட்ணசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.குருகுலராஜா, சி.சிவமோகன், அ.பரஞ்சோதி மற்றும் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

துணைச் செயலாளர்களாக எஸ்.எக்ஸ்.குலநாயகம், ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், சி.தண்டாயுதபாணி, சாந்தி சிறீஸ்கந்தராஜா, கே.வி.தவராசா மற்றும் த.கலையரசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இத்தெரிவுகளின்போது எந்தவொரு பதவிக்கும் சிறிதரன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம், அவர் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள அதிதீவிர உறவும் , சஜீத் பிறேமதாஸவின் நேரடி முகவராக கிளிநொச்சியில் செயற்பட்டு வருகின்றமையும் கட்சி உறுப்பினர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

நான் செல்வநாயகம் பேசுகிறேன்!!

அன்புத் தம்பிகளே! ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?

எனது நோயின் காரணமாக என்னால் பேச முடியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அன்று அமிர்தலிங்கம் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்லி என்னை அன்புடன் தந்தை செல்வா என்று வாஞ்சையுடன் அழைத்த எனது மக்களைத் தவறாக வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியே வட்டுக்கோட்டை தீர்மானமும் பின்னர் இன்றுவரை நீண்டுசெல்லும் அவலங்களும்.

இவர்கள் தமது அதிகாரப்பசிக்காகத் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. அன்று கட்சிக்குள்ளேயே தமிழீழத்திற்கான எல்லைகளை எப்படி நிர்ணயம் செய்வது? வேலியா போடமுடியும் அல்லது சுவரெழுப்புவதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருந்தன. இத்தனையையும் கண்ணுற்றபின்னும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்று கடவுளை வேண்டியபடியே இருந்தேன். ஒருவழியாக 1977ஆம் ஆண்டு எனது பிரார்த்தனை பலித்துவிட்டது. நான் உங்களின் அரக்கப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டேன். எனக்கு கிடைத்த விடுதலையினால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.

ஆனாலும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீக முயற்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க தீவிரவாத ஆளும் சக்திகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் விளைவாக எப்படியாவது ஈழத்தை அடைந்துவிட வேண்டும் என்னும் எண்ணம் எமது இளம்பிள்ளைகளிடம் கருக்கொண்டது. சரி பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற முடிவிற்கு இளைஞர்கள் வருவதற்கு எம்மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களே காரணம் என்பதை அறிவீர்களா?

தங்கள் கண்முன்னே தமது தலைவர்கள் தாக்கப்படுவதை சகிக்க முடியாமலும் சாத்வீகப் போராட்டங்கள்கூட மூர்க்கமான ஆயுதப்படைகளினால் அடக்கப்பட்டதன் விளைவாக இனி சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் இருக்க முடியாது என்ற கள யதார்த்தமுமே ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறைமையுள்ள தனி அரசை ஸ்தாபிப்பதற்கான முயற்சி என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

பண்டாரநாயகவுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட உடனேயே சிங்கள தலைமைகள் எம்மை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நான் உணர்ந்திருந்தேனே. நான் மரணிக்கும்வரை என்னுடன் பயணித்த உங்களால் எப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது?

தம்பி அமிர்தலிங்கம்கூட மலேசியா சிங்கப்பூர் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டி இப்படி ஒரு சில நாடுகள் இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைந்துள்ளன என்று தெரிவித்திருக்கின்றார்.

1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் என்று கூறினீர்களே இது உங்களது அயோக்கியத்தனம் இல்லையா?

தமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட அமைச்சர் பதவிக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைக்குமான தேர்தல்களில் போட்டியிட்டீர்களே? இதுதான் உங்களது அரசியல் நேர்மையா?

தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு தவிர்ந்த ஏனைய எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் வற்புறுத்திய நேரத்தில் மேற்குறித்த தேர்தல்கள் ஈழத்திற்கான குட்டிப் பாராளுமன்றத் தேர்தல்கள் என்று மக்களை ஏமாற்றினீர்களே இதுதான் உங்களது விசுவாசமா?

இவ்வளவும் கடந்த பின்னர், நாம் தூண்டிவிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இளைஞர்கள் எமது கோரிக்கையை சிரமேற்கொண்டு தனிநாட்டை அடைவதற்காக நடத்திய ஆயுதப் போராட்டமும் பிரபாகரன் என்ற கொடுங்கோலனால் திசை திருப்பப்பட்டு அழிவில் முடிந்தது. மஹிந்த ராஜபக்ச அந்த கொடுங்கோலனை கொன்றொழித்ததன் ஊடாக உங்களுக்கு சுதந்திரமாக அரசியல் செய்ய இடம் கிடைத்தது. ஆனாலும் நீங்கள் மக்களுக்கு ராஜதந்திர முறையில் சேவை செய்வதை விடுத்து சுயலாப அரசியல் செய்கின்றீர்கள்.

எனது கட்சியின் பெயரையும் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துதானே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டீர்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடும்போதுகூட எமக்கான அபிவிருத்தியை நாமே மேற்கொள்ள இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த ஆணை வழங்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டீர்கள். அபிவிருத்திக்கான நிதியை எமது புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்தும், நட்பு நாடுகளிலிருந்தும் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினீர்களே. இவற்றில் எதையாவது நிறைவேற்றினீர்களா?

யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து வரவு-செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவு-செலவு திட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது ஏன்? வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மிகவும் குறைந்தளவில் இருந்தபோதிலும் அவற்றிற்கான நிதியைப் போராடிப் பெறாதது ஏன்?

மக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டமூலத்திற்கு எதிராக காலையில் நாடாளுமன்றத்தில் விவாதித்துவிட்டு மாலையில் அந்த சட்டமூலத்திற்காக வாக்களித்ததின் மர்மத்தை விளக்குவீர்களா?

புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் பல குழப்பங்களை ஏற்பத்தும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தியதன் பின்னணியை விளக்குவீர்களா?

இன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இழுத்தடிப்பதற்கும் இந்த சட்டம் தானே உங்களுக்குக் கைகொடுக்கிறது. அதாவது மாகாணசபைத் தேர்தல்களில் 50வீதம் வட்டார அடிப்படையிலும் எஞ்சிய 50வீதம் விகிதாசார அடிப்படையிலும் என்ற குழப்பகரமான சட்டம்தானே இன்று உங்களை தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறது.

ஆயுதப் போராட்ட அமைப்பினரின் மீது விரல்நீட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது அருகதை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் செய்திருக்கும் செயற்பாடுகள் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின்போது நடத்திய தவறுகளைவிடவும் பாரதூரமானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் கொள்கைப் பற்றும் இல்லை. மிதவாத அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டிய இராஜதந்திர அணுகுமுறையும் இல்லை. ஆனால் கதிரைகளை சூடேற்றி உங்களது வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு என்பெயர்தானா உங்களுக்குக் கிடைத்தது?

அன்று அமிர்தலிங்கமும் நவரட்னமும் முடிவுகளை மேற்கொண்டு ஏனையோரை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தார்கள். காங்கிரசிலிருந்து வந்திருந்த சிவசிதம்பரம் கூட்டணியின் தலைவர் என்ற பதவியுடன் வாயடைத்து அமிர்தலிங்கத்தின் குரலுக்குப் பின்பாட்டுப் பாடுபவராக மாறினார். இன்று அந்த வேலையை கூட்டமைப்பு என்ற பெயரில் ரெலோவும் புளொட்டும் செய்கின்றனர். அன்று அமிர்தலிங்கம் செய்ததையே இன்று நீங்கள் செய்கின்றீர்கள். அமிரின் இடத்தில் சம்பந்தன் இருக்கிறார். நீலன் திருச்செல்வத்தின் இடத்தில் சுமந்திரன் இருக்கிறார். இரண்டு பேரும் அன்றைப் போலவே இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக்கொண்டு சுபபோகங்களை அனுபவித்துக்கொண்டு என் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள்.

பின்னால் வரப்போகிற விடயங்களை அறிந்துதானே இனி நான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் பெயரையோ கொடியையோ இலச்சினையையோ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி என்னுடன் கொள்கையளவில் முரண்பட்ட ஜிஜியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி உங்களிடம் கொடுத்துவிட்டு நான் எனது கண்களை மூடினேன். எனது பூத உடலின்மீதுகூட எனது கட்சி கொடி போர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தேனே அப்படி இருந்தும் எனது பெயரையும் எனது கட்சியையும் என்ன அடிப்படையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் தொல்லை தாங்க முடியாமல்தானே இறைவன் எனக்கு நோயைக்கொடுத்து தன்னுடன் அழைத்துக்கொண்டான். அதனால்தானே இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினேன். ஆனால் நீங்கள் என்னை இன்று கல்லறையில்கூட நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்கிறீர்களே.

இனி தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வருவதற்குள் மக்களே இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். எனக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்ற அடிப்படையில் திரு சம்பந்தனை அவரது இளமைப்பருவத்தில் நானே அரசியலுக்கு அழைத்துவந்தேன். இன்று அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

இனியும் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, இவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த உறுதியானதும் கொள்கைப் பிடிப்புடையதும் நிதானமாகச் செயற்படுவதும் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்படக்கூடிய வலுவானதும் சட்டவலு உள்ளதுமான ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து, அத்தகைய முன்னணியை உருவாக்கி எமது உரிமைக்குரலை சர்வதேச அளவில் எடுத்துரைத்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும்படி என்னை தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ள எம் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

Read more...

பத்தாயிரம் பிக்குகள் ஒரு லட்சம் மக்கள் தலதாக மாளிகை முன்னிலையில் ஒன்று கூடி அடிப்படை வாதத்திற்கு எதிராக மகஜர்.

அரபுக் கல்­லூ­ரிகள், தௌஹீத் பள்­ளி­வா­சல்கள், காதி நீதி­மன்­றங்கள் மற்றும் ஹலால் விவ­காரம் உட்­பட முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு அவற்றைத் தடை­செய்­யு­மாறு அர­சாங்கத்­திடம் மகஜர் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்தத் தீர்­மா­னங்கள் எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி தலதா மாளிகை திடலில் நடை­பெ­ற­வுள்ள பிக்­குகள் மாநாட்டில் மேற்­கொள்ள வுள்­ள­தா­கவும் பொது­ப­ல­சேனா அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்கப் பட்­டுள்­ளது.

இந்த பெளத்த குரு­மார்­களின் மாநாட்டில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்­களும் 10 ஆயிரம் பௌத்த குரு­மாரும் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் இன ரீதி­யான சட்­டங்­க­ளுக்குத் தடை­வி­தித்து நாட்டு மக்கள் அனை­வரும் ஒரு­மித்த ஒரு சட்­டத்தின் கீழ் ஆளப்­ப­டு­வ­தற்கு மகஜர் தயா­ரித்து பொது­மக்­க­ளி­னதும், பௌத்த குரு­மார்­க­ளி­னதும் கையொப்­பங்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கண்டி தல­தா­மா­ளிகைத் திடலில் இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளதால் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமை­வ­துடன் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை பொது­ப­ல­சே­னா­வினால் ஏற்­பாடு செய்­துள்ள இம்­மா­நாடு முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி கடந்த வியா­ழக்­கி­ழமை தனது பாரா­ளு­மன்ற உரையின் போது தெரி­வித்­துள்ளார். அவ­ச­ர­கால சட்­டத்தை முழு­மை­யாக மீறி நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்­டுக்கு எதி­ராக பாது­காப்புத் தரப்­பினர் இது­வரை எவ்­வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் மாநாடு தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

நாடு அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதற்கு எதிரான ஜனநாயகக்குரலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொண்டு அடக்குமாறு அமைச்சர் பௌசி கோருவதாக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளது.

