Wednesday, October 24, 2018

எழுத்தாளரை கொலை செய்ததன்மூலம், சர்வதேச நெருக்கடியில் அரேபியாவின் அரச குடும்பம். பாகம் 1 + 2

சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன விவகாரமே இன்று சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவின் முகமூடி கிழிந்ததனால் பாரிய தலைகுணிவை அது சந்தித்துள்ளது.

எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் உலகத்தில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை நன்கு அறிந்தவர். அத்துடன் இவர் அல்குவைதா இயக்க தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனினால் அதிகம் விரும்பப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.

பல தடவைகள் ஒசாமா பின் லாடன் இவரை அழைத்து பேட்டி வழங்கியிருக்கின்றார். அதனால் உலகில் இவர் அதிகம் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.

கொல்லப்பட்ட எழுத்தாளர் சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கெதிராக குறிப்பாக மன்னர் சல்மானுக்கும், முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கும் எதிராக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருகின்றவராவார்.

இவரது மரணம் பற்றிய உண்மையை கண்டறிந்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகை அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.

சவூதி அரேபியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அங்கு நிறுவப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இவரது பிரச்சாரத்தினால் தங்களது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மன்னர் குடும்பத்தினர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

இவர் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானதும், ஆரம்பத்தில் சவூதி அரசாங்கம் அந்த செய்தியை மறுத்திருந்தது.

எவ்வளவுதான் மறுத்தாலும், கொலையாளிகளின் புகைப்படத்துடன் கூடிய ஆதாராங்கள் வெளிவந்ததுடன் தனது உற்ற தோழமை நாடான அமெரிக்காவின் அதிபரே இந்த விவகாரத்தினை பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

அத்துடன் இந்த கொலை விவகாரத்தினால் சவூதி அரேபியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வலுவடைந்துகொண்டு வருகின்றது.
இதனால் வேறு வழியின்றி தனது தூதரகத்தில் வைத்தே அந்த கொலை நடந்ததை சவூதி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனாலும் அது சவூதி அரசாங்கத்தின் கட்டளைகளின் பேரில் கொல்லப்படவில்லை என்றும், அது பற்றி விசாரிப்பதாக கூறி பதினெட்டு சந்தேக நபர்களை சவூதி அரசு கைது செய்ததாக அறிவித்துள்ளது. ஆனால் எங்கே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் வசித்து வருகின்ற எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் ஏற்கனவே தனது நாட்டு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவர் மீண்டும் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக விவாகரத்து பத்திரத்தை கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஜமாலின் எழுத்துக்களால் மிகவும் ஆத்திரமடைந்த சவூதி ஆட்சியாளர்கள், இவரை தீர்த்துக்கட்டும் பொருட்டு இவரது விவாகரத்து பத்திர கோரிக்கையை தனக்கு சாதகாமாகவும், சந்தர்ப்பமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதாவது கடந்த இரண்டாம் திகதி இஸ்தான்புலில் உள்ள சவூதி தூதரகத்துக்குள் வந்து தனது விவாகரத்து பத்திரத்தினை பெற்றுக்கொள்ளுமாறு ஜமாலுக்கு அறிவித்துவிட்டு, அதே தினத்தில் தூதரகத்தினுள் வைத்து இவரை கொலை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பாதுகாப்புத் துறையில் பணிபுரிகின்ற மன்னர் குடும்பத்தின் விசுவாசத்துக்குரிய பதினைந்து பேர்கள் கொண்ட குழுவினர் சவூதியிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட இரண்டு தனியார் விமானங்கள் மூலமாக இஸ்தான்புலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

இவர்கள் தங்குவதற்காக இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நான்கு நாட்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இவர்கள் வந்த முதல் நாளே காரியம் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதனால், அதே தினத்திலேயே அந்த பதினைந்து பேர்களும் நாடு திரும்பிவிட்டார்கள்.

சவூதி தூதரகத்துக்குள் பிரவேசிக்கும் முன்பே எழுத்தாளர் ஜமாலுக்கு உள்மனதில் ஒருவித அச்சம் இருந்தது. இதனால் காதலியிடம் இருந்த அப்பிள் போனில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினூடாக இணைப்பினை ஏற்படுத்திவிட்டு, காதலி வெளியே காத்துக்கொண்டிருக்க இவர் தூதரகம் உள்ளே சென்றார்.

தூதரகத்தினுள் எழுத்தாளர் சித்தரவதை செய்யப்பட்டது மற்றும் அவர் அழுகின்ற சத்தம் தொடக்கம் கொல்லப்பட்டது வரைக்குமான குரலோசைகள் சில நிமிடங்கள் வரைக்கும் காதலியிடம் இருந்த போனில் பதிவாகியுள்ளது.

ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஊடாக பதிவான விடயம் பின்புதான் கொலையாளிகளுக்கு தெரியவந்தது. அதனால் கொல்லப்பட்டவரின் கையிலிருந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் மூலமாக பதிவாகியதை அழிப்பதற்கு கொலையாளிகள் கடுமையாக முயன்றும் அது முடியவில்லை.

இதன் காரணமாகவே சவூதி தூதரகத்தில் கொலை நடந்த விடயத்தினை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் நிலை சவூதி அரசுக்கு ஏற்பட்டது.

இந்த கொலையாளிகள் அனைவரிடமும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இருந்ததனால் அவர்கள் விமான நிலையத்தின் VIP கடவை வழியாகவே வந்து அதே வழியாகவே சென்றுள்ளார்கள். செல்லும்போது அவர்களிடம் பயணப் பைகள் இருந்தது. அவர்களது பயணப்பைகள் பரிசோதிக்கப்படவில்லை. சிலநேரங்களில் அந்த பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்திருக்கலாம் என்று துருக்கி புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.

எழுத்தாளர் ஜமாலின் தலையை கொண்டுவர வேண்டும் என்று இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உத்தரவிட்டிருந்ததாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததே இந்த சந்தேகத்துக்கு காரணமாகும்.

இந்த கொலை நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்பு குறிப்பிட்ட பதினைந்து கொலையாளிகளில் ஒருவரான சவூதியின் ரோயல் விமானப்படையின் லெப்டினன்ட் தர அதிகாரியான அல் வஸ்தானி என்பவர் சவூதியில் நடைபெற்ற கார் விபத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது விபத்து பற்றிய காணொளியோ அல்லது விபத்து நடைபெற்ற இடமோ காண்பிக்கப்படவில்லை.

இதிலும் சந்தேகம் எழுகின்றது. அதாவது உண்மையில் இவர் விபத்தில் கொல்லப்பட்டாரா ? அல்லது இவர் பிரதான சாட்சி என்பதனால் அதனை மறைக்கும்பொருட்டு மரணித்ததாக அறிவிப்பு செய்யப்பட்டதா ? அல்லது சவூதி அரசாங்கமே இவரை கொலை செய்ததா ? போன்ற கேள்விகள் எழுகின்றது.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பதினான்கு பேரினது நிலைமை என்னாகும் ? இவர்களும் எதிர்காலத்தில் காணாமல் போவார்களா ? அல்லது கொல்லப்படுவார்களா ? என்ற சந்தேகமும் எழுகின்றது.

தொடரும்.................... முகம்மத் இக்பால்

Read more...

Tuesday, October 23, 2018

சீஐடி யினுள் வைத்திருந்து என்னை கொல்ல முயற்சி செய்கிறார்கள். நீதிபதியிடம் றோ சந்தேக நபர்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியரான, மெர்சலின் தோமஸ் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கிழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, சீஐடியினுள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் அங்கு வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றில் கூறியுள்ளார்.

சந்தேக நபரின் முறையீட்டை செவிமடுத்த கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரட்ண அவரது முறைப்பாட்டை எழுத்துமூலம் தருமாறு வேண்டியதுடன், அவற்றை எழுதுவதற்கான கடதாசி மற்றும் பேனையை வழங்குமாறு சிறைச்சாலை உத்தியோகித்தர்களுக்கு உத்தரவிட்டார்.

Read more...

JVP அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாயின் தமது தலைமைக் காரியாலயத்தின் முன்னேயே செய்ய வேண்டும். கம்பன்பில

ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி அரசின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று கொழும்பில் மேற்கொண்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாயின் மக்கள் விடுதலை முன்னணி உறுபினர்கள் யாவரும் அவர்களது தலைமை காரியாலயத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடலாம் என கம்பன்பில கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார.

தொடர்ந்து அவர் கூறுகையில் : அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி உறுபினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த் கொழும்பிற்கு வருவதாக கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கம் 2015 ஜனவரி 8 ஆட்சிக்கு வந்தததாலே நாட்டை சீர்குலைத்தது. அதன் வெற்றிக்கு ம.வி.மு பாரிய ஒத்துழைப்பை நல்கியது என நான் கூறவில்லை, கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்கவே கடந்த 2015 ஜனவரி 20 பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளாரர்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி இன் நாட்டின் மக்கள் பாரியதொரு வெற்றியை கண்டிருக்கிறார்கள். அவ் வெற்றிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளராக மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திற்கு உள்ளே இருந்த சிலரும் வெளியில் இருந்த எம்மை போன்றவர்களினாழும் , த.தே.கூ உட்பட அனைவராலும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றது.

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தது நாங்களே என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ஜனவரி 20 பறைசாற்றினார். அதே போல் இவ் அரசை தக்கவைத்து தேர்தலை பின்போடுவதும் ம.வி.முன்னனியே. அப்படியாயின் ம.வி.மு உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தை எதிர்பானார்களானால் அவர்கள் செய்ய வேண்டிய, இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பாடுப்பட்டு ஆட்சியை தக்கவைக்க நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் விடுதலை முன்னணி தலைமைக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடாத்த வேண்டும்.

Read more...

பிரேமானந்த சுவாமியை பற்றி பேசாதீர்கள்! தவராசாவிடம் கெஞ்சிய விக்கினேஸ்வரன்.

இன்று வட மாகாண சபையின் இறுதி அமர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய சபையின் எதிர்கட்சி தலைவர், இந்திப்பிரதமர் இலங்கை வந்திருந்தபோது, பாலியல்குற்றத்திற்காக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் அவரை வேண்டினார். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த லாபம் யாது என தனது பேச்சில் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறிக்கிட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இவ்விடயம் தொடர்பில் இச்சபையிலே பல தடவைகளை பேசப்பட்டுள்ளது. இப்போது அதுபற்றி பேசக்கூடாது என முறையிட்டார். அவரின் குறுக்கீட்டை பலமாக எதிர்த்த எதிர்கட்சி தலைவர், அவ்விடயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயம் என்றும் அது தொடர்பில் பேசுவது தனது உரிமை என்றும் தொடர்ந்தார்.




பேச்சின் முழுவடிவம் வருமாறு :

மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுதினம் பத்திரிகையொன்று “மலர்ந்தது தமிழர் அரசு” என்ற தலைப்புடனான செய்தியினை வெளியிட்டிருந்தது. இத் செய்தியினை ஒர் சொற்றொடருக்குரிய விளக்கமாக நான் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவுடன் அமைக்கப்படும் மாகாணசபையானது “தமிழர் அரசு” எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவையாற்றுமோ அவ்வாறான சேவையினை மாகாணசபை வழங்குமென்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் என்பதனையே அச் செய்தி தலைப்பு வெளிப்படுத்தியது.

