Friday, July 12, 2013

யாழ்.ஆளுநர் இல்லத்தில் விசேட ஆராதனைகள்!

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி பதவியேற்று நான்கு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று(12.07.2013) யாழ;ஆளுநர் இல்லத்தில் விசேட மத வழிபாடுகள்.

இந்த விசேட ஆராதனைகளில் யாழ்பாணம், நயினாதீவு, கிளிநொச்சி, கொழும்பு, வவுனியா, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, என பல மாவட்டங்களில் இருந்து விகாராதிகதிள், பௌத்த துறவிகள் என 10 மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கியதுடன் விசேட ஆராதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வுகளில் பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என ஜந்து மாவட்டங்களில் இருந்து இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் படை அதிகாரிகள், யாழ்.மாவட்ட பொலிஸ்மா அதிபர், யாழ் மாநகர முதல்வர், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்.ஆலடி உடுவில் நந்தாறாம தமிழ் பௌத்த அறநெறிப்பாடசாலை செயலாளர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read more...

மஹிந்தர்- சம்பந்தர் சந்திப்பு! நியாயமான தேர்தல், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு!

வட மாகாணத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கில் நியாயமானதோர் தேர்தலை நடாத்துவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வாட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சினைக்கு பிளவு படாத ஐக்கிய இலங்கைக்குள் பொருத்தமான தீர்வொன்று காணப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தாகவும் அதனை த.தே.கூ வின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றது.

Read more...

தயா மாஸ்ரரை வெளியேற்றியது டான் ரீவி.

புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளராக இருந்தவர் தயா மாஸ்ரர் எனப்படுகின்ற தயாநிதி. இவர் வன்னியில் புலிகள் மண் கவ்வியதை தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்ததடன் யாழ்பாணத்தில் இயங்கி வருகின்ற டான் தொலைக்காட்சியில் இணைந்து கொண்டார். தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பை தொடர்ந்து டான் ரீவி தயா மாஸ்ரரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. டான் ரீவியின் இயக்குனர் திரு. குகநாதன் அவர்களால் இவ்வறிவித்தல் கடந்த செவ்வாய் கிழமை யாழ் ஊடக மையத்தில் வெளிவிடப்பட்டது. „ஒரு சுதந்திர ஊடகம் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரை தொடர்ந்தும் ஊழியாராக வைத்துக்கொண்டு நடுநிலைமையாக செயற்பட முடியாது என்ற காரணத்தினால்' தயா மாஸ்ரர் நீக்கப்பட்டுவதாக குகநாதன் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வறிவித்தலை விடுத்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு குகநாதன் தொடர்ந்து தெரிவிக்கையில் : „ டான் ரீவியில் தயாநிதி அவர்கள் இணைந்து 6 மாதங்கள் சேவையாற்றிய பின்னர், கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று விடயத்தினை செய்தியாக தெரியப்படுத்தியதை தொடர்ந்தே யாழிலிருந்து செயற்படுகின்ற ஊடகங்கள் விடயத்தை செய்தியாக வெளியிட்டிருந்து. ஆனால் நான் இன்று தயாநிதி எமது நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அதற்கான காரணத்தையும் உங்களிடம் தெரிவித்திருக்கின்றேன் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என வேண்டுதல் விடுத்தார்


Read more...

பழிக்குப்பழி வாங்கவே சென்னை தொழிலதிபரை கொலை செய்தேன் - பெண் தாதா

பழிக்குப்பழி வாங்கவே சென்னையில் புளியந்தோ ப்பைச் சேர்ந்த தொழிலதிபரை வெட்டிக் கொலை செய்தேன் என பெண் தாதா ஒருவர் தெரியவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் விஜி என்ற விஸ்வநாதன். சொந்தமாக லொரி வைத்து இருந்தார். கடந்த புதன் இரவு 10.00மணி அளவில் இவர் தன்னிடம் பணிபுரியும் குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். புளியந்தோப்பு பொலீஸ் நிலையம் அருகில் அம்பேத்கார் கல்லூரி வீதிச் சந்திப்பில் வைத்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் காத்திருந்தனர் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

விஜி என்ற விஸ்வநாதனும், குமாரும் வருவதை கண்ட அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை மறித்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன குமார் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினார். விஸ்வநாதனும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனால் அவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஸ்வநாதன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். கொலையாளிகள் தாங்கள் வந்த மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 29-ந் திகதி அதே பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணின் கணவர் ராஜி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தற்போது கொலையுண்ட விஸ்வநாதனின் மனைவி கண்ணகி, அவரது தம்பி ராஜேஷ் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