Read more...

போதையிலிருந்து விடுதலையான தேசத்தை நோக்கிய விழிப்புணர்வு! கிட்டங்கி பாலத்தில் ஊழியர்கள்

போதையிலிருந்து விடுதலையான தேசம் எனும் நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய திங்கட்கிழமை(1) கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணேஸ்வரனின் பங்குபற்றலுடன் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தொற்றா நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றினை காலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வீதியில் பயணம் செய்த பாதசாரிகள் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஏனைய வாகன சாரதிகள் இடைநிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு முறைகள் சாரத்திய ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டது.

மேற்குறித்த வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல் தலைக்கவசம் அணிதலின் ஒழுங்கு விதிகள் தலைக்கவசத்தின் பட்டியணிதல் சாரதிய செயற்பாட்டில் தொலைபேசி உரையாடலில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பிலான அறிவுரைகள் யாவும் வழங்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இச்செயற்றிட்டமானது கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதானமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி செயற்திட்டம் வீதியோர விழிப்பூட்டல்களாக மட்டுமல்லாது பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் அரசாங்க திணைக்களங்கள் என பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள்களின் பாவனை கூடிவருவதனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக உள்ளன. எமது எதிர்கால சந்ததியினரை அதிகளவு இப்போதைப்பொருள் பாதித்துக்கொண்டிருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டே வருகின்றனர்.





Read more...

Sunday, June 30, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 7 - யஹியா வாஸித்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் வாழைச்சேனைக்கு மீன் யாவாரம் பண்ண போயிருந்தன், அங்க ஒரு ரெண்டுமாதம் தங்க வேண்டி இருந்தது. காலி, மாத்தற, கிரிந்த, வல்வெட்டித்துற ஊர்காவல்துற, மன்னார் மீன் யாவாரிகளுடனல்லாம் பட்டயடிச்சிருக்கம். ஆனா இந்த வாழைச்சேனையானுகள் மாதிரி மீன் யாவாரத்துல பக்கா ஜென்டில்மனுகள நான் எங்கேயும் பார்க்கல. மீனுக்கு ஒரு சங்கம். சங்கத்துக்கு பல லொறிகளும் போட்டுகளும், வாவ். பட்டய கெளப்புறானுகள்.

அவங்க போர்ர சேட்டுகளையும், அந்த பிராண்டுகளையும் பார்த்தால் நமது அய்ரோப்பிய சென் ஜோன்ஸ், சென் லூயிஸ் சேட்டுக்கள் எல்லாம் ஜகா வாங்கும்.

இந்த ஊரகாவல்தொறையிலேயும், வேலனையிலையும் நம்மளுக்கு தெரிஞ்ச கொஞ்சம் சம்மாட்டிமார் இருக்காங்க, இவர்கள வாழைச்சேனை காக்காமாருக்கிட்ட கொண்டுவந்து ஒரு குட்டி கிளாசெடுக்கணும்.

இந்த வாழைச்சேனையான் ஒரு பிளேன் டீ குடிக்கவேண்டுமென்டாலும், டீ குடிக்க வேண்டுமென்டாலும், ஒரு பெட்டீஸ் திங்க வேண்டுமென்டாலும் வாழைச்சேனையில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில உள்ள, கொழும்பு ரோட்டில் அமைந்துள்ள நாவலடி சந்திக்கு மோட்ட சைக்கிளை எடுத்துக்கிட்டு பறப்பாங்க அந்த அளவுக்கு, காரம், மணம், குணம் நிறைந்த பொருட்கள் நாவலடி சந்தியில சுவைக்கலாம்.

நாமும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பைக்கில் தொற்றிக்கொண்டு பறப்போம். அது ஒரு தனி ஒலகம். வாய்க்கால் தண்ணில கிளாஸ் கழுவி, வேருவ வடிய வடிய ரொட்டிவீசி, பழைய பஞ்சாய்ப்போன ரப்பர் சீட்டுல கொசு மொய்க்க, மொய்க்க அவர் அத கொண்டு வந்து வைக்க, நாங்க மெய் மறந்து அத திங்க ...அது ஒரு தனி ஒலகம்.

ஆனா அந்த நாட்களில், அந்த நாவலடி சந்தியில் ஒரு அதிசயம் நடந்து கொண்டிருந்தது. அந்த காஞ்சி போன சந்தியடியில் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், வயோதிபர்களும், அந்த குட்டி குட்டி கடைகளுக்கு பின்னாலும், முன்னாலும், மரங்களுக்கடியிலும் நின்று சில வரைபடங்களைவைத்துக்கொண்டு குசு குசு என கதைத்துக்கொண்டிருந்தார்கள். நம்ம தொழிலே ஒட்டு கேட்கிறதும், காட்டி கொடுக்கிறதும்தானே..... காது கொடுத்தோம்.

ஆம், அனைவரும் காணி புரோக்கர்ஸ். ஹிஸ்புல்லாஹ் வுக்காக காணி தேடும் காத்தான்குடி மக்களும், அவருக்கு காணி விற்க வந்த புரோக்கர்களும். இதில் நிறைய பேர் தமிழ் இளைஞர்கள், இன்னும் சிலர் முன்னாள்
போராளிகள்.

ஒவ்வொருவரின் கைகளிலும் நூற்றுக்கணக்கான உறுதிகள், ஒப்பினைகள்.

ஒருபக்கம் வாகனேரி, புனானை, ரெதிதென்ன, வெலிகந்த, செவனப்பிட்டி, மன்னம்பிட்டி, கதுருவல மறுபக்கம் காசன்கேணி, பணிச்சம்கேணி,வாகர, பால்சேன, வெருகல், அலியுளுவ, மூதூர் என மொத்த காணி உறுதிகளும் நாவலடி சந்தியில் துள்ளி விளையாடியது.

