Friday, April 19, 2019

அப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தார். இருந்தாலும் அவன் அங்கு கஞ்சா போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளான்.

இலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு அனுப்பிமேற்படிப்புக்களை கொடுத்தார்.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தொழில் ஒன்றை புரிவதற்கு அடிப்படைக் கல்வி கூட இல்லாத நிலையில் வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் திண்டாடுகையில் - லண்டன் சீமையிலிருந்து திரும்பியுள்ள செல்வம் அடைக்கலநாதனின் மகன் பிஎம்டபில்யு சொகுசுக்காரில் வன்னியெங்கும் தூள் எழுப்புகின்றார்.

வவுனியாவில் எம்பாயர் ஹோட்டலை 8 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ள அவர் வவுனியாவில் லண்டன் பாணியில் இரவு களியாட்ட விடுதி திறந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. செல்வம் தமிழ் மக்களுக்கு உணர்சி பொங்க பேசுகின்றபோது, மக்கள் அவரது மகன் களியாட்ட விடுதி என்ன விபச்சார விடுதியைத்திறந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மந்த மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் செல்வத்திற்கு இப்பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியைக்கூட கேட்கமாட்டார்கள்.

லண்டனிலிருந்து வந்து வவுனியாவில் நட்சத்திர ஹோட்டலுக்கும் இரவு களியாட்ட விடுதிக்கும் 8 கோடியை முதலிட்டு 20 பேருக்கு தொழில்வழங்கியுள்ள செல்வத்தின் மகன் அந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை அமைத்திருந்தால் எத்தனை நூறு பேருக்கு தொழில் வழங்கியிருக்கலாம் என்ற கேள்வியையும் கேட்கமாட்டார்கள்..

வடகிழக்கில் சிங்கள விரோதம் பேசுகின்ற தமிழ் தலைவர்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் எவ்வாறான உறவில் உள்ளனர் என்பதை இப்படம் உணர்த்துகின்றது. மஹிந்த தரப்பின் முக்கியஸ்தரும் இலங்கை அரசியலில் சர்ச்கைக்குரிய பெரும்புள்ளியுமாகிய திலங்க சுமதிபாலவுடன் படத்தில் இருப்பவர்தான் செல்வத்தின் மகன்.

இலங்கை கிரிக்கட் சபையின் தலைவரான சுமதிபால பல்வேறு விதமான வியாபாரங்களில் ஈடுபட்டுவருபவர். அவரின் வியாபார பங்காளியாக இணைவதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைநெட் அறிந்து கொள்கின்றது.

தமிழ் மக்கள் சிங்கள தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் உடனடியாகவே துரோகிப்பட்டமளித்து கௌரவிக்கின்ற தமிழ் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை சிங்கள தலைவர்களின் நிழல்களிலே வழர்க்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளிலும் சிங்களத் தலைவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றாகவே வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் ஒரே அடுக்கினை சேர்ந்தவர்கள்.

ஆனால் உழைக்கும் தமிழ் மக்களை தமிழ் எனும் இனவெறிப்போதையை ஏற்றி அந்த மயக்கத்தில் அம்மக்களை மூழ்கடித்துவிட்டு தங்களது வாரிசுகளை வாழ்வின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றனர் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இப்படம் இங்கு தரவேற்றப்பட்டது.


Read more...

தமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.

நேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக கடந்து செல்ல பழகி விட்டனர்.

இரு நண்பர்கள், காதல் விவகாரம். நண்பனின் உயிரையே எடுக்க துணிந்து விட்டான் நண்பன். நண்பகல் சுமார் பன்னிரண்டு மணி. மோட்டார் சைக்கிளில் நண்பனை ஏற்றிக்கொண்ட அவன் நேரடியாக ஹாட்வெயர் ஒன்றுக்குச் சென்றான். ஹாட்வெயருக்கு செல்வதில் தனிஸ்டனுக்கு சந்தேகம் வரவில்லை. மோட்டார் பைசிக்கிளுக்கு பாதுகாப்புக்கு நின்றான் தனிஸ்டன்.

புதிதாக கத்தி ஒன்றை வாங்கிய நண்பன், தனிஸ்டனிடம் நீ எடு மோட்டார் கைக்கிளை என்று சொல்லிவிட்டு கத்தியுடன் பின் சீற்றில் உட்கார்ந்து கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் வாழ்வு முடிகின்றது என்பதை அறிந்திராத தனிஸ்டன் மோட்டார் சைக்கிளை செலுத்தினால், வழியில் ஒரு வளைவு. அங்கே சனநடமாட்டங்கள் குறைவு. சைக்கிளை திருப்புமாறு பணித்தான் நண்பன். அன்புக்கட்டளைக்கு பணிந்து சைக்கிளை திருப்பி சில வினாடிகளில் செருகியிருந்த புத்தம் புதிய கத்தியை எடுத்து பின்புறமாக இருந்து குரல்வளையை அறுத்தான் நண்பன். அது நட்பிற்கான பரிசு.

பாதி அறுந்த குரல்வளையுடன் உயிர்பிச்சை கேட்டு ஓடினான் தனிஸ்டன். கண்டவர்களிடமெல்லாம் என்னை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினுள் ஏறி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வேண்டினான். மனிதம் மரணித்த பூமியிலிருந்து அந்த சாரதியின் மனம் இரங்கவில்லை. பச்சை ரத்தம் வழியும் அந்த வாலிபனை இறக்கிவிட்டான் அந்த சாரதி. அங்குமிங்கும் ஓடிய தனிஸ்டனுக்கு உயிர்பிச்சை அங்கு கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இலங்கை கடற்படை முகாமை நோக்கி ஓடினான். முகாம் வாசலில் மயங்கி விழுந்த தனிஸ்டனை அங்கு நின்ற லெப்டினட் மிலன் விக்கிரமரட்ண தனது ரீசேர்டை களைந்து இரத்தும் ஓடுவதை தடுப்பதற்கு முயற்சித்தவாறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார். ஆனால் அப்போது தனிஸ்டனின் உடலிலிருந்து நிறையவே இரத்தும் வெளியேறிவிட்டது. வைத்தியசாலையில் சிறிது நேரத்தில் மூச்சு நின்று விட்டது.

வடகிழக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என்று கூக்குரலிடுகின்ற எந்த அரசியல்வாதிகளோ அன்றில் தமிழ் தேசியவாதிகளோ தமிழ் மக்களுக்கு அனர்த்தம் இடம்பெறும்போது கைகொடுப்பதற்கு இல்லை என்பது இந்த ஒற்றைச் சம்பவத்தில்கூட மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.



யாரை வெளியேறு என்று தமிழ்தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்து நிற்கும் அயோக்கியர்கள் வேண்டுகின்றார்களோ அவர்களிடமே இறுதியாக தமிழ் மக்கள் சரணடைகின்றனர்.

தமிழ் மண்ணில் இன்று மனிதாபிமானம் மரணித்து விட்டது. அவ்வாறு அது வாழுமாக இருந்திருந்தால் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தனிஸ்டனை கிழே இறக்கி விட்டு அவனது மரணத்தை பார்த்து ரசித்திருக்க மாட்டான். இருந்தாலும் தமிழ் சமூகம் இதையும் கடந்துதான் செல்லும். நாளை ஒரு உயிரை காப்பாற்ற உதவாத அந்த முச்சக்கர வண்டியில் சவாரி செய்தே தீரும்.

ஆனாலும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றபோது அந்த உயிரை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் முயற்சிக்க வேண்டும் என்ற இலங்கையின் சட்டத்திற்கு, தமிழீழப் போராட்டம் சாவு மணி அடித்தது. அன்று தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களை சுட்டுச்விட்டு நடுத்தெருவில் போட்டுச் செல்லும்போது, மூச்சுவிடாது பார்த்து நின்று பழகிய தமிழ் சமூகம் இன்றும் அவ்வாறு ஒரு அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும் உயிரின் பெறுமதியை உணர மறுக்கின்றது. இன்றுவரை தமிழ் சமூகத்திலிருந்து குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற எந்த வேண்டுதலும் வரவில்லை.

தனது வீரதீரச் செயற்பாடுகள் சீசீரிவி களில் பதிவாகியுள்ளது என்பதை கண்டுகொண்ட கொலையாளி நண்பன் தனது தந்தையாருடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளான்.


Read more...

கோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்? வெளிவருகின்றது உண்மைகள்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்கடிப்பது என்பது எதிர்தரப்பினருக்கு அல்லது இன்றைய ஆழும்கட்சினருக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.

எனவே தேர்தலில் சவாலை எதிர்கொள்வதிலும் பார்க்க சூழ்ச்சி செய்து விழுத்துவது இலங்கை அரசியல் கலாச்சாரம். இது இன்று கோத்தாவிற்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல வரலாறு முழுவதும் இடம்பெற்று வந்துள்ளது. அந்த வகையில் அவர் தேர்தலில் நுழைவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியல் யாப்பையே மாற்றி அமைத்தார்கள். இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று சட்டம் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும் வெளிநாட்டு பிரஜா உரிமையை ரத்து செய்துவிட்டு தேர்தலில் குதிக்க தயாராகின்றார் கோத்தபாய. என்னதான் செய்வார்கள்? தற்போது அமெரிக்க பிரஜா உரிமை ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக சட்டத்திலுள்ள சில ஓட்டைகளை தேடி அலைந்தனர் பொன்சேகா–மங்கள கோஷ்டியினர். இதில் பொன்சேகா கோத்தபாயவிற்கு எதிராக இத்தனை சிரத்தை எடுப்பதற்கு காரணம் நாட்டின் மீதோ அல்லது மக்கள் மீதோ உள்ள பற்று கிடையாது. உண்மையை உண்மையாகவே சொல்லப்போனால் கோத்தபாயவும் புத்தர் அல்ல. அதிகாரம் கைக்கு கிட்டினால் முதாலாவது அதன் துஷ்பிரயோகம் பொன்சேகாவிற்கு கஞ்சிக்கோப்பை நீட்டுவதற்கே பயன்படுத்துவார் என்பது யாவரும் அறிந்த விடயம். எனவே கோத்தபாய கைக்கு அதிகாரம் செல்வதை தடுப்பதற்கு பொன்சேகா எந்த விலையும் கொடுக்க தயங்கமாட்டார் என்பதையும் உணர்ந்து கொள்ளத்தான்வேண்டும்.

எனவேதான் ஒரு சட்டவிரோத வியாபாரியை விலைக்கு வாங்கியுள்ளனர். யார் இந்த வியாபாரி? அவர் பெயர் றோய் சமாதானம். இலங்கையில் சட்டவிரோதமாக தொலைபேசி மற்றும் சில இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டனை பெற்றவர். அவர் தற்போது தன்மீது புலிப்போர்வை போர்த்திக்கொள்ளவும் தமிழ் தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றார். ஆனால் அவர் சிங்கள அரசியல்வாதிகளின் எடுபிடியாகவே கொழும்பில் சட்டவிரோத வியாபாரம் செய்தார் என்பது பெரிய கதை. இவருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்குமிடையேயான தொடர்புகள் தொடர்பில் பக்கங்கள் எழுதவேண்டிவரும் என்பதால் தற்போதைக்கு தவிர்த்துக்கொள்வோம்.