லொரி தொழில் செய்வது தொடர்பாக கண்ணகிக்கும் ஸ்டெல்லாவுக்கும் போட்டி இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் கண்ணகி, ஸ்டெல்லாவின் கணவர் ராஜியை அப்போது கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதற்கு பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே ஸ்டெல்லா, நேற்று இரவு ஆள்வைத்து கண்ணகியின் கணவரை போட்டுத் தள்ளியிருப்பதாக பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது தொழில் போட்டி மற்றும் பழிக்குப் பழி வாங்கும் வகையில் 2 பெண்களே கொலைக்கான சதி திட்டத்தில் ஈடுபட்டு தாதாவாக மாறி யிருப்பது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read more...

திருத்தங்கள் இல்லை... மூன்று மாகாணங்களினதும் தேர்தல் 13 திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெறும்! ஊடக அமைச்சர்

தற்போது நடைமுறையிலுள்ள 13 திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாணம் உள்ளிட்ட ஏனைய மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகிறார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் வருகின்ற இரு மாகாணங்களுக்கோ மூன்றுக்கோ ஒன்றிணைந்த தனியொரு மாகாண சபையை அமைப்பதற்குத் தேவையான சரத்தினை நீக்குவதற்கும் மாகாண சபைக்குத் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு சட்டமூலத்தைக் கொண்டுவருதற்கு முன்னர், சகல மாகாணங்களினதும் விருப்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என் ற சட்டமூலம் மாகாண சபைகளில் பெரும்பான்மை விருப்பினைப் பெற்றுக்கொண்டால் போதுமானது என்ற திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ள போதும், அவ்விரு யோசனைகளும் பாராளுமன்றத்தின் விசேட செயற்குழுவின் அறிக்கையின் பின்னரே முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கேற்ப, மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் 13 திருத்தச் சட்டத்தின்கீழ் நடைபெறும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

கடலுக்கு அடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டம்!

கடலுக்கு அடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களை இணைக்கும் போகாய் ஜலசந்தி யில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் 10 பில்லியன் டொலர் செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த 1994ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இப்பணிகளை 2010ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும், திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. எனவே, 123 கிலோ மீட்டர் குகை பாதை அமைக்கும் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளித்து விரைவில் முடிக்க அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக 42 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வடக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான தலியானில் தொடங்கி, கிழக்கில் உள்ள யான்டாய் நகரில் இப்பாதை முடிவடைகிறது. இதன் பணிகள் எப்போது முடிவடையும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விட்டால் வரும் வருமானத்தைக் கொண்டு 12 ஆண்டுகளில் திட்டதிற்காக செலவிட்ட தொகையை ஈடுசெய்ய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் மீக நீளமான கடல் சுரங்கப்பாதை ஜப்பானில் உள்ளது. 54 கி.மீ. நீளம் கொண்ட இந்த செய்கான் சுரங்கப்பாதை, ஹான்சூ-ஹாக்காய்டோ தீவுகளை இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று, 1988ல் இந்த பாதை பயன்பாட்டுக்கு வந்தது.

இதேபோல் இங்கிலாந்து-பிரான்ஸ் நாடுகளிடையே 51 கி.மீ. நீளத்திலும் கடல் சுரங்கப்பாதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாரதி கைது!

தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த, சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த சிறுவர் இல்லத்தின் சாரதியை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தின் முச்சக்கரவண்டியின் சாரதியான 46 வயதான நபரிடம் மதுபாவனை மற்றும் புகைத்தல் பயன்படுத்துவது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தகவல்களை தெரிவித்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

மஸ்ஜிதுல் அரபா மீது கல், பன்றி இறைச்சி வீசி தாக்குதல்! மஹியங்கனையில் சம்பவம்

மகியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நேற்றிரவு தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலினுள் பன்றியின் உடல் பாகங்களும் வீசப்பட்டுள்ளதாகவும் நிர்வாக சபைத் தலைவர் எஸ்.எம்.சீனி முகம்மத்தெரிவித்தார்.

