Wednesday, May 8, 2019

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றாராம் ஹிஸ்புல்லா.

கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்றதோர் பேச்சு வழக்கு உண்டு. அதாவது கோழியை திருடித் தின்று விட்டு உடையான் தனது கோழியை தேடும்போது திருடித்தின்ற கள்ளனும் இணைந்து தேடி அலைவான் என்பது அதன் பொருள்.

அவ்வாறுதான் கிழக்கு மாகாண ஆழுனர் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையும் அமைந்துள்ளது. இலங்கையில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளை போஷித்து விட்டு நிலைமை மோசமானவுடன் அந்தர் பல்டி அடித்து அவர்கள் பயங்கரவாதிகள் எனக்கு எதுவுமே தெரியாது அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என நாடகமாடுகின்றார்.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்று சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்த ஹிஸ்புல்லா : 'இலங்கையில் ஏற்பட்ட தீவிரவாதத்தை இரு கிழமைக்குள் அழித்து முஸ்லீம் மக்களுக்கு ஆறுதல் ஒன்றை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றியை தெரிவிப்பதாக' தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவினுடைய இன்றைய பேச்சில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக பௌத்த மேலாதிக்கத்திற்கு சாமரம் வீசுவதையும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை விலைகூறி விற்க தயாராவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளில், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முதிர்ச்சி பெற்றதோர் அரசியல்வாதியாக இந்தருணத்தில் தன்னை நிரூபித்துள்ளார். அடிப்படைவாதத்தை எதிர்க்கும் அவர் முஸ்லிம் மக்களின் நியாயமான வேண்டுதல்களுக்கும் அவர்களது நல்வாழ்வுக்கும் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது நேர்த்தியான நகர்வுகளை மேற்கொள்கின்றார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

ஜனாதிபதியிடம் இளைஞர்கள் யுவதிகள் தங்களது ஆதங்கங்களை குறிப்பிட்டு தீர்வுகளை வழங்குமாறு கேட்டனர். இளைஞர் யுவதிகளின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கினார்.

இதனால் சபையில் இருந்த இளைஞர் யுவதிகள் எதிர்கால ஜனாதிபதி என கோஷம் எழுப்பினர்.








Read more...

அரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கோரிக்கை, சட்டம் ஒழுங்கு அமைச்சை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை. இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து விடுத்திருந்தது. ஆனால் ஜனாதிபதி அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

சரத் பொன்சேகவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.தே.க. தூதுக்குழவிடம் ஜனாதிபதி எடுத்துக் கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகவை சட்டம் ஒழுங்க அமைச்சராக நியமித்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் அவர் அந்தப் பதவிக்கு வந்தால் தமது பரம எதிரிகளாகக் கருதும் ராஜபக்சாக்களையும் இதர எதிர்க்கட்சியினரையும் பழிவாங்குவதற்காகவே அந்தப் பதவியைப் பயன்படுத்துவார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கின்றது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பொழுதும் சரத் பொன்சேகவுக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்க ரணில் விரும்பினார். அப்பொழுதும் ஜனாதிபதி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார்.

இப்பொழுது ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலைப் பயன்படுத்தி சரத் பொன்சேகவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பெற்றுக்கொடுக்க ரணில் எடுத்த முயற்சியையும் ஜனாதிபதி அடியோடு நிராகரித்திருக்கிறார்.

இரண்டாவது கோரிக்கை: மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தற்போது நாட்டில் உருவாகியுள்ள மின்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தனியார்துறையினரிடமிருந்து 200 மெகாவாட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமரியளிக்கும்படி ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையாகும். இதையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில், இந்த மின்சாரக் கொள்வனவை கேள்விப்பத்திரம் எதுவும் கோராமல்கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் ரவி கருணநாயக்க திட்டமிட்டிருந்தார். கேள்வித்பத்திரம் கோராமல் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதென்றால் அதன் அர்த்தம், அமைச்சருக்கு வேண்டிய ஒருவரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்யப் போகின்றார் என்பதே அர்த்தம். கேள்வித் பத்திரம் இன்றிக் கொள்வனவு செய்வது அரசாங்கத்தின் நடைமுறையல்ல என்பதைச் சுட்டிக்காட்டி ரவி கருணநாயக்கவின் கோரிக்கையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருக்கிறார்.

ரவி கருணநாயக்க பாரிய இலஞ்சம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னர் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதில் ஒன்று ரணிலின் நெருங்கிய சகாவான முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அர்ச்சுனா மகேந்திரனின் மத்திய வங்கி பாரிய நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டதாகும். பின்னர் 2018 ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னர் ரணில் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றபொழுது அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கியதே தவறாக இருக்கையில், அவர் கேள்விப்பத்திரம் கோராமல் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிப்பது அவர் மேலும் ஊழல் செய்வதற்கு இடமளிப்பதாக அமைந்துவிடும் எனக் கருதியே ஜனாதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

ரணிலின் அரசாங்கத்தில் ரவி கருணநாயக்க மட்டுமின்றி, குற்றச்சாட்டுக் காரணமாக முன்னர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த திலக் மாரப்பனவுக்கும் பின்னர் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அதுவும் மிக முக்கியமான வெளிவிவகார அமைச்சர் பதவி. அதுமாத்திரமில்லாமல், நாட்டை 30 வருடங்களாக நாசமாக்கிய பயங்கரவாதப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் எனப் பகிரங்கமாகப் பேசி, அதன் காரணமாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியதால் பதவியை ராஜினாமா செய்திருந்த மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரூபா களவெடுக்கும் சாமானிய மனிதனைச் சிறையில் தள்ளும் இந்த அரசாங்கம், கோடி கோடியாக பணத்தை மோசடியாகப் சேர்ப்பவனையும், மோசடிகளில் ஈடுபடுபவர்களையும், நாட்டின் சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செயல்படுபவர்களையும் அரியாசனத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Read more...

Tuesday, May 7, 2019

பயங்கரவாதிகள் யாவரும் கொல்லப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்களாம்- கூறுகின்றார் பதில் பொலிஸ் மா அதிபர்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் உயிரிழந்து அல்லது கைது செய்யப்பட்டு இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாக்கப்படுவதாகவும், அவற்றை நம்பி செயற்பட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறுகிய காலத்தில் அனைவரையும் அடையாளம் காண பொலிஸாருக்கு முடிந்ததாவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய குழுவில் குண்டு தயாரிப்பதில் பரீட்சியம் பெற்ற இரண்டு பேர் இருந்ததாகவும், அவர்கள் தற்போது அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் நேரடியாக தொடர்பு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனேவல்பொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியில் இருந்து இருவருடன் குறித்த கட்சி பிரமுகர் கெக்கிராவை பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முரண்பாடான பதிலளித்தமை மற்றும் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் வாகனம் ஒன்றை கைமாற்றம் செய்வதற்காக அங்கு சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Read more...

Monday, May 6, 2019

சஹ்ரானின் மனைவி தொடர்பில் கற்பனையில் கதை எழுதும் ஊடகங்கள்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியதாக ஊடகங்கள் முண்டியடித்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இச்செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கைநெட் விசாரணைகளின் முன்னணியில் நிற்கும் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, அச்செய்திகள் யாவும் பொய்யானவை என்றும், சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு நிலைமைகள் இருக்கின்றபோது, ஊடகங்கள் கற்பனையில் கதையெழுதி மக்களை தவறாக வழிநடாத்துவதை நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

Read more...

நாசகார பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் உள்ளது - ஹக்கீம்

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாடு பூராகவும் பரவி வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டிய தேவைப்பாடு முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கம்பளை பிரதேச செயலகத்தில் இன்று -06- நடைபெற்ற உடபலாத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராகும். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவுமே அரிது. இதனைத் தடுத்து நிறுத்தி, முற்றாகவே ஒழித்து கட்ட வேண்டிய தேவைப்பாடு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமை நன்கு புலப்படுகிறது.

