Friday, March 29, 2019

வளைவு உடைப்புக்குப் பொறுப்பேற்று திருக்கேதீச்சர திருப்பணிச் சபையின் இன்றைய ஆட்சிக் குழுவினர் விலக வேண்டும்!

கோருபவர் மறவன்புலவு சச்சிதானந்தன் சிவசேனை

முதுகெலும்பு இல்லாத திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினரே வளைவு உடைப்பதை தடுக்க முடியாமல் வலுவிழந்து செயற்பட்டனர்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பலர் தாங்கள் பதவி சுகத்துக்காகவே அந்த ஆட்சியில் தொடர்ந்து ஆண்டுதோறும் இருப்பதை உறுதி செய்கின்றனர். இதற்காகத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் அமைப்பு விதிகளில் உரிய மாற்றங்களை செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் உறுப்புரிமை இல்லாதவர்களே கலந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டடை முன்வைத்த திரு. குமார் நமசிவாயம் வெளிநடப்பு செய்ததை நான் இங்கு நினைவு கூர வேண்டும்.

கொழும்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் முழுநேரமாக பணியாற்றக்கூடிய நேரமில்லை.

பிற சபைகளில் உள்ள முரண்பாடுகளால் அதே ஆள்கள் இதே சபைக்குள் வரும்பொழுதும் அதே முரண்பாடுகளை கொண்டுவந்து குழாயடிச்சண்டை குடுமிப்பிடிச் சண்டை வன்முறை என்பவற்றை ஆட்சிக்குழுக் கூட்டங்களில் பயன்படுத்துவதாக அறிந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்

31.3.2019 ஞாயிற்றுக்கிழமை கூடப் இருக்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொதுக்கூட்டத்தில் முன்பு இருந்தவர்களே தேர்வாகப் போகிறார்கள்.

இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் குகைக் கோயிலாக இருந்த சிறிய கோயிலை மாபெரும் உலூர்தம்மாள் தேவாலயமாகக் கத்தோலிக்கர் கட்டினர்.

இந்தக் குழுவில் நாளைய கூட்டத்தில் தேர்வாகப் போன்றவர்கள்தான் உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தியவர்கள்.


அடுத்த ஆண்டும் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களானால் பாலாவி முழுவதும் கத்தோலிக்கர் வசம் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முதுகெலும்பில்லாத இப்போதைய ஆட்சிக் குழுவினர் முற்றாக விலக வேண்டும்

ஆற்றலும் வலிமையும் திறமையும் சைவ சமயத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் மன்னாரைச் சிவபூமியாக்கக் கருதுகின்ற ஆர்வத்தோடும் அன்போடும் அறத்்தோடும் அருளோடும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கத்தோலிக்க ஆக்கிரமிப்பைச் சந்திக்கக் கூடிய முற்றிலும் புதிய அணி ஒன்று திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆட்சி குழுவில் இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

யாம் இரப்பவை நின்பால் பொன்னும் பொருளும் போகமும் அல்ல அன்பும் அருளும் அறனும் என்ற சங்கப் பாடலை நினைவில் கொள்வோம்.

நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நழலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் மீண்டும் சொல்கிறேன் பணிவோம் அல்லோம் என்ற அப்பர் பெருமான் வரிகளோடு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் புதிய அணி தேர்வாகி உத்வேகத்துடன் பணியாற்ற வருமாறு அழைக்கிறேன்.

Read more...

த.தே.கூ தேர்தலுக்கு பயத்தில் , கள்ள மௌனம் காக்கின்றது. சாடுகின்றார் டலஸ் அழகப்பெரும

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவே வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலங்கடத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதற்குக் காரணம் என கூ ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றஞ்சாட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மாகாண தேர்தல்கள் நடைபெறாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரி என்றும் இனவாதி என்றும் விமர்சித்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், தோற்பது தெரிந்தும் மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண தேர்தலை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு மீதான குழு நிலைவிவாதத்தில் உரையாற்றிய அவர் ​மேலும் குறிப்பிட்டதாவது, மாகாண சபைத் திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசு செய்து கொண்டது.இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.இது அவருக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. ஆளுநரின் கீழ் இருந்தால் போதும் என்ற நிலை எதிர்காலத்தில் வரலாம். எல்லை நிர்ணய குழு தொடர்பான குழு இரண்டு நாட்கள் மட்டுமே கூடியது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. முத்திரைக்கட்டணம் நேரடியாக உள்ளூராட்சி சபைகளுக்கு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு கோரி வருகிறோம்.

மாகாண சபைத்தேர்தலை நடத்த பல்வேறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழிகள் உள்ளன.தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடிவுகள் எடுக்க முடியாமல் செயலிழந்துள்ளது.

வடமாகாண சபைத்தேர்தல் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முடிவு செய்தபோது அது தொடர்பில் வேறு பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தினால் த.தே.கூ தான் வெல்லும் அதனால் தேர்தலை நடத்த வேண்டாம் என கோரப்பட்டது.

ஆனால் ஒரு வருடம் கடந்து தேர்தல் நடத்தினாலும் வெல்ல முடியுமா. தமிழ்பேசும் மக்களுக்கு தமது உரிமையை வழங்க வேண்டும் என்று கூறி அவர் தேர்தலை நடத்தினார்.ஜ.ம.சு.மு இதில் தோற்றாலும் ஜனநாயகம் வென்றது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் த.தே.கூ பின் தலையீடு பூச்சியமாகவே உள்ளது.

இனியாவது காத்திரமாக தலையீடு செய்ய வேண்டும்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் பொலிஸ் உத்தியோகஸ்தின் இடமாற்றம் குறித்து கூட கூறப்பட்டுள்ளது.பல வருடங்களாக மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படாது குறித்து இதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Read more...

உலகத்தில் அதிக செலவுடன் நடாத்தப்படவுள்ள இந்திய மக்களவைத் தேர்தல் - 2019

இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலுமுள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்குமான 17வது மக்களவைத் தேர்தல் (பாராளுமன்றத் தேர்தல்) எதிர்வரும் ஏப்ரல் 11ந் திகதி தொடங்கி, மே 19ந் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் வேலைகள் மே 23ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்களுடன் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். 2014 ஆம் ஆண்டு 9 இலட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள், இம்முறை 10 இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட 1866 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாகத் தெரிய வருகின்றது. தேர்தலுக்காக ஏறத்தாள 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தத் தேர்தலே, உலகத்தில் அதிக செலவுடன் நடாத்தப்படும் தேர்தலாக அமையுமென்றும் கூறப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக்கட்சி (பாஜக) 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது. ஆனால் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சிபீடத்திலிருந்த இந்திய காங்கிரசுக்கட்சியோ, தனித்து 44 தொகுதிகளில் மாத்திரமே வென்று மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

தமிழகத்தின் 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அத்தினத்தில் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் கட்சியான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) இணைந்து காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியன போட்டியிடுகின்றன.

அதேவேளை தமிழ்நாட்டு மாநில தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எஸ்) – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) இணைந்து பாரதிய ஜனதாக்கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் என்பன போட்டியிடுகின்றன. தற்போதைய இந்திய மக்களவையில் 37 ஆசனங்களுடன் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2016 இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்து, முதல்வராகி, 2017 இல் மறைந்த ஜெயலலிதாவின் பின்னர், அதிமுகவினுள் எழுந்த பலவிதமான உட்பூசல்களின் போது தமிழகத்தில் புதிய தேர்தலொன்றினை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினரை இணைத்தும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியெனக் கருதப்படும் சிறையிலுள்ள சசிகலாவையும் அவரது அணியினரையும் அதிமுகவிலிருந்து முற்றுமுழுதாக ஓரங்கட்டுவதற்கும், அதிமுகவின் தேர்தல் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினருக்கே பெற்றுக் கொடுக்கவும் துணைபுரிந்த பாஜக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே, இம்முறை அதிமுக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகத் தெரிகின்றது. இக்கூட்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பலம் சேர்க்குமேன பொதுவாகப் பல தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பு ஒன்றினைத் தோற்றுவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மற்றும் சிறையிலுள்ள சசிகலாவின் அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (அமமுக) என்ற இரு புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் இதுவரையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களிற்கு தேர்தல் சின்னம் எதுவும் தேர்தல் ஆணையத்தினால் ஒதுக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் சின்னம் எதுவுமின்றி தேர்தலில் எப்படி பிரச்சாரம் செய்வதென்று அறியாமல் அமமுக திண்டாடிய வண்ணமுள்ளது. எங்கள் கட்சியில்தான் படித்தவர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு (வேட்பாளர்களில் 3 டொக்டர்கள், 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள் உள்ளளனர்) எனக்கூறியவாறு தேர்தலில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் ஆதரவு பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காதெனவும் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் இருந்து தெரிய வருகின்றன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் (தெலங்கானா, மிசோராம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்) பாஜக தோல்வியைத் தழுவியுள்ளதால், 2014 ஆம் மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடியது போன்று, பாஜகவிற்கு இந்தத் தேர்தல் அமையாது என்பது தெட்டத் தெளிவாகத் தெரின்றது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்களை அழித்தோம், விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம் என்று பிரச்சாரங்கள் செய்து பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றார்.

பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் ஏழை – நடுத்தரவர்க்க இடைவெளி, விவசாயிகளின் தற்கொலைகள், இந்து அடிப்படைவாதம், சாதிக்கொலைகள், பெண்களின் பாதுகாப்பின்மை, ஜம்மு காஷ்மீர் விவகாரம், பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன இன்றைய இந்தியாவின் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பதையே எதிர்கால ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: வானவில் இதழ் 99

Read more...

றிஷாதின் கீழ் மு.காவின் பிரதி தலைவர்..! மு.கா தன்மானம் இழக்குமா..? துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்.

" ரோசமற்றவன் ராசாவிலும் பெரியவனாம் " என்றதொரு பழமொழியுண்டு. ஒருவன் தனது சுய மரியாதையை இழக்க தயாராக இருந்தால், அவன் பல விடயங்களை மிக இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். இருப்பினும் பலரும் அதனை விரும்புவதில்லை. தன் மானத்தை இழந்து காரியங்களை சாதித்துக்கொள்ளும் ஒருவராக யாருமே நஸீர் ஹாபிஸை எதிர்பாக்கவில்லை. அவரது தற்போதைய செயற்பாடொன்று, அவர் அந்த வகையை சார்ந்தவரே என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சில நாட்கள் முன்பு தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக பிரதமரால் நஸீர் ஹாபிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தொழிற்பயிற்சி அதிகார சபை அமைச்சர் றிஷாதின் கீழ் வந்துள்ளது. அமைச்சர் றிஷாத் அதன் அமைச்சராக வந்ததும் நஸீர் ஹாபிஸ் ஜென்டில் மேனாக (gentleman) இராஜினாமா செய்வார் என்றே பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இருந்தும் பலரதும் நம்பிக்கைக்கு மாற்றமாக அவர் அமைச்சர் றிஸாதின் கீழ் பணியாற்ற, தனக்கு எவ்வித கூச்சமுமில்லை என்ற வகையில் தனது செயற்பாட்டை அமைத்துள்ளார். இதன் பிறகு அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தாலும், அவர் ஏற்றுக்கொள்வார் என்பதையும் இவ்விடயம் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு நிறுவன தலைவரானவர் அதற்குரிய அமைச்சரால் நியமிக்கப்படுவார். அவர் அமைச்சரின் மகுடிக்கு ஆடியுமாக வேண்டும். அமைச்சர் றிஷாதின் போட்டிக்கட்சியான மு.காவின் பிரதி தலைவரான நஸீர் ஹாபிஸ் அமைச்சர் றிஷாதின் சொல் கேட்டு, அடி பணிந்து செயற்படுவது முதலில் அவருக்கு கேவலம். இரண்டாவது அவரின் கட்சியான மு.காவுக்கு பலத்த அவமானம். நஸீர் ஹாபிஸ் ஒரு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இதன் பிறகு அவர் அணிந்து கொள்ள வேண்டிய பதவிகள் அதற்கு சமனானதாக இருத்தல் வேண்டும். அதுவே அவர், தனது நிலையிலிருந்து சற்றும் கீழிறங்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்.