இச் சம்பவத்தினால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும். அவர் குறிப்பிட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நேற்றிரவு 11.15 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அச் சமயம் 6 பேரளவில் பள்ளிவாசல் வளாகத்தினுள் வந்தார்கள். திடீரென என் மீது மிளகாய்ப் பொடி வீசப்பட்டது. நான் உடனடியாக எனது அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டேன்.

பின்னர் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைக்கப்படும் சப்தங்கள் கேட்டன. 10 நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

உடனடியாக மஹியங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் மாகாண சபை உறுப்பினர் அநுர விதானகமகேவுக்கும் இது தொடர்பில் அறிவித்தேன். அவர்கள் உடனடியாக பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

பள்ளிவாசலினுள் சென்று பார்த்த போது பன்றி ஒன்று வெட்டப்பட்டு அதன் உடல் பாகங்கள் அனைத்தும் வீசப்பட்டடிருந்தன. நாம் உடனடியாக பள்ளிவாசலைக் கழுவி சுத்தப்படுத்தினோம்.

இன்று காலை வழமை போன்று சுபஹ் தொழுகை இடம்பெற்றது.

சம்பவம் நடைபெற்றது முதல் பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரகசிய பொலிசாரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் பள்ளிவாசலுக்கு வந்து வாக்குமூலங்களைப் பெற்றுச் சென்றனர்.

மஹியங்கன பிரதேச சிங்கள மக்கள் எம்முடன் நல்லுறவடனேயே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிறு குழுவினர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆப் பள்ளிவாசல் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கொலை குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டுவந்த நபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கெப்பித்திகொள்ளாவ எட்டவீரகொள்ளாவ பகுதியைச் 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தண்டவாளத்திலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள் ளதாக தெரிவித்த கெப்பித்திகொள்ளாவ பொலிஸார், அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும், கெப்பித் திகொள்ளாவ, பழுகொள்ளாவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக கொழும்பி லிருந்து ஓமந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிலுக்கலாம் என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

சில விஞ்ஞானிகள், மாவீரர்களை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!

விஞ்ஞானி என்றால் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள் ளும் ஒருவர் என்றும் கருதுவது வழக்கம்.. எனினும் ஒவ்வொருவரது வாழ்க்கையும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் ஒன்றில் ஞானத்தாலோ அல்லது விஞ்ஞானத் தாலோ நகர்த்தப்படுகின்றது.

விஞ்ஞானம் என்பது "எது எதனால் என ஆய்வு செய்து அது அதனால் எனக் கூறுவது" என பொருள்படும். விஞ்ஞானம் அறிவு சார்ந்தது. ஆராய்ச்சிக்கு இடமளிப்பது ஒன்றில் இருந்து எம்மை வேறுபடுத்தி, விலகவைத்து அது சார்ந்த விடயங்களை ஆய்வு செய்வது என பொருள்படும். இவ்வாறான விஞ்ஞானிகள், மாவீரர்கள், அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்களை பார்போமேயானால்,

தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

அறிஞர்கள் சோக்ரடிசும், ஹோமரும் எழுதப், படிக்கத் தெரியாதவர்கள்.

மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

Read more...

தனியார் பஸ் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படமாட்டாது - சி.பீ.ரத்னாயக்க.

தனியார் பஸ் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி தனியார் பஸ் உரி மையாளர் சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்த போரா ட்டம் படுதோல்வியடைந்துள்ளது எனவும் இலங்கை போக்குவரத்து சபையுடன் 17 பஸ் நிறுவனங்களும் 6 சங்கங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், வழமைபோன்று பஸ் சேவைகள் இடம்பெற்றன. இதனால் கெமுனு விஜேரத்னவின் வேலைநிறுத்த போராட்டம் புஸ்வானமாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசனைகளை பெற குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது எனவும் பஸ் உரிமையாளர்கள், பயணிகள் மற்றும் தனியார் போக்குவரத்து துறை அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கியதாக குழு நியமிக்கப்படுமென அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் தங்கம் வென்ற சம்மாந்துறை மாணவன்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன், தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013 அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டி யில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.

இந்தப் போட்டி 06.07.2013 ஆந் திகதியன்றி கொழும்பு றோயல் கல்லூரயில் நடைபெற்றது. இவ்வாறு வெற்றி பெற்ற மானவனை சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், வெகுவாகப்பாராட்டுவதுடன், குறித்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்த பிரதி அதிபரான ஏ.எம். தாஹாநழீமுக்கும் பாடசாலை சமூகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

இவர். முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார்.

(ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்)

Read more...

சிறைச்சாலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் 150 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்.

இந்தோனேஷியாவில் மெடான் நகரிலுள்ள டென்ஜங் கஸ்டா சிறைச்சாலையில் ஏற்ப்பட்ட கலவரத்தினால் சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கைதிகளுக்குமிடையில் ஏற்ப்பட்ட மோதல்களையடுத்தே கைதிகள் தப்பிச்சென்று ள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் தமக்கான குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென வலியுறுத்தி கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

எனினும் பதற்ற நிலையைப் பயன்படுத்தி சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்று ள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தப்பிச் சென்ற கைதிகளை கைதுசெய்வத ற்காக பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகளும் தப்பிச் சென்றவர்களில் அடங்குவதாக இந்தோனேஷிய பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையிலுள்ள சொத்துக் களுக்கும் தீ வைத்துள்ளதாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Read more...

உலகில் சில நாட்டு மக்கள் அநாகரிகமாகக் கருதும் சம்பிறதாயம்கள்!

சம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநா கரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால்,

ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப் படுகின்றது.

சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருது கின்றார்கள்.

அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

Read more...

பொதுபல சேனா, ராவண பலய தடைசெய்வதற்காக பெண்முடிச்சு போடுகிறார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவண முத்து, உள்ளிட்ட குழுவினர் ஒன்றிணைந்து பொதுபல சேனா, ராவண பலய என்பவற்றை எதிர்வரும் பொதுநல வாய மாநாட்டின் அமர்விற்கு முன்னர் தடைசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகநம்பகத் தன்மைவாய்ந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

பௌத்த பிக்குமார், இஸ்லாமிய மௌலவிகள், இந்து மதகுருக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் உள்ளிட்ட குழுவினர் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளனர்.

இந்நாட்டின் முக்கிய பீடங்களில் உள்ள பௌத்த மதகுருமாரைச் சந்தித்து பொதுபல சேனாவும், ராவண பலயவும் இந்நாட்டில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு மதங்களிடையே பிளவினை ஏற்படுத்துகின்ற இயக்கங்கள் என்பதைக் கூறிவருகின்றனர். அவர்கள் அதற்காக சில ஆதரங்களையும் கணிப்பீட்டு அட்டணைளையும் எடுத்துச் செல்கின்றனர். இந்தக் குழுவினர் தங்களது கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கோரி மிக அண்மையில் பெல்லன்வில விமலரதன தேரரையும் சந்தித்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.

பொதுபல சேனாவையும் ராவண பலயவையும் தடைசெய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு இந்தக் குழு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துவருகின்றது. எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு முன்னர் இவ்விரு இயக்கங்களும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரின் எதிர்பார்க்கையாகும்.

இவர்களுடன் இணைந்து எந்தவொரு பௌத்த மதபீடத்தினதும் எந்தவொரு தேர்ரும் இதற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்காமையும் குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது இதன்மூலம் தாமே உலக சாம்பியன் என்பதை இந்தியா மீளவும் நிரூபித்துள்ளது.

குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. குமார் சங்ககார 71 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரவீந்த்ர ஜடேஜா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை பெற்று பலமான நிலையிலிருந்தது. எனினும் மீதமுள்ள 7 விக்கெட்டுக்களும் 40 ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டன.

இதேவேளை 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது. ஒரு கட்டத்தில் 182 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

45 ஓட்டங்களை பெற்ற அவர் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதேவேளை தொடரின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.

Read more...

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி! கூட்டமைப்பு பல பிரிவுகளாக பிளவுபடும் நிலை!

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் த.தே.கூட்டமைப்பிற்குள் இழுபறி நிலை ஏற்ப் பட்டுள்ளதுடன், இதனால் கூட்டமைப்பு பல பிரிவுகளாக பிளவுபடும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் 3 பிரிவுகள் உருவாகியுள்ள இந்நிலை யில், த.தே.கூ. 3 ஆக பிளவுபடலாமென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கூட்டம் தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபைக்கு முன்னாள் நீதியரசர் சி.விக்னேஷ்வரனை கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென சம்பந்தன் முன்மொழிந்துடன் அவரையே நியமிக்க வேண்டுமெனவும் சம்பந்தன் விடாபிடியாகவிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கு ஏனைய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் தமது கருத்தில் ஆணித்தனமாக இருந்ததால் சம்பந்தனுக்கும், ஏனையோருக்குமிடையில் மோதல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேவேளை மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை ஏற்ப்பட்டுள்ளது.