இவ்வாறான எந்தவொரு குழுவினரதும் இருப்பு தொடர வேண்டுமாக இருந்தால் சமூகத்தின் ஒத்துழைப்பும், வரவேற்பும் அதற்கு இன்றியமையாதது. அத்துடன் அத்தகைய குழுவினருக்கு ஏனையோரை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான அதாவது தம் வசப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாசகாரிகளை முற்றுமுழுதாகவே நிராகரிப்பது மட்டுமல்ல, அவர்களை வன்மையாக எதிர்க்கவும் செய்கின்றனர். இவ்வாறாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானவர்கள் அதாவது சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சிறிய கும்பல் மேற்கொண்டுவரும் படுகொலைக் கலாசாரத்தையும் ஏனைய சமயங்களுக்கு முரணான செயற்பாட்டையும் முற்று முழுதாகவே எதிர்க்கின்றோம்.

ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அந்த சிறிய நாசகார கும்பலை பூண்டோடு ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஊடங்கள் மத்தியில் நிலவிவரும் போட்டா போட்டி காரணமாக அவை சில விடயங்களை மிகைப்படுத்திக் கூறிவருகின்றன. ஊடகங்களுக்கென்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கன்றது. ஆகையால் அவை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடுடைவையாகும்.

ஒரு சில சம்பவங்களை தவிர பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படுகொலைகளுக்கு காரணமான சூத்திரதாரிகள் வெளியிலிருந்து இயக்கிகொண்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுவே அந்த தீய சக்திகளின் நோக்கமாகும் என்றார்.

Read more...

சஹ்ரான் இந்தியாவிற்கு யாத்திரை வரவில்லை. பயங்கரவாத செயற்பாடுகளுக்கே வந்தார். த ஹிந்துவிற்கு இராணுத் தளபதி

சஹ்ரான் உட்பட்ட பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய ஊடகங்களில் எதிர்ப்பு வெளியாகியிருந்தது.

அவரது அக்கருத்து தொடர்பாக த ஹிந்து கருத்துக்கேட்டபோது, சஹ்ரான் இந்தியாவிற்கு யாத்திரை வரவில்லை என்றும் அவர் வேறு தேவைகளுக்காகவே வந்துள்ளார் என்றும் கன்னத்தில் கொடுத்துள்ளார் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க.

அவர் அப்பத்திரிகைக்கு தெரிவித்துள்ளதாவது.:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம்.

சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும், அவர் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.

“இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, இந்த பிராந்திய வலையமைப்புகள் குறித்து, இலங்கை விசாரித்து வருகிறது.

சஹ்ரான் 2018 பிற்பகுதியில் பெங்களூரு, காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வெளியில் உள்ள அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கலாம்.

அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்று எமக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் அங்கு யாத்திரிகர்களாக செல்லவில்லை.

பலர் தற்போது கைதுசெய்யப்பட்டு காவலில் உள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸாரும் விசாரித்து வருகின்றனர்.

குண்டுத் தாக்குதல்களுக்கு TATP அல்லது triacetone triperoxide வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மிகவும் சிக்கலான குண்டுகள் அல்ல.

இருவர் சலகை இயந்திர நேரக்கணிப்பு பொறிகளை வைத்திருந்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரிகள் இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி இவற்றை உள்ளூரில் தயாரித்திருக்கலாம்.

அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் தொடர்ந்தும் உயர்ந்தபட்ச விழிப்பு நிலையில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

பயங்கரவாதிகள் இறுதி பயிற்சியை மேற்கொண்ட இடம் நுவரேலியாவில் மாட்டியது.

தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர்.

அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும் கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சியை இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன் குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை குத்கைக்கு பெற்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

இவ்விடத்திலேயே தற்கொலை தாரிகள் இறுதி பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர்.



Read more...

விஷேட மூன்­ற­டுக்கு அதி­ரடிப்படை பாது­காப்­புடன், 4 ஆம் மாடியில் மதூஷிடம் விசா­ரணை ஆரம்பம்.

தனது மகனின் பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்வின் போது ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்­டலில் வைத்து கைது செய்­யப்­பட்டு டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாதாள உலகத் தலை­வனும் சர்­வ­தேச போதைப்­பொருள் கடத்தல் மன்­ன­னு­மான மாக்கந்­துரே மதூஷ் என அழைக்­கப்­படும் சம­ர­சிங்க ஆராச்­சி­லாகே மதூஷ் லக்‌­ஷித டுபா­யி­லி­ருந்து நேற்று நாடு கடத்­தப்­பட்­டுள்ளார்.

நேற்று அதி­காலை 5 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த யூ.எல்.226 எனும் விமா­னத்தில் மாக்­கந்­துரே மதூஷ் நாடு­க­டத்­தப்­பட்­டி­ருந்தார். விமான நிலை­யத்தில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவரைப் பொறுப்­பேற்­ற­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஏற்­க­னவே நேற்று முன்­தினம் இரவு யூ.எல். 226 எனும் விமா­னத்தின் பய­ணிகள் பட்­டியல் கட்­டு­நா­யக்க விமான நிலைய உளவுத் துறைக்கும் சி.ஐ.டி.க்கும் கிடைத்த நிலையில் அதில் மதூஷ் வரு­வது உறுதி செய்­யப்­பட்ட நிலையில், இரா­ஜ­தந்­திர தக­வல்கள் ஊடாக அதனை மேலும் உறுதி செய்து மதூஷை பொறுப்­பேற்க தயா­ராக இருந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு அவரை இவ்­வாறு தமது பொறுப்பில் எடுத்­துள்­ளது.

கட்­டு­நா­யக்க விமான நிலைய சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்­கப்­பட்ட அவர் அங்கு சில மணி நேரம் மட்­டுமே தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில், மூன்­ற­டுக்கு விஷேட அதி­ரடிப் படை பாது­காப்­புடன் நேற்று முற்­பகல் வேளையில் உட­ன­டி­யாக கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­க­மான 4 ஆம் மாடிக்கு அழைத்து வரப்­பட்டார்.

தற்­போது அவர் அங்கு தடுத்து வைக்­கப்­பட்டு சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், மதூஷின் கணக்கில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்­தல்கள் தொடர்­பி­லான குற்­றங்கள் தொடர்­பிலும் விசா­ரணை செய்யும் பொறுப்பு முழு­மை­யாக சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

முன்­ன­தாக ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் கைது செய்­யப்­பட்ட மாகந்­துரே மதுஷ், இலங்­கையில் தமக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக அந்­நாட்டின் நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்து தன்னை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி­யி­ருந்தார். அதன் தீர்ப்பு எதிர்­வரும் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும், மாகந்­துரே மதுஷை நாடு கடத்­து­மாறு இலங்கை அரசின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அந்­நாட்டு அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அதன்­படி அமீ­ரக அரசு, கொள்கை அளவில் எடுத்த தீர்­மா­னத்தை இடை­யீட்டு மனு­வூ­டாக அந் நாட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்த நிலை­யி­லேயே மதூஷ் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

2015 ஆம் ஆண்டு மாகந்­துரே மதூஷ் வர்­ண­கு­ல­சூ­ரிய அஜித் அரங்க எனும் பெய­ரி­லான போலி பெயரில் தயா­ரிக்­கப்­பட்ட கடவுச் சீட்டில் டுபாய்க்கு சென்­றுள்ளார். அதில் அவ­ரது முக­வ­ரி­யாக இலக்கம் 241/ ஏ, ஜா எல வீதி , கம்­பஹா என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் மதூஷின் உண்­மை­யாக முக­வரி மாவ­ரல பொலிஸ் பிரிவில் உள்ள மாகந்­துரே எனும் ஊராகும். அங்கு தற்­போது மதூஷின் மனைவி வசித்து வரு­கின்றார்.

