Monday, December 17, 2018

மன்னாரில் மைத்திரியுடன் இணைந்து நத்தார் பண்டிகை கொண்டாடினார் செல்வம் அடைக்கலநாதன்.

2018 அரச நத்தார் பண்டிகை 'யேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இக்கொண்டாட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவர் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுடன், 2018 அரச நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.

இலங்கைக்கான வத்திகான் தூதுவர் அதிவண.பியேரே நுயென் வேன் வோட் ஆயர், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் அதிவண.வின்சன்ட் பெர்ணான்டோ ஆயர், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண.எம்மானுவேல் பெர்ணான்டோ ஆயர் உள்ளிட்ட திருத்தந்தையர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












Read more...

Sunday, December 16, 2018

எட்டுக் கொப்பிகளுடன் திருநகர் சென்று கிளப்புக்கு ஆட்சேர்த்த அனந்தி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்தவர் புலிகளியக்கத்தில் சிறுவர் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாகவிருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சதிதரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் (CLUB) என்ற அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தனது கிளப்பினுள் விக்கினேஸ்வரனை கட்டிப்போட முனைந்து மூக்குடைபட்டு நிற்கும் இவர் தற்போது கிளப்புக்கு பல்வேறு வழிகளில் ஆட்சேர்த்து வருகின்றார்.

நேற்று முன்தினம் திருநகர் பகுதிக்கு அப்பியாசக் கொப்பிகள் பகிர்வதாக மக்களை அழைத்து தனது கிளப்புக்கு ஆட்சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விடயம் அங்கு பிசகிப்போனதாக இலங்கைநெட் அறிகின்றது.

சொகுசுக்கார் ஒன்றில் அனந்தி திருநகரை சென்றடைந்தபோது, வறுமைக்கோட்டின்கீழ் வாழும் அங்குள்ள மக்கள் சிலர் அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக்கொள்ள சென்றபோது, „நான் உங்களுக்கு கொப்பி கொண்டுவரவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் எனது அமைச்சுக்கு வந்து பதிவு செய்தவர்களுக்கே கொப்பிகள் வழங்கப்படும்' என அதிர்சி பதில் கொடுத்துள்ளார் அனந்தி.

அத்துடன் உங்களுக்கு கொப்பி வேண்டுமாக இருந்தால் நீங்கள் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்றும் அடுத்தவருடம் பாடசாலை ஆரம்பிக்கும்போது கொப்பிகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அதாவது, தனது இருப்பை வெளிப்படுத்தும் பொருட்டு அடிக்கடி இணையங்களிலும் முகப்புத்தகத்திலும் படம் போடுவதற்கு மக்கள் அவரை சந்திக்கவேண்டும், அதற்காக அவர் வருடம் ஒரு முறை 8 கொப்பிகள் வழங்குவார் என்பதுதான் அந்த சமாச்சாரம்.

இவர் நேற்று முன்தினம் வழங்கிய எட்டு கொப்பிகளின் பெறுமதி இலங்கை ரூபாவில் சொல்வதானால் 400 ரூபாய்கள். அமெரிக்க டொலரில் செல்வதானால் சுமார் 2 டொலர் 30 சதங்கள்.

25 கொப்பி பார்சல்கள் அதாவது 400 x 25 = 10000 ரூ செலவு செய்து யாழ்பாணத்திலிருந்து சொகுசு வாகனத்தில் திருநகர் சென்று அங்குள்ள மக்களுக்கு கடுப்பேற்றியுள்ளார். அக்கொப்பிகளை பெற்றுக்கொள்ளச் சென்ற 21 குடும்பங்களுக்கும் சன சமூக நிலையத்தில் வைத்து இரண்டரை மணிநேரம் அரசியல் வகுப்பெடுத்ததுடன் அவர்களை வரிசையில் நிறுத்தி கொப்பிகள் வழங்கும்போது பல கோணங்களிலும் படமும் எடுத்துள்ளார் அனந்தி சசிதரன். அத்துடன் ஊடகங்களுக்கு அங்கிருந்து பேட்டி வேறு வழங்கியுள்ளார்.

எஞ்சிய நான்கு பார்சல்களையும் அங்கு கொப்பி கேட்டுச்சென்ற நான்கு குடும்பங்களுக்கு தன்னை வந்து சந்திக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கிச் சென்றாராம் அனந்தி. இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் கொப்பிகளை பெற்றுக்கொள்ளச் சென்றிருக்காத நான்கு குடும்பங்களுக்கும் அனந்தியின் வக்கிரம் புரிந்துள்ளது என்பதாகும். அவர்களுக்கு பாடம் படிப்பிக்கின்றேன் என்று பல்லையும் நறும்பினாவாம் அனந்தி.

அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் இந்த ஈனப்பிறவிகளை தமிழ் சமூகம் என்று விரட்டியடிக்கப்போகின்றது?

Read more...

யாப்பிலுள்ள ஓட்டையினூடு புகுந்துவிழையாட ரணில் முயற்சி! விடமாட்டாராம் அனுர

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள யாப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பதங்களை சாதகமாக பயன்படுத்த ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகவும் அதற்கு தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்கலாம் என்பதை ரணில் காண்பிக்க முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் அவ்வாறு செய்யாவிட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக ரணில் குறைக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தையும் அரசியலமைப்புக்கு முரணான முறையில் செயற்படவும் தங்களுடைய கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

அகில இலங்கை சமாதான நீதவானாக கலைமகன் பைரூஸ் நியமனம்

வெலிகாமம் - மதுராப்புரயைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர். வீ. நில்மினி கே. விதாரன முன்னிலையில் நாடு முழுவதுக்குமான சமாதான நீதவானாக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மதுராப்புர முஸ்லிம் விவாகப் பதிவாளரான இவர், வெலிகமயின் ஏனைய பிரதேசங்களினதும், போர்வைப் பிரதேசத்தினதும் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் கடமையாற்றுகின்றார்.

சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளரும், தமிழ்மொழி வளவாளருமான இவர், இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றுகின்றார்.

ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையில் வருகைதரு தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றும் இவர், இஸ்மாயில் - பீபி ஜெஸீமா தம்பதியினரில் சிரேட்ட புதல்வரும் அஸ்ஸபா வித்தியாலயம், அறபா தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவருமாவார்.

Read more...

ரணில் விக்கிரமசிங்கவை இயக்கும் ரிமோட் கொன்றோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாம். மஹிந்தர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பே ரணில் விக்கிரமசிங்க வை இயக்கும் ரிமோட் கொன்றோலாக இன்று காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் விஜேராம இல்லத்தில் பதவி ராஜினாமா செய்ததோடு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆற்றிய உரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரம சிங்க அவர்களை பிரதமராக்க கோரி பாராளுமன்றத்தில் 117 பேர் சார்பாக வாக்களித்தனர். இதில் 14 வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. இதன் போது மாவை சேனாதிராஜா ஆற்றிய உரையில் ரணில் விக்கிரம சிங்க அவர்களிற்கு சார்பாக வாக்களித்திலிருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட போவதில்லை என தெரிவித்ததை சுட்டிக்காட்டியதுடன் 103 ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையில் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

சீன அரசின் நன்கொடையில் தியத்தலாவை இராணுவ முகாமில் கேட்போர் கூடம். திறந்து வைத்தார் மைத்திரி

இலங்கை இராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையிலான பல வருட நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை நேற்று (15) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் திறந்து வைத்தார்.

கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

தியத்தலாவை இராணுவக் கல்வியியற் கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனரத்ன ஜனாதிபதி க்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜகத் ஜயசூரிய ஆகியோரும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், விசேட அதிதிகள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








இதேநேரம் தியத்தலாமை இராணுவப் பயிற்சிக் கல்லுயிலின் 93 ஆவது கெடட் அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமித்தல் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு ஆகியனவம் நேற்று (15) முற்பகல் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

இன்று முற்பகல் தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வை இராணுவத்தினர் அபிமானத்துடன் வரவேற்றனர்.

முதலில் இராணுவ நினைவுத்தூபி அமைந்திருக்கும் இடத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கெடட் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பை பார்வையிட்ட ஜனாதிபதி, சிறந்த கெடட் குழுவிற்கு வெற்றிக்கொடியை வழங்குதல் மற்றும் கெடட் அதிகாரிகளுக்கு வாளினை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.








Read more...

ஐ தே க தேசிய அரசாங்கம் அமைக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

ஐ தே கட்சி மு கா வுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாகவும் எதிர்வரும் 18ம் திகதி அமைச்சரவை விஸ்தரிப்புக்கான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் இன்றைய Sunday Times பத்திரிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம் அதை எதிர்க்கப்போவதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட நிலைப்பாட்டைப் பார்ப்போம்.