Read more...

கல்முனைக் கடற்கரையில் 30 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிய கப்பலின் பாகங்கள் மீட்பு! (படங்கள் இணைப்பு)

கல்முனை கடற்கரையில் கடந்த 30 வருடங்களுக்குமுன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக்கப்பல் ஒன்றின் பாகங்கள் சுழியோடிகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன.

கல்முனை கடற்கரையில் இருந்து 1 கிலோமீற்றர்துரத்தில் குறித்த கப்பலின் இரும்புப் பாகங்கள் மூழ்கிக்கிடப்பது கண்டறியபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ் மீட்புபணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட கல்முனை கடற்கரையை நோக்கி பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


(பாண்டிருப்பு துஷயந்தன்)

Read more...

பன்முக எழுத்தாளர் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மானின் ‘அருள்மழை பொழியும் ரமழான்’ நூல் வெளியீடு நாளை (13)

பன்முக எழுத்தாளர் கலாபூசணம் வெலிகம எம். ஏ. ஹபீபுர் ரஹ்மான் எழுதியுள்ள ‘அருள்மழை பொழியும் ரமழான்’ நூல் வெளியீடு, நாளை சனிக்கிழமை (13) பி.ப. 12.30 இற்கு வெலிகம புதியதெரு றௌலத்துல் அத்பால் மத்ரஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் பணி்ப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியு. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) சிறப்புரையாற்றுவார்.

காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.எம். ளபர் (பஹ்ஜி,மதனி) நூல் அறிமுகவுரை நிகழ்த்தவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வில் விசேட மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

நான் அவ்வாறு கூறவில்லை-வீரவன்ச

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் பதவி விலகு வதாக நான் கூறவில்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தத்திலுள்ள பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும் சரத்துகளை நீக்குமாறு மட்டுமே கோரியிரு ந்தேன் என, பொறியியல் நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமைச்சர் கூறினார். வாய்மூல விடைக்காக கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாஸ எம்.பி. வட மாகாண தேர்தலை நடத்தினால் பதவி விலகுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியது குறித்து வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் பதவி விலகுவதாக நான் கூறவில்லை எனவும் 13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதனை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதோடு, இதற்காக தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக் குழுவினூடாக தேவையான மாற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Read more...

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக 4 தேசிய பாடசாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீ காரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரி, முழங்காவில் மத்திய கல்லூரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வித்தியானந்தா வித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி ஆகியன தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளதுடன், அந்த நான்கு பாடசாலைகளை யும் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதே நேரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியதவியுடன் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பல வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 98 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும், செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.

Read more...

Thursday, July 11, 2013

சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படாத யாழில் நமக்கென்ன வேலை? நாங்கள் யாழில் போட்டியிட மாட்டோம்....! –ஹெல உறுமய

தங்களது கட்சி எந்தவொரு வேட்பாளரையும் வட மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளராக நியமிக்காது எனவும், வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் ஜாத்திக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.

வட மாகாணத்திற்காக தங்களது வேட்பாளர்களை நியமிக்காத்தற்கானகாரணம் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட சிங்களவர்களை தேர்தலுக்கு முன்னர் மீள் குடியமர்த்தாமையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

வட மேல் மாகாண மற்றும் மத்திய மாகாணத்திற்காக ஏற்புடைய வேட்பாளர்களின் பெயர்களைப் பதிவதற்காக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் பொருத்தமான வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் தயார்செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

பிரித்தானியப் பிரஜைக்காக வக்காளத்து வாங்கியது பிரித்தானிய தூதுவராலயம்! எச்சரிக்கை விடுத்தார் கோட்டை நீதவான்!!

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதிபதி திலினி கமகே எச்சரித்துள்ளதுடன் உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிபதி திலினி கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவாறு வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடவுச் சீட்டைக் கேட்டு உரிய நபர் மனுத் தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, உயர் ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் ரூபா 17 ஆயிரத்து 202 இற்கான கட்டணத்தைச் செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு கிரேன் ஓரியண்ட் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹோட்டலிலிருந்து வெளியேறியவர் தனது கடவுச் சீட்டை தவறுதலாக ஹோட்டலிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

அவது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொலிஸார் அந்தக் கட்டணத்தை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகமும் முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே உரியவர் இன்றி உயர் ஸ்தானிகராலயத்தால் கடவுச் சீட்டைக் கோரி நிற்பது சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ள நீதிபதி அவ்வாறு கோரி நிற்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

Read more...