மதூ­ஷுக்கு எதி­ராக சுமார் 50 கொலை­களும் கொலை முயற்சி சம்­ப­வங்கள் மற்றும் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்­டுக்­களும் உள்­ளன.

பொலிஸ் தலை­மை­யக தக­வல்­களின் பிர­காரம், அதில் பிர­தா­ன­மாக 2017.மே.9 ஆம் திகதி பிலி­யந்­த­லையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்­றி­வ­லைப்பு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் ரங்க ஜீவ மீது துப்­பாக்கிச் சூடு நடத்­திய சம்­ப­வத்தில் மதூஷ் முக்­கிய சந்­தேக நப­ராக சேர்க்­கப்­பட்­டுள்ளார். அச்­சம்­ப­வத்தில் பொலிஸ் கான்ஸ்­டபிள், சிறுமி ஒருவர் என இருவர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். மேலும் பலர் காய­ம­டைந்­தனர்.

2017.பெப்ர்­வரி மாதம் 27 ஆம் திகதி களுத்­துறை பகு­தியில் சிறைச்­சாலை பஸ் வண்டி மீது தாக்­குதல் நடத்தி இரு சிறை அதி­கா­ரிகள், சமயன் எனும் பாதாள உலக குழு உறுப்­பினர் உள்­ளிட்ட 5 சந்­தேக நபர்கள் என 7 பேரைக் கொலை செய்த சம்­ப­வத்­திலும் மதூஷ் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை 2018.3.27 அன்று சாந்த குமார அல்­லது கொஸ்­மல்லி என்­ப­வரை கடத்தி கொன்று அவ­ரது தலையை வேறாக வெட்டி கொழும்பு - வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரிவில் கொண்­டு­வந்து போட்ட சம்­ப­வத்­திலும் மதூஷே பிர­தான சந்­தேக நப­ராக விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர். இத­னை­விட பல கொலைகள் மற்றும் கொள்­ளைகள், போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மதூஷ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் ச்சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

இத­னை­விட 2006.ஜூன் 11 ஆம் திகதி கம்­பு­று­பிட்டி பகு­தியில் வைத்து தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்­தெட்­டி­யவை கொலை செய்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பல நீதி­மன்­றங்­க­ளாலும் மதூ­ஷுக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யா­ணை­களும் உள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

இவ்­வாறு ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் இருந்து நாடு கடத்­தப்­படும் பாதாள உல­கக்­குழு தலைவர் மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்­டோரை பாது­காப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு விசேட குழு­வொன்று பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குழுவில் அரச புல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் 25 அதி­கா­ரிகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தன்ர். குறித்த குழு 24 மணித்தியாலங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவென சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான ஷானி அபேசேகர, சமிந்த தனபால, பொலிஸ் அத்தியட்சர்களான ருவன் குனசேகர, நிசாந்த டி சொய்ஸா மற்றும் ஹேமந்த ஆகியோரை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட விஷேட மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அவர்களின் மேற்பார்வையில் கீழேயே தற்போது மதூஷிடம் சிரப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

இதனைவிட ஜனாதிபதி கொலை சதி விவகாரம் தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்).

Read more...

Sunday, May 5, 2019

சியோன் தேவாலய குண்டுதாரியின் மனைவியும் மரணம். மகள் பற்றி கூறுகின்றார் தயார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ஆஸாத். காத்தான்குடியில் பிறந்தவர். இவர் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு, சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு பிபிசி சென்றிருந்த போதும், குறித்த நபரின் தாயாரை சந்திக்க முடியவில்லை. அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தார்கள்.

இந்த நிலையில், கல்முனை - இஸ்லாமாபாத் எனும் பகுதியில்தான், ஆஸாத் திருமணம் முடித்துள்ளார் என்கிற தகவல் கிடைத்தது. ஆஸாத் பற்றிய தகவல்களை சேகரிக்க இஸ்லாமாபாத் பகுதிக்குச் சென்றோம்.

நாம் தேடிச் சென்ற வீட்டை கண்டுபிடிப்பதற்கு உள்ளூர்வாசிகள் உதவினார்கள். ஆஸாத்தின் மனைவியினுடைய தாயாரை (மாமியார்) அந்த வீட்டில் சந்தித்தோம்.

ஆஸாத்தின் மாமியாரின் பெயர் சித்தி. அவர் எங்களை பயத்துடனேயே எதிர்கொண்டார். போலீஸாரும் படையினரும் அடிக்கடி வந்து விசாரணை செய்வதால் மனதளவில் தான் நொந்து போயுள்ளதாக அழுதார்.

தற்கொலை குண்டுதாரி ஆஸாத் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த நமக்கு, அங்கு வேறொரு அதிர்ச்சிகரமான தகவலும் காத்திருந்தது.

34 வயதான ஆஸாத் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். மனைவியின் பெயர் பைறூஸா. வீடு, சீதனம் எதனையும் பெண் தரப்பிடமிருந்து ஆஸாத் பெற்றிருக்கவில்லை. அவர் சில வருடங்கள் வெளிநாட்டிலும் வேலை புரிந்தார்.

ஆஸாத்தின் மனைவி பைறூஸா, வீட்டுக்கு முதல் பிள்ளை. அவரின் தந்தை 10 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். "சுனாமி அனர்த்தத்தில் இரண்டு பிள்ளைகளை இழந்து விட்டேன். பைறூஸாவுக்கு பிறகு, 13 மற்றும் 12 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்" என்றார் பைறூஸாவின் தாயார்.

திருமணம் முடித்த கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான காத்தான்குடிக்கு ஆஸாத் சென்று விட்டார். "அவர்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள்" என்று கூறினார் ஆஸாத்தின் மாமியார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியுடன் வந்து கல்முனை - இஸ்லாமாபாத்தில் சிறிது காலம் ஆஸாத் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் காத்தான்குடிக்கே சென்று விட்டார்கள்.

தனது காணியொன்றை விற்று, அதில் கிடைத்த பணத்தில் சிறிய ரக லாறி ஒன்றினை ஆஸாத் கொள்வனவு செய்துள்ளார். அதை வைத்து, பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாகனத்தை விற்று விட்டார்.

ஆஸாத் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆனபோதும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

"ஆஸாத் நல்ல பிள்ளை, எனது மகளை நன்றாக வைத்திருந்தார். மார்க்கத்தில் (சமயத்தில்) உறுதியானவர்" என்று பிபிசியிடம் பேசிய அவரின் மாமியார் கூறினார்.

"சரி, ஆஸாத்தின் மனைவி பைறூஸா எங்கே?"

கண்ணீர் பொங்க, பைறூஸாவின் தாயார் கூறுகிறார், "சாய்ந்தமருதில் நடந்த குண்டு வெடிப்பில் பைறூஸா இறந்து விட்டார்" என்று. நாம் எதிர்பாராத தகவலாக அது இருந்தது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது, ஏப்ரல் 21ம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய ஆஸாத் அங்கேயே பலியானார். ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 15 பேர் இறந்தார்கள். அவர்களில் ஆஸாத்தின் மனைவி பைறூஸாவும் ஒருவர் என்கிறார் அவரின் தாயார்.