தேசிய அரசாங்கம் தொடர்பான வரைவிலக்கணம் சரத்து 46(5) இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ For the purpose of paragraph (4), National Government means, a Government formed by the recognized political party or independent group which obtains the highest number of seats in Parliament together with the other recognized political parties or the independent groups.”

அதாவது தேசிய அரசாங்கமென்பது பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி/ சு குழு ஏனைய கட்சிகள் அல்லது சு குழுக்களுடன் இணைந்து அமைக்கின்ற அரசாங்கமாகும்.

அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கின்றபோது 46(4) இன் பிரகாரம் அமைச்சர்கள், ராஜாங்க, பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும். சுருங்கக்கூறின் பாராளுமன்றம் தீர்மானித்தால் எத்தனைபேரையும் நியமிக்கலாம்.

கடந்தமுறை அமைந்த தேசிய அரசாங்க முன்னுதாரணம்

பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஐ தே கட்சி. எனவே, முதலாவது நிபந்தனை பூர்த்தி. ஏனைய கட்சிகள் / சு குழுக்கள் என்பதில் ஐ ம சு கூட்டமைப்பும் மு கா வும் இணைந்திருந்தது. த தே கூ, ஜே வி பி, ஈ பி டீ பி இணையவில்லை.

அதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சில கட்சிகள் இணைந்திருந்தன. சில கட்சிகள் இணையவில்லை. இதனை தேசிய அரசாங்கம் என அழைக்கமுடியுமா? என்பதுதான் இங்குள்ள கேள்வி.

இதற்குரிய விடை ‘ பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இணைய வேண்டுமா? அல்லது ஒரு சில கட்சிகள் இணைந்தால் போதுமா? ஒரு சில எனும்போது பெரிய கட்சியுடன் மேலதிகமாக ஒரு கட்சி இணைந்தாலும் போதுமா? என்ற கேள்விகளில் தங்கியிருக்கின்றது.

இந்த விடையை ஆராய்வதற்கு “ together with the other parties..” என்ற சொற்றொடரின் அர்த்தத்தை ஆராய வேண்டும். இங்கு “ with other parties “ என்று தரப்படவில்லை. “With the other parties “ அதாவது “ other” என்ற சொல்லுக்கு முன்னால் “ the “ என்ற சொல் பாவிக்கப் பட்டிருக்கிறது. இந்த the என்ற சொல்லுக்குரிய பொருள்தான் இதன் விடையைத் தீர்மானிக்கப்போகின்றது.

வெறுமனே “ other parties” என்று சொல்லியிருந்தால் அது “ஏனைய கட்சிகள் “ என்ற பொருளை வழங்கியிருக்கும். அது எல்லாக் கட்சிகளையும் குறிக்கின்றதா? அல்லது ஒரு சில கட்சிகள் என்றாலும் போதுமா? என்பதில் மாறுபட்ட வியாக்கியானங்களைக் கொடுக்கலாம். ஆனால் பாவிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் “ the other parties” ஆகும்.

“ The “ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘ definite article ‘ என அழைக்கப்படும். ( part of speech) அதாவது திட்டவட்டமானது என்பது அதன்பொருளாகும். ஆங்கிலத்தில் ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்னால் “ the “ என்ற சொல்லைப் பாவித்தால் அதன்பின் அது எது என்ற கேள்வி எழாது. திட்டவட்டமானது.

உதாரணமாக, That is a story book. அது ஒரு கதைப்புத்தகம். I bought the book in London. அந்தப் புத்தகத்தை லண்டனில் வாங்கினேன்; என்று சொன்னால் அதன்பின் ‘எந்தப் புத்தகத்தை?’ என்ற கேள்வி எழாது. ஏனெனில் அது முன்னர் குறிப்பிடப்பட்ட புத்தகம்.

அதேபோன்றுதான் உலகிலே ஒன்றே ஒன்று இருப்பதற்கும் ‘ the ‘ என்ற சொல் பாவிக்கப்படும். உதாரணமாக ‘ the Sun, the Moon, the Earth ‘. இங்கு எந்த சூரியன், எந்த சந்திரன் என்ற கேள்வி எழாது. அது திட்டவட்டம் என்பதைக் குறிப்பதற்காகத்தான் ‘ the ‘ என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு இந்த ‘ the ‘ பாவிக்கப்படுகின்ற பலமுறைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் குறித்த சொல்லின் திட்டவட்டமான தன்மையைக் குறிக்கின்றது.

இப்பொழுது நமது கேள்விக்கு வருவோம். “ other parties “ என்றால் அங்கு திட்டவட்டமான தன்மை இல்லை. இரண்டுபக்க வியாக்கியானத்திக்காகவும் வாதிடலாம். “ the other parties “ என்று வந்ததனால் ‘ ஏனைய கட்சிகள் ‘ என்பது திட்டவட்டமாகி விட்டது.

ஒரு சில கட்சிகள் என்றால் அவை எவை? அவை திட்டவட்டமானதல்ல. சகல கட்சிகளும் என்றால் அவை திட்டவட்டமானவை. அங்கு எந்தக் கட்சிகள் என்ற கேள்வி எழாது. எனவே, “ the “ என்ற சொல் பாவிக்கப்பட்டதால் அனைத்துக்கட்சிகளும் என்ற அர்த்தமே வழங்கப்படவேண்டும்.

அதேநேரம் “ அனைத்துக்கட்சிகளும்” என்றால் ஏன் “ அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சியுடன்” என்ற சொற்றொடர் பாவிக்கப்பட வேண்டும்? மாறாக அனைத்துக் கட்சிகளும் என்று கூறியிருக்கலாமே!

உதாரணமாக இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்தாலும் அது இந்த வரைவிலக்கணப்படி தேசிய அரசாங்கமாகாது. “ the other parties “ என்பது ஏனைய எல்லாக் கட்சிகளையும் குறிக்குமாயின் அதற்குள் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியும் வந்துவிடும். எனவே, தேசிய அரசாங்கம் அமைக்க முடியும். அவ்வாறாயின் ‘ அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் “ என்ற சொற்பதம் அர்த்தமற்றதாகிவிடும்.

இங்கு எந்தக்கட்சியில் இருந்து பிரதமர் வருகிறார் என்ற விடயத்தைக் குறிப்பதற்காகத்தான் ‘ அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன்’ என்ற சொற்றொடர் பாவிக்கப்பட்டது; என்றொரு வாதத்தைக் கொண்டுவரலாம். ஆனால் அதன்பொருத்தப்பாடு மிகவும் குறைவு. ஏனெனில் அது சரத்து 42(4) இன்படி யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்பதுடன் சம்பந்தப்பட்டதே தவிர எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்பதுடன் சம்பந்தப்பட்டதல்ல.

சிறிய கட்சியொன்றில் இருந்த பிரதமர் வருவதற்கு பெரிய கட்சி ஆதரவளிக்க முடியாது; என்று விதியில்லை. அது அவர்களது கட்சிகளோடு சம்பந்தப்பட்ட விடயம். அண்மையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆசனம் குறைவாகப்பெற்ற பிராந்தியக் கட்சியொன்றிலிருந்து முதலமைச்சர் வருவதற்கு கூடிய ஆசனங்கள் பெற்ற ( பெரும்பான்மை அல்ல) காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியது. இலங்கைக்கு வேறு சட்டம் என்றாலும் இது உலக நடைமுறை.

அவ்வாறு பெரிய கட்சியிலிருந்துதான் பிரதமர் வரவேண்டும் என்று பொருள்கோடல் வழங்கினால் “ the other parties “ என்பது ஏனைய அனைத்துக் கட்சிகளையும்தான் குறிப்பிடும்.

எனவே, பெரிய கட்சியுடன் ஏனைய கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால்தான் தேசிய அரசாங்கம் ஆகும்; என்றால் அடுத்த கட்சிகளுடன் கூட்டுச் சேரலாம்; ஆனால் பெரிய கட்சி இல்லாதவரை அது தேசிய அரசாங்கமாகாது. அதற்காக அனைத்துக் கட்சிகளும் இணையவேண்டும்; என்ற தேவையில்லை; என்பதே பொருளாகும்.

அதேநேரம் ‘ the ‘ என்ற சொல் draft இலுள்ள குறைபாடாகும். ‘ the ‘ என்பது ‘திட்டவட்டமான’ என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை; என்றும் பொருள் கோடல் செய்யவேண்டும். பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஒரு சொல் இன்னுமொரு சொல்லின் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் பொருள்கோடல் செய்த சந்தர்ப்பங்கள் உண்டு.

உதாரணமாக, ‘ may’ என்ற சொல் ‘ shall’ என்ற சொல்லின் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டதாக பொருள்கோடல் நீதிமன்றத்தால் செய்யப்பட்டிருக்கின்றது.

