Sunday, December 23, 2018

சப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..

யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான்.

உதயன் பத்திரிகையை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிரட்டி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று பாராளுமன்ற கதிரையை தட்டிப்பறித்துக்கொண்டிருக்கும் சரவணபவானுக்கு கூட்டமைப்பினுள்ளும் பலத்த எதரிர்ப்புக்கள் காணப்படுகின்றது.

அந்தவகையில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தனுக்கும் சரவணபாவானுக்குமிடையே நீண்ட காலமாக பனிப்போர் ஒன்று நிகழ்ந்து வருகின்றது.

தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென அவர்களின் வாக்குகளை அபகரித்து சுகபோகம் அனுபவிக்கும் மேற்படி உறுப்பினர்கள், மக்கள் சேவைக்கு பதிலாக தங்களுள் அடிபட்டு காலத்தையும் நேரத்தையும் போக்குகின்றமை தொடர்பில் மக்கள் தங்களது விசனத்தை வெளியிடுகின்றபோது, சயந்தன் தரப்பினர் இணையத்தளம் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

'சரவணபவன்- சயந்தன் மோதல் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. சரவணபவன் முகாமைத்துவத்தில் அங்கம் வகித்த ஷப்றா நிதி நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட குடும்பங்களில் சயந்தனின் குடும்பமும் ஒன்று.

சயந்தனின் பாட்டி தனது இறுதிக்காலத்தில் தனது பராமரிப்புச் செலவுகளுக்காக ஒருதொகைப் பணத்தை ஷப்றா நிதிநிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ளார். ஆனால் சிலவருடங்களிலேயே பலநூற்றுக்கணக்கான பொதுமக்களின் வைப்புப் பணத்தை முகாமைத்துவமும், பங்களரும் கபளீகரம் செய்து விட்டார்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல. தமது பெண்பிள்ளைகளின் திருமணத்திற்காக சீதனம் கொடுக்க பெற்றோரினால் சேமித்த பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதால் திருமணமாகாமலே ஏராளம் யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் இன்றும் முதிர்கன்னிகளாக உள்ளனர்.

சயந்தனது பாட்டி இறுதிவரை போராடியும் முகாமைத்துவம் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேயில்லை. தனது மரணச்செலவுக்காவது அந்தப்பணத்தை தனது பேரனான சயந்தனிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதிவிட்டு சயந்தனது பாட்டி இறந்துள்ளார். சயந்தன் தனது ஆதரவாளர் மத்தியில் இந்த விபரங்களை தெரிவிக்க அதனை யாரோ ஒருவர் சரவணபவனிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பமானதுதான் சரவணபவன்- சயந்தன் முறுகல்.'

அண்மையில் அராலிப்பகுதியில் குள்ளமனிதன் வருகிறான் என்று மக்களை பீதிக்குள்ளாக்கி அதில் அரசியல் இலாபம் தேட முனைந்த சரவணபவனின் பக்கா பிளானுக்கும் ஆப்படித்தவர் இந்த சயந்தன்தான் என்பது குறிப்பிடத்தக்கது“ என அந்த தகவல் குறிப்பிடுகிறது.



Read more...

ஊடக அத்துமீறல்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும். மீண்டும் ரணில் விக்கிரமசிங்க.

பொய் தகவல்களை வெளியிட்ட கறுப்பு ஊடகங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியிடுவதாகவும் ஜனவரி மாதம் நடைப்பெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக சட்டமூலம் ஒன்றை முன்வைக்க போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமித்தலின் போது வெளியிடப்பட்ட பெயர்பட்டியலில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்பட்டியல் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் (20) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் இவ்வாறு பெயர்பட்டிய்ல்களை வெளியிட்ட ஊடகங்கள் காசோலை ஒன்றை தயார் நிலையில் வைத்துக் கொள்வது நன்று எனவும் மேலும் தெரிவித்தார்.

விஜிதமுனி சொய்சா உட்பட சிலர் கபினட் அமைச்சரவை பெயர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பெயர்பட்டியல் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்படவில்லை எனவும் பொய் பிரச்சாரங்களின் முலம் இல்லாத பிரச்சினைகளை உருவாக்க ஒரு கூட்டம் முயற்சிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடு இவ்வாறு பொய் பிரச்சாரங்களை முன் வைக்கும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தான் வெளியிடுவதாக கூறினார். இத்தகைய ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது ஊடக சுதந்திரத்தை முடக்குவதாக அமையாது. வழங்கப்பட்டிருக்கும் ஊடக சுதந்திரத்தை தவறான வழிகளில் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என பிரதமர் அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்தார்.

Read more...

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31234 ஐ அடைந்துள்ளது. நிவாரணப் பொருட்களை சமமாக பங்கிடுமாறு கோரிக்கை.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற காலநிலைகாரணமாக 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில்

1021குடும்பங்களை சேர்ந்த 3589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில்

7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2556 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்

1068குடும்பங்களை சேர்ந்த 3613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

ஆனாலும் பெரும்பாலான உதவிகள் நகரை அண்மித்த நலன்புரி நிலையங்களையே சென்றடைவதாக குறைகூறப்படுகின்றது.
எனவே மேற்படி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வோர் பின்தங்கிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் கவனத்திலெடுக்குமாறு வேண்டுகின்றனர்.

அத்துடன் உதவிகளை வழங்குவோர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளை பெற்று அதற்கேற்றவாறு செயற்படுமாறு அந்நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.












Read more...

Saturday, December 22, 2018

அசர ஊடகங்களின் ஊழியர்களில் கை வைக்க வேண்டாம்! மங்களவிற்கு மைத்திரி அறிவுறுத்தல்.

புதிய அமைச்சு பதவியேற்றதன் பின்னர் அரச ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊழியர்களை இடமாற்றுதல் மற்றும் புதிய நியமனங்களை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அரச ஊடகங்களின் பதவிகளை எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க வேண்டாம் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர விற்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

அமைச்சருக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி இதுவரை எந்த அமைச்சுக்கும் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் எதுவும் இல்லாத நிலையில் புதிய நியமனங்களை வழங்கவே பதவியில் இருந்து விலக்கவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

லேக்கவுஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமித்தமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சி;க்கலின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் வர்த்தமானி அறிவித்தலின் போது லேக்கவுஸ் நிறுவனம் மற்றும் தேசிய ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்களை வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயங்கள் தெரியவந்தன.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்காக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளபோதும் சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இந்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த பிணைமுறி மோசடி தொடர்பாக தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படாதுள்ளமையால் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொய் சாட்சியளித்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் இந்த விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகளை அழித்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இதுவரை தாமதமடைந்திருப்பதுடன், அவர்களுக்கெதிராக விரைவாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் வகை கூற வேண்டியவர்களுக்குரிய விசாரணைகளை நிறைவு செய்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின்போது தெரியவந்த மற்றுமொரு முக்கியமான விடயம் இந்த வழக்குகள் தொடர்பான சட்ட திருத்தத்தில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவினால் இதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றியும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பாரிய நிதி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கினர்.