"சாய்ந்தமருது சம்பவம் நடந்தவுடன் போலீஸார் வந்து எங்களை விசாரித்தார்கள். பிறகு என்னை அழைத்துச் சென்று, பெண் சடலம் ஒன்றை அடையாளம் காட்டுமாறு கேட்டார்கள். அந்த சடலத்தின் முகம் சிதைந்திருந்தது. ஆனாலும், அது பைறூஸாதான் என்பதை உறுதிப்படுத்தினேன். பைறூஸாவின் மார்பில் இருந்த ஒரு தழும்பு மற்றும் சில அங்க அடையாளங்களை வைத்து, அது பைறூஸாவின் சடலம்தான் என்பதை அடையாளம் காட்டினேன்" என்றார்.

"கடைசியாக உங்களைப் பார்க்க ஆஸாத் மனைவியுடன் கல்முனைக்கு எப்போது வந்தார்"? என்று கேட்டோம்.

"மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்து போனார்கள்" என்றார் அவர்

பைறூஸா பற்றி கேட்டோம்.

"1993ஆம் ஆண்டு பைறூஸா பிறந்தார். சுனாமியால் நாங்கள் கடுமையாக பாதிப்புற்றோம். அப்போது பைறூஸாவுக்கு 11 வயதிருக்கும். அவரை சம்மாந்துறையிலுள்ள பெண்கள் மதரஸா ஒன்றில் சேர்த்தோம். அங்கு ஐந்து வருடங்கள் இருந்தார். அவரின் தந்தை மரணித்தவுடன் மதரஸாவை விட்டு, வீட்டுக்கு வந்து விட்டார்"

"கரப்பான் பூச்சி, பல்லியைக் கண்டாலே எனது மகள் சத்தமிட்டுக் கத்துவார். அப்படியொரு பயந்த குணம் கொண்டவர்" என்று சொல்லி விட்டு அழத் தொடங்கினார் பைறூஸாவின் தாய்.

BBC TAMIL

Read more...

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சௌதி எச்சரித்ததான செய்தி முற்றிலும் போலியானது. மசூர் மௌலானா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்களில் இருந்து சவூதி பிரஜைகளை பாதுகாக்க சவூதி வெளிவிவகார அமைச்சு முன்னெச்சரிக்கை இரகசியக் கடிதம் அனுப்பியதாக வெளிவரும் செய்திகள் போலியானது என்று இலங்கைக்கான மத்திய கிழக்குஆய்வாளர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா இன்று (05) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில்(4/21)மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர், இத்தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இரகசிய கடிதம் அனுப்பியதாக தற்போது ஒரு சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி போலியானதும், உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.

சவூதி அரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு லெபனானின் அல் அஹத் செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இக்கடிதம் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளதுடன், இக்கடிதத்தில் இடப்பட்டிருக்கும் கையொப்பம் சவூதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் அல் அசாப் உடையது அல்ல எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் சவூதி அரசுக்கு சொந்தமான 'சவூதியா ஏர்லைன்ஸ்' இல் பணி புரியும் இரு சவூதி பிரஜைகளும் உள்ளடங்குவர்.

இப்படியான ஒரு சூழலில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி தூதரகத்திற்கு தனது நாட்டு மக்களை மாத்திரம் பொது இடங்களுக்குச் செல்லாமல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு இரகசிய கடிதம் அனுப்பியதாக வெளிவரும் செய்திகள் அப்பட்டமான பொய்யாகும்.

அத்துடன் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு அசாதாரண சம்பவங்களின் பின்னராக சவூதி அரேபியா தனது இலங்கைக்கான தூதரகத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வெளிவந்த தகவல்களிலும் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.

சவூதி அரேபியா ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு அல்ல என்பதற்கு கடந்த கால வரலாறு சாட்சியம் கூறும். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற அதே தினத்தில் சவூதியில் 'ஷுல்பி' எனும் இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

உடனடியாக தீவிரவாதிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய சவூதி அரசு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 35 பேருக்கு மரண தண்டனை விதித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Read more...

நீர்கொழும்பில் இனமுறுகல். வாகனங்கள், கடைகளுக்கு சேதம். ஊரடங்கு அறிவிப்பு

நீர்கொழும்பு பிரதேசத்தில் இனங்களுக்கிடையேயான மோதல் நிலை ஒன்று உருவானதையடுத்த நீர்கொழும்பு பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 6 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பிரதேசத்திலுள்ள இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கே இனமுறுகலுக்கு காரணமானது என அறியமுடிகின்றது. ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு வாள்வெட்டுக்கு ஆளானவர்கள் பின்னர் தமது ஆட்களுடன் வெட்டியவர்களது பிரதேசத்திற்கு படையெடுத்து சேதம் விளைவித்துள்ளனர்.

இதன்போது வாகனங்களுக்கும் சில கடைத் தொகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிலைமைகளை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்:





Read more...

ஞானசார தேரரை எதிர்வரும் வெசாக் பண்டிகைகளுக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமாம். விஜயதாஸ ராஜபக்ச

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தொடர்ச்சியாக எச்சரித்து வந்தவர் ஞானசார தேரர். அவர் அவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தபோது, அது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து என ஓரம்கட்டப்பட்டது.

ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யவேண்டும் என பல பௌத்த அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச வேண்டுதல் விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாத செயற்பாடுகளுக்கான அரசியல் பலம் 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த அரசியல் பலத்தை தற்போது தடுத்த நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 30 வருடக்கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றமாக இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது. அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதுடன் மக்களை அணித்திரட்டியாவது புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தடுத்து நிறுத்துவோம்.
ரிஷாத் பதியுதீன், அசாத் சாலி , ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்பின்றி இந்த பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க முடியாது . இவர்கள் அனைவரும் பிரதமரின் பாதுகாப்பில் உள்ளதால் நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை .

மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடாடிய கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகவே எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னதாக ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேணடும்.

Read more...

சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்

சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகள், சிறிலங்கா விமானப்படையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் தற்போதுள்ள வரையறை ஒழுங்குகள், அனைத்துலக சட்ட நடைமுறைகளை மதிப்பீட செய்து வருவதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா விமானப்படை, கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Read more...

ஆலோசகராக இருக்க முடியாதாம், அதிகாரமே வேண்டுமாம் பொன்சேகாவுக்கு.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டும் என நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுதல் விடுத்து வந்தது.

ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அப்பதவியில் அவரை இருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரப்பட்ட நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியதுடன், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

நிலைமைகள் கருத்திலெடுத்த ஜனாதிபதி பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கும் அவரை தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுமதிப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் அமைச்சராக நியமிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனினும், சரத் பொன்சேகா எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் தனக்கு அமைச்சுப்பதவியே வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக அறியமுடிகின்றது.

நாட்டின் பாதுகாப்பில் ஓட்டைகள் விழுந்துள்ளதாக கருதப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் என்னைவிட பாதுகாப்பு நிபுணர்கள் எவரும் இல்லை என மார்தட்டும் பொன்சேகா நாட்டின் நலன்கருதி முன்மொழியப்பட்ட பதவியை பாரமெடுக்கவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Read more...

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரனும் கொலைகாரனுமான மாக்காந்துறை மதுஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.

இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய புள்ளி என்றும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பானவன் என்றும் பல வருடங்களாக தேடப்பட்டுவந்த மாக்காந்துறை மதுஷ் என்பவன் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

டுபாயில் பல பலவருடங்களாக தலைமறைவாகியிருந்த அவன், அங்கு தனது மகனின் பிறந்த நாளை மா பெரும் விழாவாக அதி ஆடம்பர ஹோட்டலில் கொண்டாடிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டான்.