இவை எல்லாவற்றிற்குமேலாக, ஒரு தடவை எல்லாக்கட்சிகளும் இணையாமல் சில கட்சிகளை பாராளுமன்றம் தேசிய அரசாங்கமாக கருதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன்மூலம் ஒரு நடைமுறை உதாரணம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மட்டுமல்ல, பாராளுமன்றத்தின் தீர்மானத்தை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்த முடியாது.

எனவே, பெரிய கட்சியுடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் ‘ தேசிய அரசாங்கம்’ அமைக்க முடியும்.

ஐ தே கட்சியும் மு கா வும் தேசிய அரசாங்கம் அமைக்கமுடியுமா?

தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளாக ஐ தே கட்சியும் மு கா வுமே ஆட்சியமைக்கின்றன. UPFA கட்சியாக இணையவில்லை. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இணைகிறார்கள். எனவே பெரிய கட்சியுடன் “ ஏனைய கட்சிகள்” என்று பன்மைச்சொல் பாவிக்கப்பட்டிருப்பதால் “ மு கா” என்ற ஒரேயொரு கட்சி இணைந்தால் தேசிய அரசாங்கமாக அதனைக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுகின்றது.

வெளிப்படையில் அதை நியாயப்படுத்துவது சிரமமாகவே இருக்கின்றது. “ மு கா” என்ற ஒரு கட்சியை “ ஏனைய கட்சிகள் “ என்ற பன்மைப் பதத்திற்குள் கொண்டுவருவது ஏற்புடையதாக இருக்கமாட்டாது. ஆனால் சரத்து 46(5) இல் ஒரு சிறிய இடைவெளி இருக்கின்றது.

அதாவது, பெரிய கட்சியை வரையறுக்கும்போது “ பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியென்று” குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனையகட்சிகளைக் குறிப்பிடும்போது “ பாராளுமன்றத்தில் ஆசனம்பெற்ற” என்ற பதம் இல்லை. மாறாக “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்” என்று மாத்திரம்தான் இருக்கின்றது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பல மலையக, மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஐ தே கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு ஆசனம் பெற்றிருக்கின்றன. அவை விரும்பினால் அரசுடன் இருப்பதற்கும் அல்லது வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வதற்கும் உரிமை உடையன. எனவே, அவையும் “ ஏனைய கட்சிகள்” என்ற பன்மைப்பதத்திற்குள் கொண்டுவர முடியாதா என்ற கேள்வியை எழுப்பலாம்.

“ பாராளுமன்றத்தில் ஆசனம் பெற்ற” என்ற பதம் பாவிக்கப்படாமையால் மு கா போன்று அவைகளும் தனியாக ஆசனம் பெற்றிருக்கவேண்டும்; என்ற அவசியமில்லை; என்று வாதாடலாம். அவ்வாதம் சரியாயின் ஐ தே கட்சியும் மு கா வும் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்து வேண்டிய எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிக்கலாம். ஆனால் இந்த வியாக்கியானத்திலும் சிறியதொரு பிரச்சினை இருக்கின்றது.

அதாவது, இந்தக்கட்சிகளின் ஆசனங்களையெல்லாம் சேர்த்துத்தான் ஐ தே கட்சி “ அதிகூடிய ஆசனம்பெற்ற கட்சி” என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது. அந்நிலையில் அவைகள் ஏனைய கட்சிகள் என்ற அர்தத்திற்குள் கொண்டுவந்தால் அவற்றிற்கு ஐ தே க யின் ஆசனங்களுக்கப்பால் ஆசனம் இருக்க வேண்டும். அது மு கா வுக்கு மட்டுமே இருக்கின்றது. இல்லையெனில் பெரிய கட்சியாகிய ஐ தே கட்சியின் ஆசனம் குறைந்து பெரிய கட்சியென்ற அந்தஸ்த்தை இழக்கவேண்டும். அது வியாக்கியானத்தில் பாரிய பிரச்சினையைக் கொண்டுவரும்.

இந்நிலையில் ஐ தே கட்சியும் மு கா வும் சேர்ந்து தேசிய அரசாங்கமாவது கடினமே. டக்ளஸ் தேவானந்தா தனது சொந்தக்கட்சியில் தெரிவுசெய்யப்பட்டதால் அவரும் இணைவாரெனில் 46(5) தேவையைப் பூர்த்திசெய்யலாம். அல்லது தொண்டமானாவது வருவாராக இருந்தால் அவர் UPFA இல் போட்டியிட்டபோதும் CWC ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் “ பாராளுமன்றில் ஆசனம்பெற்ற” என்ற அந்த சொற்பதம் பாவிக்கப்படாத இடைவெளியை சாதகமாகக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நியாயப்படுத்தலாம்.

இறுதித் துரும்பு
————————
எது எவ்வாறிருந்தபோதிலும் ‘ பாராளுமன்றம் தீர்மானித்துவிட்டால்’ வெளியில் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அவ்வாறாயின் ரணிலுக்கும் மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லாமல்போகும்.

Read more...

பதினைந்து மாவீரர்களை கொண்ட எனக்கு மாவீரர்களை பற்றி வகுப்பெடுகின்றனர் - பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன்

எனது குடும்ப சூழல் பதினைந்துக்கு மேற்பட்ட மாவீரர்களை கொண்டது. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள தமிழரசு கட்சி இளைஞர்கள் எனக்கு மாவீரர்கள் பற்றியும் அவர்களின் தியாகம் பற்றியும் வகுப்பெடுகின்றனர் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் சுதந்திர கட்சி உறுப்பினர் நாகராசா நகுலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதேச சபை என்பது பிரதேச அபிவிருத்திக்கு பொறுப்பான ஒரு கட்டமைப்பு. ஆனால் எங்களுடைய சபையானது கூடுகின்ற ஒவ்வொரு அமர்விலும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் அபிவிருத்திக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காது மாவீரர்கள் பற்றியும் அவர்களின் தியாகம் பற்றியும், பேசி அறிக்கையில் அதனை இடம்பெறச் செய்வதனை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் நாங்கள் இதனை தட்டிக் கேட்கின்ற போது அவர்கள் மாவீரர்களின் தியாகம் பற்றி எங்களுக்கு வகுப்பெடுகின்றனர். பதினைந்துக் மேற்பட்ட மாவீரர்களை கொண்ட குடும்பச் சூழலில் முப்பது வருட போராட்டத்தின் தியாகங்கள், துன்ப துயரங்களை கடந்து வந்த எனக்கு இவர்கள் வகுப்பெடுப்பது நகைசுவையானது எனத் தெரிவித்த அவர்,

மக்கள் எங்களை வாக்களித்து சபைக்கு அனுப்பியது மற்றவர்களுக்கு தியாகி துரோகி பட்டம் வழங்குவதற்கும், மாவீரர்களை பற்றி பேசுவதற்கும் அல்ல மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஓரளவுக்காவது தீர்ப்பதற்கே எனவே நாமும் அதற்கேற்வகையில் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மாறாக கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செயற்படுவதனையும், கட்சியை வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு பாதீடு தயாரித்து அதனை நிறைவேற்ற கோருவதனையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் மக்களின் நலன்சார்ந்த எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பாதீட்டை நாம் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.

Read more...

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரிமசிங்க இன்று காலை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிமாணம் செய்து கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் பிரதம மந்திரியாக இத்துடன் 5 வது முறையாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசமந்த நிலையின்போது தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.


Read more...

ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார்? ( சுலோகம் - ஆச்சரியம் ) அடுத்த தேர்தல். ( பாகம் - 2 ) - சஹாப்தீன் நானா

குரூப் ஒன்று -

பரம்பரை பரம்பரையாக அப்பாட அப்பா, அந்த அப்பாட அப்பாட அப்பப்பா, அம்மாவழி உறவுகள்,பழைய பண்ணையாளர்கள், வெள்ளையனுக்கு வால் பிடித்தவர்களின் வாரிசுகள் என ஒரு மென்மையான,
வெள்ளையும் சொள்ளயுமான அல்லது கருப்பும் ,கம்பீரமும் கலந்த முறுக்கு மீசை பா.உ க்கள்.

இங்கு அன்பு இருக்கும், அரவணைப்பு இருக்கும், நேர்மை கொட்டி கிடக்கும், ஒற்றை குரலில் ஊரையே, கிராமத்தையே நடுங்க அல்லது அடிபணிய அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கும்பிடு போட வைப்பார்கள்.

பணத்துக்கு பஞ்சமே இல்லாத பக்கா பணக்காரர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள காணிகள், காணி நிலங்கள் ,தோட்டம், துரவு, வீடு, மனை, ஆடு, மாடுகள் என்பன இவர்களுக்கு சொந்தமாக இருக்கும், பா.உறுப்பினர் பதவி என்பது ஜஸ்ட் ஒரு கொசுறு.

