Showing posts with label world. Show all posts
Showing posts with label world. Show all posts

Thursday, July 11, 2013

சவுதி இளவரசி கைது!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பணிப்பெண் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாய மாக வேலையில் ஈடுபடுத்தி தங்கவைத்துள்ளதால், ஆள் கடத்தல் வழக்கின் அடிப்படையில் சவுதி இளவரசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு, 30 வயதுடைய கென்யா நாட்டுப் பெண் ஒருவர் வேலைக்காக சவுதி அரேபியா அழைத்து வரப்பட்டார். அங்கு வந்ததும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இளவரசி மெஷேல் அலேபன் அவரை வீட்டு வேலைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு அவர் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். சம்பளமும் பேசியதைவிட குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 1,600 டாலர் மாத சம்பளமாக பேசப்பட்ட அவருக்கு மாதம் 200 டாலர்தான் வழங்கப்பட்டுள்ளது. வெளியே செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்தப் பெண் தன்னுடைய உடைமைகளுடன் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணித்துள்ளார். ஒரு நிறுத்தத்தில் இறங்கிய போது அருகில் இருந்தவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அவர் உதவியுடன் கொடுத்த புகாரின் பேரில், மெஷேல் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது, பணியாட்கள் ஒப்பந்ததாரரின் தவறான செயல் முறையினால் ஏற்பட்ட பிரச்சினை இது என்று இளவரசி தரப்பில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த செயல் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்திருப்பது போலாகும் என்று தெரிவித்தார்.

இளவரசி மெஷேல் அலேபனுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஜாமீன் அளித்த நீதிபதி, வழக்கு முடியும்வரை அவர் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், நீதிமன்ற மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஷேலுக்கு 12 வருட சிறைவாசம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Read more...

Monday, July 8, 2013

எகிப்திய இராணுவ சதி இஸ்லாமியவாத ஜனாதிபதி முர்சியை பதவியில் இருந்து வீழ்த்தியது. By Johannes Stern and Alex Lantier

நான்கு நாட்கள் தேசிய அளவிலான வெகுஜன எதிர்ப்புக்களை தொடர்ந்து எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சி அகற்றப்பட்டபின், அதிகாரம் ஒரு இராணுவ ஆட்சிக் குழுவின் கைகளில் உள்ளது, அது நாட்டின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நோக்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிகொண்டது.

வெறுக்கப்பட்ட முர்சியின் ஆட்சி அகற்றப்பட்டமையானது பெரும் ஆரவாரத்தை தூண்டியுள்ளது. ஆனால் இந்த உணர்வு எவ்வளவு நேர்மையானதும், ஆழமானதுமாக இருந்தாலும், முர்சி அகற்றப்பட்டு அதிகாரத்தில் இருத்தியுள்ளது இராணுவத்தைத்தானேயன்றி வெகுஜனங்களை அல்ல என்பதுதான் உண்மை. வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டிய அடிப்படைக் கோரிக்கைகள் எதுவும்—கௌரவமான வேலைகள், வாழுவதற்கான ஊதியங்கள், போதுமான சமூகநலச் சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள்—இராணுவ ஆட்சியால் நிறைவு செய்யப்படமாட்டா.

இராணுவம் ஒரு முக்கிய காரணத்திற்காக தலையீடு செய்துள்ளது: எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பெருகும் அரசியல் இயக்கத்தை முன்கூட்டியே தவிர்ப்பதற்காகவும் நசுக்குவதற்காகவுமாகும். நேற்று இரவு அது அறிமுகப்படுத்தியுள்ள கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக விழைவுகளின் உண்மையான வெளிப்பாடு அல்ல. மாறாக, புதிய ஆளும் அமைப்பு பிற்போக்குச் சக்திகளின் தீய கூட்டணி ஆகும்; இதில் நீண்டகாலம் ஹொஸ்னி முபாரக்கின் எடுபிடியாக இருந்தவர்கள், பல தாராளவாதிகள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியுடன் நெருக்கமான தொடர்புகளை உடையவர்கள் ஆகியோர் உள்ளனர். தனிப்பட்டவர்கள் எவரும் அல்லது அமைப்புக்கள் எதுவும் ஒரு வெகுஜன சமூகத் தளத்தை கொண்டிருக்கவில்லை, மக்களுக்கான சமூகநல வேலைத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) தொலைக்காட்சி நிலையங்களை கைப்பற்றி, முர்சியையும் கைது செய்தபின், இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவர் ஜெனரல் அப்துல் படா கலில் அல்-சிசி ஒரு அரசியல் “சாலை வரைபடத்தை” கொடுத்துள்ளார்: இதில் அரசியலமைப்பு தற்காலிகமாக, உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, “தேசியத் தொழில்நுட்ப அறிஞர்” அரசாங்கம் எனப்படுவதை அமைப்பது ஆகியவை உள்ளன.

“தொழில்நுட்ப அறிஞர்” என்னும் சொற்றொடர் அரசியலில் நடுநிலை காட்டும் வல்லுனர்கள் என்னும் தோற்றத்தைத் தூண்டக் கூறப்படுகிறது; அவர்கள் வர்க்க நலன்களுக்கு மேலே இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. உண்மையில், “தொழில்நுட்ப அறிஞர்கள்” எனப்படுவோர் சர்வதேச வங்கிகளின் பிற்போக்குத்தன செயற்பாடுகளில் ஆழமாக ஈடுபட்டிருப்பவர்களாவர்.

அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மை, அல்-சிசி தன்னுடைய “சாலை வரைபடத்தை” நேற்று மாலை அறிவித்தபோது அவரை சுற்றி இருந்த பிற்போக்குவாதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியவரும். இவர்களுள் பல தளபதிகள், கோப்டிக் போப் இரண்டாம் தவட்ரோஸ், பெரும் இமாம் அல்-அஷர் அஹ்மத் அல்-தயிப் மற்றும் எதிர்ப்பு அரசியல்வாதிகளான தேசிய மீட்பு முன்னணி (NSF) தலைவரும் முன்னாள் ஐ.நா. அதிகாரியுமான முகம்மது எல்பரடேய், அதி வலது சலபிஷ்ட் அல் நூர் கட்சியின் யூனிஸ் மகியோன் மற்றும் எதிர்ப்பு தமரோட் (‘எழுச்சி’) கூட்டணியின் மகம்மது பட்ர் ஆகியோர் இருந்தனர்.

இந்த நபர்களில் ஒவ்வொருவரும், முக்கிய அரசியல் மற்றும் மத வேறுபாடுகளில் உள்ள எகிப்தின் புதிய ஆட்சிக்கு பரந்த ஆதரவு என்னும் தோற்றத்தை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இராணுவம், தலைமை அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள ஆட்லி மன்சூரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. முகம்மது எல்பர்டேய் பிரதம மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சீக்கிரம் தேர்தல்கள் நடைபெறும் என்னும் தெளிவற்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மன்சூர், பழைய முபாரக் ஆட்சியுடன் நீண்டக்கால உறவுகளைக் கொண்டவர். பல காலம் ஐ.நா.வில் அதிகாரியாக பணியாற்றிய எல்பரடேய் அமெரிக்காவின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கை நடைமுறையுடன் நெருங்கிய தொடர்புடையவர். எல்பரடேய் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்—சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்திய பேச்சுக்களில்; அது அடிப்படை பொருள்களான தானியம், எரிபொருள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் மானியங்கள் வெட்டப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு அரங்கமைத்த அரசியல் தந்திரோபாயங்களில், முக்கிய பங்கு தமரோட் கூட்டணிக்கு உண்டு. இது முற்றுமுழுதாக ஒரு முதலாளித்துவ அரசியல் இயக்கம் ஆகும். ஏப்ரல் மாத இறுதியில் முர்சிக்கு எதிராகக் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சாரத்திற்காக நிறுவப்பட்ட இந்த அமைப்பு, விரைவில் முன்னாள் முபாரக் ஆட்சியில் எஞ்சியிருப்போர், முஸ்லிம் சகோதரத்துவத்தை எதிர்க்கும் பலவகை எதிர்க்கட்சியினர், தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடது அனைத்தும் கூடுமிடமாகியது. இதன் ஆதரவாளர்களில் எல்பரடேயின் NSF, இஸ்லாமிய வலுவான எகிப்து கட்சியின் முன்னாள் MB யின் உறுப்பினர் அப்தெல் மோனிம் அபௌல் போடௌ, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகியோர் அடங்குவர். கடைசியாக முபாரக்கின் கீழ் பிரதமராக இருந்தவரான தளபதி அஹ்மத் ஷபிக் ஒப்புதலையும் இந்த இயக்கம் பெற்றது.

முர்சியை அமெரிக்கா ஆதரித்து வந்தபோதிலும்கூட, எகிப்திய ஆட்சி காப்பாற்றப்பட முடியாது என ஒபாமா நிர்வாகத்திற்கு தெளிவானவுடன், இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியது. எகிப்திய இராணுவமானது தளபதி மார்ட்டின் டெம்ப்சி என்னும் அமெரிக்க கூட்டுப் படை தலைவருடன் தீவிர விவாதங்கள் நடத்திய பின் ஆட்சிமாற்றத்தை செயல்படுத்தியது.

நேற்று மாலைவந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா முர்சி அகற்றப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தார்; அதே நேரத்தில் “இராணுவ சதி” என்ற சொல்லையும் தவிர்த்தார். இராணுவத்தின் மீது தடை எதையும் சுமத்தாத தெளிவற்ற சொல்லாட்சியில், ஒபாமா புனிதமாக இராணுவம் “விரைந்து பொறுப்புடன் செயல்பட்டு முழு அதிகாரத்தையும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலிய அரசாங்கத்திற்கு கொடுக்க முன்வரவேண்டும் என்றும், இது அனைத்தையும் உள்ளடக்கும் வெளிப்படையான வழிவகையில் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மீண்டும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) —எகிப்திலுள்ள மிக முக்கியமான போலி இடது குழுக்களில் ஒன்று— அதன் வனப்புரையை பயன்படுத்தி முதலாளித்துவத்தின் அரசியல் தந்திரங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளது. பெப்ருவரி 2011ல் RS ஆனது இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்தது; முபாரக் அகற்றப்பட்டபின் அது பதவிக்கு வந்தது. 2012ல் இராணுவம் பெருகிய மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்தபோது, அவர்கள் முர்சியின் தேர்தலை புரட்சியின் வெற்றி எனப் பாராட்டினர். இப்பொழுது தொழிலாள வர்க்கம், முர்சி மற்றும் MB க்கு எதிரான போராட்டத்தை நடத்துகையில், இவர்கள் சதிக் குழுவுடன் இணைந்து, மீண்டும் இராணுவத்திற்கும் முபாரக்கின் பழைய ஆட்சிக் கூறுபாடுகளும் அதிகாரத்திற்கு வந்துள்ளதை ஆதரிக்கிறனர்.

RS உடைய பிற்போக்கு அரசியலில் ஒரே நீடித்த கூறுபாடு அவர்களுடைய தொடர்ந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வெளிப்படக்கூடாது என்பதற்கு இருப்பதுதான். இவர்கள் உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்றனர்; அதுதான் எகிப்திய முதலாளித்துவ ஸ்தாபனத்தினதும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு நெருக்கமுடன் இணைந்த பிரிவுமாகும்.