ஆனால், தற்போது அவருடைய நிலையானது, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் நேரடி எதிரி கட்சியான அ.இ.ம.கா தலைவரின் சொல் கேட்டு நடந்து பதவியொன்றின் மூலம் தனது கௌரவத்தை பேணிக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார். இது அவர் எந்தளவு பதவி ஆசையில் உள்ளார் என்ற விடயத்தை, பதவியில்லாமல் இருக்க முடியாது என்ற விடயத்தையும் துல்லியமாக்குகின்றது.

இவருடைய இப் பதவி நீடிப்பின் பின்னணியில் பிரதமரின் செல்வாக்கு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. யார், என்னதான் சொன்னாலும் அமைச்சர் றிஷாதின் கீழ் நஸீர் ஹாபிஸ் பணியாற்றுவது கேவலமானது தான். தனது பிரதி தலைவர் ஒருவரை அ.இ.ம.காவின் தலைவரின் கீழ் பணியாற்ற அனுமதித்திருப்பதானது, தனது கட்சியின் ஒரு சிறு பங்கை அமைச்சர் றிஷாதிடம் ஒப்படைத்தது போனெனலாம். இத்தனை பெரும் அமைச்சை வைத்துள்ள அமைச்சர் ஹக்கீமுக்கு, தன் அமைச்சின் கீழ் ஒரு தலைவர் பதவி வழங்க முடியாதா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Read more...

சம்பிக்க மற்றும் வஜிரவுக்கு ஆப்பு. நிதி ஒதுக்கீடு தோற்கடிப்பு. மாவை மற்றும் செல்வம் ஆதரவாக வாக்கு. அரசை சாடுகிறார் சம்பிக்க

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன. இவ்வாறு நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையானது அரசாங்கத்தின் கவலையீனம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு போதுமான பெரும்பாண்மை இருந்தபோதும் இரு அமைச்சுக்களுக்கான நீதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டதன் பின்னணி என்ன என தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அரசினை சாடியுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த விவாதத்தின் முடிவில், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த ரஞ்சித் சொய்சா கோரினார். இதையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய மாலை 7.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக, 23 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் 14 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், செல்வம் அடைக்கலநாதனும் மாத்திரம் வாக்கெடுப்பின் போது சபையில் இருந்தனர். அவர்கள் இருவரும் அரச தரப்புடன் இணைந்து நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பில் கருத்துரைத்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று சபையில் கருத்து வெளியிட்ட பிரதமர்,
' ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்காததன்காரணமாகவே அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , வஜிர அபேவர்த்தன ஆகியோரின் அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட குழு நிலை ஒதுக்கீடு சபையில் தோல்வி அடைந்தது.
இந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெரிய பிரச்சினையாக கருதவேண்டியதில்லை.' என்றார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சபை முதல்வரான கிரியல்ல,

' உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கும், பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ' என்றார்.

Read more...

Thursday, March 28, 2019

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 1 + 2 வை எல் எஸ் ஹமீட்

மேற்படி சட்டமூலம் தொடர்பாக இன்று பலரும் பேசுகிறார்கள். அது இன்னும் சட்டமூலமாக இருந்தபோதிலும் சிலர் C T A என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது ஆபத்தானது; என்று பலரும் குறிப்பிட்டபோதும் இது எவ்வாகையான ஆபத்து என்பது குறித்து, குறிப்பாக பெரிதாக ஆக்கங்கள் தமிழில் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக சற்று ஆராய்வோம்.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ( PREVENTION OF TERRORISM ( temporary provisions ) ACT NO 48 of 1979 என்றொரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் அதன் பிரிவு 29 இல் மூன்று வருடங்களுக்கே இச்சட்டம் உரியது; என்று கூறப்பட்டது. அதனால்தான் temporary -தற்காலிக என்ற சொல் மேலேபோடப்பட்டது. ஆனால் 1982ம் ஆண்டு 10 ஆம் இலக்க சட்டத்தின்மூலம் பிரிவு 29 நீக்கப்பட்டு அது நிரந்தர சட்டமாகிவிட்டது.

இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டம் என்று ஆரம்பத்திலிருந்தே இதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. யுத்தம் நிறைவு பெற்றபின் இதன் நீடிப்பு குறித்து தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இல 30/1 தீர்மானத்தில் இந்த சட்டத்தை ( PTA) நீக்கிவிட்டு சர்வதேச நடைமுறைகளையொத்த பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவர இலங்கை உடன்பட்டது.

அதனைத் தொடர்ந்து “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ( CTA) என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது. இதிலும் பாரிய ஆபத்துக்கள் இருக்கின்றன. மனித உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; என்று தற்போது தேசிய, சர்வதேச ரீதியாக எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது.

எனவே, இவ்விரு சட்டங்களிலுமுள்ள பிரதான அம்சங்கள், பாதிப்புக்கள் குறித்து இன்ஷா அல்லாஹ், அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்.

============================
பாகம் 2

“பயங்கரவாத தடைச் சட்டத்திற்கெதிற்குப்” பதிலாக ( PTA) கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப்பற்றி ( CTA) பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இரண்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள். “பயங்கரவாதம்” என்றால் என்ன?

உலகில் சகல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணம் “ பயங்கரவாதம்” என்ற சொல்லுக்கு இல்லை. பயங்கரவாதம் என்ற சொல் Latin மொழியின் வினைச்சொல்லான ‘terrere’ என்ற சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ‘ to frighten ‘ அதாவது ‘ பயமுறுத்துவது’ என்பதாகும்.

1970, 80 களில் அவ்வாறான ஒரு வரைவிலக்கணத்தை வரைய ஐ நாவில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் உடன்பாடு ஏற்படாததால் கைகூடவில்லை. 2004ம் ஆண்டு ஐ நா பாதுகாப்பு சபையில் ஒரு “மாதிரி” வரைவிலக்கணம் முன்மொழியப்பட்டது. [Security Council Resolution 1566 (2004)]. ஆனாலும் உத்தியோகபூர்வமான, திட்டவட்டமான உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஒரு வரைவிலக்கணம் இதுவரை இல்லை.

இதன்காரணமாக, ஒவ்வொரு நாடும் தான் விரும்பியவாறு, தனது தேவைக்கேற்ப “ பயங்கரவாதம்” என்ற சொல்லை வரையறை செய்கிறது. இலங்கையில் இச்சொல்லை PTA இல் வரையறை செய்யப்பட்டதற்கும் இப்பொழுது CTA இல் வரையறை செய்யப்பட்டிருப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒரு குற்றச்செயல் சாதாரண குற்றமா? அல்லது பயங்கரவாத குற்றமா? என்பது இந்த வரையறை அல்லது வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. ஒரே குற்றச்செயல் ஒரு சாதாரண குற்றமாயின் கைதுசெய்யப்பட்டதில் இருந்து தண்டனை வழங்கும்வரை நடைமுறைகள் ஒரு வகையாகவும் அது பயங்கரவாதமானால் இன்னொரு வகையாகவும் இருக்கும்.

ஒரு அப்பாவி சிலவேளை மாட்டுப்பட்டால் அச்செயல் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வந்துவிட்டால் அவனது நிலைமை மிகவும் கஷ்டமானதாகும். இந்நிலையில் என்னென்ன குற்றங்களை அல்லது எவ்வாறான செயல்களை பயங்கரவாதமாக புதிய சட்டத்தில் வரையறை செய்கிறார்கள்; என்பது முக்கியமாகும்.

இந்த வரையறைகளை அறிந்தால் எதிர்காலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்துத்தான் இச்சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ என்றுகூட நினைக்கத் தோன்றும். அதாவது அப்பாவிகளை மிகவும் இலகுவாக பயங்கரவாதிகளாக்க இச்சட்டம் பாவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

குறிப்பாக, இன்று உலகில் ஒரு மேற்கத்தைய நாட்டைச் சேர்ந்தவன் ஒரு குற்றத்தை அல்லது பயங்கரவாத செயலைச் செய்தால் அது ஒரு குழுவின் அல்லது ஒருவனின் குற்றம் அல்லது பயங்கரவாதம் என்றும் அதே செயல் ஒரு முஸ்லிமால் செய்யப்பட்டால் அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்படுகின்றது.

சுருங்கக்கூறின் இன்று உலகெலாம் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் இலங்கையிலும் இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள்தான் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? என்ற சந்தேகம், கேள்வி, பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இச்சட்டத்தில் வழங்கப்படுகின்ற வரையறையை/ சட்டப்பிரிவுகளைப் பார்க்கின்றபோது எழுவதைத் தவிர்க்கமுடியாது. அவ்வாறு தற்போது நோக்கம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இச்சட்டம் அந்தக்கோணத்தில் பாவிக்கப்பட மாட்டாது; என்பதற்கு உத்தரவாதமில்லை. இந்தப் பின்னணியில்தான் இச்சட்டமூலத்தை முஸ்லிம்கள் ஆராயவேண்டி இருக்கின்றது.

பயங்கரவாதச் சட்டம் ஏன் தேவை?

சட்ட விளக்கங்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஒரு பாமர மகனின் அல்லது ஒரு பொதுமகனின் கோணத்தில் இருந்து பார்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் தலைநீட்ட ஆரம்பித்த காலமது. அச்சட்டம் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தியதா? அல்லது பயங்கரவாதம் வளர்ந்ததா?

நாடுபூராகவும் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களைத் தடுத்ததா?

வடக்கில் பல ராணுமுகாம்கள் நிர்மூலப்படுத்தப்படுவதைத் தடுத்ததா?

கொழும்பில் மூன்று பெரும் தலைவர்கள், திரு பிரேமதாச, காமினி, லலித் அத்துலத்முதலி போன்றவர்களின் உயர்களைக் காப்பாற்றியதா?

முப்பது வருடங்கள் பயங்கரவாதம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டதை தடுத்ததா?

பயங்கரவாத காலத்திலேயே பயங்கரவாதத்தைத் தடுக்கமுடியாத பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவாதம் இல்லாதபோது எதைத் தடுக்கப்போகிறது?

இந்த நாட்டில் சாதாரண குற்றவியல் சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் சாதாரண காலத்திற்குப் போதாதா? தனது நாட்டு குற்றவியல் சட்டங்கள்மீது அரசுக்கு நம்பிக்கையில்லையா? அல்லது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் என அரசு அஞ்சுகிறதா? அப்படியானால் எவ்வளவு காலத்திற்கு அஞ்சும்? எவ்வளவு காலத்திற்கு பயங்கரவாத சட்டத்தின் துணையுடன் நாடு ஆட்சிசெய்யப்படும்.

பயங்கரவாதம் மீண்டும் தோன்றுமென்ற அச்சம் அரசுக்கு இருக்குமாயின் அதற்கான காரணம் களையப்படவில்லையா? எந்தவொரு நாட்டில் அல்லது சமூகத்தில் சமூக நீதி இல்லையோ, விரக்தி தாண்டவமாடுகிறதோ அங்கு புரட்சி தோன்றுவதற்கான வழமான சூழல் ( fertile ground)உருவாகும். ஆனாலும் அது புரட்சியாக மாறாது எதுவரை என்றால் அந்த ஒருவன் பிறக்காதவரை.

