Tuesday, July 9, 2013

பயங்கரவாதிகளை அரவணைத்த இந்தியாவை பயங்கரவாதிகளே பயமுறுத்துகிறார்கள்....!

தெற்காசியப் பிராந்தியத்தினுள் பயங்கரவாதிகளை உசுப் பேற்றிய இந்தியா இன்று இனவாத, மதவாத, வர்க்கவாத பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாக மாறி, பயங்கர வாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்ற நிலைமை யிலுள்ளது, என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பிரிவின் செயலாளரும் முன்னாள் கலாச்சார அமைச்ச ருமான பியஸிரி விஜேநாயக்க தெளிவுறுத்துகிறார்.

நேற்று (08) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்தகயா பயங்கரவாதத் தாக்குதல்’ எதிர்ப்புத் தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பியஸிரி விஜேநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துரைத்த விஜேநாயக்க,

‘இந்தியாவுத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால்நேற்று (07) அதிகாலை சித்தார்த்தர் புத்தபிக்குவாக மாறிய இடம் பயங்கவரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்காளியுள்ளது. இந்த்த் தாக்குதலை சிறிதாக எண்ண முடியாது. இத்தாக்குதலானது பெளத்தர்களின் தலையாய இடத்திற்கே நிகழ்ந்துள்ளது. இங்கு புத்தகயாவைச் சுற்றி 09 இற்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்துள்ளன. இதனால் இரு பௌத்த இளம் பிக்குகள் கடும் காயம் அடைந்துள்ளனர். பௌத்த மத வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்த பல பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த்த் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அன்று புலிப் பயங்கரவாதிகள் புனித தலதா மாளிகையைத் தாக்கியபோது ஜயஸ்ரீ மகா போதியை வழிபடச் சென்றிருந்தோர் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானபோது இந்நாட்டு பௌத்தர்களினதும் சர்வதேச பௌத்தர்களினதும் உள்ளங்கள் குமுறின.

அதேபோன்று இன்று புத்தகயா தாக்குதலுக்குள்ளாகியிருப்பதும் சர்வதேச பௌத்த சமூகத்தைப் பெருங் கவலைக்குள்ளாக்கியிருக்கின்றது. இலங்கையினுள்ளும் இவ்வாறான படு பயங்கரமான பயங்கரவாதிகள் 30 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்தனர். என்றாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு தாய் மக்களாகநின்று அந்த பயங்கரவாத இயக்கத்தை 2009 இல் படுதோல்வியடையச் செய்தோம்.

ஆயினும் அதற்காக எமது பிராந்தியத்தில் பெரும் பலம் வாய்ந்த நாடாக இருக்கின்ற இந்தியா அதற்கு எவ்வித உதவியும் எங்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் புலிகளுக்கு ஆதரவாக நின்று அவர்களை உசுப்பேற்றியது மட்டுமே நடந்தது. ஐக்கிய அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்தேய ஏகாதிபத்தியம் இலங்கையிலுள்ள தமது கூலிப் படையாகிய புலிப்படையை தோல்வியடையச் செய்ததனால், பழி வாங்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றவியலைக் கொணர்ந்தது. அவ்வேளையிலும் இந்தியா மேற்கத்தேயத்திற்கு ஆதரவாக நின்று, புலிகளுக்காகவே கண்ணீர் வடித்தது.

மேற்கத்தேய ஏகாதிபத்தியம், புலிகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர் தமிழ் தனவந்தர்கள் மற்றும் தமிழ்நாட்டு இனவாத பிரிவினைவாத அரசியலாளர்களின் புண்ணியத்தில் இருக்கின்ற மன்மோகன்சிங் அரசு, இன்று பயங்கரவாதிகளின் கைப்பொம்மைகளாக உள்ளன. இந்தியாவின் இந்தச் செயற்பாடானது தெற்காசியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாகவுள்ளது. இன்று இந்தியாவின் இந்திய மேற்கத்தேய அரவணைப்பு, பயங்கரவாதிகளை உசுப்பேற்றிவிடுகின்ற பிழையான அரசியல் நகர்வு போன்றவற்றால் இன்று அந்நாட்டினுள்ளேயே இனவாத, மதவாத, வர்க்கவாத பிளவுகள் ஏற்படுவதை நிறுத்தவியலாமல் இருக்கின்றது.

இங்கு இந்தப் பயங்கரவாத்த்துடன் தொடர்புற்ற இன்னொரு விடயத்தை உங்கள் முன்வைப்பதற்கு விரும்புகின்றேன். புத்தகயா மகாபோதி அமைந்திருப்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில். இந்த உலக மரபுரிமையின் பாதுகாப்பு பீகார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உலக மரபுரிமையைப் பாதுகாப்பது பிராந்தியப் பொலிஸ்... ? இந்திய மத்திய அரசுக்கு அதில் தலையிட முடியாது. ஏறக்குறைய 06 மாதங்களுக்கு முன்னர் புத்தகயா தாக்குதலுக்குள்ளாகவுள்ளதாக மத்திய அரசின் புலனாய்வுத்துறை எதிர்வுகூறியிருந்தது. ஆயினும் பீகார் பொலிஸார் இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்தியா அதிக பலம் பொருந்திய நாடு. ஆயினும் இந்த பிராந்திய ஆட்சிமுறையினால் இந்தியா தனக்குரிய பொலிஸ் அதிகாரத்தைச் சரியாக செயற்படுத்த முடியாதுள்ளது என்பது எங்களுக்கு நன்கு தெளிவாகின்றது. இன்று எங்கள் நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரத்தையும் பரவலாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த வண்ணமுள்ளன. பொலிஸ், காணி அதிகாரங்களை வட மாகாண சபைக்கு வழங்குமாறு எங்களுக்கு இந்தியா கட்டளையிடுகிறது. என்றாலும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்... பொலிஸ் அதிகாரத்தை பிராந்திய, மாகாணங்களுக்கு வழங்கும்போது என்ன நடக்கிறது....? நாங்களும் இந்தியாவைப் போல் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கினால் உலக மரபுரிமையாகிய புத்தகயாவிற்கு நிகழ்ந்தவை வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

மேற்கத்தேயத்தின் விருப்பிற்கு ஏற்ப, புலம் பெயர் தமிழ் தனவந்தர்களின் விருப்பிற்கு, தமிழ்நாட்டு பிரிவினைவாத, இனவாத அரசியலாளர்களின் விருப்பிற்கு இந்தியாவை பயங்கரவாத்த்தின் கைப்பொம்மையாக மாற்றியுள்ள தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் இப்போதாவது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயற்கரியன செய்ய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது? எவ்வாறு வெற்றி கொள்வது? போன்ற பாடங்களை அயல்நாடான நமது இலங்கையிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள முடியும். அவ்வாறேனும் கற்று, தெற்காசியப் பிராந்தியம் முகம் கொடுக்க வேண்டிய அச்சுறுத்தல்களை அழித்தொழிப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும்’

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்துறைச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார்.

(கேஎப்)

Read more...

ஹிஜாபைத் தடை செய்யவும்...! மீண்டும் ஒலிக்கிறது பொதுபல சேனாவின் குரல்

முகத்தை மூடியிருப்பதனால் பயங்கரவாதிகளுக்கு தங்க ளது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிகவும் இலகுவாக இருப்பதனால், முஸ்லிம் பெண்களின் உடையாகிய "ஹிஜாப்" உடையை தடைசெய்யுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது பொதுபல சேனா.

பயங்கரவாதிகள் தங்களது செயல்களை மிகவும் சூட்சும்மானமுறையில் மேற்கொள்வதற்கு உதவியாக ஹிஜாப் இருப்பதாக பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிடுகிறார்.