உலக சோசலிச வலைத் தளம், இராணுவத்தின் மீது பிரமை கொள்ளவேண்டாம் என தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. நிதிய மூலதனம் கோரும் கொள்கைகளைத்தான் இராணுவம் செயல்படுத்த முற்படும். இறுதிப் பகுப்பாய்வில், ஒருபுறம் இராணுவம் மறுபுறம் அகற்றப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவம் என்பது ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இராணுவம் தயாரிக்கும் அடக்குமுறையின் முக்கிய இலக்கு, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதுதான். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் “தேசிய நலன்களுக்கு” எதிரானவை, நெறியற்றவை எனக்கண்டிப்பதற்கு அரங்கு அமைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எகிப்தை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள புரட்சிகர நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவது என்பதற்கு வெளியில் ஒரு முற்போக்கான தீர்வு எதுவும் கிடையாது. அதற்கு நகர்ப்புற, கிராமப்புற வறிய பரந்த வெகுஜனங்களை ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரட்டவேண்டும்.

Read more...

Tuesday, January 29, 2013

ராக்கெட் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி: விண்வெளிக்கு குரங்கை வெற்றிகரமாக அனுப்பியது ஈரான்

செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போது, மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடும் வகையில், உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியிருப்பதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவாஷ்கர் ராக்கெட் மூலம் குரங்கு அனுப்பப்பட்டதாகவும், அது 120 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பின்னர் பத்திரமாக திரும்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குரங்கு உயிருடன் திரும்பி வந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளது.

ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தவில்லை. நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் இந்த சோதனை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நாளில் சோதனை நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு குரங்கை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது மீண்டும் அந்த முயற்சியில் வெற்றி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை மறுத்துள்ள ஈரான், அமைதியான ஆற்றலுக்காக மட்டுமே அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறது.

Read more...

Thursday, January 17, 2013

வாழ்க்கைத்தரங்கள் வீழ்ச்சியடைகையில் பில்லியனர்கள் இலாபமடைகின்றனர்.Patrick Martin

உலகின் மிகப் பெரிய 100 செல்வந்தர்கள் 2012ல் தங்கள் மொத்தச் சொத்துக்களுக்கு இன்னும் 241 பில்லியன் டாலர்களை சேர்த்தனர் என்று ப்ளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவிக்கிறது. மிக அதிக செல்வம் படைத்த 100 பேர் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் உலகப் பங்குச் சந்தைகளில் விலையின்படி கணக்கீடு செய்யும்போது மொத்தம் 1.9 டிரில்லியன் டாலர்கள் நிதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர். இது ஒவ்வொருவருக்கும் சராசரி 20 பில்லியன் டாலர்கள் எனக் காட்டுகிறது.

இந்த உயர்மட்ட 100 பேர் ஒரு தனி நாடாக இருந்தால், அவர்களுடைய கூட்டுச் சொத்து எட்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையவிட அதிகமாகும். இவர்கள் பட்டியலில் இத்தாலிக்கு பின் இருப்பார்கள், ஆனால் இந்தியா, ரஷ்யாவைவிட முன்னே இருப்பர். ஆனால் பில்லியனர் முதலாளித்துவத்தினராக இருப்பதால், இந்த உயர்மட்ட 100 பேர் உண்மையில் எதையும் உற்பத்தி செய்வதில்லை.

பெரும் செல்வந்தரகளின் பெருகும் செல்வத்திற்கு முக்கிய உந்துதல் அளிப்பது உலகப் பங்கு விலைகளின் ஏற்றம் ஆகும். உலகம் முழுவதும் இது 13.2% அதிகரித்துள்ளது என்று MSCI World Index குறிக்கிறது. 13.4% அமெரிக்காவில் என்று S&P 500 அளவிட்டுள்ளது. Stoxx Europe 600 குறியீடு ஜூன் மாதத்தில் இருந்து 19.6% அதிகரித்துள்ளது. அப்பொழுது முதலீட்டாளர்கள் கிரேக்கக் கடன் நெருக்கடி யூரோப்பகுதியில் உடனடியான வீழ்ச்சியை ஏற்படுத்தாது என மதிப்பிட்டனர்.

அமெரிக்கா, உயர் 12 பில்லியனர்களில் 9 பேரையும் உயர்மட்ட 100 நபர்களில் 37பேரையும் கொண்டுள்ளது. அமெரிக்க பில்லியர்களின் கூட்டு இருப்பு மொத்தத்தில் பாதியாக உள்ளது. ரஷ்யா உட்பட ஐரோப்பா இதைப் பின் தொடர்ந்து 34 பேரைக் கொண்டுள்ளது. ஆசியாவில் 14 பேரும், இலத்தீன் அமெரிக்காவில் 11 பேரும் உள்ளனர்.

உயர்மட்ட 100 பேரில் மிக அதிகமாக ஆதாயம் அடைந்த ஒற்றை நபர் ஸ்பெயின் நாட்டின் அமானிசியோ ஒர்டேகா ஆவார். 76 வயதான இவர் Inditex SA retailer நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஸாரா ஆடைகள் தொடர்கடைகளை நடத்துபவரான இவருடைய செல்வம் 35.3 பில்லியன் டாலர்களில் இருந்து 57.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது அவரை அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பபேயை தாண்டி உலகக் குறியீட்டில் மூன்றாவது இடத்திற்கு உயர்த்திவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக பட்டியலில் முதல் இரு இடங்களில் இருப்பவர்களான மெக்சிகோவின் வங்கி, தொலைத்தொடர்பு, செய்தி ஊடகப் பேரரசர் கார்லோஸ் ஸ்லிம்மிற்கும், மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸுக்கும் அடுத்தாக பின்னால் வருகிறார்.

ஒர்டேகா கிட்டத்தட்ட 20% பெரிய ஆதாயங்களை ஆண்டில் காட்டிய பில்லியனர்களில் சில்லறை உடைமையாளர்கள் என்ற ஒரு போக்கின் பகுதியாவார். மற்ற சில்லறை வணிகர்களில் IKEA நிறுவனர் உலகின் ஐந்தாம் பெரிய பணக்காரர் 86 வயதான இங்வார் காம்பெட் 42.9 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடனும், Amazon.com இன் ஜெவ் பெஜோஸ் மற்றும் வால் மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டனின் நேரடி வாரிசுகள் நான்கு பேர் அடங்குவர்.

2008ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் நுகர்வோர் செலவுகள் அடிப்படையில் தேக்கம் அடைந்துள்ள நிலையில், இத்தகைய அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சில்லறை வணிக முதலாளிகள் தங்கள் செல்வங்களை விற்பனை உயர்வுகளால் அதிகம் பெற்றுவிடவில்லை. ஏனெனில் அத்துறையில் சிறிய போட்டியாளர்கள் நெருக்கடியினால் அழிந்துவிட்டனர். காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோக உரிமை இலாபங்கள்தான். உதாரணமாக பெஜோஸ் 2012இல் தன்னுடைய நிகர மதிப்பிற்கு 6.9 பில்லியன் டாலர்ளை சேர்த்தார். இது போட்டி நிறுவனம் Borders உடைய சரிவிற்குப் பின் ஏற்பட்டது. அதுவோ 20,000 வேலைகளைத் தகர்த்துவிட்டது.

பில்லியனர்களின் உயரும் செல்வங்களுக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரச் சரிவுகளுக்கும் இடையே பிளவடைந்து கொண்டுபோவது உலக முதலாளித்துவத்தின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாகும். இத்தகைய வேறுபாடு ஸ்பெயினைவிட வேறு எங்கும் அப்பட்டமாகக் காண்பதற்கில்லை. இங்கு 1600 ஜாரா கடைகளைக் கொண்ட Inditex உடைய நிறுவனரான திரு. ஒர்டேகா தன்னுடைய சொத்துக்களை 2012ம் ஆண்டில் 121.2 பில்லியன் டாலர்கள் அதிகப்படுத்தினார்.

முதலாளித்துவ நெருக்கடி ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவைக் கொண்டுவந்துள்ளது. வீட்டுச் சொத்துக்கள் சராசரியாக 8% சரிந்து விட்டன. இது ஐரோப்பிய நாடுகளுள் மந்தநிலையினால் பெரும் அழிவிற்கு உட்பட்டுள்ள கிரேக்கத்திற்கு அடுத்த நிலைதான். பொதுவான வேலையின்மை மற்றும் இளைஞரிடையே வேலையின்மை என்பது முறையே 26.6%, 56.% என்ற உயர்ந்த அளவில் உள்ளது. பிரதம மந்திரி மரியானோ ரஜோய் தலைமையில் இருக்கும் வலதுசாரி அரசாங்கம் பொதுச் செலவுகளில் பாரிய வெட்டுக்களை தொடர்ந்து அறிவித்துள்ளது. இது பொதுக் கல்வி முறையையும் பிற அடிப்படை சேவைகளையும் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது.

ஆனால் ஸ்பெயினின் தொழிலாள வர்க்கம் பெருமந்த நிலைக்குப் பின் மிக மோசமான பொருளாதார நிலைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கையில், ஒரு ஸ்பெயினின் பில்லியனர், ரஜோய் அரசாங்கம் அறிவித்துள்ள வெட்டுக்களின் மொத்தத் தொகையைவிடக் கூடுதலான தனிப்பட்ட சொத்துக்களைக் கொண்டுள்ளார். 57.5 பில்லியன் டாலர்கள் என்னும் நிலையில், ஒர்டேகாவின் சொத்து அவரை ஸ்பெயினின் தேசிய வரவு-செலவுத் திட்டத்தை கிட்டத்தட்ட தகர்த்துவிட்ட கடந்த மாதம் ஸ்பெயினின் வங்கிமுறைக்கு வழங்கப்பட்ட பிணையெடுப்பான 52 பில்லியன் டாலர்களைக் கொடுக்க வைத்திருக்க முடியும். அவ்வாறு கொடுத்த பின்னரும் இன்னும் பல பில்லியன்கள் எஞ்சியும் இருக்கும்.

சமீபத்திய மாதங்களில் ஸ்பெயின் பிராங்கோவின் பாசிச ஆட்சிக்காலத்தில் இருந்து கேட்கப்படாத சமூகப் பெரும் சோகங்களின் காட்சிக்கூடமாக இருக்கிறது. வீடுகளை ஏலத்திற்கு விற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டது, தொழிலாளர்கள் வேலையில்லாத இருப்பது, முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்து உணவைச் சேகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மனித உடலில் ஒரு சிறிய எண்ணிக்கை உடைய கலங்கள் மற்றைய கலங்களினதும் மற்றும் உடல் முழுவதினுடைய இழப்பில் வரம்பின்றிப் பெருகி வளர்ச்சி அடைந்தால், மருத்துவ அறிவியலில் இந்நிகழ்விற்கு ஒரு குறிப்பிட்ட பெயரிட்டுள்ளது. இதுதான் புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டு முதலாளித்தவ சமூக அமைப்பில், பெரும் செல்வந்தர்கள் இதே தீய, அழிக்கும் பங்கைத்தான் அடிப்படையில் கொண்டுள்ளனர்.