அவன் பிறந்துவிட்டால் அங்கு புரட்சி வெடித்துவிடும். இதுதான் உலக வரலாறு. லெனினின் சோவியத், மாவோ சேதுங்கின் சீனா, ஹிட்லரின் ஜேர்மனி இவ்வாறு பட்டியல் நீளும். இந்த வரிசையில்தான் பிரபாகரனும் ரோகண விஜேவீரவும் வந்தார்கள்.

இப்புரட்சிகள் சில சில எல்லைகளைத் தாண்டும்போதும் அந்த எல்லைகளுக்கு அரசு கொடுக்கின்ற வரைவிலக்கணத்தைக் கொண்டும் அது பயங்கரவாதமாக மாறுகிறது. அந்த பயங்கரவாதம் தோன்றுவதற்கான காரணிகளான சமூக நீதியின்மை, இனப்பாகுபாடு போன்றன தொடர்கின்றபோது அது வளர்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து அவற்றை அடக்க முற்படும்போது அது இன்னும் வீரியம் பெறுகின்றது. இதைத்தான் இலங்கையிலும் கண்டோம்.

எனவே, அரசுக்கு அவ்வாறு அச்சம் இருந்தால் அதற்கான காரணிகளைக் களைவதற்கு முற்படவேண்டும். அன்று ஜே வி பி கலவரத்தின் பின் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கலவரத்திற்கான காரணமாக இளைஞர் விரக்தியை அடையாளம் கண்டது. வேலை வாய்ப்பின்மை அதில் ஒரு பிரதான அம்சமாக கண்டது.

அதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் ஜே வி பி பயங்கரவாதம் தோன்றியிருக்குமா? எனவே அரசு சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக, பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு சமூகம் பெரும்பான்மையாகவும் ஏனைய சமூகங்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதென்பது இயல்பானது. அதற்காக பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் ஆட்சியுரிமை இருக்கின்றது; என்று எங்காவது விதியிருக்கின்றதா? சகலருக்கும் ஆளும் உரிமை இருக்கின்றது. ஆனாலும் பெரும்பான்மை சமூகத்திற்கே ஆட்சியுரிமை ஏகபோக சொத்து என்பதுபோல் அவர்களே ஆட்சியாளர்களாக இருக்கின்றார்கள். இதற்குக்காரணம் பெரும்பான்மை ஜனநாயக வாதமாகும். ( Majoritarian democracy/ Majoritarianism ). அதற்காக சிறுபான்மை எந்தவொரு நாட்டிலும் தாங்களும் நாட்டை ஆளவேண்டுமென்று கேட்பதில்லை. பெரும்பான்மை ஜனநாயகவாதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எப்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன?

பெரும்பான்மையாக இருப்பதால் ஆட்சியாளர்களாக அவர்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அப்பெரும்பான்மை சிறைபான்மைகளை அடக்கியாள முற்படும்போது, தாங்கள் ஆளும் வர்க்கமாகவும் சிறுபான்மை ஆளப்படும் வர்க்கமாகவும், சில நேரங்களில் அடிமைச் சமூகமாகவும் மாற்றப்படும்போதுதான் பிரச்சினை தோன்றுகிறது.

இதற்குத் தீர்வு பயங்கரவாத தடைச்சட்டமல்ல. மாறாக, இந்த ஆளும் வர்க்க மனோநிலையும் அதோடு தொடர்புபட்ட செயற்பாடுகளும் மாற்றப்பட வேண்டும்.

பெரும்பான்மை ஜனநாயகம்தான் ஒரு சமூகத்தை தொடர்ந்தும் ஆட்சியாளராக்கி ஏனைய சமூகங்களை ஆளப்படும் சமூகங்களாக்குகின்றது. இது நீதியானதல்ல. ஆனாலும் வேறுவழியில்லை.

உலகில் எந்தவொரு அறிஞனும் ஜனநாயகம்தான் சரியான ஆட்சிமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றிற்குள் குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

சர்வாதிகாரம், அது சோசலிசமானால் என்ன? கம்யூனிசமானால் என்ன? மன்னராட்சியாக இருந்தால் என்ன? இராணுவ ஆட்சியாளராக இருந்தால் என்ன? மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஜனநாயகத்தில் இடமிருக்கிறது. எனவே, ஜனநாயகம் சிறந்தது; என்கிறார்கள். ஆம் அந்தவகையில் சிறந்ததுதான். ஆயினும் பல்லின நாட்டில் பெரும்பான்மை ஜனநாயகம் சிறுபான்மைகளை அடக்கியாள முற்படுவது இன்று ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது.

இந்தியா உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு. அங்குதான் மாட்டிறைச்சி கொண்டுசென்றால் மனிதனை பகிரங்கமாக அடித்தே கொன்று வீடியோவும் போடுகிறார்கள். குஜராத்தில் 2000 பேருக்குமேல் கொல்லப்பட்டதும் அதே ஜனநாயகத்தில்தான். அண்மையில் உத்தர பிரதேசில் ஜும்ஆவை பிற்படுத்த முடியாது; என்று கூறியதற்காக, பள்ளிவாசல்களையும் 250 இற்கு மேற்பட்ட வீடுகளையும் எரித்ததும் அதே ஜனநாயத்தில்தான்.

மியன்மார் ஜனநாயகத்திற்குத் திரும்பி சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றவரின் ஆட்சியில்தான் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு கொடுமை நடந்தது.

இலங்கையும் ஒரு ஜனநாயக நாடுதான். அந்த ஜனநாயகத்தில்தான் 83 ஜூலைக் கலவரமும் நடந்தேறியது. ஆனாலும் இருக்கின்ற நடைமுறைகளில் ஜனநாயகம்தான் சிறந்தது; என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிரச்சினை ஜனநாயகத்தில் இல்லை. பிரச்சினை பெரும்பான்மை ஜனநாயக வாதத்தில் தான் ( Majoritarian democracy/Majoritarianism ) இருக்கின்றது.

ஜனநாயகத்தை யாரும் எதிர்க்கவில்லை. பெரும்பான்மை ஜனநாயகவாதத்தைத்தான் எதிர்க்கின்றார்கள். பெரும்பான்மை ஜனநாயகத்திற்கான மாற்றுத்தீர்வு சிறுபான்மையைப் பொறுத்தவரை சமஷ்டி என்றுதான் பலர் நம்புகிறார்கள். ( Majoritarianism v Federalism) அதனால்தான் பல நாடுகளில் சமஷ்டி முறை அமுலில் உள்ளது. ஆனால் இங்கு எல்லோரும் புரிந்துகொள்ளத் தவறுகின்ற ஒரு விடயம் சமஷ்டி என்பது பிராந்தியங்களில்/ மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தேசிய சிறைபான்மைகளுக்கு சமஷ்டி மாற்றுத்தீர்வு என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் அப்பிராந்தியங்களில் வாழும் சிறுபான்மைகளை பிராந்திய பெரும்பான்மை ஜனநாயகவாதம் காவுகொள்வதை யாரும் உணர்வதில்லை.

இதன்காரணமாகத்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் குஜராத்தில் மோடியால் அந்தக் கொடுமையை நிகழ்த்த முடிந்தது.

எனவே, இந்தியா போன்ற பெரிய நாடுகள் விதிவிலக்கானபோதும் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும்பான்மை ஜனநாயகவாதத்திற்கு இரையாகாமல் சிறுபான்மைகளை அரவணைத்து தேசிய ரிதியில் இனவேறுபாடுகளுக்கப்பால் ஜனநாயகத்தைப் பேணமுடியுமானால் பிரச்சினைகள் தோன்றாது.

ஜனநாயகத்தைப் பேணுவதற்கான பிரதான மூலம் சட்டத்தின் ஆட்சியாகும். ( Rule of Law). சட்டத்தின் ஆட்சி பெரும்பான்மை ஜனநாயகவாதத்திற்குள் நசுக்கபடுகின்றபோதுதான் பிரச்சினை தோன்றுகிறது. அப்பிரச்சினைகளை ஒரு புறம் சாதாரண சட்டங்களின் மூலமும் மறுபுறம் சட்டத்தின் ஆட்சியை நிறுவதன்மூலமும் கையாளமுற்படாமல் கடுமையான பயங்கரவாத சட்டங்களைக் கொண்டுவருவது எதிர்விளைவுகளையே தோற்றுவிக்கும். அதுதான் நாம் இலங்கையில் கற்றுக்கொண்ட பாடம்.

மட்டுமல்ல, இவ்வாறான சர்வதேச நியமங்களுக்கு முரணான கடுமையான சட்டங்கள் ‘ சட்டத்தின் ஆட்சிக்குப் ( Rule of Law) பதிலாக Rule by Law விற்குத்தான் இட்டுச்செல்லும். இதுதான் ஹிட்லரின் நாசி ஜேர்மனியிலும் நடந்தது.

எனவே, ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு குறித்த சட்டவரைபில் வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் தொடர்பாக அடுத்த தொடரில் பார்ப்போம்; இன்ஷா அல்லாஹ்.

( தொடரும்)

Read more...

அலரி மாளிகையில் ஒழித்துகொள்வதற்கு ஓடிய கள்வனை தடுத்து நிறுத்தியது ரயில் கடவை. அனுர குமார

இந்நாட்டில் ஜனாதிபதி மற்றும் அமைச்சுப் பதவிகள் என்பது கொள்ளை அடிப்பதற்கான அனுபதிப்பத்திரம் என்று தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இந்நாட்டில் கள்வர்கள் ஒழிந்து கொள்ளும் இடமாக பிரதமர் காரியாலயம் செயற்பட்டுவருதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பேப்பர்சுவல் ரெசெறீஸ் நிறுவனத்தின் சக நிறுவனமாக இயங்கிய நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரிகாக செயற்பட்டவர் ரஞ்சன் குலுகல்ல. பிணைமுறி விவகாரத்தில் சிக்கிய அவரை சீஐடி யினர் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். நீதிமன்று அவரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்து பிணையில் விடுதலை செய்தது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட கள்ளனான ரஞ்சன் குலுகல்லவை இந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான இயக்குனர்களில் ஒருவராக நியமித்தார்.

நேற்று சீஐடி யினர் அவரை லேக்ஹவுஸ்க்கு கைது செய்யச் சென்றபோது, அந்த கள்ளன் தனது பென்ஸ் ரக வாகனத்தை எடுத்துச் கொண்டு எங்கே ஓடினான் தெரியுமா? அலரிமாளிகைக்கு. இன்று கள்வர்கள் ஒழிந்து கொள்ளுகின்ற இடமாகவே பிரதமர் காரியாலயம் மாறியுள்ளது.

இவ்வாறு அவன் ஒடுகின்றபோது கொம்பனிவீதி புகையிரத கடவை மூடப்பட்டு விட்டது. அதனால் அந்தக்கள்ளன் அவ்விடத்தில் தடுக்கப்பட்டான் சீஐடி யினர் அவனை அந்த இடத்திலேயே கைது செய்தனர். இல்லையேல் அவன் அலரிமாளிகையினுள் நுழைந்திருப்பான்.

எனவே கள்வர்களை காப்பாற்றுகின்றவர்களை விடுத்து மக்களுக்கு இன்றிருக்கின்ற ஒரே ஒரு தீர்வு மக்கள் விடுதலை முன்னணியாகும் என்றார் அனுரகுமார திஸாநாயக்க.

Read more...

ரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யவே மாட்டோம். மீறினால் நீதிமன்று செல்வேன் சுவாமி. வீடியோ

தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் ரஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என்றும் அவர்கள் இவ்விடயத்தில் மத்திய அரசாங்கத்தை கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தந்தி ரிவி க்கு மேற்கண்டவாறு அடித்துக்கூறியவர், சட்டத்தில் அவர்களை விடுவிப்பதற்கு இடமில்லை என்றும் அவ்வாறு ஏதாவது நடந்தால் தானே அதை எதிர்த்து நீதிமன்று செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Read more...

பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை! மூதூர் ஹப்லுல்லாஹ் புஹாரி

பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் அரக்கச் செயல்களை அடையாளப்படுத்த முடிகின்றது. இவர்களின் மூர்க்கத்தனமான செயல் வடிவங்களை பார்க்கும் போது இது பல்கலைக்கழகமா இல்லை கடையர்களின் கழகமா எனும் சந்தேகங்களே வலுக்கிறது.

பன்னிரண்டு பதிமூன்று வருட கால பாடசாலை கல்வியை கற்று அங்கிருந்து நாடளவில் தெரிவு செய்யப்படும் 4-5% மான மாணவர்களுள் ஒருவராக, கற்பனை மிகுந்த கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றான் அப்பாவி மாணவன் ஒருவன். பாவம் பஸ் ஏறி பலிபீடம் போகிறோம் என்பதை கிச்சிந்தும் மறந்தவனாக , ஆனாலும் ஓரிரு வாரங்களில் பின்னால் செய்தி வருகின்றது சிரேஷ்ட மாணவன் ஒருவனின் பகடிவதையின் போது தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டு மயக்க நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக.......

இங்கு நான் கட்டுரைக்காக உவமானங்கள் எடுத்து எனது நோக்கத்தை ஒப்புவிக்கவில்லை. மாறாக மேற்கூறிய விடயம் அன்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்ற சோக சம்பவமாகும். பெரும் எதிர்பார்ப்போடும், தனது எதிர்காலத்தை நெறிப்படுத்தி தன்னை வளர்த்து கொள்ளும் பேரவாவோடும் பல்கலைக்கழகம் சென்ற மாணவன் இன்று தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டதன் விளைவாக மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் நாளுக்கு நாள் அவனின் நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விடயத்தில் குறித்த பல்கலைக்கழக நிருவாகம் தொடர்ந்தும் அசிரத்தை போக்குடன் நடந்து வருவதும் கவலையளிக்கின்றது.

இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்து முடிந்துள்ளதுடன் இதற்கான தீர்வு தான் என்ன, அது சட்ட முறைகளின் கீழால் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என ஆராயும் போது கடந்த 1990 ஆண்டுகளுக்கு பிற்பாடு இதுபோன்ற பல குரூரமான பகடிவதைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்ற போதிலும் அவற்றுக்காக எங்குமே நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடியவில்லை. அத்துடன் இவ்வாறான விஷமத்தனமான நிகழ்வுகளுக்கான சட்டங்கள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றால் அதுவும் ஒரு நிலையில்லாத இறுக்கமில்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

இவ்வாறான இறுக்கமில்லாத இலகுத்தன்மை கொண்ட சட்ட ரீதியிலான நெறிப்படுத்தல்களின் விளைவாக பல்கலைக்கழகங்கள் தோறும் இவ்வாறான வாழ்வழிக்கும் அரக்கர்கள் அதிகரிக்கின்றார்களே தவிர குறைந்த பாடில்லை. அத்துடன் இவை தொடர்பான விமர்சனங்கள் காலத்துக்கு காலம் பலராலும் தழலில் வீழ்ந்த சாம்பிராணி போலும் புகைக்ககிய போதும் சில தினங்களில் சட்டென அடங்கி விடுகின்றது.

மேற்படி பகடிவதை எனும் பெயரில் பல்கலைக்கழகங்களில் அரங்கேற்றப்படும், மாணவர்களை உடலியல், உளவியல் மற்றும் பாலியல் ரீதியாலான சித்திரவதை பாங்கில் மானபங்க படுத்தும் இழிசெயல் கடந்த காலங்களில் தென்னிலங்கையில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வந்தாலும் சமகாலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பல பிராந்திய பல்கலைக்கழகங்களையும் இது ஆட்கொண்டுள்ளது.

இக்கருத்தை வலுப்படுத்த கடந்த ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற சில கசப்பான நிகழ்வுகளை குறிப்பிட முடியும். அதாவது சில மாதங்களுக்கு முன்னால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற மோசமான உளவியல் ரீதியான பகடிவதையின் தாக்கத்தின் பின் விளைவால் இடம்பெற்ற உயிரிழப்பு, அத்துடன் நான் மேற்கூறிய கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவனின் பரிதாப நிலை, மட்டக்களப்பு ஆரயம்பதி கல்வியியல் கல்லூரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குரூரமான மனித வதைகள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண் மாணவிகள் மீது இடம்பெற்ற முறையற்ற நீரத்தாரை பிரயோகம் என்பவற்றை குறிப்பிட முடியும்.

மேலுள்ள பந்தியில் இறுதியாக குறிப்பிட்ட கிழக்கு பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பெண் மாணவிகளை ஓடவிட்டு துரத்தி துரத்தி சேற்றுநீரை வீசிய காணொளிகள் வெளியாகியதுடன், அது சமூக மட்டத்தில் பாரிய அதிருப்தி அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்ததை நாம் அறிவோம். இது தொடர்பில் விரிவாக நோக்க முடியும். அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் நேரடியாக பார்க்கவில்லை எனினும் கேட்டறியும் சில விடயங்களோ எம்மை ஆழ்துயரத்தில் ஆழ்த்திச் செல்கின்றன.

அங்கு இடம்பெற்ற விசமத் தனமான செயலில் முஸ்லிம் மாணவர்கள் சிலரும் பங்குதாரர்களாக இருந்ததாகவும் தகவல்கள் கிட்டுகின்றது. அவர்கள் முஸ்லிம்கள் தானா என்ற வினக்களே என் மனதில் விரவி எழுகின்றது. பல்கலைக்கழக்கழகங்கள் தோறும் முஸ்லிம் மஜ்லிஸ் என்றும் முஸ்லிம் அமைப்புகள் என்றும் இருப்பவர்களின் கண்கள் எல்லாம் என்ன செய்கின்றன எனும் வினாக்களும் அதிகம் எழாமல் இல்லை என்னளவில். நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே போதும் அனைத்து மாணவர்களையும் திருத்துவதற்கு காரணம் அவ்வளவு அழகாக பண்பாடுகளை பற்றி எடுத்தியருக்கின்றது நாம் பின்பற்றும் மார்க்கம். அடுத்தவனை துன்புறுத்தல், பலவீனப்படுத்தல், நோவினை செய்தல், மானபங்க படுத்தல் மற்றும் நலிவடையச் செய்தல் என அத்தனையும் தவறு என தெளிவாக மேற்கொளிட்டு கூறிய மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மாத்திரமே அது அப்படி இருக்க அந்த மார்க்கத்தின் வழி தொடர்ந்த நீங்களும் இணைந்து இந்து பஞ்சமா பாதகங்களை விளைவிப்பதன் அரத்தங்கள் தான் என்னவோ....

முஸ்லிம் அமைப்புக்களுக்கு இங்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. முதலில் முஸ்லிம் மாணவர்கள் பகடிவதை எனும் பெயரில் செய்யும் கொடூரங்களை முடிவுறுத்த வேண்டும். அத்துடன் முஸ்லிம் பெண்களையும், மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் கொடூர பகடிவதைகளில் இருந்தும் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

மேலும் இந்த பகடிவதை எனும் பதம் முதலில் பிரித்தானிய பல்ககைக்கழகங்களிலே தோற்றம் பெற்றன எனினும் இன்று எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவது போன்ற மனித வதைகளோ அல்லது சித்திரவதைகளோ அங்கு இடம்பெறுவதில்லை. மாறாக பகடிவதை என்பது அவர்களை பொறுத்தவரையில் தெளிவான பதவிளக்கத்துடனே பின்பற்றப்பட்டு வருகின்றது. அதாவது கனிஷ்ட மாணவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம் மற்றும் அவர்களின் சமூகமயமில்லாத பண்புகள் என்பவற்றை பல்கலைக்கழக சூழலில் ஒழித்து அவர்களை சிறந்த பன்படுத்தப்பட்ட மனித வளங்களாக மாற்றும் ஓர் அடிப்படை செயலாகவும் அத்துடன் கனிஷ்ட மாணவர்களிடம் சிரிப்பூட்டும் வகையில் பேசி அவர்களை மகிழ்விக்கும் நிகழ்வாகவே அவர்கள் அதனை மேற்கொள்கின்றார்கள்.

ஆனாலும் CURE எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிறுவுனர்களில் ஒருவரான அகர்வால் பகடிவதையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இலங்கையை அடையாளப்படுத்துகின்றார். அத்துடன் எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முறையற்ற பகடிவதை தொடர்பான முறைப்பாடுகளும் புள்ளிவிபரங்களும் மலைபோலும் குவிந்து கிடப்பதையும் அவதானிக்க முடிகிறது. அதாவது கடந்த 2017 ஆண்டில் மட்டும் பகடிவதை தொடர்பாக 250-300 வரையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. கடந்த 2018 ஆண்டில் மட்டும் பகடிவதை காரணமாக 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும் அதே ஆண்டில் ஏறத்தாழ 2000 மாணவர்கள் வரையில் தமது பல்கலைக்கழங்க பட்டப்படிப்பைவிட்டும் இடைவிலகியுள்ளார்கள். இங்கு எமது நாட்டின் கல்வி முறைமையில் உள்ள மற்றுமொரு குறைபாட்டையும் குறிப்பிட முடியும் அதாவது பண்பற்ற மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவின் விளைவே இவ்வாறான கசப்பான புள்ளிவிபரங்களை பதிவிடுகின்றது என்பது புலப்பாடாகும்.

இந்த நிலை தொடரும் வருடங்களில் அதிகரிக்கும் அபாயத்தை எதிர்நோக்குகின்றதே தவிர குறைவடையும் சாத்தியம் துளியளவும் இல்லை என்பதே பெரிதும் கவலைக்கிடமாக உள்ளது. எவ்வாறு இந்த பல்கலைக்கழக பகடிவதை பரிதாப அவலங்களை களைந்தெறிய முடியும்? எனும் வினாவுக்கு இலகுவான விடைகள் எம் முன்னே இருந்தாலும் அதிகாரங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் சட்டமும், அதிகாரிகளும் அவற்றை கையாளும் விதம் அசமந்தமாகவே காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் இறுக்கமானது அந் நாட்டின் குடிமக்களின் பண்பாட்டு விழுமியங்களின் மேம்பாட்டில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும். என்பது யாவரும் பொய்பிக்க முடியாத ஓர் உண்மையாகும். அந்த வகையில் சட்டத்தை மேலும் இறுக்கமாக்குவதன் ஊடாக இந்த பல்கலைக்கழக பகடிவதையை முற்றாக ஒழிக்க முடியும் என்பது யதார்த்தமாகும். இவற்றையும் தாண்டி மாணவர்களின் சிந்தனைகள் பரிமாண மாற்றம் காணும் போதே இந்த பகடி வதை எனும் பெயரிலான சித்திரவதைகளின் குறைவடைதல் என்பது சாத்தியப்படும்.