ஆனால் அக்காலத்தில் வெள்ளைகார தொரமார்களின் அன்பை பெறவும், அவர்களுடன் குதிரை ( ஜட்கா ) வண்டிகளில் பவனி வரும், செக்கச் செவேலன்ர வெள்ளை காரைச்சிகளை சைடு அடிக்கவும், நீதான் இந்த
ஊருக்கு ராஜா, இந்தா பிடி "தங்கவாள்" என்று கூறிக்கொண்டு; அவர்கள் கொடுக்கும் ஏழரை கிலோ நிறையுள்ள தங்கவாள்களை பெறவும், பா.உ .பதவிகளை பெற்றார்கள்.

பண்ணையார்களாகவும், சண்டியர்களாகவும் இருந்த இவர்களுக்கு போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கிலேயர்களால் கொஞ்சம் அடிமைத்தனமும், கொளுத்த அரசியலும் புகட்டப்பட்டது. காக்காய் பிடிப்பது எப்படி, அதே நேரம் காலை வாருவது எப்படி. சோரம் போவது எப்படி, அதே சமயம் சோப்பிளாங்கிதனம் பண்ணுவது எப்படி. சமாதானமாக போவது எப்படி, அதே நேரம் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுவது எப்படி என நன்றாகவே பாடங்கள் புகட்டப்பட்டது.

இவர்களை கிட்ட நின்று முகர்ந்து பார்த்தால்; வெள்ளையும், சொள்ளையும் ஆனவர்களிடம் கொஞ்சம் கேரள ( காலிகட் ,கொச்சின், திருவந்தபுரம் அப்படியே கன்னியாகுமரி, நாகர்கோயில், குளிகைபட்டினம் ) வாடையும்; கருப்பும், நெடுப்பும், துரு துருப்பான பார்வையும் உள்ளவர்களிடம் தமிழ்நாட்டு ( மதுரை ,திருவண்ணாமலை,மேலூர் , விழுப்புரம்,திருச்சி அப்படியே கல்லல்,காரைக்குடி,பேராவூரணி ) வாசனையும் அடிக்கும். ( விஜயனும், குவேனியும் என்னை மன்னிப்பார்களாக )

இவர்களுக்கு ஒரு மனக்கஷ்டமோ, உடல்கஷ்டமோ வந்தால் உலகுக்கு தெரிய கண்டி தலதா மாளிகைக்கும், தங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிய; திருப்பதிக்கும், மதுரைக்கும் சென்று வேங்கடாஜலபதியினதும், மீனாட்சியினதும் காலில் விழுந்து அழுதுவிட்டு வருவார்கள்.

குரூப் இரண்டு -

நிறைய படித்த, கொஞ்சமே கொஞ்சம் புத்தியுள்ள, கோட்டு சூட்டுக்கும், தலையை தடவி கழுத்தை அறுக்கும் நரி தந்திரத்துக்கும் சொந்தக்காரர்கள், இந்த குரூப் வடகிழக்கையும், மலையகத்தின் ஒரு பகுதியையும்,
கொழும்பு, பேருவல போன்ற கடல்கரை, துறைமுகம் சார்ந்த பகுதிகளையும் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்டு, ஆமாம் போட்டு, அவர்கள் காலால் இடும் கட்டளையை தலையால் செய்யும் ஆமாம் சாமிகள். ஆஷாட பூதிகள். அவசர குடுக்கைகள்.

இவர்களை பார்த்தால் தொட்டு கும்பிட வேண்டும் போல இருக்கும். நுனிநாக்கு ஆங்கிலம், உயர் கல்வி. கடல் வணிகம் இம்மூன்று மட்டுமே இவர்களது மூலதனம். வெள்ளையனுக்கும் வேடிக்கை காட்டி, முழு இலங்கைக்கும் டாட்டா காட்டும் / காட்டிய வல்லவர்கள். இதனால் பா.உ .ஆனவர்கள்.

குரூப் மூன்று -

இது ஒரு கலவை - கரைசல் என்றும் சொல்லலாம். குரூப் ஒன்றினதும், குரூப் இரண்டினதும் வாரிசுகள். வழித்தோன்றல்கள். வம்சாவழி வந்தவர்கள். அனைவரும் குறைந்தது ஆங்கிலம் பேசுவார்கள், படித்திருப்பார்கள்,
வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார்கள், இவர்களில் பலரிடம் பிரிட்டிஷ் மகாராணி ஒப்பமிட்ட கடவுச் சீட்டுகள் இருக்கும், இருந்தது.

தங்கள் கிராமங்களில் ஒரு சாதாரண வீடு அல்லது பரம்பரை வீடு, நகரை அண்டிய பகுதிகளில் நவீன, நாகரீக வீடுகள் கட்டி இருப்பார்கள். கிராமத்துக்கு செல்லும்போது பவ்விய கிராமப்புற உடையணிந்து, அனைவரையும் அரவணைத்து, தென்னந் தோட்டங்களுக்குள்ளோ, கிராமப்புற டீக்கடையிலோ உட்கார்ந்து சரளமாக மக்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

கிராமத்தை கடந்து விட்டால் இவர்களது உலகமே வேறு. சிங்கப்பூர், பாங்கொக், ரோம் (இத்தாலி )சந்தைகளில் இவர்களை வாரா வாரம்; கட்டை களிசன்களுடன் குடும்பசகிதம் தரிசிக்கலாம்.

உலக சந்தையில் விற்கப்படும் டாப் லெவல் செண்டுகள், பெர்பியம்கள் இவர்களை வலம் வந்து கொண்டே இருக்கும். ஜாலி பேர்வழிகள்; அதற்காக ஜால்ராக்களும் கிடையாது. நிறைய பேரிடம் திருட்டுத்தனம் இருக்காது. தமது முன்னோர்கள் கட்டிக்காத்த சொத்துப்பத்து, பட்டம் பதவி, வம்பு தும்பு அனைத்துக்கும் சொந்தக்காரர்கள்.

இங்கு நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டி இருக்கும், ஆனால் பொறாமை இருக்காது. இங்கு வம்பு தும்பு இருக்கும், வெட்டு குத்து இருக்காது. இருந்தாலும் இரவு ஆறு மணிக்கு பின் ஹாய் மச்சான் என்ற ஒரு தேனீர் பாட்டியில் அல்லது போத்தல் பார்ட்டியில் எல்லாம் மறந்து, பறந்து, கரைந்து போகும்.

குரூப் நாலு -

மாவோயிஷம், லெனினிஷம், ஷேகுவேரயிஷம், கடாபியிஷம், முகம்மது நபியிஷம்( நாரே தக்பீர் ), தமிழிஷம், தரப்படுத்தலிஷம், லோயரிஷம், யுனிவெர்சிட்டியிஷம் என சென்னை அங்கப்ப நாயக்கன் ஸ்ட்ரீட் சைவக்கடை அல்லது பெட்டா மீன்கடையை சாயலாக கொண்ட பா.உ.க்கள்.

இது ஒரு சாம்பார், இங்கு எல்லாமே கொட்டிக் கிடக்கும், கலந்துமிருக்கும் , இவர்களது நாடி, நரம்பு, மூளை, முண்ணான், மூக்கு, நாக்கு எங்கும் அரசியல் அரிச்சுவடி கரைந்திருக்கும். கொள்கை வெறி பிடித்தவர்கள். விரல் நுனிகளில் உலகம் இருக்கும், நாக்கு நுனியில் நுரை தள்ள பேசுவார்கள், இவர்களிடம் மாட்டினால், பாக்குவெட்டிக்குள் மாட்டிய கொட்டைப்பாக்குகள்தான்.

தம்புள்ள மார்கட்டின் இன்றைய தக்காளியின் கிலோ விலை என்ன என்பது முதல், சஹாரா பாலை வனத்தில் நேற்று எத்தனை மில்லிமீட்டர் மழை பெய்தது என்பது வரை கட கட என ஒப்பு விப்பார்கள்.

ஒரு வேளைக் கஞ்சிக்கு மண்வெட்டி பிடித்த; தாய் தந்தையர்களின் குழந்தைகள் முதல், பெருத்த, கொளுத்த வியாபாரிகள், படித்த பண்டிதர்களின் குழந்தைகள் வரை இதில் கலந்திருப்பார்கள். நல்ல மனமும், அன்பான குணமும், அருமையான எண்ணங்களும் கொண்ட நல்ல உள்ளங்கள். பல்கலை கழகங்களிலும், போர்க்களங்களிலும், ரோட்டோரங்களிலும் பயின்றவர்கள்.

கொள்கை குன்றுகள் என்று சொல்லித்தான் வாக்கு வேட்டையாடுவார்கள். வாகாக பா.உ.க்களும் ஆவார்கள்.

பாவம் !!!!!

இவர்களை, இவர்களது கொள்கை, கோட்பாடுகள், கோட்டு, சூட்டு, பட்டம், பதவி, கதை, கலாச்சாரம் மொத்தத்தையும் குரூப் மூன்றுக்கு சொந்தக்காரர்கள்; மிக மிக அழகாக, பவ்வியமாக ; எண்ணி ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு சொடக்கு போடுகின்ற கணத்திற்குள் சப்பி, துப்பி, மென்று, முழுங்கி, காறி, உமிழ்ந்து ஏப்பமிட்டு விடுவார்கள்.