உடல் நலத்துதுறையில், மனித உயிரை பாதுகாக்க புற்றுநோயை அழிப்பதற்கு பல வகைச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தி அழித்தல் கையாளப்படுகின்றது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில், பெரும் செல்வந்தர்களின் வளர்ச்சி அனைத்து முன்னேற்றத்திற்கும் ஆதாரம் எனப் புகழப்படுவதுடன், சமூகப் புற்றுநோய் “வேலைகளைத் தோற்றுவிக்கும் அமைப்பு” என போலியாகக் கூறப்பட்டு முழு அரசியல் அமைப்புமுறையும் அதற்கு முன் மண்டியிட்டு நிற்கிறது.

Read more...

பிரென்னன் நியமனம்: சித்திரவதை செய்பவர்கள், படுகொலை செய்பவர்களின் அரசாங்கம்.Bill Van Auken

தனது புலனாய்வுத் துறையின் புதிய தலைவர் பற்றி ஒபாமா என்ன புழுகுகின்றார் தெரியுமா?

“எமது முயற்சிகளை ஒரு வலுவான சட்ட வடிவமைப்பிற்குள் ஒருங்கிணைத்துவிட அவர் உழைத்துள்ளார்” என்று கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை கிழக்கு அறையில் பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்தார். “நாம் சட்டங்களின் வழி நிற்கும் ஒரு நாட்டினர் என்பதை அவர் உணர்ந்துள்ளார். விவாதங்களிலும், தீர்மானங்களை எடுக்கும் கணங்களில் அவர் மிகவும் கடுமையான வினாக்களை எழுப்புகிறார், மிக உயர்ந்த மற்றும் கடுமையான தரங்களை வலியுறுத்துகிறார்.”

தான் CIA க்கு இயக்குனராக நியமித்துள்ள ஜோன் பிரென்னன் பற்றி ஜனாதிபதி இவ்வாறு விவரித்துள்ளார். பிரென்னன் தற்பொழுது ஒபாமாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார். பிரென்னனுடைய “நேர்மை” மற்றும் “நம்மை அமெரிக்கர்கள் என வரையறுக்கும் மதிப்பீடுகளுக்கு உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளார்” என்று ஜனாதிபதி பாராட்டினார்.

பிரென்னனை நாட்டின் தலைமைப் படுகொலை செய்பவர் என்று ஒபாமா விவரிக்கிறார் என்பதை இத்தகைய உயர் வார்த்தைஜாலங்களில் இருந்து ஒருவரும் ஊகித்துக்கொள்ளமுடியாது. பிரென்னன் தன்னுடைய “நேர்மையையும்” மதிப்பீடுகள், சட்டங்கள் மற்றும் தரங்களுக்கு உறுதிப்பாட்டையும் “பயங்கரவாத செவ்வாய்” கூட்டங்கள் என வெள்ளை மாளிகையில் நடத்தப்படுவதில் நிரூபித்துள்ளார். தொலைக்கட்டுப்பாட்டில் ஆளற்ற பிரிடேட்டர் டிரோன்கள் மூலம் கண்காணிப்பதற்கும் “கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை” ஒன்றாகத் தொகுத்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்வைக்கின்றார்.

“வலுவான சட்ட வடிவமைப்பு” என்பது அவருடைய “ஒழுங்கமைக்கும் வடிவம்” என்று அழைக்கப்படுவதை உருவாக்கியதை குறிக்கிறது. இது கிட்டத்தட்ட அன்றாட நடைமுறையில் டிரோன் ஏவுகணைகள் மூலம் நடத்தப்படும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்து “தொகுத்து ஒருமுகப்படுத்துவதை” குறிக்கிறது. இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவால் வளர்க்கப்பட்டுள்ள இத்தகைய வடிவமைப்பு, ஹிட்லர் மூன்றாம் குடியரசின் காலத்தில் வெளியிட்ட ஆணைகளான “நாட்டின் சட்டங்கள்” என்பதுடன் அதிகம் பொருந்தியுள்ளது.

இது, ஒரு 25 ஆண்டுகளாக CIA செயலராக இருக்கும் பிரென்னனை நியமனம் செய்யும் ஒபாமாவின் இரண்டாம் முயற்சி ஆகும். 2009ல் அவர் பதவிக்கு வந்தபின், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தாராளவாதிகள் மற்றும் “இடதுகள்” என ஜனநாயகக் கட்சியைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து புயல்போல் எதிர்ப்பு வந்ததை அடுத்துக் கைவிடும் கட்டாயம் நேர்ந்தது.

புஷ் நிர்வாகத்தின் முதல் வரைக்காலத்தில் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட்டிற்கு தலைமை உதவியாளராகவும், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள பிரென்னன் அக்காலத்தில் நடத்தப்பட்ட குற்றங்களைச் செயல்படுத்துவதிலும், அவற்றை ஆதரிப்பதிலும் ஆழ்ந்த முறையில் தொடர்பு கொண்டிருந்தார். அவற்றுள் சித்திரவதையில் இருந்து அசாதாரண கடத்தல் மற்றும் சட்டவிரோத உள்நாட்டு உளவுவேலை ஆகியவையும் அடங்கியிருந்தன.

புஷ் நிர்வாகத்தின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதனை தொடர்ச்சியான உருவகமாகக் கொண்ட பிரென்னன் நியமனத்திற்கும், ஒபாமாவின் 2008 தேர்தல் பிரச்சாரமான “நம்பிக்கை மற்றும் மாற்றம்”, மற்றும் அவருடைய பதவிக்கு முன்னர் இருந்தவரின் இழிந்த கொள்கையில் இருந்து முறிவு என்னும் உறுதிமொழி ஆகியவற்றிற்கும் இடையே உள்ள முரண்பாடு, மிகவும் அப்பட்டமாகத்தான் உள்ளது.

இப்பொழுது நான்கு ஆண்டுகளுக்குப் பின், பிரென்னன் நியமிக்கப்பட்டுள்ளமை தாராளவாத, “இடது” ஊடகம் என்று கூறப்படுபவற்றில் சிறிதும் எதிர்ப்பைத் தோற்றுவிக்கவில்லை. இந்நியமனம் செனட் மன்றத்தால் இலகுவாக உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயோர்க் டைம்ஸ் செவ்வாயன்று CIA க்கு பிரென்னன் தலைமை தாங்குதல், முன்னாள் குடியரசுக் கட்சி செனட்டர் சக் ஹாகெல் பாதுகாப்புத் துறைக்குத் தலைமை தாங்குவது இவற்றை எதிர்கொள்ளும் வகையில் மாதிரியாக ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. டைம்ஸ் தலையங்கத்தின் முதல் பகுதி ஹாகெலின் “ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய கருத்துக்கள் பிரச்சினைக்கு உரியவை” என்ற கவலையைப் பற்றிக் கூறுகிறது. ஏனெனில் 1998ம் ஆண்டு அவர் உணவுப் பொதிசெய்யும் பெரும் நிறுவனத்தின் வாரிசான ஜேம்ஸ் ஹோர்மெலை அமெரிக்கத் தூதராக நியமித்தது குறித்துக் கூறியவை அக்கவலையின் அடித்தளம் ஆகும். சித்திரவதை, டிரோன் மூலம் நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் பிற கொலைகள் கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தியில்தான் கூறப்படுகின்றன.

இன்றைய அமெரிக்காவில் தாராளவாதம் எனக் கூறப்படும் அரசியல் முன்னுரிமைகள் குறித்து இதைவிடச் சிறந்த விளக்கத்தைக் காண்பது கடினம் ஆகும். மக்களில் அதிகச் சலுகை உடைய அடுக்குகளின் அடையாள அரசியலுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற பெரும் விழைவு இதில் உள்ளது. அதே போல் உள்நாட்டின் ஜனநாயக உரிமைகளைப் பற்றியும் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவவாதத்தின் குற்றங்களைப் பொருட்படுத்தாத்தன்மையும் இருக்கவேண்டும்.

இதேபோல் நியூ ரிபப்ளிக் ஆசிரியர் ஆண்ட்ரூ சுல்லிவானுடைய கட்டுரையும் நிலைப்பாட்டை நன்கு புலப்படுத்துகிறது; அவர் 2009ம் ஆண்டு பிரென்னன் CIA இயக்குனராக நியமிக்கப்படுவதைக் கண்டித்திருந்தார். திங்களன்று Daily Beast ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர், “இம்முறை அவர் நியமனத்தை எதிர்க்க நான் விரும்பவில்லை. இதற்குக் காரணம் சித்திரவதை ஓரளவிற்கு முடிந்துவிட்டது, மேலும் டிரோன் திட்டத்தில் அதிகரித்தளவில் முக்கிய நபராக அவர் உள்ளார்.”

“மக்கள் மாறுகின்றனர்” என்று சுல்லிவான் சேர்த்துக் கொண்டார். உண்மையில் அவர்கள்தான் மாறுகின்றனர்.

வெள்ளை மாளிகை விருந்துகளுக்கு அழைப்புக்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இத்தகைய மாற்றங்களை விரைவுபடுத்த உதவுகின்றன. வசதியுடன் இருக்கும் தாராளவாத நடைமுறையின் முழுத்தட்டினரும் அடுக்கு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் குற்றங்களுக்கு நாணமின்றி ஆதரவுத்தளமாக மாறிவருகின்றன. இந்த நிகழ்போக்கிற்கு ஆழ்ந்த சமூக வேர்கள் உள்ளதுடன், அவை ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரைவுபடுத்துப்பட்டுள்ளன.

பிரென்னன் நியமனம் புத்துயிர்ப்பு பெற்றது புஷ் நிர்வகத்தின் கீழ் நடந்த சித்திரவதை மற்றும் பிற போர்க்குற்றங்கள் அனைத்திற்கும் பொறுப்பானவர்களுக்கு ஒபாமா நிர்வாகம் பாதுகாப்பு அளித்ததால் எளிதாயிற்று. “வருங்காலத்தைப் பாருங்கள், பின்னே பார்க்கவேண்டாம்” என்னும் தவறான மந்திரத்தின் மூலம் ஒபாமாவும் அவருடைய நீதித்துறையும் CIA நடத்திய சித்திரவதைகள் அல்லது ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷில் இருந்து கீழே உள்ளவர்கள் என அவற்றை மேற்பார்வையிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அகற்றிவிட்டனர். அதேபோல் அவர்கள் ஒவ்வொரு வழக்கிலும் தலையிட்டு இக்குற்றச்சாட்டுகளில் இருந்து மீட்டுக்கொள்ளவும் அல்லது தகவல் பெறுவதற்கான வழிவகைகளையும் தடுத்து விட்டனர்.

ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் குற்றங்கள் புஷ் காலத்தில் நடத்தப்பட்டதையும் நிழலில் இருத்திவிட்டன. பிரென்னன்தான் இவற்றிற்கு மத்தியில் இருந்தவர். அவர் இயக்கிய டிரோன் போர்முறை முழு மக்களையும் பெரும் பீதியில் தள்ளிவிட்டது. குறிப்பாக பாக்கிஸ்தானில். ஆனால் பெருகிய முறையில் யேமன், சோமாலியா இன்னும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பல இடங்களிலும். ஜூன் 2011 ல் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகையில் பிரென்னன், முந்தைய ஆண்டில் ஒரு குடிமகன் கூட டிரோன் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று கூறியபோது, பாக்கிஸ்தானிய அரசாங்கம் அத்தகைய கொலையுண்டவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உள்ளனர் என்று வலியுறுத்தியது.

மேலும் ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் குடிமக்களை, நீதிமன்றத்தில் குற்றங்களை நிரூபிப்பது ஒருபுறம் இருக்க, எக்குற்றமும் சாட்டப்படாமல், நீதிமன்றத்திற்குப் புறம்பாக கொலை செய்யும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதற்கு வாதிட்டவர்களில் பிரெனென்னன் முக்கியமானவர் ஆவார். இக்கொள்கை செப்டம்பர் 2011ல் நியூ மெக்சிகோவில் பிறந்த மதகுரு அன்வர் அல்-அவ்வாகி, மற்றொரு அமெரிக்கக் குடிமகனை யேமனிலும் டிரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்குச் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு வாரங்களுக்குப்பின் அவ்லாகியின் 16 வயது மகனைக் கொல்வதற்கும் இது செயல்படுத்தப்பட்டது.

2012ல் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பல தாராளவாதிகளும் போலி இடதுகளும் அவர் இன்னும் “முற்போக்கான” செயற்பட்டியலை இரண்டாம் பதவிக்காலத்தில் தொடர்வர் என ஊகித்தனர். “பாதுகாப்பாக மறு தேர்தலில் வெற்றிபெற்றபின், ஒபாமா தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தில் இன்னும் தைரியமாக இருப்பார் என நாங்கள் நம்புகிறோம்” என்று நேஷன் ஏடு கடந்த மாதம் எழுதியது. “தன்னுடைய உள்பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் அமைச்சரவையில் நியமிக்கப்படுவோர்களைப் பல துறைகளில் இருந்தும் இன்னும் முற்போக்குக் குரல்களைக் கொண்டவர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.” என்றும் எழுதியிருந்தது.

பிரென்னன் நியமனம் இத்தகைய நப்பாசைகளை வளர்ப்பவர்களின் குற்றம் சார்ந்த அரசியல் பங்கை அம்பலப்படுத்துகிறது. இரண்டாம் முறை பதவி ஏற்பதற்கு முன்னரே தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தில் ஒபாமா அமெரிக்காவில் ஆளும் நிதிய தன்னலக்குழு மற்றும் அதன் இராணுவ, உளவுத்துறைக் அமைப்புகள் ஆணையிடும் அரசியல் செயற்பட்டிலைத் தொடர்வார் என்பது நன்கு தெளிவாயிற்று. இதன் அச்சாக மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தரங்களைத் தாக்குதல் என உள்நாட்டிலும், இராணுவத் தலையீடு மற்றும் போர்க் குற்றங்கள் விரிவாக்கம் என்று வெளிநாடுகளிலும் இருக்கும்.

ஆளும் வர்க்கம் சமூக எழுச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்புக்களைக் மேற்கொள்கையில் இக்கொள்கைகளை தொடர்வதற்கு இன்னும் அதிகமான பொலிஸ் அரச அதிகாரங்கள் தேவைப்படும். அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சமூக நிலைமைகளையும் பாதுகாத்தல் என்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வு மற்றும் வரவிருக்கும் வரலாற்றுப்போராட்டங்களுக்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமைக்கான தயாரிப்பு ஆகியவை தேவையாகும்.

Read more...

Tuesday, January 15, 2013

24மணித்தியாலத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு உத்தரவு!

பாகிஸ்தான் பிரதமர் ராசா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவை பாகிஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி பிறப்பித்துள்ளார். ரென்டல் பவர் வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்கார் கான் என்பவரை பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதேவேளை மேலும் 15 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more...

Monday, January 14, 2013

ஒபாமாவும் சித்திரவதையும்! Bill Van Auken

ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும் மூடிவிடும் வகையில் தீவிரமாக உழைத்துள்ளனர். சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர்களைக் கடத்திச் சித்திரவதை செய்தவர்களை பொறுப்புக் கூறுவதில் இருந்து தடுப்பதற்கு பல வழக்குகளிலும் நிர்வாகம் தலையிட்டது. அரச இரகசியம் என்ற அடிப்படையில் இக்குற்றங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதை மறைக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகளைத் தள்ளுபடி செய்ய முற்பட்டது.

இந்த இழிந்த கொள்கையின் விளைவாக CIA விசாரணையாளர்களில் தொடங்கி வெள்ளை மாளிகையில் இருப்பவர்கள் வரை சித்திரவதையாளர்களும், அவற்றைச் செய்ய உத்தரவு கொடுத்தவர்களும் முழு பாதுகாப்பை பெற்றனர். இந்த மோசமான அரசியல் சூழ்நிலை உட்குறிப்பாகச் சித்திரவதையை நியாயப்படுத்தி, அமெரிக்க மக்கள் அனைவரையும் இக்குற்றத்தில் ஈடுபடுத்தியிருக்கும் இந்நிகழ்வுகள் Zero Dark Thirty போன்ற ஒரு பாசிச திரைப்படம் போல் பல வெகுமதிகளையும், விமர்சனரீதியான பாராட்டையும் பெறக்கூடியதாகும்.

ஆனால் இந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு அறிக்கை தெளிவாக்கியிருப்பதுபோல், ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள் கடந்த காலக் குற்றங்களை மூடிமறைத்து மன்னிப்பதோடு நிற்காததுடன், பண்பில் ஒரு புதிய மட்டத்தில் அவற்றைத் தொடரவும் வகை செய்கிறது.

சோமாலியாவை பிறப்பிடமாக கொண்ட இரண்டு ஸ்வீடன் நாட்டுக் குடிமக்கள், ஒரு நீண்டகால பிரித்தானியக்குடிமகன் ஆகியோரின் தலைவிதியை போஸ்ட் எடுத்துக் கூறியுள்ளது; இவர்கள் டிஜிபுட்டி என்னும் ஆபிரிக்க நாட்டினூடாக பயணிக்கும்போது காவலில் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை அமெரிக்க உளவுத்துறை பிரிவினர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்; பல மாத காலம் இது நீடித்தது.

இப்படி இரகசியக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தெற்கு சோமாலியாவில் கூடுதலான நிலப்பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத இராணுவ அமைப்பான அல்-ஷபாப்பிற்கு (al-Shabab) ஆதரவு கொடுத்தது என்பதாகும். இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிராதபோதிலும், வாஷிங்டன் அதை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அழைத்துள்ளது. இதனால் அல் ஷபாப் தலைவர்களின் தலைக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய முறையின் அடித்தளத்தில் அமெரிக்க அரசாங்கம் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போலிக்காரணத்தை சாதகமாகப் பயன்படுத்தி சோமாலியா மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டை இறுக்கும் முயற்சி உள்ளது. இந்த மூலோபாயப் பகுதியின் கடலோரப் பகுதி மத்தியதரைக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையே இருக்கும் பாப் அல்-மான்டாப் நீரிணைக்கு அருகே உள்ளது. இதன்மூலம்தான் உலகின் பெரும்பாலான எண்ணெய் பொருட்களின் போக்குவரத்து நடக்கின்றது.

“ஒபாமாவின் கீழ் கடத்தல்கள் தொடர்கின்றன, முறையான சட்ட விசாரணைகள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும்” என்ற தலைப்பில் போஸ்ட் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: “செப்டம்பர் 2011 தாக்குதல்களைத் தொடர்ந்த ஆண்டுகளில் இந்த தந்திரோபாயம் பரந்தளவில் கண்டிக்கப்பட்டிருந்தும்கூட எந்த சட்ட வழக்கும் இன்றி மற்ற நாடுகளில் இருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்களைப் பிடித்து, விசாரணை செய்தல், தடுத்துவைத்தல் எனப்படும் ஒபாமா நிர்வாகத்தின் செயற்பாட்டைப் பற்றிய சமீபத்திய உதாரணம்தான் இந்நபர்கள்.”

கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இம்மூவரும் ஒரு நியூயோர்க் மத்திய நீதிமன்றத்தில் டிசம்பர் 21ம் திகதிதான் ஆஜர்செய்யப்பட்டனர். இடைப்பட்ட நான்கு மாதங்களில் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மத்திய அரசின் வழக்குதொடுனர்களால் தெரியப்படுத்தப்படவில்லை.

ஒரு எரித்திரிய நாட்டைச் சேர்ந்த மற்றொரு அல்-ஷபாப் ஆதரவாளர் பற்றி 2011 வழக்கு ஒன்றையும் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. அந்நபர் அமெரிக்க விசாரணைக்காக நைஜீரியச் சிறை ஒன்றில் தள்ளப்பட்டார். இந்த வழக்கின் அமெரிக்க விசாரணையாளரின் சாட்சியம் எப்படி இந்த நபர் முதலில் சட்டவிரோத விசாரணை முறைகளுக்கு ஒரு “கறைபடிந்த அமெரிக்க முகவர் குழுவினால்” (“dirty team”) உட்படுத்தப்பட்டது, பின் அவர் ஒரு “தூய குழுவிற்கு” (“clean team”) மாற்றப்பட்டார். அவருக்கு இரண்டாம் குழு தன்னைப்பற்றிய குற்றத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை என்னும் மிரண்டா உரிமைகளைப் பற்றிக் கூறி, பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பெற முற்பட்டது பற்றி குறிப்பிடுகின்றது. அத்தகைய வாக்குமூலம் அமெரிக்க நீதிமன்றத்தில் சட்டப்படி செல்லுபடி ஆகும்.

இங்கு விவரிக்கப்படுவது முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி ஒருமுறை “இருண்ட பக்கத்திற்கு செல்வது” எனக் கூறியதுதான். இது கடத்தல், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் ஆகியவற்றை அடக்கியது.

அல் ஷபாப் ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றிய அறிக்கை கடத்தல், தடுத்துவைத்தல், நீடித்த “நிர்ப்பந்தமாக காணமல்போதல்” என்று CIA இனால் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றி காவலில் வைக்கப்பட்ட கலீத் எல்-மஸ்ரியின் வழக்கு பற்றிக் கூறுகையில் “இவையே சித்திரவதைக்கு ஒப்பாகும்” என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறிய சில வாரங்களுக்குள் வந்துள்ளது.

எவரோடும் தொடர்பற்று வைக்கப்பட்ட ஆண்டுகளில், எல் மஸ்ரி பலவகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதில் ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தல், உறுப்புக்களைச் செயலற்றுப் போகச் செய்தல், உடல்ரீதியான தாக்குதல்கள், கட்டாயமாக உண்ணவைத்தல், மருத்துவ உதவி மறுக்கப்படல் ஆகியவை அடங்கியிருந்தன. இதுதான் இரகசியக் கடத்தலின் கருப்பொருள் ஆகும் – காவலில் வைக்கப்படுபவரின் மன உறுதியைச் சிதைப்பது. புஷ்ஷின் காலத்தில் இதுதான் நிலவியது, ஒபாமாவின் கீழும் இதுதான் நிலவுகிறது.