பிரதிவாதிகள் பயன்படுத்திய தொலைபேசிகளின் குரல் பதிவுகளில் இந்த விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த குரல் பதிவுகள் நிபுணர்களினால் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டறிவதற்காக இதுவரையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேற்படி விடயங்களின்படி மத்திய வங்கி பிணைமுறி நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு முடியாத வகையில் குறித்த நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது தெரியவந்துள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டு, இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் உரிய காலப்பகுதியில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தாமதமின்றி தடவியல் கணக்காய்வை ஆரம்பிப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு தடவை இந்த விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றை நடாத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. குறித்த விசாரணை நடவடிக்கைகளில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்தியவங்கி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பது நாட்டு மக்களின் நம்பிக்கையாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, மத்திய வங்கியின் பதில் கடமை புரியும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read more...

தன்னெழுச்சி கவனயீர்ப்பு போராட்ட த்தின் தீர்மானங்களும் கோரிக்கைகளும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் டிசம்பர் 18ம் திகதி முதல், முன்னெடுக்கப்பட்ட 'தன்னெழுச்சி உணவுத் தவிர்ப்பு போராட்டம்' மற்றும் டிசம்பர் 22ம் திகதி அதே இடத்தில் முன்னெடுக்கப்பட்ட 'தன்னெழுச்சி கவனயீர்ப்பு போராட்டம்' என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும், கோரிக்கைகளும்.

தற்காலிக நலன் கருதி செய்துக் கொள்ளப்படும் புது கூட்டு ஒப்பந்தத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

➢ தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 வேலை நாட்கள் உறுதி செய்யப்படல் வேண்டும்.

➢ ஊ. சே. நிதி, ஊ. ந. நிதி என்பன அடிப்படை சம்பளத்தில் இருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே கழிக்கப்பட வகை செய்தல் வேண்டும்.

➢ வேலைத் தளங்களில் ஏற்படும் சுகவீனம் (குளவிக் கொட்டுதல், காயங்கள், விபத்துக்கள்) விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

➢ பெண் தொழிலாளர்களின் நலன்கள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்பட ஆவண செய்தல் வேண்டும்.

➢ இயற்கை அனர்த்த காலங்களில் தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும், விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

➢ தொழிலாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப் படல் வேண்டும்.

➢ கழிப்பறைகள், முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் (தேயிலை மலைகள் உட்பட) வைக்கப்படல் வேண்டும்.

➢ சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்ல தொழில் நலன், உரிமைகள்சார் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

➢ சம்பள பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு தேவையற்ற சம்பள கழிவுகள் அகற்றப்படல் வேண்டும்.


ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும், ஒப்பந்த விடயம் : அரசாங்கமும் மூன்றாவது தரப்பாக கைச்சாத்திடப்படுவது கட்டாயமாகும்.

அத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் அதன் முழுமையான உள்ளடக்கம், கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தமிழ், சிங்கள மொழிகளில் நேரடியாகவும்

ஊடகங்கள் வாயிலாகவும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு கருத்தறிவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.

எதிர்காலத்தில்...

மலையக மக்களினதும், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களினதும் இருப்பு மற்றும், சுய பொருளாதார அபிவிருத்தி அரசியல் அபிலாசைகள் கருதி கூட்டுறவு தொழிற்துறையாக மாற்றியமைக்கப்பட்டு வாழ்வு பாதுகாப்பிற்கான வழி வகைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

மேற்கொண்ட விடயங்களை கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறை சாத்தியமாக்குமாறு மலையகத் தொழிலாளர் வர்க்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்விதமான அரசியல், தொழிற்சங்க, அமைப்புகள் மற்றும் குழுக்கள் சார்ந்து அல்லாமல் முற்றுமுழுதாக தன்னெழுச்சியாக இடம்பெற்ற இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கணேசன் உதயகுமார் (தலவாக்கலை தோட்டம்), கந்தய்யா அசோக் (ஹப்புத்தளை - பிட்டரத்மலை), கனகரத்தினம் ராஜா (பொகவந்தலாவை கெம்பியன்; தோட்டம்), வீரக்குமார் மனோஜ் (புசல்லாவ) ஆகிய நாங்கள் முன்னெடுக்கிறோம்.

எங்கள் கோரிக்கையை உரியத் தரப்பினர் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மனுவின் ஊடாக வலியுறுத்துகிறோம்.


கணேசன் உதயகுமார்
கந்தய்யா அசோக்
கனகரத்தினம் ராஜா
வீரக்குமார் மனோஜ்

Read more...

அமைச்சர், ராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர்களின் அதிகாரம். வை எல் எஸ் ஹமீட்

அமைச்சர்கள்

பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2) ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும்; என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விட குறைவாகவும் நியமிக்கலாம். எத்தனை அமைச்சர்கள் என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. தேவையெனக்கருதினால் பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்கவேண்டுமென்பதில்லை. சரத்து 43(1)

அதேபோன்று, அந்த அமைச்சர்களுக்குரிய அமைச்சுக்கள், அவற்றின் கீழ்வரும் நிறுவனங்களைத் தீர்மானிப்பது ஜனாதிபதியே. பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்க வேண்டுமென்பதில்லை. 43(1)

தான் விரும்பும் நேரம் இந்த அமைச்சர்களின் அமைச்சுக்களையோ அதன்கீழ் வரும் நிறுவனங்களையோ ஜனாதிபதி மாற்றலாம். அது ஜனாதிபதியின் அதிகாரம். 43(3) ஆனால் பிரதமர் முன்மொழிந்தாலேயொழிய ஜனாதிபதி அவர்களை நீக்கமுடியாது. 46(3)

அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க ஜனாதிபதியினுடையது. 52(1). இந்த செயலாளர்கள் அமைச்சர்களின் அறிவுறுத்தல், கட்டுப்பாட்டின்கீழேயே இயங்க வேண்டும். 52(2) ஜனாதிபதி ஒரு அமைச்சரை புறந்தள்ளி நேரடியாக செயலாளருக்கு உத்தரவு வழங்க முடியாது. அமைச்சின் முழுக்கட்டுப்பாடும் அமைச்சரிடமே இருக்கும். ஆனால் அமைச்சருக்குரிய அதிகாரம் தொடர்பான விடயதானங்கள் அனைத்தும் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் வழங்கப்படும்.