சமாதனத்தை தனது முன்னைய எஜமானர்கள் அல்லது வியாபார நண்பர்கள் பயன்படுத்துகின்றனர். மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்ற ஒருவர் தடுத்து வைக்கப்படுகின்றபோது, அசௌகரியங்களை சந்திக்கின்றமை ஒன்றும் புதியவிடயம் கிடையாது. ஜனநாயகத்தின் எஜனமானர்கள் அல்லது மனித உரிமைகளின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற மேற்குலகில் கைதிகளின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல நிறையேவே கேட்டிருக்கின்றோம். எந்த சிறையிலும் கைதிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுவதில்லை. அனால் சமாதானம் அவ்வாறு வரவேற்கப்படவில்லை என்றும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் நஷ்டஈடு கேட்டு அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் றோய் சமாதானம்.

அவர் இவ்வழக்கில் வென்றால், இலங்கையில் மேற்கொண்ட சட்டவிரோ வியாபாரத்தில் உழைத்ததை பார்க்கிலும் பல மடங்கு பணத்தை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இவ்வழக்கினூடாக கோத்தபாயவின் அமெரிக்க பிரஜா உரிமை வாபஸ்பெற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தி அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடிந்தால் அதற்கான சன்மானத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், அந்த சன்மானம் யாழ்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகம் மீண்டுமொருமுறை எரியூட்டப்படுவதாக இல்லாதிருக்கட்டும் என்று மாத்திரம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

இவ்வாறான நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த காஞ்சன விஜேசேகர :

'கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.

சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Read more...

Thursday, April 18, 2019

மேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.

இலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாகவே காணப்படுகின்றார் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

கிளிநொச்சியில் தனக்கென அலுவலகம் ஒன்றை அமைத்து அம்மக்களிடம் வெறுமனே உணர்ச்சி வசனங்களை பேசி வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டிருக்கும் சிறிதரன், தனது காரியாலயத்திற்கு ஆறு பொலிஸாரை காவலுக்கு வைத்துள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதியான சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு ஆறு பொலிஸார் எதற்காக என்ற கேள்விகளை அக்காரியாலயத்திற்குச் சென்று அசௌகரியங்களை அனுபவித்து வருகின்ற மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், சிறிதரன் தனது குடும்பம் யாழ்பாணத்தில் தங்கியுள்ள வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மேயர் ஆர்னோல்ட் மற்றும் சயந்தனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டென்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் பா.உ சுமந்திரன் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுதல் விடுத்திருந்தார். இவ்வேண்டுதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் மேற்படி இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் யாழ் பொலிஸ் புலனாய்வுத் பிரிவினரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரமே மேற்படி முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சிறிதரன் சற்று காலங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருக்கு யாழ்பாணத்தில் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பிலும் அறிக்கையிட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அலுவலகத்திற்கு 6 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மேலதிக பாதுகாப்பினை வழங்க முடியாது என்று அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

இதேநேரம் வடக்கில் படையினரின் பிரசன்னத்திற்கு எதிராக கூக்குரல் இட்டுவரும் அனந்தி சசிதரன் மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் தனது பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவேண்டாம் என மன்றாட்டக் கடிதம் ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பாக அத்தருணத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்டிருந்தவர் தனது எதிர்ப்பை தெரிவித்து பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே எதிர்கட்சி தலைவராக இருந்த தவராசாவினது வேண்டுதலும் நிராகரிக்கப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Read more...

கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்துபேரின் உடலங்கள் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், ஹயஸ் வானில் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோதே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்டன. 10 பேரின் சடலங்களும் அவர்களின் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளதால் சடலங்கள் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை உலுக்கியுள்ள இந்தக் கோர விபத்துச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்குப் பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரினதும் மனதையும் உருகச் செய்துள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (வயது – 56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (வயது – 50), அன்ரனி லிஸ்டர் அலெக்ஸாண்டர் (வயது – 35), அவரது மனைவி நிசலி அலெக்ஸாண்டர் (வயது – 27), அவர்களது இரட்டைப் பெண் பிள்ளைகளான ஹனாலி அலெக்ஸாண்டர் (வயது – 04), பைகா அலெக்ஸாண்டர் (வயது – 04), யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸ் (வயது – 48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (வயது – 42), அவர்களது மகளான செரேப் ஹென்ரிக்ஸ் (வயது 10), அவர்களது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (வயது – 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இவர்களுடன் ஹயஸ் வானில் சென்ற யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸின் மகளான செகானி ஹென்ரிக்ஸ் (வயது – 13) மற்றும் ரெசானி பெர்கஸால் (வயது – 16) ஆகியோர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Read more...

பிள்ளையானைப் பார்த்தேன்! சீவகன் பூபாலரட்ணம்

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா? இவரென்ன அனுமாரா என்ற மாதிரி பலர் நினைக்கலாம். ஆனால், அவர்களை என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.

ஆனால், பிள்ளையானைப் பார்த்ததும் அவருடன் பேசியதும் நான் அதிசயித்தேன். உண்மையில் இன்னுமொரு பெரிய தலைவரை நான் முதன் முதலில் பார்த்ததை இதனுடன் ஒப்பிட்டு எழுதத்தான் நினைத்தேன். ஆனால், நான் அப்படி எழுதியிருந்தால், நான் மேலே சொன்ன வகையறாக்கள் மேலும் மனம் நொந்துபோயிருப்பார்கள். அதனால், தவிர்க்கிறேன்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் என்னைப் பொறுத்தவரை ஒரு சிறார் போராளி. 16 வயதில் தான் இயக்கத்தில் சேர்ந்ததாக அவரே சொன்னார். அவர் ஒரு சிறார் போராளி என்பதாலும், பிள்ளையான் என்று பெயர் இருந்த காரணத்தாலுமோ என்னவோ, அவர் ஒரு பதவிக்காலம் முழுவதும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பின்னரும் கூட அவர் பற்றிய பிரமாண்ட தோற்றம் எதுவும் எனமனதில் இருந்ததில்லை.

ஆனால், மட்டக்களப்பு சிறைச்சாலையில், சில நிமிட அனுமதியில் நான் பார்த்துப் பேசிய பிள்ளையான் நிச்சயமாக முதிர்ச்சியடைந்த ஒரு அரசியல்வாதி. இன்னமும் எதுவும் தெரியாத சிறார் போராளி என்றெல்லாம் என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை.

“புலவர்” என்ற பெயரைக் கொண்ட கிழக்குப் பிராந்திய கடற்படைத்துணைத்தளபதியாக இருந்த முன்னாள் போராளி ஒருவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. ‘ஒவ்வொருவரும் எங்கெங்கோவெல்லாம், என்னென்னவோவெல்லாம் படித்திருப்பார்கள், ஆனால், என்னுடைய பல்கலைக்கழகம் இயக்கம்தான்’ என்று அவரைச் செவ்வி கண்ட போது ஒரு தடவை கூறியிருந்தார். அது சரிதானோ என்றும் பிள்ளையானைச் சந்தித்த போது எண்ணத்தோன்றியது.

இதுதான் நான் பிள்ளையானைச் சந்தித்த முதல் தடவை. என்ன நடக்க வேண்டும் என்று நான் கேட்டதற்கு ‘முதலில எங்கட மக்களை மாற்ற வேண்டும் அண்ணன்’ என்றார். பொருளாதாரத்தை மாற்றணும், அரசியலை மாற்றணும் என்று அவர் கூறியிருந்தால், அது தவறான பதிலாக இருந்திருக்காவிட்டாலும், அது ஒரு சாதாரண பதிலாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் மக்களை மாற்றணும் என்று சொன்னதும், அதற்குச் சொன்ன காரணங்களும் அவர் பற்றிய மரியாதையை அதிகரிக்கச் செய்தது.

மாகாணசபைக்கு தலைமைமேற்றுச் செயற்பட்ட ஒரு பதவிக்காலம் பிள்ளையானை நன்கு புடம் போட்டிருக்கிறது. மாகாணத்தின், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரல் நுனியில் தகவல் வைத்துப் பேசுகிறார். எதனையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசினாலும், சிக்கலுக்கு அல்லது இலகுவில் பதற்றத்தை தூண்டக்கூடிய விடயங்களில், ‘தீவிரவாதியான’ பிள்ளையானிடம் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர் நிதானமாகப் பேசுகிறார்.

அவரது அரசியல் கூட்டணி பற்றி நான் கேள்வியெழுப்ப, ‘யாருடனும் கூட்டணி போடலாம் அண்ணன், ஆனால், நடக்கிறதை நாம தீர்மானிக்கக்கூடியதாக இருக்கணும், அவர்கள் போடும் தாளத்துக்கு நாம் ஆடமுடியாது. நமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டத்தை நாமதான் போடணும், அடுத்தவர்கள் போடும் திட்டத்தை நாம் கையில் எடுத்து முழம் போடக்கூடாது’ என்கிறார்.

தான் நிர்மாணிக்கத் தொடங்கிய மட்டக்களப்பு வாசிகசாலைக்கான கட்டிடம் பூர்த்தியாகாதமை குறித்து அவருக்கு ஏக்கம் இருக்கிறது. ‘உண்மையில் அடுத்த தடவையும் நான்தான் பதவிக்கு வருவேன் என்று நினைத்துவிட்டேன். அதனால் அது தவறி விட்டது’ என்கிறார். ஆனால், அவரது ஆட்சியில் கட்டப்பட்டு அரைவாசிக்கு மேல் நிர்மாணிக்கப்பட்ட அந்த வாசிகசாலை, இன்று அதன் பின்னரும் ஒரு பதவிக்காலம் முடிந்து பூர்த்தியாகாமல் இருப்பது கவலைக்குரியது. அடுத்த ஆட்சியில் இருந்தவர்கள், அந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களின் பொறுப்பு அது. ஆனால், இந்தக் கணம்வரை அது திறக்கப்படவில்லை.

இதேபோல படுவான்கரையில் உன்னிச்சைக்குளத்துக்கு ஒத்ததாக, பாவக்கொடிச்சேனை மற்றும் தாந்தாமலை ஆகியவற்றுக்கு அருகாக தான் நிர்மாணிக்கவிருந்த ஒரு “கனவுக் குளம்” பற்றியும் மிகவும் ஆர்வமாக விபரித்தார். அதனை நடத்தி முடித்திருந்தால் எல்லாம் சிறப்பாக நடந்திருக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறவில்லை. அதனை எப்படியாவது செய்தாகணும் என்றுதான் கூறினார்.