எது மாறியிருக்கிறது? போஸ்ட் கட்டுரைப்படி, குவான்டநாமோ குடா, கியூபாவில் இருக்கும் அமெரிக்க இராணுவச்சிறை முகாமின் விதி பற்றி காங்கிரஸ் “முட்டுக் கட்டை இட்டுள்ளது”. அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக்கூறப்படுவோரை விசாரித்தல் என்னும் நிர்வாகத்தின் திட்டத்திற்குத் தடைகள் “பயங்கரவாதச் சந்தேகத்திற்கு உரியவர்களைக் கொல்வதை எளிதாக்கிய கொள்கைக்கு” வழிவிட்டுள்ளது. இது ஆளற்ற விமான டிரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் “முன்னைக் காட்டிலும் இன்னும் முக்கியமாகக் கடத்தல் கையாளப்படுகிறது.”

போஸ்ட் அறிக்கை கொடுத்துள்ள அன்றே, ஒரு நியூயோர்க் கூட்டாட்சி நீதிபதி ஒபாமா நிர்வாகம் எப்படி சட்டபூர்வமாக அமெரிக்க குடிமக்களை கொல்லும் உரிமையை நியாயப்படுத்துகிறது என்பதை அமெரிக்க அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரிய வழக்கை நிராகரித்தார். அவ்வாறு கொல்லப்பட்டதில் புதிய மெக்சிகோவில் பிறந்த மத குருவான அன்வர் அல் அவ்லாகி உள்ளடங்குகின்றார். இவர் 2011ல் யேமனில் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

நீதிபதி கோல்லீன் மக்மகோனுடைய தீர்ப்பு ஒரு தசாப்தகாலமாக ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் நிறைவேற்றுப்பிரிவின் ஒட்டுமொத்த குற்றத்தன்மை ஆகியவற்றை எதிர்கொள்வதில் நீதித்துறையின் செயலற்ற தன்மை பற்றிய அறிவிப்பாகவே உள்ளது.

“சட்டங்களின் குழப்பத்தினுள்ளும் எவ்வித முன்னோடிகளிலும் நமது அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவினால் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுடன் பொருந்தியிராததை முற்றிலும் சட்டபூர்வ நடவடிக்கை என்று அனுமதிப்பதை எவ்விதத்திலும் சரியெனக்காட்ட என்னால் முடியவில்லை. அதே நேரத்தில் அவர்களின் முடிவுகளுக்கான காரணங்களும் இரகசியமாகத்தான் உள்ளன” என்று இந்தப் பெண் நீதிபதி எழுதியுள்ளார்.

மீண்டும், அமெரிக்காவின் ஆளும்வர்க்கத்தின் கணிசமாக எந்தப் பகுதியும் அரசியலமைப்பு, ஜனநாயக உரிமைகள் குறித்து கவலைப்படுவது இல்லை என்பதுதான் வெளிப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, காலவரையின்றி அமெரிக்கக் குடிமக்களை இராணுவக் காவலில் வைத்தல், குற்றச்சாட்டுக்கள், விசாரணையின்றி அவர்களைக் கொல்ல உத்தரவிடுதல் என்பதை தனக்கு எடுத்துக் கொண்டு, மற்றும் இது முற்றிலும் அந்நபர்கள் அரசாங்கத்தின் விரோதிகள் என்று கூறுவது அவருடைய விருப்பம் என்று கூறுவது இயல்பாகிவிட்டது. நீதித்துறையோ, முக்கியக் கட்சிகள் இரண்டில் முக்கிய நபர் எவரேனுமோ அல்லது பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகமோ இத்தகைய சர்வாதிகாரக் கொள்கைக்கு சவால்விட தயாராக இல்லை.

இறுதி ஆய்வில், இந்த அரசியல் போக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை உடைய நெருக்கடி, அதன் தீய வெளிப்பாடான நிதியத் தன்னலக்குழுவிற்கும் மக்களின் பெரும்பாலானவர்களான தொழிலாள வர்க்கத்தையும் பிரிக்கும் பெரும் இடைவெளி என்பதில் வேர்களைக் கொண்டுள்ளது. முன்னொருபோதுமில்லாத சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை அரசியல் கொள்கைகளை செயலற்றுச் செய்துவிட்டது.

நெருக்கடியின் முழுச்சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றுவது என்னும் கொள்கை புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டும் என்பதை உணர்ந்துகொண்டு, ஆளும் வர்க்கம் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கான வடிவமைப்பை தயாரிக்கிறது. தொழிலாள வர்க்கமும் அதன் சொந்தத் தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஜனநாயக, சமூக உரிமைகளையும் பாதுகாத்தல் என்பதற்கு இன்று தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அரசியல் வலிமையை முதலாளித்தவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்திற்காகத் அணிதிரட்ட வேண்டும்.

Read more...

ஊழல் மலிந்த நாடு அமெரிக்கா: ஜாக்கிசான் அதிரடி புகார்!


சமீப காலமாக அமெரிக்க பத்திரிகைகள் சீனாவையும், அதன் தலைவர்களையும் இகழ்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நடிகர் ஜாக்கிசானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கை சேர்ந்தவர். அவர் சீனாவின் போனிஸ் டி.வி.க்கு அளித்த பேட்டியில் உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை உள்ளது. அதை ஏற்று கொள்கிறேன்.

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் குறைவுதான் என்றார். மேலும் அவர் கூறும்போது, சீனர்கள் தங்களை மட்டுமே விமர்சனம் செய்வார்களே தவிர வெளிநாட்டினரை அல்ல. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்றும் அவர் கூறினார்.

Read more...

Saturday, January 12, 2013

மியன்மார்: போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை

மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் சிறுபான்மை இனத்த வர்களான போராளிகள் மீது அரசாங்கம் ரசாயன ஆயுதங் களைப் பயன்படுத்தி தாக்கி வருவதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

“எங்கள் ராணுவம் ஒரு போதும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது இல்லை. அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. கச்சின் சுதந்திர ராணுவம் தவறாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்று நான் கருதுகிறேன்,” என்று அதிபரின் பேச்சாளர் யீ ஹடுட் கூறியுள்ளார்.

Read more...

இஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு ?

அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் தான் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு. ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன் தலைமையில் ஒரு படுபயன்கர ரகசிய சதி திட்டம் தீட்டப்பட்டது.

அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.

இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?

அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று காந்தியடிகள் தெரிவித்தார்.

ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.

அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.

அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர்.

இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது.

எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.

பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.

1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?

பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும்.

எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.

இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.

ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.

1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.


படத்தை பெரிதாக்கி பார்க்கவும்

‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.

ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.

1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேருக்கும் அதிகமாநோராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.

ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.

பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.

அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர்.

அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.

1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது.

அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.

ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.

1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.

பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.

அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.

ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள்; அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.

மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.

2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.

எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.

முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.

இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள்.

ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும் இன்ஷா அல்லாஹ்.....


வல்ல ரஹ்மான் பாலஸ்தீனிய மக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

Thanks:இனிய மார்க்கம்



Read more...

Friday, January 11, 2013

சிரியாவில் விமானப்படை தளத்தை புரட்சிப்படை கைப்பற்றியது: அதிபருக்கு மேலும் பின்னடைவு

சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் படையினர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். போராளிகளின் ஒவ்வொரு இடமாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள டாப்டானாஸ் விமானப்படை விமான தளத்தை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் போராளிகள் கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிருந்துதான் அதிபர் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சிரியா உள்நாட்டு போருக்கு 60000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, January 10, 2013

அமெரிக்கா, நட்பு நாடுகள் சிரியாவின் குழுவாத எழுச்சிக்கு இராணுவ ஆதரவு கொடுக்கின்றன. By Chris Marsden

பல மாதங்களுக்குப் பின் ஞாயிறன்று சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தன் முதல் பொதுமக்களுக்கான உரையை அளித்தார். மேற்கத்தைய சக்திகள் எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும், எதிர்த்தரப்பு எவ்வாறு இஸ்லாமிய அடிப்படை வாத மேலாதிக்கத்தை கொண்டுள்ளது என்பது குறித்தும் அவர் குவிப்புக் காட்டினார். சிரியாவில், “எத்தகைய அரசியல் தீர்விற்கும் பிராந்திய சக்திகள் எதிர்த்தரப்பிற்கு நிதி அளித்தல், ஆயுதம் அளித்தல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி தேவை, எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் முக்கியம்” “மேற்கு சக்திகள் கைப்பாவையாக்கியுள்ள ஓர் அமைப்புடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்.” என்று அவர் கூறினார்.

“அல் குவேடாவின் சிந்தனைப் போக்கைப் பின்பற்றும் பயங்கரவாதிளுக்கு எதிராக முழு தேசிய அணிதிரள்வு வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

எதிர்த்தரப்பின் குறுங்குழுவாத தன்மை மற்றும் அது அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை சௌதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஆதரவை பெறுகிறது என்பது அசாத்தின் உள்நாட்டு ஆதரவிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. அவருடைய மிருகத்தன ஆட்சியை எதிர்க்கும் பலர்—சுன்னிகள், அல்வைட்டுக்கள், கிறிஸ்துவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர்—அவருக்கு அடுத்து வருவதைப் பற்றி கவலைப்பட்டு, அவருக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

அசாத்தின் பேச்சுக்கு இரண்டு நாட்கள் முன்பு, அமெரிக்கத் துருப்புக்கள் சிரிய எல்லைக்கு அருகே இருக்கும் பாட்ரியட் ஏவுகணைப் பாதுகாப்புக் கலங்களை இயக்க துருக்கியில் இருந்து வரத் தொடங்கின. வெள்ளியன்று துருக்கியின் இன்சர்லிக் விமானத் தளத்திற்கு 27 பேர் பாட்ரியட் தயார்படுத்தல் நடத்த அனுப்பிவைக்கப்பட்டது, இது பறக்கக் கூடாது பகுதிகளை நிறுவுவதற்கான வான் தாக்குதலைத் தொடக்குவதற்கான முதல் தப்படி ஆகும்; இவ்வகையில்தான் லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியை பதவியில் இருந்து இறக்குவதற்கான போரின்போதும் நடைபெற்றது.

வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித்தொடர்பாளர் Victoria Nuland 27 துருப்புக்கள் “தள அளவைக் குழுவினர்” என விவரித்தார். அடுத்த சில நாட்களில் அமெரிக்க ஒகலஹோமாவில் தளம் கொண்டிருக்கும் ஒரு வான் பாதுகாப்பு இராணுவ பிரிவுப் படையினரை அங்கு நிலைநிறுத்தும் என்று ஜேர்மனியில் Stuttgart ல் உள்ள ஐரோப்பிய அமெரிக்க கட்டளை அலுவலகம் (EUCOM) கூறியுள்ளது. அவர்கள் துருக்கிக்கு இராணுவ விமானத்தில் பறந்து வருவர், கூடுதல் உபகரணங்கள் கடல் மூலம் வரும்.