இவனுடன் கைது செய்யப்பட்டிருந்த பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், தான் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் உயிராபத்தை நோக்க நேரிடலாம் என்றும் மேலதிகமாக தனது முதலீடுகள் டுபாயில் உள்ளதாகவும் கூறி நாடுகடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தான். அவனது மேன்முறையீட்டை விசாரணை செய்த டுபாய் நீதிமன்று வேண்டுதலை நிராகரித்து இன்று காலை நாடுகடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மதுஷை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இவனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பான பல்வேறு திணைக்களங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் என அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற கொலை ஒன்றுக்கு டுபாயிலிருந்தவாறு ஆணையிட்டிருந்த மதுஷ் என்ற கொலைகாரன் , அவனது அடியாட்கள் அக்கொலையை மேற்கொள்ளும்போது வீடியோ அழைப்பில் அதனை பார்வையிட்டதாக அவனது நெருங்கிய சகாவான கஞ்சிப்பானை இம்ரான் என்பவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்தது.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பலர் இவன் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளதுடன் அவர்கள் அரச சாட்சிகளாகவும் மாறவுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.


Read more...

Saturday, May 4, 2019

சம்மாந்துறை காளி கோயிலினுள்ளும் ஆயுதங்கள்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள காளிகோயிலிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆலயத்தின் வாழைத்தோட்டத்தினுள் சந்தேகத்திற்கிடமான உரப்பை ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததை அடுத்தே இந்த ஆயுதங்கள் மீட்டக்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரப்படையினர் ஆலயத்தின் வாழை தோட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள் ஒன்று என்பவற்றை குறித்த பையிலிருந்து மீட்டுள்ளனர்.

இங்கு குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில் முஸ்லிம் பிரதேசங்களில் மீட்டக்கப்படுகின்ற ஆயுதங்கள் யாவும் தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கு சொந்தமான ஆயுதங்கள் அல்ல.

இவை குறித்த கிராமங்களில் காணப்படும் காடையர்கள் மற்றும் அரசியல் ஏவலாளிகளின் ஆயுதங்களாகும். படையினர் சோதனையிட ஆரம்பித்தவுடன் அவர்கள் இவற்றை இவ்வாறு கைவிடுகின்றார்கள் என நம்ப முடிகின்றது.






Read more...

பயங்கரவாதிக்கு „தாய்" அந்தஷ்த்து கொடுக்க முற்பட்ட பஷீர் சேகுதாவூத் அம்மணமாகி நிற்கின்றார்.

கடந்த 26 ம் திகதி சாய்ந்தமருதில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டபோது 3 தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்து கொண்டதில் 6 குழந்தைகள் கொல்லப்பட ஒரு சிறுமி அபூர்வமாக உயிர்தப்பியிருந்தாள்.

அச்சிறுமி எவ்வாறு தப்பினாள் என்பது தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிவருவதற்கு முன்னர் முண்டியடித்துக் கொண்டு சிறுமியின் படத்தினை தனது முகநூலில் பதிவேற்றிய பசீர் சேகுதாவூத், சஹ்ரான் என்ற பயங்கரவாதியின் மனைவியான பயங்கரவாதி பாத்திமா சாதியாவிற்கு „தாய்" என்ற அந்தஷ்தை வழங்கியிருந்தார்.

அந்த பயங்கரவாதிக்கு பசீர் „தாய்" என்ற ஸ்தானத்தை வழக்க காரணம், குண்டு வெடிப்பதற்கு முன்னர் அவள் தனது குழந்தையை பாதுகாப்பாக தூர வீசினாளாம் என்பதாகும். ஆனால் அவள் ஒரு தாயாக இருந்திருந்தால் குண்டுதாரிகளுடன் இணைந்திருந்திருப்பாளா? அதுவும் அந்த குண்டுதாரிகளுள்ள உயிருக்கு ஆபத்தான இடத்தில் தனது குழந்தைகளை வைத்திருந்திருப்பாளா? என்ற அடிப்படை கேள்விகளைக்கூட கேட்க பசீர் தவறியிருக்கின்றார்.

ஆனால் அங்கு நடந்தது இதுதான். குறித்த வீட்டினுள் 17 பேர் இருந்துள்ளனர். வீடு முற்றுகைக்குள்ளானபோது அவர்கள் யாவருமே தமது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்கே தயாராகியுள்ளனர். அச்சமயத்தில் அவ்வீட்டிலிருந்த தொழுகையறையில் பாத்திமா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குண்டுகள் வரவேற்பறையில் வெடித்துள்ளது. அவளும் அவளது மகளும் உயிர் தப்பினர். படையினர் அதிகாலையில் உள்நுழைந்தபோது குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அவள் எழுந்து கொள்ள முடியாத நிலையிலேயே காணப்பட்டுள்ளாள். அவளால் எழுந்திருக்கக்கூடிய நிலை இருந்திருக்குமாக இருந்தால் அவள் அக்குழந்தையை கொன்றுவிட்டு ஏதாவது ஒருவகையில் தற்கொலை செய்திருப்பாள் என்றே நம்மப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் சொர்க்கத்தில் அனுபவிக்க துடிப்பவர்கள்..

இந்நிலையில் அப்பட்டமான பொய்பிரச்சாரம் ஒன்றை செய்து பயங்கரவாதி பாத்திமாவிடமும் தாயுள்ளம் இருந்தது என்ற விடயத்தை மக்கள் மனதில் பதியவைக்க முனைந்ததன் ஊடாக தன்னுள் இறுக பூட்டிவைத்திருந்த அடிப்படைவாத கரும்நாகத்தை பசீர் தன்னை அறியாது வெளியே விட்டுள்ளார்.

பசீரினுள் ஒழிந்திருந்த அடிப்படைவாத கருநாகம் கக்கிய விசத்தின் நோக்கம் விளங்காத இழித்தவாயர்கள் குறித்த பிரச்சாரம் தொடர்பான உண்மை தன்மையினை கேள்விக்குட்படுத்தாது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சிறுமியை தத்தெடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவேறு சேகுதாவூத் தனது விருப்பினை வெளியிட்டுள்ளார். இதனூடாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அவமானச் சின்னத்தை தனதுகொல்லைக்குள் கொண்டுவந்தால் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வாக்குகளை வெட்டி தனது பெட்டிக்குள் பூட்டமுடியும் என்பது அவரது வியூகம்.

அது அவ்வாறு இல்லை என்றால், இலங்கையிலே 26 வருட யுத்தம் இடம்பெற்றது. இதன் கொடுமை; இலங்கை முழுவதுக்கும் அனாதைக்குழந்தைகளை பரிசளித்தது. குறிப்பிட்டே சொல்வதானால் புலிப்பயங்கரவாதம் காத்தான்குடி பள்ளிவாயலில் ஆடிய கோரத்தாண்டவத்தால் எத்தனை குழந்தைகள் அநாதைகள் ஆனார்கள். அவ்வாறு அனாதைகளாக்கப்பட்ட எந்தவொரு குழந்தையையும் தத்தெடுக்க முயலாத பசீர் சேகுதாவுதுக்கு தனியே சஹ்ரானின் குழந்தையில் ஏற்பட்ட பரிவு யாது?

தமிழர் பயங்கரவாதிகளை மாவீரர்கள் என்று போற்றி வணங்கிவிட்டு வெட்கி தலைகுனியாது வரலாற்றை கடந்து செல்லுகின்றபோது, இன்று முஸ்லிம் சமூகம் பயங்கரவாதிகள் நிம்மதியாக உறங்குவதற்கு தங்களது மையவாடிகளில் கூட இடமளியாது ஓர் சிறந்த உதாரணத்தை நிலைநிறுத்தி இந்த இழிசெயலை எதிர்காலத்தில் செய்வோருக்கும் இதேநிலைதான் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆனால் பசீர் சேகுதாவூத் போன்ற அரசியல்வாதிகள் குறுகிய இடைவெளியினுள் புகுந்து எரிகின்ற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்ற அவமானகரமான அரசியலை முன்னெடுக்க முனைவது கண்டனத்திற்குரியது.