சிறைக்கு பிள்ளையான் வந்த பிறகு சிறையும் அபிவிருத்தி அடைந்திருப்பதாக அங்கு சிலர் கூறக்கேட்டேன். மலசல கூடம் முதல் சிறைக்கு வெள்ளை பூசியது வரை பல அபிவிருத்திகளை அங்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ‘பிள்ளையான் வந்ததால்தான் சிறைக்கும் அபிவிருத்தி’ என்று ஒருவர் கூறியதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு போகமுடியவில்லை.

சிறை வாழ்க்கை பிள்ளையானுக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்திருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ‘இருக்கும் ஆட்சியை கவிழு’ என்று அவர் பேசவில்லை. இருப்பவர்களை வைத்து காரியத்தை நடத்து என்று ஒருவருக்கு எனக்கு முன்னாலேயே ஆலோசனை கூறினார்.

அவரது வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு. அது தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், அதனைப் பற்றி நான் இங்கு பேசுவது உசிதமல்ல. ஆனால், தன்னை தொடர்ச்சியாக 1000 நாட்களுக்கும் அதிகமாக தடுத்து வைத்திருப்பதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. பொதுவாக மக்கள் பலரும் இதே கருத்தை கூறுகிறார்கள்.

பிள்ளையான் ஒரு பெரும் கொள்கையைக் கொண்ட சித்தாந்தவாதியல்ல. அவருக்கு பெரிய கொள்கைகளை, சித்தாந்தந்தத்தை வகுத்தவர்களையும் தெரியவில்லை என்ற விமர்சனம் பொதுவானது. ஆனால், வடக்குக் கிழக்கில் இதுவரை இருந்த முதலமைச்சர்களில் தமிழ் மக்களை நோக்கி துரித அபிவிருத்தியை கொண்டு சென்றவர் அவர்தான் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். பெரும் அறிஞர்கள் என்று நாம் நினைத்தவர்கள் எல்லாம் எம்மை ஏமாற்ற, பிள்ளையான் தெரு அமைத்திருக்கிறார், விளக்கு போட்டிருக்கிறார், கட்டிடம் கட்டியிருக்கிறார். மாகாண சபை உள்ளூராட்சி சபை செய்யக்கூடியது அதுதான். மாகாணசபைக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்லி புலம்பியே காலம் கழித்தவர்களைப் போல அவர் இருக்கவில்லை.

அவர் பதவியில் இருந்த காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவரது கையில் ஆயுதம் இருந்த காலத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்த விமர்சனம் இன்னமும் தொடர்கிறது. ஆரம்பத்தில் அவர்களில் இருந்து மக்கள் விலகிப்போனதற்கு அதுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தீவிரவாதப் போக்கில் செயற்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களில் மாற்றம் தெரிகிறது. மக்களும் நெருங்கி வருவது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தெரிந்தது.

தமிழீழம் வேண்டுமா? இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? இவை கிடைக்கும் என்றால், அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றால் பிள்ளையானை தேடவேண்டாம். அதனைச் செய்து தருவோம் என்று உறுதி கூறும் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பலாமா என்பதை இன்னுமொரு நாள் ஆழமாக ஆராய்வோம். ஆனால், அபிவிருத்திதான் உங்கள் பகுதிக்கு தேவையெண்டால்; இதுவரை காலத்தில் கிழக்கு மாகாணத்தில், வடக்கு மாகாணத்தில் இதை மேம்படச் செய்ய தன்னால்தான் முடியும் என்று பிள்ளையான் நிரூபித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில்கூட எந்த முதலமைச்சரும் இருந்ததில்லை. ஆகவே அபிவிருத்திதான் வேண்டுமென்றால் பிள்ளையானைத்தான் நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும்.

பிள்ளையானும் தனது வழக்கில் இருந்து விடுதலையாகி வரவேண்டும். தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதற்கு நீண்ட உழைப்பும் தேவை. பொறுமை தேவை. நல்ல திட்டம் தேவை. இதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதுவும் வெற்றியளித்தாக வேண்டும்.

இப்படி எழுதியதற்காக நான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்துவிட்டேன் என்றோ, அரங்கம் அவர்களுக்கு ஆதரவு என்றோ அவசரமாக முடிவு செய்துவிட வேண்டாம். அப்படி திட்டம் போட்டு பிரச்சாரம் செய்யவும் ஆட்கள் இப்போதே தயாராகி இருப்பார்கள். அப்படித்தான் முடிவு செய்து என்னை திட்டினாலும், பரவாயில்லை. என் பணி சரியென்று நினைப்பதை எழுதுவது. அது மாத்திரந்தான். பிள்ளையான் மீண்டும் ஆட்சிக்கு வந்து தவறு செய்தாலும் நிச்சயமாக அதையும் எழுதுவேன்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். அனைத்தும் ஊடகனுக்கே!

அரங்கம் பத்திரிகையில் இருந்து.

Read more...

ஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்திக்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசையுமாகவே காண்பித்தனர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக கஜேந்திரர்களை நம்பி விக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

ஆனாலும் தற்போது நகமும் தசையுமாக இருந்தவர்கள் கீரியும் பாம்புமாக மாறியுள்ளனர். இவ்வாறு அவர்கள் எதிரிகளாக மாறியமைக்கு காரணம், விக்கி-கஜேந்திரன்-சுரேஸ் குழுவினர் அமைத்துக்கொள்விருந்த கூட்டணியில் பதவிகளை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலாகும்.

உள்ளே அடிபட்டுக் கடிபட்டுக்கொண்டிருந்த விக்கி-கஜேந்திரன்-சுரேஸ் கோஷ்டி தற்போது பொது அரங்கில் அடி-கடி படத்தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் கூறுகின்ற காரணம் விக்கி போர்க்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்று சாத்தியம் இல்லை என்று தெரிவித்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டாராம் என்பதாகும்.

கஜேந்திரர்களுக்கு பதிலடி கொடுத்த விக்கி கஜேந்திரர்கள் நடுச்சாமத்தில் ஒழிந்து சென்று சீனர்களை சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.

விக்கினேஸ்வரனின் மேற்படி பதிலடி தொடர்பில் கடுப்பாகியுள்ள குதிரை கஜேந்திரன், விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்யுரைப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான – பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி. அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்லமாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.

அப்பிடியிருக்கின்றபோது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது.

அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம். இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் தன்னுடைய அரசிலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்துவிட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும்.

எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம். எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை.

இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனாத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம். அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிரத்துக்கொள்ள வேண்டும்' – என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, April 16, 2019

இலங்கையின் போர் அவலங்களை விற்று வாக்கு பிச்சை கோருவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையகம் தடை.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்தியத் தேர்தல் ஆணையகம் தடை செய்துள்ளது.

இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்தியும், அதன் ஊழல்கள் தொடர்பிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மூன்று விளம்பரங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை பிரிவினரால் இந்தியத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களின் ஊடாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம் மீது அடிப்படையற்ற விவாதத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களையும் இந்தியத் தேர்தல்கள் ஆணையகம் நேற்றைய தினம் தடை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இதே நடைமுறையை இலங்கை தேர்தல்கள் ஆணையகம் பின்பற்றுமா என்பதே இங்கு கேட்கப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.

Read more...

Monday, April 15, 2019

ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா? அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா?

ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் எப்போதும் prospective -முன்னோக்கியது; அதாவது அது அமுலுக்கு வந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கே பொருந்தும்; அது retrospective- அது பின்னோக்கியதல்ல; என்பது பொதுவான கோட்பாடு.

இதனடிப்படையில் 19 அமுலுக்கு வரமுன் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். மக்களும் ஆறு வருடங்களுக்கு ஆணை வழங்கிவிட்டனர். எனவே, புதிய திருத்தம் இந்த ஜனாதிபதிக்குப் பொருந்துமா? என அறிவதற்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றை நாடினார்.

உயர்நீதிமன்றம் “ஆம், பொருந்தும். பதவிக்காலம் ஐந்து வருடமே” என பதிலளித்தது. உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நிலைப்பாடு, மக்கள் ஆணை வழங்கிய காலப்பகுதியைக் குறைப்பதில் பிரச்சினையில்லை; ஏனெனில் அவர்கள் மீண்டும் ஆணைவழங்கிய அதே மக்களிடமே செல்கிறார்கள். ஆனால் மக்களின் அனுமதியை சர்வஜன வாக்கெடுப்பினூடாகப் பெறாமல் அனுமதி வழங்கிய காலப்பகுதிக்குமேல் நீட்டமுடியாது; என்பதாகும்.

அதேபோல் இந்த திருத்தம் இந்த ஜனாதிபதியையும் உள்ளடக்குகின்றது; என்ற அடிப்படையில் ஐந்து வருடம் என்பது இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதாகும்.

இந்நிலையில் ஐந்து வருடம் என்பதைக் கேள்விக்குட்படுத்த முடியாது; என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதித் தரப்பு, இந்த ஐந்து வருடம் என்பது எப்போதிருந்து ஆரம்பிக்கின்றது; என்றொரு கேள்வியை எழுப்ப முடியாதா? என சிந்திக்கின்றது.

இங்கும் அரசியலமைப்பு சட்டம் prospective - முன்னோக்கியதே தவிர, retrospective- பின்னோக்கியதல்ல, எனவே, புதிதாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட “ ஐந்து வருடம்” என்பது திருத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும். என்ற ஒரு வாதத்தை முன்வைக்க முற்படுவதுபோல் தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது அவ்வாதம் நியாயமாகவே படுகிறது. ஆனால் 19 வது திருத்தம் என்பது அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டதாகும். எனவே, அத்திருத்தம் என்ன சொல்கின்றது; என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.

சரத்து 30(2), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்கிறது. சரத்து 31(3)(d)(ii), ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிப்பதாக குறிப்பிடுகின்றது. (அதாவது 2015 ஜனவரி 9ம் திகதி.)

இங்கு எழுகின்ற கேள்வி, “ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதி என்பது இத்திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் நடக்கப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தும்; திருத்தத்திற்குமுன் நடைபெற்ற தேர்தலுக்கு prospective ஆன அரசியலமைப்பின் சரத்து எவ்வாறு பொருந்தும்”? என்பதாகும். இதுவும் வலுவான கேள்விதான். அவ்வாறானால் இதற்குரிய விடை என்ன?

இதற்குரிய விடை 19வது திருத்தத்தின் Transitional provisions ( தற்காலிக சரத்துக்கள்) இல் இருக்கிறது. அதாவது S 49(1)(b) இதற்கு விடை தருகிறது. அது சுருக்கமாக பின்வருமாறு கூறுகின்றது.

அதாவது, 2015, ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் தொடர்வார்கள் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கமைய.

அதன்பிரகாரம் பாராளுமன்றம் கலைந்தவுடன் பிரதமரின் பதவிக்காலம் முடிந்து பின்னர் அவர் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால் ஜனாதிபதி ஏப்ரல் 22, 2015 இற்கு முன் பதவி வகித்த அதே ஜனாதிபதியாகவே பதவியில் தொடர்கிறார். அந்த ஜனாதிபதிக்கு, மேலே குறிப்பிட்டதுபோல் இந்த இடைக்கால சரத்தின்படி இந்தத் திருத்தம் பொருந்தும்.