இச்சபையின் கன்னி அமர்விலே கௌரவ முதலமைச்சர் அவர்கள் இறைவனுக்கு காணிக்கையினை செலுத்தி தன்னை வழிநடத்தும் குருநாதரைப் போற்றி பணிந்து ஆற்றிய உரை தமிழ்மக்களின் அவ் எதிர்பார்ப்பினை மேலும் உறுதிசெய்வதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு தன்னை சில்லிட வைப்பதாக கௌரவ முதலமைச்சரே தனது உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்
கௌரவ முதலமைச்சரின் அன்றைய உரையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்த சில விடயங்களை அன்றைய கான்சாட்டிலிருந்து நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.



“இருக்கும் பொறிமுறைகளையும் வழிமுறைகளையும் முடியுமானளவு அனுசரித்து முன்னேற திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெளிப்பாட்டுத்தன்மை, பதிலளிக்கப்பட வேண்டிய கடப்பாடு மற்றும் சட்டவாட்சிக் கொள்கை என்பவற்றின் அடிப்படையிலேயே வடமாகாண சபை இயங்கும். இலஞ்ச ஊழல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது, அதேநேரத்தில் வடமாகாண சபை எப்பேற்பட்ட திட்டமிடப்பட்ட மனித பொருள் வளம் சம்பந்தமானதும் அபிவிருத்தி சம்பந்தமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்பதைனை அடையாளம் காண வேண்டிய அவசிய தேவை எமக்குள்ளது.

புலம்பெயர்ந்த உறவுகள் மனிதவளம், பொருள் வளம் சம்பந்தமாக எமக்கு அனுசரணைகள் ஈர்வர் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. நிதியுதவிகளையும் இது சம்பந்தமாக எமக்கு வழங்க கோருகின்றோம்.

எம்மை பொறுத்தவரை நாம் நாட்டவிருக்கும் அத்திவாரகற்கள் நீதி, நல்லாட்சி, நம்பிக்கை, சமத்துவம், சுதந்திரம் என்பனவாகும்.

பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பவற்றை நோக்கிய நாம் அமைக்கப்போகும் பாதைகள் செல்லும்.

சர்வதேச நாடுகள் இருதரப்பாரின் ஒத்துழைப்புடன் எமக்கு தொழில் சார் அறிவுரைகளை வழங்கி, நிதி வழங்கி மேற்கண்டவற்றை வெற்றிகர நடாத்தி முடிக்க எமக்கு பக்கபலமாகவும் பலமாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.”

எம்மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கக் கூடிய விதத்தில் அன்று கூறியதில் ஏதாவது ஒன்றையேனும் கடந்த ஐந்து வருட காலத்தில் நடைமுறைப்படுத்தி இருக்கின்றோமா என்று இத் தருணத்தில் மீளாய்வு செய்வதில் தவறில்லையென்று கருதுகின்றேன்.

அதற்கு முன் ஒருவிடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்களோ, இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிதொடர்பான விடயங்களோ, காணாமற்போனோர் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் விடயங்களிலோ மாகாணசபை தலையிட வேண்டாம் என்று நான் கூறவில்லை. இவ்விடயங்களில் எமது கருத்தினை பதிவு செய்தததில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால், இவ்வாறான விடயங்களில் மட்டும் எமது நேரத்தை முழுமையாக செலவழித்துக் கொண்டு மாகாணசபையின் நிறைவேற்று செயற்பாடுகளினையும் மக்களுக்கான அபிவிருத்தியினையும் புறந்தள்ளுவது தான் எனது குற்றச்சாட்டு.

முதலமைச்சர் தனது உரையில் எங்களுக்கு அபிவிருத்தி முக்கியமல்ல என்று குறிப்பிட்டிருந்தார். கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறே இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள்.

முதலமைச்சர் நிதியத்தை ஆளுநர் அனுமதிக்காததால் தான் எம்மால் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ள முடியவில்லையென முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போலதான் இது அமைகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் நிதியினை ஒருங்கிணைத்து அபிவிருத்தி வேலைகள் செய்வதாயின் எத்தனையோ நிதியங்களை ஆரம்பித்து அதனூடாக புலம்பெயர் பங்களிப்பினை ஒன்றிணைத்து செயற்படுத்தியிருக்க முடியும். ஆளுநர் வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்தவர்களை முதலீடு செய்ய அழைப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார். அவர் என்ன ஆளுநர் நிதியத்தை ஏற்படுத்தி விட்டா முதலிட வரும்படி கூறியிருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்வதற்கு நிதியம் தேவையில்லை.

இனி நாம் விட்ட தவறுகள், இழந்த சந்தர்ப்பங்கள், வினைத்திறனற்ற செயற்பாடுகளை, அதிகார வரம்புமீறல் மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பனவற்றில் முக்கியமான சிலவற்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.

யாழ். கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் திட்டத்தினை நிராகரித்து விட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வதாக இச்சபையில் அறிவித்திருந்தும், இதுவரை மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமை கையிலிருந்ததையும் நழுவவிட்ட எமது கெட்டித்தனமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கு பெயர் குறிப்பிட்டு ஒர் ஆலோசகரை சிபார்சு செய்ததன் விளைவாக எமக்கு கிடைக்கவிருந்த நிதியினை இழந்து யு.என்டி.பி உடன் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்ததன் மூலம் தனிநபருக்காக ஒர் சர்வதேச ஸ்தாபனத்தையே பகைக்கின்ற நிலைக்கு நாம் திறமைசாலிகள் என்பதனை நிருபித்துள்ளோம்.

இந்திய பிரதமர் யாழ்.வந்திருந்த போது எம்மக்களின் துயர்துடைக்க இந்தியாவின் அனுசரணையை வேண்டி நிற்பதற்கு பதிலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்த சுவாமி ஆச்சிரமத்தை சேர்ந்த கொலையாளிகள் நான்கு பேரின் விடுதலை தொடர்பாகக் கோரிக்கை விட்டது எம் மக்களின் பிரச்சினைகளில் எமக்கு உண்மையில் எவ்வளவு அக்கறையிருக்கின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றது.

மாகாணத்திற்கு வேண்டிய நிதித்தேவைப்பாட்டினை அதன் நியாயப்பாட்டுகளுடன் மத்தியை கோராது இருந்துவிட்டு எமக்கு அரசு போதிய நிதி தருவதில்லையென்ற சபையில் உரக்கக் கூறி எமது இயலாத்தன்மையை மூடிமறைத்துள்ளோம்.

முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் நோக்குடனான பாரிய துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும், சுகாதார அமைச்சினை தவிர, எந்த அமைச்சுக்களினாலோ அல்லது திணைக்களங்களினாலோ மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

இதுவரை எம்மால் 15 நியதிச்சட்டங்களே முழுமையாக ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியதிச் சட்ட விடயத்தில் நொண்டிக் குதிரைக்கு சறுக்கின சாட்டுப் போல் எமக்கு நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு தனியான ஒர் சட்டவரைபு பிரிவினை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால் வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சட்டவரைபு நிபுணர்களைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எமக்கு உதவ முன்வந்தும் அதனை தட்டிக்கழித்ததே எமது வரலாறு. சபைத்தலைவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்ற ஒர் புதிய கட்டுக்கதையும் இப்போது அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நியதிச் சட்டங்களுக்கு அமைவாக ஒழுங்கு விதிகள் சேவைப் பிரமாண குறிப்புகள் என்பன வரையப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். இதுவரை அது தொடர்பாக எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு ஆதாரம்.

லண்டன் மாநகரில் உள்ள கிங்டன் உள்ளுராட்சி மன்றத்திற்கும் அதேபோல் கனடாவிலுள்ள மார்க்கம் நகராட்சிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் செயற்படுத்தப்பட முடியாது என நான் முன்னரே இச்சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இன்று யாராவது அவ்வொப்பந்தங்களில் உள்ள விடயங்கள் ஏதாவது ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று காட்ட முடியுமா?

ஒரு சிறிய நிர்வாக செயற்பாட்டைக் கூட செயற்படுத்த திறனற்றவர்களாக செயலாளர்களுக்கான சுற்றறிக்கையொன்றை முதலமைச்சரின் கையொப்பத்துடன் அனுப்பி இறுதியில் நீதிமன்றத்தில் அச்சுற்றறிக்கையினை வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்ட பெருமை எம்மைசாரும்.

அரசினால் வழங்கப்படும் மூலதன நிதியினைக் கூட முழுமையாக குறிப்பட்டுள்ள வருடத்திற்குள் செலவழிக்காமல் அந்நிதியினை நிலையான வைப்புகளில் இட்டுவிட்டு நிதி முற்றாக குறிக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டு விட்டது என ஆரம்பகாலங்களில் சபைக்கும் எமக்கு வாக்களித்த மக்களுக்கும் பொய்யான தகவல்களை கூறியதை கண்டித்து நான கணக்காளர் நாயகத்திற்கு கூட அறிவித்திருந்தேன். என்னுடைய அன்றைய செயற்பாடு தான் தொடர்ச்சியாக அவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வழிசமைத்தது.

எமது அசட்டைத்தனமான செயற்பாடுகளாலும், சில சேவைகளுக்கான பிரமாணக்குறிப்புக்கள் இன்னும் தயார் செய்யப்படமையினாலும் 3,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றது.
அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட சட்டபூர்வமற்ற மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவையென குறிப்பிடப்பட்டிருந்தும் இதுவiர் அவ்வாறான மேலதிக விசாரணைகளோ நடவடிக்கைகளோ ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாகாணசபை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையினை மேலும் இழக்கச் செய்துள்ளது.

வருடத்திற்கு வெறும் 20 மில்லியன் ருபாவை எமது மக்களின் பயன்பாட்டிற்கு பெற ஒப்பந்தமிட்டு பளையின் காற்றலை அமைப்பதற்கு யூலிப்பவர், பீற்றாபவர் என்ற நிறுவனங்களுக்கு அவர்கள் வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 1400 மில்லியன் இலாபத்தை பெறுவதற்கு காணியை வழங்குவதற்கு ஒப்புதலை வழங்கியதன் மூலம் எம்மக்களுக்கு செய்த மகா தவறுக்கு மாகாணசபை என்ன பிரயத்தனம் மேற்கொள்ளப் போகின்றது. இராணுவத்தினரின் பாவனைக்கு தான் காணியை வழங்கவில்லையென முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். அப்படியெனில் ஏன் பளையின் காற்றாலை அமைப்பதற்கு காணியை வழங்கினீர்கள்?

எம்மால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எத்தினை பாரிய குற்றச்சாட்டுகள் இருந்தும் அதுதொடாபர்பாக ஏதாவது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா. சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான விடயம், மூங்கில் நடுகைத்திட்டத்தினை நிராகரித்தமை, அனுமதி பெறத்தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் அனுமதி பெற வேண்டுமென ஓரு அமைச்சர் வலியுறுத்தியமை, அதிகார துஸ்பிரயோகங்கள், நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் இவை தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுக்காமை பனங்காட்டு நரியை பாதுகாக்கும் நடவடிக்கைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக ஒரு அமைச்சரவையைக் கூட கூட்ட முடியாத நிலைமைக்கு நம்மை நாமே இட்டு சென்றது எமது வினைத்திறனற்ற செயற்பாட்டின் உச்சகட்டமென்றே கருத வேண்டியுள்ளது.