மொத்த அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பதில்கூற கடமைப்பட்டது. 42(2)

ராஜாங்க அமைச்சர்கள்

‘ராஜாங்க அமைச்சர்’ என்ற சொல் யாப்பில் இல்லை. ‘அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்’ என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ‘ ராஜாங்க அமைச்சர் ‘ என்ற சொல் நடைமுறையில் உள்ளதால் அச்சொல்லே இக்கட்டுரையில் பாவிக்கப்படுகின்றது.

இவர்களை நியமிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. நியமிப்பதாயின் பிரதமர் முன்மொழிகின்றவர்களையே நியமிக்க வேண்டும். 44(1). நீக்க வேண்டும்.

இவர்களுடைய அதிகாரம்

இவர்களுக்கு தனியாக அதிகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம். அதிகாரம் வழங்குவதாயின் இருவகையாக வழங்கலாம். ஒன்று ஜனாதிபதி நேரடியாக வர்த்தமானி மூலம் வழங்குவது அல்லது உரிய அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்குவது

ஜனாதிபதி அதிகாரம் வழங்குவது

ஜனாதிபதி தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசித்து இவர்களுக்கு அமைச்சர்களுக்கு வழங்குவதுபோன்று தனியான அமைச்சு வழங்கலாம். அல்லது அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை மட்டும் வழங்கலாம். 44(2) அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்களில் அவர்கள் ஒரு முழுமையான அமைச்சரைப்போன்று செயற்படலாம். இவர்கள் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். 44(4)

அமைச்சர் அதிகாரம் வழங்குவது

சம்பந்தப்பட்ட அமைச்சர் தனக்குக் கீழ்வரும் அமைச்சு, மற்றும் விடயதானங்கள் தொடர்பாக வர்த்தமானிமூலம் அதிகாரம் வழங்கலாம். 44(5)

இவர்களுக்கு ஜனாதிபதியோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ இவ்வாறு அதிகாரம் வழங்கவேண்டுமென எந்தக்கட்டாயமுமில்லை.

பிரதியமைச்சர்கள்

இவர்களும் பிரதமரின் சிபாரிசின்பேரிலேயே நியமிக்கப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு ஜனாதிபதி நேரடியாக அதிகாரம் வழங்குவதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்கலாம்.

கடந்தகாலங்களில் சில சந்தர்பங்களில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சுக்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அதற்காக எப்போதும் அவ்வாறு இல்லை.

தற்போது இவர்களுக்கு தனியான அமைச்சோ, அதிகாரங்களோ வழங்கப்படுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் ராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் நடைமுறையில் எதுவித வித்தியாசமுமில்லை.

இதனுடைய பொருள் அதிகாரம் வழங்காவிட்டால் எதுவும் செய்யமுடியாதென்பதல்ல. உரிய அமைச்சர்களை அணுகி எவ்வளவோ சாதிக்கலாம். அது அவரவர் திறமையைப் பொறுத்தது.

Read more...

கிளிநொச்சியில் கடும் மழை வெள்ளத்தில் மூழ்கியது பல கிராமங்கள் மீட்பு பணியில் இராணுவத்தினர்

கிளிநொச்சியில் நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் இறக்கப்பட்டு மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு ,படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமை மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.












Read more...

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்! அரச ஊடகங்களை ஜனாதிபதியின் மேற்பார்வையயின் கீழ் கொண்டு வருக!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அரச ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாளர்களும் புதிய தலைவர்களும் தான்தோன்றி தனமாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி ஊடக சுதந்திரத்தை முடக்கும் வண்ணம் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர் என்றும் இதனால் அரச ஊடகங்களை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கௌரவ ஜனாதிபதி அவர்களே

புதிய ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் நியமிக்கப்பட்ட லேக்கவுஸ் புதிய தலைவரான கிரிசாந்த குறே கடந்த 2018-12-20ம் திகதி தினமின ஆசிரியர் சீ.ஜி.அமரதுங்க அவர்களை திட்டி மிரட்டியதாக எங்களிடம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

உடனடியாக நீ பதவியை விட்டு விலக வேண்டு;ம் என தினமின ஆசிரியர்கள் குழாம் முன்னிலையில் குறித்த ஆசிரியரை திட்டி மிரட்டி உள்ளார். குறித்த பத்திரிகை ஆசிரியர் எந்த கட்சியை சேர்ந்தவர் ஆயினும் எந்த கட்சியின் கொள்கையின் அடிப்படையி;ல் செயற்பட்டாலும் இவ்வாறு புதிய லேக்கவுஸ் தலைவர் மிரட்டியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஊடக சுதந்திரததைப் பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் கருத்துக்களை முன் வைக்கும் பிரதமர் அவர்களும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் புதிய லேக்கவுஸ் தலைவரின் இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளை அனுமதிக்கின்றனரா என்ற கேள்வியை முன்வைக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் சமிகர வீரசிங்க அவர்களையும் சிலுமின பத்திரிகை ஆசிரியர் சுனில் ஜயசேகர அவர்களையும் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு மிரட்டியுள்ளதாக எம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு புதிய லேக்கவுஸ் தலைவரால் லேக்கவுஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதும் பழிவாங்கல் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்றதன் பின் ஐக்கிய தேசிய கட்சியினரிhல் முன்வைக்கப்பட்ட் ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் வெறும் வாய் வார்த்தை மட்டும் தான். நடைமுறையில் இச் சொற்களுக்கு இவ்அரசாங்கத்தில் எவ்வித பயனும் இல்லை என புதிய லேக்கவுஸ் தலைவரின் நடவடிக்கைகள் புலப்படுத்தியுள்ளது.

லேக்கவுஸ் தலைவரின் செயற்பாடுகளை போல ஏனைய அரச ஊடகங்களின் தலைவர்களினதும் செயற்பாடுகளும் அமையலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே லேக்கவுஸ் உட்பட ஏனைய அரச ஊடகங்களையும் தங்களின் கீழ் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

என ஊடவியலாளலர் சந்தன பண்டாரா அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

Read more...