பாதாள உலகின் தலைவராகவிருந்த மாமாஸ்மியை பாதுகாப்புப் பிரிவினர் கொலை செய்தமை குறித்து அவர்களுக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஞானஸார்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு முன்பாக இருப்பவர் பெண்ணா ஆணா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய உரிமை ஒருவருக்கு இருப்பதால் இந்த உடையானது மனித சமூகத்திலுள்ள உரிமைகளை விடவும் விஞ்சிய ஒன்றாக இருக்கும் எனக்குறிப்பிடுகின்ற தேரர், இந்த ஆடைக்குள் ஒழிந்திருந்து நடாத்தப்படுகின்ற பயங்கரவாதச் செயல்களும், போதைவஸ்து விற்பனை முதலானவை அரச பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்க்க்கூடியதும் சவால்விடக்கூடியதுமாகும். எதிர்காலத்தில் வர்க்க பேதமொன்று ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா ஆடையை தடை செய்வது மனித உரிமை மீறலில் உள்ளடங்காது என பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை உதாரணமாகக் காட்டியுள்ள தேரர், தற்போது பல நாடுகளில் இந்த ஆடை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பிரான்ஸில் இந்த ஆடையுடன் நடமாடினால் 150 யூரோ தண்டப் பணம் அறவிடப்படுகின்றது எனவும், அவ்வாறு ஒரு பெண் புர்கா அணியக் கட்டுப்பாடு விதிப்பதானது 30000 யூரோ தண்டப் பணத்திற்குரிய குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

மனநிலை பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களை நாசம் செய்த சட்டத்தரணி கைது

ஹொரணை பிரதேசத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் வைத்து மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதற்காக சட்டத்தரணியொருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

ஹொரணை பிரதேசத்திலுள்ள மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நிலையத்துள்ள சிறுமிகளில் இருவரையே குறித்த சட்டத்தரணி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப் படுகின்றது.

மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சபையின் தலைவரான சட்டத்தரணியையே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். அந்த மத்திய நிலையத்தில் பணிப்பாளர் மட்டுமல்ல ஆசிரியராக கடமையாற்றும் குறித்த சட்டத்தரணி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்த மத்திய நிலையத்தில் 37 பெண் பிள்ளைகள் இருப்பதுடன் அவர்களில் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்த நிலைய த்தில் அழகுக்கலை பயிற்றுவிக்கும் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அழகுக்கலை பயிற்றுவிக்கும் பெண்ணால் குறித்த மூன்று சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து ஏற்கனவே தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே நிலையத்தின் பணிப்பாளரான சட்டத்தரணி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையத்திலுள்ள முடிதிருத்தும் நிலையத்தில் வைத்தே சிறுமிகள் இருவரை பணிப்பாளர் பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுமிகள் இருவரையும் சட்டத்தரணி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது அழகுகலை பயிற்றுவிக்கும் பெண் அதனை பார்த்துக்கொண்டிருப்பதனை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட அழகுகலை பயிற்றுவிக்கும் பெண், ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளதுடன் பணிப்பாளரான சட்டத்தரணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more...

புத்தகாயா மகாபோதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பு அதிகரிப்பு.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புத்தகாயாவிலுள்ள மகா போதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து வரலாற்று புகழ்மிக்க அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாபோதியின் பாதுகாப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே பாதுகாப்பை அதிகரிப்பதென தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மகாபோதிக்கு வருகின்ற சகல வாகனங்களும் புதிய வாகன தரிப்பிட த்தில் நிறுத்தப்படும் எனவும், விசேட விருந்தினர்கள் மற்றும் விசேட அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே மகாபோதிக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more...

வீட்டை உடைத்து கொள்ளையிட முயன்ற நபர் பொதுமக்களால் அடித்துக் கொலை - மொரட்டுவயில் சம்பவம்

மொரட்டுவ, உஸ்வத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற நபரை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந் துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மொரட்டுவ, உஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று அதிகாலை பொதுமக்களினால் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸா ரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் லுனாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந் துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தெரிவித்தார்.

நேற்று அதிகாலை உஸ்வத்த பிரதேசத் திலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து நுழைந்த சந்தேக நபரை வீட்டின் அறையொன்றில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். சந்தேக நபரை அந்த வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவி, மகள் மற்றும் அயலவர்கள் இணைந்து தாக்கியுள்ளனர்.

சந்தேக நபர் மேற்படி வீட்டின் உரிமையாளரின் மகள் தங்கி இருந்த அறையின் கட்டிலுக்கு கீழ் மறைந்திருந்ததை அவதானித்த பெண் அருகிலிருந்த அலுமினியம் குழல் ஒன்றினால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அவசர அழைப்பு மூலம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் சுகயீனமுற்ற சந்தேக நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய அணில் பீரிஸ் என்ற சந்தேக நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் பொலிஸார் தெரிவித்தார்.

Read more...

வடக்கு வடக்குத்தான், கிழக்கு கிழக்குத் தான் இரண்டும் இணைய முடியாது - அஸ்வர்

மேற்கு மேற்குத்தான் கிழக்கு கிழக்குத் தான்- இரண்டும் ஒன்று சேர முடியாது என ஆங்கிலேயே அறிஞன் மார்க் டுவைன் கூறியது போன்று, இங்கு எமது சூழ்நிலையைப் பொறுத்து வடக்கு வடக்குத்தான், கிழக்கு கிழக்குத் தான் இரண்டும் இணைய முடியாது எனவும், இரு மாகாண சபைகளின் கீழ்தான் இவ்விரு மாகாணங்களும் இயங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்திலே பேசுகையில் பாராளுமன்ற உறுப்பினருர் ஏ.எச்.எம். அஸ்வர் இதகைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள். இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்தார் என தெரிவித்ததார்.

அத்துடன் வடக்கில் பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாதிருந்த பொழுதே, ஒரு லட்சம் அளவிலான முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஓர் இரவிலேயே அடித்துத் துரத்தப்பட்டனர். பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால், முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் கஷ்டத்துக்குள் உள்ளாவார்கள் என்பதை நாம் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம் என அஸ்வர் தெரிவித்தார்.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ந்து விஜயம் செய்கின்ற ஒருவன் என்ற முறையிலும், மட்டக்களப்புத் தமிழர்களின் உணர்வுகளை நன்கு அறிந்தவன் என்ன முறையிலும் யாழ்ப்பாண ஆதிபத்தியத்தின் கீழ் மட்டக்களப்பு வருவதை மட்டக்களப்புத் தமிழர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இன்றும் தாண்டவமாடும் தீண்டாமைக் கொள்கையை மட்டக்களப்புத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவே மறுக்கின்றனர் என ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

விளையாட்டு மூலம் ஓர் ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென மஹிந்த சிந்தனை தெளிவாகக் கூறுகிறது அதனை நடைமுறைப்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து இன வாலிபர்களினதும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்

Read more...

Monday, July 8, 2013

இலங்கை வந்தார் சிவ்சங்கர் மேனன்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று நண்பகல் 12 மணியளவில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த சிவ்சங்கர் மேனன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்திருக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பலரையும் சந்தித்து பேசவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, சந்தித்ததுடன் நாளை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் காலை உணவு அருந்தும் சிவ்சங்கர் மேனன் அதன் பின்னர் 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை ஜனாதிபதியுடன் நடத்தவுள்ளார்.

இதனைத தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும் சிவ்சங்கர் மேனன் அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர் ஹக்கீமையும் சந்திக்கின்றார்.

Read more...

சுன்னாகம் நகர மத்தியிலிருந்து வெளியேறும் இராணுவம்!

சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன்,பொது மக்களது வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாகத் சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் நகரமத்தி ஜே/198 கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று(08.07.2013) முற்பகல் 10.00 மணிக்கு இராணுவத்தினர் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்களுக்கும், சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போதே இராணுவ அதிகாரி இதனை குறிப்பிட்டார்.