மேலும் இந்த பகடிவதை தொடர்பாக எந்தளவு சட்டங்கள் செயற்படுகின்றது என்பது ஒருபுறம் இருக்க சட்டங்கள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பன பற்றியும் மாணவர்கள் தெளிவடைய வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் வன்முறைகளை தடைசெய்யும் சட்டத்தின் படி பகடிவதை ஒரு சட்டத்தை வழிகோலிய குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகடிவதை மட்டுப்படுத்தப்பட முடியுமாக இருக்கின்ற போதிலும் அதிகரிப்பதன் காரணம் தான் என்ன......?

இங்கு மாணவர்கள் குறித்த சட்டத்தின் ஊடாக தீர்வுகளை பெற முயல்வதை காட்டிலும் தற்கொலை, இடைவிலகல் மற்றும் இன்னோரன்ன புறம்பான வழிகளை நாடுவது அறிவுடமையாகாது. மேலும் மாணவர்கள் பகடிவதைக்குள்ளாக்கப்படுவதை உயர் மட்டங்களுக்கு அறிவிக்க பல வழிகள் நாட்டில் நடைமுறையில் உள்ளமையும் யாவரும் அறிந்திராத ஒன்றாகும் அந்த வரிசையில்..

1. பகிடிவதைகள் தொடர்பில் அறிவிக்க 24 மணிநேர சேவையாக 011-2123700 எனும் தொலைபேசி இலக்கம் நடைமுறையில் உள்ளது இந்த இலக்கத்தின் ஊடாக உங்களின் பகடிவதை தொடர்பான முறைப்பாடுகள் ஏற்கப்படுகின்றன.

2. சமகால அன்ரோயிட் உலகிற்கு ஏற்றாற்போல் Anti Ragging App எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையப்பக்கத்தில் பகடிவதை தொடர்பாக முறைப்பாடுக்கு ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாட்டு வழிகளை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தாமைக்கான காரணங்களும் இல்லாமல் இல்லை ஆனாலும் அதனை இவ்விடத்தில் விவரிப்பதை விடுத்து நிச்சயமாக மாணவர்கள் மேற்குறித்த வழிகளை பயன்படுத்தி முறைப்பாடுகளை அதிகம் பதிவிட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

காரணம் நீங்கள் விடுகின்ற தவறுகள் நாளை அதேஇடத்தில் மற்றுமொரு மாணவனுக்கு நடாத்தப்படவிருக்கும் தற்கொலை தூண்டல், உளவியல் தாக்கம், உடலியல் சித்திரவதை மற்றும் இடைவிலகல் என பல பாதகமான முடிவுகளுக்கு ஏதுவாக அமைந்து விடும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.......

Read more...

கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஹக்கீமுக்கு அமைச்சர் பதவியை விட்டு கொடுத்தவர்தான் ஹசன் அலி.

கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை ரவூப் ஹக்கீமுக்கு விட்டு கொடுத்த பெருந்தகைதான் ஹசன் அலி ஆவார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரசார செயலாளர் ஐ. எம். ஹாரிப் தெரிவித்தார்.

மு. காவில் இருந்து பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி ஆகியோர் வெளியேற நேர்ந்தது தொடர்பாக இன்று (28) வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ஹாரிப் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

இவரின் ஊடக அறிக்கை வருமாறு:

ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாததால்தான் மு. காவை விட்டு வெளியேறியதாக திட்டமிட்ட வகையில் அப்பட்டமான பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் உண்மை என்று அப்பாவிகள் சிலர் அப்படியே நம்பி வைத்திருக்கின்றனர்.

உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் அடாவடிகள் காரணமாகவே இவர்கள் மு. காவில் இருந்து வெளியேறி செல்ல நேர்ந்தது. இவரின் அடாவடிகள் எல்லை தாண்டிய காரணத்தாலேயே சுய கௌரவம் காரணமாக இருவரும் வெளியில் போனார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளேயும், வெளியேயும் அவருக்கு மேலாக எவரும் தலை தூக்க கூடாது என்பதில் ரவூப் ஹக்கீம் அவதானமாக உள்ளார். ஏனென்றால் அது அவரின் தலைவர் பதவிக்கு ஆபத்தாகி விடும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றார். குறிப்பாக கிழக்கு மண்ணின் மைந்தர்கள் என்றால் இவருக்கு இவ்விடயம் காரணமாக இவருக்கு இயல்பாகவே அலர்ஜியும், அச்சமும் இருந்து வருகின்றன. ஆகவேதான் இலாவகமான முறையில் காலத்துக்கு காலம் கிழக்கு மண்ணின் மைந்தர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றியும், வெளியேறவும் வைத்து உள்ளார். கடைசியாக இந்த அநியாயம் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோருக்கு நடந்தேறி உள்ளது.

தேசிய அரங்கிலும் சரி, முஸ்லிம் அரசியலிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் விளங்குகின்றனர். குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹசன் அலி கொத்து கொத்தாக பெற்று கொடுத்தார். அதே நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆரம்பத்தில் ஆதரவை வெளிப்படுத்தி தபால் வாக்குகள் வழங்கப்பட்டு சில நாட்களில் ரவூப் ஹக்கீம் குத்துக்கரணம் அடித்தார். ஹசன் அலியின் நெருக்குதல், அழுத்தம் ஆகியன காரணமாகவே ரவூப் ஹக்கீம் இவ்விதம் மாற வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை ஹசன் அலியின் மீது விழுந்ததில் எந்த வியப்பும் கிடையாது. ரவூப் ஹக்கீமை காட்டிலும் ஹசன் அலிக்கு நல்லாட்சி அரசாங்கம் மேலான இடத்தையும், முக்கியத்துவத்தையும் வழங்கியது. குறிப்பாக ரவூப் ஹக்கீமை விடுத்து ஹசன் அலிக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி வழங்க தீர்மானித்தது. ஆனால் இந்த இடத்தில் நான் சுட்டி காட்ட விரும்புகின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை ஒரு பொருட்டாககூட மதிக்காமல் ஹசன் அலி விட்டு கொடுத்தார். அதன் பின்தான் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைக்க ஹசன் அலிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சு பதவி வழங்க நல்லாட்சி அரசாங்கம் முடிவெடுத்தது.

பாராளுமன்ற தேர்தல் வந்தது. அத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஹசன் அலி உறுதியுடன் காணப்பட்டார். ஆனால் இவரை போட்டியிட வைக்க கூடாது என்பதில் ஹக்கீம் பற்றுறுதியுடன் காணப்பட்டார். இவரை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து தடை செய்தார். அதற்காக தேசிய பட்டியல் நியமனம் தருவார் என்று இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி கழுத்தறுத்தார். பஷீர் சேகு தாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட தயாரானார். இவர் ஏற்கனவே அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரையும் வேட்பாளராக போட்டியிட வைக்க கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக ஹக்கீம் செயற்பட்டார். தேசிய பட்டியல் வழங்குவதாக வலிந்து சொல்லி இவரையும் வேட்பாளராக போட்டியிட விடாமல் தடை செய்தார்.

அவரை தவிர எவரும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக இருக்க கூடாது, குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்க கூடாது என்பதில் காலம் காலமாக அவதானத்துடன் நடந்து வருபவர் ஹக்கீம். எனவே இருவரையும் வெட்டினார். இருவரும் தேசிய பட்டியல் கேட்டு சண்டை பிடிக்கின்றனர் என்று தேர்தல் முடிந்த கையோடு நடந்தவைகளை மறைத்து நாடகம் நடத்தினார். ஆகவேதான் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கினார்கள்.

Read more...

புலிகளுக்காக பாராளுமன்றில் கண்ணீர் வடிக்கின்றார் டக்கிளஸ் தேவானந்தா.

காமலீலை குற்றவாளி பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்குமாறு இந்தியப்பிரதமர் மோடியிடம் கேட்டவருக்கு, சிறையிருக்கும் ஒரு தமிழ்த்தாயின் புதல்வனை விடுவிக்கும் சிந்தனை தோன்றவில்லை.

இது யாரது குற்றம்?.... தனது ஓய்வு கால பொழுது போக்கிற்காக வடக்கு நோக்கி அரசியல் நடத்த வந்தவர் குற்றமா? அல்லது, தமிழரின் வலிகைளையும் வதைகளையும் அறியாத ஒருவரை வடக்கு மாகாண அதிகாரத்தில் உட்கார வைத்தவர்கள் குற்றமா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் பா.உ டக்கிளஸ் தேவானந்தா

நாடாளுமன்றில் நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மகாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில்,..

யுத்த காலத்தில் அரசிடமிருந்து பெற்ற குண்டு துளைக்காத வாகனம் ஏறி பவனி வந்தவர்கள், அதே அரசுக்கு எதிராக கூச்சலிட்டு சூளுரைப்பது போல் சுத்து மாத்து அரசியலில் ஈடுபட்டார்கள்.

இன்று, அரசிடம் கூனிக்குறுகி இரந்து கேட்டு யாசகம் பெற்ற அரச ஆடம்பர மாளிகையில் வசித்துக்கொண்டு, அதே அரசுக்கு எதிராக பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அறிக்கையிட்டு பம்மாத்து காட்டுகிறார்கள்.

நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் நடித்துக்கொண்டிரு என்று அரசின் காலில் விழுந்து ஆலோசனை கூறிவிட்டு, அடுத்த தேர்தலுக்கு நீங்கள் ஆயத்தமாகும் உங்கள் புலுடாக்கள் இனியும் வெற்றியளிக்காது.

தமது ஓய்வு காலத்தை பொழுது போக்கு அரசியலுக்காக செலவழிக்க வந்தவர்களும், வெளியில் வீரப்பேச்சும், அரசின் பின் கதவு தட்டி தத்தமது சொந்த சலுகைகளை மட்டும் பெறும் தரகு தலைமைகளும், தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்க போவதில்லை.

நான் இடையாறாது நேசிக்கும் எனது மக்களின் அரசியல் கனவுகளுக்கு மட்டுமின்றி, எமது மக்களின் நடை முறை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பும் எனது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்ககளுக்கு சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே.

அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டன.

அவை குறித்த உள்ளுராட்சி சபைகளின் சாரதிகள் ஊடாக கொழும்பில் இருந்தும் எடுத்து வரப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாக பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.

இந்த பவுசர்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் செலவுகள் அனைத்தும் அந்தந்த உள்ளுராட்சி சபைகளையே சாருகின்ற நிலையில், இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர்ப்பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தால் கேட்கப்பட்டால் சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரதேச செயலக பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்த ஏற்பாடு என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கிளடையே தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

மேலும், வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்பட்டு வருவதால் அவற்றை நிரப்ப வேண்டியத் தேவையும் தொடர்கின்றது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் இவைகளை கவனிக்க தவறிவிட்டார்கள்.

மாகாண சபைகளுக்கு இருக்கும் 37 அதிகாரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து, எஞ்சிய 35 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை கூட இவர்கள் தமிழ் மக்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை.

ஒய்யாரக்கொண்டையாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்.

பேசுவது போலித்தமிழ் தேசியம்!
சாதித்தவை வெறும் பூச்சியம்!!

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்கள்.

சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!



எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்.

Read more...