மட்டக்களப்புகச்சேரியடியில் காணி இலக்கம் பார்க்கிறதுக்கு என்றே ஒரு கூட்டம். கச்சேரிக்குள்ள காணி உறுதி செக் பண்ணி மோட்ட பைசிக்கிள் தொடக்கம் கார், ஆட்டோ வாங்கி முன்னேறியவர்கள் பல பேர் உண்டு.

தமிழன், சோனவன் எந்த பாகு பாடும் கிடையாது, காத்தான்குடியில ஹிஸ்புல்லாஹ் ஹாஜியார்ற ஒபிசடியில, நூறு மோட்ட ச் சைக்கிள், இருநூறு புஸ்சைக்கிள், ஒபிசுக்குள்ள நம்ம முன்னாள் தோழர்கள் ஈச்சம் பழம் திண்டுக்கிட்டு, காஹ்வா( எல்லாமே அரபி ஸ்டைல் - அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது இதுதானோ ) குடித்துக்கொண்டு, ஹிஸ்புல்லாஹ்ட கோளையனுகளுக்கிட்ட கோடிகளில் வியாபாரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அரபிகள் சிலர் ஹெலிகொப்டர்களில், பலர் பஜிரோக்களில் வந்தார்கள், போனார்கள், ஹிஸ்புல்லாஹ் காலையில் கொழும்பில் இருப்பார், பகல் சாப்பாட்டுக்கு சவுதியில் இருப்பார். அரபிகள் வரும்போது கொண்டு
வரும் ஈச்சம் பழ பொட்டியை தூக்க எண்டே, எயாபோட்டில் இருந்து காத்தான்குடி வரை பஜிரோ ஒண்டு வேலை செய்யும். நாமளும் ரெண்டுதரம் அந்த ஈச்சம்பழ பெட்டிகளுடன் பயணம் செய்திருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்ச்சத்தை உருவாக்க, காத்தான் குடி மெத்தை பள்ளிவாசலடியில் அகமத் லெப்பை, அவரது தம்பி ஜவாத், ஏராவூர், ஓட்டமாவடி ஜீனியஸ்கள் மற்றும் அக்கரைப்பற்று குட்டி குட்டி புள்ளைகள் என ஒரு குழு பிள்ளையார் சுழி போடும்போது, பழைய புஸ் பைக்கில் வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் தானைத்தலைவர் ஹிஸ்புல்லாஹ் வையும் இன்றைய அல்லாஹ்ட புள்ள என
சொல்லிக்கொள்ளும் ஹிஸ்புல்லாஹ்வையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

இந்த கால கட்டங்களில் பழைய ஜி எஸ் மாருக்குத்தான்மார்க்கட். காணி இருக்கின்ற ஏரியாவ சொன்னாலே போதும், அது ரிசேர் வெர்சனா அல்லது ஒரிஜினலா என செவிட்டில் அடிச்சதுபோல் சொல்வார்கள். எல்லாருமே தமிழ் ஜி எஸ் மார்தான். ஒரு தகவலுக்கு ஐநூரில் இருந்து ரெண்டாயிரம் கைமாறும்.

பாவம் வியாளேந்திரனும், மஹா கனம் பொருந்திய அத்துரலிய ரத்னதேரரும். இந்த புதையலை தோண்ட புறப்பட்டால் நிறைய பூதங்கள் கெளம்பும்.. அந்த பூதங்கள் சுப்பர்ர அல்லது சுப்புரமணிங்களிண்ட
கொல்லைகளில் இருந்தே கெளம்பும் என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.

போன கெளம பணிச்சம்கேணி தமிழ் புரோக்கர் ஒருவருக்கு கோள் எடுத்தேன், தம்பி ஊர விட்டே எஸ்கேப். இந்த தம்பி ஹிஸ்புல்லஹ்வுக்கு ரிசெர்வசன் காணிகளை வாங்கி கொடுத்த ஒரு தும்பி.

நாலரை வருட முயற்சி, நாலாயிரத்து ஐநூறு கோடி முதலீடு, அறுபது ஏக்கரில் பில்டிங், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இரவுபகலாக வேலை, பல நூறு தஸ்தாவேஜுகள் பரிமாற்றம், முதலில் கம்பனி ரெஜீஸ்ரேசன் அப்புறம், குறுக்கு மூளை வேலை செய்துள்ளது, வாப்பாடையும், மகன்டையும் பேருல சரிட்டி ரெஜீஸ் ரேசன் அப்புறம் வங்கிகளில் சட்டப்படியான கணக்குகள்.

அதற்கப்புறம் மகாவலி அபிவிருத்தி நிறுவனத்திடம் சென்று குறைந்த வாடகையில் குத்தகைக்கு காணி, பீ ஓ ஐ ( Bord of Investment )இடம் சென்று ஒப்புதல் என ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடாத்திய இந்த அதி
புத்திசாலி, குட்டி குட்டி அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கிட்டு முழி, முழி என முளிக்கிரத பார்த்தா வெட்கமாக இருக்கின்றது.

என்னத்துக்குடா கத்தி வச்சிக்கு இருந்தயள் என்று கேட்டதற்கு..... தற்பாதுகாப்புக்கு .... தற்பாதுகாப்புக்கு ... தற்பாதுகாப்புக்கு என அடித்து சொல்லி மொத்த சோனகனின் மானங்களை காப்பாற்ற தெரியாத,
வங்குரோத்துகளுக்கெல்லாம்.....ச்சீ ...
ஒருவர் ஆளுனராம்...
ஒருவர் தண்ணிக்கு பொறுப்பாம் ...
ஒருவர் வர்த்தகத்துக்கு பொறுப்பாம் ......
ஒருவர் பெட்ரோலுக்கு பொறுப்பாம்...
இவர்கள் எல்லாம் சேர்ந்து மொத்த சோனவனுகளுக்கும்பொறுப்பாம்...