இது மட்டும்லாது சுன்னாகம் நகரப்பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் நாளை(09.07.2013) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வருகைதருமாறு சுன்னாகம் நகர் மத்தி கிராம அலுவலர் அறிவித்துள்ளார்.

சுன்னாகம் நகர மத்தியபகுதி மற்றும் காங்கேசன்துறை வீதியில் என 14 வீடுகளில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தொலைபேசியில் பேசிய படி போனால்

நம் தெருக்களில் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே போவதில் பயம்தான் உண்டாகிறது. வேகமும் விபத்துக்களும் ஒருபுறம் என்றால் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே காரையோ மோட்டார் சைக்கிளையோ ஓட்டிக்கொண்டு போகிறவர்களைப் பார்த்தால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கைத்தொலைபேசியில். காதில் தொலைபேசி இல்லாமல் தெருவில் யாரும் நடந்து போவதையோ வாகனங்களில் செல்வதையோ காணமுடியாமல் இருக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இன்றைய செல்போனின் தாத்தாவைக் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பரிடம் அன்றே தீர்க்கதரிசனமாக ஒரு கேள்வி கேட்டார்கள். இந்தக் கம்பியில்லாத கைத்தொலைபேசியில் அபாயம் ஏதாவது இருக்கிறதா?

ஆமாம் என்று ஒத்துக்கொண்டார் கூப்பர். கார் ஓட்டுபவர்களின் கவனம் சாலையில் இல்லாமல் போன் பேசுவதிலேயே இருப்பதால் விபத்து நடக்கலாம், இது நடக்கக் கூடியதுதான் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். இப்போதைய கணக்குப்படி செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுபவர்களால் அமெரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 2600 பேர் உயிரிழக்கின்றனர்.

அந்தக்கால கம்பியில்லாத் தொழினுட்பத்தைக் கொண்டு முதல் நடமாடும் தொலைபேசியைக் கண்டுபிடித்துச்செய்த வருடம் 1946. நீண்ட தூரத்திற்கு லொறி ஓட்டிச் செல்பவர்கள் தலைமையகத்துடன் தொடர்பு கொள்வதற்காக இது முதலில் பயன்படுத்தப்பட்டது. அதாவது இதன் உருவாக்கமே வாகன ஓட்டுனர்களை மனதில் வைத்துச் செய்யப்பட்டதுதான்.

ஊரெங்கும் தொலைத்தொடர்புக் கோபுரங்களை எழுப்பும்போதே பயணங்களையும் வாகன ஓட்டுனர்களையுமே முக்கியமாக கவனத்தில் கொள்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்போன் கம்பனிகளுக்கான முக்கால்வாசி லாபமும் வாகன ஓட்டுனர்களிடமிருந்தே கிடைப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

1960 ஆம் ஆண்டுகளில் எல்லாம் உலகில் கைத்தொலைபேசி என்பது ஒரு விலையுயர்ந்த விளையாட்டுப்பொருளாக இருந்தது அவ்வளவுதான். ஆனால் தொழினுட்பம் வளர்ந்து, மிகக்குறைந்த விலைகளில் தொலைபேசி உபகரணமும் பேசும் கட்டணமும் வந்தபிறகு வீதிவிபத்துக்கள் மிக அதிகரித்து விட்டன.

2007 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் செய்த ஆய்வில் 11 சதவீத வாகன ஓட்டுனர்கள் தொலைபேசிக் கொண்டுதான் ஓட்டுகிறார்கள் என்பது வெளிவந்தது. வீதிவிபத்துக்கள் ஐந்தரை லட்சம். 2600 மரணங்கள். கடந்த பத்து வருடத்தில் இதைப்பற்றி எவ்வளவோ ஆராய்ச்சிகள் வெளிவந்துவிட்டன.

அவற்றின் சாரம் என்னவென்றால், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும்போது விபத்துக்கான வாய்ப்பு 400 சதவீதம் அதிகரிக்கிறது என்பதுதான். ஆனால் இந்த ஆபத்து பற்றி எத்தனை எச்சரிக்கைகள் வந்தபோதும் விபத்துகள் குறையவில்லை சாரதிகள் பேசிக்கொண்டே ஓட்டுவதையும் நிறுத்தவில்லை. ப்ளுடூத், இயர்போன் பயன்படுத்துவதால் கைகள் ஸ்டியரிங்கை கவனமாகப் பிடித்திருக்கிறது என்று சமாதானம் சொல்ல முடியாது. வாகன ஓட்டுதலில் கை அல்ல முக்கியம் மனம் அதில் குவிந்திருப்பதே முக்கியம்.

மேலும் ஒரு பல்கலைக்கழக ஆய்வின்படி, குடித்துவிட்டுக் கார் ஓட்டுவதை விட செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவதில்தான் விபத்துக்களும் ஆபத்துக்களும் அதிகம் நிகழ்கின்றன என்று தெரிவிக்கிறது. இன்றைய தொழினுட்ப வேகம், பேசுவதற்கு மட்டுமல்லாது ஜி.பி.ஆர்.எஸ்., டிஜிட்டல் வரைபடம், வண்டி ஓட்ட வழி சொல்லித் தருதல், செய்திகள் தருதல், மின்னஞ்சல், இணையவசதி என்று எதையெதையோ புதிது புதிதாகத் தந்துகொண்டே இருக்கிறது.

மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளுக்குத் தொழினுட்பத்தை நம்ப முடியாது. தன்னைத் திருத்திக் கொள்வதற்கான தனது அறிவைத்தான் அவன் நம்ப வேண்டும்.

Read more...

கண்டி மாவட்டத்துக்காக யானை மீது ஏறப்போகிறார்கள் அஸாத் ஸாலியும் மனோவும்...!

மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலிலிருந்து அஸாத் ஸாலி மற்றும் மனோ கணேசன் கண்டி மாவட்டத்துக்காக போட்டியிடவுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிபடுகின்றன.

இதுதொடர்பில் அஸாத் ஸாலி, நானும் மனோவும் ஐதேகவின்பட்டியலிலிருந்து கண்டி மாவட்டத்திற்காக போட்டியிடுவதற்காக பேச்சுவார்த்தை நடாத்தி முடிவடைந்துள்ளதாகவும், அதனால் நாங்களிருவரும் கண்டி மாவட்டத்திற்காக தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதும் நம்பத்தகுந்த்து எனவும் குறிப்பிட்டிருக்கிறார்

எது எவ்வாறாயினும் தான் கண்டி அல்லது குருணாகலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டாலும் பெருந்தொகை வாக்குகளால் தனக்கு வெற்றியடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போட்டியிட்டால் ஐதேகவின் முஸ்லிம் வாக்காளர்களில் அதிகமானோரின் வாக்குகள் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

எகிப்திய இராணுவ சதி இஸ்லாமியவாத ஜனாதிபதி முர்சியை பதவியில் இருந்து வீழ்த்தியது. By Johannes Stern and Alex Lantier

நான்கு நாட்கள் தேசிய அளவிலான வெகுஜன எதிர்ப்புக்களை தொடர்ந்து எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சி அகற்றப்பட்டபின், அதிகாரம் ஒரு இராணுவ ஆட்சிக் குழுவின் கைகளில் உள்ளது, அது நாட்டின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நோக்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிகொண்டது.

வெறுக்கப்பட்ட முர்சியின் ஆட்சி அகற்றப்பட்டமையானது பெரும் ஆரவாரத்தை தூண்டியுள்ளது. ஆனால் இந்த உணர்வு எவ்வளவு நேர்மையானதும், ஆழமானதுமாக இருந்தாலும், முர்சி அகற்றப்பட்டு அதிகாரத்தில் இருத்தியுள்ளது இராணுவத்தைத்தானேயன்றி வெகுஜனங்களை அல்ல என்பதுதான் உண்மை. வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டிய அடிப்படைக் கோரிக்கைகள் எதுவும்—கௌரவமான வேலைகள், வாழுவதற்கான ஊதியங்கள், போதுமான சமூகநலச் சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள்—இராணுவ ஆட்சியால் நிறைவு செய்யப்படமாட்டா.