Friday, December 21, 2018

ஐந்தறிவுள்ள நாய்க்கும் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சியா? பீமன்

கடந்த மாதம் மட்டக்களப்பில் இரு பொலிஸாரில் ஒருவர் அரைநித்திரையிலும் ஒருவர் கடமையிலும் இருந்தபோது கோழைத்தனமாக கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை உறுப்பினனான அஜந்தன் என்பவனின் மனைவி ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது கணவனை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணா விரதமொன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விபச்சாரிகள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசுவதாக கொலையை அரசியலாக்கியிருந்தமையையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது. அதேநேரம் இரு அப்பாவி இளைஞர்கள் கண்மூடி திறப்பதற்குள் எவ்வித காரணங்களும் இன்றி தீய நோக்குடன் கொல்லப்பட்டமையின் பின்னணி, அது இலங்கையின் எதிர்காலத்திற்கு உருவாக்ககூடிய அச்சுறுத்தல் தொடர்பாக எவ்வித கரிசனையும் அற்றோர் "கைது செய்யப்பட்டுள்ளோர் வெறும் அப்பாவிகள்" என்ற பொறுப்புணர்வற்ர கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதையும் காண முடிகின்றது.

இக்கருத்துக்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளோர் போதிய ஆதாரம் இன்றித்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதை அறியும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனருடன் பேசியதிலிருந்து குறித்த நபர்கள் எழுந்தமானமாக கைது செய்யப்படவில்லை என்ற ஒரே ஒரு தகவலை மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும். கொலை இடம்பெற்ற சுற்றுவட்டத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு பையும் ஜக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பையையும் ஜக்கட்டையும் பின்தொடர்ந்து சென்ற மோப்பநாயின் அடையாளம் காட்டலுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சம்பவம் இடம்பெற்ற சுற்றுவட்டத்திலுள்ளவர்களும் அஜந்தனின் கிராமத்தவர்களும் நன்கறிவர். ஆனாலும், மோப்ப நாயின் அடையாளம் காட்டுதலில்தான் அவன் கைது செய்யப்பட்டான் என்பதை நன்கறிந்திருந்த ஊடகங்களோ அன்றில் சமூகவலைத்தளத்தினரோ இந்த நியாயமான கைதின் பின்னணியை வெளிப்படுத்தாமை அவர்களது நயவஞ்சகத்தனத்தை காண்பிக்கின்றது.

இவ்விரு கொலைகளும் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் உணரவேண்டும். வெளிப்படையாக சொல்வதானால்: இனவாதத்தையும் யுத்தத்தையும் வைத்து சுகபோகமும் ராஜயோகமும் அனுபவிக்க விரும்பும் தரப்புக்களின் கூட்டுச்சதியே இக்கொலையாகும். இன்னும் தெளிவாக சொல்வதானால் தெற்கிலே ஒரு தரப்பிற்கு மீண்டும் இலங்கையிலே புலிப்படை அல்லது புலிசார் வன்செயல் தேவைப்படுகின்றது மறுபுறத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் புலம்பெயர் புலி எச்சங்களுக்கும் தாங்கள் செயற்பாட்டில் உள்ளோம் என புலம்பெயர் தேசமெங்கும் தமது பைகளை நிரப்ப இலங்கையில் யுத்தம் தேவைப்படுகின்றது.

மேற்குறித்த இரு தரப்பினரதும் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் புலிகள் கூலிப்படையாக செயற்படுகின்றனர். இக்கூலிப்படைகள் இரண்டு அப்பாவி உயிர்களை பலியெடுத்திருக்கின்றார்கள். அந்த அப்பாவி உயிர்கள் தொடர்பாக அடிமனதிலிருந்து எவரும் கவலை வெளியிடுவதாக இல்லை மாறாக கொலைஞர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

முள்ளிவாய்காலில் பிரபாகரன் மண்டியிட்டதன் பின்னர் புலிகளின் ஒரு தொகுதியினர் எவ்வாறு இலங்கை இராணுவத்தினருக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் கூலிப்படையாக செயற்படுகின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஊதியம் பெறும் புலிகள்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்தபோது தமது தேவைகளுக்காக பயன்படக்கூடியவர்கள் என படையினர் இனம்கண்ட சிலரை இன்றும் குறித்த அரசியல்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க கடந்த காலங்களில் பகிரங்க மேடைகளில் தெரிவித்த விடயங்கள் பிரதானமானவை. சம்பிக்க ரணவக்க பகிரங்க மேடை ஒன்றில் பேசும்போது இவ்வாறு கூறினார்:

" புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதிகளான ராம் , நகுலன் போன்றோருக்கு கோத்தபாய ராஜபக்ச பாதுபாப்பு அமைச்சின் நிதியத்திலிருந்து மாதந்தம் ஊதியம் வழங்கினார். கிழக்கில் எமது குழந்தை தேரர்களை கொன்ற கொலைகாரர்களுக்கு நாம் பணம் வழங்குவது எவ்வாறு நியாமாகும் என்பதை நான் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன், அப்போது மஹிந்த கூறினார், அவர்கள் எமக்கு கிழக்கில் தேர்தல்காலங்களில் உதவுவார்கள் அதற்காக நாம் அவர்களை பயன்படுத்தவுள்ளோம் என்றார். அவ்வாறே வடக்கிலும் முன்னாள் புலிகளுக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து நிதி வழங்குகின்றனர். மறுபுறத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு அமைச்சினூடாக அவர்களுக்கு தொழில்களை வழங்கி சம்பளம் வழங்குகின்றனர். இது தொடர்பாகவும் மஹிந்தவுடன் பேசியபோது, அவர்கள் வடக்கில் தேர்தல்வரும்போது எமக்கு வேலை செய்வார்கள் என்றார் மஹிந்த"

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் போலிப்புலிகள் அமைப்பு

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறானதோர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ளவர்களை புலனாய்வுப் பிரிவினர் இனம்கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

அத்துடன் எமது அதிகாரிகள் மேற்படி போலிப்புலிகள் அமைப்பை வைத்து கண்டறிந்தவற்றை பாதுகாப்பு சபைக்கு அறிக்கையிட்டனர். தூரதிஷ்டவசமாக பாதுகாப்பு சபையிலிருந்த யாரோ ஒருவர் ஊடாக மேற்படி போலிப்புலிகள் அமைப்பை இயக்கிய எமது புலனாய்வுத்துறை அதிகாரிகளின் விபரங்கள் பத்திரிகைக்காரர்களது கைகளில் கிடைக்கப்பெற்று அவை பிரசுரமாகியுள்ளதன் ஊடாக அந்த அதிகாரிகளின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கவலை தெரிவித்திருந்தார்.