இத்தருணத்தில் நாங்கள் நிறைவேற்றிய பிரேரணைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். இதுவரை 444 பிரேரணைகள் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். இவற்றில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பான்மையானவை எதுவித பிரயோசனமற்றவை. எமது சபை நேரத்தை வீணாக்கியதே நாம் கண்டவை. இருந்தும் சபையின் ஐக்கிய செயற்பாட்டிற்கு குந்தகமாக செயற்படக்கூடாது என்பதானாலேயே அப்பிரேரணைகளை நான் எதிர்த்து நிற்கவில்லை. மாகாண சபையின் சில பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சாசனம் வரை தாக்கத்தை கொடுத்திருக்கின்றது என்பதினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தொடர்ச்சியாக எமது மாகாண சபை வினைதிறனற்றே செயற்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றேன் என்று கருதவேண்டாம். அரசியலமைப்பு மாற்றத்துக்கான மாகாணசபையின் வரைவு மற்றும் முதலமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி நான் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் முன்சென்று எம் மக்களுக்கு வேண்டிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பிரஸ்தாபித்தது மட்டுமல்ல அரசியலமைப்பு மாற்றத்துற்கான மாகாணசபையின் வரைபினை கௌரவ முதலமைச்சருடன் சென்று சபாநாயகரிடம் கொடுப்பதிலும் எனது பங்கை வகித்துள்ளேன். ஆதலினால் எதிர்க்கட்சித்தலைவர் என்பதற்காகவோ, அல்லது அரசியல் காழ்ப்புணர்விலேயோ நான் விடயங்களை எதிர்க்கவில்லை. மாறாக எமது பலவீனங்கள் எமது வினைதிறனற்ற செயற்பாடுகள் தவறுகள் இழந்த சந்தர்பங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்த மாகாணசபையை வினைதிறனுள்ளதாக செயற்பட வைப்பதற்கு முனைந்துள்ளேன் என்பதனைத் தான் என்னால் கூறி வைக்க முடியும்.

அவைத்தலைவர் அவர்களே, எமது தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஒவ்வொரு விடயத்தினையும் திறந்த கண்ணோட்டத்துடன் அகாமல் அரசியலாக்க முனைந்ததன் விளைவு என்றே கருதக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு சம்பவத்தை கூறி எனது உரையினை முடிவிற்கு கொண்டு வருகின்றேன்.

சைவர்களுக்கு திருவாசகம் ஒர் புனிதநூல். எமக்கு அண்மையில் திருவாசக அரண்மனை கூட இருக்கின்றது. இத் திருவாசகத்தை மாணிக்கவாசகப் பெருமானார் இயற்றியது தொடர்பாக ஒர் வரலாற்று சம்பவம் கூறப்படுகின்றது. குருந்த மர நிழலுக்கு கீழே மாணிக்கவாசகர் அமர்ந்திருந்த போது சிவபெருமான் அங்கு வந்து அவரை “வா” என அழைத்து இருக்கின்றார். முழுமையான ஆத்ம நிலையை அடையாத மாணிக்கவாசகருக்கு இறைவன் தான் அழைக்கின்றார் என்று தெரியாமையினால் அவருடன் போக மறுக்கின்றார். சிவபெருமான் ஏனைய சிவனடியார்களை அழைத்துக் கொண்டு சென்று விடுகின்றார். அதன் பின்புதான் மாணிக்கவாசகருக்கு தெரியவருகின்றது. தன்னை அழைத்தது சிவபெருமான் என்று.

தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பினை இழந்துவிட்டேன் என்று கதறிய கதறலே திருவாசகம் என்று கூறப்படுகின்றது. அதேபோல் ஐந்து வருடங்களாக எமக்கு கிடைத்த வாய்ப்புக்களை இழந்ததை நினைத்து கதறுவோமாயின் ஒரு பெருவாசகமே உருவாக்கலாம் எனக் கூறிக் கொண்டு, இதுவரை காலமும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் வாக்கெடுப்புக்குச் செல்லாமல் எல்லா விடயங்களிலும் ஏகோபித்த முடிவிற்கான இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி திறமையாகச் செயற்பட்ட அவைத்தலைவர் அவர்களுக்கும், கௌரவ முதலமைச்சர், முன்னாள் இன்னாள் அமைச்சர்கள், மற்றும் மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும் எமது தனிப்பட்ட உறவுகளில் தளர்வு ஏற்படாமல் என்னுடன் ஐக்கியமாக பழகிவரும் சகல என் சக மாகாண சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு வகையிலும் எனக்கும் எனது அலுவலகத்துக்கும் முழுமையான ஒத்தாசை வழங்கிய பேரவை செயலக அலுவலர்களுக்கும் மற்றும் எனக்கு எப்போதும் அனுசாரணையாக செயற்பட்ட பிரதம செயலாளர், பிரதி பிரதம செயலாளர்கள், மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் யாவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை கூறி வைக்க விரும்புகின்றேன்...

Read more...

15 வயது கர்ப்பிணி சிறுமியை, கொன்றவனுக்கு மரண தண்டனை - நாளை பிறந்த தினம்

15 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரை, கர்ப்பிணியாக்கிக் கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த திருகோணமலை இளைஞனை, குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை ​மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து, இன்று (23) தீர்ப்பளித்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், ​போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாமையால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனினால், இன்று (23) வழங்கப்பட்டது.

15 வயதுக்கும் குறைந்த சிறுமியை, 2010ஆம் ஆண்டு, 6ஆம் மாதம் 27ஆம் திகதியன்று அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபகஹவுல்பொத்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என, இருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஹேரத் முதியன்சேலாகே டில்ஹானி குமாரி குணதிலக்க என்ற 15 வயதுக்கு குறைந்த சிறுமியைத் திருமணம் முடிப்பதாகக் கூறியே, மேற்படி வழக்கின் குற்றவாளி, அப்பிள்ளையுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

பிள்ளை கர்ப்பமுற்றதை அறிந்த அவர், மேலே குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த குளத்துக்குள் மூழ்கடிக்கச் செய்துள்ளார். அப்பிள்ளை இறந்ததன் பின்னர், சடலத்தை எடுத்துப் புதைத்துள்ளார். அதன்பின்னர், அதனைத் தோண்டியெடுத்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கின் முதலாவது சந்தேக நபரான மொறவெவ, இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த நயிது ஹென்னதிகே நிஷாந்த ஜெயலத் (வயது 28) என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார். இரண்டாவது சந்தேக நபரான அவரது உறவினரான பின்னதுவகே இஸுரு சமிந்த சில்வா என்பவரும் அவருடன் சென்றுள்ளார் எனக் குற்றப்பத்திரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பு, இன்று (23) வாசிக்கப்படுவதற்கு முன்னர், குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இருவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர்.

முதலாவது சந்தேநபரே திட்டமிட்டு இக்கொலையைப் புரிந்துள்ளார் என இனங்கண்ட நீதிமன்றம், வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், சம்பவம் நடக்கும் காலத்தில், வயதில் சிறியவனாக இருந்தமையால், ​குற்றவாளியுடன் தெரியாத் தன்மையில் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே, இது, திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள மனிதப் படுகொலை என இனங்கண்ட நீதிமன்றம், முதலாவது சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இரண்டாவது சந்தேகநபரை, வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இன்று (23) மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, நாளை 24ஆம் திகதி 28 வயது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

Read more...

கல்முனை பிரதேச செயலக கோவில் விவகாரம் தொடர்பில் சங்கரியாருக்கு ஒன்றும் தெரியாதாம். உலாமா கட்சி.

கல்முனை பிரதேச செயலகத்தில் இந்து ஆலயத்திற்கான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்திற்கான சட்டரீதியான அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிடுமாறு கோரியும் மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்த சங்கரி, இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும் என வேண்டியிருந்தார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

கோவில் சம்மந்தப்பட்ட விடயத்தில் கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வு இனங்களுக்கடையேயான நல்லுறவை பாதிப்படையச் செய்யும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேணடும். சகல இன மத மக்களின் வணக்கஸ்தலங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதொன்றாகும். இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு மதமும் போதிக்கின்றது. இதனை உணர்ந்து கொண்டால் மாற்று மதத்தினரின் உள்ளங்ளை நோகடிக்கும் எண்ணம் எவருக்கும் ஏற்படாது.

இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டு மிகவும் சுலபமான முறையில் இதனை அணுகி இருக்கலாம். அதனை விடுத்து தன்னிச்சையாக இதனை நீதிமன்றம் வரை எடுத்து சென்று விட்டு, அதன் பிறகு நீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளபடியால், அது சம்மந்தமாக எவரும் சபையில் கருத்துக் கூற முடியாது என்று கூறுவது, ஒரு ஜனநாயக செயற்பாடாக நான் கருதவில்லை. ஜனநாயக முறைப்படி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை அணுகியிருக்கலாம். நல்லாட்சி அரசும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது.

தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் மொழியால் ஒன்று பட்டவர்கள் என்ற காரணத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை இரண்டு சமுகங்களுக்கிடையில் ஒற்றுமையை பேணுவதற்காக பாடுபட்டு வந்துள்ளது. அந்த வகையில்தான் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபையில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தர முன்வந்தது. அந்த நல்லெண்ணத்தை சகல தரப்பினரும் புரிந்து கொண்டு, இந்த கோவில் சம்மந்தமான பிரச்சினைக்கு மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி அனைவரிடமும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றது.

மேற்படி அறிக்கையினை காட்டமாக சாடியுள்ள உலாமக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், ஆனந்த சங்கரி அவர்கள் விடயம் தொடர்பான தெளிவின்றியே மேற்படி அறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, இறை அச்சமுள்ளார் பிற மதத்தவரின் வழிபாட்டுத்தலங்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் மேற்படி வணக்கஸ்தலத்துக்கெதிராக நீதிமன்றத்தை நாடியது தவறு என்பது போன்றும் அறிக்கை விட்டுள்ளார்.

திரு. வி. ஆனந்த சங்கரி அவர்கள் நாம் பெரிதும் மதிக்கும் தமிழ் தலைவர். இனவாதம் கொஞ்சமும் இல்லாத தமிழ் பெருமகன். அப்படியிருந்தும் கல்முனையில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை சரியாக தெரியாமல் ஒரு பக்க தரப்பின் தகவலை மட்டும் வைத்து அறிக்கையிட்டமை தவறாகும்.

கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் எந்தப்பிரச்சினையும் இன்றி சகோதரர்களாகவே வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் தமது அரசியல் நலனுக்காக இம்மக்கள் மத்தியில் இனவாதத்தினை ஊக்குவித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

கல்முனையில் ஒரேயொரு பிரதேச செயலகம் அதுவும் தமிழ் மொழி பிரதேச செயலகம் இயங்கி வந்தது. யுத்த காலத்தில் புலிகளின் ஆயுத பலத்தால் கல்முனை உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மேற்படி உப செயலகம் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றும் தமிழ் பிரிவு என்றும் அழைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது. எந்தவொரு பிரதேச செயலகமும் இனத்தின் பெயரால் அழைக்க முடியாது என்று தெரிந்தும் இனவாதத்தை உருவாக்கி தமிழ் மக்களை உசுப்பேற்றுவதற்காகவே தமிழ் இனவாத அரசியல்வாதிகளாலும் அவர்களின் அதிகாரத்துக்கு பயந்த கல்விமான்களாலும் பாவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்முனையில் முஸ்லிம்களின் வாழும் இடங்களையும் அவர்களின் வியாபாரஸ்தலங்களையும் உள்ளடக்கி புதியதொரு தனியான பிரதேச சபையை உருவாக்க கள்ளத்தனமாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. கல்முனை முஸ்லிம்களின் பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இது பற்றி அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது எதிர்ப்பை காட்டியதால் முஸ்லிம்களின் நிலபுலன்களை கபளீகரம் செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.