இராணுவம் ஒரு முக்கிய காரணத்திற்காக தலையீடு செய்துள்ளது: எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பெருகும் அரசியல் இயக்கத்தை முன்கூட்டியே தவிர்ப்பதற்காகவும் நசுக்குவதற்காகவுமாகும். நேற்று இரவு அது அறிமுகப்படுத்தியுள்ள கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக விழைவுகளின் உண்மையான வெளிப்பாடு அல்ல. மாறாக, புதிய ஆளும் அமைப்பு பிற்போக்குச் சக்திகளின் தீய கூட்டணி ஆகும்; இதில் நீண்டகாலம் ஹொஸ்னி முபாரக்கின் எடுபிடியாக இருந்தவர்கள், பல தாராளவாதிகள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியுடன் நெருக்கமான தொடர்புகளை உடையவர்கள் ஆகியோர் உள்ளனர். தனிப்பட்டவர்கள் எவரும் அல்லது அமைப்புக்கள் எதுவும் ஒரு வெகுஜன சமூகத் தளத்தை கொண்டிருக்கவில்லை, மக்களுக்கான சமூகநல வேலைத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) தொலைக்காட்சி நிலையங்களை கைப்பற்றி, முர்சியையும் கைது செய்தபின், இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவர் ஜெனரல் அப்துல் படா கலில் அல்-சிசி ஒரு அரசியல் “சாலை வரைபடத்தை” கொடுத்துள்ளார்: இதில் அரசியலமைப்பு தற்காலிகமாக, உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, “தேசியத் தொழில்நுட்ப அறிஞர்” அரசாங்கம் எனப்படுவதை அமைப்பது ஆகியவை உள்ளன.

“தொழில்நுட்ப அறிஞர்” என்னும் சொற்றொடர் அரசியலில் நடுநிலை காட்டும் வல்லுனர்கள் என்னும் தோற்றத்தைத் தூண்டக் கூறப்படுகிறது; அவர்கள் வர்க்க நலன்களுக்கு மேலே இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. உண்மையில், “தொழில்நுட்ப அறிஞர்கள்” எனப்படுவோர் சர்வதேச வங்கிகளின் பிற்போக்குத்தன செயற்பாடுகளில் ஆழமாக ஈடுபட்டிருப்பவர்களாவர்.

அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மை, அல்-சிசி தன்னுடைய “சாலை வரைபடத்தை” நேற்று மாலை அறிவித்தபோது அவரை சுற்றி இருந்த பிற்போக்குவாதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியவரும். இவர்களுள் பல தளபதிகள், கோப்டிக் போப் இரண்டாம் தவட்ரோஸ், பெரும் இமாம் அல்-அஷர் அஹ்மத் அல்-தயிப் மற்றும் எதிர்ப்பு அரசியல்வாதிகளான தேசிய மீட்பு முன்னணி (NSF) தலைவரும் முன்னாள் ஐ.நா. அதிகாரியுமான முகம்மது எல்பரடேய், அதி வலது சலபிஷ்ட் அல் நூர் கட்சியின் யூனிஸ் மகியோன் மற்றும் எதிர்ப்பு தமரோட் (‘எழுச்சி’) கூட்டணியின் மகம்மது பட்ர் ஆகியோர் இருந்தனர்.

இந்த நபர்களில் ஒவ்வொருவரும், முக்கிய அரசியல் மற்றும் மத வேறுபாடுகளில் உள்ள எகிப்தின் புதிய ஆட்சிக்கு பரந்த ஆதரவு என்னும் தோற்றத்தை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இராணுவம், தலைமை அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள ஆட்லி மன்சூரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. முகம்மது எல்பர்டேய் பிரதம மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சீக்கிரம் தேர்தல்கள் நடைபெறும் என்னும் தெளிவற்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மன்சூர், பழைய முபாரக் ஆட்சியுடன் நீண்டக்கால உறவுகளைக் கொண்டவர். பல காலம் ஐ.நா.வில் அதிகாரியாக பணியாற்றிய எல்பரடேய் அமெரிக்காவின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கை நடைமுறையுடன் நெருங்கிய தொடர்புடையவர். எல்பரடேய் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்—சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்திய பேச்சுக்களில்; அது அடிப்படை பொருள்களான தானியம், எரிபொருள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் மானியங்கள் வெட்டப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு அரங்கமைத்த அரசியல் தந்திரோபாயங்களில், முக்கிய பங்கு தமரோட் கூட்டணிக்கு உண்டு. இது முற்றுமுழுதாக ஒரு முதலாளித்துவ அரசியல் இயக்கம் ஆகும். ஏப்ரல் மாத இறுதியில் முர்சிக்கு எதிராகக் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சாரத்திற்காக நிறுவப்பட்ட இந்த அமைப்பு, விரைவில் முன்னாள் முபாரக் ஆட்சியில் எஞ்சியிருப்போர், முஸ்லிம் சகோதரத்துவத்தை எதிர்க்கும் பலவகை எதிர்க்கட்சியினர், தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடது அனைத்தும் கூடுமிடமாகியது. இதன் ஆதரவாளர்களில் எல்பரடேயின் NSF, இஸ்லாமிய வலுவான எகிப்து கட்சியின் முன்னாள் MB யின் உறுப்பினர் அப்தெல் மோனிம் அபௌல் போடௌ, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகியோர் அடங்குவர். கடைசியாக முபாரக்கின் கீழ் பிரதமராக இருந்தவரான தளபதி அஹ்மத் ஷபிக் ஒப்புதலையும் இந்த இயக்கம் பெற்றது.

முர்சியை அமெரிக்கா ஆதரித்து வந்தபோதிலும்கூட, எகிப்திய ஆட்சி காப்பாற்றப்பட முடியாது என ஒபாமா நிர்வாகத்திற்கு தெளிவானவுடன், இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியது. எகிப்திய இராணுவமானது தளபதி மார்ட்டின் டெம்ப்சி என்னும் அமெரிக்க கூட்டுப் படை தலைவருடன் தீவிர விவாதங்கள் நடத்திய பின் ஆட்சிமாற்றத்தை செயல்படுத்தியது.

நேற்று மாலைவந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா முர்சி அகற்றப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தார்; அதே நேரத்தில் “இராணுவ சதி” என்ற சொல்லையும் தவிர்த்தார். இராணுவத்தின் மீது தடை எதையும் சுமத்தாத தெளிவற்ற சொல்லாட்சியில், ஒபாமா புனிதமாக இராணுவம் “விரைந்து பொறுப்புடன் செயல்பட்டு முழு அதிகாரத்தையும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலிய அரசாங்கத்திற்கு கொடுக்க முன்வரவேண்டும் என்றும், இது அனைத்தையும் உள்ளடக்கும் வெளிப்படையான வழிவகையில் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மீண்டும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) —எகிப்திலுள்ள மிக முக்கியமான போலி இடது குழுக்களில் ஒன்று— அதன் வனப்புரையை பயன்படுத்தி முதலாளித்துவத்தின் அரசியல் தந்திரங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளது. பெப்ருவரி 2011ல் RS ஆனது இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்தது; முபாரக் அகற்றப்பட்டபின் அது பதவிக்கு வந்தது. 2012ல் இராணுவம் பெருகிய மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்தபோது, அவர்கள் முர்சியின் தேர்தலை புரட்சியின் வெற்றி எனப் பாராட்டினர். இப்பொழுது தொழிலாள வர்க்கம், முர்சி மற்றும் MB க்கு எதிரான போராட்டத்தை நடத்துகையில், இவர்கள் சதிக் குழுவுடன் இணைந்து, மீண்டும் இராணுவத்திற்கும் முபாரக்கின் பழைய ஆட்சிக் கூறுபாடுகளும் அதிகாரத்திற்கு வந்துள்ளதை ஆதரிக்கிறனர்.