இந்த மொத்த சோனவ, தமிழ் எம்பி, எம்பிமாருகளும் ஸ்ரீலங்கா சிங்கள அரசியல் வாதிகளிடம் பாடம் படிக்கவேண்டும். அவனுகலும் கள வெடுப்பானுகள், ஒரு துரும்பும் சிறிலங்காவில் இன்வெஸ்ட் பண்ணப்
படமாட்டாது. அனைத்தும் இத்தாலி ரோம், மிலான், அவுஸ்திரேலியா, விக்டோரியா, இங்கிலாந்து, மார்பள் ஆர்ச் , அமெரிக்கா நியூ யார்க் போன்ற இடங்களில் மகள், மகன்களின் பேரில் பக்காவாக முதலிடப்படும்.

ஒரு காக்கா குருவிக்கும் தெரியாது. அழகாக முதலிட்டுப்போட்டு, மதுர மீனாட்சிய போய் ஒரு கும்பிடு, திருப்பதி வெங்கடாஜல பதிய ஒரு கும்பிடு.

யாராவது ஒரு சிங்கள எம்பி அல்லது மந்திரி கடவுளே, எங்களையும் எங்க நாட்டு மக்களையும் காப்பாத்து என ஏதாவது பன்சலவுக்கு போய் அழுது வடிந்ததை கண்டிருக்கின்றோமா அல்லது பார்த்திருக்கின்றோமா.
நெவெர். they are always brilliant.

நேரடியாக கண்டி தலதா மாளிகை போய் மகா சங்கத்தினரை சந்தித்து, மஹிந்தவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று இவர்களும், ரணிலிடமிருந்து எங்களை காப்பாற்றுங்களேன் என்று அவர்களும் அழுவதைத்தான் இந்த உலகமே பார்த்திருக்கின்றது.

கபிலவஸ்துவுக்கு இந்த மொத்த சிங்கள மக்களும் போவார்கள் ஆனால் எந்த சிங்கள எம்பியும் போவது கிடையாது. கபிலவஸ்து போனால் இவர்களது கோவணமும் பறி போய்விடும் என்று ஒரு பழைய கதை உண்டு. ஆம் சகலவற்றையும் துறந்தவந்தானே நாம் விரும்பும் அந்த புத்த பகவான்.

மீனாட்சியிடம் போய் செய்த பாவத்தை மன்னித்து விடு தாயே என அழுதுவிட்டு, நேரடியாக வெங்கடாசலபதியிடம் போய்மண்டியிடுவார்கள்.

இந்தாள்தான் பணக்கார சாமி, திருப்பத்தையும் கொடுப்பார் அடுத்த ரவுண்டு களவெடுக்க ஐடியாவும் கொடுப்பார்.

நம்மளுக்கு இந்தாளையும் புடிக்காது, மீனாட்சியையும் புடிக்காது, மீனாட்சிக்கு பின்னால் உள்ள அறுபத்தி நாலு நாயன்மாரில், அறுபத்தி மூணாவது நாயனாரை மட்டுமே புடிக்கும். அவள்தானே நம்மாள், சோனகத்தி. முஸ்லிம்.

பாவம் ஹிஸ்புல்லாஹ் அறுபத்தி அன்ஜேக்கருல கட்டிடத்தைகட்டிப்போட்டு, இஞ்ச முழி பிதுங்கி இருக்க, ரிதி தென்னயில இருந்து கூப்பிடு தூரத்தில, நூத்தி அம்பது ஏக்கருல பாரிய கோழி பார்ம கட்டி, தினமும் ஒன்ணர லட்சம் ஒமேகா ( எகோ ப்ரீ - நோ கொலோஸ்ற்றோல்) முட்டைகளை, வத்தளையில் உள்ள தனது சொந்த அலுவலகத்தின் ஊடாக வித்துக் கொண்டிருக்கும் அமீரலி காக்காவுலயும் ஒரு கண்
வச்சிகொங்கடாபுள்ளகாள்.

அப்புறம் சோனவன் அதையும் கோமணத்துக்குள்ள ஒளிச்சிட்டான் என சண்டைக்கு வராம. அமீரலிக்கு நூற்றி அம்பது ஏக்கர், பைலா( முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம்பி )வுக்கு நூற்றி அம்பது ஏக்கர் காணி
with bigest poultry farm.

எல்லாமே நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துக்கு கிடைத்த கைம்மாறு.

வாழைச்சேனை பேப்பர் பாக்டரியும் பல சடங்குகளுக்கு பிறகுதான் கை மாறியதாம் என்ற ஒரு கதையும் உண்டு. அதற்குரிய கிம்பளம் செங்கலடி -பதுளை ரோட்டில் கிரசெர் மெசின் போட்டு கருங்கல் - கிரனைட் கல் பக்டரிகளாக உருவாகுவதாகவும் செய்திகள் பரவுகின்றது.

இது இப்படியெண்டால் பாவங்களை மொத்தமாக செய்துவிட்டு, உம்ராவுக்கு போய் அல்லாஹ்வையும் ஏமாற்றுகின்ற அதிபுத்திசாலிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த பரந்த உலகம் பல அதிசயங்களையும் ஆச்செரியங்களையும் கண்டுள்ளது, சானக்கியர்களையும் தரிசித்துள்ளது. இந்தமொத்தத்தையும் முழுங்கி, மென்று, இதொரு தூசிடா எங்களுக்கு எண்டு ஆப்படித்த மஹிந்த அண்ட் கோவுக்கே டுமீல் விட்டாங்க இந்த ரிசாட் வோசஸ் ரவுப் என்கின்ற முன்னாள் எதிரிகள். உம்ராவுக்கு கம்பெனிகள் சகிதமாக போய் எங்க அப்பனுகள் குதிருக்குள் இல்லை என்றார்கள்.