சவுதி இளவரசி கைது!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பணிப்பெண் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாய மாக வேலையில் ஈடுபடுத்தி தங்கவைத்துள்ளதால், ஆள் கடத்தல் வழக்கின் அடிப்படையில் சவுதி இளவரசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு, 30 வயதுடைய கென்யா நாட்டுப் பெண் ஒருவர் வேலைக்காக சவுதி அரேபியா அழைத்து வரப்பட்டார். அங்கு வந்ததும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இளவரசி மெஷேல் அலேபன் அவரை வீட்டு வேலைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு அவர் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். சம்பளமும் பேசியதைவிட குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 1,600 டாலர் மாத சம்பளமாக பேசப்பட்ட அவருக்கு மாதம் 200 டாலர்தான் வழங்கப்பட்டுள்ளது. வெளியே செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்தப் பெண் தன்னுடைய உடைமைகளுடன் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணித்துள்ளார். ஒரு நிறுத்தத்தில் இறங்கிய போது அருகில் இருந்தவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அவர் உதவியுடன் கொடுத்த புகாரின் பேரில், மெஷேல் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது, பணியாட்கள் ஒப்பந்ததாரரின் தவறான செயல் முறையினால் ஏற்பட்ட பிரச்சினை இது என்று இளவரசி தரப்பில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த செயல் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்திருப்பது போலாகும் என்று தெரிவித்தார்.

இளவரசி மெஷேல் அலேபனுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஜாமீன் அளித்த நீதிபதி, வழக்கு முடியும்வரை அவர் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், நீதிமன்ற மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஷேலுக்கு 12 வருட சிறைவாசம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Read more...

தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

பொலிஸ், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை தொடர்பாக, அவதான மாக செயற்படுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்படி அழைப்பு விடுக்கப்பட்டே பணமோசடிகள் நடந்திரு ப்பதாக புலன் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், பயமுறுத்தல், பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்யும் குழுக்களைப் பற்றிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

இளவரசனின் மரணத்தில் மறைந்துள்ள சந்தேகங்கள்

தர்மபுரி இளவரசன் ரயில்பாதை அருகே, தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி உயிரிழந்த அவரின் மரணம் அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள துடன், இளவரசனின் குடும்பத்தினரும் இது தற்கொலை அல்ல கொலை என்று கூறி மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இளவரசனின் மரணம் குறித்து பல்வேறு சமூக அமைப்பு களும் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி, இளவரசனின் உடலை மறு பிரேதப் பரிசோனை செய்வது குறித்து, மருத்துவர் ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இளவரசனின் உயிரற்ற உடல் இருந்த இடத்தை தர்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11.30 மணிக்கு கடந்து சென்றுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கைப்படி 12 - 1 மணிக்குள் தான் உயிர் பிரிந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் அடுத்த ரயில் வண்டியான குர்லா எக்ஸ்பிரஸ் 1.30 மணிக்கு சென்றுள்ளது.

குர்லா ரயில்வண்டியின் ஓட்டுனர் விசாரணையில் கூறும்போது, தான் ஒரு உயிரற்ற சடலத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.

முதல் வண்டி - 11.30

மணி உயிர் பிரிந்த நேரம் - 12 - 1 மணிக்குள் (பிரேதப் பரிசோதனை அறிக்கை)

அடுத்த வண்டி - 1.30மணி.

இந்தத் தகவலை மரணமடைந்த இளவரசனின் உறவினர் ஒருவர் தெரிவித் துள்ளார்.

இளவரசனின் மரணம் குறித்து அரசும் உளவுத்துறையும் காவல்துறை மூலமாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக பல்வேறு அமைப்பிநரும் தெரிவிக்கின்றனர். இளவரசனின் சட்டை பையில் கடிதம் இருந்ததாகவும் அதை ஒருவர் எடுத்து சென்றுவிட்டதாகவும் பின்னர் விசாரித்து அதை கைப்பற்றியதாகவும் கூறிய காவல்துறையினர் அந்த நபரை ஏன் கைது செய்யவில்லை?.

இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து பல்வேறு அமைப்புகளின் சந்தேகக் கேள்விகள் வருமாறு,

இறந்த இளவரசனின் பையில் கடிதம் இருந்தது அந்த நபருக்கு எப்படி தெரியும்?

அவர் ஏன் அதை எடுக்க வேண்டும்?

அதை ஏன் அவர் மறைக்க வேண்டும்?

மறைத்ததை யார் மூலம் கண்டறிந்தனர்?

அப்படியானால் கடிதத்தை எடுத்தவருக்கும், மறைத்த செய்தியை தெரிந்து வைத்திருந்தவருக்கும் என்ன தொடர்பு?

இளவரசனின் உயிரற்ற உடலை முதலில் பார்த்தவருக்கு கடிதம் பற்றி தெரிந்து இருந்ததா?

தெரிந்து இருந்தால் ஏன் அதை அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை?

இளவரசனின் உயிரற்ற உடலை முதலில் பார்த்தவர் கடிதம் பற்றி அறியாமல் இருந்திருந்தால் அவர் அதிகாரியை சந்திக்க சென்ற போது கடிதத்தை அந்த நபர் எடுத்து சென்றாரா?

அப்படியானால் அந்த நபர் இளவரசனின் உடலருகே தடயத்தை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சித்துள்ளார்? கடிதத்தை எடுத்தபோது 'பார்த்தவர்' உடன் இருந்தாரா?

சம்பவம் நடந்த இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை?

அப்படியானால் அவர்கள் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்திருக்க வேண்டும்?

முதலில் உடலை பார்த்த'கேங் மேன்' அவர்கள் அங்கு இருந்ததை பார்த்தாரா?

தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரி எடுத்த நடவடிக்கை என்ன? எவ்வளவு நேரத்தில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்? யார் யாருடன் சென்றார்? காவல்துறை இருந்ததா?

கடிதம் இருந்திருந்தால் இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை?

கடிதம் சட்டை பையில் இருந்ததாக சொன்ன காவல்துறையினர் இப்போது யாரோ சொல்லி யாரிடமிருந்தோ கைபற்றியதாக முரணாக கூற வேண்டிய காரணம் என்ன? என்பது போனற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை அரசோ, காவல்துறையோ வெளிக்கொண்டு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் பிரேதப் பரிசோதனை செய்யும் நேரமும் முன்னுக்குப்பின் முரணாக கூறப்பட்டது. பிறகு திடீரென யாருக்கும் தெரிவிக்காமல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை செய்யும் முன் உறவினர்களிடம் கையொப்பம் வாங்க வேண்டும். யாரிடம் கையொப்பம் வாங்கி பிரேதப் பரிசோதனை நடத்தினார்கள் எனபது தெரியவில்லை. இளவரசனின் உறவினர்கள் யாரிடமும் கையொப்பம் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இளவரசனின் உயிரற்ற உடல் கிடந்த இடத்தில் ஏன் இதுவரையில் தடையவியல் துறை எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

தற்போது இளவரசனின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஏன் அரசும், நீதித்துறையும் தாமதம் செய்து வருகின்றன. பல வழக்குகளில் இறந்த உடலை அடக்கம் செய்த பிறகும் கூட சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க இளவரசன் மரணத்தில் எதை மறைப்பதற்காக இவ்வாறு நடைமுறைக்கு முரணாக அனைத்தும் நடந்து வருகிறது. இந்தக் கேள்விக்கிப் பின்னால் உள்ள உண்மை தான் என்ன?

Read more...

வவுனியா 'விடியல் கல்வி அறக்கட்டளை' அமைப்பு தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்தது (படங்கள் இணைப்பு)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "விடியல் கல்வி அறக்கட்டளை" அமைப்பு தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது.

வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழிகாட்டி புத்தகங்களை இவ்வமைப்பு வழங்கியது.

இன் நிகழ்வினை பாடசாலை பிரதி அதிபர் திருமதி. த. யுகராஜா ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. சு. வஸ்தியாம் பிள்ளை இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதி அதிபர், அதிபர், விடியல் அமைப்பின் தலைவர் கி. பிரணவன், உப தலைவர் சி.சிவதர்சன், பொருளாளர் அ.அனுசியன் செயற்குழு உறுப்பினரும் அப்பாடசாலை ஆசிரியருமான சே.நிமலன் ஆகியோர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.

Read more...