RS உடைய பிற்போக்கு அரசியலில் ஒரே நீடித்த கூறுபாடு அவர்களுடைய தொடர்ந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வெளிப்படக்கூடாது என்பதற்கு இருப்பதுதான். இவர்கள் உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்றனர்; அதுதான் எகிப்திய முதலாளித்துவ ஸ்தாபனத்தினதும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு நெருக்கமுடன் இணைந்த பிரிவுமாகும்.

உலக சோசலிச வலைத் தளம், இராணுவத்தின் மீது பிரமை கொள்ளவேண்டாம் என தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. நிதிய மூலதனம் கோரும் கொள்கைகளைத்தான் இராணுவம் செயல்படுத்த முற்படும். இறுதிப் பகுப்பாய்வில், ஒருபுறம் இராணுவம் மறுபுறம் அகற்றப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவம் என்பது ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இராணுவம் தயாரிக்கும் அடக்குமுறையின் முக்கிய இலக்கு, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதுதான். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் “தேசிய நலன்களுக்கு” எதிரானவை, நெறியற்றவை எனக்கண்டிப்பதற்கு அரங்கு அமைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எகிப்தை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள புரட்சிகர நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவது என்பதற்கு வெளியில் ஒரு முற்போக்கான தீர்வு எதுவும் கிடையாது. அதற்கு நகர்ப்புற, கிராமப்புற வறிய பரந்த வெகுஜனங்களை ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரட்டவேண்டும்.

Read more...

பிள்ளை வருவதற்கு முன்னர் இனவாத அலைகள் வீசுவதற்கான முன்ஆயத்தம் நடைபெறுகிறதாம்...! தயார் நிலையில் அரசு!!

மதவாதத்தை அடிப்படையாக்க் கொண்டு பிளவுகளை நாட்டுக்குள் ஏற்படுத்துவதற்கு தயாராகின்ற குழுக்கள் தொடர்பில் மிக உக்கிரம்மான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசினால்அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப மத அமைப்புக்கள் என்ற பேரில் இனவாத்த்தையும் மத வாத்த்தையும் கிளரவுள்ளவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமையத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை இந்நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்னர் இந்நாட்டில் ஏதேனும் ஒரு அமைப்பில் பிளவினை ஏற்படுத்த சிலர் முனைந்து வருவதாக அடிபடுகின்ற செய்திகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் தெளிவற்றதொரு படத்தினை வரைந்து சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமானதுதான் என்பதுதான் என்பதை நிரூபிப்பதற்காக சதிகள் திரைமறையில் நடந்து கொண்டிருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு நம்புகின்றது.

(கேஎப்)

Read more...

பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவைச் சிகிச்சை!

பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளை அறுவை சிகிச்சை இன்று காலை நடந்து முடிந்ததாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் நேற்று மாலை தனது மகன்கள் 2 பேரிடமும் தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார். உடல் நலம் சரியில்லாததால் தான் ரித்திக் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துஜா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர் பி.கே. மிஷ்ரா மூலம் வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை சுமார் 45 நிமிடம் நீடித்துள்ளது. தற்போது அறுவைசிகிச்சை முடிந்து ஹிருத்திக் ரோஷன் நலமாக இருப்பதாக அவரது தந்தை ராகேஷ் ரோஷன் கூறியுள்ளார்.

Read more...

உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு செங்கலடி உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்ப்பிக்கும் ஆசிரியை ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் வசிக்கும் 34 வயதுடைய தவசீலன் அனுசியா என்ற ஆசிரியையே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பிள்ளையின் தாயான நேற்று தனது வீட்டின் அறையொன்றில் மின்விசிறி பொறுத்துவதற்கான கம்பியில் சீலை துண்டை கட்டி தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Read more...

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் மறுமணம்?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், மெல்பர்னைச் சேர்ந்த ஷனெய்ரா தாம்சன் என்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்ளவிருப்பதாக "ஹெரால்ட் சன்" பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அக்ரமின் முதல் மனைவி ஹியூமா 2009ஆம் ஆண்டு மரணம்டைந்ததையடுத்து, அவர் இரண்டாவது திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கப்போவதில்லை என்று கூறிவந்தார். இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு ஷெனெய்ரா தாம்சனை என்ற பெண்ணை சந்தித்துள்ளார். இவருக்கு வயது 30, வாசிம் அக்ரம் வயது 47 என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தைச் சேர்ந்த, இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை வெளியேற்றப் பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக் குறை காரணமாக இரண்டாம் வருட மாணவர்களுக்காக விசேட விடுதி வசதி நிந்தவூர் பிரதேசத்தில் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், பல்கலைக்கழத்திற்குள்ளேயே விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என இரண்டாம் வருட மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப் படுகின்றது.

Read more...

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..! Methods of Laptop Maintenance.!

மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது. லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான்.

மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும்.


மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? Methods of Laptop Maintenance

குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.

மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days

மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.

மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும்.

மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)

அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம்.

மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லோபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.

முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)

மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது.

மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Read more...

விமோசனம் (குறுந்திரைப்படம்)

கல்முனை தமிழ் பிரிவில் பலவிதமான கலைப்படைப்புகள் வெளியானபோதும், முதன்முறையாக குறுந்திரைப்படமொன்றினை தயாரித்து வரலாற்றில் புதிய மையிற்கல்லில் கால்பதிக்கின்றது பாண்டிருப்பு அகரம் சமூக அமையம். சமூக சேவையில் ஒரு தசாப்தத்தினைக் கடந்து இலக்கிய வானிலும் மணிப்புறா எனும் சஞ்சிகை ஊடாக சிறகடித்துப்பறக்கும் அகரம் சமூக அமையம் தனது புதிய முயற்சியாகவும் குறுந்திரைப்பட வரலாற்றில் கல்முனை தமிழ் பிரிவின் முதற் குறும்படமாகவும் வெளிவர இருக்கின்றது.

கவிஞர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் இயக்கத்தில் உருவான விமோசனம் குறுந்திரைப்படம், இன்றைய காலகட்டத்தில் அதிகமான குடும்பங்கள் எதிர்நோக்கும் துர்ப்பாக்கியம் நிறைந்த வாழ்வினைக் குறித்திருக்கும். விமோசனத்தில் நடிகர்களாக அகரம் துஜியந்தன், இளம் எழுத்தாளர் புதுமைவாணன் எனும் க.டணிஸ்கரன், ம.கலாயினி, தே.சினேகா, யோ.யுகசன், கவிஞர் மருதமுனை விஜிலி, கலாநிதி செ.கணேஸ், ஓய்வுநிலை அதிபர் இ.இராஜரெட்ணம் மற்றும் கலாநிதி கண.வரதராஜன் என எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் எனப் பலர் இணைந்து இக்குறும்படத்தில் பாத்திரமேற்று நடித்துள்ளனர்.

விமோசனமானது இச்சமூகத்திலுள்ள பலருக்கும் விமோசனமளிக்கும் வகையில் கதை, திரைக்கதை வசனமென அழகுற பாவாணர் அக்கரைப்பாக்கியனால் ஆக்கம்பெற்றுள்ளது. அகரம் தயாரித்து வழங்கும் இக்குறும்படத்தினை ஆழ நுட்பத்துடன் ஒளி,ஒலிப்பதிவு செய்திருக்கின்றார் பாண்டிருப்பு சுகா ஒளிப்பதிவாளர் ரா.ரகு.