அதாவது, மீண்டும் தெளிவுக்காக, மேற்குறிப்பிட்ட இடைக்கால சரத்து, 2015 ஏப்ரல் 22 இற்கு முன் பதவி வகித்த ஜனாதிபதி அரசியலமைப்பின் திருத்தங்களுக்கமைய பதவியில் தொடரலாம் எனக்கூறுகிறது.

எனவே, 19வது திருத்தம் ஜனாதிபதிக்கு செல்லுபடியாகின்றது. இது prospective, retrospective என்ற பதங்களுடன் தொடர்புபடவில்லை. நேரடியாக தற்காலிக ஏற்பாட்டின் சரத்தின் வியாக்கியானத்தோடுதான் தொடர்பு பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் மேல கூறப்பட்ட “ ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது” என்பது எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மாத்திரமல்ல, இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

வை எல் எஸ் ஹமீட்

Read more...

Sunday, April 14, 2019

ஐ.தே.க விசேட சந்திப்புக்கு தயாராகின்றது. மீண்டும் பொதுவேட்பாளரை தேடுகின்றதா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தலைமையில் விரைவில் உயர்மட்டக் கூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் குறித்த சந்திப்பு இடம்பெறலாம் என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்கின்ற போதிலும், சபாநாயகராகப் பதவியேற்ற பின்னர் அக்கட்சி சார்ந்த கூட்டங்களில் பங்கேற்பதை கரு ஜயசூரிய தவிர்த்து வந்தார்.

எனினும், குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதால் அவர் கட்டாயம் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள பங்காளிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.

இக்கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கும். இது குறித்தான அறிவிப்பு மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

எனவே, இவ்விடயம் குறித்தும், மே தினக் கூட்டம் சம்பந்தமாகவும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்பதற்காகவே இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பையும் மே தினத்தன்று ஐ.தே.க. விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவேதான், முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் முடிவடைந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சியுடன் விசேட மத்திய செயற்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Read more...

Saturday, April 13, 2019

யாழ் காவாலிகள் கழகத்தின் கலைப்பீட காவாலி ஒருவனுக்கு வகுப்புத்தடை!

யாழ்.பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகின்ற காவாலிகள் கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் காமச்சேட்டைகள் இடம்பெறுகின்றது என இலங்கைநெட் முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் காவலிகள் ஒன்றியம் தாம் அவ்வாறான சேட்டைகளை செய்வதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் குறித்த கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த காவாலி ஒருவன் மாணவி ஒருத்தி மீது பாலியல் சேட்டை புரிந்தான் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வகுப்புக்களில் பங்கெடுப்பதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட மாணவி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தவருக்கு பலத்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் அறியமுடிகின்றது. இந்த வற்புறுத்தலின் பின்னணியில் தமிழ் தேசிய முன்னணி என்ற அரசியல் விபச்சாரிகள் உள்ளதாகவும், தமது அரசியல் எடுபிடிகளை காப்பாற்றுதற்காக அவர்கள் பலத்த முயற்சிகளை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

மேலும் இவ்விடயத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மாணவிகள் சிலருடன் கலந்துரையாடியதாகவும் அறியமுடிகின்றது. தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டி விரிவுரையாளர் இவ்வாறு மறைமுக அழுத்தம் வழங்குவது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமைகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்கவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் அபிலாஷையாகவுள்ளது.

Read more...

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மனி குற்றப்பத்திரிகை தாக்கல்.

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 15 படை வீரர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்திற்குரிய நபர் மீது ஜேர்மன் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிவதீபன் என்ற நபரே இவ்வாறு நீதிமன்றில் நிறுத்தப்படுகின்றார்.

இவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர், இரண்டு கொலை வழக்குகள் மற்றும் 11 கொலை முயற்சிகள் என்ற குற்றசாட்டுக்களை எதிர் கொள்கின்றார்.

இலங்கையில் 2008 ல் சிறைப்பிடிக்கப்பட்ட 15 படையினரை கொலைக்களத்திற்கு கொண்டுசெல்கையில் அதற்கு பாதுகாப்பு வழங்கியமை, சுட்டுக்கொல்லப்பட்ட உடலங்களை எரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை என்ற குற்றங்களை வழக்குத் தொடுநர்கள் சுமத்தியுள்ளனர்.

மேலும் சிவதீபன் 13 படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வழக்கு தொடுநர்கள் இரு கொலை மற்றும் 11 உயிர்களை கொலை செய்ய முயற்சித்தமைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த நபர் எவ்வாறு ஜேர்மனியில் கைதானார் என்பது தொடர்பாக ஜேர்மன் பொலிஸார் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடமும் தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை எனத் தெரியவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளை வேண்டிய புலம்பெயர் புலிப்பினாமிகள் தற்போது இது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர். வெறும் அறிக்கைகளுக்காக போர்குற்றம், சர்வதேச விசாரணைகள் என்ற கோஷங்களை கையிலெடுத்த புலம்பெயர் புலிப்பணப்பினாமிகள் தற்போது தாங்கள் வெட்டிய குழியில் எஞ்சியுள்ள புலிகளை போட்டு புதைக்கவுள்ளனர் என இலங்கைநெட் நம்புகின்றது.

இதேநேரம் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வித பிரத்தியேக குற்றச்சாட்டுக்களும் இன்றி தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதன்பொருட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என கைதுகள் தொடருமாயின் பலரின் நிலை மற்றும் அவர்களது இருப்பு கேள்விக்குள்ளாகலாம் என நம்பப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்த்தவர்கள் என்பது இதுவரை வெளியாகவில்லை. அது புலிகள் அமைப்பாக இருந்தால் அதன் உறுப்பினர்களின் நிலைமை மோசமடையலாம்.

Read more...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 4 + 5 வை எல் எஸ் ஹமீட்

சாதாரண சட்டங்களால் கையாளப்படவேண்டிய சிறிய குற்றங்கள்கூட பயங்கரவாதக் குற்றங்கள்

ஐ நா மனித உரிமை உயரதிகாரி ( Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism) அரசுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் “வழமையாக சாதாரண சட்டங்களால் கையாளக்கூடிய சிறிய குற்றங்களைக்கூட ( ஒருவருடைய உயிருக்கு ஆபத்துவிளவிக்கக்கூடிய செயல், சுகாதாரத்திற்கு பாரதூரமான கேடுவிளைவிக்கக்கூடிய செயல், அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கு இடையூறு விளைவித்தல்) இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது; என சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக, ஹர்த்தால்கள் இடம்பெறும்போது வாகனங்களைத் தடைசெய்வதற்காக வாகனங்கள் வரும்போது மரக்கட்டைகளைகளை சிலநேரங்களில் ரோட்டில் உருட்டிவிடப்படுவதைக் காணுகின்றோம். இது குற்றம்தான். ஆனால் பயங்கரவாதமாகுமா? இது சாதாரணசட்டத்தினால் கையாளமுடியாதா?

புதிய சட்டத்தின்கீழ் ‘ வாகனம் வரும்போது அவ்வாறு மரக்கட்டையை உறுட்டிவிட்டது, வாகனத்திற்கு விபத்தை ஏற்படுத்தி உயிராபத்து விளைவிக்கக்கூடியது, என்று இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்.

இங்கு பொலிசார் விரும்பினால் இக்குற்றத்திற்கு சாதாரண சட்டத்தின்கீழும் கைதுசெய்ய முடியும், புதிய பயங்கரவாத சட்டத்தின்கீழும் கைதுசெய்யமுடியும். இதுபோன்ற விடயங்களால்தான் திரு G L பீரிஸ் அவர்கள் இச்சட்டம் ஒரு பொலிஸ் ராஜ்ஜியத்திற்கு இட்டுச் செல்லும்; என்று தெரிவித்திருக்கின்றார்.

மட்டுமல்ல, அவ்வாறு மரக்கட்டைகள் போட்டு ரோட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அத்தியாவசியமான உணவுப்பொருளை ஏற்றிக்கொண்டு ஒரு லொறி வந்து செல்லமுடியாமல் தடைப்பட்டிருக்கின்றது; என வைத்துக் கொள்வோம்.

இவ்வாறான நிகழ்வுகள் ஹர்த்தாலின்போது வழமையாக காணுகின்ற விடயம். அவ்வாறான சூழ்நிலையில் சாதாரணமாக பொலிசார் வந்து கட்டைகளை நீக்கி லொறி போவதற்கு வழிசெய்வார்கள். சில நேரங்களில் அங்கு வேடிக்கை பார்த்து நிற்கும் சிலரைக் கைதுசெய்து கொண்டுசென்று சில மணித்தியாலங்களில் விடுதலை செய்வார்கள்.

இவை நாம் சாதாரணமாக காணுகின்ற விடயம். புதிய சட்டத்தின்கீழ் அவ்வாறு வேடிக்கை பார்த்தவர்களைக்கூட பயங்கரவாத குற்றமிழைத்தவர்களாக கைதுசெய்யமுடியும். அதாவது “ அத்தியாவசிய சேவை விநியோகத்திற்கு இடையூறு விளைவித்தமை” என்ற அடிப்படையில்.

உண்மையில் கட்டை போட்டவர்கள் ஓடிவிடுவார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் மாட்டுப்படுவார்கள். ஆனால் நாங்கள் கட்டை போடவில்லை, வேடிக்கைதான் பார்த்தோம்; என பின்னர் நீதிமன்ற விசாரணையின் போதுதான் நீங்கள் நிறுவமுடியும். அதற்குமுன் கைது, தடுப்புக்காவல் என்று அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.

எனவேதான் இது ஒரு பயங்கர சட்டம்; என்று எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

கைது செய்யும் அதிகாரம்

தற்போதைய PTA யின் கீழ் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது எழுத்துமூல அதிகாரத்தின்கீழ் ஒரு S I தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யமுடியும். புதிய CTA யின்கீழ் பொலிசார், முப்படையினர் மாத்திரமல்ல, கரையோர காவற்படையினரும் பயங்கரவாத குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்ய முடியும்.

யுத்த காலத்திலேயே போலீசாருக்கு மட்டும் இருந்த அதிகாரம் யுத்தம் இல்லாதபோது இவ்வளவு பேருக்கும் எதற்காக? நோக்கம் என்ன? இதனை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 5 Counter Terrorism Bill and Its Impact-Part 5

பாகம் 4 இல் பயங்கரவாத குற்றமாக மேற்படி சட்டத்தில் கருதப்படக்கூடிய சில விடயங்களைப் பார்த்தோம்.

அதில் சாதாரண சட்டங்களால் கையாளப்படக்கூடிய சாதாரண அல்லது சிறிய குற்றங்களைக்கூட பயங்கரவாத குற்றமாக இச்சட்டத்தின்கீழ் கருதமுடியுமெனப் பார்த்தோம்.

