Saturday, March 16, 2019

சர்வதேசத்திடம் வாக்குறுதி கொடுத்த மஹிந்த இப்போது சத்தம் இல்லாமல் இருக்கின்றார் - ஐ தே க குற்றச்சாட்டு

ஐ நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 40 ஆவது ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாகி பல நாட்கள் கடந்து விட்டன. இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்ற மீறல்கள், பொறுப்பு கூறாமை தொடர்பில் ஜெனீவா அமர்வில் அங்கத்துவம் பெற்ற பல நாடுகள் இலங்கை மீது கடும்போக்கை கையாண்டு வருகின்றன. இதற்கு தற்போதைய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ்வே முழு காரணம் என, ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது யுத்த விதிமுறை மீறல்களுக்கான பதிலை வழங்குவதாக, சர்வதேசத்திடம் வாக்குறுதி அளித்த மஹிந்த ராஜபக்ச இன்று, அதிலிருந்து விலக்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலைப்பாடானது , சர்வதேச நாடுகளிடையில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில், சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக பிரச்சினைகளில் தலையீடு செய்ய அனுமதிக்க வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் சர்வதேசம் தலையீடு செய்வதற்கு யார் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது? முழு பிழைகளையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, தப்பிக்க நினைக்கும் மஹிந்த ராஜபக்ஸவால், இலங்கைக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார மேலும் குறிப்பிட்டார்.

Read more...

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டமையால், மக்கள் திண்டாட்டம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்ப, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும், 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் பால்மாவிற்கான விலைச் சூத்திரம் நிர்ணயிக்கப்பட்டு, மேற்படி விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

அரசியலே தெரியாதவர்கள், அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிடுவது நகைப்பாக உள்ளது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அதற்காக 20 திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜேவிபியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார். அரசியலை பற்றி தெரியாதவர்கள், அரசியல் அமைப்பை பற்றி கருத்து வெளியிடுவது நகைப்பாக உள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்கள் கோருவதில் நியாயமில்லை. அதனை தீர்மானிக்க வேண்டியது நாட்டு மக்களே என, அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் நுகேகொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

Read more...

Friday, March 15, 2019

பக்கதர்களால் நிரம்பி வழியும் கச்சதீவு. புனித அந்தோணியார் கொடி ஏறியது. ( படங்கள் உள்ளே)

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று(15) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து, தவக்கால சிலுவைப் பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

நாளை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இம்முறை திருவிழாவிற்கு இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இம்முறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கச்சத்தீவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இதேவேளை, இம்முறை கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றுள்ளனர்.

Read more...

ஜெனீவா திருவிழாவிற்கு செல்வோருக்கு ஆப்பு! வீசா மறுப்பு

ஐக்கிய நாடுகளை சபையின் மனித உரிமைகள் மன்றின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து செல்வதற்காக வீசாவிற்கு விண்ணப்பித்திருந்த பலருக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகள் இடம்பெறுகின்றபோது இலங்கையிலிருந்து செல்லும் கூத்தாடிகள் அங்கு பக்கவறைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு தாம் பெரிதாக ஏதோ சாதித்து விட்டதாக அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றுவதையே கடமையாக கொண்டிருந்தனர்.

அதேநேரம் இவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துக்கொள்வதற்கென புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி வியாபாரிகள் மக்களிடம் பெரும் பணத்தினையும் வசூலிப்பர். அவ்வாறு கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பதற்காக புலம்பெயர் அமைப்பொன்றினால் மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவனம் ஒன்றிலிருந்து ஒரு பக்கத்தை இங்கு தருகின்றோம். இதிலிருந்து மேற்படி நிகழ்வுக்காக மக்களின் பணம் எவ்வளவு செலவிடப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.



இவ்வளவு தொகையை சேகரித்து ஜெனிவாவில் திருவிழா கொண்டாடுவதிலும் பார்க்க இப்பணத்தினை கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தொழில்புரியக்கூடிய தொழிற்சாலை ஒன்றை அமைத்தால் அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.

Read more...

அவர்கள் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்களாம், டக்ளஸ் மக்களுக்காக பேசுகின்றாராம் !

நான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி வரவேண்டும் என்பதற்காக அல்ல. எமது மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்பதற்காகவே நான் குரல் எழுப்புகிறேன்!.