மஹிந்த பொறுத்தார், கோட்டாபாயவும் பொறுத்தார், ஆனால் நம்ம அல்லாஹ் பொறுக்கல்ல. காத்தான்குடியில இருந்து இன்னொரு சைத்தானை கொழும்புக்கு அனுப்பி இந்த மொத்த சைத்தானுகளுக்கும் ஆப்பு அடித்தார்.

wash..wash.....clean wash..... நல்ல தும்புக்கட்டு அல்லது ஈக்கில் கட்டு ( விளக்குமாறு ) கொண்டு, சோனக அரசியல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

( இன்ஷாஹ் அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் தொடருவேன் ..........)
yahiyawasith@ymail.com
30-6--2019

Read more...

தமிழரசுக் கட்சியின் மாநாட்டு வாசலில் அரசியல் அடியாட்கள் மதுபோதையில் முட்டிமோதினர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 வது தேசிய மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அங்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்று கூறப்படும் அரசியல் ஏவலாளிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் மதுபோதையில் நின்ற அடியாட்களுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனக் கூறிக்கொள்ளும் குறித்த ஆட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மண்டபத்தை நெருங்க முற்பட்டபோது, அம்மாநாட்டுக்கு காவலாக பொலிஸாருடன் மதுபோதையில் நின்ற கட்சியின் அடியாட்களை அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறிந்த நபர்கள் அரசியல்வாதிகளின் எடுபிடிகள் என்றும் குற்றஞ்சுமத்தினர்.

எது எவ்வாறாயினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் அலையும் குறித்த கூட்டத்தினர் அரசியல் கட்சி ஒன்றின் அடியாட்களாகவே செயற்படுகின்றார்கள் என்பது அவர்கள் சுமந்துவந்த பதாதைகள் மற்றும் அவர்கள் எழுப்பிய கோஷங்களிலிருந்து தெளிவாக புலனாகின்றது. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கோரும் பாதாதைகளுக்கு பதிலாக அரசியல் கோஷங்கள் தாங்கிய சுலோகங்களையே சுமந்து வந்தனர். அத்துடன் அவர்கள் எழுப்பிய கோஷங்களும் அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருந்தது.

இவர்கள் புலம்பெயர் புலிகளின் பணத்தில் இயங்கும் கஜேந்திர குமாரின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுகின்றார்கள் என்பது வெளிப்படையான குற்றச்சாட்டாகும்.

இப்படங்கள் குறித்த நபர்கள் அரசியல் நாடகம் ஒன்றுக்காக நன்கு பயிற்றப்பட்ட நடிகர்கள் என்பதை வெளிகாட்டுகின்றது.






























Read more...

சோபா ஒப்பந்தத்தால் இலங்கையின் இறைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதாம்! அமெரிக்க தூதர்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே மேற்கொள்ளப்படவுள்ள சோபா ஒப்பந்தமானது இலங்கையின் இறையாண்மையை முற்றாக நிராகரித்து அமெரிக்கப்படைகளின் தளமாக மாறவுள்ளதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அமெரிக்கப்படைகள் இலங்கையில் மேற்கொள்ளக்கூடிய சிறுகுற்றங்களுக்கெதிராகவேனும் அவர்களை எமது நீதிமன்றுக்கு கொண்டுவந்து பொறுப்புக்கூறவைக்க முடியாது என்றும் குற்றஞ்சுமத்தும் நாட்டின் மீது பற்றுள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தமது பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இவர்கள் STOP USA (யுஎஸ்ஏ யை நிறுத்து) என்ற அமைப்பொன்றை நிறுவி ஒப்பந்தத்திற்கு எதிரான தமது குரலை ஓங்கி ஒலித்து வருகின்ற மறுபுறத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்.

இந்நிலையில் சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமை மற்றும் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இதுகுறித்து, அமெரிக்க தூதரகப் பேச்சாளர் நான்சி வான்ஹோர்ன் கருத்து வெளியிடுகையில்,

'சிறிலங்கா தனது எல்லைக்குள்ளேயும், பிராந்திய கடல் மற்றும் வான்வெளியிலும், அமெரிக்க படையினர், கப்பல்கள், விமானங்கள் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறையாண்மை உரிமைகளையும் கொண்டிருக்கும்.

சிறிலங்காவுக்கு பயிற்சிகள் மற்றும் அதிகாரபூர்வ கடமைகளுக்காக வரும், அமெரிக்க படையினர் மற்றும் சிவில் பணியாளர்கள் தொடர்பாக, அமெரிக்காவும், சிறிலங்காவும், 1995இல் உடன்பாடு ஒன்றை செய்திருந்தன.

இந்த உடன்பாட்டில், தொழில்முறை உரிமங்களின் பரஸ்பர அங்கீகாரம், அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு திணைக்கள சிவில் பணியாளர்கள் சிறிலங்காவுக்கு எவ்வாறு வருகை தரலாம், வழங்கப்பட்ட ஆதரவு சேவைகளுக்கான கட்டணம் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் போன்றன உள்ளிட்ட சில மேலதிக சிறப்புரிமைகளை உள்ளடக்கும் திருத்தங்களையே முன்மொழிந்திருக்கிறோம்.

இந்த உடன்பாட்டை புதுப்பிப்பதானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்முறைகளை நெறிப்படுத்தும்

அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொதுவான அக்கறை கொண்ட பிற பிரச்சினைகள் விடயத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் ஒத்துழைக்க உதவும்.

இதுபோன்ற உடன்பாடுகளை அமெரிக்கா, பூகோள பங்காளர்களுடன் செய்து கொள்வது பொதுவான நடைமுறையாகும்.

உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இதேபோன்ற உடன்பாடுகளை அமெரிக்கா செய்து கொண்டுள்ளது.