பிரிவு 13இல் அக்குற்றங்களை இழைப்பதற்கு ஆயத்தம் செய்கிறார், அல்லது உதவுகிறார், என்று ஒருவருக்கு நம்புவதற்கு காரணம் இருந்தும் அந்தத்தகவலை அவர் அருகேயுள்ள பொலிசிற்கு அறிவிக்காவிடின் அதுவும் பயங்கரவாதக்குற்றமே!

அதாவது X என்பவர் ஒரு பயங்கரவாத குற்றத்தைப் புரியப்போகிறார் அல்லது புரியப்போகின்றவருக்கு உதவுகிறார். அவ்வாறு Y நம்புவதற்கு காரணம் இருக்கின்றது; என பொலிசார் நினைக்கின்றனர். ஆனால் Y பொலிசுக்கு தகவல் வழங்கவில்லை. இப்பொழுது அவர் இப்பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம்.

இங்கு, குற்றவாளியா இல்லையா என முதலில் பொலிசார்தான் தீர்மானிக்கிறார்கள். அதன்பின் தடுப்புக்காவல் போன்ற அனைத்து வேதனைகளையும் அனுபவித்தன்பின் நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைத்து விடுதலைபெற முயற்சிக்கலாம்.

சுருங்கக்கூறின் அருவாக்காட்டு குப்பை கொட்டுவதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சிலவேளை யாராவது பஸ்ஸிற்கு கல்லெறிந்தால் அவரை பயங்கரவாதியாக கருதலாம். அல்லது கல்லெறிய அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; ஆனாலும் அவர் கல்லெறிய ஆயத்தம் செய்தார்; என கைதுசெய்யலாம். மட்டுமல்ல, இவர் கல்லெறியப்போகிறார்; என்பது இன்னொருவருக்குத் தெரிந்தும் அவர் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை; என அவரையும் கைதுசெய்யலாம். இவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே!

ஐ நா மனித உரிமை உயரதிகாரி குறிப்பிடும்போது, பொலிசார், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படையினர் பல தரப்பட்ட செயற்பாடுகளை பயங்கரவாதமாகவும் அவற்றோடு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டார்; என ஒருவரை இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்; எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையான பயங்கரவாதக் குற்றங்களே பயங்கரவாதமாக கருதப்பட வேண்டும். இவ்வாறான சட்டங்கள மூலம் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும்போது, ஒரு குற்றம் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவேண்டும், அதற்குரிய சட்டப்பின்னணி என்ன? அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா? என்பவை சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; எனவும் தெரிவித்திருக்கின்றார்.

பிரிவு 14 இன்கீழ் ஒரு பயங்கரவாத குற்றத்தை விசாரிக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி இன்னுமொருவரிடம் அது தொடர்பாக சில தகவல்களைக் கோரும்போது அவர் பிழையான தகவல்களை வழங்கினார்; என சந்தேகித்தால் அவரையும் கைதுசெய்யமுடியும். அவரும் பயங்கரவாதியே!

அதேநேரம் பிரிவுகள் 15 மற்றும் 27 இன்கீழ் பொலிசார், கடலோர காவல் மற்றும் முப்படையினர் பயங்கரவாதக் குற்றம் புரிந்தார்; என்ற குற்றச்சாட்டில் வாறண் இல்லாமல் யாரையும் கைதுசெய்ய முடியும், அவை உண்மையான பயங்கரவாதக்குற்றமாக இல்லாதபோதிலும்கூட.

பிரிவு 17 மேற்படி தரப்பினருக்கு கைதுசெய்வதற்கு அதீத அதிகாரத்தை வழங்குகின்றது.

பிரிவு 27 இன்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் நிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அவருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனை அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு நீதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இதேபோன்றதொரு நிலை பிரிவு 39(4) இன் கீழும் காணப்படுகின்றது.

இவ்விடயங்கள் குறித்து ஐ தா மனித உரிமை அதிகாரி குறிப்பிடும்போது, ஒருவர் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும்போது அவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் வழங்கப்பட்டால் அவ்வாறு தடுப்புக்காவல் அவசியமா? அது சட்டத்திற்கு ஏற்புடையதா? அது அவர் செய்த குற்றத்திற்கு பொருத்தமானதா? என்பவற்றைத் தீர்மானிக்கக்கூடிய முழுமையான அதிகாரம் நீதித்
துறைக்கில்லை; எனத் தெரிவித்திருக்கின்றார்.

(தொடரும்)

Read more...

Friday, April 12, 2019

பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு அரசவேலை வரும்வரை கொசுஅடிக்காது, யாழில் சாதனைபடைக்கும் யசோதா!

பட்டப்படிப்பை முடித்து விட்டு வீதி, வீதியாக வேலை தேடாமல் தனது அதீத திறமையினால் சொந்தக் காலில் சாதனை படைக்கும் யாழ் மாணவியாக இணுவையூர் யசோதா விளங்குகிறார்.

யாழ்ப்பாணம் இணுவில் எனும் ஊரில் இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது அவரது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார் யசோதா பாலச்சந்திரன்.



இவர் பாலச்சந்திரன் – மகேஸ்வரி தம்பதிகளின் கடைசி மகள். செய்த கைவினைப் பொருள்களில் அழகும், நேர்த்தியும் தெரிகிறது. சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்களையும் உருவாக்கியுள்ளார். பெரும்பாலும், தனக்குத் தெரியாத கைவினைப் பொருள்களின் வடிவமைப்புக்களை இணையத்தை பார்த்து கற்றுக் கொண்டு, பின் அவற்றைத் திறம்பட வடிவமைக்கிறார்.

Art and design பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் 2015 ஆம் ஆண்டில் முடித்துள்ளார். படிப்பை முடித்துவிட்டு அரசாங்கத்தில் அல்லது வேறு நிறுவனங்களில் மட்டும் வேலையைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து, தன் சொந்தக் காலில் நிற்கும் சுயதொழில் முயற்சியை தன்னார்வத்துடன் செய்து வருகிறார். அத்துடன் 3 வருடங்களாக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் கைவினைத் துறையில் Visiting Instructor ஆக மாணவர்களுக்குப் கற்பித்து வருகின்றார்.



யசோதாவிடன் பேசியதில் இருந்து பின்வருமாறு கூறினார்.

முதலில் குழந்தைகளுக்கு தேவையான சிறிய அணிகலன்கள், கைப்பணிப் பொருட்களை உருவாக்கினேன். பின்னர் பெண்கள் கழுத்தில் போடும் முத்து மாலைகளில் இருந்து, பல்வேறு வகையான மாலைகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் எனது பக்கத்தில் பதிவேற்றுவேன். அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பின்னர் எங்கள் சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களை கொண்டும் பெண்களுக்கு தேவையான அணிகலன்களை நிறைய உருவாக்கியிருக்கிறேன். நெல் மணியில் செய்த கழுத்தணி எல்லோரிடமும் வரவேற்பை பெற்றது. இங்கு, நான் தான் முதன் முதலில் இப்படியான முயற்சியை செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். நெல்மணியில் ‘ஆரம் செட்’ செய்ய நான்கு நாட்கள் தேவையாக உள்ளது. இந்த தொழிலுக்கு உச்சப்பட்ச பொறுமை தேவையாக உள்ளது. ஆனால், பேப்பர்களில் செய்யும் அணிகலன்கள், அலங்காரப் பொருட்களுக்கும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்களுக்கும் எம் ஊர்களில் பெரிதாக சந்தைவாய்ப்பு இல்லை.



ஆனால், நான் பங்கேற்ற கண்காட்சிகளில் சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் எல்லோரும் குறித்த பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து அட்டைகளையும் தயாரித்து வருகிறேன். இம்முறை காதலர் தினத்தத்துக்கு காதலர் தின அட்டை செய்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையும் தவிர ஓவியங்களையும் உருவாக்கி வருகிறேன். பெண்களின் விருப்பங்கள், தேவைகள் மாறும் போது நாமும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரி தான் செய்வேன் என சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அதனால், புதிய புதிய, பிந்திய வடிவங்களை கற்றுக் கொண்டு அணிகலன்களை உருவாக்கி வருகின்றேன். இவைகளுக்கு புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளுக்கும் அனுப்பி வருகிறேன். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்களிடம் சொல்லியும் இப்படியான வடிவமைப்புக்களில் செய்து தரச் சொல்லி கேட்டு வாங்குகின்றார்கள்.

எனக்கு தெரிந்த கைவினைப் பொருள்களை செய்யும் முறையை ஆர்வமுள்ளவர்களுக்கு தொலைக்காட்சிகளிலும் நேரிலும் சொல்லிக் கொடுத்து வருகின்றேன். எதிர்காலத்தில் சொந்தமாக அணிகலன்கள், கைவினைப் பொருள்கள் காட்சியறை திறக்கும் எண்ணமும் உள்ளது. எனது வாழ்வாதாரத்தையும் முழுமையாக இதனை நம்பி கொண்டு போகும் நிலைக்கு வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும். கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அதற்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு என்றும் கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார்.



Read more...

Wednesday, April 10, 2019

நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும். .

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

அழுகும் பிணத் துண்டுகளின் நாற்றத்தை மோப்பம் பிடித்து மிருகங்கள் வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று, சேனை செய்யும் இந்த ஏழைத் தமிழர்கள் பயந்தார்களாம். அடுத்த நாள், அந்த அழுகிய பிணத் துண்டுகளை எடுத்துப் புதைக்க முயன்றபோது பிரபாகரனின் குழுவினர் வந்து இந்த ஏழைகளை அடித்துத் துன்புறுத்தி, புதைத்த துண்டுகளை தோண்டச் சொல்லி அந்தத் துண்டுகளை, மிருகங்களின் உணவாக காடு முழுதும் எறிந்தார்களாம்.

அந்தக் கொடிய பிணநாற்றத்தால் சேனையில் வாழும் சிறு குழந்தைகள், கர்ப்பவதிகள், வயதுபோன
முதியோர் என்போர் வாந்தியெடுத்து அவஸ்தைப் பட்டார்களாம்.

துரியோதன சகோதரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பகிரங்கமான கூட்டத்தின் நடுவே திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவளை அவமானம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து மகாபாரதப் போர் வருகிறது. இராவணன் சீதையைக் கடத்திச் சிறைவைத்ததால் இராமாயண யுத்தம் வருகிறது. இவை இதிகாசங்கள்.ஆண்களால் எழுதப் பட்டவை.ஆனாலும் பெண்களைப் பாலியற் கொடுமைகளுக்கு ஆளாக்கினால் அதன் விளைவாக அழிவுகள்,மாற்றங்கள், புதிய சிந்தனைகள் என்பன பிறக்கின்றன என்பது மேற்குறிப்பிட்ட கதைகளிலிருந்து தெரிய வருகின்றன.