சம்பிக்க மற்றும் வீரவன்ச ஆகியோரது வெளிப்படுத்தல்களிலிருந்து புலிகள் எவ்வாறான கூலிப்படைகள் என்பதையும் அவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த குற்றச்செயல்களையும் புரிந்துவிடுவார்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். புலிகள் அமைப்பு அதன் வரலாறு முழுவதும் கூலிப்படையாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. யாழ்பாணத்தில் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து கொழும்பில் லலித் அத்துலத்முதலி இந்தியாவில் ரஜீவ் காந்தி என புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொலையையும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பது நிருபணமகியுள்ளபோதும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுப்பது பேராபத்தானது. புலிகள் பேசுகின்ற விடுதலைப்போராட்டம் தமிழ் தேசியம், தமிழ் உணர்வு என்பன வெறும் போர்வையாகும். தமிழ் மக்கள் இந்த உண்மைகளை ஏற்க மறுக்கும் வரை புலிகளும் புலிசார் பினாமிகளும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டே இருப்பர்.

புலம் பெயர் புலிகளுக்கான கூலிப்படை

புலம்பெயர் புலிகளின் கட்டமைப்பில் 2002 ல் தான் வெடிப்பு விழுந்தது. ஆனாலும் புலிகளின் தலைமையகம் வன்னியில் பலமாக இருந்ததனால் அவர்கள் வெடிப்புக்களை பிளவு நிலைக்கு செல்லாமல் இரும்புக்கரம்கொண்டு அடக்கி காத்தார்கள். 2009 மே க்கு பின்னர் உள்ளிருந்த ஒவ்வொரு வெடிப்பும் நிரந்தரமானது பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதல் ஒன்றும் கொள்கை ரீதியானது அல்ல ஒவ்வொரு தரப்பிடமுமிருந்த மக்கள் சொத்தை எவ்வாறு தங்கள் பைகளுக்குள் அமுக்குவது என்பதில்தான்.

மக்களின் சொத்தை முழுசாக விழுங்கி உழைக்காமல் இத்தனை சொத்துசேர்த்தவர்களுக்கு அந்த ருசி விடவில்லை. தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் எவ்வாறு பிடுங்கலாம் என்ற வியூகங்களைத்தான் வகுத்தார்கள். அதற்காக போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல்கொடுத்தல், நாட்டிலுள்ள முன்னாள் புலிகளுக்கு உதவுதல் போன்ற போலித் திட்டங்களை வகுத்தார்கள். இத்திட்டங்களைக் காட்டி இலங்கைலுள்ள முன்னாள் புலிகளை வளைத்துப்போட்டார்கள்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு புலிகள் இன்னும் உள்ளார்கள் எனக் காண்பித்து அவர்களிடமிருந்து தொடர்ந்தும் பணம் பறிப்பதற்குமான திட்டத்துடனே இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இதன் பிரகாரமே இலங்கையிலுள்ள முன்னாள் புலிகளுக்கு பணத்தினை கொடுத்து பல்வேறுபட்ட தீய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவித்தல், அசாதாரண நிலைமைகளை ஆங்காங்கே உருவாக்கல், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் அமைப்புக்களை உருவாக்கி செயற்படுதல். அதனூடாக புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் உள்ளதாக புலம்பெயர் தமிழரின் காதில் பூ சூடுதல் போன்றனவே அந்த செயற்பாடுகள்.

புலம்பெயர் தேசத்தில் புலனாய்வு முகமூடிகள்.

இது இலங்கையில் செயற்பட்ட ஆழ ஊடுருவும் படையணியிலும் ஆபத்தான கட்டமைப்பு. யார் ? எங்கு ? எந்த வேஷத்திலிருக்கின்றார்கள் என்பது அவர் அவர்களுக்கு மாத்திரமே தெரியும். 2009 மே யில் சரணடைந்தவர்கள்தான் இன்று அவ்வாறு புலம்பெயர் தேசமெங்கும் ஆழ ஊடுருவியிருக்கின்றார்கள்.

இது எவ்வாறு சாத்தியம் என்று யாரும் கேட்கலாம். முக்கிய புள்ளிகள் பலர் 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் மிதந்தனர். எவ்வாறு இவர்கள் வெளியே வந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் இராணுத்தினருக்கு ஐப்பது லட்சத்திலிருந்து 1 கோடி ரூபா வரை பணம் கொடுத்து வந்தார்களாம் என்று சொல்லப்படுகின்றது. இங்குதான் அந்த சமாச்சாரமே இருக்கின்றது, இலங்கை இராணுவக் கட்டமைப்பு 2009 இல் அவ்வளவு ஓட்டைகள் உள்ள கட்டமைப்பாக இருக்கவில்லை. சிலவேளைகளில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை அவ்வாறிருந்திருக்கலாம். ஆனால் 2009 மே யில் புலனாய்வுத்துறை அவ்வாறானதோர் ஓட்டையை உருவாக்கியது. பணம் படைத்தவர்கள் ஒருசிலரை பணம்வாங்கிக்கொண்டு விடுவதுபோல் பாசாங்கு செய்து விடுவித்ததுடன் அதே ஓட்டையினூடு அதேவேஷத்துடன் தங்களது முகமூடிகளையும் அவ்வாறே விட்டுவிட்டது. அத்துடன் புனர்வாழ்வின் பின்னரும் விசுவாசிகள் சிலரை அனுப்பி தனது முகமூடிப்படையணியை புலம்பெயர் தேசத்தில் பலப்படுத்தி கொண்டுள்ளது.

தற்போது இவர்கள் பல்வேறு பணிகளை செய்கின்றனர். புலம்பெயர் தேசத்திலுள்ள புலிசெயற்பாட்டாளர்களை இனம்காணுதல், நாட்டிலுள்ள புலிச்செயற்பாட்டுக்கு தயாரானவர்களை இனம் காணுதல், அவர்களை கொண்டு தமது ஏஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் என்பனவே அவர்களது பிரதான பணி. (மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டைக்கொலையும் அவ்வாறானதாக இருக்கலாம்)

இவ்வாறானதோர் சூழ்நிலையில் புலம்பெயர் தேசத்திலிருந்து வருகின்ற கொந்தராத்துக்களை நிறைவேற்றுபவர்களின் நிலைமை கைத்தீன் போட்டு வளர்க்கப்படுகின்ற சேவலின் கதையாக முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

கையாலாகா காவல்துறை.