சாதாரண மக்கள் வாழும் பல்வேறு வகையான இயற்கைச் சூழல் நிறைந்த காட்சிகளோடு தயாரிக்கப்பட்டிருக்கும் விமோசனம் நிச்சயமாக பார்க்கும் பார்வையாளரைத் தன்பக்கம் கட்டி ஈற்றில் விமோசனம் அளிக்கும் என்பது உறுதி.

இக்குறும்பட வெளியீட்டு விழா எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை பி.ப 3மணிக்கு பாண்டிருப்பில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பூத்த கலைஞர்கள், கவிஞர்களெனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Read more...

ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது!

இலங்கையிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர் ஒருவர் தமது அதிபரூடாக எதிர்வரும் 05.08.2013க்கு முன்னராக பதிவுத் தபாலில் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் கல்வி நிருவாகக்கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும், என கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.கோடாபாய ஜயரத்ன அறிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 5.7.2013க்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 1 வருட கால ஆசிரிய சேவையையினை பூர்த்தி செய்திருத்தல் காட்டாயமானதாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கல்வி விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், சமயம், தமிழ் உள்ளிட்ட 22 பாடநெறிகளில் பயில விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Read more...

கார் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஜவர் கொழும்பில் கைது

கொம்பனித்தெரு நவம் மாவத்தையில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களையும், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவரையும், குறித்த பெண்ணுக்கு சொந்தமான 25 லட்சம் ரூபா பெறுமதியான வாகனமொன்றையும், பாணந்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சொகுசு வாகனமொன்றில் நான்கு அழகிகளை ஏற்றிக் கொண்டு, கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்தவாறு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே ,அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தையும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் கைது செய்யும் போது, அவர்களிடம் 70000 ரூபாவும் இருந்ததாகவும், குறித்த பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஒரு மணித்தியாலயத்துக்கு 5000 ரூபா முதல் 10000 ரூபா வரை அறவிடப்படுவதாகவும், இப்பணத்தில் 50 சதவீதத்தை விபசாரத்தை முன்னெடுக்கும் பெண் அறவிடுவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபசார நடவடிக்கையை மேற்கொண்ட பெண் கடந்த 10 வருடங்களாக பெண்களை இவ்வாறு விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்களும் கைப்பற்றப்பட்ட வாகனமும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

மட்டக்களப்பு வர்த்தகரின் சடலம் பாசிக்குடாவில் மீட்பு.

மட்டக்களப்பு செங்கலடியில் குளிர்பான முகவராக செயற்படும் வர்த்தகர் ஒருவரின் சடலம், பாசிக்குடா பகுதியில் உள்ள கடற்கரையிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய செல்லையா மனோகரன் வயது என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிளும் கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலத்தினை மகன் மனோகரன் சதீஸ்குமார் அடையாளம் காட்டினார். மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read more...

விபச்சார விடுதியில் பிறந்த குழந்தையை விற்கமுயன்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை.

இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு இளம்பெண் தனக்கு விபச்சார விடுதியில் பிறந்த குழந்தையை விலைக்கு விற்றதையடுத்து, குறித்த 22 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக் கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவிலிருந்து துபாய்க்கு வேலை தேடி வந்த இப்பெண், சூழ்நிலை காரணமாக விபச்சார விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கர்ப்பமான இந்த பெண், கருவை கலைக்க மனமின்றி, அந்த விபச்சார விடுதியிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட விரும்பாத இவர் திரும்பி இந்தோனேஷியாவிற்கே சென்றுவிட முடிவு செய்தார்.

ஆனால், விமான பயணச்சீட்டுக்கு பணம் இல்லாமல் போனதாலும், விபச்சார விடுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரவேண்டுமென்ற எண்ணத்திலும், 6 மாத பெண் குழந்தையை ஒரு தம்பதிக்கு விற்க முயன்றார்.

Read more...

மகாபோதி குண்டுவெடிப்பையடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னை நகரில் இயங்கிவரும் இலங்கைசார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிணங்க எழும்பூரிலுள்ள மாஹாபோதி சமூகத்தின ருக்கும், நுங்கப்பாக்கத்திலுள்ள இலங்கை துணைதூதர கத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளில் 5,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

13ஆவது திருத்தம் பற்றி பேசுவது தமிழ் மக்களுக்கு பயனில்லாத ஒன்று! சி.க.சிற்றம்பலம்.

"தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது"

தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது எனவும், சமஷ்டி ஆட்சியின் மூலமே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும் என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 13ஆவது திருத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையில் எடுத்து வைத்துக் கொண்டு மாகாண சபை அதிகாரம் குறித்து பேசுவது தமிழ் மக்களுக்கு பயனில்லாத ஒன்று எனவும், மாகாண சபை அதிகாரங்கள் வெறுமனே இருக்கின்ற பொழுது மாகாண சபை தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை சிந்திக்க வேண்டும். யுத்தம் முடிந்த 4 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த 5 கட்சிகளும் தமிழர்களின் தீர்வு இதுதான் என ஏன் கூறவில்லை? ஏன் அதற்கான தீர்வினை முன்வைக்கவில்லை? என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் மேலும் தெரிவித்தார்.

Read more...

பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? இந்த நியதியையும் மீறி சில சமயங்களில் மட்டும் பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கலாம். பாம்பு படம் எடுத்து பல தடவைகள் கீரிப் பிள்ளையைக் கடிக்கவும் படத்தால் அடிக்கவும் முயலும். இருப்பினும் கீரிப்பிள்ளை வேகமாக விலகி தப்பிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துக் கொன்று விடும்.

இப்படி பாம்புகளை கீரிப்பிள்ளை வெல்வதற்குக் காரணம் அதன் வேகமான செயல்பாடுதான் என்றே சமீப காலம் வரை விலங்கியல் நிபுணர்கள் நினைத்திருந்தார்கள்.

கீரிப்பிள்ளை அதீத சுறுசுறுப்புடன் பாம்பின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கிறது. தப்பித் தவறி விஷப் பாம்பிடம் அது கடிபட்டுவிட்டால், நிச்சயமாக இறந்துவிடும்'' என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பாம்பு கடித்தாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது. அதன் உடலில் இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என்று தற்போது புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள்.

அங்குள்ள வொய்ஸ்மான் நிறுவனத்தில் பணியாற்றும் வாரா ஃப்யூடின் என்ற விஞ்ஞானி, பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தார். சாதாரணமாக மற்ற பிராணிகளின் உடலில் (மனிதன் உட்பட) அவ்விஷத்தைச் செலுத்தினால், பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் செயல் இழக்கும். விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ்!

ஆனால் கீரியின் உடலில் விஷத்தைச் செலுத்தியபோது அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக் காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது ஃப்யூடின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு.

இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

Read more...

கிழக்கில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்.

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்கதும், கதிர்காம பாதயாத்திரை அடியார்களின் பிரதான தலமாக விளங்கி வரும் ஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவப் பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்து ள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளா கியதாகவும், அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது.

முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும்.

Read more...

உளவுத்துறையின் எச்சரிக்கை பலித்தது! புத்தகயா மகாபோதிக்கருகில் குண்டுவெடிப்பு.