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நான் ஆட்சியில் பங்கெடுத்த காலங்களில் குரலெழுப்ப வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற அளவில் மின்னாமல் முழங்காமல் பொழிகின்ற வான் போல் முடிந்தளவு செயல் வீர காரியங்களாக நான் சாதித்து காட்டியிருக்கின்றேன்.

நான் அப்போது கொண்டிருந்த அரசியல் பலத்தை விடவும் பன் மடங்கு அரசியல் பலத்தோடு இன்றிருக்கும் தரகுத் தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஆளுமை இருந்திருந்தால், தமிழ் மக்கள் மீதான அக்கறை இருந்திருந்தால், தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இருந்திருந்தால், அல்லது ஆற்றலும் அனுபவமும் இருந்திருந்தால், நான் இன்று எடுத்து கூறும் நியாங்களுக்கு என்றோ தீர்வுகள் கிடைத்கிருக்கும்.

வேலையற்ற பட்டதாரிகளின் தொகை ஆண்டு தோறும் பெருகி வருகிறது, தொண்டர் ஆசிரியர்களின் குரல்கள் இன்னமும் ஒலித்து வருகிறது, காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது, இவைகளை எல்லாம் தமது அரசியல் பலத்தை வைத்தே அரசுடன் அவர்கள் பேசி அதற்கென தீர்வுகள் காண முடியவில்லை.

இந்த இலட்சணத்தில் விமானம் ஏறி ஐ. நா கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா போக புறப்படுகிறார்கள். வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காதுகளில் பூ வைத்து, அதன் பெயரால் இவர்களுக்கு கிடைத்திருப்பது ஜெனீவா என்னும் வருடாந்த திருவிழா!

ஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள் என எமது மக்கள் நாளையும் கேட்பார்கள். எதை கொண்டு வந்தோம் என்று எமது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள்? சுவிஸ் நாட்டின் சொக்கிலேட்டும் மணிக்கூடும் உங்கள் குடும்பங்களுக்கு மட்டும் கொண்டு வந்தீர்கள் என்பதை எமது மக்களுக்கு சொல்வீர்களா?

உங்கள் பயணப்பைகளில் பாதி இடம் வெற்றிடமாக வைத்து சென்றீர்கள். அதில் உங்கள் பிள்ளைகளுக்கு சுவிஸ் பொம்மைகளை நிரப்பி வருவதை சொல்வீர்களா?

வருகின்ற வாய்ப்புகள் எதுவாயினும் அதை பயன்படுத்தும் கொள்கையுடையவர்கள் நாங்கள். ஐ.நா வின் அழுத்ததால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் அதையும் நாம் வரவேற்போம்.

ஆனாலும் உள்ளுரிலேயே மேய முடியாத மாடுகள் நீங்கள். ஐ.நாவை காட்டி உங்கள் உல்லாச மேய்ச்சலை எமது இனத்திற்கான மோட்சமாக நீங்கள் காட்டுவதையே நான் தவறு என்று கூறுகின்றேன்.

வேதாளம் குடிபுகுந்த வீட்டில் படுத்துறங்கி பூபாள விடியல் பாடி விழித்தெழ ஒரு போதும் முடியாது!....

நேற்று என்பது உடைந்த பானை!....
நாளை என்பது மதில்மேல் பூனை!!.....
இன்று என்பதே கையில் உள்ள வீணை!!!....

இதுவே தமிழ் பேசும் மக்கள் இனி வழங்க வேண்டிய ஆணை!.......

அதற்காகவே நாம் காத்திருக்கின்றோம் என்றார்.

Read more...

மாதத்திற்கு 1 லட்சம் ரூபாவை பிரத்தியேக வகுப்புக்காக பெற்ற விரிவுரையாளர். போட்டுடைக்கும் பிமல் ரத்னாயக்க

இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற குழு நிலைவிவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க, கடந்த 2 – 3 வருடங்களில் கல்விப் பொது தாராதரப் பரீட்சையில் இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஒருவர் பிரத்தியேக வகுப்புக்களினூடாகவே சித்தியடைந்துள்ளதாகவும், அவருக்கு இரசாயனவியலுக்காக பிரத்தியேக வகுப்பினை வழங்கிய பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வியடத்தை தனக்கு றுகுணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தாக கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில், இலங்கையிலுள்ள நடுதர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு மாதமொன்றுக்கு 12960 ரூபா பிரத்தியேக வகுப்புக்களுக்காக செலவிடப்படுகின்றது. அனால் இந்த நாட்டிலே வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களில் 10 வீதமானோரின் மாதாந்த வருமானம் 19000 ரூபாகவுள்ளது.