அதன் பின் பிரதேச செயலக வளவில் கோவில் கட்டுமான பணிகள் அனுமதியின்றி ஆரம்பமான போது அதனை நிறுத்தும் படி அ. இ. மக்கள் காங்கிரசின் ஆதரவாளர் மூலம் அரச அதிபரினால் கூறப்பட்டு இடை நிறுத்தப்பட்டது. பின்னர் இரவோடிரவாக கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் கல்முனை மேயர் சட்டபூர்வமற்ற இந்த வணக்கஸ்தலத்தை உடைக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்துள்ளார். இத்தனைக்கும் மேற்படி வணக்கஸ்தலம் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்ட போதே மேயரினால் தடை உத்தரவு பெற்றிருக்க முடியும். அதனை செய்யாமல் இருந்து விட்டு எல்லாம் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இறுதியிலாவது அவர் சட்டத்தை நாடியது சரியான செயலாக இருப்பினும் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் திட்டமிட்டு கல்முனையில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகமும் உலமா கட்சிக்கு உண்டு.

இந்த உண்மைகளை புரியாமல் அத்துமீறி அனுமதியின்றி கட்டப்பட்ட வணக்கஸ்தலத்தை மற்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என மூத்த அரசியல்வாதியான ஆனந்த சங்கரி சொல்வது முறையான செயல் அல்ல.
கல்முனை பிரதேச செயலகத்துள் பணி புரியும் இந்துக்களுக்கு கோவில் தேவையாயின் அனுமதி பெற்று கோவில் கட்டலாம். அதே போல் அங்கு பணிபுரியும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்பட்டால் பௌத்தர்களுக்கும் வணக்கஸ்தலங்களை அதே அனுமதியுடன் கட்டிக்கொள்ள முடியும்.

Read more...

இலங்கை முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. By M. Thevarajah

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் கடந்த திங்களன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தோட்ட தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஒரேயடியாக நிராகரித்துள்ளது. தற்போது கொடுக்கப்படும் 500 ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை 1,000 வரை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரிக்குமாறு தேயிலை மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோருகின்றனர். அக்டோபர் 15 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் நூற்றுக்கு 20 சதவீத அதிகரிப்புக்கே ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது தினசரி ஊதியத்தை 100 ரூபாவால் மட்டும் அதிகரிக்க உடன்பட்டுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு இந்த தொகை எந்த விதத்திலும் போதுமானதல்ல.

முதலாளிமார் சம்மேளனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) கட்டுப்பாட்டிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியோடு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் பங்குபற்றியிருந்தன.

தோட்டக் கம்பனிகள் தங்கள் ஊதிய கோரிக்கையை நிராகரிப்பதையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வலுவான எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது. அடிப்படை நாள் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கக் கோரியும் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், கிட்டத்தட்ட 6,000 தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் திங்கட் கிழமை யட்டியன்தொட நகரத்தில் பல மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மீதும் கூட்டு ஒப்பந்தத்தின் மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். "நாங்கள் சிறிய சம்பள அதிகரிப்பை பெறக் கூட அடிக்கடி தெருக்களில் இறங்கி போராட வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. அவர்கள் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தங்கள் எப்போதும் எங்களுக்கு எதிராகவே இருந்துள்ளன. அத்தகைய கூட்டு ஒப்பந்தங்கள் எங்களுக்கு அவசியம் இல்லை," என அவர்கள் தெரிவித்தனர்.

வானைத் தொடும் விலைவாசி அதிகரிப்புடன் இப்போது கிடைக்கும் வறிய மட்டத்திலான ஊதியம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என்றும், நூற்றுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு கட்டாயம் வேண்டும் என்றும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் போல் தங்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்களையும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியையும் விமர்சித்த அவர்கள், "ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன. அரசாங்கங்கள் அடிக்கடி மாறினாலும் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை," என அவர்கள் கூறினர்.

அன்றைய தினமே மஸ்கெலியா, கொட்டகலை அக்கரபத்தனை மற்றும் ஹட்டன் பகுதியிலும் பல தோட்டங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கும் மேலாக இந்த மாதத் தொடக்கத்திலேயே மஸ்கெலியாவில் மறே, பிரௌன்ஸ்விக், மொக்கா மற்றும் காட்மோர் தோட்டங்களிலும் கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் இந்த தீவிரமயமாதலானது, முதலாளித்துவ அரசாங்கங்களாலும் முதலாளிகளாலும் அவர்களின் தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் பெருகி வரும் பரந்த தீவிரமயமாதலின் ஒரு பாகமாகும்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசல் கருவியாக பயன்படுத்தி வந்த தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக கொண்டிருந்த சமூக அடித்தளத்தை விரைவாக இழந்து வருவதுடன், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அமைதியின்மை தமது கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடையும் என தொழிற்சங்க அதிகாரத்துவம் பீதியடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் போராளிக் குணமும் பெருகிவரும் நிலையில், அவர்களின் போராட்டத்தை தடம்புரளச் செய்யவும் முதலாளிகளின் தேவைகளுக்கு அவர்களை அடிபணியச் செய்யவும் தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே முயற்சிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ப. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமே மேல் கூறப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. அதன் நோக்கம், தொழிலாளர்கள் மத்தியில் அபிவிருத்தியடையும் போராளிக் குணத்தை ஆவியாக்கி அவர்களின் போராட்டத்தை கலைத்து விடுவதே ஆகும். சம்பள கோரிக்கையை கொடுக்காவிட்டால், தான் அரசாங்கத்தில் இருந்து இராஜிநாமா செய்யப் போவதாக திகாம்பரம் அண்மையில் போலியாக அச்சுறுத்தல் விடுத்தார். ஏனைய தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே, திகாம்பரமும் தனது வரப்பிரசாதங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் தவளை ஆவார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு உடன்படவில்லை என்றும் 1,000 ரூபா சம்பள கோரிக்கைக்காக தொடர்ச்சியாக போராடுவதாகவும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார். அரசாங்கம் அந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க தவறினால், அடுத்த மாதம் முன்வைக்கப்படும் அதன் வரவு-செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். "அடுத்த பேச்சுவார்த்தையில் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு பெறமுடியும். தீபாவளியை தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்," என தொண்டமான் கூறினார்.

அவருடைய இந்த கருத்தின் நோக்கம், தொழிலாளர்களின் கண்களில் மண் தூவி, அவர்களின் போராட்டத்தை திசைதிருப்பி விடுவதே ஆகும். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினதும் தலைவர்களின் அறிக்கைகளும் இதே போல் மோசடியானவை ஆகும்.

தொழிலாளர்களை திசை திருப்பிவிடும் நாடகத்தின் ஒரு பாகமாக, அக்டோபர் 17 அன்று, ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்த மனோ கணேசன், திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க தலையிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு "ஆலோசனை" கொடுப்பதாக சிறிசேன வாக்களித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் சிறிசேனவின் வாக்குறுதியை ஒரு துளியளவும் நம்பக் கூடாது. புகையிரத மற்றும் தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கொடுப்பதாக அண்மைய வேலைநிறுத்தங்களின் போது அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை வெளிப்படையாகவே அவர் மீறினார்.

இந்த தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பொய்யர்கள் மற்றும் முதலாளித்துவ அரசினதும் முதலாளிகளதும் நேரடி முகவர்கள் ஆவர். அவர்கள் தொழிலாளர்களின் எந்தவொரு உரிமைகளுக்காகவும் முன்நிற்கவில்லை. உண்மையில் அவர்கள், முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் நலன்களுக்கே அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிராக, தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்பட்டு, தொழிலாளர்களின் போராட்டங்களை குழப்புவது தொடக்கம், அவர்களை அரச வேட்டையாடலுக்கு உள்ளாக்குவது வரை முடிந்த அனைத்தையும் தொழிற்சங்கங்கள் செய்கின்றன.

முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முதலாளிமார்களதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் சுயாதீனமான ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு அவை கடும் விரோதமாக உள்ளன. 2016ம் ஆண்டு சம்பள போராட்டத்தை காட்டிக்கொடுத்த இந்த தொழிற்சங்கத் தலைவர்கள், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நிபந்தனையை கூட்டு ஒப்பந்தத்துக்குள் நுழைக்கவும் புதிய வருமானப் பகிர்வு நடவடிக்கைக்கும் உடன்பட்டன.

வருமான பகிர்வு நடவடிக்கையின் கீழ், ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு 1,000 அல்லது அதற்கு கூடுதலான தேயிலைச் செடிகள் கொடுக்கப்படும். அதன் பராமரிப்பு மற்றும் அறுவடை அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும். கொழுந்தை தாம் நிர்ணயிக்கும் விலைக்கு கம்பனி வாங்கிக்கொள்வதோடு தொழிலாளர்கள் பெற்ற உரம், விவசாய இரசாயனப் பொருட்கள் போன்றவற்றுக்கு கம்பனி கொடுத்த பணத்தை கழித்துக்கொண்ட பின்னர் எஞ்சிய பணத்தையே அது தொழிலாளர்களுக்கு கொடுக்கும்.

அது மட்டுமன்றி, கடந்தகால போராட்டங்கள் மூலம் வென்று தற்போது தொழிலாளர்கள் அனுபவித்து வரும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட சமூக உரிமைகள் அபகரிக்கப்படுவதோடு, தற்போது கிடைக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வீடு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளும் அழிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களை முதலாளித்துவ கம்பனிகளின் குத்தகை விவசாயிகளாக உருமாற்றி, அவர்களை தனித்தனி குடும்பங்களாக உடைத்து கலைத்து விடுவதன் மூலம் அவர்களின் வர்க்க ஐக்கியம் தகர்க்கப்படுகிறது.

அரசாங்கங்களுக்கு அல்லது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் வேறு எந்தப் பகுதியினருக்கோ தமது எந்தவொரு உரிமையையும் வெல்ல முடியாது. தபால், இரயில், நீர் விநியோக மற்றும் பல்கலைக்கழக கல்விசார தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டங்களில் இது நன்கு நிரூபணம் ஆகியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது, உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவது, கொடூரமான வேலை நிலைமைகள் உட்பட தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது, இலங்கை பெருந்தோட்டத் தொழிற் துறையில் ஆழமடைந்துவரும் நெருக்கடியே ஆகும். உலக சந்தையில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையில் போட்டி தீவிரமடைவதும் உலக முதலாளித்துவ நெருக்கடியினதும் விளைவாக, கேள்வி வீழ்ச்சியடைந்து வரும் நிலைமையின் கீழ், தேயிலை மற்றும் இரப்பர் ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பானது, மாற்று புதிய அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளரும் ஆர்வத்தின் அறிகுறியும் வரவேற்கத்தக்க அபிவிருத்தியும் ஆகும்.