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயா மாவட்டத்திலுள்ள மகாபோதி பௌத்த வழிபாட்டுத்தலம் அருகே வெவ்வேறு இடங்களில் 9 குண்டுகள் தொடராக வெடித்தன. கோயி லுக்குள் ஐந்து குண்டுகளும், கோயில் வளாகத்திற்குள் மூன்று குண்டுகளும் சுற்றுலா பயணிகளின் பஸ்ஸிற்கு அடியே ஒரு குண்டும் வெடித்துள்ளது. இதே நேரம் வெடிக்காத நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மேலும் இரு குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பிக்குகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த இரு பிக்குகளும் திபெத், மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. அடுத்து சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 4 குண்டுகள் வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குண்டுகளால் மகாபோதிக்கு சேதம் ஏற்படவில்லை. 9 குண்டுகளுமே வீரியம் குறைந்த குண்டுகளாக இருந்ததினால் சேதங்கள் ஏற்படவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த தலத்தின் மேற்கு பகுதியில் புனித போதி மரம் (அரச மரம்) உள்ளது. அந்த அரச மரத்தடியில் தியானம் செய்த போது கௌதம புத்தர் ஞானம் பெற்றார். துறவியாக நாடெங்கும் சுற்றித்திரிந்த அவருக்கு அந்த போதி மரத்தடியில்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இதையடுத்தே அந்த இடத்தில் மகாபோதி கோவில் கட்டப்பட்டுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 60 மைல் தொலையில் உள்ள இந்த இடம் உலகம் முழுவதும் வாழும் பௌத்த மதத்தவர்களுக்கும் முதன்மையான புனிதத் தலமாக திகழ்கிறது.

திபெத், இலங்கை, மியான்மர், ஜப்பான், சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பௌத்த மதத்தினர் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் இந்த கோவிலில் எப்போதும் பௌத்தமத துறவிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் மகாபோதி தலத்துக்கு வரும் புத்த மதத்தினர் அங்கு தங்கி இருந்து வழிபாடு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப மகா போதி தலம் மிகப் பெரிய வளாகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

மகாபோதிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. மகாபோதி கோவிலில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களை கண்காணிக்க கூடுதல் இரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டன. என்றாலும், அதையெல்லாம் மீறி மகாபோதி கோவிலுக்குள் நாசவேலை நடந்துவிட்டது.

நேற்று அதிகாலை மகாபோதி கோவிலில் சிறப்பு வழிபாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது 5.40 மணியளவில் மகாபோதி தல வளாகத்துக்குள் ஒரு குண்டு வெடித்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. அடுத்த நிமிடம் மகாபோதி கோவில் வளாகத்துக்குள் மேலும் 4 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. அதே சமயத்தில் தெரிகா துறவிகள் மடம் பகுதியிலும் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதனால் பயந்துபோன பக்தர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினார்கள். அந்த சமயத்தில் 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள புத்தர்சிலை அருகில் ஒரு குண்டு வெடித்து சிதறியது.

குண்டு வெடிப்புகளில் சிக்கி பௌத்த துறவிகள், பக்தர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடிடியாக மகத் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகிறது.மகாபோதி தலத்தில் வெடித்த 9 குண்டுகளும் மிக, சக்தி குறைந்தவை. இதனால் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். குண்டு வெடிப்பில் மகாபோதி தலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் உள்ள போதிமரம் குண்டு வெடிப்பில் இருந்து தப்பி பாதுகாப்பாக உள்ளது. அந்த மரத்துக்கு அருகில் 2 குண்டுகள் வெடித்த போதிலும், மரத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கோவில் கருவறை பகுதி பாதுகாப்பாக உள்ளதாக டி. ஐ. ஜி. ஹஸ்னன்கான் தெரிவித்தார். குண்டுகள் வெடித்த இடங்களில் பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் முற்றுகையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more...

மான் வேட்டையில் புலி சிக்கியது! புலியிடமிருந்து உயிரை காக்க மரத்தில் தொங்கும் வேட்டையர்கள்!

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவிற்கு சென்ற 6 பேர் கொண்ட குழு அங்குள்ள புலிகளிடம் சிக்கி, மரத்தின் மீது உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது சுமத்ரா தீவில் அமைந்துள்ள லெயுசர் வனவிலங்கு பூங்காவிற்கு அகர்வுட் என்னும் பொருளை தேடி கடந்த வாரம் 6 பேர் சென்றுள்ளனர்.

இந்த குழு, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த வனவிலங்கு பூங்காவுக்குள் நெடுந்தூரம் ஊடுருவிச் சென்றனர். அப்போது உணவுக்காக மான்களுக்கு வலை விரித்து வைத்திருந்தனர். இரவு நேரத்தில் வலைக்குள் மானுக்கு பதிலாக ஒரு புலிக்குட்டி சிக்கிக்கொண்டது. வலையில் புலிக்குட்டி சிக்கியதை உணர்ந்த அவர்கள், அதை வெளியே எடுக்க முயன்றப்போது, அவர்களை ஒரு புலிக்கூட்டம் சூழ்ந்துக்கொண்டது.

புலிகள் தாக்கியதில், 6 பேரில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மற்ற ஐவரும் மரங்களின் மீது ஏறிகொண்டனர். மரத்தின் அடியில் நின்றபடியே சுமார் 3 நாட்களாக புலிகள் காவல் காப்பதால் கலங்கிப்போன அவர்கள் தங்களின் நிலையை விளக்கி வனத்துறை காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.

இந்த தகவலையடுத்து அவர்களை மீட்க வனத்துறையினர் விரைந்துள்ளனர். எனினும், காட்டுப் பகுதியில் வெகுதூரம் அவர்கள் சென்றுள்ளதால் அந்த இடத்தை வனத்துறையினர் சென்றடைய 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப் படுகின்றது.

Read more...

Sunday, July 7, 2013

மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்யும் எண்ணம் கூட்டமைப்புக்கு கிடையாது முதலாவது தேர்தல் கூட்டத்தில் றெமிறிடியஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்’ என முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தமரணியுமான முடியப்பு றெமிறிடியஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று(07.07.2013)யாழ் மல்லாகத்தில் நடைபெற்ற முதலாவது சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அன்றில் இருந்து யாழ்.மாநகர சபையில் உள்ள கூட்டமைப்பில் 8 மந்தைகளையும் மேய்பததில் நான் பெரும் பாடுபட்டு வந்தேன்.

மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. எதற்கெடுத்தாலும் அதனை எதிர்ப்பது தான் இவர்களின் வேலையாக போய்விட்டது. எனது வாழ்நாளில் நான் செய்த முட்டாள் தனமாக செயற்பாடு நான் கூட்டமைப்பில் போட்டி போட்டது தான. அதனால் தான் 2010 ஆம் ஆண்டியில் இருந்து அவர்களின் செயற்பாட்டில் இருந்து நான் மாநகர சபையில் தனித்து செயற்பட ஆரம்பித்தேன்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. எனவே அழிந்து போன எமது பூமியை வளமானதான மாற்ற வேண்டும் என்றால் மக்கள் சரியானவற்றை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

Read more...

இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் சட்டரீதியானவை! – முஸ்லிம் அமைப்பு

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் சட்டங்களுக்கு ஏற்றாற்போல அமைந்துள்ளன என தேசிய முஸ்லிம் சபை குறிப்பிடுகின்றது. அவ்வமைப்பானது அறிக்கையொன்றை வெளியிட்டு இதுபற்றித் தெளிவுறுத்தியுள்ளது. இவ்வனைத்து சட்ட ரீதியான அமைப்புக்களும் சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்குஅளப்பறிய சேவை புரிந்து கொண்டு அவர்களுடைய சமூக மற்றும் மதம் சார்ந்த விடயங்களில் வழிகாட்டுகின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்குரிய அரசியல், மத மற்றும் சுயேட்சை அமைப்புக்கள் பல இந்நாட்டில் உள்ளதாகவும், இவ்வனைத்து அமைப்புக்களும் இலங்கையிலுள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்றாற்போல, பாராளுமன்றத்தின் கட்டளைகளுக்கு ஏற்பவே இயங்குகின்றன. சமூக சேவைகள் திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களிலும் அவை பதிவாகியுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அறபு இஸ்லாமிய கலாபீடங்களின் மாணவர்களுக்காக பாடசாலைகளும், புனித அல்குர்ஆன் பயிற்றுவிக்கப்படுகின்ற மத்ரஸாக்கள் பலவும் இலங்கையில் உள்ளன. அவை அனைத்தும் குறித்த அரச நிறுவனங்களில் பதிவாகியுள்ளன.