ஜெனிவா சென்ற குழு அங்கு தெரிவித்ததற்கும் எனக்கும் தொடர்பில்லை. ஜனாதிபதி

இம்முறை ஜெனிவா ஐநா வில் இலங்கை இராஜதந்திரிகள் தெரிவித்த விடங்கள் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்காமல் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் என்றும் அவர்கள் அங்கு நடந்து கொண்ட விடயம் நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுக்கும் செயலாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரபால சிறசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (27) முற்பகல் களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு எத்தகைய தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப்போன்று அதில் உள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணை அனுசரணை வழங்கி அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் அதனை கவனத்திற்கொள்ளவும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அது தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் எமது நாட்டு தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற அந்த நிகழ்வு குறித்து தனது முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்வு இந்த நாட்டின் முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியதே அன்றி அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரியதல்ல என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜெனீவா ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவிருந்த பிரதிநிதிகள் குழுவானது தமது ஆலோசனைகளின்றியே நியமிக்கப்பட்டிருந்தது என தெரிவித்த ஜனாதிபதி, பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் தான் அந்த பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அண்மையில் அவ் ஆணைக்குழுவில் முன்வைத்த உரையை நாட்டிற்கு பொருத்தமான முறையில் ஆற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

அன்று நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இன்றும் வேறொரு வடிவத்தில் மேலெழத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு சிறந்தவொரு வெளிநாட்டுக் கொள்கை காணப்பட வேண்டும். எனினும் நாட்டின் அரசியலிலும் அரசாங்க ஆட்சியிலும் அவை தலையீடு செய்யக்கூடாது என்பதோடு இன்று போலவே எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு எமது நாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

களுத்துறை, மீகஹதென்ன புதிய பொலிஸ் பிரிவினை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பொலிஸ் நிலையத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, பாலித்த தெவரப்பெரும, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் களுத்துறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more...

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு செயற்றிட்டத்தில் பாரிய நிதி மோசடிக்கான அபாயம்

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் மேற்கொள்ளப்படவுள்ள USD 3.85 பில்லியன் பெறுமதியான சர்ச்சைக்குரிய எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுவதற்கான அபாயம் உள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் நம்புகிறது.

இது ‘நிதி செயற்பாட்டு செயலணி (Financial Action Task Force (FATF) இனால் கணிக்கப்பட்ட நிதிச்சபை (Money Laundering) மற்றும் பயங்கரவாத்திற்கான நிதியுதவி செய்யும் சாத்தியமுள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை தமது பெயரை நீக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறித்த செயற்றிட்டத்தின் பிரதான முதலீட்டாளர் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இன்வெஸ்ட்மெண்ட் வெகிக்கிள் சில்வர்பார்க் இன்டர்நெஷனல் லிமிடெட் எனும் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் முன்னாள் இந்தியன் யூனியன் அமைச்சருமான டாக்டர் எஸ்.ஜெகரஷகன் என்பரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கம்பனியாகும். இவரது வியாபார முதலீடுகளில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பலமுள்ள இந்திய அதிகாரசபைகளாலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

FATF இனால் பண மோசடி எதிர்கொள்வதற்கான சர்வதேச நியமங்களுடனான 40 பரிந்துரைகளைக் கூறுகிறது. இதில் 12 பரிந்துரைகள் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த நபர்களினால் மேற்கொள்ளப்படும் நிதிபரிமாற்றங்கள் தொடர்பாக நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறுகையில் இலங்கை FATF இன் பட்டியலிலிருந்து அகற்றுவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் முதலீட்டுச் சபையானது சில்வர் பார்க் இன்டர்நெஷனல் இன் முதலீடுபற்றிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் அரசியல் ரீதியான பலம்வாய்ந்த நபர் என்பதன் பொருள் விளக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

செயற்திட்டத்தில் ஈடுபடவுள்ள திறத்தவர்கள் பற்ற pஉள்ள குழப்பமான நிலையினை கருத்தில் கொண்டு TISL அரச அதிகாரசபைகளிடம் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து தகவல் வழங்குமாறு கோருகிறது. தகவல் உரிமை சட்டத்தின் பிரிவு 9ன் பிரகாரம் குறித்த அமைச்சர் நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் பற்றிய விபரங்களை திட்டம் ஆரம்பிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பே பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

ஒபேசேக்கர மேலும் தெரிவிக்கையில், பொதுத்தளத்தில் பகிரங்கமாக தகவல் வெளியிட வேண்டியதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது> விசேடமாக பாரிய வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளும் போது உள்ளுர் பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை கொண்டுவரும் என்பதால் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதனூடாக நன்நோக்குடன் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக அமையும் எனவும் கூறினார்.

Read more...

பொறுத்தது போதுமாம் மே க்கு பின்னர் பொங்கி எழப் போகின்றார்களாம் ஜேவிபி.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் விடயத்தில் எதிர்வரும் காலத்தில் விட்டுக்கொடுப்புக்களுக்கு இடமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் , இந்நாள் ஜனாதிபதி யாவரும் இரு தடவைகளுக்கு மேல் தமது ஆட்சிக்காலத்தினுள் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்போம் என்று உறுதிமொழி அளித்தவர்கள். ஆனால் அவர்கள் அதை நிறைவேற்ற வில்லை.

மக்கள் விடுதலை முன்னணி 20 அரசியல் யாப்பு சீர்திருத்த முன்மொழிவை கொண்டுவந்திருக்கின்றது. இது விடயத்தில் மக்களின் ஆணையை பெறும்பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என உச்ச நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவைப்படுகின்றது.

அந்த மூன்றில் இரண்டை பெற்றுக்கொள்வற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதத்தினை மார்ச் மாதத்தில் நிகழ்த்துவதற்கு பாராளுமன்றின் நிகழ்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நாம் தோல்வி காண்போமாக இருந்தால், மக்கள் விடுதலை முன்னணி மக்களுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனியாக நிறுத்தும் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Read more...

கஞ்சிப்பானை கட்டுநாயக்கவில் சிஐடி யின் பானைக்குள்.

மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பானை இம்ரான் இலங்கையில் பிரபல பாதாள உலக குழுக்களின் தலைவர்களில் ஒருவர். இவர் பல்வேறு கொலைக்குற்றங்களுகாக தேடப்பட்டு வந்த நிலையில், டுபாயில் தலைமறைவாகி இருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 5 ம் திகதி டுபாய் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கை ஒன்றில் மாக்கந்துரை மதுஸ் என்பவருடன் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் டுபாய் பொலிஸாரால் நாடுகடத்ததப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் இன்றுகாலை ( ) என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியபோது சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் பொலிஸார் அவரை நாடு கடத்தியபோதும், கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லாது () பகுதியிலிருந்து மாலைதீவு நோக்கு தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் கஞ்சிப்பானை வந்திறங்கியபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்டோரில் விசாரணைகளின் பின்னர் அந்நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட முடியாதவர்களை டுபாய் பொலிஸ் நாடு கடத்தி வருகின்றது. அதன் பிரகாரம் நேற்று பிரபல பாடகர் ஒருவரின் மகன் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கைது செய்து விசாரித்த சீஐடியினர் நதிமால் பெரேராவின் மகனை விடுதலை செய்ததுடன் சிறைச்சாலை அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்துள்ளனர். அவர் சிறைச்சாலையில் பாதாளங்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்கும் உதவி புரிந்ததற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

Wednesday, March 27, 2019

சுமந்திரனை கொல்ல சதி சுவிஸிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. யார் அந்த இருவர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வ சக்தி சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருந்த அந்த திட்டம் பிசகிப்போனது ஒரு எதிர்பாராத நிகழ்வு.

இவ்விடயம் தொடர்பாக சில ஊடகங்கள் சில விடயங்களை தொட்டுச் சென்றுள்ளன. அச்செய்திகள் சிலவற்றில் வழமைபோல் சில உண்மைகளும் சில கற்பனைகளும் காணப்பட்டது. தற்போதுவரைக்கும் தரக்கூடிய சில தகவல்களை இலங்கைநெட் இங்கே தருகின்றது.

புளியம்குளம் பிரதேசத்தில் ஒருவர் வெடிபொருட்கள் சிலவற்றுடன் சென்றபோது ஏதேச்சையாக மாட்டினார். ஆனாலும் பொருட்களை போட்டுவிட்டு தப்பிவிட்டார். பொலிஸார் அவ்விடத்தில் கோட்டையை விட்டுவிட்டு இலங்கை பொலிஸாருக்கே உரித்தான பாணியில் கையை பிசையத் தொடங்கினர்.

ஆளை விட்டுவிட்டு மேற்கொள்ளப்பட்ட போஸ்ட்மோட்டத்தின்போது, புளியம்குளம் பிரதேசத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் புளியம்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைத்து கார்த்திக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில தகவல்கள் வெளியானது.

வெடிபொருட்களை விட்டு விட்டு தப்பிச் சென்ற நபர் ஆனந்தராசா என்ற பெயருடையவர். அவர் வெளிநாடு ஒன்றிலிருந்து இந்தியாவிற்கு வந்து அங்கிருந்து படகு ஒன்றில் இலங்கைக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் சில வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவ்விடயம் குருட்டு வாக்கில் மாட்டியுள்ளது. அத்துடன் அவர் வந்தவழியால் இந்தியாவிற்கே தப்பித்து விட்டார் என்பது மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும்.

ஆனந்தராசா இலங்கையில் நின்ற காலத்தில் சிலருடன் தொலைபேசியில் மாத்திரம் உரையாடியுள்ளார். அத்துடன் தாக்குதலுக்காக சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்கள் எவருக்கும் இலக்கு யார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை.

இந்த ஒருங்கிணைப்புக்கு சுவிட்சர்லாந்திலிருந்து இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது எதிர்வரும்காலங்களில் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புளியம்குளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கார்த்திக்கின் தகவல்களின் பிரகாரம் சுமந்திரன் ஒரு இலக்கு என்பது வெளியாகியுள்ளது. அடுத்த இலக்கு புலிகளின் நிழல் தலவைன் நானே என்று வெடிவிட்டுக்கொண்டிருப்பவர் என்பது அதிர்ச்சியான தகவல்.

இலங்கையில் ஏதாவது தாக்குதல் ஒன்றை நாடாத்திவிட்டால் புலம்பெயர் தேசத்தில் தமது பைகளை நிறைக்கலாம் என புலம்பெயர் பினாமிகள் பலர் பல்வேறு முயற்சிகளை பத்து வருடங்களாக மேற்கொண்டுவருகின்றனர். ஆனாலும் இன்றுவரை நாட்டிலுள்ள முன்னால் புலிகள் தகடு கொடுத்தே வருகின்றனர். செய்யலாம் செய்யலாம் என்றே தங்களது கணக்குக்கு பணத்தை வரவழைத்துக்கொள்ளும் அவர்கள் தமது கணக்கு நிறைந்தவுடன் காதோடு காதை வைத்தாற்போல் கதையை போட வேண்டிய இடத்திற்கு போட்டு விடுகின்றனர். இதுவரைக்கும் இவ்வாறு பல ஒப்பறேசன்கள் காதிலை பூ கந்தசாமியாக மாறியுள்ளமை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.

இங்குள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டாலும், தாக்குதலை நடாத்திவிட்டு உள்ளே போவதற்கு தயாராக இல்லை. இந்த நிலையிலேயே தெற்கிலுள்ள பாதாளங்களை நாடியுள்ளனர். அவர்கள் அதற்காக பணத்துடன் 9 எம்எம் ஐ யே விரும்புகின்றார்களாம். அவ்வாறு 9 எம்எம் களை பெற்றுக்கொண்டவர்கள் அத்துடன் டாட்டா காட்டியும் இருக்கின்றார்கள்.

இவ்வாறு டாட்டா காட்டிய பாதாளங்கள் தொடர்பான விபரங்களுடன் எதிர்வரும் நாட்களில் சந்திப்போம்......


Read more...