எனினும், தொழிற்சங்கங்களை விமர்சிப்பது மற்றும் அவை சம்பந்தமாக கோபத்தை வெளிப்படுத்துவதும் மட்டும் போதாது. தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக, தங்களது ஜனநாயக வாக்காளிப்பின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை எல்லா தோட்டங்களிலும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். இந்த குழுக்களுக்குள் ஜனநாயக முறையில் கலந்துரையாடுவதன் மூலம் சம்பளம் மற்றும் ஏனைய கோரிக்கைகளை சூத்திரப்படுத்திக்கொள்ள முடியும்.

நடவடிக்கை குழு பிரதிநிதிகளின் மாநாடு ஒன்றை கூட்டி, அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான நனவுபூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், தோட்டத் தொழிலாளர்கள், இலங்கையில் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பிற நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் தமது ஐக்கியத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் போராட்டமாகும். சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக பெருந்தோட்டங்கள், வங்கி மற்றும் நிறுவனங்கள் உட்பட முதலாளித்துவ சொத்துக்களை, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்துகின்ற மற்றும் விஞ்ஞானபூர்வமாக சோசலிச முறையில் திட்டமிடப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துகின்ற, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய தொழிலாளர் பிரிவினரதும் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். அந்த போராட்டத்திற்கு தேவையான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அணிதிரட்டுவதே நடவடிக்கை குழுக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

Read more...

கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை நியமனம் வழங்காமல் இருப்பது ஏன் ? இயலாமையா ? ஏமாற்றா ?

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும்பொருட்டு கடந்த வருடம் (2017) கல்வி அமைச்சினால் பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இதற்காக விண்ணப்பித்தவர்களில் தேசியரீதியாக விளையாட்டில் வெற்றி பெற்ற மற்றும் கல்வி தகமையுடயவர்களை நேர்முக பரீட்சை மூலமாகவும் செயல்முறை பரீட்சை மூலமாகவும் கல்வி அமைச்சு தெரிவு செய்திருந்தது.

இவ்வாறு தகமை அடிப்படையில் நாடுதழுவியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 3850 பயிற்றுவிப்பாளர்களின் பெயர் பட்டியலை கடந்த ஜூன் மாதம் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது.

இவர்கள் மாகான மற்றும் தேசிய பாடசாலைகளில் நியமனம் பெற இருந்தார்கள்.

ஆனாலும் இதுவரையில் தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் இன்னும் கல்வி அமைச்சினால் வழங்கப்படவில்லை. இழுத்தடிப்பு செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றது.

அவ்வாறு நியமனம் வழங்கப்படாமைக்கான நியாயமான எந்தவித காரணங்களையும் கல்வி அமைச்சு இதுவரையில் கூறவில்லை. மாறாக ஏதோ சாட்டுப்போக்குகளையே கூறிவருகின்றது.

இந்நியமனங்களை வழங்குமாறு கோரி தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை சந்தித்து குறித்த நியமனத்தினை வழங்குமாறு பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

அதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றபின்புதான் நியமனம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறுகூறி பல மாதங்கள் கடந்தும் இன்னமும் அமைச்சரவைக்கு அது சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க குறித்த நியமனத்தினை பெறுவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கும்பொருட்டு எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் குறித்த பயிற்றுவிப்பாளர்களினால் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும் எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை.

அரசாங்கம் இப்படியும் தங்களை ஏமாற்றுகின்றது என்பதனை அறிந்துகொள்ளாத பலர், தங்களுக்கு விரைவில் நியமனம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இவ்வளவு காலமாகா தனியார் துறையில் செய்துவந்த தொழில்களையும் விட்டுவிட்டு இன்று நடுத்தெருவில் நிற்பது மிகவும் பரிதாபகரமான விடயமாகும்.

எனவேதான் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்குரிய நியமனத்தினை கல்வி அமைச்சு வழங்குமா அல்லது தொடர்ந்து ஏமாற்றுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

Monday, October 22, 2018

பொன்சேகாவின் மானத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சுயாதீன தொலைக்காட்சி. 30 இலட்சம் வழங்க உத்தரவு!

இறுதிக் கட்டப் போரின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, வெளிநாட்டில் இருந்து கொண்டு பிரபாகரனை தாக்குதலில் இருந்து தப்ப வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ராஜபக்ச ஆட்சியின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையினூடாக மக்களுக்கு பிழையான தகவல்களை பிரசாரம் செய்து, தமது நாமத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக கொழும்பு கடுவெல நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதி.

குறித்த வழக்கினை விசாரணை செய்த கடுவல கடுவல நீதிமன்ற நீதிபதி அரவிந்த பெரேரா பொய்யான தகவலை வெளியிட்டு அவரது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக 30 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு சுயாதீன தொலைகாட்சி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more...

போதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கால தாமதமாவதேன்? விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு இன்று (22) திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

இறப்பு தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படாமையால், நீதிவான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ம் திகதிக்கு வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.

மன்றில் வழக்கு எடுக்கப்பட்டபோது போதாநாயகியின் மரணம் தொடர்பில் கொலையாளி என குற்றஞ்சுமத்தப்படுகின்ற அவரது கணவன் செந்தூரன் அவரது சகோதரர் குற்றம் சுமத்தும் விரிவுரையாளரரின் தாய் சகோதரர்களும் ஆஜராகியிருந்தனர்.

மரண விசாரணை யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரனால் மேற்கொண்டிருந்தபோதும், அந்த அறிக்கை இதுவரை மன்றிற்கு சமர்பிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் சந்தேகத்தை கிளப்புகின்றது.

Read more...

வெல்கம மூளை குழம்பி ஜனாதிபதியாகும் கனவில் இருக்கிறாராம்! கூறுகின்றார் காமினி லொகுகே .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாயவின் இறக்கத்திற்கு எதிராக பலமாக குரல் எழுப்பி வருகின்றார் குமார வெல்கம. இந்நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒருவரையே பொது எதிரணி களமிறக்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

இந்நிலையில், குமார வெல்கமவின் மூளை குழம்பியுள்ளதால் அவருக்கு தாம் பதிலளிக்க தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

முன்னால் பாதுகாப்பு செயலாளர் சனநாயக விரோதியாவார் என்ற குமார வெல்கம வின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் பொருட்டு, நாட்டில் அனைத்து மக்களுடைய சனநாயக்தை காப்பாற்றிக்கொடுத்தது கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான பாதுகாப்பு படையே என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மேடைகளுக்கு ஏறியதும் அதிகளவானோர் தேவைக்கு அப்பால் கைகொட்டும்போது, இந்நாட்டில் ஜனாதிபதியாகும் ஆசை தனக்கும் ஏற்பட கூடுமெனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.

Read more...

ஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல். சவுதி புதிய விளக்கம்

ஜமால் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியில் எர்டோகன் பேசும்போது, ”நாம் அனைவரும் இங்கு நீதியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் ஜமால் கொலையில் முழு உண்மையும் வெளியாகும். ஏன் சவுதியை சேர்ந்த 15 பேர் துருக்கிகு வர வேண்டும். அவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ஜமால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விளக்கத்தை சவுதி அளித்தே தீர வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து அந்த மூன்று நாடுகள், ”பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்த வன்முறை தாக்குதலையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஜமால் வழக்கில் நாங்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் எங்கள் முடிவை எடுப்போம். இம்மாதிரியான சம்பவம் இன்னொரு முறை நடக்க கூடாது” என்று சவுதியை எச்சரித்துள்ளன.

ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள பெல்கிரேட் வனப் பகுதியின் அருகே தேடும் பணியை துருக்கி அரசு மிக தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜமாலின் உடல் இவ்வனப் பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜமால் கொலை: சவுதி அளித்த புதிய விளக்கம்

சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்து புதிய விளக்கத்தை சவுதி அளித்துள்ளது.

இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, ”ஜமால் மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது. ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய தீர்மானமாக இருக்கிறோம்” என்றார்.

ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வந்த சவுதியின் கூலிப்படை நபர்: ஆதாரத்தை வெளியிட்ட துருக்கி



சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகளை அவரைப் போன்ற தோற்றமுடைய சவுதியைச் சேர்ந்த நபர் அணிந்து வரும் வீடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், ”ஜமாலின் மரணம் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரில் ஒருவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வெளியே வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறுகிறார்.

மேலும் அவர் ஜமாலைப் போன்ற தோற்றம் பெற போலியான தாடியை தனது முகத்தில் பொருத்தி இருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.

ஜமாலின் ஆடை அணிந்து வருபவரின் பெயர் முஸ்தபா அல் மதானி. அவர் சவுதி அனுப்பிய கூலிப்படைகளில் ஒருவர் என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஜமால் கொலை குறித்த பல உண்மைகள் வெளிவர உள்ளன என துருக்கி அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சியை துருக்கி வெளியிட்டுள்ளது.

Read more...

ரெலோவை கூறுபோட திட்டம் தீட்டும் விக்னேஸ்வரன். மகனும் குடும்பத்துடன் களமிறங்கினார்.

நாளையுடன் வடமாகாண சபைக்குரிய காலம் முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. முதலமைச்சர் அத்துடன் தனது அடுத்த தவணைக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். அவர் தனக்கு ஆதரவாளர்களை தேடி வருகின்றார். அந்தவகையில் நேற்று சிவாஜிலிங்கத்திற்கு தூண்டில் போட்டுள்ளார்.

யாழ்பாணத்தில் நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் விக்னேஸ்வரன் - சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு பேசிய விக்னேஸ்வரன், தப்பி சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கொழும்பிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் சிவாஜிலிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விக்னேஸ்வரன்.



ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ரெலோ த.தே.கூ வை விட்டு வெளியேறி விக்கி-கூட்டுடன் இணையும் என்று பேசப்பட்டபோதிலும் அது நிறைவேறவில்லை. இந்நிலையிலேயே சிவாஜிலிங்கத்தை உடைத்து ரெலோவை கூறுபோடுவதற்கான வேலைத்திட்டம் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

'வட்ஸ்அப் செய்யுங்கள் ஒரு மாதத்தில் அனுமதியை தருகின்றேன்' சுஜீவ சேனசிங்க முதலீட்டார்களுடன் செய்த டீல் வீடியோ அம்பலம்

இலங்கையில் அரசியல் செய்வதென்றால் டீல் செய்வதற்கு தனியானதோர் தகமைவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட டீல்களால்தான் நாடு இன்று குட்டிச்சுவராகி, கடன்சுமையில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பிர் சுஜீவ சேனசிங்க டீல் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அனைவராலும் பரவலாக பேசப்பட்டுவரும் மின்னியக்க ரயில் முதலீட்டார்களுடன் டீல் பேசும் வீடியோவே அவ்வாறு வெளியாகியுள்ளது.

குறித்த இத்தாலியைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் பேசும் சுஜீவ சேனசிங்க ஒரு மாத காலத்திற்குள் அதற்கான அனுமதியை பெற்றுதருவதாகவும் , மேலதிக தகவல்களை வட்ஸ்அப் செய்யுமாறும் கூறியுள்ளார்.

மேலும் தான் ஒரு ஸ்மார் அரசியல்வாதி என்றும் அவர் தன்னைத்தானே குறிப்பிடுகின்றார். இந்த சுஜீவ பிணைமுறியை மறைக்க புத்தகம் ஒன்று எழுதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.



Read more...

இதுவரை வன்னியில் 11086 ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் மாத்திரம் அகற்றப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட புலிகள் வன்னியில் தஞ்சமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களையும் தங்கள் இருப்பு பிடிக்குள் வைத்திருந்தனர். இக்காலத்தில் வன்னியின் சகல பிரதேசங்களிலும் மிதிவெடிகளை விதைத்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளூயசி) ஸார்ப் நிறுவனம் புலிகளால் விதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றி வருகின்றது.