2009 ல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 2015 தை மாதம் எட்டாம் திகதி வரை பயங்கரவாதிகளின் மீள்எழுகை அன்றில் ஒருங்கிணைவு தொடர்பாக எந்த கேள்வியும் இருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஆனாலும் 2015 தை மாதம் எட்டாம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வோருக்கான தளத்தை வழங்கவில்லை என்று வாதிடமுடியாது. உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம் புலிகளின் அநியாயங்களை நியாயப்படுத்துவதற்கும், பேச்சு சுதந்திரம் மீண்டும் புலிகள் ஒன்றுகூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுப்பதற்கும் , எழுத்துச் சுதந்திரம் புலிகளின் புகழ் பாடுவதற்கும் , ஒன்றுகூடும் சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் பயன்பட்டது.

மேற்படி செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை கொடுக்கும் என்றும் இச்செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாயவேண்டும் என்றும் காவல்துறையினரை கேட்டபோது அவர்கள் அச்சட்டத்தை பயன்படுத்த முடியாதவர்களாக அரசியல்வாதிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு நின்றனர். மைத்திரபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கான கைமாறாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு கட்டுப்போடப்பட்டுள்ளது.

கிட்லரின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தம்பதியினருக்கு சிறைத்தண்டனை.


உலகிலே பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகள் பொதுவான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை.

அண்மையில் பிரித்தானியாவில் தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லரின் பெயரை வைத்த தம்பதியினரில் மனைவிக்கு 5 ஆண்டுகளும் கணவனுக்கு 6 ஆண்டுகளும் சிறைவிதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த கிட்லரை மேற்குல நாடுகள் இன்றும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாகவே பார்கின்றனர். அவர் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் உருவாவது அல்லது அவரை நினைவு கூறுவது கிட்லரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமையும் எனக் கருதும் அவ்வரசுகள் கிட்லர் சார்பு அமைப்புக்கள் யாவற்றையும் தடை செய்து மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகின்றது. அந்த வரிசையில் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லர் என்ற பெயரை சூட்டியமைக்காகவே தம்பதியினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறான நடைமுறையை செயற்படுத்துவதற்கு இலங்கை பொலிஸாருக்கு போதியளவு சட்டத்தில் அனுமதி உள்ளபோதும், அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் அனுமதியை நாடி நிற்பார்களாயின் பயங்கரவாதத்தை ஒருபோதும் துடைத்தெறிய முடியாது.

கொலை மிரட்டல்

கனடாவிலுள்ள வானொலி ஒன்றிற்கு தகவல் வழங்கிய அஜந்தனின் மனைவி ஒருசில நாட்களில் தனது கணவன் விடுதலை செய்யப்படாவிட்டால், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் ஒருவர் தற்கொலை செய்து இறந்துவிட்டால் அத்துடன் அந்த கதை முடிகின்றது. உயிர் தப்பினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அதற்கு அப்பாலும் இங்குள்ள பாரதூரமான விடயம் யாதெனில் அவர் நான்கு சிறார்களை கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றார். எனவே உயிராபத்துக்குள்ளாகி நிற்கும் சிறார்களை முதலில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தாயிடமிருந்து பிரித்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், தாய் இலங்கை பிரஜையாக நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவர் அதற்கு கட்டுப்பட மறுத்தால் அதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதன் ஊடாகவே நற்பிரஜைகள் உள்ள நாடு ஒன்றை எம்மால் காண முடியும்.


Read more...

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் மோதல். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜினாமா!

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்று அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் இன்று அதிரடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை கொள்கைகளை கையாள்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், மதிக்கப்படுபவருமாக ஜேம்ஸ் மேட்டிஸ் கருதப்பட்டார்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதிபர் ட்ரம்பின் பலவேறுவிதமான கொள்கைகளுடன் முரண்பட்ட நிலையில் மேட்டிஸ் இருந்துவந்தார். இந்நிலையில், உச்சக்கட்டமாக சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் மேட்டிஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ராஜினாமா கடிதத்தை அதிபர் ட்ரம்பிடம் அளித்தபோதிலும்கூட, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.

தனது ராஜினாமா கடிதத்தில் அமைச்சர் மேட்டிஸ் கூறுகையில் “ நான் எனது பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். ஏனென்றால் அதிபர் ட்ரம்ப்தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கச் சரியானவர்.

என்னுடைய பதவிக்காலம் 2019, பிப்ரவரி 28-ம் தேதி வரை இருக்கிறது. அதுவரை நான் பதவியில் இருக்கிறேன். பாதுகாப்புத் துறைக்கு தகுதிவாய்ந்த நபரை தேர்வு செய்யும் வரை, பாதுகாப்புத்துறையின் நலனுக்காக நான் நீடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதால் அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு காரணமாக தான் பதவி விலகுகிறேன் என்று அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

ஆனால், சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்ற அதிபர் ட்ரம்பின் உத்தரவு என்பது, சிரியாவில் இருக்கும் பஷார் அல் அசாத் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும், அமெரிக்க எதிரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மேட்டிஸின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்டபின் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில் “ பாதுகாப்புத் துறை அமைச்சர் மேட்டிஸ் பிப்ரவரி மாதம் பதவி விலகுகிறார். கருத்துவேறுபாட்டுடன் அவர் பதவியில் இருந்து செல்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய அரசியல் மேட்டிஸ் பணியாற்றியுள்ளார். அவரின் பதவிக்காலத்தில் பாதுகாப்புத்துறை பல்வேறு வளர்ச்சி அடைந்தது, குறிப்பாக புதிய விமானங்கள் கொள்முதல் சிறப்பாக இருந்து. விரைவில் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் ” எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்தியா, அமெரிக்கா நட்புறவு சிறப்பாக அமைவதற்கு மேட்டிஸ் முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் 2-வது முக்கிய நிர்வாகி மேட்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவியேற்றனர். விஜயகலா வுக்கு கல்வி!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

இங்கு யாவரையும் அதிர்சிக்குள்ளாக்கும் வகையில் விஜயகலா மகேஸ்வரன் கல்வி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

அதன்படி புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு,

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக ஹர்ஷ டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பஅமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக அஜித் பி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள்

ரஞ்சன் ராமநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

ஜே. சி. அலவத்துவள - உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

எரான் விக்ரமரத்ன - நிதி இராஜாங்க அமைச்சர்

அலி சாஹிர் மௌலானா - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

விஜயகலா மகேஸ்வரன் - கல்வி இராஜாங்க அமைச்சர்

நிரோஷன் பெரேரா - தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சர்

பைசல் காசிம் - சுகாதார இராஜாங்க அமைச்சர்

அமீர் அலி - விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

புத்திக பத்திரண - தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்

நளின் பண்டார - சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர்.