பசீர் அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களை பரந்தவெளியில் அச்சமின்றி வைத்தாலும், மேற்படி செயற்பாடு அவரது கருத்துக்களுடன் முற்றிலும் முரண்படானதாகும்.


Read more...

கஷ்மீர் பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் தொட்டு அடுத்த தாக்குதலுக்கு தயாராக இருந்த பயங்கரவாதிகள் யாவரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவே நம்பப்படுகின்றது.

இப்பயங்கரவாதிகளுக்கு முக்கிய உதவிளை புரிந்த சக்திகள் யார் என்பது தொடர்பில் இதுவரை ஆதாரங்களுடனான எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் இவர்களுக்கான வெடிகுண்டுகளை வழங்கிய அமைப்புக்கள் மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்கியோர் தொடர்பான சில தகவல்கள் கசியத் தொங்கியுள்ளது.

அந்த வரிசையில் குறித்த பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் கஷ்மீர் பிரதேசத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

பிபிசி செய்திசேவை அவரை பேட்டிகண்டபோதே அவர் தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளமை வருமாறு.


கேள்வி: இன்னும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதா?

பதில்: இல்லை. ஆனால், இது பலரால் அனுமானிக்கப்பட்டுள்ளது. உறுதியான உளவுத்தகவல்கள் இல்லாமல், மக்கள் தங்கள் விரும்பம்போல அனுமானங்களை தெரிவிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: இந்த தற்கொலை குண்டுதாரி முன்னதாக சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மற்றவர்களோ, வேறு பிராந்தியத்தில் உள்ள கடும்போக்குவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது.

பதில்: அவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். காஷ்மீர், பெங்களுரூ மற்றும் கேரளாவுக்கு அவர்கள் பயணம் செய்துள்ளார்கள். எங்கள்வசம் தற்போதுள்ள தகவல் இதுதான்.

கேள்வி: காஷ்மீர் மற்றும் கேரளாவில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியுமா? எடுத்துக்காட்டாக…

பதில்: தெளிவாக தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் ஏதாவது ஒருவகை பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் அல்லது நாட்டுக்கு வெளியே மற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை அவர்கள் ஏற்படுத்தியிருப்பார்கள்.

கேள்வி: இதுவரை தெரியவந்த வரையில், இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் இலங்கைக்குள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா? அல்லது இந்த குழுவை ஒருங்கிணைக்க நினைக்கும் சிரியாவில் உள்ளவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

பதில்: தாக்குதல் நடத்தியுள்ள முறையையும், தலைமைகள் பயணம் மேற்காண்டுள்ள இடங்களையும் பார்க்கிறபோது, வெளியிலுள்ள ஏதாவது ஒரு தலைமையின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இருந்திருக்க வேண்டும்.

கேள்வி:
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு முன்பு, தாக்குதலுக்கான சாத்தியம் குறித்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளை இந்திய உளவு அமைப்புகள் விடுத்தன. அந்த எச்சரிக்கைகளை இலங்கை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது பற்றிய கேள்விகள் உள்ளன.

பதில்: எங்களிடம் சில தகவல்கள் இருந்தன. உளவுத் தகவல் பகிர்வு சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு கோணத்தில் ராணுவ உளவுப் பிரிவினரும் மற்றவர்களும் கவனம் செலுத்தினார்கள். இன்றைய நிலையில், அனைவரும் பார்ப்பது போல, அதில் இடைவெளி நிலவியது.

கேள்வி: இந்த உளவுத்துறை பகிர்தல் தோல்வியடைந்ததற்கு யார் காரணம்?

பதில்: இது பிறரை குறைகாணும் விளையாட்டல்ல. அரசியல் அதிகார வரிசையில் உள்ளவர்கள் உள்பட உளவுத்துறை தகவல்களை சேகரித்தல், அதற்கான தயாரிப்பு, திட்டமிடல்கள், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் காரணமானவர்கள்.

கேள்வி: இலங்கை ஏன் இலக்கு வைக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்?

பதில்: நான் இவ்வாறு விடை அளிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக அதிக சுதந்திரம். அதிக அமைதி நிலவியது. 30 ஆண்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விட்டனர். மக்கள் அமைதியை அனுபவித்தார்கள். ஆனால், பாதுகாப்பை கண்டுகொள்ளவில்லை.

கேள்வி:
இப்போது, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பான நாடு என்று உலக நாடுகளிடம் நீங்கள் உறுதியாக கூற முடியுமா?

பதில்: இலங்கை 36 ஆண்டுகளாக போர் நடத்திய நாடு. அந்நாட்களில் நாங்கள் எதிர்கொண்ட சம்பவங்கள், இன்று நாங்கள் எதிர்கொள்வதைவிட மிகவும் கடினமானவை. அதி பயங்கரமானவை. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், வன்முறை அல்லது இந்நாட்டில் வகுப்புவாத கலகம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம். இலங்கையில் விரைவில் இயல்புநிலையை கொண்டு வருவதில் படைப்பிரிவுகள் மற்றும் காவல்துறையினரிடம் எனக்கு நம்பிக்கையுள்ளது.

Read more...

Friday, May 3, 2019

துருக்கி தூவர் 50 பயங்கரவாதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்ததை போட்டுடைக்கும் வசந்த சேனநாயக்க!

இலங்கையினுள் துருக்கியில் FETO இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று நாட்டுக்குள் நுழைந்த 50 தீவிரவாதிகள் தொடர்பில் 201ம் ஆண்டு துருக்கியின் தூதுவர் நேரடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்ததாக ஊடகம் ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறித்த ஊடத்திற்கு தெரிவித்துள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குள் 16 பேர் தொடர்பில் பொலிஸ் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கியில் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விடயம் வெளியாகியுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமைத் தாக்குதலுக்குத் தூண்டிய மொஹமட் இமாம் பாகிர் என்ற இமாம் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இருந்த ஒருவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவிடம் வினவியபோது,

“என்னிடம் கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக துருக்கித் தூதுவரிடமே வினவ வேண்டும். முன்னாள் தூதுவரே தற்போதும் உள்ளார். துருக்கியின் இஸ்லாம் பிரிவினைவாதிகள் 50 பேரின் பட்டியலை 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கியதாக அவர் கூறுகின்றார். அத்துடன், 10 அமைப்புகளின் பெயர்களை அவர் வழங்கி அவதானமாக இருக்குமாறு அன்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது எனக்குக் கிடைத்த தகவல்களை, பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கினேன். எனினும், எப்போதும் எமக்கு ஒரேயொரு பதிலே வழங்கப்படும். இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாம் எடுப்போம் எனக் கூறப்பட்டது.

பாதுகாப்புச் சபைக்கு இதனைச் சமர்ப்பித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் எனக் கூறப்பட்டது. எனினும், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தூதுவர் இறுதியாக பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதனைக் கூறுவது தகுந்தது அல்ல. பலம் வாய்ந்த மேற்கத்தேய நாடொன்று எம் மீது கோபமடையும். அந்த நாட்டிலிருந்து அழுத்தம் காணப்படுகின்றமையால் இவர்களைத் தடை செய்ய வேண்டாம் என வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கூறினார்.

இது உண்மையா, பொய்யா என எனக்குத் தெரியாது. பலர் பாடசாலைகளில் இருந்தனர். மதராசாவூடாக பிள்ளைகளை மூளைச்சலவை செய்யும் வகையில் பிரிவினைவாத கருத்துக்களை முன்வைப்பதாக அவர் அன்றே கூறியிருந்தார்” என்று பதிலளித்தார்.

முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கூறும் வகையில், இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடையாகச் செயற்பட்டுள்ளனர்.