குறித்த சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் ; மாதம்; 15 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (649,613) இருந்து பதினொராயிரத்து எண்பத்து ஆறு (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிறுவனம் நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு (422,828 ளஙஅ) நிலப்பரப்பினை மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.





Read more...

உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா? வை எல் எஸ் ஹமீட்

நாம் அடிக்கடி நம் அரசியலில் கேட்கும் வார்த்தைகள், “ எங்களுக்கு அபிவிருத்தி முக்கியம் இல்லை; உரிமையே முக்கியம்”. “ உரிமையில்லாத அபிவிருத்தியால் பயன் இல்லை.” “ அபிவிருத்திக்காக சோரம்போக முடியாது.” “இரண்டும் தேவை”. “ அபிவிருத்தி தேவைதான் அதற்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது”. போன்றவையாகும்.

அவ்வாறு உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்றால், உரிமை என்றால் என்ன? அதிகமானவர்களிடத்தில் பதில் இல்லை. எங்களுக்கு அபிவிருத்திகளைவிட உரிமைதான் முக்கியம் என்று மேடைகளில் பேசுகின்ற அரசியல்வாதிகளும் இதுவரை உரிமை என்றால் என்னவென்று கூறவில்லை. அவர்களுக்கும் தெரியுமோ தெரியாது.

ஒரு பாடசாலையில் வகுப்பறைக் கட்டம் இல்லாமல், தளபாடங்கள் இல்லாமல் மரத்தின் கீழ் நிலத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் பாடசாலைக்கட்டிடம் பெறுவது உரிமையா அல்லது உரிமையிலிருந்து வேறுப்பட்ட அபிவிருத்தியா?

ஒரு ஊரில் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் தண்ணீர் வசதி பெறுவது உரிமையா? உரிமையோடு தொடர்பில்லாத அபிவிருத்தியா? அவை உரிமை இல்லையென்றால் உரிமை என்றால் என்ன?

மறைந்த தலைவர் அபிவிருத்தி செய்யமாட்டோம். ரோட்டுப் போடமாட்டோம், பாலம் கட்டமாட்டோம், வீடுதரமாட்டோம், உணவுமுத்திரை தரமாட்டோம், உத்தியோகம் தரமாட்டோம்; என்று மேடைகளில் முழங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து பலமேடைகளில் அதனைப் பேசியிருக்கின்றோம். ஆனால் ஒரு மேடையிலாவது அபிவிருத்தி உரிமையல்ல; அல்லது அபிவிருத்தி வேறு, உரிமை வேறு அல்லது உரிமையைப் பெற்ற பின்புதான் அபிவிருத்தி செய்வோம்; என்று கூறவில்லை.

அவர் இன்னும் சொன்னார், அதாவது “ எதுவும் செய்யமாட்டோம்” என்றும் சொன்னார். ‘எதுவும் செய்யமாட்டோம்’ என்றால் எதற்காக அரசியல்கட்சி? ஆனாலும் சொன்னார். மக்களும் வாக்களித்தனர்.

சரி, எதுவும் செய்யமாட்டோம், என்றவர் எதுவும் செய்யாமல் இருந்தாரா? அபிவிருத்தி செய்யமாட்டோம், என்றவர் அபிவிருத்தி செய்யாமல் இருந்தாரா? உத்தியோகம் தரமாட்டோம் என்றவர் உத்தியோகம் தராமல் இருந்தாரா? இல்லை. அவ்வாறாக இருந்தால் அவர் அவ்வாறு சொன்னதற்கு வேறுபொருள் இருந்திருக்க வேண்டும்.

அபிவிருத்திவேறு, உரிமை வேறு என்றால் அவர் உரிமைகளையெல்லாம் பெற்றுத்தந்தபின்னா அபிவிருத்திசெய்ய ஆரம்பித்தார்? அவ்வாறு உரிமைகள் பெற்றுத்தந்ததன் பின்தான் அபிவிருத்தி செய்தார் என்றால் அவ்வாறு உரிமைகள் பெற்றாகியதன்பின் இன்னும் என்ன உரிமை பெறுவதைப்பற்றி இவர்கள் பேசுகின்றார்கள். எந்த உரிமையையைப் பெறுவதற்காக அபிவிருத்தியைப் கடந்த 18 வருடமாக பின்தள்ளுகிறார்கள்?

எனவே, அபிவிருத்தி என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? என்பதில் நமக்குள் குழப்பமிருப்பது புரிகிறதல்லவா? இதுதான் இந்த அரசியல்வாதிகளின் பலம்.

மறைந்த தலைவர் “எதுவும் செய்யமாட்டோம்” என்று சொன்னார். மக்கள் வாக்களித்தனர். எனவே, இந்த மக்களுக்கு எதுவும் செய்யத்தேவையில்லை. கரங்கா காணியை மீட்கத் தேவையில்லை, கல்முனை புதியநகரம் கட்டத்தேவையில்லை, ஒலுவில் பிரச்சினை தீர்க்கத்தேவையில்லை, ......... எதுவும் செய்யத்தேவையில்லை; என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஒன்றும் செய்யாவிட்டால்தான் இந்த மக்கள் வாக்களிப்பார்கள்; என்று எண்ணிவிட்டார்கள். மக்களும் ஆம் நாங்கள் அவ்வாறுதான். எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவையில்லை. நாங்கள் வாக்களிப்போம்; என்று நிருபிக்கின்றார்கள்.

பின்னால் வந்த “ சப்த வெடிலும்” , ‘ நீங்களும் ஒன்றும் செய்யாமல்தானே வாக்குப்பெறுகிறீர்கள்; நீங்கள் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமலிருக்கிறீர்கள், நான் ‘ யாவாரம்’ தெரிந்தவன், எனவே அபிவிருத்தியே செய்யமுடியாத அமைச்சை எடுத்து யாவாரம் செய்கிறேன்.

அப்பப்ப வந்து சத்தம்போடுவேன். என்னைக் ‘குட்டி அஷ்ரப்’ என்று எழுவதற்கு கூலியாட்கள் வைத்திருக்கிறேன்; ஏமாந்த மக்கள் உங்களுக்கு போட்டு மிகுதியை எனக்குப்போடுவார்கள்’ என்று ஒரு அரசியல் யாவாரம் நடக்கிறது.

உரிமை என்றால் என்ன?

உரிமை என்பது மிகவும் ஆழமான சொல். அது தொடர்பாக எத்தனையோ சர்வதேச உடன்படிக்கை வந்துவிட்டன. சுருக்கமாக, உரிமை என்பது, “moral or legal entitlement to do or have something”; அதாவது, ஒன்றைச் செய்வதற்கு அல்லது பெறுவதற்கு சமூகப்பெறுமானங்களின் அடிப்படையில் அல்லது சட்டரீதியாக உங்களுக்கு இருக்கின்ற உரித்துத்தான் “ உரிமை”யாகும்.

உரிமை பலவகைப்படும். சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் என பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மேலும் பிரிவுகள் இருக்கின்றன. உயிர்வாழும் உரிமை, மதத்தை பின்பற்றும் உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை..... இவ்வாறு நீண்ட பட்டியல் இருக்கின்றன.

உதாரணமாக, உயிர்வாழ்வதற்கான உரிமை எனும்போது வெறுமனே உயிர் வாழுதல் என்பது பொருளல்ல. அதற்கு மேலதிகமாக கௌரவமாக வாழுதல் என்ற பொருளையும் அது உள்ளடக்குகின்றது. கௌரவமாக வாழுதல் என்பதை மேலும் வியாக்கியானப்படுத்தும்போது கல்வி, சுகாதாரம், வாழ்விடம், தொழில் போன்ற உரிமைகள் அதற்குள் உள்வாங்கப்படுகின்றன. சில அறிஞர்களுக்கு மத்தியில் இவற்றில் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இதனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

இவ்வாறான உரிமைகளுள் சில முன்னுரிமைக்குரியவைகளாக கொள்ளப்படுகின்றன. சிலர் அவ்வாறு வகைப்படுத்த முடியாது; என்றும் வாதிடுகின்றனர். ஆனாலும் நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளன. அவற்றிற்கு கோட்பாட்டு ரீதியான காரணம் என்பதைவிட நடைமுறையான காரணங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சில உரிமைகள் கட்டுப்படுத்த முடியாத முழுமையான உரிமைகள். சில கட்டுப்படுத்தக்கூடிய உரிமைகள். உதாரணமாக ‘ சித்திரவதைக்கெதிரான உரிமை முழுமையானது. அரசோ, யாரோ, யாரையும் எந்தக்காரணம்கொண்டும் சித்திரவதை செய்யமுடியாது. ஆனால் உயிர்வாழும் உரிமை முழுமையல்ல. கட்டுப்படுத்தக் கூடியது. மதத்தைப் பின்பற்றுவது முழுமையான கட்டுப்படுத்த முடியாத உரிமை. மதத்தை பிரச்சாரம் செய்வது கட்டுப்படுத்தக்கூடிய உரிமை. பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தக்கூடிய உரிமை.

இந்தப்பின்னணியில் நமது அரசியல் பார்வைக்கு வருவோம்.

இப்பொழுது சிந்தியுங்கள்! கல்விக்காக பாடசாலைக்கட்டிடம் கட்டுவது நமது உரிமையா? இல்லையா? சுகாதாரத்திற்காக வைத்தியசாலை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா? இல்லையா? குடிப்பதற்காக, குளிப்பதற்காக தண்ணீர் வசதி பெறுவது நமது உரிமையா? இல்லையா? பிரயாணம் செய்வதற்காக பாதை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா? இல்லையா?

சில உரிமைகள் கண்ணால் காணக்கூடிய அபிவிருத்தி வடிவத்தில் இருக்கின்றன. சில கண்ணால் காணமுடியாத, அறிவால் உணரக்கூடிய வடிவத்தில் இருக்கின்றன. உதாரணம் பாதுகாப்பு.

மறைந்த தலைவர் ஏன் எதுவும் செய்யமாட்டேன்; என்று சொன்னார்? அன்று எங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. உயிர்களுக்கு உத்தரவாதமிருக்கவில்லை. வட கிழக்கு இணைக்கப்பட்டு அரசியல் அடிமையாக்கப்பட்டிருந்தோம். பாராளுமன்றத்தில்கூட குரல் கொடுக்கமுடியாமல் நம் வாய்களுக்குப் பூட்டுப்போடப்பட்டிருந்தது.

அந்த சூழ்நிலையில் தலைவர் கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய உரிமைகளுக்கு மக்கள் முன்னால் முக்கியத்துவத்தைக் குறைத்து கண்ணால் காணமுடியாத மேற்சொன்ன பாதுகாப்பு, பேச்சுச் சுதந்திரம், இணைந்த வட கிழக்கில் நாம் மாட்டியிருந்த அடிமைத்தளயில் இருந்து நம்மை மீட்டல், அதிகாரப் பகிர்வில் நமது அக்கறைகள் உள்வாங்கப்படுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கினார்.