மேலும் இன்று வைத்திய மற்றும் பொறியில் பீடங்களுக்கு 70 வீதமான மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்தே செல்கின்றனர். அவர்கள் இன்றுள்ள பிரத்தியேக வகுப்புக்களுக்கு செலவிட்டு அந்த நிலையைய அடைகின்றனர். ஆனால் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு சவாலாகவுள்ளது.

எனவே நிதி ஒதுக்கீடு செய்யும்போது கல்விக்காக பெருமளவு பணம் ஒதுக்கப்படவேண்டியத்தை சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.

Read more...

அரசுடன் ஒத்துழைக்காவிடின், பயங்கரமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் - மக்களுக்கு விழிப்பூட்டும் சுமந்திரன்

தமிழ் மக்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், அரசுடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

விரும்பியோ, விரும்பாமலோ தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்வாறன்றி இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்களாயின், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற, யாரும் எதிர்பார்த்திராத சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

இந்த விடயத்தை புரிந்து கொண்டு, பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் அனைவரும் இந்த அரசுக்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை.

எங்கள் மக்களுக்கு ஆதரவாகவே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

போலி வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையம் முற்றுகை. இருவர் கைது! ஆவனங்கள் மீட்பு!

ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பொது மக்களை ஏமாற்றி, பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்று, சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் றோயல் பிளாசா வில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை நேற்று 14 ம் திகதி சுற்றிவளைத்த அதிகாரிகள் குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு களை கைது செய்துள்ளனர். இவர்கள் பொலன்னறுவை மற்றும் தலங்கம முதலான பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைக்கும் தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 13 வீசாக்கள் உள்ளிட்ட பத்திரங்கள் பல மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை நம்பி, பொதுமக்கள் பலர் பெருந்தொகையான பணத்தொகையை கொடுத்து, ஏமாந்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இடம்பிடித்து, இலங்கைக்கு பெயர் பெற்றுத்தந்த தமிழர்கள்.

சர்வதேச காவல்துறையான இன்டர்போல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இலங்கை தமிழர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில், இலங்கையின் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் எமில் காந்தனும் உள்ளடக்கின்றார். மொத்தமாக இந்த பட்டியலில் 14 இலங்கையர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் தழிழர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டவர்கள், இலங்கை காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறை அதிகாரிகளால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றவர்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டவர்கள் என, சர்வதேச காவல்துறையான இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.

Read more...

உலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்” (Untold story of a Woman Police)

போலீச Hero- வாகவும், வில்லனாகவும் மட்டுமே பாத்துகிட்டு / நெனச்சுக்கிட்டு இருக்க எல்லோருக்கும் நிச்சயம் இந்த குறும்படம் புது கண்ணோட்டத்தை கொடுக்கும். இந்த குறும்படம் பெண் காவலர்களின் ஒரு நாள் வாழ்க்கை.

பெண்களின் பாதுகாப்பையும், குற்றத் தடுப்பையும் பற்றியும் பேசும் காவல் துறையினர் முதலில் ‘காவல் துறையில்’ பணிபுரியும் பெண்களை பாதுகாப்பகவும் ஒழுக்கமாகவும் நடத்துகிறதா என்றால். நிச்சயம் இல்லை என்பதே பதில். இக்குறும்படம் உங்களுக்கு விளக்கும்.





Read more...

சினிமா பாணியில், தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட குடும்ப தலைவர், உயிருக்கு போராடுகிறார்

கொழும்பு - பிட்டகோட்டே பகுதியில் அமைந்துள்ள தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்னால், 62 வயதான குடும்ப தலைவர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குழுமியிருந்த மக்கள், தற்கொலைக்கு முயற்சித்த நபரை காப்பாற்றியுள்ளதுடன், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது எரிகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் நபருக்கு கொழும்பு தேசிய மருத்துசிவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வறுமை காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள், கந்துவட்டிக்கு பணம் பெற்று, அதனை மீள செலுத்தமுடியாத நிலையில் அருகிலுள்ள ஆளுநர் அலுவலகங்களுக்கு முன்னால் குடும்பத்துடன், தீவைத்து தற்கொலை செய்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com