பேராசிரியர் திருமதி மேரி பேர்ட் என்பவரின் பி.பி.சி.சரித்திர டாக்குமென்டரியில்,பெரும்பாலான பழைய சரித்திரங்களில்,பெண்கள் ஆற்றிய செயற்பாடுகளோ அல்லது அரசியல்.பொருளாதார,பாலியல் ரீதியாகஅனுபவித்த துன்பங்களோ சரித்திரத்தில் எழுதப் படவில்லை என்கிறார். ஆண்களின் பார்வையில் சரித்திரங்கள் படைக்கப்படுகின்றன என்கிறார்.

எங்கள் சரித்திரமும் அப்படியேதான் என்பது எங்கள் பலருக்குத் தெரியும்.

இலங்கை அரசியற் பிரச்சினைகள் பேசுப்படும்போது, பெரிய அளவான தமிழர்கள்; சிங்கள் பேரினவாதத்தால் கொலை செய்யப் பட்டார்கள், கொடுமைக்காளாகினார்கள், பாலியல் வதைக்குள்ளாகினார்கள், துரத்தப் பட்டார்கள் என்ற விதமான செய்திகளைப் புலி விசுவாசிகள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களாற்; துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள்.

அத்துடன், புலிகளால் கொலை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களும, புலிகளுடனிருந்த மாத்தையா குழுவினரும்; தமிழர்கள்தான் என்பதை அவர்கள் மறைத்துவிடுவார்கள். அல்லது சொல்வதற்கு மறந்து விடுவார்கள்.

‘கந்தன் கருணை’ போன்ற நிகழ்வுகளில் புலிகளாற் நரபலி எடுக்கப் பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளை அந்த இயக்கத்தினர் ஒவ்வொரு வருடமும் நினைவுகொள்கிறார்கள் அதே போல் புலிகளால் தெருக்களில் பிடித்து வைத்து கழுத்துக்களில், டையர்போட்டு உயிருடன் கொலை செய்யப் பட்ட 800-900 டெலோ போராளிகளையும் அந்த இயக்கத்தினர் மறக்க மாட்டார்கள்.

புலிகளால் தமிழர்களுக்குச் செய்யப் பட்ட இப்படியான எத்தனையோ கொலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டெ செல்லலாம். ஆனால் 10.4.2004ம் ஆண்டு கிழக்கிலங்கை வாகரைப் பகுதியில், புலிகளிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து போன குற்றத்திற்காகப் படுகொலை செய்யப் பட்ட நூற்றுக்கணக்கான கிழக்கிலங்கைப் போராளிகளையோ அல்லது அன்று புலிகளால் பாலியல் கொடுமைகள் செய்து அங்கங்களை அறுக்கப்பட்டு மிருகங்கள் மாதிரிக் குத்தி, வெட்டி குரூரக் கொலை செய்யப்பட்ட நூற்றி இருபதுக்கும் மேலான கிழக்கிலங்கை முன்னாள் புலிப்போராளிப் பெண்களையோ இவர்கள் பேசமாட்டார்கள். அநியாயமாக இறந்த இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் இருக்காது.

2011ம் ஆண்டு வாகரைப் பகுதிக்கு நான் சென்றபோது அங்குள்ள ஒரு வயது போன தமிழ்க்கிழவர், அவரின் குரல் தடுமாற, கண்கள் கடலாக, முகம் இருளாக எனக்குச் சொன்ன விடயங்கள் எனது ஆத்மாவை சிலிர்க்கப் பண்ணியது. தமிழ்ப் பெண்ணாக, ஒரு பாட்டியாக, ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும்; போராளியாக வாழ்ந்து கொண்டு புலிக் கொடியவர்களால் அன்று நடத்தப் பட்ட கொடிய கொலை வெறியை, கிழக்கிலங்கைத் தமிழ்ப் பெண்கள் என்பதால் அவர்கள் அன்று செய்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று அன்று வந்த வேதனை எனது வாழ்நாள் முழுதும் எனைத் தொடரும்.

அந்த முதியவர் சொன்ன தகவலை இங்கு அப்படியே தருகிறேன். அந்தக் கிழவர் வாகரைக் காடுகளில் சேனை செய்து பிழைக்கும் நூற்றுக் கணக்கான ஏழைத் தமிழர்களில் ஒருத்தர். புலிகளால் நடத்தப் பட்ட கொடுமையை நேரில் பார்க்கும் அவலத்தை எதிர்நோக்கியவர்களில் ஒருத்தர். அதாவது புலிகள், இந்த ஏழை சேனைத் தொழிலாளர்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டுதான்; தங்கள் மிருக வெறியை அரங்கேற்றினார்களாம்.

‘2004ம் ஆண்டின் ஆரம்பத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கும் வந்த கருத்து வேற்றுமையால், தங்கள் உயிருக்குப் பயந்து காடு வழியாகக் கிழக்கைச் சேர்ந்த பல ஆண், பெண் புலிப் போராளிகள் கால் நடையாக இருளில் வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தேடிவந்த பிரமாண்டமான தொகையுள்ள, பிரபாகரன் குழுவினரால் கிழக்குக்குத் தப்பி வந்த பழைய போராளிகள், பெருங் காடுகளால் சூழப்பட்ட வாகரைச் சேனைப் பகதிகளில் வைத்து வளைத்துப் பிடிக்கப் பட்டார்கள். படு பயங்கரமான விதத்தில் சித்திவதை செய்யப் பட்டு, பெட்றோல் டாங்குகளில் அவர்களை உயிருடன் போடப்பட்டு வெடிக்கப் பண்ணி, சிதறி இறக்கப் பண்ணினார்கள்.

சேனைகள் வழிவராமல், காடுவழியோ ஓடிக்கொண்டிருந்தபோது, மேற்குறிப்பிட்ட சுவாலையைக் கண்ட மிகுதிப் போராளிகளும், தாங்களும் வளைத்துப் பிடிக்கப் படுவோம், இனித் தப்பமுடியாது என்று முடிவு கட்டிக் கொண்டு, தங்களை வேட்டையாட வந்தவர்களிடம் சரணடைந்தார்கள்.

அவர்களின் நிலை இன்னும் படுபயங்கரமாகத் தொடர்ந்தது. ஒருபோராளியைப் பாவித்து அவனுடன் வந்த சக போராளியைச் சித்திரவதை செய்யச் சொன்னார்களாம்.

பெண்களின் நிலை வாயாற் சொல்ல முடியாத, வார்த்தைகளால் எழுத முடியாத பாலியற் கொடுமைக்காளாக்கப் பட்டு, அவர்களின் அங்கங்கள் வெட்டப்பட்டு காடுகளில் அவர்கள் உடற்பாகங்கள் எறியப்பட்டதாம்.

அழுகும் பிணத் துண்டுகளின் நாற்றத்தை மோப்பம் பிடித்து மிருகங்கள் வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று, சேனை செய்யும் இந்த ஏழைத் தமிழர்கள் பயந்தார்களாம். அடுத்த நாள், அந்த அழுகிய பிணத் துண்டுகளை எடுத்துப் புதைக்க முயன்றபோது பிரபாகரனின் குழுவினர் வந்து இந்த ஏழைகளை அடித்துத் துன்புறுத்தி, புதைத்த துண்டுகளை தோண்டச் சொல்லி அந்தத் துண்டுகளை, மிருகங்களின் உணவாக காடு முழுதும் எறிந்தார்களாம்.

அந்தக் கொடிய பிணநாற்றத்தால் சேனையில் வாழும் சிறு குழந்தைகள், கர்ப்பவதிகள், வயதுபோன முதியோர் என்போர் வாந்தியெடுத்து அவஸ்தைப் பட்டார்களாம்.

இது நடந்து எட்டு; மாதமும் பதினாறு நாட்களும் கடந்தபின் 26.12.2004ம் ஆண்டு, சுனாமிப் பேரலை வந்து, அப்பகுதியிலிருந்த புலிகளின் பிரமாண்டமான பாசறைகளைத் துவம்சம் செய்து அழித்ததுமல்லாமல் நூற்றுக்கணக்கான புலிப்போராளிகளையும் கடலோடு இழுத்துக்கொண்டு போனது. அத்துடன் ஆரம்பித்த புலிகளின் தோல்வி 2009ம் ஆண்டு வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி முற்றுப் பெற்றது.

தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் பலவிதமான அரசியல் நோக்குள்ளவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலைப்பாடுகளின் பிரதிபலிப்பை இங்கு நடக்கும் கலந்துரையாடல்கள், சர்ச்சைகள் என்பனவற்றில் கண்டுகொள்ளலாம். அதே நேரத்தில், தங்களைத் தமிழர் மத்தியில் பிரமுகர்களாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் இன்னும் விடாப்படியாகத் தங்களை ஒரு பிரமாண்டமான அரசியல் சக்தியாகக் காட்டப் பல நடவடிக்கைகளையம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை உலகத்தற்கு ஒரு அப்பாவி இனமாகக் காட்டி அந்தத் தமிழ்த் தேசிய ‘வியாபாரத்தில’; நிறைய உழைக்கிறார்கள்.

இலங்கைத் தமிழரின் எதிர்கால நன்மைக்கு இந்த அணுகு முறை பிழை என்று சொல்பவர்களை, நேர்மையாக வாழ்பவர்களை, உண்மைகளைச் சொல்பவர்களை, எழுதுபவர்களை, ஒட்டு மொத்த மக்களின் மேன்மையான வாழ்வுக்கும் வளத்திற்கும் உழைப்பவர்களை ஏளனம் செய்கிறார்கள், அவமதிக்கிறார்கள். படித்தவர்கள், பண்புள்ளவர்களை அழித்து விட்டார்கள்.

தர்மமற்ற போர்முறை தமிழ் இனத்தின் ஒரு தலைமுறையை அழிந்து விட்டது. எல்லாம் இழந்து ஏனோ தானோ என்று இருப்பவர்களையம் ஒரு மனவியாதிகள் மனப்பானமையில் வைத்திருக்கும் திட்டத்தில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செயற்படுகின்றன. தங்கள் தோல்வியை மற்றவர்கள் தலையில் கட்டிவிட்டுப் பழிவாங்கல் செய்யும் திட்டங்கள் தொடர்கின்றன..

அறநெறியை மறந்து, அநியாயத்தை நிலைப்படுத்த முயல்பவர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல ‘சுனாமிகளை’ எதிர்நோக்குவது தவிர்க்க முடியாதது.

அன்று நடந்த இந்தக் கொடுமையை ஞாபகத்தில் எடுத்துக் கொண்டு, எங்கள் இளம் தலைமுறைக்கு உண்மைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப் படுத்தி எங்கள் சமுதாயத்தை மேம்படுத்தத் தயவு செய்து முன்வாருங்கள்.

Read more...

வெருகலாற்றங்கரையில் புலிகளால் குதறப்பட்டவர்களுக்கு தமிழகத்திலிருந்து அஞ்சலி செலுத்துகின்றார் ஸ்ரான்லி ராஜன்.