Non-Cabinet Ministers:

Dr Harsha de Silva - Minister of Economic Reforms and Public Distribution (non-Cabinet)
Ajith P. Perera - Minister of Digital Infrastructure and Information Technology (non-Cabinet)
Sujeewa Senasinghe - Minister of Science, Technology and Research (non-Cabinet)

State Ministers:

Eran Wickramaratne - State Minister of Finance
Vijayakala Maheswaran - State Minister of Education
J.C. Alawathuwala - State Minister of Internal and Home Affairs and Local Government and Provincial Councils
Ranjan Ramanayake - State Minister of Highways and Road Development
Ali Zahir Moulana - State Minister of Social Empowerment
Ruwan Wijewardena - State Minister of Defence
Ranjith Aluwihare - State Minister of Tourism Development
Wasantha Aluwihare - State Minister of Agriculture, Irrigation and Rural Economic Affairs
Lucky Jayawardena - State Minister of Town Planning and Water Supply
Niroshan Perera - State Minister of National Policies and Economic Affairs
Champika Premadasa - State Minister of Power and Renewable Energy
Ashoka Abeysinghe - State Minister of Transport and Civil Aviation
Faizal Cassim - Health Nutrition and Indigenous Medicine
H.M.M. Harees - State Minister of Provincial Councils and Local Government
Ameer Ali - State Minister of Agriculture, Irrigation and Rural Economic Affairs
Dilip Wedaarachchi - State Minister of Fisheries and Aquatic Resources Development
Vadivel Suresh - State Minister of Plantation Industries

Deputy Ministers:

Buddhika Pathirana - Deputy Minister of Industry and Commerce
Nalin Bandara - Deputy Minister of Development Strategies and International Trade
Anoma Gamage - Deputy Minister of Petroleum Resources Development
Edward Gunasekara - Deputy Minister of Lands and Parliamentary Reforms
Ajith Mannapperuma - Deputy Minister of Environment
Karunaratna Paranavithana - Deputy Minister of Skills Development and Vocational Training
Palitha Thewaraperuma - Deputy Minister of Social Empowerment



Read more...

இடைக்கால கணகறிக்கையில் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. ஜேவிபி காட்டம்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் பாராளுமன்றத்திற்கு இன்று (21) சமர்ப்பித்த இடைக்கால கணக்கு அறிக்கை அதிக வாக்குகளால் நிறைவேறியது. ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக வாக்களித்துள்ளது.

ம.வி. மு தலைவர் அனுர திசாநாயக்க அவர்கள் இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகிய காரணங்களுக்கு மறைந்துக்கொண்டு நான்கு மாதத்திற்கான நிதி ஒதுக்கிடு செய்யப்பட்ட போதிலும் அதற்குப் புறம்பாக பெரும் தொகையான பணம் இதனுடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

விசேடமாக ஜனாதிபதிக்காக 5565 மில்லியன் ரூபாய் பெரும்தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கோ, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கோ இதன் மூலமாக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தமது கட்சி இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐதேக அரசாங்கத்தினால் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்ப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அவர்கள் உத்தியோகப்பூர்வமாக அதரவு தெரிப்பதாக தெரிவித்தார். ஆனால் வாக்கெடுப்பு நடைபெறும்போது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சபையிலிருந்து வெளியேறியிருந்தது.

எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை இன்று (21) மாலை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம் 2019ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்காக அரச செலவாக 1765 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அதில் 970 பில்லியன் ரூபாய் கடன் சேவைக்காக(வட்டியும் தவணையும்) செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 2019 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான செலவில் 55% கடன் மற்றும் வட்டியும் தவணையையும் செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையின் மூலமாக மீண்டெழும் செலவாக 480 பில்லியனும் மூலதன செலவுக்காக 310 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

Read more...

இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவவின் இடமாற்றத்தை தடுத்து நிறுத்தினார் மைத்திரபால சிறிசேன.

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மிக சிறந்த அதிகாரியாக அறியப்படுபவர் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ. இவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகளுடன் தொடர்பு பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் நீண்ட காலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

விளக்க மறியலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்த வேறோர் பிரிவிற்கு இடமாற்றுவதற்கு பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவவின் சேவை போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தேவையானது என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டதாக அறியக்கிடைக்கின்றது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக காணப்படும் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவ, போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றை சுற்றி வளைத்தபோது அந்த வியாபாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து குணமடைந்தவராகும். இதன் பின்னர் இவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டால் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அஞ்சமும் நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நாம் எதிர்கட்சியில் இருக்கும் வரை அதிக எதிர்பார்ப்புக்களை வைத்திருக்க வேண்டாம். அரசிற்கு மஹிந்த

ஐக்கிய மக்கள் முன்னனி கூட்டமைப்பாகிய நாங்கள் எதிர் கட்சியில் உள்ளவரை ஆட்சி நடாத்துவது தொடர்பாக அதிக எதிர்பாரப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2019 ம் ஆண்டில் முதல் நான்கு மாதத்திற்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்திம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்க்ப்பட்டது. அதன் போது இடம் பெற்ற விவாதத்தின் போதே ராஜபக்ஷ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்:

2019ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களின் போது கருத்துக்களை முன்வைப்பேன். பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொமுது நாம் சூழ்ச்சி செய்தே ஆட்சி அமைத்தோம் எனக் குறிப்பிட்டார். ஆனால் நாம் அவர் கூறியது போல் ஆட்சி அமைக்கவில்லை. நாம் எதிர்கட்சியினராக உள்ளவரை ஆளும் கட்சி ஆசனத்தின் மீது அதிக எதிர்பார்ப்புக்களை வைக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாரதாரம் தொடர்டபாக நான் கபினட் அமைச்சரவைக்கு மனு ஒன்றை முன்வைத்துள்ளேன். நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் வீழ்சியடைந்த நிலையில் வியாபாரிகள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர். வேலையற்றோர் வீதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையிலேயே அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்றோம். எங்கள் அரசாங்கத்தை நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட விடவும் இல்லை. வரி அறவிட்டு தங்களது கஜனாவை நிரப்புவதை தடுக்கவே நாம் ஆட்சியை ஏற்றவுடன் விலைகளை குறைத்தோம். இன்று பிரதமர் கனிய எண்ணெயின் விலையை குறைக்க முடியுமெனில் நான் ஆட்சியை ஏற்று குறைக்க முன்னர் விலை குறைத்திருக்கலாம்.