இதன் பின் 400 அமெரிக்கத் துருப்புக்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவது தொடரும்; அத்துடன் ஜேர்மனி, நெதர்லாந்தில் இருந்தும் துருப்புக்கள் வரும். ஜேர்மனிய, டச்சு பாட்ரியட் ஏவுகணைகள் இந்த வாரம் துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளன. மொத்தமாக கிட்டத்தட்ட 1,000 துருப்பினரும் ஆறு பாட்ரியட் ஏவுகணைக் கலங்களும் ஜனவரி இறுதிக்குள் செயற்பாட்டிற்கு தயாராக இருக்கும். இவை நேட்டோவின் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், ஏவுகணைகள் அந்தந்த நாடுகளால் இயக்கப்படும்.

இரண்டு பாட்ரியட் ஏவுகணைக் கலங்கள் திங்களன்று Vredepeel இராணுவ முகாமில் இருந்து Eemshaven துறைமுகத்திற்கு திங்களன்று அனுப்பி வைக்கப்படும். ஜனவரி 22 அன்று பொருத்தப்படுவதற்காக, நாளை 30 டச்சு மற்றும் 20 ஜேர்மனிய சிப்பாய்கள் ஏவுகணைகள் கப்பல் மூலம் வருவதற்கான தயாரிப்புக்களுக்குப் பொறுப்புக் கொண்டவர்கள், Eindhoven இல் இருந்து துருக்கிக்கு விமானம் மூலம் வருவர். இந்த ஏவுகணைகளை இயக்கும் 270 டச்சுத் துருப்புக்கள் ஜனவரி 21ம் திகதி துருக்கிக்கு புறப்படுவர். ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரகம் செவ்வாயன்று Luebeck-Travemuende இல் இருந்து அனுப்பிவைக்கப்படும் பாட்ரியட் ஏவுகணைகள் துருக்கியத் துறைமுகமான Iskenderun க்கு ஜனவரி 21 அன்று வரும் எனத் தெரிவித்துள்ளது. ஜேர்மனியத் துருப்புக்கள் 350 ல் இருந்து 400 வரை இருக்கலாம்.

இந்நிலைப்பாட்டுடன் பிணைந்த வகையில், வடக்கு சிரியாவில் உள்ள Taftenaz விமானத் தளம் சிரிய எதிரத்தரப்புப் போராளிகளால் தொடர்ந்த தாக்குதலுக்கு இலக்கு கொள்ளப்பட்டுள்ளது; இதில் ஜபாட் அல்-நுஸ்ராவின் படைப்பிரிவு ஒன்றும் அடங்கும்; இது சமீபத்தில் வாஷிங்டனால் ஒரு பயங்கரவாத அமைப்பு எனக் குறிக்கப்பட்ட அல்குவேடாவுடன் இணைந்துள்ள அமைப்பு ஆகும். அரசாங்கப் படைகளிடம் இருந்து ஹெலிகாப்டர் விமானத் தளத்தை கைப்பற்றுவதின் மூலம், இவர்கள் சிரியாவின் பாதுகாப்புத் திறனை அப்பகுதியில் மூடிவிட இலக்கு கொண்டுள்ளனர்; அந்த பகுதியில் ஏவுகணைக் கலங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இத்தகைய பன்னாட்டுத் துருப்புக்கள், ஏவுகணைகள் நிலைப்பாடு கொள்ளும் நேரத்தில், சிரியா “ஸ்கட் வகையிலான ஏவுகணைகளை” அதன் எதிர்ப்பாளர்களுக்குக் கடந்த மாதம் பயன்படுத்தியது என்று நேட்டோவிடம் இருந்து பலமுறை குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன; இவை அனைத்தும் மறுக்கப்பட்டு விட்டன. நேட்டோவின் பொதுச் செயலாளர் Anders Fogh Rasmussen இந்த ஏவுகணைகளின் பயன்பாடு, “வரவிருக்கும் சரிவு குறித்த ஆட்சியின் திகைப்புச் செயலாகும்” என்று கண்டனம் தெரிவித்தார். “இது நம் நட்பு நாடான துருக்கியின் திறமையான பாதுகாப்பிற்கு தேவையை அதிகரிக்கிறது.” என்றார்.

இதற்கிடையில் CIA, சிரியாவிடம் 1,000 டன்கள் இரசாயன ஆயுதக் கிடங்கு உள்ளது; அதில் நரம்பு குறித்த செயல்களைக் கொண்ட சரின், கடுகு வாயுவும் உள்ளன, இவை 50 சிறுநகரங்கள், நகரங்களில் சேமிக்கப்பட்டு வைத்துள்ளன என்று கூறுகிறது.

மோதலை விரிவாக்கும் வகையில் இஸ்ரேல் அதன் தயாரிப்புக்களையும் மேற்கொண்டுள்ளது; தன்னுடைய இராணுவ நிலைப்பாட்டை சிரியாவின் கோலான் குன்று பகுதியில் வலுப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஆயுதப் படைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 56 கி.மீ. எல்லை வேலியை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் வானொலி கூறியுள்ளது; மேலும் துருப்புகளுக்கான நிலவறைகள், விரைவில் எதிர்கொள்ளும் பிரிவுகள் மற்றும் புதிய எச்சரிக்கை முறை ஆகியவையும் புழக்கத்தில் வரும். நவம்பர் மாதம் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் சிரியா மீது ஒரு டாங்கு-எதிர்ப்பு ராக்கெட் குண்டுவீச்சை நடத்தின; இஸ்ரேலில் ஒரு எறிகுண்டு தற்செயலாக விழுந்ததை அடுத்து இது நிகழ்ந்தது.

பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தெனியாகு ஞாயிறன்று அமைச்சரவையிடம் சிரிய ஆட்சி “உறுதிகுலைந்து” உள்ளது என்றார். எல்லைகளில் இருந்து “சிரிய இராணுவம் நகர்ந்துவிட்டது, அந்த இடத்தில் உலக ஜிகத் சக்திகள் நுழைந்துவிட்டன.” என்றும் கூறினார்.

ஜனவரி 1ம் தேதி al-Quds al-Arabi இஸ்ரேலிய அதிகாரிகள் ஜோர்டானில் சிரிய எதிர்த்தரப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர், இது “கோலான் குன்றை பாதுகாக்க சிரியாவில் ஒருவேளை வரக்கூடிய கூட்டு இஸ்ரேலிய-அமெரிக்க செயற்பாட்டிற்கு” முன்னதாகவே நடந்துள்ளது என்று எழுதியுள்ளது. “இந்த அறிக்கை DEBKAfile என்னும் சிந்தனைக்குழுவால், இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டதால், பற்றி எடுக்கப்பட்டது; அது எழுதியது: “இச் செயலைப் பற்றி வேறு தகவல் ஏதும் இல்லை. இஸ்ரேலிய, ஜோர்டானிய எல்லைகள் சிரியாவுடன் இருப்பவற்றில் நடப்பவை உத்தியோகபூர்வமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. ஆனால் ஐரோப்பிய உளவுத் துறை ஆதாரங்கள் அமெரிக்க, ஜோர்டனிய, இஸ்ரேலிய சிறப்புப் படைகள், சிரிய எதிர்தரப்புப் படைகள் ஆகியவற்றிற்கும் சிரிய சிறப்புப் படைகளுக்கும் இடையே இரவுகளில் எல்லை மோதல்கள் உள்ளன என வெளிப்படுத்தியுள்ளன.”

லண்டனைத் தளம் கொண்ட Al-Hayat ம் ஞாயிறன்று ஐ.நா சிரியாவிற்கு ஒரு அமைதிகாக்கும் படையை அனுப்புவது குறித்த அதன் விருப்பங்களைச் சிந்திக்கிறது எனத் தகவல் கொடுத்துள்ளது; இது பாதுகாப்புக் குழு எடுக்கும் எந்த முடிவையும் விரைவில் செயல்படுத்தும்.

அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள், மற்றும் இஸ்ரேல் ஆகியவை தலையிடுவதற்கான தயாரிப்புக்கள் ஜனாதிபதி அல் அசாத் சுன்னி குழுவாத போக்குகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார் என எதிர்ப்புக் காட்டும் எதிர்த்தரப்பு குறித்த பல அறிக்கைகளுக்கு நடுவே வந்துள்ளது. கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் ஷேக் அட்னன் ஆரௌரை மேற்கோளிட்டு, “ஒரு கடுமையான இன்னும் முற்பாக்குத்தன சலாபி, புரட்சிக்கு ஆசியளிக்கும் தந்தை போன்றவர் தன்னுடைய திட்டத்தை சௌதியத் தொலைக்காட்டியில் எழுச்சிக்கு ஆதரவு காட்டியுள்ளார், இன்னும் தூய இஸ்லாமிய வடிவமைப்பு தேவை எனப் பிரச்சாரம் செய்துள்ளார்.... அவருடைய செல்வாக்கின் பெரும் தரத்தை ஒட்டி அவர் சில இராணுவ கவுன்சில்களின் தலைமையில் சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளது.

ஜபத் அல்-நுஸ்ராவின் “அராபிய சிற்றரசர்” அபு ஜூலபிப் ஆவார்; இவர் ஈராக்கில் உள்ள அல் குவேடா, அல் தவ்ஹித் வல்-ஜிகாத்தின் தலைவர் Abu Musab al-Zarqawi க்கு ஜோர்டானிய உறவினர் ஆவார்; அவர் அமெரிக்க வான் தாக்குதல் ஒன்றில் 2006ம் ஆண்டு இறந்துபோனார். இந்த வார இறுதியில், அசாத் ஆட்சி மகம்மது அல் ஜவஹிரியைச் சிறைபிடித்தது; அவர் அல் குவேடாவின் புதிய தலைவரான அய்மன் அல் ஜவஹிரியின் சகோதரர் ஆவார்; பிந்தைவயர் டேராவில் எதிர்த்தரப்புத் தீவிரவாதிகளுடன் பேச்சுக்களை நடத்துகிறார். ஜோர்டான் எல்லைக்கு அருகே இருக்கும் டேரா, ஜபத் அல் நுஸ்ராவின் வலுவான கோட்டை ஆகும்.

CBC உடைய மேரி ஈவ் பெடர்ட் அலெப்போவில் பல போராளிகளைப் பேட்டி கண்டார்; அவர்களுள் பெயரளவிற்கு சுதந்திர சிரிய இராணுவம் (FSA) என்பதின் தளபதி கேர்னல் அப்துல் ஜப்பர் அகைடியும் உள்ளார். ஆனால் இவர் அபு முகம்மதுர கடா இப் எசலாம் பிரிவுகளின் தலைவர். “FSA வெறும் காகிதக்கூட்டணிதான், இத்தோற்றம் அயல்நாட்டு அரசாங்கங்களுக்கு ஒரு ஒற்றுமையான முன்னணியைக் காட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது” என்றார். பெரும்பாலான படைப்பிரிவுப் போராளிகள் அடிப்படை இஸ்லாமிய வாதிகள், ஜிஹத் மூலம் ஷாரியச் சட்டத்தை நிறுவ முற்படுகின்றனர்.