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது. முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை

யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது

இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்

பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு ஆட்களை திரட்டி யுத்தம் செய்ய முயன்றார், நார்வேயினை விரட்டிவிட்டு இந்தியா சமரசம் பேசவரவேண்டும் என்றார்

இனி புலிகள் யுத்தம் தொடர்வார்கள் என்றால் மிக கேவலமான தோல்வியினை சந்திர்ப்பார்கள் என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்தும் புலிகள் கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில்தான் நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்தை பரிசீலிப்போம் , நல்ல தீர்வு ஏற்பட்டால் ஆயுதம் தொடமாட்டோம் என முடிவு சொல்லி வந்தனர் பாலசிங்கமும், கருணாவும்

உலகம் புரியாத பிரபாகரனுக்கு இது பொறுக்கவில்லை, போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என குதித்த அவர் பாலசிங்கத்தையே விரட்டினார், நார்வே தூதர் எரிக் சோல்கிம்மிடம் எதையும் புரியும் மனநிலையில் பிரபாகரன் இல்லை, இனி லட்சகணக்கான மக்கள் சாகும் என சொல்லிவிட்டு விடைபெற்றார் பாலசிங்கம்

கருணாவின் நிலை சிக்கல், காரணம் கிழக்கு மாகாணம் அவன் கட்டுபாட்டில் இருந்தது. கருணா அமைதிபடை காலத்தில் பிரபாகரனை காத்தது முதல், ஆனையிறவு வரை அபாரமாக சண்டையிட்டவன்

பிரபாகரனின் வலதுகை என்ற முறையில் அவன் தைரியமாக சொன்னான் "இனி யுத்தம் தொடர்வது சாத்தியமில்லை, இந்தியா வரவே வராது. இலங்கைக்கு உலகமே உதவுகின்றது, நமக்கோ யாருமில்லை.

தொடர்ந்து சண்டையிட்டால் அழிவே தவிர வேறு ஒன்றுமில்லை" , அறிவு என்பது இருந்ததால் அப்படி சொன்னான் கருணா.

அவ்வளவுதான் பிரபாகரனின் பதில் சீறியது, "மாத்தையா மாதிரியே நீயும் பேசுகின்றாயா?"

"யோசிப்போம் என சொன்னேன்" என பதிலளித்த கருணா அதன் பின் சென்றுவிட்டான்

ஆனால் அந்த பிரபாகரனின் வார்த்தை அவனை உறங்கவிடவில்லை, மாத்தையா போல என்றால் என்ன அர்த்தம்?

அவனின் நினைவுகள் சுழன்றன 1987க்கு பின்னரான காலத்துக்கு சென்றன‌

மாத்தையா கருணா போல பிரபாகரன் வலதுகை, சுத்தமான வீரன். ஆனால் அமைதிபடை காலத்திற்கு பின் , ராஜிவ் கொலைக்கு பின் அவன் போரை தொடர விரும்பவில்லை, சமாதனமாய் செல்ல ஆசைபட்டான்

இது இந்திய ராவுடன் மாத்தையா தொடர்பு என திரிக்கபட்டு, பிரபாகரனை கொல்ல மாத்தையா சதி என சொல்லபட்டு மாத்தையா பிரபாகரனால் கொல்லபட்டான்

மாத்தையா பிரிவு போராளிகள் 700 பேர் புலிகளால் கொல்லபட்டனர்

இதனை நேரில் இருந்து பார்த்தவன் கருணா என்பதால் பிரபாகரன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு புரிந்தது

கீழ்மட்ட தலமைகளுக்கு உறுதியாக சொன்னான், யாழ்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா சென்று வாழ கிழக்குமாவட்ட நாங்கள் மட்டும் போரில் சாகவேண்டுமா? ஆள் எல்லாம் திரட்டவேண்டாம், சென்று அமைதியாக வாழுங்கள்.

இங்கோ பிரபாகரனுக்கு சிக்கல், கருணா தான் ஒழிந்தான் ஆனால் அந்த படைகள் முக்கியம். கிழக்கு அணி உடனே வரவேண்டும் என கட்டளையிட்டார்

அவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், பலர் எங்கோ சென்றார்கள், உண்மையான போராளிகள் குழம்பி நின்றார்கள்.

பிரபாகரனின் உத்தரவு எல்லோரும் கிளம்புங்கள் என கட்டளை இட்டனர் வந்தவர்கள், ஆனால் போராளிகள் கருணா உத்தரவும் வேண்டும் என்றனர். உடனே புலிகள் முடிவு செய்தனர் நீங்கள் எல்லாம் துரோகிகள், கருணா விசுவாசிகள்

கிழக்கு மாகாண போராளிகள் கருணா உத்தரவின்றி வரமறுக்க , பிரபாகரனோ அவர்களை பிடித்துகொண்டு வர கட்டைளையிட விஷயம் விவகாரமானது

வரமறுத்தவர்கள் துரோகிகள் என அறிவிக்கபட்டு மரணதண்டனை பெற்றனர்.

ஆம் மாத்தையாவோடு கிட்டதட்ட 700 பேர் கொல்லபட்ட கொடூரம் மறுபடியும் அரங்கேறியது

வெறுகல் என்பது கிழக்கில் ஓடும் ஆறு, அங்கே கருணா தரப்பு போராளிகளுக்கும் புலிகளுக்கும் மோதியது

சிங்களனை எதிர்க்க கிளம்பியவர்கள் தங்களுக்குள் மோதினர்.

புலிகளுக்கோ மாத்தையா விசுவாசிகள் போல இவர்கள் கருணா விசுவாசிகள் , அது போதும் இவர்கள் சாகட்டும் என முடிவெடுத்தனர்

தண்டனை எனும் பெயரில் அந்த வெறுகல் படுகொலை அரங்கேறிற்று, கிட்டதட்ட 700 போராளிகள் கொல்லபட்டனர்

"அண்ணா, நாங்களும் போராட வந்தவர்கள், சகோதர தமிழர்கள் எங்களை கொல்லாதீர்கள்.." என கண்ணீரோடு நின்ற அவர்களை பிரபாகரன் உத்தரவின் பேரில் கொடூரமாக கொன்றவர்கள் புலிகள்

தன் படைபிரிவு தன் கண்முன்னாலே கொல்லபடுவதை கண்ட கருணாவிற்கு வேறுவழி இல்லை, மாத்தையா போல என்பதன் அர்த்தம் அவன் கண்முன் தெரிய ஆரம்பித்தது

என் படைபிரிவினை கலைக்கின்றேன் இனி நான் போராளி அல்ல என சொல்லிவிட்டு தன் உயிரை பாதுகாக்க இந்தியா தப்பினான். இந்தியா அவனை சந்தேக கண்ணோடு நோக்கிவிட்டு "நீ திருந்தியது உண்மை என்றால் சிங்களன் பக்கம் போ" என சொல்லிவிட்டு நகர்ந்தது

கோத்தபாயா அவனை அரவணைத்து கொண்டான்.

மாத்தையா சொல்லி கேட்காமல் அவனை 700 போராளிகளோடு விசாரணை என சொல்லி கொன்ற பிரபாகரனுக்கு கருணாவினை அப்படி கொல்லமுடியவில்லை

மாத்தையாவினை கொன்ற பாவம் பின்னாளில் கருணா மூலம் பிரபாகரனை பழிவாங்கிற்று

அடுத்து நடந்த யுத்தத்தில் கிழக்கு மாகாண போராளிகள் இல்லை , கருணா இல்லை

விளைவு படு மோசமான வீழ்ச்சியினை சந்தித்து புலிகள் இயக்கம் அழிந்தும் போயிற்று

ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பரந்த இவ்வுலகில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு நாடும் வரவில்லை என்றால் காரணம் இம்மாதிரி விஷயங்கள்தான்

இதை எல்லாம் வைகோ, பழநெடுமாறன், சைமன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் என எவனும் சொல்லமாட்டார்கள், அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் கம்மென்று இருப்பார்கள்

ஆனால் மே 17 என்றாலோ நவம்பர் 26 என்றாலோ ஏ இந்திய தேசியமே என குட்டிகரணம் அடிப்பார்கள், அயோக்கியர்கள் அவர்களும் சொல்லமாட்டார்கள்.

மே 17க்கு முன்பான மிக கொடுமையான நாள் ஏப்ரல் 10

ஈழம் அமைவதை யார் கெடுத்தார் என்றால் சாட்சாத் புலிகள்தான், ஒருவேளை அது அமைந்தால் கூட சிரியா போல் ஆகியிருக்குமே அன்றி அமைதி வந்தே இருக்காது

புலிகளின் தலமை எவ்வளவு கொடூரமான ரத்தவெறி பிடித்தது என்பது டெலோ ஒழிப்பு, பத்மநாபா படுகொலை, மாத்தையா கொலை, அமிர்ந்தலிங்கம் கொலை என வரலாறு எங்கும் காண கிடக்கின்றது.

இதெல்லாம் புலிகள் தமிழரை கொன்ற கணக்கு, ராஜிவ் கொலை, அமைதிபடை பலி, சிங்கள பலி எல்லாம் தனி கணக்கு.

இப்படி கொல்வது மட்டுமே கொள்கை என செயல்படுத்திய இயக்கம் எப்படி உருப்படும், உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து வெறிநாயினை அடிப்பது போல அடித்து கொன்றார்கள்.

அந்த புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள் 700 பேர் வெறுகல் ஆற்றுகரையில் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று.

இதே ஏப்ரல் 10ம் தேதி, 2004ல் அக்கொடுமை நடந்தது.

இப்படி எல்லோரையும் கொன்று தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து இறுதியில் அழிந்தே போனது புலிகள் இயக்கம்

ஆனால் இங்கிருப்பவன் கலைஞர் கெடுத்தார்,காங்கிரஸ் கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்

அந்த வெறுகல் ஆற்றங்கரையில் புலிகளால் கொல்லபட்ட அந்த தமிழ்போராளிகளுக்கு வீரவணக்கம்.

Read more...

அரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர். எழுகதிரோன்

வெருகல் படுகொலை தினத்தின் பதினைந்தாவது வருட நினைவு நாள் சித்திரை 10ஆம் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு வெருகல் மலைப்பூங்காவில் அமைந்துள்ள வெருகல் படுகொலை நினைவிடத்தில் இதன் நிகழ்வுகள் வருடந்தோறும் நிகழ்கின்றன. .

2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் அனைத்துவித துறைசார் கட்டமைப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டமையால் போரின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகளுக்குள் அதிருப்திகள் தலை தூக்கின.

இதன்காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்துவிதமான முகாம்களிலுமிருந்த சுமார் 6000 கிழக்கு போராளிகள் அவ்வமைப்பில் இருந்து பிரிந்து நின்றனர்.

அவர்களது அதிருப்திகளையோ கருத்துக்களையோ செவிமடுக்க மறுத்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை துரோகிகள் என பிரகடனம் செய்து அவர்கள் மீது யுத்தம் தொடுக்க உத்தரவிட்டார்.