நாங்கள் விலை குறைத்தோம். வற் வரியை குறைத்தோம். நாங்கள் மக்களின் நன்மையை பற்றியே அதிகமாக யோசித்தோம். ஒரு வேளை கூட உணவு இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். இவர்களைப் பற்றி அக்கறை செலுத்துமாறு காதினல் பாதிரியார் அவர்கள் நத்தர் தின செய்தியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்திற்கே அதிக பொறுப்பு உண்டு. எல்லாச் செயற்பாடுகளிலும் மக்களைப் பற்றியே அதிக அக்கறை செலுத்தல் வேண்டும். நாட்டு மக்களுக்கு வாழ வழியில்லாமல் உள்ளது.

இந்நிலையை மாற்றி அமைக்கும் பொறுப்பு ஆட்சியாளர்களிடமே உள்ளது. இதைப் பற்றி நான் இதற்கு மேல் பேசப்போவதில்லை. நாம் அன்று ஆட்சியை பொறுப்பேற்றிருக்காவிடின் கீரிஸ் நாட்டிற்கு ஏற்ப்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ச.

Read more...

மலையக இளைஞர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முழுமையான ஆதரவு

மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000/= ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மலையக இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் இளைஞர்களுக்கு மன தைரியத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும, சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சங்க பிரதிநிதிகள் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள். 200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்றார்கள். ஆனால் இந்நாட்டை 70 வருடங்களாக ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் மற்றும் மலையக அரசியல் கட்சிகள் இம்மக்களின் வாக்கை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். அத்துடன் அம்மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபா கோரிக்கையானது நியாயமான கோரிக்கை ஆகும். காலம் காலமாக அரசியல் கட்சிகள் முதலில் போராட்டங்களை ஆரம்பித்து பின்பு முதலாளி வர்க்கத்துடன் கைகோர்த்து தொழிலாளர்கள் காட்டி கொடுக்கப்படுவது வழமையாக காணப்பட்டது. ஆனால் இம்முறை இளைஞர்கள் போராட்டத்தை தம் கையில் எடுத்துதிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இந்நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவம் கொடுக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு எதிர்வரும் காலங்களில் அனைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் இப்போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.








Read more...

பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி கேட்டு மைத்திரியிடம் சென்ற ரணில். பொன்சேகா நீதிமன்றுக்கு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அமைச்சரவைக்கு 35 பேர் கொண்ட பட்டியல் ஒன்று சிபார்சு செய்யப்பட்டபோதிலும், பட்டியலிலுள்ள ஆறுபேரை தவிர்த்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனங்களை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு நேரடியாகச் சென்ற ரணில் விக்கிரமசிங்க பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஒரு மணி நேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ராஜித சேனாரட்ண , ரஞ்சித் மத்தும பாண்டார மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி பட்டியலிலிருந்து சரத் பொன்சேகா , பாலித்த ரங்க பாண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து அரசுக்கு ஆதரவு வழங்க முன்னவந்த நான்கு பேரது பெயர்களே நீக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க மேற்படி நபர்கள் ஜனாதிபதி அரசியல் யாப்புக்கு எதிராக தனது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தங்களுக்கு அமைச்சுப்பதவிகளை தர மறுக்கின்றார் என நீதிமன்று செல்ல முயற்சிப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

Read more...

கௌரவமாக எதிர்கட்சித் தலைவர் பதவியை எம்மிடம் ஒப்படையுங்கள். சம்பந்தனுக்கு மஹிந்த சமரசிங்க

பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களே காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 98 உறுப்பினர்கள் உள்ளனர். இரா.சம்பந்தன் நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் கௌரவமான அதனை எம்மிடம் ஒப்படைத்துச் செல்வதே சிறந்ததாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த சமர சிங்க உள்ளிட்ட ஐவர் அமைச்சரவை அமைச்சுப்பதவியினை பெறுக்கொள்ள முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்கட்சி தலைவர் இருவர் இருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். அதிலும் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 98 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டமைப்பு முயற்சித்தாலும் அந்த எண்ணிக்கையை எட்ட முடியாது.

நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் தம்மிடம் எதிர்கட்சி பதவி வகிப்பதற்கான பெரும்பாண்மை இல்லை எனும் போது கௌரவமாக அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதே சிறந்ததாகும்.

பெரும்பாண்மையற்ற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை அவதானித்து எதிர் கட்சியாக நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Read more...

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் ஆண்டக்கான வரவு செலவுத்திட்டம் இதுவரை பாராளுமன்றில் அங்கீகாரம் பெறாத நிலையில், புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இக்கண்கறிக்கையினூடாக எதிர்வரும் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு பாராளுமன்றின் அங்கீகாரம் கோரப்படுகின்றது.

அதேநேரம் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை குலையாதிருக்க இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பாராளுமன்றத்தில் இன்று (21) சமர்ப்பிக்கப்படும் இடைக்கால கணக்கறிக்கை க்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான செயற் பாடுகள் காரணமாக நாட்டில் ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் அந்த நிலை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.


தான் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தது நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தவிர்ப்பதற்காகவாகும். என்னைப் பொறுத்த வரையில் நான் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். ஐ. தே. க. எப்போதும் கட்சி அரசியலுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டைக் காப்பாற்றிய தலைவன் என்ற அடிப்படையில் தம்மால் அப்படிச் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தேவையென்று கருதியிருந்தால் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜனவரி 18ஆம் திகதி முடிவுறும்வரை பிரதமர் பதவியில் தன்னால் இருந்திருக்க முடியும் எனவும் தன்னிடம் அவ்வாறான குறுகிய கொள்கை எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com