இலங்கையை ஒருபோதும் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது. ரணிலுக்கு நன்றி தெரிவிக்கின்றார் மஹிந்த

இலங்கைப் படையினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வோம் என தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு தெரிவித்து வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர். மறுபுறத்தில் சிங்கள அரசியல்வாதிகள் ஐயோ எமது படையினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்போகின்றார்கள் என சிங்கள மக்களில் வாக்குகளை சூறையாடுகின்றனர்.

இந்நிலையில் இலங்கை படையினரை ஒருபோதும் சர்வதே நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் 2001 ஆம் ஆண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தபோது ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமையே இதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார் பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க. அத்துடன் அவ்வாறு இந்நாட்டின் படையினர் காப்பாற்றப்பட்டமைக்கான கௌரவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சென்றடையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 11 ஆம் நாளான நேற்று கலந்து கொண்டு பாரளுமன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேசிய பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன் போது பரந்த பின்புலத்திற்குள் அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


வெளிவிவகாரங்கள், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் ஆகி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நேற்று விவாதம் இடம்பெற்றது.


இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கம் முன்வைத்த ஒன்றிணைந்த அறிக்கை தொடர்பிலும் அவர் தமது நன்றியை தெரிவித்தார்.

Read more...

Tuesday, March 26, 2019

20 ஐ நிறைவேற்று அமெரிக்கா அழுத்தமாம்! இராஜாங்க அலுவலக அதிகாரி ஒருவர் களத்தில்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியினாரால் முன்மொழியப்பட்டுள்ள 20 வது அரசியல் யாப்பு திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பின்விசையை அமெரிக்கா வழங்குவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகின்றது.

இதன்பொருட்டு நேற்று தாஜ் சமுத்திரா ஹோட்டலிலிருந்து நேரடியாக பாராளுமன்றுக்குச் சென்ற அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்து பேசியதாக நம்பகமாக அறிவதாக அவ்விணையம் தெரிவிக்கின்றது.

பொதுச் செயலாளரை அவ்வதிகாரி பிற்பகல் நான்கு மணியளவில் சந்தித்ததாகவும், சந்திப்பு 8 மணிவரை நீடித்ததாகவும் குறிப்பிடும் அச்செய்தி, 20 வது திருத்தச் சட்டத்தை முன்நோக்கி நகர்த்துவது தொடர்பாக சந்திப்பின்போது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றது.

Read more...

Monday, March 25, 2019

புலிகளால் அச்சுறுத்தல் இல்லை ராமநாதர்களால் தான் என்கிறார் ஆனோல்ட். அது குடும்ப பிரச்சினை என்கிறார் அங்கஜன்.

கொழும்பிலுள்ள பாதாள குழுக்களை கொண்டு புலிகள் சுமந்திரன் , சயந்தன் மற்றும் ஆனோல்டை கொல்ல முனைகின்றார்கள் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது.

மேற்படி பத்திரிகைச் செய்திகளை சாட்சியங்களாக கொண்டு தமக்குள்ள அச்சுறுத்தலை கணக்கில் எடுத்து தனக்கும் தனது சகாக்களான சயந்தன் , ஆனோல்ட் ஆகியோருக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் குழு மீதான உயிரச்சுறுத்தல் இலங்கை வரலாற்றில் புதியது அல்ல. தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதபோது வன்செயல் ரீதியாக அல்லது கொலைகள் ஊடாகவே இலக்கை அடைந்திருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வசக்தியாக சுமந்திரன் உருப்பெற்றுள்ளதுடன், ஆனோல்ட மற்றும் சயந்தன் போன்ற சிலர் சுமந்திரனுக்கு மிக நெருக்கமானவர்களாக மாறியிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும், கூட்டமைப்புக்கு வெளியே சைக்கிள் கொம்பனிக்கும் பெரிதும் புல்லரிப்பை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே புலித்தோல் போர்த்தி நிற்போரும் புலிகளின் அடுத்த பிரதிநிதிகள் நாம் தான் எனக் கூறும் தமிழ் தேசிய முன்னணியினரும் சுமந்திரனின் அழிவினை வாழ்த்தி வரவேற்க காத்திருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.

இதன்பொருட்டு சற்றுகாலத்திற்கு முன்னர் முன்னாள் புலிகளை வைத்து மேற்கொண்ட கொலைமுயற்சி பிசகிப் போனதுடன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க மறியலில் இன்னும் இருக்கும் நிலையில், அவ்வாறான கொந்தராத்துக்களை பாரமெடுப்பதற்கு வடகிழக்கிலுள்ள முன்னாள் புலிகள் தயாரக இல்லை.

எனவேதான் புலிகள் தமது இலக்கை அடைவதற்காக பாதாள உலக குழுக்களை நாடியிருக்கின்றார்கள். காரணம் புலிகளது சிந்தாந்தத்தை ஏற்காதவர்கள் தவறுகளை விமர்சிப்பவர்கள் துரோகிகள். எனவே மேற்படி மூவரும் புலிகளின் சித்தாந்தத்தையும் கடந்த கால செயற்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்திருக்கின்றார்கள். எனவே புலிகளின் தண்டனை அதுதான் என்பது யாவரும் அறிந்தது. அந்தவகையில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவையானது என்பதில் இலங்கைநெட் இடம் மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால், இவர்கள் புலிகளால் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கின்றனர். அவ்வாறு தெரிவித்தால் புலிகளால் தாம் வெறுக்கப்படும்போது தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என நம்புகின்றனர். எனவே பாதுகாப்பை பெற்றுக்கொள்ள கொழும்பிற்கு புலிகளால் அச்சுறுத்தல் என கூறும் மறுபுறத்தில் யாழ்பாணத்தில் மக்களில் காதில் எவ்வாறு பூ சுத்த நினைக்கின்றார்களாயின், ராமநாதன் குடும்பத்தினரால் அச்சுறுத்தலாம் என ஊடகவியலாளர் மாநாடு கூடி இவ்வாறு தெரிவிக்கின்றார் ஆர்னோல்ட.



ஆனோல்டின் கூற்றின் படி அச்சுறுத்தல் கடிதத்தை எழுதியவர்கள் ராமநாதன்களால் அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது எனச் தெரிவிப்பதன் ஊடாக தாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் பாதுகாப்பு புலிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிரானது அல்ல அது ராமநாதன்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கானது எனக் காட்ட முனைகின்றனர்.

ஆனோல்டின் கருத்து தொடர்பாக கருத்துரைத்துள்ள அங்கஜன் ராமநாதன் ஆனோல்ட்டுக்கான அச்சுறுத்தல் குடுப்ப பிரச்சினை சார்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்த அஞ்கஜன் ராமநாதனிடம், மேற்குறித்தவர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ஆனோட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கேட்கப்பட்டபோது,
'யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரை அவர்கள் சாடுகின்றனர்.

அவர்மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டியதில்லை. நேரடியாக அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.

ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எஸ்.ரி.எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே அது தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ஆனோல்ட் மனைவி பிள்ளைகளுடன் மைத்திரிபாலவுடன்

Read more...

தேசிய பட்டியல் வழங்கப்படாததால்தான் ஹசன் அலி, பஷீர் மு. காவை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுவது பொய்யாம்!

- ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஹாரிப் விளக்கம்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாததால்தான் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறினர் என்பதெல்லாம் கட்டி சமைக்கப்பட்ட அப்பட்டமான பொய் கதைகள் ஆகும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரசார செயலாளர் ஐ. எம். ஹாரிப் தெரிவித்தார்.

இவர் வாழைச்சேனையில் இன்று (25) திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து முஸ்லிம் அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு பேசியவை வருமாறு:-

ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாததால்தான் மு. காவை விட்டு வெளியேறியதாக திட்டமிட்ட வகையில் அப்பட்டமான பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் உண்மை என்று அப்பாவிகள் சிலர் அப்படியே நம்பி வைத்திருக்கின்றனர். உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் அடாவடிகள் காரணமாகவே இவர்கள் மு. காவில் இருந்து வெளியேறி செல்ல நேர்ந்தது. இவரின் அடாவடிகள் எல்லை தாண்டிய காரணத்தாலேயே சுய கௌரவம் காரணமாக இருவரும் வெளியில் போனார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளேயும், வெளியேயும் அவருக்கு மேலாக எவரும் தலை தூக்க கூடாது என்பதில் ரவூப் ஹக்கீம் அவதானமாக உள்ளார். ஏனென்றால் அது அவரின் தலைவர் பதவிக்கு ஆபத்தாகி விடும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றார். குறிப்பாக கிழக்கு மண்ணின் மைந்தர்கள் என்றால் இவருக்கு இவ்விடயம் காரணமாக இயல்பாகவே அலர்ஜியும், அச்சமும் இருந்து வருகின்றன. ஆகவேதான் இலாவகமான முறையில் காலத்துக்கு காலம் கிழக்கு மண்ணின் மைந்தர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றியும், வெளியேறவும் வைத்து உள்ளார். கடைசியாக இந்த அநியாயம் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோருக்கு நடந்தேறி உள்ளது.

தேசிய அரங்கிலும் சரி, முஸ்லிம் அரசியலிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் விளங்குகின்றனர். குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹசன் அலி கொள்கை ரீதியாக கொத்து கொத்தாக பெற்று கொடுத்தார். அதே நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆரம்பத்தில் ஆதரவை வெளிப்படுத்தி தபால் வாக்குகள் வழங்கப்பட்டு சில நாட்களில் ரவூப் ஹக்கீம் குத்துக்கரணம் அடித்தார். ஹசன் அலியின் நெருக்குதல், அழுத்தம் ஆகியன காரணமாகவே ரவூப் ஹக்கீம் இவ்விதம் மாற வேண்டி ஏற்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை ஹசன் அலியின் மீது விழுந்தது. ரவூப் ஹக்கீமை காட்டிலும் ஹசன் அலிக்கு நல்லாட்சி அரசாங்கம் மேலான இடத்தையும், முக்கியத்துவத்தையும் வழங்கியது. குறிப்பாக ரவூப் ஹக்கீமை விடுத்து ஹசன் அலிக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி வழங்க தீர்மானித்தது. ஆனால் இந்த இடத்தில் நான் சுட்டி காட்ட விரும்புகின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை ஒரு பொருட்டாககூட மதிக்காமல் ஹசன் அலி விட்டு கொடுத்தார். அதன் பின்தான் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைக்க ஹசன் அலிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சு பதவி வழங்க நல்லாட்சி அரசாங்கம் முடிவெடுத்தது.

பாராளுமன்ற தேர்தல் வந்தது. அத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஹசன் அலி உறுதியுடன் காணப்பட்டார். ஆனால் இவரை போட்டியிட வைக்க கூடாது என்பதில் ஹக்கீம் பற்றுறுதியுடன் காணப்பட்டார். இவரை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து தடை செய்தார். அதற்காக தேசிய பட்டியல் நியமனம் தருவார் என்று இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி கழுத்தறுத்தார். பஷீர் சேகு தாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட தயாரானார். இவர் ஏற்கனவே அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரையும் வேட்பாளராக போட்டியிட வைக்க கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக ஹக்கீம் செயற்பட்டார். தேசிய பட்டியல் வழங்குவதாக வலிந்து சொல்லி இவரையும் வேட்பாளராக போட்டியிட விடாமல் தடை செய்தார். அவரை தவிர எவரும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக இருக்க கூடாது, குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்க கூடாது என்பதில் காலம் காலமாக அவதானத்துடன் நடந்து வருபவர் ஹக்கீம். எனவே இருவரையும் வெட்டினார். இருவரும் தேசிய பட்டியல் கேட்டு சண்டை பிடிக்கின்றனர் என்று தேர்தல் முடிந்த கையோடு நடந்தவைகளை மறைத்து நாடகம் நடத்தினார். ஆகவேதான் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கினார்கள்.