அன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளில் இந்தளவு உரிமை தொடர்பான விளக்கத்தைக் கொடுத்திருந்தால் மக்கள் புரிந்திருப்பார்களா? மறுபுறத்தில் ஆளும் கட்சியான ஐ தே கட்சிக்காரர்கள் அபிவிருத்தியோடு தொடர்புபட்ட உரிமைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்; உரிமை என்ற சொல்லைப் பாவிக்காத போதிலும்கூட.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். எல்லா உரிமைகளையும் அனுபவிப்பதற்கு நாம் முதலில் உயிர்வாழ வேண்டும். வயலுக்கு சென்ற கணவன் திரும்பி வருவானா என்று தெரியாமல் நாள்பூராகவும் பதைபதைப்புடன் மனைவி, வியாபாரத்திற்கு சென்ற மகன் திரும்பி வருவானா என்று தெரியாமல் முந்தானையை ஏந்தி துஆவுடன் தாய்; வெளியே சென்ற சகோதரன் திரும்பிவருவானா? என்று தெரியாமல் நிம்மதி இழந்த சகோதரி; என்று அன்றைய சூழ்நிலை ஒரு பயங்கரமாகும்.

அந்த மக்களிடம் அவ்வாறு பேசாமல் வேறு எவ்வாறு பேசுவது? உலகத்திலே எதுவும் செய்யமாட்டோம்; என்று பகிரங்கமாக பேசி வாக்குப்பெற்ற கட்சிகள் ஏதாவதுண்டா? அல்லது அவ்வாறு பேசிய கட்சிகள்தான் உண்டா? ஆனால் எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் பேசியது. மக்களும் ஒன்றும் செய்யமாட்டோம்; என்று சொன்ன கட்சிக்கு வாக்களித்தார்கள்.

தலைவர் இன்னும் ஒன்றும் சொன்னார். “ நாம் எதுவும் செய்யமாட்டோம்; முஸ்லிம் சமூகமே நீ ஒற்றுமைப்படு; அனைத்தும் உன்காலடிகளுக்குத் தேடிவரும்; என்றார்.

இதன் பொருளென்ன? மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தார்கள் என்பதற்காக ஒன்றும் செய்யாமல் இருந்தால் எல்லாம் தேடிவருமா? ஒரு துரும்பும் வராது. நானே இந்த வசனத்தை எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கின்றேன். ஆனால் எல்லாம் வந்தது. சுயமாக வரவில்லை. தலைவர் எல்லாம் செய்தார். கொண்டுவந்தார்.

வெட்டுப்புள்ளித் திட்டத்தைக் மாற்றினார். புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அட்டகாசத்தை உலகிற்கு சொன்னார். முஸ்லிம்களும் தமிழர்களே! வணக்கஸ்தலம் மாத்திரம்தான் வேறு; என்று இந்தியாவே சொன்னபோது இல்லையென மறுத்து முஸ்லிம்கள் தனித்துவ சமூகமென நிறுவினார்.

பல்கலைக்கழகம் கொண்டுவந்தார். துறைமுகம் கொண்டுவந்தார். ( அவர் மரணித்தபின் கட்டியவர்கள் விட்டதவறினால் இன்று பாதிக்கப்பட்டுள்ளோம்; என்பது வேறுவிடயம்). கல்விக்கல்லூரி கொண்டுவந்தார். அஷ்ரப் வைத்தியசாலை நிறுவினார். ( பெயர் பிந்தியது) பாடசாலைக் கட்டிடங்கள் கட்டினார்....... பட்டியல் நீளும்.

இவையெல்லாம் தாமாக வரவில்லை. அவர் கொண்டுவந்தார். இங்கு நம் சிந்தனைக்கு எடுக்கவேண்டியது, எதுவும் செய்யமாட்டேன் என்றவர் எல்லாம் செய்தார்; ஒற்றுமைப்பட்டால் தானாகவரும் என்றார்; எதுவும் தானாக வரவில்லை. அனைத்தும் அவர் கொண்டுவந்தார்.

எனவே, இந்த வசனங்களை அன்றைய சூழலில் மக்களை ஒற்றுமைப்படுத்த பாவித்தாரேயொழிய அவ்வாறு செயற்படவில்லை. அபிவிருத்தி செய்யமாட்டேன் என்றுதான் சொன்னாரேதவிர அபிவிருத்தி உரிமையில்லை; என்று சொல்லவில்லை. சட்டம் தெரிந்தவர் அவ்வாறு சொல்லவும் முடியாது.

இதைப்புரிந்துகொள்ளாமல் அபிவிருத்தி வேறு, உரிமை வேறு, அது முதல், இது பின்னர் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருக்கின்றோம். 18 வருடங்கள் வீணக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வளவுதான் ஒற்றுமைப்பட்டாலும் செய்யத்தெரியாதவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஒற்றுமைப்பட்டதற்காக தாமாக வராது. அன்று தலைவர் அந்த ஒற்றுமைப் பலத்தை சந்திரிக்காவுக்கு முட்டுக்கொடுத்துத்தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு துறைமுகத்தில் வேலை கொடுத்தார்.

இன்று பல கட்சிகள் இருந்தபோதும் அதிகப்பெரும்பான்மையான வாக்குகளை அந்தக் கட்சிக்குத்தானே வழங்குகிறீர்கள். இந்த அரசாங்கத்தில் அந்தக்கட்சியின் பலம் என்பது அன்று சந்திரிக்காவுக்கு நாம் முட்டுக்கொடுத்தபோது இருந்த பலத்தைவிட யதார்த்தத்தில் அதிகமாகும். சாதித்ததென்ன?

சாதித்திருக்கின்றோமா? இழந்திருக்கின்றோமா?
புதியமுறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தால் பிரதிநிதித்துவத்துவத்தை இழக்கப்போகின்றோம் நாம் கையுயர்த்தியதால்.

சம்மாந்துறையில் கரங்காவை இழந்திருக்கின்றோம்!
பொத்துவிலிலும் பல கரங்காக்களை இழந்திருக்கின்றோம்!
ஒலுவிலில் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றோம்!
கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை இழந்திருக்கின்றோம்! ......
இவ்வாறு நீண்டதொரு பட்டியல்.

கண்ணுக்குத் தெரியாத உணரக்கூடிய உரிமை எதைப்பெற்றோம். கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தி உரிமை எதைப்பெற்றோம்.

எனவே, செய்யத்தெரியாதவர்களுக்குப் பின்னால் சமூகம் ஒற்றுமைப்பட்டும் பிரயோசனம் இல்லை. ஒற்றுமைப்படாவிட்டாலும் பிரயோசனம் இல்லை.

இப்பொழுது “ நானும் இருக்கிறன் சின்னக்குட்டி” தலவருக்குப்பின் அவர்தான் அஷ்ரபாம். அவரும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகத்தின்நிலை அதோகதியாம்.

என்ன சாதித்தார் என்றுதான் சொல்லகிறார்கள் இல்லை.

முசலியில் மஹிந்த ஆட்சியில் பறிகொடுத்த பன்னிரண்டாயிரம் ஏக்கர் காணியை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

நல்லாட்சியில் பறிகொடுத்த ஒரு லட்சம் ஏக்கரை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

இடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றிவிட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

முசலிக்கென்று இருக்கின்ற சிலாவத்துறை வைத்தியசாலையையாவது உருப்படியாக அபிவிருத்தி செய்ததனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கிழக்கு மாகாணத்தைக் குடிசை ( குடில்) இல்லாத மாகாணமாக்குவேன்; என்றார். அவ்வாறு ஆக்கியதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கிழக்கிலங்கையில் பறிகொடுத்த காணிகளை மு கா மீட்கவில்லை; நான் மீட்டுத் தருவேன்; என்றார். அவ்வாறு மீட்டுத் தந்தனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

மாகாணசபை சட்டத்திற்கு கையுயர்த்தியதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கணக்காய்வாளர் நாயகம் அறிவித்தாரே! அதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா?

எதற்காக என்று சொல்லிவிட்டு குட்டி அஷ்ரப் என்றால் பரவாயில்லை.

எனவே, சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பல விடயங்களில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றது. ஆனால் யார் சமூகத்தை அதிகம் ஏமாற்றுவது என்பதில் மட்டும் போட்டி இருக்கின்றது.

போராளிகள் இதனைப் புரியாமல் அடித்துக் கொள்கிறீர்கள். எதையும் செய்யாமல் இருப்பதை மறைப்பதற்காக பாவிக்கும் உத்திகள்தான் உரிமை வேறு அபிவிருத்தி வேறு என்று வேறு பிரிப்பதும் உங்களைக் குழப்புவதும்.

யாராவது உங்களிடம் உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்று கூறினால் உரிமை என்றால் என்ன? என்று கேளுங்கள். உரிமை பத்துக் கிலோ ஒவ்வொரு ஊருக்கும் தரச்சொல்லுங்கள்.

உரிமை என்றொரு சாமானே உலகில் கிடையாது. அது சடப்பொருள் அல்ல. ஒன்றைச் செய்வது அல்லது பெறுவது நமது உரிமை. அது உணரக்கூடியதாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரியக்கூடியதாக இருக்கலாம்.

அபிவிருத்தி கண்ணுக்குத் தெரியக்கூடியது.

எனவே, அபிவிருத்தியும் உரிமையே!!!
உரிமை, அபிவிருத்தி என்பது இரண்டு அல்ல. ஒன்றே!

வாகனமும் காரும் இரண்டல்ல. ஒன்றே.

வாகனத்தில் ஒரு வகை கார். இன்னொரு வகை லொறி. இன்னொரு வகை பஸ். ஆனால் எல்லாம் வாகனமே!
அதேபோன்றுதான் உரிமையில் அபிவிருத்தியும் அடங்கும். பாதுகாப்பும் அடங்கும். எல்லாம் அடங்கும்.

Read more...

Sunday, October 21, 2018

ஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு.

♥ இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும் மீறி கடவுளிடம் மன்றாடி இருக்கிறேன்.

♥ டெலிவரி(பிரசவ) அறையில் வலியால் துடிக்கும் பெண்களின் உணர்வை வேதனையை துடிப்பை யாராளும் விவரிக்க முடியாது அது ஒரு மறு பிறவிக்கான போராட்டம்.

♥ இது தனது குழந்தைக்காக 9 மாதங்கள் அவர்கள் தாங்கியது. தமக்காக இதில் ஒரு நாளைக்கூட அவர்கள் செலவழித்ததில்லை.

♥ இன்று நான் வேதனையுடன் அழுதேன், ஏனெனில் நான் ஒரு பெண்மணியை (கர்ப்பிணியை) இழந்துவிட்டேன், இது போன்ற நேரங்களில் வாழ்க்கை வெறுத்துவிடுகிறது. கடவுள் வேறுமாதிரி முடிவு எடுத்துவிடுகிறான். தாங்க முடியவில்லை காரணம்

♥ இந்த பெண்ணின் கதை மிகவும் வேதனையாக இருக்கிறது? 14 வருடங்களாக அவள் மலடிஎன்று தூற்றப்பட்டு குழந்தை இன்றி இருந்தாள்! நாம் IVF முயற்சி மற்றும் பல நவீன முறை என நிறைய வழியாக முயற்ச்சி செய்து இறுதியாக கடவுளின் அருளால் அவர் கர்ப்பம் தரித்தாள் இதை விஞ்ஞானம் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று தான் நான் கூறுவேன் ஏனென்றாள்

♥ அவர் கருப்பை நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் என பல தாக்கத்தை கொண்டிருந்த போதிலும், அவள் கர்ப்பமாக இருந்தாள்,

♥ அவளது கவலை உருக ஆரம்பித்தது, எல்லாம் சரியாக இருந்தது, அது அவளுக்கு மறுவாழ்க்கைக்கான ஆரம்பம், அவர் தனது தாய்மையை உலகிற்கும் உறவினருக்கும் உணர்த்திய மகிழ்ச்சியில் இருந்தார்.