அவர்கள் யார் என்பது தொடர்பண தகவல்களை அம்பலப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் – என்றுள்ளது.

Read more...

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலருக்கு எதிரான வழக்கை 21 திகதி விசாரணைக்கு எடுக்க முடிவு.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

நீதிபதிகளான புவனேக அளுவிகார, ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று சட்டமா அதிபர் இதன்போது நீதிமன்றில் கூறினார்.

இதனையடுத்துமனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியளார் கூறினார்.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more...

ஹிஸ்புல்லாவை பதவி விலக்க கோரி மல்லிகை மொட்டு மந்திரி சத்தியாக்கிரகம்.

கிழக்கு மாகாண ஆழுனராகவுள்ள எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாவிற்கும் இலங்கையில் பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கந்தளை பிரதேச சபையின் பொது ஜன பொரன உறுப்பினர் ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆழுனர் பதிவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யவேண்டும் என சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதேநேரம் ஹிஸ்புல்லா மலேசியா செல்ல மேற்கொண்ட முயற்சி ஒன்றை இறுதி நேரத்தில் ரத்து செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மலேசியா பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொண்டிருந்தார்.

பயண ஒழுங்குகள் அனைத்தும் சரியான பின்னர், ஜனாதிபதியின் அனுமதிக்காக அவரது பயண விவகாரம் சென்றபோது, பயணத்திற்கு ஜனாதிபதி அனுமதியளிக்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளது.

Read more...

தங்கையை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைந்து 20 லட்சம் வழங்கியுள்ளான் சஹ்ரான். வெளிவரும் உண்மைகள்!

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.

சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்தப் பணம் சஹ்ரானிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் விசாரணைகளை நடத்தினர்.

இதன்போதே, தனது அண்ணனான சஹ்ரானே இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்பதை மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னை கொழும்புக்கு வருமாறு, சஹ்ரான் அழைத்ததாகவும், இதையடுத்து வான் ஒன்றில் கொழும்பு சென்ற தான், சஹ்ரானை கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் 12ஆம் திதிகதி சந்தித்தாகவும், மதனியா கூறியுள்ளார்.

இதன்போதே, தேசிய ஜமாத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாவை தன்னிடம் சஹ்ரான் கொடுத்தார் என்றும், மதனியா கூறியிருக்கிறார்.

முன்னதாக அவர், தனக்கும் சஹ்ரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும், கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி இருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய் விட்டனர் என்றும் மதனியா கூறியிருந்தார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதனால் அவருடன் தமக்கு தொடர்புகள் இல்லை என்றும் மதனியா தெரிவித்திருந்தார்.

Read more...

Thursday, May 2, 2019

சாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை!

பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா.

சாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.

“சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்”.

“அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் கூறினேன். ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்” என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.

அஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.

எங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்” என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.

அஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.

சம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை”

அந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

அஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும் தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார். ஆனால், சம்பவத்தை தாங்கள் நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.

“திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம்தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது” என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.

அஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர்.

அஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.

அஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.

“அஸ்ரிபா கிளியொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது” என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.

“அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.


நன்றி பிபிசி தமிழ்.

Read more...

குண்டுதாரிகள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு - சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்தக் குண்டுதாரிகளுக்கும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுவோருக்கும் பெருந்தொகை சொத்துக்கள் இருந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷங்கிரி-லா ஹோட்டல் தாக்குதலில் மொஹமட் காஸிம் மொஹமட் சஹ்ரான் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய மற்றைய நபரின் பெயர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பதாகும். சினமன்ட் கிரேன்ட் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் என கண்டறியப்பட்டுள்ளது. மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் என்பவர் கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவராவார்.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சென் செபஸ்ரியன் தேவாலயத்தை அச்சு மொஹமட் மொஹமட் ஹஸ்துன் என்பவர் தாக்கியதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரி அலவ்தீன் அஹமட் முவாட் என்பவராவார். மட்டக்களப்பு ஷியோன் தேவாலய தாக்குதலில் மொஹமது நஸார் மொஹமது அசாத் என்பவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதித் தாக்குதலை நடத்தியவர் அப்துல் லத்தீவ் ஜமீல் மொஹமட் என்பவராவார். தெமட்டகொடை இல்லத்தில் குண்டை வெடிக்கவைத்த பெண்ணின் பெயர் பாத்திமா இல்ஹாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் ஏனைய உறவினர்களை இனங்காண்பதற்கு டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்).

Read more...

Wednesday, May 1, 2019

சம்மாந்துறையில் மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு. அமெரிக்க தயாரிப்பும் அடங்குகின்றது. பாறுக் ஷிஹான்

இராணுவ தேடுதலில் தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் மேற்குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவரின் பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 ,கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பொருட்களில் வாள் மற்றுமொரு வீட்டில் இருந்தும் ஜெலக்னைட் குச்சி கல்குவாரி ஒன்றில் இருந்தும் மீட்கப்பட்ட அதே வேளை ஏனைய பொருட்கள் கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஒரு பதற்றமான சூழ்நிலை சம்மாந்துறை பகுதியில் காணப்படுவதுடன் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







Read more...

முகத்திரை அணிவது தொடர்பான தடையும் குழப்பங்களும். வை எல் எஸ் ஹமீட்

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு கூறுகின்றது.

“ No person shall wear in any public place any garment, clothing or other material concealing the full face which will in any manner cause hindrance to the identification of a person.”

“ full face” means the whole of a face of a person including the ears.

சுருக்கமாக இதன் பொருள், “ ஒருவரை அடையாளம் காண்பதற்கு எந்தவொரு விதத்திலும் தடையாக இருக்கின்ற முகம் முழுவதையும் மறைக்கக்கூடிய எந்தவொரு ஆடையையோ அல்லது வேறு எந்தப்பொருளையுமோ எந்தவொரு பொது இடத்திலும் யாரும் அணியக்கூடாது.”

“ முழு முகம்” என்பதன் பொருள் காதுகள் உட்பட மொத்த முகமாகும்.

இங்கு இன்று பலரையும் குழப்புகின்ற சொற்கள் ‘ காதுகள் உட்பட’ என்பதாகும்.

இங்கு “ முழு முகம்” என்பதற்கான வரைவிலக்கணமாக, ‘ காதுகள் உட்பட மொத்த முகம்’ என்று தரப்பட்டுள்ளது.

நாம் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும்போது காதுகள் வரை திறந்துதான் எடுக்கின்றோம்.

எனவே, இதன் வெளிப்படையான பொருள் ‘ மொத்த முகத்தையும் திறப்பது’ என்றால் அது காதுவரை திறக்கப்பட வேண்டும். காது மூடப்பட்டால் மொத்த முகத்தையும் திறந்ததாகாது. அதேபோன்று மூடுவதானாலும் காதுவரை மூடினால்தான் மொத்த முகம் மூடியதாகும். காதை மாத்திரம் மூடுவது மொத்த முகத்தையும் மூடுவதாகாது. அதேநேரம் வர்த்தமானி அறிவித்தல் ‘மொத்த முகமும் திறந்திருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடவில்லை. மாறாக மொத்த முகமும் மூடியிருக்கக்கூடாது; என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றது.

இதை வெளிப்படையாக வியாக்கினப்படுத்தினால் காதுவரையுள்ள மொத்த முகத்தில் எந்தவொரு பகுதி திறந்திருந்தாலும் அது “ முழு முகத்தை மூடியதாகாது”.

ஹிஜாப் என்பது முகத்தில் பெரும்பான்மையான பகுதியைத் திறந்துவைக்கின்ற அதேநேரம் காதை மறைப்பதாகும். எனவே, முகத்தின் பெரும்பகுதி திறந்திருப்பதால் ‘ஹிஜாப்’ முழு முகத்தையும் மூடியதாகாது.