இந்த உடன்பாடுகள், பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு பரஸ்பரம் ஒப்புக்கொள்வதுடன், இரு நாடுகளின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வழக்கமான நிர்வாக நடைமுறைகளையும் இலகுபடுத்தும்' என்றும் அவர் கூறினார்.

Read more...

மரண தண்டமை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி – நீதி அமைச்சு முரண்படுகின்றதா?

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கான மரண தண்டனையை நிறைவேற்ற தான் குறித்த ஆவணங்களில் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலர் ஆர்எம்டிபி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளபோதும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, தூக்கில் போடுபவர் பணிக்கு இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பிரதானி பாக்கியசோதி சரவணமுத்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Saturday, June 29, 2019

கோத்தாவிற்கு எதிரான முறைப்பாடுகளை நிராகரிக்க கோரி அவரது வழங்கறிஞர் மனுத்தாக்கல்.

கலிபோனிய நீதிமன்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளை நிராகரிக்குமாறு கோரி அவரது வழங்கறிஞர் ஜோன் உலின் கலிபோனிய நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

இலங்கையில் இருந்தபோது பாலியல் தொல்லை உட்பட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கு தாம் உட்பட்டதாக கூறி 8 தமிழர்களும் 2 சிங்களவர்களும் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கின் பின்னணியில் ஐ.நா வின் முக்கிய பதவி ஒன்றிலிருந்த யஸ்மின் சூசா என்ற பெண் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவர் போட்டியிடுவதை தடுத்து தங்களுக்கு தேவையான ஒருவரை கதிரையில் அமர்த்துவதற்கான சூழ்ச்சியின் ஒருபகுதியாகவே இவ்விடயம் அறியப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையர்கள் எவரும் சவுதியில் மரணித்தால், நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஒப்பந்தம்.

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் எவரும் மரணித்தால், அவர்களுக்கான நஷ்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரேபிய சட்ட நிறுவனம் என்பன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்படி மூன்றாம் தரப்பொன்றின் கவனயீனமான காரணங்களுக்காக, சவுதி அரேபியாவில் மரணிக்கின்ற இலங்கையர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கான வழக்குகளை துரிதமாக ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரசானது அங்கு தொழில் புரியும் தொழிலாளிகளின் உரிமைகளை தொடர்ந்து மீறிவருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

Read more...

இராணுவ தலைமைப் பொறுப்புக்களில் திடீர் மாற்றம். யாழ் மற்றும் வன்னி தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார்.

எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜூலை 17ஆம் நாள் தொடக்கம், பாதுகாப்பு அமைச்சில், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னி படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, அந்தப் பதவியில் இருந்து, மாற்றப்பட்டு, மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்மை கள பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்கேபி பீரிஸ், இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார, இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, 14 பிரிகேடியர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

விற்பனை செய்யப்பட்டுள்ள அரச வளங்கள் யாவற்றையும் மீளப்பெறும்பொருட்டு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். சந்திம

இந்நாட்டின் அரசாங்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக கையொப்பமிட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் புதிய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஜயகொடி தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரினாலும் எமது நாட்டின் எந்தவொரு வளங்களையும் கொள்வனவு செய்ய முடியாது எனவும் இன்னும் 4 மாதங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்களில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே விடயத்தினை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பே இல்லையாம்! கூறுகின்றார் பதில் IGP

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார்.

தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென இது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Read more...

Friday, June 28, 2019

ஜேவிபி நலின் ஜயதிஸ்ஸ வின் கேள்விக்கு வாயடைத்து நின்றார் றிசார்ட் பதுயுதீன்.

நீங்கள் நபர் ஒருவரை தேடியபோது, அவர் இருக்கின்றார் என்ற பதிலினை இராணுவத் தளபதி உங்களுக்கு வழங்கியிருக்கின்றார். ஆதன் பின்னர் உங்களை ஒன்றரை வருடங்களின் பின்னர் அழைக்குமாறு கூறியதாக தளபதி தெரிவித்துள்ளார். அவ்வாறான பதில் ஒன்றை வழங்குவதற்கு நீங்கள் அவரிடம் கேட்ட கேள்வி என்ன என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் ஜயதிஸ்ஸ றிசார்ட் பதுயுதீனிடம் கேட்டபோது, றிசார்ட் சரியான பதிலை வழங்காது முழிபிதுங்கினார்.

இதிலிருந்து றிசார்ட் தனது அமைச்சர் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியிருக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளது. இவ்விடயத்தில் உண்மையை கண்டு பிடிக்க குறித்த தெரிவுக்குழுவுக்கு ஆர்வம் இருக்குமாயின் நீதிமன்றூடாக குறித்த உரையாடலை தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்று அதனை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

குறித்த தெரிவுக்குழுவானது குற்றவாளிகள் தமக்கு வெள்ளை பூசிக்கொள்ள இடமளிக்கின்றது என்ற பரலான குற்றச்சாட்டுக்களை றிசார்ட் பதுயுதீனின் பதில்கள் உறுதி செய்கின்றது.

றிசார்ட் பதுயுதீனிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் பதில்களும்.


கே. – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா?

ப. – கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்னை அழைத்தனர்.ஆனால் ஆனால் நான் செல்லவில்லைஇதனால் என் மீது குற்றம் சாட்டினர், . மற்றொரு எம்.பியும் இதை கூறினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் பொலிஸில் புகார் செய்யக்கூடுமென நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதனால் நான் பொலிஸ் சென்று அவர்கள் மீது புகார் அளித்தேன்.

கே. தாக்குதல் விசாரணையில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா? முஸ்லீம் மத விவகார அமைச்சின் ஆலோசகரின் மகன் குறித்து இராணுவத் தளபதியிடம் பேசினீர்களா?