“மற்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் போராளிகளையும் ஜபத் அல் நுஸ்ரா கொண்டுள்ளது; அதில் இருக்கும் பலர் மற்ற பூசல்களில் நல்ல அனுபவம் உடையவர்கள்” என்று பெடர்ட் கூறினார். “இக்குழு அலெப்போவின் மையப்பகுதியிலேயே, ஒரு மழலையர் பள்ளியாக இருந்த இடத்தில் நிலை கொண்டுள்ளது.”

அல்-மானிடரில் எழுதும் அலி ஹாஷெம் தலைநகர் டமாஸ்கஸில் அல்வைட்டுக்கள் “முற்றுகையில் உள்ளனர், FSA யினால் தலைநகரில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், அல்லது அவர்களுடைய கடலோர வலுவான இடங்களான Tortuous, Lattakiya விற்கு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

ஹஜர் அலஸ்வாட்டிற்கு அருகில் “அனைத்துச் சுவர்கள் மற்றும் கடைக் கதவுகளில் ஆட்சி எதிர்ப்புப் பிரச்சாரத் தகவல்கள் இருந்தன. ஒன்றில் “பஷர் வீழ்க” எனக் குறிக்கப்பட்டிருந்தது; மற்றொன்றில், “சுதந்திரம் வேண்டும், இல்லாவிடின் அலவைட்டுக்களை எரிப்போம்” என இருந்தது.

ஓர் உள்ளூர்வாசி கூறினார்: “சுருக்கமாகக் கூறுவோம். FSA என்பது சுன்னிக்களுடைய படை, நாங்கள் இனியும் அல்வைட்டுக்கள் எங்களை ஆள்வதை விரும்பவில்லை.”

இஸ்லாமியவாதத்தின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது வாஷிங்டன் இழிந்த முயற்சியாக ஜபத் அல் நுஸ்ராவை சிரியப் புரட்சிகர, எதிர்த்தரப்புச் சக்திகள், சிரிய தேசியக் குழு மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தேசியக் கூட்டணி உடைய ஜிகதிஸ்ட் குழு என மறுத்திருப்பதில் இருந்து அறியப்படலாம்.


Read more...

அசாமில் குண்டு வெடிப்பு பள்ளி சிறுவன் பரிதாபச் சாவு இருவர் காயம்

அசாம் மாநிலம் திக்போய் நகர் அருகில் உள்ள கார்ஜன் தொடக்கப் பள்ளியின் அருகே நேற் திகதி 09ஆம பிற்பகல் குண்டு வெடித்தது. இதில் ஒரு பள்ளிச் சிறுவன சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 2 குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தனர். மேலும் ஒரு மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கவுகாத்தியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்போய் நகரில்தான் முதல் முதலாக கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

அசாம் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று உள்துறை செயலாளர் ஜி.டி.திரிபாதி தெரிவித்தார்.

Read more...

Wednesday, January 9, 2013

நோக்கிய நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை 3 ஆயிரம் கோடி வரிஏய்ப்பென புகார்

தமிழ் நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் தொழிற்சாலையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து வருமான வரித்துறையில் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.

இங்கு செல்போனுக்கு தேவையான தளவாட சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் நோக்கியா செல்போன்களில் பெரும்பாலானவை இங்கு தயாராகின்றன.

தொழிற்சாலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், நோக்கியா நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, சென்னை வருமானவரித்துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

காலையில் தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. சோதனை நடந்தபோது ஊழியர்களைத் தவிர வெளிநபர்கள் யாரையும் வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளேவிடவில்லை.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிகிறது.

வருமானவரித்துறை சோதனை குறித்து நோக்கியா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் காண்பித்தோம் என்று தெரிவித்தனர்.

Read more...

Tuesday, January 8, 2013

இணையதளத்திற்கு சிறுவர்கள் அடிமையா? உளவியல் நிபுணர் எச்சரிக்கை!

14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி 14 முதல் 24 வயதுள்ளோர் வரை இணையதளத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இதில் 2.4% முற்று முழுதான இணையதள அடிமைகள், 13.6% பிரச்சனை பயனாளர்கள் என்று வகைப்படுக்தியுள்ளனர்.

ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக் கழகத்தின் சூதாட்ட அடிமைகள் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் இயக்குனர் கிளாஸ் வுல்ஃபிளிங் என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.

'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையதள அடிமைகளாகி தனிமைப்பட்டுப் போய் விட அனுமதிக்கக் கூடாது. பெற்றொர்கள் குழந்தைகளிடத்தில் இதுபோண்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அவர்களிடம் பேசி நயமாக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார் இவர்.

குறிப்பாக ஒண்லைன் கணினி விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவது பெருத்துள்ளது என்று இவர் கூறுகிறார். கணினி விளையாட்டுக்களில் ஒரு பிரச்சனையை தீர்ப்பது என்கிற வகையில் ஆட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் இயல்பிலேயே அதன் பக்கம் சென்று விடுகின்றனர்.

இது தவிர சோசியல் நெட்வொர்க், அரட்டைகளுக்கு அடிமையாவதும் அதிகரித்துள்ளது. அதாவது எதார்த்த வாழ்க்கையில் அல்லது நிஜமான உலக வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்காத தனி அடையாளம் இதில் கிடைப்பதாக இவர்கள் உணர்வதே அடிமைக்கு இட்டுச் செல்கிறது.

இணையதளத்தில் நண்பர்களை அடைகின்றனர். எப்போதும் அவர்கள் இணையத்தில் இருப்பதால் தனிமை இல்லை. ஆனால் உண்மையான சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு விடுகின்றனர் என்கிறார் இந்த ஜெர்மானிய உளவியல் நிபுணர்.

இதனை வலுக்கட்டாயமாக தடுக்க நினைத்தால் கடுமையான உளவியல் சிக்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். தூக்கமின்மை உள்ளிட்ட பிற மன நோய்களும் ஏற்படுகிறது என்கிறார்.

அடிமையாகாமல் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு 3 மணிநேரம் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அடிமைகள் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதில் புழங்குகின்றனர்.

இணையதளத்தை கட்டுப்பாட்டுடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார் இவர்.

Read more...

Saturday, January 5, 2013

அமெரிக்காவில் 1000 ஆண்டு சாதனைக்கான ஆலயம் (படங்கள்)

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 21 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்ட இந்து கோயில் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இக்கோயில் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2009ம் ஆண்டு இக்கோயிலின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதுடன் இத்தலம் ஆன்மிக தலமாக மட்டுமின்றி இந்தியாவின் பாரம்பரிய கட்டிட கலைகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய சான்றாகவும், அடுத்த 1000 ஆண்டுகளுக்கு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் அமைப்பதற்காக 10 கப்பல்களில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மார்பிள் கற்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நக்ரதி என்னும் கட்டிடக்கலை வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலைச் சுற்றி கண்ணுக்கு குளுமை சேர்க்கும் மிகப் பெரிய தோட்டமும், நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் முன்புறம் 91 தாமரை வடிவ பிரபதிபலிக்கும் கண்காணிகளைக் கொண்ட நீரூற்று அமைந்துள்ளது. இக்கோயில் கலாச்சார கூடம், உடற்பயிற்சி நிலையம், வகுப்பறைகள் கொண்டுள்ளதுடன் இவை 35000 பளிங்கு மற்றும் மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், நிலஅதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் தலைசிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. 5 கூரிய கோபுரங்கள், 2 மிகப் பெரிய மாடங்கள், 4 மாடிகள், 122 தூண்கள், 129 நுழைவு வாயில்களையும் கொண்டுள்ளது இக்கோயில்.

இக்கோயிலில் சூரியஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இவைகளும் இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமும், நவீனமும் கலந்து மிகச் சிறந்த தொழில்நுட்பங்களால் இக்கோயில் அமைந்துள்ளது.





Read more...

Friday, December 28, 2012

வளைகுடாவில் அமெரிக்க நட்பு நாடுகளை தாக்க தீவிரவாதிகள் திட்டம்

ஐக்கிய அரபு அமீரகம் கைது செய்த தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளைத் தாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளை ஐக்கிய அரபு அமீரகம் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளைத் தாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உறுதிசெய்த பின்பு பாதுகாப்புப் படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு வளைகுடா நாடுகளும் அமெரிக்காவின் பெரிய கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சிரியா இராணுவத் தளபதி புரட்சிப் படையினருடன் இணைவு

சிரியா இராணுவ தளபதி ஒருவர், புரட்சி படையினருடன் இணைந்து உள்ளது பஷர் அல் அசாத் தலைமையிலான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 22 மாதங்களாக சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை பதவி விலகக் கோரி, புரட்சி படையினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாத் பதவி விலக மறுத்ததால் புரட்சி படையினரை அங்கீகரித்து, அவர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது. இதனால் சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது.

கடந்த 22 மாதங்களில் 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், இரண்டு லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவை ஆதரிக்கின்றன. ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் பிடிவாத போக்கைக் கண்டித்து, துணை ஜனாதிபதி உள்ளிட்ட பலர் பதவி விலகி விட்டனர்.

இதற்கிடையே சிரியாவின் இராணுவத் தளபதி அல்-ஷலால், பதவி விலகி புரட்சி படையினருடன் கைகோர்த்துள்ளார்.

அவர் கூறுகையில், சிரியா இராணுவம் மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறி விட்டது என தெரிவித்து உள்ளார்

Read more...

Wednesday, December 26, 2012

முஸ்லீம் தீவிரவாதத்தை ஒடுக்க 35 நாடுகளுக்கு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அவர்களை ஒடுக்க 35 நாடுகளுக்கு அமெரிக்கா தனது படைகளை சிறுசிறு குழுவாக அனுப்பி வைக்க உள்ளது இந்நடவடிக்கைக்கான அமெரிக்க படைகள் விரைவாக அனுப்பப்பட உள்ளதாக பென்டகன் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தா இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன.

கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலியாவை மையமாக வைத்துச் செயல்படும் அல்-சகாப் பயங்கரவாத அமைப்பை எதிர்கொண்டு வருகின்றன.

எனவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

35 நாடுகளுக்கு அமெரிக்கா தனது படைகளை சிறுசிறு குழுவாக அனுப்பி வைக்க உள்ளது. முதலில் நேரடியாக களத்தில் இறங்காமல், அந்நாட்டு படைகளுக்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, அமெரிக்க படைகளை உபயோகிக்கப்படும் என ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க இராணுவ உயரதிகாரி கார்ட்டெர் ஹாம் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகளின் இலக்கை தாக்கி அழிக்க, ஆளில்லா சிறிய விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more...