எனவே, இந்த வர்த்தமானி மூலம் “ ஹிஜாப்பிற்கு தடையில்லை” . இதுதொடர்பாக கௌரவ ஹர்ஷா டி சில்வாவின் விளக்கம் சரியானதாகும்.

இங்கு கேள்வி என்னவென்றால் இந்தத் தெளிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதாகும். இன்று பொதுமக்களில் படித்தவர்கள்கூட இதன் பொருள்கோடலில் பிழையான புரிதலில் இருக்கும்போது அதிகாரிகள் எவ்வாறான புரிதலில் இருக்கிறார்கள்? அவர்களும் பிழையாகப் புரிந்து நடவடிக்கைகள் எடுத்தால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகவேண்டி வரும்.

எனவே, செய்யவேண்டியது அரசு அதிகாரிகளுக்கு இதுவரை தெளிவுபடுத்தாவிட்டால் அவர்களுக்கும் தெளிவுபடுத்துவதோடு, “ஹிஜாப்பிற்கு தடையில்லை”; என்ற ஒரு பகிரங்க அறிவித்தலையும் விடுக்கவேண்டும். இது தொடர்பாக அரசியல்வாதிகள் அவசரமாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.

இந்தத்தாக்குதல் நடந்து பத்து நாட்களாகின்றன. தலைவர்களெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும்தான் கடும் busy யாக இருக்கிறார்கள். கொழும்பில் ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சில பொது அமைப்புகள்தான் அரச மேல்மட்டங்களையும் அதிகாரிகளையும் தொடர்புகொள்ளுகின்ற பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது.

தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மேற்படி பொது அமைப்புகள் கூட்டாக அடிக்கடி சந்திக்கவேண்டும். இதுபோன்ற விடயங்களை அரசின்/ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்கவேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகம் வரலாற்றிலேயே இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அநாதை நிலையில் விட்டுவிட்டு வழமைபோன்று show காட்டுவதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு ( கலந்துகொள்வதைக் குறைகூறவில்லை) முகநூலில் அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காலங்கடத்தக் கூடாது.

இன்று முஸ்லிம்கள் ஒரு சில வழிகெட்ட நாசகாரர்களின் செயலால் நிலைகுலைந்துபோய் இருக்கின்ற ஒரு சமயத்திலும் வழமைபோன்று தொலைக்காட்சிகளில் பேசிவிட்டு, சமூகவலைத்தளங்களில் அரசியல் செய்கின்ற மனசு எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை!

இந்த புர்க்காத்தடை நிரந்தர சட்டத்தினால் செய்யப்படவில்லை. அவசரகால சட்டத்தினால் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதும் அது வலுவிழந்துவிடும்.

மறுபுறம் மார்க்க அறிஞர்களிடத்தில் முகமூடல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக இது கடமையாக இருந்தால் முன்னோர்களான நமது உலமாக்கள் இதனைக் கட்டாயப்படுத்தி இருப்பார்கள். புதிதாக உருவான வியாக்கியானங்கள்தான் இன்று முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படையாகும்.

எனவே, நமது சமூகத்தைச் சேர்ந்த வழிதவறியவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாடும் சமூகமும் மீள்வதற்கு நாம் தொடர் பிரார்த்தனை செய்வோம்.

தலைவர்களே! மக்கள் பிரதிநிதிகளே! நீங்கள் கடந்தகாலங்களில் எவ்வாறு செயற்பட்டபோதும் இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களது இன்றைய சூழ்நிலைப் பிரச்சினைகளை உள்வாங்கி அவ்வப்போது உரியதீர்வுகளை வழங்கி உதவுங்கள். இது உங்கள் கடமை.

இந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களைக் கைவிட்டுவிட்டு வேறு எப்போது உதவப்போகின்றீர்கள்?



Read more...

புலிகள் எக்காலத்திலும் நம்பத்தகாதவர்கள் என்ற அபிமானம் பெற்றுக் கொடுத்ததுதான் பிறேமதாஸவின் கொலை. ஸ்ரேன்லி ராஜன்

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள்

தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது

ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்

அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌

மிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத உழைப்பில் பெரும் இடத்திற்கு சென்றார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் அமைதிபடை இலங்கை சென்றது

அதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை

பின் ஜெயவர்த்தனேவுக்கு பின் அதிபரான பிரேமதாச அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை. பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை. இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்

அதில் அவர் காட்டிய ராஜதந்திரம்தான் இந்திய படைகளை வெளியேற்றுவது. இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமையும் முடிவில் இருந்தது. புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது

ஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது. யாரும் எதிர்பாரா வகையில் புலிகளுடன் கை கோர்த்தார்

ஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக கொடுத்தார்

சோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, "இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்.." என கத்தவும் தவறவில்லை

சிங்களருடன் புலிகள் கைகோர்ப்பது கனவிலும் நடக்காது என நம்பிய இந்தியா அதிர்ந்தது, ஆயினும் இந்தியா போராடியது

சிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்

மண்டியிடா மானம், வீழ்ந்துவிடா புலி வீரம் எல்லாம் பிரேமதாசா முன் குப்புற கிடந்தது

பின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை

புலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது, பிரிவுபடா இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வுகொடுக்கவும் அவரிடம் திட்டம் இருந்தது.

ஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது. அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா?

ராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர். எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என மலைபோல் நம்பி இருந்தார் பிரேமதாச‌

புலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது

நம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சிபடிப்பிற்கும் அப்பாற்பட்டது

அப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால் கொல்லபட்டார் பிரேமதாச‌

பிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்

அதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்

இப்படி பெருந்தலைவகளை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால் , மிக இக்கட்டான 2009ல் ராஜபக்சே நிழலையும் தொடமுடியாமல் போயிற்று

சுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச‌

இதற்குபின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை, ஒருகாலமும் நம்பதகாதவர்கள் புலிகள் எனும் அபிமானம் அவர்களுக்கு இதே நாளில்தான் வந்தது

இலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச, அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது, இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்

இன்று அவரின் நினைவு தினம்

பிரேமதாசாவிற்கு காட்டிய நன்றிகடனை பின்னாளில் ராஜபக்சேயிடம் வட்டியும் முதலுமாக வாங்கினர் புலிகள்

அந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது



Read more...

Tuesday, April 30, 2019

மைந்திரி சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அவரே முழுப்பொறுப்பு. சந்திரிக்கா அம்மையார்.

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

‘2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புத் துறையும், சட்டத்துறையும் பின்னடைவைச் சந்தித்தன. அதுவே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்துணிவு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. தற்போது நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசியல் சூழ்ச்சியின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் ஜனாதிபதி தம்வசம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதால், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். ஏனைய அதிகாரிகளைப் பதவி விலகுங்கள் என்று கூறி அவர் தப்பிவிட முடியாது.

தான் நாட்டில் இல்லாத நேரம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதால் அதற்குப் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், பதில் பாதுகாப்பு அமைச்சரையும், பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சரையும் நியமிக்காது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றமை முதல் தவறாகும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்று நான் கூற வரவில்லை. அவர்கள் தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தரப்பில் மகா தவறு நடந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கட்டிக்காத்துவந்த அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதைத்தார். அதேவேளை, இனங்களுக்கு இடையிலான – மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கடந்த மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிதைத்துவிட்டார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதற்கும் அஞ்சாதவர்கள்; மக்களைக் கொன்று குவிப்பதற்கு சிறிது கூட தயங்கமாட்டார்கள். அவர்களுக்கு இரக்க குணம் இல்லை. எனவே, அவர்களை இலங்கையில் முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com