ஆம்;

குரூப் மூன்று - இவர்களை மிக மிக கட்சிதமாக விலைக்கி வாங்கி விடுவார்கள். இவர்களும் சுகமாக ஏலம் போவார்கள். இவர்களுக்கு வாக்களித்த மொத்த மக்களும் - மிக அழகாக இவர்களுக்கு பாவ மன்னிப்பும் வழங்குவார்கள்.

குரூப் ஐந்து.

போடுகாய்கள். போடுகாய் பா.உ.க்கள்; இவர்களை படைத்த ஆண்டவனுக்கோ அல்லது இவர்களதுதாய் குரங்குக்கோ ( டார்வினின் தத்துவப்படி ) தெரியாது இவர்கள் அடுத்த வாரம் பா.உ .க்கள் ஆவார்கள் என்று.

ஹமீடியாசில் ( Hameedia) வெரி, வெரி ஏர்ஜென்ட் என ஆர்டர் கொடுத்து கோட்டு சூட்டு தைக்கப்படும், இவரது நண்பர்களும், உறவினர்களும் இவருக்கு போன் பண்ணி மச்சான் என்ன ? செய்தி உண்மையா என கேட்பார்கள், சத்திய பிரமாணம் செய்யும் வரை இவருக்கே தெரியாது தான் பா.உ. ஆவேன் என்று.

அதிர்ஷ்டமும் ஆச்செரியங்களும் கலந்த கலவைகள் இவர்கள். திடீர் அரசியல் சுழற்சிகள் ஏற்படும் போது, இவர்கள் தாய்க்கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் கொடுக்கும் அலுப்பு இருக்கின்றதே, அது ஒரு பேரழகு. கொள்ளை அழகு.

இந்த ஐந்து வகையான பா .உ .க்களிடம் மாட்டிக்கொண்டுதான், இன்று இரண்டே கால் கோடி சிறிலங்கா சிட்டிசன்களும், ஒரு இருபது லட்ச வெளிநாட்டு வாழ், வெளிநாட்டு சிட்டிசன்களும் ( முன்னாள் சிறிலங்கன் ) மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.

16-12-2018. ( தொடரும் )

Read more...

Saturday, December 15, 2018

சட்டம் ஒழுங்கு அமைச்சை மைத்திரியே வைத்துக்கொள்வாராம்.

நாளை புதிய அமைச்சரவை நியமனமாகவுள்ளது. நாளை பிரத மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள அதேநேரம் சில அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரமளிக்காமல் அதை தனது கையிலேயே வைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை கொல்லத்திட்டமிடப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பான விடயங்களின் பிரதான சூத்திரதாரிகளாக ரணில் விக்கரமசிங்க, சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இருப்பதால் , சட்டம் ஒழுங்கு அமைச்சை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் விடுவது பொருத்தமற்றது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் சபாநாயகருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இதுவிடயமாக பேசப்பட்டபோதும் ஒரு முடிவினை எட்டியிருக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.

Read more...

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை. சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை

கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் பொதுமக்கள் வேண்டுமென்றே இரண்டு அல்லது மூன்று வைத்திய நிபுணர்களால் பார்வையிடப்பட்டு (ஒவ்வொரு பார்வையிடலுக்கும் தனிக் கட்டணம், பரிசோதனைகளுக்கு புறம்பான கட்டணம்) இறுதியில் பெருந்தொகைக்கு அத்தனியார் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேதனையான விடயம் என்னவெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தத் தனியார் வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சிலரும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து அனுப்பப்படும் நோயாளர்களைக் கட்டணம் அறவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வியாபாரத்தில் இணைந்து செயல்படும் அனைத்து வைத்தியர்களும் மக்களது வரிப்பணத்தில் கல்வி கற்று மக்களுக்காகச் சேவையாற்றுவதாகக் கடமைச் சபதம் எடுத்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் பொது மக்கள்
இவ்வாறான மருத்துவ நியதிக்கும் நீதிக்கும் மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதற்கு உடந்தையாகச் செயற்படும் பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகளுக்கும் எதிராக ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கையில் இறங்குவது குறித்துப் பிரதேச பொதுமக்கள் சில அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

Read more...

பாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் -பாகம்1 - வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 09/11/2018 அன்று வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தை கலைத்தமையை செல்லுபடியற்றதாக்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் இங்கு தரப்படுகின்றது.

பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பு

இது பிரதம நீதியரசர் கௌரவ H N J பெரேரா அவர்களால் மேலும் ஐந்து நீதியரசர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட 88 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. இதன் முக்கிய அம்சங்கள் மாத்திரமே இங்கு தரப்படுகின்றன.

இந்த வழக்கின் வாதி தரப்பின் அடிப்படை

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானதும் அரசியலமைப்பை மீறுவதுமாகும்.

சரத்து 70(1) இன் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் திகதியிலிருந்து 4 1/2 வருடங்கள் முடியும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது; என வெளிப்படையாகவே தடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரேயொரு விதிவிலக்கு பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது. ஆனால் அவ்வாறான எந்தவொரு வேண்டுகோளும் இதுவரை விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு சரத்துக்கள் 17 மற்றும் 126 இல் குறிப்பிடப்பட்ட நிறைவேற்று/ நிர்வாக அதிகார செயற்பாடாகும். வாதி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட பாராளுமன்றப் பதவிக்காலத்தை முழுமைப்படுத்தும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியினால் மறுக்கப்பட்டிருக்கின்றது. மட்டுமல்ல, இதனால் அவர்களைத் தெரிவுசெய்த வாக்காளர்களின் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கின்றது.

இச்செயற்பாடு மனுதாரரின் சரத்து 12(1) இல் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை மீறியிருக்கின்றது. அதாவது சட்டத்திற்குமுன் சகலரும் சமம், சகலருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு இருக்கின்றது; என்பது இச்சரத்தாகும்.

26/10/18 இலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் புதிய பிரதமருக்கு அரச கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிழையான நோக்கத்தில் செய்யப்பட்டவையாகும்.

இதன்மூலம் பாராளுமன்றத்தில் செயற்பாடு, பிரதிநிதித்துவ ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பன ஆபத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்ற சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட இந்தத்தாக்குதலில் இருந்து பாராளுமன்றம் பாதுகாக்கப்பட வேண்டும்.

சரத்துக்கள் 12(1) இற்கு மேலதிகமாக சரத்து 14(1)(a) ( பேச்சு சுதந்திரம்), 14(1)(b) ( அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை). 14(1)(c) ( கூட்டாக செயற்படுவதற்கான சுதந்திரம்), மற்றும் சரத்து 10 (சுயமாக சிந்திப்பதற்கான, மற்றும் மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம்) என்பனவும் மீறப்பட்டிருக்கின்றன.

(ஆனாலும் சரத்து 12(1) மீறப்பட்டதன் அடிப்படையிலேயே இவ்வழக்கை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.)

பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களின் சுருக்கம்

ஜனாதிபதி தனக்கு சரத்துக்கள் 33(2), 66(2), மற்றும் 70(3) ஆகியவற்றால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார். எனவே, சட்டமீறலில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடாத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலின் பின் நாட்டின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்கியது. ஒக்டோபர் 26 முதல் பல சம்பவங்கள் நவம்பர் 14ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட நடைபெற்றிருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் பொதுத்தேர்தலுக்கு மக்கள்முன் செல்வதற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

சரத்து 70(3) இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘ பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளபோது எந்த நேரத்திலும்’ என்பதிலுள்ள ‘ எந்த நேரத்திலும் ‘ என்ற சொற்கள் ‘ வீணானவை அல்ல’.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டும்போது ஏற்படுவதுபோன்று முன்கூட்டியே கலைக்கும்போது வாக்குரிமை மீறப்படுவதில்லை; மாறாக, வாக்குரிமை, சுயநிர்ணய உரிமை போன்றவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதியை நீக்குவதற்காக குற்றப்பிரேரணை கொண்டுவரும் பாராளுமன்றத்தின் அதிகாரமும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திலும் கைவைத்தால் அது மக்களின் இறைமையை கடுமையாகப் பாதிக்கும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானம் அரசியல் ரீதியானது. அதனை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது. அவ்வாறு ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரலாம்.

4 1/2 வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கவே முடியாதென்றால் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது அது பாரதூரமான சூழ்நிலையை உருவாக்கும்.

உப சரத்து 33(2)( c) 19 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் விசேட சூழ்நிலையில் பாவிப்பதற்காகத்தான்.

சரத்து 33 இல் ‘ மேலதிகமாக ‘ என்ற சொல் பாவிக்கப்பட்டது சரத்து 70 இல் எது இருந்தாலும் என்பதனால்தான்.