♥ குழந்தை இல்லாதவள் என தன்னை சபித்தவர்களை நினைத்து சிரித்தாள்... அவள் வைத்தியரான என்னை கடவுளாக பார்த்தாள்... ஆனால் நான் கடவுளை தான் கடவுளாக பார்த்தேன்...

♥ 9 மாதங்களுக்குப் பிறகு, பிரசவ வலி எடுக்க அவளுடைய கணவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், எனக்கு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வந்தது
நான் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு மகிழ்வுடன் அவளிடம் சென்றேன்.

♥ 7 மணி நேரம் ஆகியும் சுகப்பிரசவம் ஆகவில்லை , அவள் வேதனையால் துடித்தாள் அது மிகவும் வேதனையாக இருந்தது, சுகப்பிரசவ சாத்தியக்கூறு விலகியது.. எனவே அவளைத் அறுவைச்சிகிச்சை (சிசேரியன்) செய்ய நாங்கள் தீர்மானித்தோம்.

♥ அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து அவளின் மார்பில் வைத்தோம் ... கைகலால் அணைத்துக்கொண்டவள் எங்களை கண்ணீரோடு பார்த்து புன்னகைத்தாள்... அடுத்த நிமிடம் அவள் உயிர் பிரிந்துவிட்டது.. கைகள் குழந்தையை அணைத்தவாறே இருந்தது.

♥ நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை இழந்து விட்டோம். ஆனால் குழந்தை உயிரோடு இருந்தது. அவள் இறப்பதற்கு முன், அவள் கையில் குழந்தையை வைத்திருந்தாள். அவள் இறக்கப்போவதை அவள் உணர்ந்திருந்தாள்... புன்னகையோடு கண்ணீருமாக எங்களைப்பார்க்கும் போதே என்னால் உணர முடிந்தது...

♥ அவளின் கண்ணீர் நிச்சயமாக அவளின் மரணத்திற்காக அல்ல. அவளின் குழந்தை நல்லபடியாக உள்ளது என்பதற்காகவே.

♥ தன் உடல் நிலை மோசமானது என்றுதெரிந்தும் மரணம் நடக்கலாம் என்று தெரிந்தும் குழந்தைக்காக தன் உயிரை அவள் பணயம் வைத்தாள்...

♥ இதை கேள்விப்பட்டபோது, ​​அவளுடைய கணவன் என்னை புண்படுத்தினான் மிக கவலையாக கதறி அழுதான் திட்டினான்... , இறுதியில் கணவன் மயங்கிவிட்டார்,

♥ அவர்களுடைய மகிழ்ச்சியான நாள் இருளாக மாறிவிட்டது. இன்றைய தினம் ஒரு புதிய வாழ்க்கையை வாழ அவள் ஆயத்தமாக இருந்தாள்.

♥ சகோதரர்களே
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஏனென்றால் பிரசவ காலத்தில் அவர்கள் உயிரைக் காப்பாற்ற மரண பள்ளத்தாக்கை கடந்து செல்கின்றனர். உங்கள் மனைவியை மரியாதை செய்யுங்கள்!

♥ 9 மாதங்களுக்கு உங்கள் குழந்தையை அவள் வயிற்றில் வைத்திருப்பது வேடிக்கையானது அல்ல, உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை அவளுக்கு வேறு வேலைகள் இல்லை.

♥ இந்த பதிவை படிக்கும் நோயற்ற வாழ்வு குழு உறவுகள் கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க தயவுசெய்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அன்புள்ள கணவர்மார்களே, உங்கள் மனைவியை மதியுங்கள், ஏனென்றால் அவர் உண்மையிலேயே உயிர் கொடுப்பவர். உயிரையும் கொடுப்பவர்.

♥நம் வாழ்வில் உள்ள பெண்களை மதியுங்கள் .

உண்மை கதை.

Read more...

மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம். பாறுக் ஷிஹான்

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகரிகம் வளர்ந்து விட்ட இந்த உலகிலே வெறும் தொழிலாளர்களாக, முதலாளிகளுக்கு வெறும் இலாபத்தை ஈட்டி கொடுக்கிறவர்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக எமது உறவுகளான மலையக தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களால் நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கிளிநொச்சியில் நடைபெறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



Read more...

றோ ஒழுக்கமான புலனாய்வு அமைப்பாம்! இலங்கையிலுள்ளவர்கள் குடிகாரர்களாம் பொன்சேகா புகழாரம்.

உலகிலுள்ள புலனாய்வு அமைப்புக்களில் தலைசிறந்த அமைப்பு றோ எனவும் அவ்வாறானதோர் அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது அல்லவென்றும் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா.

ஜனாதிபதியை கொல்ல மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதியின் பின்னணியில் றோ அமைப்பு உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும்:

றோ அமைப்பினுள் அதி உச்ச ஒழுக்கம் பேணப்படுகின்றது. எமது புலனாய்வுத்துறை எடுத்துக்கொண்டால் அதனுள், சில குடிகாரர்களும் இருக்கின்றார்கள், கப்பம் பெறுகின்றவர்கள் இருக்கின்றார்கள், வெள்ளைவேன் காரர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் றோ அமைப்பானது இலங்கயிலுள்ள ஒரு அரசியல்வாதியை கொல்ல நினைக்கும் என்று நான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் குறித்த கொலை முயற்சியில் றோ அமைப்பின் பின்னணி உள்ளது என்று நம்பப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள இந்தியரிடமிருந்து றோ அடையாள அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகத்திடமிருந்து விளக்கம் கோரியபோது, புலனாய்வுத் துறைகளுக்கு மனப்பாடமான பதிலொன்றை இந்திய தூதரகம் சொல்லியுள்ளது. அந்த பதில்தான் குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராம். நீர் கொழும்பு பிரசதேசத்தில் பிரத்தியேக வகுப்பு நடாத்திக்கொண்டிருந்தவர் மாட்டியவுடன் பைத்தியக்காரனானார்.

இது புலனாய்வுத் துறைகளின் பொதுவான அணுகுமுறை. தங்களது ஆட்கள் மாட்டி விட்டால் உடனடியாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஒரு போடு போடும். பின்னர் அவரை பரீட்சிக்க வைத்தியர்களை நியமிக்கும். அந்த வைத்தியர்கள் சிலநேரம் அந்த புலனாய்வுத் துறைக்கே உரியவர்களாக இருப்பார்கள் அல்லது வைத்தியர்களை விலைக்கு வாங்கும். அதன் பின்பு மனநிலை பாதிக்கப்பட்டவர் சர்வ சாதாரணமாக நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவார். மாட்டிக்கொண்டதற்காக வாங்கிக்கட்டுவார். அது அவர் எவ்வாறு மாட்டினார் என்பதை பொறுத்து.

நாட்டுக்கு கொண்டுசெல்வதற்குரிய எந்த முயற்சியும் பலிக்கவில்லையெனில், அவருக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கைவிட்டுவிடும். சிறையில் இருக்க வேண்டியதுதான்.

இங்குள்ள விசேடமென்னவென்றால், மேற்படி நபர் மாட்டியது ஒன்றும் இலங்கை பாதுகாப்பு பிரவினர் மேற்கொண்ட நடவடிக்கை கிடையாது. இலங்கையில் எந்தெந்த நாட்டு புலனாய்வு இறங்கி நிற்கின்றது என்பது இலங்கை புலனாய்வுத்துறைக்கு தெரியுமோ, தெரியாதோ மொசாட்டுக்கு தெரியும். அவ்வாறு மொசாட்டின் கண்காணிப்பிலிருந்த றோ உளவாளி என்று நம்பப்படுபவர்தான் மேற்படி தோமஸ் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர். மொசாட்டின் வேலையே இதுதான் காத்திருந்து சரியான நேரம் வரும்போது மாட்டிவிடும். தற்போது இலங்கை, இந்தியாவிற்கு அடிபணிந்து மனநோயாளி அது இது என்று இலகுவில் அனுப்பி விடுவது கஷ்டமான விடயம்.

Read more...

யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தின் பேயாட்டம் 31 வருடங்கள்.

அமைதிப்படையென வந்த இந்திய ராணுவத்தை பிறேமதாஸவுடன் இணைந்து எதிர்த்தனர் புலிகள். அவர்களுக்கு எதிராக போரும்தொடுத்தனர். இந்திய ராணுவமோ அத்துடன் தான் இலங்கையில் அமைதிப்படை என்பதை மறந்தது. அது வெறியாட்டம் ஆடியது. இந்திய இராணுவத்தாலோ அன்றில் அவர்களுடன் இணைந்து இயங்கிய அமைப்புக்களான ஈபிஆர்எல்எப் , ரெலோ மற்றும் ஈஎன்டிஎல்எப் இனராலோ புலிகளுக்கும் மக்களுக்குமான வித்தயாசம் தெரியவில்லை.

அவ்வாறு 30 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அமைதிப்படையென வந்த இந்திய ராணுவம் யாழ் மருத்தவமனையில் செய்த படுகொலைகளை மறந்துவிட முடியுமா?

அக்டோபர் 21, 1987:
முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது.

முப 11 : 30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.

பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.

பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

பிப 16 : 00 மணி – ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர்.

மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.

அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.

இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.

8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.

அக்டோபர் 22, 1987:
காலை 08 : 30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர்.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.

முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.

அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மரு. கணேச ரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.

கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.

ஆனால் இங்கு ஆறுதல் தரும் விடயம் என்னவெனில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதை இந்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக இவர்களால் இறக்கும் அனைவரையும் புலிகள் என்றே கூறி வந்தனர்.

30 வருடமாகியும் இறந்த இந்த அப்பாவி மக்களுக்கு இந்திய அரசு நியாயம் வழங்கவில்லை. ஆனால் அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை வைத்து அதற்கு வருடா வருடம் மாலை அணிவிக்கின்றது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்வதையும் யாழ் இந்திய தூதர் தடுத்து வருகிறார்.





Read more...

Saturday, October 20, 2018

விக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவர் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில் அரசியலில் இறங்கவுள்ளார் என்ற பலமான கருத்துக்கள் நிலவுகின்றது. இந்நிலையில் விக்கி தொடர்பான பல்வேறு விடயங்களை தற்போது தமிழரசுக் கட்சயினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும்“ என்ற பெயரில் இன்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய மாவை சேனாதிராஜா , விக்கி தொடர்பான பல்வேறு உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் மக்கள் அதுவரை காத்திருக்கவேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம். தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம்.

கஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள். இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த பிரச்சினைக்கு தீா்வு கண்டுவிடக்கூடாது என்பதற்காக.

பேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார்.

நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும். அதனை அரசியல் அமைப்புக்கு பொறருத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

அந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்.

நாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மகாவலி போன்ற திட்டங்களை வேண்டாம் என நாங்கள் நேரடியாக சொன்னோம். அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள். அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா?

இந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி? ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள. எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும். அதுதான் முக்கியம்.

எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாக அடிபட்டு திரிகின்றார்கள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Read more...

சுஜீவ சேனசிங்கவுக்கு உயிரச்சுறுத்தலாம்! பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தேன்.

சரியாக இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் அவர் எச்சரித்தார். 40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com