ப. அவர் அரச பொது நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரி. ஜனாதிபதி சிறிசேன அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த அமைச்சில் மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார். 1990 ல் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர் புனர்வாழ்வு இயக்குநராக இருந்தார். இனம் தெரியாத குழு ஒன்று தனது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். எங்களிடம் அவர் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையும் அப்படியே கூறியுள்ளது.. அவர் என் வீட்டிற்கு வந்து கண்ணீருடன் தனது மகன் எங்கே இருக்கிறார் என்று தேடித்தருமாறு சொன்னார்.

தெஹிவளை பொலிஸில் கேட்டபோதும் , தெஹிவளைக்கு பொறுப்பான டி.ஐ.ஜி விக்ரமசிங்கவிடம் கேட்ட போதும் அவர்கள் கைது செய்யவில்லையென்றும் ஆனால் இதனை தேடுவதாகவும் கூறினார்கள் .நான் இராணுவத் தளபதியை அழைத்து அவரிடம் இது பற்றி வினவி இதனை பார்க்கச் சொன்னேன். தொடர்ந்து அந்த தந்தையார் கேட்டுக்கொண்டதால் இன்னொரு முறை அழைத்தபோது, இதனை கவனிப்பதாக இராணுவத்தளபதி கூறினார்.மீண்டும் 28 ஆம் தேதி மீண்டும் அழைத்தபோது கைதை உறுதி செய்த அவர் கைதானவரை பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். அதன் பிறகு நான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய மட்டுமே நான் விரும்பினேன்.மகன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று பார்க்க தந்தை விரும்பினார். அவர் இராணுவக் காவலில் இருப்பதை அறிந்ததும், நான் திரும்ப அழைக்கவில்லை.

கே. தொழிலதிபர் இப்ராஹிமிடம் பொருட்களை வாங்க அழுத்தங்களை வழங்கினீர்களா?

ப. நீங்கள் அதைப் பற்றி அமைச்சின் செயலாளரிடம் கேட்கலாம். நான் அழுத்தங்களை வழங்கியதில்லை .

கே. துருக்கி தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

பதில் – எனக்குத் தெரியாது

கே. நீங்கள் காத்தான்குடியில் அரசியல் செய்கிறீர்களா?

ப. பெரிய அரசியல் என்று எதுவும் இல்லை. எங்களிடமிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே. இந்த பயங்கரவாத செயல்கள் சம்பவத்திற்கு முன்னர் உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் மதம் உங்களுக்கானது. எனது மதம் எனக்கானது என குர்ஆனில் சொல்லப்பப்படுகிறது.சிலருக்கு பிரச்சினை இருக்கலாம் . நான் ஒரு அரசியல்வாதி. நான் மத பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. ஸஹ்ரான் ஒரு மௌலவி அல்ல.. அவர் ஒரு மதத் தலைவர் அல்ல. அவர் மட்டுமே தன்னை மௌலவி என்று அழைத்தார்.இந்த சம்பவத்திற்கு முன்னர் பயங்கரவாத குழுவின் செயற்பாடுகள் பற்றி எனக்கு தெரியாது

கே. ஹிஸ்புல்லா உங்கள் கட்சியில் இருந்தார் அல்லவா ?

ஏ. ஹிஸ்புல்லாஹ் எங்கள் கட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை நாங்கள் ஆதரித்தபோது, அவர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கச் சென்றார்.

கே. 2015 இல் வாக்களித்தவர்கள் சஹ்ரானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ப. இந்த குழுவில் சொல்வதை நான் பார்த்தேன். பின்னர் நான் எங்கள் அமீர் அலியிடம் கேட்டேன். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்றார்.

கே. நீங்கள் சஹ்ரானை சந்திக்கவில்லை என்று சொன்னீர்கள்.அனால் நீங்கள் சந்தித்த படங்கள் வெளியாகினவே ?

ப. இது அக்டோபர் 15, 2015 அன்று அரபுக் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட படம். இது ஸஹ்ரான் அல்ல .அது மௌலவி நிஸ்தார். தன்னை ஸஹ்ரான் என்று தொலைக்காட்சியில் காட்டியதாக அவர் என்னிடம் கடிதம் மூலம் தெரிவித்தார்.. அவர் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இவை தவறான குற்றச்சாட்டுகள்.சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தை கண்டேன்

கே: வில்பத்துவில் உங்களுக்கு பல ஏக்கர் நிலம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தனவா?

ப. 2015 க்குப் பிறகு, வடக்கு மாகாணத்திற்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை. 2009 ல் போருக்குப் பிறகு ஒரு பணிக்குழு நிறுவப்பட்டது. இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச அதிபர் ஆகியோர் அதில் இருந்தனர். எங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அந்த குழுவே முடிவு செய்தது. முந்தைய அரசாங்கம் அதைச் செய்தது. முந்தைய அரசாங்கம் செய்தது தவறு என்று நான் கூறவில்லை. வில்பத்து தேசிய பூங்காவிற்குள் ஒரு குடும்பத்திற்கு கூட நிலம் வழங்கப்படவில்லை. மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என்று அதன் அறிக்கை கூறுகிறது. வில்பத்து புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் உள்ளது. இந்த அரசாங்கம் வந்தபோது, எந்த நிலமும் வழங்கப்படவில்லை. இது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.

அரபு மொழிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதை நானும் எதிர்க்கிறேன்.என் மீது தவறான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணையை நடத்துமாறு தெரிவுக்குழுவிடம் கேட்கிறேன். .55 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எனக்கு உள்ளது. 8000 ஏக்கர் நிலப்பரப்பு கிடையாது. அவ்வாறு காணி இருக்குமாயின், 55 ஏக்கரை தவிர ஏனைய காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கவும் – என்றார் ரிஷார்ட்

ரிஷார்ட்டின் சாட்சியத்தையடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி ,பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு – தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷார்ட்டுக்கு தொடர்பில்லையென்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாக கூறியதுடன் அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com