நாட்டின் இறைமை மக்களிடம் இருப்பதனால் மக்களிடம் அதிகாரம் கேட்டுச் செல்வது அரசியலமைப்பிற்கு முரணாகாது.

இவை வாதி, பிரதிவாதிகள் தரப்பு பிரதான அடிப்படை முன்வைப்புகளாகும்.

அடுத்தபாகத்தில் இவை தொடர்பாக நீதிமன்றத்தின் தொடர்பாக பார்ப்போம்.

( தொடரும்)

Read more...

துளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.

புனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாநாயக போராளிகள் என்ற பெயர்கொண்டு செயற்படும் முன்னாள் புலிகளின் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான இவரது செயற்பாடுகள் மீது சந்தேகம்கொண்டே இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

புலம்பெயர் புலிகளின் தேவைகளுக்காக செயற்படுவதாக இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

மஹிந்த ராஜபக்ஸ ராஜனாமா!

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று காலை தனது பிரதமர் பதவியை ராஜனாமா செய்து கொண்டுள்ளார். விஜேராம இல்லத்தில் நடைப்பெற்ற சர்வமத அனுஸ்டனங்களுடன் தனது நெருக்கமானவர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் :

பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை எனக்கில்லை.

பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்து இயக்கிக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க மறுப்பு தெரிவிக்குமாயின் பாராளுமன்றில் ஐ.தே.க பெரும்பான்மையை இழக்க நேரிடும்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் ஐ.தே.க 20.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.

நாங்கள் நாட்டின் அபிவிருத்திக்காகவே கடன் வாங்கினோம். அது அனைவருக்கும் தெரிந்த விடயமே ஆனால் அவர்கள் கடன் வாங்கியது தேவயைற்ற செயற்பாடுகளுக்காக. இந் நிலையில் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்கின்ற பட்சத்தில் மிகுதியிருக்கும் காலத்தில் எவ்வளவு தொகையை கடனாக பெறுவார்கள் எனத் தெரியவில்லை.

டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பின் போட்டதைப் போன்று பாராளுமன்றத் தேர்தலையும் இந்த அரசாங்கம் பிற்போடும்.

அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரா நாயக்க குமாரதுங்கவிற்கு தெரியாமலேயே விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன் படிக்கையில் ரணில் கைச்சாத்திட்டார். அதே போல ஜனாதிபதிக்கு தெரியாமலேயே பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எதிர்காலத்தில் செய்யக் கூடும்.

ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே பிரதமர் பதவியை இராஜினாமா செய்து கொள்கின்றேன்.

பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.

பொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலும் தீர்மானங்கள் எடுக்கும் போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, இன்றாகும் போது ஒரு வருடமும் மூன்று மாதங்களால் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே.

தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்போடுவதற்கே அவர்கள் திட்டுமிடிகின்றார்கள் என்று மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more...

ரணில் போல் த.தே கூட்டமைப்பிற்கு ஆமா போட்டிருந்தால் மஹிந்தவாலும் 113 பெற்றிருக்க முடியும். விமல் வீரவன்ச

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்றிருந்தால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றிருப்பார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்த நிபந்தனைகளான சுயாட்சி முறைமை, காணி தொடர்பான வர்தத்மானி அறிவித்தல்களை ரத்துச் செய்தல், புராதன காணிகளில் எதுவும் செய்யலாம் என்ற அதிகாரத்தை மகாணசபைகளுக்கு வழங்குதல் போன்ற நாட்டிற்கும் வரலாற்று ரீதியான பெருமைக்கும் பங்கம் விளைவிக்க கூடிய நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்று கொண்டமையினாலேயே த.தே.கூட்டமைப்பு தனது ஆதரவினை அவருக்கு வழங்கியுள்ளது.

இவ்வாறு நாட்டிற்கும் தேசத்திற்கும் இனத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயற்படும் ஆட்சியாளனுக்கு நாட்டை ஒப்படைப்பது மிகவும் பயங்காரமான விளைவுகளுக்கு ஆரம்பமாக அமையும். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்பார்ப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பும் சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் மட்டுமே. அவர்களின் இலக்குகளை அடைய ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வருகையையே எதிர்பார்க்கின்றனர்.

நாட்டுபற்றுடைய கலாச்சாரத்தை நேசிக்கும் தேசியதுவத்தை மதிக்கும் எவரும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்பார்ப்பது இல்லை.

ஜனநாயகத்தை பற்றி பேசும் ஐக்கிய தேசிய கட்சியினரின் செயற்பாடுகளை லேக்கவுஸ் முன்னிலையில் காணக்கூடியதாக இருந்தது. ஊனமுற்ற நபர் ஒருவரின் தாங்கு கோலை பிடுங்கி லேக்கவுஸ் உத்தியோகத்தர்களை தெஹியோவிட்ட பிரதேச மந்திரி சுஜித்சந்தன தாக்கியதை காண்டோம். இவர்களா ஜனநாயத்தை காக்க போகிறார்கள். காட்டுமிராண்டிகளாக செயற்படும் இவர்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மைத்திரி மஹிந்த ஆட்சிக்கான போராட்டத்தில் நாட்டையும் தேசியத்துவத்தையும் நேசிக்கும் மக்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Read more...

Friday, December 14, 2018

கனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா? சொல்றார் கேளுங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமதி கொண்ட அசையும் அசையா சொத்துக்கள் தனிநபர்களின் சொத்தாக மாறியுள்ள அதேநேரத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்கின்றமையும் யாவரும் அறிந்த விடயம்.

புலம்பெயர் தேசம் எங்கும் பினாமிகளின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலிடுகள் முதற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறு வியாபார ஸ்பானங்கள் வரை புலிகளின் தலைமை வன்னியில் அழித்தொழிக்கப்பட்ட மறுகணமே புலிப்பினாமிகளின் முதிசமாக மாறியுள்ளது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, ஸ்கண்டிநேவியா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இந்தியா, மத்தியகிழக்கு , ஆபிரிக்கா என உலகம் முழுவதும் மக்களின் பணம் புலிப்பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிளவு பட்டு நிற்கின்றது. இப்பிளவுகளுக்கான காரணமும் மக்களின் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்தான் என்பது பொதுவான வியடம். தங்களுக்குள் சொத்துக்களுக்காக அடிபடும்புலிகளால் தற்போது புலிகளின் சொத்துக்களின் விபரம் வெளிவரத்தொடங்கியுள்ளது.

அந்தவகையில் கனடாவை தளமாக கொண்டுள்ள உலகத் தமிழர் பேரவையின் ஆதரவாளரான தேவா என்பவர் புலிப்பினாமிகளின் ஒரு தொகுதியினரிடமுள்ள சொத்துக்கள் தொடர்பாக பேசியுள்ளார். கனடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் புலிப்பினாமிகளின் சொத்துக்கள் பொதுமக்களின் கைகளுக்கு செல்வதற்கு ஊடகங்கள் உழைக்கவேண்டும் என்றும் அவ்வாறு இன்றைய ஊடகங்கள் செயற்படுவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவரது வேண்டுதலை இங்கு நீங்கள் கேட்கலாம்..



இந்த வெளியீட்டின் பின்னர் புலிகளின் சொத்துக்களை பகுக்கி வைத்துள்ள பிறிதொரு தரப்பினைச் சார்ந்தவரான பாரா என்பவர், தேவா கீழ்குறிப்பிடப்படும் சொத்துக்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்றும் தேவா குறிப்பிட்டுள்ள சொத்துக்களுக்கும் மேலதிகமான சொத்துக்கள் பினாமிகளிடம் உள்ளதாக தனக்கு தெரிந்தவற்றை போட்டுடைத்துள்ளதுடன் தேவா மீது குற்றமும் சுமத்தியுள்ளார். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இவ்வாறு இவர்கள் பிளவுப்பட்டு அடிபடும்போதாவது, மக்களின் சொத்துக்கள் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.

அவரது அவரது வெளிப்படுத்தல்கள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

CMR, TVI, சுரப்பி கடை, கனடா முருகன் கோயில் வீடு, KEEL & FINCH வியாபார நிலையம், WTM கட்டிடம் வைத்திருந்தவர்கள் மக்களின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கவில்லையென்று கேள்வி கேட்பவர்கள், WTM அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் "தமிழ்"(புங்குடுதீவு) என்பவரின் நிர்வாகத்தில் இருக்கும் அருமருகன்(இளவாலை - ஏசியன் புடவைக்கடை), கமல்(உலகத்தமிழர் பத்திரிகை- வறுதலைவிளான்), ஊரெழுவு கண்ணன்(நிதிப் பொறுப்பாளர்), காந்தன்(வணிகம் - தையிட்டி) மற்றும் பலரின் கீழ் இருக்கும் பல மில்லியன் சொத்துக்களை மக்கள் சொத்தாக்க தயாரா ?