Read more...

பதவியிலிருந்து தூக்கி, அரசியல் பயணத்தை அழிப்பேன்! ஹிருணிகா பெண் நகர சபைக்கு அச்சுறுத்தல்.

அரசியல்வாதிகள் எதற்காக அரசியலுக்குள் நுழைகின்றார்கள் என்பதற்கும் அவர்கள் சுகபோகங்களுக்காக தங்களுக்குள்ளே எவ்வாறு அடிபட்டுக்கொள்ளுகின்றார்கள் என்பதற்கும் இங்கே தரவேற்றப்படுகின்ற தொலைபேசி உரையாடல் ஒரு சிறந்த உதாரணமாக அமையும்.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முக்கியஸ்தருமாவார். அவர் அக்கட்சின் சகவேட்பாளரான துமிந்த சில்வாவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். துமிந்த சில்வாவிற்கு கொலைக்காக மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தந்தையின் மரணத்தை தொடர்ந்து மகள் ஹிருணிகா பிறேமச்சந்திர அரசியலுக்குள் நுழைந்தார். சுpறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் தனது மேடைகளில் அதிகமாக ஊழல் , மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றி பேசுவார்.

இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் பற்றி பேசும் அவர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதில் சிக்கினார்.

அவ்வாறான நிலையில் தற்போது கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரை மிரட்டும் தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

குறித்த உரையாடலிலே தனது சுய கட்டுப்பாட்டினை இழந்து ஹிருணிகா குறித்த பெண் உறுப்பினர் மீது வசைபாடுகின்றார்.

உனது தராதரம் என்ன எனது தராதரம் என்ன என்பதை நினைவில் வைத்துக்கொள் எனக் கூறுகின்றார்.
அத்துடன் உனது அரசியல் வாழ்வினை ஒழிப்பேன் என மிரட்டுகின்றார்.

குறித்த கோழிச் சண்டையானது மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல மாறாக உல்லாசம் அனுபவிப்பதில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாகவே.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு தாய்லாந்துக்கு செல்வதற்கு வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. செல்வோர்கள் பட்டியலில் சம்பந்தப்பட்ட உறுப்பினரில் பெயரை ஹிருணிக்கா நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வேதனையடைந்த உறுப்பினர் ஹிருணிக்காவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது இருவரும் சண்டையிடும் பதிவு தற்போது அம்பலத்தில்.

இவ்வாறானவர்கள் இன்னும் தேவையா? என்பதனை சிங்களம் தெரிந்தோர் கேட்டுப்பார்க்கலாம்.



Read more...

ம் கேட்டிய கிளி உதுவும் ஒரு கதைதான்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பெயரால் புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடிகள் தொடர்பில் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த மோசடிகளால் எம் தேசத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மிகக்குறைந்தவர்களாலேயே பேசப்படுகின்றது. அந்த வகையில் புலம்பெயர் தேசத்து மோசடிகள் மற்றும் மோசடிப்பேர்வழிகளின் இன்றைய வாழ்க்கைமுறை தொடர்பில் சிலர் குறும்படங்களை தயாரித்து வருகின்றனர்.

இக்குறும்படத்தில் மக்களின் பணத்தை சுருட்டிய ஒருவன் அப்பணத்தை பிறிதொரு நாட்டில் முதலீடு செய்துவிட்டு பணம் கொடுத்தவனுக்கே சவால் விடுக்கும் போக்கு இங்கு விபரிக்கப்பட்டுள்ளது.



எதிர்கால சந்ததியினர் மேற்படி மோசடி பேர் வழிகளின் நயவஞ்சகத்தில் மீண்டுமொருமுறை சிக்கக்காமல் இருக்கவேண்டுமாயின் இவ்வாறான ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இவற்றை பகிருங்கள்.

Read more...

தனக்கு மாத்திரமல்ல தனது சகாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமாம். சுமந்திரன் ஐஜிபி க்கு கடிதம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கு புலம்பெயர் தமிழர்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த இலக்கை பாதாள உலக குழுவினரை வைத்து அடைய முனைவதாகவும் வார இறுதி சிங்கள , ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அச்செய்திகளை தொடர்ந்து உசார் அடைந்துள்ள சுமந்திரன் தனக்கும் தனது சகாக்களுக்கும் உயிர் ஆபத்து உள்ளமை மேற்படி பத்திரிகைச் செய்திகள் ஊடாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கும் சகாக்களுக்கும் உடனடியாக மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டியுள்ளார்.

சுமந்திரனை புலம்பெயர் புலிகளின் தூண்டுதலின் பெயரில் கொலை செய்ய முயன்ற சில முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.

அவர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :
“எனதும் மற்றைய இருவரினதும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சியும் அச்சுறுத்தலும்” என்று தலைப்பிட்டு, இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு சுமந்திரன் எம்.பி. நேற்று அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“இன்றைய (24ஆம் திகதி) ‘த சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையிலும், நேற்றைய (23ஆம் திகதி) ‘மவரட்ட’ பத்திரிகையிலும் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை வரைகிறேன். அச்செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

அவற்றின்படி, இந்த மாதத்தின் முற்பகுதியில் என்னைக் கொல்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அது குறித்துப் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு கடந்த வாரம் தபால் மூலம் கிடைத்த ஒரு கடிதத்தில் இந்த மாத முற்பகுதியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நானும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் பங்குபற்றியபோது இருவரும் இலக்கு வைக்கப்பட்டோம் என்றும், மேயர் இன்னொரு நிகழ்வில் இலக்கு வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

உடனடியாகவே மேயர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளமையோடு, பொலிஸ்பாதுகாப்பு வழங்கும்படியும் கோரியிருந்தார். ஆனால், அது வழங்கப்படவில்லை.

இந்த விடயங்கள் குறித்து பொலிஸ் புலன் விசாரணை நடத்தியுள்ளதா என்பதையும், நடத்தியிருக்குமாயின் இது குறித்து எனக்கும், மேயர் ஆனோல்ட்டுக்கும், சட்டத்தரணி சயந்தனுக்கு பொலிஸார் நிலைமையைத் தெளிவுபடுத்துவார்களா என்பதையும், அவர்கள் இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பதையும் தங்களிடம் அறிய விரும்புகின்றோம்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

அர்ஜூன அலோசியஸின் தந்தை மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆழுனர் கைது.

பிணை முறி மோசடிக்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அர்ஜூன அலோசியஸின் தந்தை ஜெப்றி அலோசியஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆழுனர் பி. சமரசிறியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பேப்பர்சுவல் ரெசெறிஸ் இல் இயக்குனர்களாக செயற்பட்ட புஸ்பமித்திர குணவர்த்தன, சித்திரா ரஞ்சன் குலுகல்ல , முத்துராஜா சுரேந்திரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுளனர்.

இவர்கள் யாவரும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிபார்சின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆழுனரான அர்ஜூன மகேந்திரன் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளது.

தேவை ஏற்படும்போது அர்ஜூன மகேந்திரனை கொண்டுவந்து பாரமளிப்பேன் என ரணில் விக்கிரமசிங்க பாரளுமன்றில் மக்களுக்கு உறுதியளித்திருந்தபோதும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Read more...

Sunday, March 24, 2019

அரச உத்தியோகித்தர்களை காட்டிக்கொடுக்கும் றிசார்ட் பதுயுதீன். கூசா தூக்கியதற்கு பிரதியுபகாரம்.

வில்பத்து காடுகளை அழித்து சொத்து சேர்த்ததாக றிசார்ட் பதுயுதீன் சிக்கலில் சிக்கியுள்ளார். இயற்கை வளங்களை காப்போம் என்ற அமைப்பு றிசார்ட்டுக்கு எதிராக ஊழல்கள் மோசடிப் பிரிவில் முறையிட்டுள்ளனர்.

1990 ம் ஆண்டு வன்னியிலிருந்து சொப்பின் பையுடன் புத்தளம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த ரிசார்ட் பதுயுதீன் தற்போது இலங்கையில் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார் என்றும் இச்சொத்துக்கள் அவருக்கு எவ்வாறு வந்தது என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரையாற்றிய ரிசார்ட் பதுயுதீன், தான் எவ்வித காடழிப்பிலும் ஈடுபடவில்லை என்றும் அன்றைய அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றின் சிபாரிசின் பெயரில் அப்பிரதேசத்திற்குரிய பிரதேச செயலரே காடுகளை அழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

றிசார்ட் பதுயுதீன் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காணப்படும் மோசடிப்பேர்வழிகளான அரச உத்தியோகித்தர்களை தனக்கு தேவையான இடங்களுக்கு நியமித்து அவர்கள் ஊடாகவே தனது தேவைகளை நிறைவேற்றி பழக்கப்பட்டவர். அவ்வாறு றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகள் பலர் றிசார்டினால் மிரட்டப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகியிருந்ததை இங்கு யாவரும் நினைவு கூர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறான நிலையில் றிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகும் ஏதுநிலைதோன்றும்போது, எந்த அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைத்து காரியங்களை முடித்துக்கொண்டாரோ அதே அதிகாரிகளை பலியிட நினைப்பது தர்மத்திற்கு மாறானதாகும். ஆனாலும், தமது சுயநலன்களுக்காக எள் என்றால் றிசார்ட் உட்பட்ட அரசியல்வாதிகளுக்கு எண்ணையை கொடுத்து பழகிய அரச உத்தியோகித்தர்கள் தண்டிக்கப்படுவார்களானால் இலங்கைநெட் அதனை வரவேற்கும்.

மாறாக தமது தொழிலை காத்துக்கொள்ளும் பொருட்டு றிசார்ட்டின் அரசியல் மற்றும் அடியாட்களின் பலத்திற்கு பயந்து கருமமாற்றிய உத்தியோகித்தர்கள் பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். காரணம் ரிசார்ட்டின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு தயக்கம் காட்டிய பல உத்தியோகித்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் தொழிலிருந்து நீக்கப்பட்டும் உள்ளனர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

காரியங்களை சாதித்துவிட்டு அவர்கள் பலியிடப்படுவது நிறுத்தப்படவேண்டுமாயின், ரிசார்ட்டின் குறித்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக அரச உத்தியோகித்தர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்கள் மிரட்டப்பட்டார்கள் என்ற உண்மைகளை குறித்த உத்தியோகித்தர்கள் காலக்கிரமத்துடன் வெளிப்படுத்தி ரிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டுக்கு செய்கின்ற உபகாரமாகவும் தங்களை காக்கும் உபாயமாகவும் அமையும்.

அதேநேரம் றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு துணை சென்று பதவியுயர்களையும் வரபிரசாதங்களையும் பெற்றுக்கொண்ட அரச உத்தியோகித்தர்கள் தொடர்பான தகவல்களையும் அவர்களுடைய செயற்பாடுகளையும் இலங்கைநெட் அம்பலப்படுத்த காத்திருக்கின்றது.

Read more...

த.தே.கூ ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது. தயாசிறி ஏளனம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறு சீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர யாழப்;பாண பஸ்; தரிப்பு நிலையத்திலுள்ள கழிவறைகளக்கூட பராமரிக்க தெரியாத கையாலாகதவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர் என ஏழனம் செய்துள்ளார்.

மேலும் இச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பலர் யாழ்பாணத்தில் இல்லை என்றும் அவர்கள் இங்கிருந்தால் மக்களின் தேவைகள் விளங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் :

கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.' என்றும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்ஸ்மி மண்டபத்தில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் நல்லூர் ஆலயத்தில் விசேட பூசைகளிலும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com