அவ்வேளையில் அரச படைகளுடன் தமிழீழ விடுதலை புலிகள் யுத்த நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தமையால் அந்த பேச்சுகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுக்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டிருந்தன.

அதன்காரணமாக படைகளை நகர்த்துவதோ, ஆயுதங்களை இடம்மாற்றுவதோ, எடுத்து செல்வதோ அரச-புலிகள் இருதரப்பினருக்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவிருந்தது.

ஆனால் அந்த சமாதான காலத்தில் யுத்தநிறுத்த மீறல்களை செய்து வன்னியிலிருந்து வடக்கு புலிகள் ஓமந்தை சோதனை சாவடிகளை தாண்டி வெருகலாற்றங்கரையில் தரையிறக்கப்பட்டனர்.

*இது எப்படி சாத்தியம்?

*பலநூறு புலிகளை ஓமந்தையை தாண்டி ஐந்து பஸ்கள் நிறைய
ஆயுதங்களுடன் 150கிலோ மீற்றர்கள் பயணித்து வெருகல் வரை
செல்ல அனுமதி வழங்கியவர்கள் யார்?

*அந்த பேரம்பேசலில் அன்றைய ஜனாதிபதி
சந்திரிகாவுடன் புலிகளுக்காக தமிழ் செல்வனின் ரகசிய
செய்திகளுடன் பேரம்பேசலில் ஈடுபட்ட தமிழ் தலைவர் யார்?

*வெருகல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாளே ஏன்
நோர்வே தலைமையிலான சமாதான செயலகம் கிழக்கு
மாகாணத்திலுள்ள அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு சென்றனர்?

*இது சமாதானம் பேச வந்த மேற்கத்தேய
மத்தியஸ்தர்களின் படுகொலைக்கு உடந்தைனான
செயற்பாடு இல்லையா?

*இதனை சர்வதேசத்தின் எந்தமனிதாபிமான தார்மீக செயலில்
அடக்க முடியும்?

எனவேதான் நோர்வே-இலங்கையரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர் என்பது புலனாகின்றதல்லவா?

சகோதர யுத்தத்தை ஊக்குவித்து புலிகளின் பலத்தை சரிபாதியாக குறைப்பதில் அவர்கள் போட்ட கணக்கு வென்றது.

இதனால் சுமார் 210 கிழக்கு புலிகள் கொன்றொழிக்கப்பட்டனர். சரணடைந்த பெண் போராளிகள் வன்னிப்புலிகளால் மானபங்கப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடலங்களை அடக்கம் செய்யக்கூடாதென்று வன்னிபுலிகள் கட்டளையிட்டு அக்கிராம மக்களை துரத்தியடித்தனர். இதன்காரணமாக அப்போராளிகளின் உடல்கள் நாய்களும் நரிகளும் தின்ற மிச்சங்களாக வெயிலில் வெம்பி வெடித்து காய்ந்து கருகி கிடந்தன. நாலைந்து நாட்களின் பின்னர் திரும்பிவந்த ஊரவர்கள் இராணுவத்திடம் உதவி கோரி அவ்வுடலங்களை ஆங்காங்கே பத்தும் பதினைந்தும் இருபதுமாக புதைத்தனர்.

*ஆனால் யுத்தத்தில் நடந்த மனிதஉரிமை மீறலுக்காக
குரல்கொடுக்கின்ற ஜெனிவா கோமாளிகள் ஒருபோதும்
இந்த வெருகல் படுகொலை குறித்து வாய்திறப்பதேயில்லை ஏன்?

*அந்த கிழக்கு போராளிகள் தமிழர்கள் இல்லையா?

*யார் இவர்களுக்காக இதுவரை நீதி கோரியிருக்கின்றனர்?

*ஆனால் இந்த அகோரமான வெருகல் படுகொலையை
நடத்தியவர்களுக்கு காலம் தீர்ப்பளித்தது.

ஆம் வெருகல் படுகொலையை நிகழ்த்திய அன்றே வெள்ளாம் முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

Read more...

Tuesday, April 9, 2019

அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை காக்க வேண்டுமாயின் மஹிந்த மைத்திரி இணையவேண்டும். குணதாச அமரசேகர

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டு மக்களுக்காக செயற்படும் ஒரு அரசாங்கத்தினை பலமான முறையில் உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்விரு கட்சிகள் மட்டுமன்றி அனைத்து சிறிய கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் ஜனநாயகத்திற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் தற்போதைய நிலையை எடுத்து கொண்டால் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறாக கடந்த காலங்களிலும் கூட, மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடகளும் எமது நாட்டை கட்டுப்படுத்தி தமது ஆதிக்கத்திற்கு கீழ கொண்டு செல்லும் வகையிலேயெ அமையப்பெற்றிருந்தன.

அத்துடன் தற்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு ஆதரவு வழங்கும் செயல்களையே மேற்கொண்டும் வருகின்றது.

அந்த வகையில் நோக்கும் போது ,அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சலெஞ் கோப்பரேசன் என்னும் நிறுவனம் பிரதமரின் உத்தியோக பூர்வ வாசத்தலத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், நாட்டின் நிலப்பரப்ப தொடர்பான சட்டங்களை முடிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றிலும் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.

இத்தகைய செயற்பாடுகளினூடாக நாடு முழுமையாக வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படும் தர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.

இவ்வாறான நிலையில் ஜக்கியதேசிய கட்சி அரசாங்கத்தை தொடர விட்டோமேயானால் எதிர்காலத்தில் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் இன்று வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

தோத்தாவுக்கு அமெரிக்காவில் அழைப்பாணை என்பது அப்பழுக்கற்ற பொய்.. பேச்சாளர் மிலிந்த

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த வழக்குகள் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை கையளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

அச்செய்தியில் கலிபோர்னியாவிலுள்ள Traders Joe’s என்ற வணிகத்தொடரின் கார் தரிப்பிடத்தில் வைத்து குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி ஒருவர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிடம் அழைப்பாணையை வழங்கியதாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவ்வாறு எவ்வித அழைப்பாணைகளும் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா கலிபோர்னிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டதாக கூறும் தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு இரண்டாவது வழக்கினை கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அஹிம்சா விக்ரமதுங்க சிவில் பாதிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேநேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைத்து தாக்கப்பட்டதாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்துள்ள, தமிழர் அச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதியான மஹிந்த ராஜபக்சவை குறிப்பிடாது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை குற்றவாளி என்பது எவ்வாறு என்ற கேள்வி இங்கு எழுந்து நிற்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோட்டபாய போட்டியிடுவதிலிருந்து அவரை தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் குறிந்த நாடகத்தில் இறுதியாக வழக்காளிகள் பெரும் சிக்கல்களை மேற்கொள்ளவேண்டி வரலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் பிரஜா உரிமையை நீக்கி கொள்வதற்கு சிவில் வழக்கு ஒன்று தடையாக இருக்காது என அமெரிக்க குடியுரிமைகள் சட்ட திட்டங்களை மேற்கோள்காட்டும் சட்ட வல்லுனர்கள், அவ்வாறு அது தற்காலிக தாமதத்தையேனும் கொடுத்து தேர்தலில் பங்குபற்றுவதை தடுக்குமாயின் குறித்த நபர்கள் இருவரும் பெரும் நஷ்டத்தை செலுத்த வேண்டி வரும் என அவர்கள் கட்டியம் கூறுகின்றனர்.

Read more...

பிரபாகரனின் பந்தினால் சிறுவன் யாழ் அவசர சிகிச்சைப் பிரிவில்.

யாழ் புத்தூர் பிரதேசத்தில் வெற்றுக்காணியொன்றினுள் காணப்பட்ட கிரனைட் ஒன்றை எறிந்து விளையாடிய சிறுவன் ஒருவன் யாழ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயன்பாடற்ற காணியொன்றினுள் காணப்பட்ட மேற்படி குண்டினை கண்டெடுத்த சிறுவன் அதனை எடுத்துவந்து புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியிலுள்ள தெருவொன்றில் எறித்து விளையாடும்போது குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

காயங்களுடன் அச்சுவேலி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவன் உடனடியாக யாழ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 வருடகால யுத்ததத்தில் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றிருப்பது அழிவுகள் மாத்திரமே என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகின்றது. எமது எதிர்கால சந்ததியினர்கூட அச்சமற நடமாட முடியாத பூமியையே அவன் விட்டுச்சென்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மாகாண சபைகள் முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும். ஒமல்பே சோபித தேரர்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமை இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளில் 450 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர்களின் ஊதியங்களுக்கு மாத்திரம் 225 கோடி ரூபா செலவாவதாகவும் குறிப்பிட்ட அவர் மேலதிக பாராமிப்புச் செலவுகளுடன் பார்க்கும்போது உறுப்பினர்களை பராமரிக்க மாத்திரம் வருடமொன்றுக்கு 500 கோடி ரூபா செலவவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த முதலீட்டினால் நாட்டுக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை என்றும் மாறாக அது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கி மக்களை மேலும் சிரமத்திற்கு உட்படுத்துவதாகவும் ; தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டிலே 7 சபைகள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சபைகளும் இயங்கவில்லை என்பதற்காக நாடு இயங்கவில்லையா? இல்லை அது சிறப்பாக இயங்குகின்றது. எனவே மாகாண சபைகள் என்பது அநாவசியமான ஒன்று என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது. இது இந்திய அரிசினால் எம்மீது சுமத்தப்பட்ட தேவையற்ற சுமை.

இதை நாம் பயங்கரவாதத்திற்கு பதிலாகவே பொறுப்பெடுத்தோம் தற்போது இந்நாட்டில் பயங்கரவாதம் இல்லை. எனவே இந்த மாகாண சபை முறையையும் இல்லாது ஒழிக்கவேண்டும் என ஒமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

Read more...

அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலிருந்து இரு கைத்துப்பாக்கிகள் மாயம்.

பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையிருந்து இரு துப்பாக்கிககள் கானாhமல் போயுள்ளதுடன் இதுதொடர்பில் அக்கரப்பத்தனை பிரசேச பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரேலிய மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியம் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பொறுப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 23ம் திகதி இரு கைத்துப்பாக்கிகள் காணாமல்போயுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான சார்ஜன்ட மீது வெறுப்புக்கொண்ட சக உத்தியோகித்தர்கள் ஏவராவது மேற்படி செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கலாம் அன்றில் பிற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விரட்டுவீர். தமிழ் மக்களிடம் விமல் வேண்டுகோள்.

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றனர். அவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி சுகபோக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ரணில் அரசின் பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளார்கள். அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், அவர்களின் சொந்தங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர். ஆனால், கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களின் பிள்ளைகள் வடக்கு, கிழக்கில் கொட்டில்களில் கல்வி கற்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலி வேசம் போட்டு ஆடித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உண்மை முகத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் கிழித்துக் காட்ட வேண்டும். அவர்களுக்குத் தக்க பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com