வருடம் 2010ல் நாம் எடுத்த முயற்சியில் CMR மற்றும் TVI பொதுச் சொத்தாக்க வந்த நேரத்தில், WTM அமைப்பினர் தங்களின் சுயநலத்தால் அதை செய்ய விடாது மறைமுகமாக தடுத்தார்கள். இன்று அது ஒரு தனியார் சொத்தாக இருப்பதற்கு WTM தான் 100% காரணம் !

அதற்கு நான் முக்கிய சாட்சி !

வருடம் 2009இல், கனடா WTM அமைப்பின் பொறுப்பாளர் "தமிழ்" தனது சகோதரியின் குடும்பத்தை இலங்கையில் இருந்து கனடாவிற்கு களவாக எடுத்ததற்கு, $450,000 ஏஜென்டிற்கு WTM பணத்தை கொடுத்ததாக கனடா உளவுத்துறையிடமும் ஆதரமுள்ளது. பணம் வேண்டியவரும் உண்மையை சொல்லி விட்டாராம் !
இது யாருடைய பணம் ?
இப்படி பல மில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கழை புடுங்குவதே சாலச் சிறந்தது !

இரு பிரிவினரும் விரைவில் தேசியத்தின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கி, ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு உதவுங்கள் அல்லது குடும்பத்தோடு சேர்ந்து நாம் நினைப்பதை செய்யுங்கள் !

விரைவில் எல்லோரினதும் குடும்ப புகைப்படங்களோடு சொத்து விபரமும் வெளியிடப்படும் !

முதுகெலும்புள்ள தமிழ் ஊடகத்துறையினர் மட்டும் நேர்மையாக மக்களின் குரலாக பதுக்கியவர்களை கேள்வி கேட்டுக் கொண்டேயிருங்கள் !
எதற்கும் அஞ்சாதீர்கள் உங்கள் பின்னால் நாம் இருக்கின்றோம் !

மக்களின் நண்பன்,
பரா(கனடா)

புலிகளின் பல்வேறு தரப்புக்களாலும் அபகரிக்கப்பட்டுள்ள அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். உலகம் பூராகவும் எடுத்துக்கொண்டால் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை தாண்டும் என்பது ஆய்வுத்தகவல்கள்.

எனவே இப்பெருந்தகைகள் தங்களிடமுள்ளவற்றில் ஓரிரு விகிதத்தையாவது மனமுவந்து வழங்கி இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைத்து செயற்படுத்துவார்களாயின் பாதிக்கப்பட்ட மக்களின் இருளுக்கு ஒளியேறும் என்பது எதிர்பார்ப்பு.

Read more...

பிரதமர் பதவியை ராஜனாமா செய்கின்றார் நாளை.

நாளைய தினம் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் லக்ஸமன் யாபா குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னரே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நாளை மக்களுக்கான விஷேட அறிவித்தலுடன் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பதவி விலகுவார் என அவரது புத்திரன் நாமல் ராஜபக்ச இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சிக்கு சந்தர்ப்பத்தை அளித்து வரும் பாராளுமன்ற தொடரில் எதிர்கட்சி ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றில் புதிய அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன், ஜனாதிபதி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டிய கடப்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் மஹிந்த தானாக ராஜனாமா செய்யாவிட்டால் ஜனாதிபதியால் புதிய பிரதமரை நியமிக்க முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மஹிந்த ராஜனாமா செய்துவிட்டாரா?

இன்று மேன்முறையீட்டு நீதிமன்று இடைக்கால தடை உத்தரவை நீடிக்க மறுத்ததை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடனான சந்திப்பு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு பேசப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பதவியை ராஜனாமா செய்துகொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச த சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சட்டரீதியாக உரித்தற்ற போலி பிரதமர் பதவியிலிருந்து அவர் ராஜனாமா செய்து கொண்டுள்ளதாக ஹர்ச த சில்வா இலங்கை நேரம் பிற்பகல் 6.36 க்கு பதிவிட்டுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான கலந்துரையாடல் இதுவரை முடிவடைந்து உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மஹிந்தவிற்கான தடையினை உறுதி செய்தது நீதிமன்று.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்க உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு எதிராக கடந்த 03ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்து மஹிந்த ராஜபக்ஷவால் உச்ச நீதிமன்றத்தில் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளிட்ட 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வழக்கை இன்று 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறித்த மனுவை பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தின் படி விசாரிப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனை எதிர்வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் விசாரிக்க உத்தரவிட்டது.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற மேன்முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரை, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கை இடைநிறுத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Read more...

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந்

கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெடிகுண்டு இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பே ஏற்படும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர் தா. ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில் பிரதேசத்தினதும், மக்களினதும் நலன்சார்ந்த பல விடயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தவிசாளர் வேழமாலிகிதன் சபையில் பேசுவது ஒன்று நடைமுறையில் செய்வது ஒன்று, சபையின் செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து எல்லா உறுப்பினர்களையும், எல்லா வட்டாரங்களை சமமாகவும், ஒரே மாதிரியும் நோக்காது தனது கட்சி அரசியலை பலப்படுத்துவதனை நோக்காக கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார். அவ்வாறே இந்த வரவு செலவு திட்டத்திலும் பல குறைப்பாடுகள் உண்டு.

சபையில் உள்ள எதிர்தரப்பு உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டிய கோரிக்கை விடுத்த விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர்

இந்த பிரதேசமும் இங்கு வாழ்கின்ற மக்களும் ஏராளமான தேவைகளுடன் காணப்படுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டம் அந்த தேவைகளில் ஒரு பகுதியேனும் அடுத்த ஆண்டுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு காணப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை. அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச வருமான நிதி மூலங்கள் தொடர்பில் குழப்பங்கள் காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வரி வருமான மிக குறைந்தளவு காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதனால் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

Read more...

தேர்தலை நடத்த முடியுமா நீதிமன்றிடம் கேட்கப்போகின்றாராம் மஹிந்த தேசப்பிரிய.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

மாணாண சபைகளுக்கான எல்லை நிர்ணயப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் புதிய முறையின் கீழ் தேர்தலை நடாத்துவது முடியாத காரணமாகையால் பழைய முறைப்படி தேர்தலை நாடாத்த முடியுமா என்று நீதிமன்றின் சிபார்சினை அறிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியயுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலை நடத்தாமை சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவினை குற்றம் சுமத்துவதாக அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

Read more...

திங்கள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம்.

எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என பரவலான ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி மைத்திரபால நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்க வேண்டியதன் கட்டாயத்தை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததாக அறியமுடிகின்றது.

இதேநேரம் சபாநாயகர் கரு ஜெயசூரியவை தனியாக சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில் தனக்குள்ள சிக்கல்களை விளக்கி மாற்று தேர்வு ஒன்றை நாடியபோதும், அதற்கு சாதகமான பதில் கரு ஜெயசூரியவிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் அந்த வகையில் சில நிபந்தனைகளுடன் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றிருப்பதால் தொடர்ந்தும் அவரையே பிரதமராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் ஊடகமொன்றிற்று தெரிவித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அத்தோடு தனது கட்சி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பாடாது எனவும் ஸ்ரீலங்கா சு.கட்சியில் எவரோனும் ஐக்கிய தேசிய கூட்டமைப்புடன் இணைவர்களாயின் அவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, December 13, 2018

அரச பணிகளுக்கு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் மீது பாரபட்சம். சம்பந்தனின் பித்தலாட்டம் ஆரம்பம். பீமன்.

கிழக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவ உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப்பரீட்சையும் இடம்பெற்றுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், வெட்டுப்புள்ளிகள் இனரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்தகவல்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்கு 105 , முஸ்லிம்களுக்கு 120 , தமிழர்களுக்கு 130 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்றைய அரசியல் ஸ்திரத்தன்மையின்மையில் தள்ளாடும் வயதிலும் தளராது ரணில் விக்கிரமசிங்கேவிற்காக களமாடிக்கொண்டிருக்கும் திருமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிங்கமாக சீறிப்பாய்ந்து கிழக்கு மாகாண ஆழுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இவ்விடயத்தில் பாதக விளைவுகள் ஏதும் ஏற்படுமுன்னர் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆழுனரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐயா விடயம் தொடர்பாக காலோசிதமாக செயற்பட்டமை பாராட்டுதற்குரியது. எதிர்காலத்திலும் இவ்வாறு செயற்படவேண்டும். (அதாவது வருகின்ற தேர்தல் முடிந்த பின்னும்.) ஆனாலும் இக்கடிதத்தின் உள்நோக்கம் தொடர்பாக ஒரு சந்தேகமும் உள்ளது. அச்சந்தேகம் யாதெனின் திடீரென வேலையற்ற தமிழர்கள் மீது ஐயாவுக்கு அக்கறை ஏன் வந்தது என்பதுதான் அந்த சந்தேகம். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உடனடியாக அதன் மொழிபெயர்ப்பு தமிழ் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆக இது எதிர்வரும் தேர்தலுக்கான அதிரடி ஆட்டமா என்பதுதான் எனது நேரடிக்கேள்வி.