Saturday, December 22, 2012

புதிய சீனத் தலைவர் சந்தைச் சார்பு மறுகட்டமைப்பிற்கு சமிக்ஞை காட்டுகிறார். By John Chan

சீனக் கம்யூனிஸட் கட்சியின் (CCP) புதிய பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் டிசம்பர் 7 முதல் 11 வரை “தெற்குப் பயணம்” ஒன்றை மேற்கொண்டிருந்தார் தன்னுடைய தலைமை மற்றொரு சுற்று சந்தைச் சார்பு மறுகட்டமைப்பைச் சுமத்தும் என்னும் தெளிவான தகவலை அனுப்பும் வடிவமைப்பை அது கொண்டிருந்தது; இது சீனப் பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனத்திற்கு இன்னும் திறந்துவிடும். சமீபத்திய 18வது CCP மாநாட்டை தொடர்ந்து இப்பயணம் நடந்தது; இது ஜியை கட்சித் தலைவராக இருத்தி, China 2030 அறிக்கைக்கு இணங்க ஒரு பொருளாதாரச் செயற்பட்டியலையும் ஏற்றது; அது உலக வங்கியுடன் கூட்டாக பெப்ருவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

ஜனவரி-பெப்ருவரி 1992ல் CCP தலைவர் டெங் ஜியாவோபிங் நிகழ்த்திய “தெற்குப் பயணத்தை” மறுபடியும் செய்யும் வகையில் ஜி நடக்க முற்பட்டார்; அது முன்னாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட சில வாரங்களுள் நிகழ்ந்தது. டெங்கின் பயணம் 1978ல் தொடங்கிய முதலாளித்துவ மீட்பு வழிவகையைப் பெரிதும் விரைவுபடுத்தியது. இராணுவத்தின் ஆதரவுடன் டெங் நீடித்த உள் விவாதங்களுக்கு முடிவு கட்டினார்; அவை 1989 தியனன்மன் சதுக்க எதிர்ப்பு மற்றும் அடக்குமுறையைத் தொடர்ந்து, சீனா முழுவதையும் ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்காக உலகப் பெருநிறுவனங்களுக்கு மாற்றியது. மூலதனங்கள் வெள்ளமென வந்த நிலையில், பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அரசு நிறுவனங்கள் என்பதில் இருந்து பணிநீக்கம் பெற்று கூட்டுப் பங்கு நிறுவனங்களில் மறுகட்டமைக்கப்பெற்றனர் அல்லது நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன.

உலக நிதியச் செய்தி ஊடகம் ஜியின் தகவலை கவனியாமல் இல்லை. லண்டனைத் தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ் பயணம் பற்றி “ஜி பொருளாதாரச் சீர்திருத்த நம்பிக்கைகளை சீனாவில் தூண்டுகிறார்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் ஆதரவாக எழுதியது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆர்வத்துடன் குறிப்பிட்டது: “சீனாவின் புதிய தலைவர் ஜி ஜின்பிங் பொருளாதாரத்தை இன்னும் தாராளமயமாக்கும் உறுதிப்பாட்டிற்கு அடையாளம் காட்டியது போல் தோன்றுகிறது.”

ஜியின் “தெற்குப் பயணம்” அடையாளமுறையில் நிறைந்திருந்தது. 1992ல் டெங் நின்ற இடங்கள் அனைத்தையும் இவரும் அடக்கியிருந்தார்; இவற்றுள் Guangzhou மற்றும் Shenzhen ஆகியவையும் இருந்தன; அவருடன் கூடச் சென்றவர்களில் டெங்குடன் சென்றிருந்த மூத்த அதிகாரிகள் இருந்தனர். தெற்கு குவாங்டோங் மாநிலம் 1978ல் இருந்து டெங்கினால் அவருடைய சந்தைச் சார்பு நடவடிக்ககளுக்குச் “சோதனைக் களமாகப் பயன்படுத்தப்பட்டது”; அங்கு தனியார் ஏற்றமதி நிறுவனங்கள் சிறந்து விளங்கின.

Shenzhen இல் டெங், ஜியின் தந்தை ஜி ஜோங்சன்னை சீனாவின் முதல் “சிறப்புப் பொருளாதாரப் பகுதியை” 1980 ல் நிறுவுவதற்கு நியமித்திருந்தார் அங்கு ஜி, டெங்கின் சிலைக்கு முன்னால் மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். பார்வையாளர்களிடம ஜி கூறினார்: “கட்சியின் மத்தியத் தலைமை சீர்திருத்தம் பற்றியும் திறந்துவிடுவது பற்றியும் எடுத்துள்ள முடிவு சரியானதே... நாம் தளர்வின்றி நாட்டை வளப்படுத்தும் பாதையை மேற்கொள்ள வேண்டும்; ஆனால் நாம் இதை இன்னும் அதிகமாகத் திறந்துவிட வேண்டும்.”

அரச செய்தி ஊடகம் ஜியை மக்கள் தலைவர் என்று சித்தரித்துள்ளது; கட்சி அதிகாரிகளை இவர் ஆடம்பர விழாக்களை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவருடைய பயணத்தின்போது இவர் மலர்ச் செண்டுகள் பெறுவதை அகற்றி, குறைந்தப்பட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு, பெரிய ஓட்டலில் முதன்மை வசதியிடங்களை தவிர்த்து, மலிவான உணவுகளைத்தான் உட்கொண்டார். வறிய குடும்பங்களைப் பார்வையிட்டு, காண வந்தவர்களுடன் கைகுலுக்கினார். இத்தகைய பூச்சு நடவடிக்கைகள் ஜியின் சந்தைச் சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பட்டமான மறைப்பு ஆகும்; நிகழ்ச்சி நிரல் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தும்.

ஐரோப்பா, வட அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கம் மற்றும் மந்த நிலை சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவையை மிகவும் குறைத்துள்ளன. இதையொட்டி அலையென தொழில்துறை அமைதியின்மை கட்டவிழ்க்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. சீன ஏற்றுமதிகள் கடந்த மாதம் ஆண்டுக்கணக்கில் 2.9%தான் உயர்ந்தன; இது அக்டோபர் மாதம் ஏற்பட்ட 11.6% சரிவையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி பெரிதும் ஊக்க நடவடிக்கைகளால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது; இந்த ஆண்டிற்கு 160 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்ட்டுள்ளது; இதையொட்டி பெரும் கூடுதல் திறன்கள் ஏற்பட்டுவிட்டன. மிகவும் அதிகமாகக் காணப்படுவது சொத்துக்கள் துறையில்தான்; இதுதான் பரபரப்பான ஊகவணிகத்தின் குவிப்பாக உள்ளது. சின்ங்குவா பல்கலைக்கழகப் பேராசிரியர் பாட்ரிக் சோவன்ஸ் கருத்துப்படி, தற்பொழுதுள்ள வீடுகள் சொத்துக்களை சீனாவில் விற்பதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பிடிக்கும். வணிக அலுவலக இடங்களை விற்பதற்க 9.2 ஆண்டுகளும் சில்லறை விற்பனை இடங்களை விற்பதற்கு 8.8 ஆண்டுகளும் பிடிக்கும்.

அதிகாரபூர்வமாக, நகர்ப்புற வேலையின்மை விகிதம் 4.1 சதவீதம் ஆகும். ஆனால் ஒரு சமீபத்திய அளவை, நிதிய, பொருளாதாரத் தென்மேற்கு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு உண்மையான தரம் 8.05% எனக் கண்டறிந்துள்ளது; 200 மில்லியன் உள்நாட்டு இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களிடையே ஓராண்டிற்கு முன் இருந்த 3.4% என்பதில் இருந்து 6% என்று கடுமையாக உயர்ந்துள்ளது.

சமூக சமத்துவமின்மை மேலும் கூர்மையான நிலைக்கு உயர்ந்துள்ளது. Survey and Research Centre for China Household Finance (சீன வீட்டு நிதியம் பற்றிய அளவை மற்றும் ஆய்வு மையம்) நடத்தியுள்ள புதிய ஆய்வு நாட்டின் கினி குணகம் 2010ல் 0.61 என ஒரு தசாப்தம் முன்னிருந்த 0.412ல் இருந்து உயர்ந்துவிட்டது என்பதைக் கண்டறிந்துள்ளது; இது சீனாவை தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு இணையாக வைக்கிறது. கினி குணகம் என்பது வருமானச் சமத்துவம் குறித்த தரமான அளவை ஆகும்; இது 0 என்பதில் இருந்து 1 வரை, அதாவது முழுச் சமத்துவத்தில் இருந்து முழுச் சமத்துவமற்ற நிலையின் அளவு ஆகும்.

சமீபத்திய மாதங்களில் போர்க்குணம்மிக்க சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களால் தென்னாபிரிக்கா அதிர்ச்சியில் இருப்பதுபோல், சீனாவிலும் வெடிப்புத்தன்மை மிகுந்த சமூக அழுத்தங்கள் வெளிப்பாடுகளைக் காண்கின்றன. ஹாங்காங் தளமுடைய தென் சீன மார்னிங் போஸ்ட் Shenzhen க்கு ஜி சென்றிருந்தபோது, 3,000 தொழிலாளர்கள் ஹுவாகை அச்சு மற்றும் பொதியல் ஆலையில் இருப்பவர்கள் நெடுஞ்சாலையை தடைக்கு உட்படுத்தினர், “ஏராளமான ஆயுதமேந்திய பொலிசாரால் அகற்றப்பட்டனர்” என்று தகவல் கொடுத்துள்ளது. பல தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர், பொலிசால் அடிக்கப்பட்டனர்.

தன்னுடைய சந்தைச் சார்பு செயற்பட்டியல் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பைத் தூண்டும் என்பதை ஜி நன்கு அறிவார். அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களிடம் ஜி கூறினார்: “பாதகமான உள்நாட்டு, வெளிநாட்டு விளைவுகள் நீண்ட காலம் இருக்கும், சிக்கல் வாய்ந்தவையாக இருக்கும், சுற்றிச்சுற்றி வரும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். மோதல்களில் இருந்து தப்பியோட முயற்சி செய்யக்கூடாது, பிரச்சினைகளை மூடி மறைக்கக் கூடாது.”

ஜியின் பயணத்தின் முக்கியக் கூறுபாடு 1970, 1980 களில் அவருடைய தந்தையாரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த குவாங்டோங் இராணுவத் தளங்களை பார்வையிட்டது ஆகும். தன்னுடைய பங்கிற்க இவர் தென் சீன கடற்படையையும், உயர்மட்ட 124வது Amphibious Mechanised Division (தரை, நீர் இரண்டிலும் இயந்திர வகையைக் கையாளும் பிரிவு) ஐப் பார்வையிட்டது தென் சீனக் கடலில் எழுந்துள்ள அழுத்தங்களை முகங்கொடுக்க உண்மையான போர் உணர்வை” உறுதிப்படுத்துவதற்காகும். அமெரிக்கா அவ்விடத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமிற்கு தங்கள் நிலப்பூசல் அழுத்தங்களை சீனாவுடன் அதிகரிக்குமாறு தூண்டுப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஜி இராணுவம் தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் என்பதை உறுதிபடுத்துவதில் தீவிரமாக உள்ளார். “எந்த நேரம், எந்தச் சூழ்நிலையாயினும், [இராணுவம்] கட்சியைக் கேட்டு அதைப் பின்பற்ற வேண்டும்” என்று ஜி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இக்கருத்துக்களின் பின் தொழிலாள வர்க்கத்துடனான மோதலில் 1989 எழுச்சியின் போது நடந்ததுபோல், தொழிலாளர்கள் எதிர்ப்பாளர்கள், வேலைநிறுத்தக்காரர்களுக்கு பரிவுணர்வு காட்டி அவர்கள்மீது சுடமறுத்த நிகழ்வு பற்றிய அச்சம்தான் இருந்தது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com