புகுஷிமா அணு உலையின் தலைமை நிர்வாகி புற்று நோயால் மரணம்

புகுஷிமா அணு உலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மசாவோ யோஷிடா புற்று நோயால் உயிரி ழந்துள்ளார். அவரது இழப்பிற்கும் அவரது வேலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அணுஉலை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டை உலுக்கிய பூகம்பம்-சுனாமியால், புகுஷிமாவில் உள்ள அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது அணு உலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர், மசாவோ யோஷிடா. புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த 58 வயதான யோஷிடா சிகிச்சை பயனின்றி மரணம் அடைந்தார்.

இதையொட்டி அணு உலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புற்று நோய்க்கும், யோஷிடா புரிந்த பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. சுனாமியின்போது அணு உலையை சீரமைப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர், யோஷிடா என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நடவடிக்கையால் மிகப்பெரிய பேரழிவு தடுக்கப்பட்டது.

Read more...

இந்தியா இலங்கை இறுதிப்போட்டி இன்று! 400வது ஒருநாள் போட்டியில் விளையாடும் மகேலா!

மீண்டும் எதிர்பார்த்த இறுதிப் போட்டி. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இளம் கேப்டன்கள் ஆனால் திறமை மிக்கவர்களான ஆஞ்சேலோ மேத்யூஸ், வீரத் கோலி ஆகியோரில் இன்று வெல்லப்போவது யார் என்பது போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும்.

மழை லேசாக பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அச்சுறுத்தல் இல்லை. முழு போட்டி நடைபெறும் என்றே கூறப்படுகிறது. இதுவே இந்த ஆண்டு இலங்கை-இந்தியா மோதும் கடைசி போட்டியாகும்.

மகேலா ஜெயவர்தனே ஜெயசூரியாவுக்குப் பிறகு இலங்கையிலிருந்து 400வது ஒருநாள் போட்டியை விளையாடும் சாதனையை இன்று நிகழ்த்துகிறார். நிச்சயம் அவருக்கு இது ஸ்பெஷல் போட்டி.

டாஸ் முக்கியமானது. ஏனெனில் மழை பெய்த பிறகு பிட்ச் சற்றே பவுன்ஸ் அதிமாக எடுக்கிறது.

Read more...

புதிய டிஸ்கவர் 125டி மோட்டார் சைக்கிள் அறிமுகம்

உலக அளவில் அதிக மோட்டார் பைக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் 3வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய டிஸ்கவர் 125டி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இதில் 4 வால்வ் டிடிஎஸ்ஐ என்ஜின், 12.5 பி.எஸ்.பவர் இருப்பதால் 30 சதவீத கூடுதல் திறன் கொண்டது. அதிக மைலேஜ் தரக்கூடியது.

இதில் 125டி நைட்ரக்ஸ் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் கொண்டது. விரும்புபவர்கள், டிஸ்க் பிரேக் கொண்ட பைக்கை தேர்வு செய்யலாம். இது 4 வண்ணங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

27 வருடங்களின் பின் கோப்பாய் வளலாய் அக்கரை கிராமத்தில் மீள் குடியேற்றம்!

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த கோப்பாய் வளலாய் அக்கரை கிராமம் 27 வருடங்களுக்கு பின் இன்று(11.07.2013) காலை பொதுமக்கள் மீள்குடியேற்றுவதற்காக இராணுவத்தால் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

1986 ஆம் ஆண்டு நடைபெற்றயுத்தத்திற்குப் பின் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த கிராமம் 27 வருடங்களுக்கு பின் இன்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்து.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாவட்ட உதிவிச் செயலர் சுதர்சன், கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், இராணுவ உயரதிகாரிகள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்கை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more...

தேசிய அணியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 20 பேர் கொண்ட இலங்கை 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட குழாமில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் பி.துவாரகசீலனும் இடம்பெற்றுள்ளார்

கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்ட பட்டியலில் பி.துவாரகசீலனுடைய பெயரும் இடம்பெற்றுள்ளது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இத்துடுப்பாட்ட அணியின் தலைவராக சமிக்க கருணாரட்ண செயற்பட உள்ளார்.

Read more...

மூன்று மாகாண சபைக்குமான வேட்புமனுத்தாக்கல் திகதிகள் அறிவிப்பு

கலைக்கப்பட்ட வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் மற்றும் வடக்கு மாகாணசபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார.

தேர்தல் ஆணையாளரின் அறிவிற்புக்கு அமைய எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com