இனரீதியான பாகுபாட்டுக்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியிருப்பார்களாயின் அது முற்றுமுழுதான சட்டமீறலாகும். பாரபட்சத்திற்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்குவது என்பது அவர்கள் அரச சேவையில் இணைந்து கொள்ளும்போது மேற்கொண்ட 'எச்சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டேன'; என்ற உறுதி மொழியை மீறுவதாகும். அத்துடன் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இன ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயற்பாடுகளின் கீழ் பாரிய தண்டனைக்குரியவையாகவும் அமையலாம். எனவே இவ்விடயத்தில் உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால், ஆழுனருக்கு கடிதம் எழுதியதுடன் நிறுத்திக்கொள்ளாமல், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இவ்வாறான இன ஒடுக்குமுறைக்கு அல்லது பாரபட்சத்திற்கு எந்த அரச அதிகாரியும் துணியாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவேண்டும்.

பாராளுமன்றில் தங்களது வர்க்கத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவின் உரிமை மீறப்பட்டுள்ளதாக உணர்ந்தபோது, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் , பிரதமர் நியமனம், அமைச்சரவை நியமனம் என்பவற்றை வரலாற்றில் என்றும் நடந்திராத வகையில் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த சம்பந்தன் ஐயாவால் முடியுமென்றால், தனக்கு வாக்களித்த மக்களின் உரிமை மீறப்படுகின்றபோதும் நீதிமன்று செல்வதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொள்வதற்கும் முடியுமாக இருக்கவேண்டும்.

இரா சம்பந்தன் அவர்கள் ஆழுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதி.

10 டிசம்பர் 2018


கௌரவ.ரோஹித்த போகொல்லாகம
ஆளுநர்
கிழக்கு ஆளுநர்
ஆளுநர் செயலகம்
உவர்மலை
திருகோணமலை

கௌரவ ஆளுனர் அவர்கட்கு,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக
மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1. கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.

2. விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்ட போது,இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை. எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

3. ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் 105
முஸ்லிம்கள் 120
தமிழர்கள் 130

4. ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு,இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்

5. அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது,வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில்,3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை
எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்

Read more...

கல்விக் கூட்டுறவு சங்கத்தின் (EDCS) தடை நீக்கம்.

கல்விக் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதிமன்றத்தின் ஊடாக விதிக்கப்பட்ட தடையுத்தரவு இன்று (13) நீக்கப்பட்டுள்ளது.

கல்வின் அமைச்சில் தொழில் புரியும் அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட 04 அங்கத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கால் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் நிகழ்கால பணிப்பாளர் சபையின் நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 12ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. அதன் காரணமாக நாடு பூராவும் உள்ள அதன் 21 மாவட்ட அலுவலகங்களின் 195000 அங்கத்தவர்களின் சேவை முற்றாகச் செயலிழந்தது.

எவ்வாறாயினும் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், பணிப்பாளர் சபைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்கியதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


Read more...

ரூ 1000 அடிப்படைச் சம்பளத்திற்காக தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தொழிலாளிகள். தொண்டமானின் பித்தலாட்டம் தொடர்கின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இந்த அழைப்பை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 12.12.2018 அன்று மாலை தொலைநகல் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான்,

11.12.2018 அன்று இரவு 8 மணியளவில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சந்திப்பு இடம்பெற்று வரும் பொழுது 9 மணி ஆகிவிட்டது. இதனையடுத்து ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக பணிபகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை பணிக்கு செல்லும்படி ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுத்தேன்.

சில தோட்டங்களில் இந்த அறிவிப்பு முறையாக கிடைக்காத பட்சத்தில் 12.12.2018 அன்றைய தினம் தொழிலாளர்கள் பல இடங்களில் பணிக்கு செல்லாது இருந்துள்ளனர். அதேவேளை 13.12.2018 அன்று தொழிலாளர்கள் வழமையான தொழிலுக்கு செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ம் திகதி காலை 10 மணியளவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக என்னிடம் உறுதியாக தெரிவித்தார்.

அதேவேளை இன்று முன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை தொழிலுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார். இதனடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்த நிலையில் பணிபகிஷ்கரிப்பை கைவிட நாம் தீர்மானித்தோம்.

இது இவ்வாறிருக்க பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுவதற்கு முன்பாக கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் பெருந்தோட்ட கூட்டமைப்பு தொழிற்சங்க தலைவர் எஸ்.ராமநாதன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்து விட்டே இந்த போராட்டத்திற்கான அழைப்பு காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு விடுத்தது. இதை அவர்கள் மறுப்பார்கள் என்றால் ஊடகங்கள் அவரிடமே வினாவ வேண்டும் என்றார்.

நான் வித்தை காட்டுவதாக சிலர் சொல்கின்றார்கள் என என்னிடம் வினாவுகின்றீர்கள். நான் வித்தைக்காரன் ஆகவில்லை. வித்தைக்காரனாகிய பின் நான் காட்டுவேன் என பதிலளித்தார்.

இந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் தொலைநகல் ஊடாக எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவாரத்தைக்கு அழைப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். (அவர் அனுப்பிய தொலைநகல் நகலை ஊடகங்களுக்கும் பரிசீலிக்க காட்டினார்) பத்திரிக்கை செய்தி தொடர்பாக நான் முதலாளிமார் சம்மேளனத்திடம் வினவியபோது, பத்திரிக்கைகளில் தவறாக இந்த செய்தி பிரசுரமாகியுள்ளது என தெரிவித்ததாவும், அவர் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.



Read more...

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையாம்! ரணிலை பிரதமராக்கவே மாட்டாராம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்ததாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபயரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தாங்கள் எடுத்துள்ளது மக்கள் சார்ந்த தீர்மானம் என்றும் மக்களுக்கு தேர்தல் ஒன்றை வழங்குவதற்காக தாம் எடுத்த முயற்சியை நீதிமன்று தடுத்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எவருக்கும் தொடர்ந்தும் விருப்பம் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்

Read more...

நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேவிபி தலைவர் அநுர குமார திஸாநாயக்க

மைத்திரி மஹிந்த கூட்டனி ஜனநாயகத்திற்கு சவாலாகவே செயற்பட்டனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நடைப்பெற்ற சிக்கலான சூழ்நிலைக்கு உயர் நீதிமன்றம் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலக வரலாற்றில் எந்த அரசாங்கத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு விதித்தது இல்லை. பாராளுமன்றத்தை கலைத்து ஜனநாயகத்திற்கு எதிராக சர்வதிகாரமாக செயற்படவே ஜனாதிபதி முற்பட்டார்.

சர்வதேசத்தினது தலையிட்டிற்கு எதிராகவும் மக்கள் மத்தியில் காணப்பட்ட குழப்பமான எண்ணங்களுக்குமான வெற்றியாகவே இதனை கருத வேண்டும். மைத்தரி மஹிந்த சர்வதிகார செயற்பாட்டிற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது என அவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

த.தே. கூட்டமைமப்பு ஐ.தே கட்சியுடன் ஒப்பந்தம் இல்லையாம். துள்ளினால் இரகசியங்களை வெளிவிடுவாராம் சுமந்திரன்.

ஐக்கிய தெசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருந்தால் பொதுஜன பெரமுன தமக்கு தருவதாக கூறிய விடயங்கள் தொடர்பாக வெளியிட நேரிடும் என மிரட்டியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளுமின்றியே ருணில்விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிக்க ஒத்துழைத்தது வழங்கியதாகவும் அவ்வாறு செய்தது இலங்கையின் ஜனநாயகத்தை காக்கவே என்றும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள் விசனம் தெரிவித்துள்ளார்.

Read more...

நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றார்களாம், ஆனாலும் தேர்தல் வேண்டுமாம். நாமல்

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தங்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளபோதிலும் தாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இருந்தபோதும் பாராளுமன்ற தேர்தல் அவசியம் என குரல்கொடுப்பவர்களின் பக்கமே நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல் இல்லாமல் மக்களிற்கு உண்மையான நீதி கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜனாதிபதி மீது ரணிலுக்கு நம்பிக்கையாம். ட்வீற்

அதிகாரமிக்க உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மதிப்பு கொடுத்து செயற்படுவார் என தான் நம்புவதாக டுவீட்டரில் ரணில் விக்கிரம சிங்க பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற கலைக்கப்பட்டது சட்டவிரோதமானதும் அரசியல் யாப்பிற்கு முரணானதும் என்ற தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் அவர் இப்பதிவினை இட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com