அன்று தொட்டு இன்றுவரையில் உள்ள எந்தவொரு அறபுப் பாடசாலையோ இஸ்லாமிய அமைப்புக்களோ அரசாங்கத்திற்கு, அதன் சட்ட திட்டங்களுக்கு மாறாக நடந்துகொள்ளவில்லை. ஐக்கியத்திற்கு எதிராகச் செயற்படவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கவில்லை. இதனை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் தனது பேச்சுக்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் என்றும் நாட்டின் நன்மைக்கே தன்னை அர்ப்பணித்துள்ளது. இனங்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவே செயற்பட்டுள்ளது. நாட்டுக்கு உள்நாட்டு வெளிநாட்டுத் தலையீடுகள் வந்த வேளையிலெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் தங்களது தேசாபிமானத்தைக் சர்வதேசமே காணும் வண்ணம் காட்டியுள்ளனர். ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் கைகோர்த்து இந்நாட்டுப் பெரும்பான்மைச் சமூகத்துடன் வேறு எந் தவொரு இனமும் இல்லாதமுறையில் உறவுப் பாலத்தை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

எமது வாழ்க்கை எதைப்போன்றது தெரியுமா!

மாற்றம் ஒன்றுதான் இங்கு மாறாதது என்றார் கார்ல் மாக்ஸ். எல்லாமே மாறும். மாறுவதன் ஊடாகவே நாம் வளர்ந்து வருகிறோம். இறுகிப்போய் மாறாமலிருக்கும் எதுவும் வளர்வதில்லை. நமது வாழ்நிலைகளில், உலகச் சூழ்நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களோடு இசைவுபட நம் சிந்தையிலும் மாற்றத்திற்கு இடம் விடவேண்டும்.

குறிஞ்சியில் விலங்குகளை வேட்டையாடி, முல்லையில் விலங்குகளை வளர்த்துப் பழகிய காட்டுமிராண்டிகளின் பேரர்கள்தாம் நாங்கள். நேரே ஜீன்ஸ்சும் சேட்டும் சப்பாத்துக்களோடும் வந்து பிறந்துவிடவில்லை. காலத்தோடு சேர்ந்து நாம் நம்மையும் மாற்றிக்கொண்டுதான் வந்திருக்கிறோம்.

இன்றும் எல்லோரும் மாடுகட்டிச் சூடடித்துக்கொண்டிருந்தால், பெருகியுள்ள சனத்தொகைக்கு உணவுபோட முடியாது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம், வண்டில் கட்டிப் போய்க்கொண்டிருந்தால் வாழ்க்கை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதையும் தெரிந்திருக்கிறோம். இது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி. காலத்தின் சின்னம்.

பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதனால் அவை மூடப்பழக்கங்கள் என்று நாம் எண்ணவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவர்களால் அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று நாம் மாறித்தான் ஆகவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. பிறகு படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வாகனங்கள், குடுமிவைத்தல், வேட்டையாடுதல், ஆண் பெண் உறவு ஆகிய எண்ணங்களில் – பொருள்களில் எல்லாம் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம்.

பெரியம்மை என்ற நோய் வந்தால், சமீப காலம் வரை காட்டுமிராண்டிக்கால நம்பிக்கைகளையே வைத்திருந்த நாம், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இன்று மருத்துவ உதவிகளால் அந்த நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லையா? அதேபோல் கொத்துக் கொத்தாய் உயிர்களைப் பறித்துக்கொண்டிருந்த கொலரா, இளம்பிள்ளைவாத நோய் போன்றவற்றையெல்லாம் மருத்துவ வளர்ச்சியால் வென்றிருக்கிறோம்.

மாடு வெட்டி, ஆடு வெட்டி, கோழி வெட்டி… ஏன், தன் தலையைத் தானே வெட்டி வழிபாடு செய்த அந்தக்கால சடங்குகளையெல்லாம் மெல்ல மெல்ல மறந்துவிட்டு, எலுமிச்சம்பழம் அறுக்கவும், தேங்காய் உடைக்கவுமாக வழிபாட்டுச் சடங்குகளையும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. இன்றைய கால யதார்த்தத்திற்கு அமைவாக நம் சிந்தனையிலும் மாற்றம் வரவேண்டும். நம் கஷ்டங்களைத் துயர்களைத் தாண்ட முடியாமலிருப்பதற்கு நாம் கடந்தகாலத்து நினைப்புகளிலேயே தேங்கியிருப்பதும் காரணம். நகர்கிற நதியில்தான் அழுக்குகள் தங்காது@ தேங்கிய குட்டையில் புழுக்கள்தான் நெளியும்.

பகை வளர்ப்பதும், ஒரு நிலத்தில் இரு குழுக்கள் வாழமுடியாமல் இருந்ததும், மோதி ஒருவரை மற்றவர் வீழ்த்தி முடிவுகாண்பதும் குகைமனிதர் காலத்து முறைகள்.

பல்லின பல்கலாசாரங்களின் கூட்டிணைவும், பரஸ்பரம் பேச்சில் நம்பிக்கையும், இணக்கமும் வேறுபட்ட வண்ணங்களின் வானவில் சேர்க்கை அழகும் இன்றைய நம் வாழ்வின் முறைகள். எனவே எல்லோருமாய் வாழ்வதற்கென முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்!


...............................

Read more...

50 வயதுக்கு மேல் உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டுமா!

“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” 50 வயதுக்கு மேல் போய்விட்டாலே எப்பேற்பட்டவராக இருந்தாலும் இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்துவிடும். காரணம் நம் நோய்வாய் பட்டால் நம்மை கவனிப்பது யார்? என்ற பயம்.

உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அதிலும் வயது அதிகம் ஆக, ஆக இந்தப் பழக்கம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இளமை வயதைக் காட்டிலும், முதுமை வயதில் உடலுக்கு அதிகமான பராமரிப்பு தேவைப்படும்.

இந்த பராமரிப்பு, உடல் நலம் மட்டுமல்லாது, மன நலத்தையும், உணர்வுப்பூர்வமான நலத்தையும் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். வயது கூடும்போது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். எனவே 50 வயதுக்கு மேற்பட்டோர் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று திகைக்காதீர்.

ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவையும், செய்யும் உடற்பயிற்சியையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அமைகின்றது. கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடினமாக இருந்தாலும், முதுமை பருவத்தில் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதமாக இருப்பதனால், எப்பாடுபட்டேனும் பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

உணவுப் பழக்கம்- அன்றாடம் உண்ணும் காய்கறிகளோடு, பழங்கள், புரத உணவுகள், முழு தானியங்கள் மற்றும் அதிக அளவிலான தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக, ஆரோக்கியமான தேர்வை எளிதான தேர்வாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, ஒரு நாளின் தொடக்கத்தில் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பிக் கொண்டு, அதனை கண் எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உணவு அட்டவணையில் இல்லாத உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை சாப்பிட நேர்ந்தால், சரியான அளவில் உண்ணுதல் நலம்.

நடைப்பயிற்சி- வாழ்வின் பரபரப்புகளுக்கிடையே எளிதாக மேற் கொள்ளக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியே ஆகும். செல்ல நாயை நடைபழகக் கூட்டிச் செல்வதோ அல்லது பேரக் குழந்தைகளோடு பேசிக் கொண்டே நடந்து செல்வதோ, எதுவாயினும், குறிக்கோள் என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதாக இருக்கட்டும். இப்பயிற்சி உடலை உறுதி அடைவதற்கான பயிற்சியளித்து, இதயத்தை சீரான முறையில் இயங்க வைக்கும்.

தூக்கம்- நல்ல தூக்கம், ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியபங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஓய்வளித்து களைப்பை அகற்றி, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. கனவு கலையாமல் உறங்க வேண்டுமெனில் போன்கள், டேப்லெட்கள், லேப்டாப் போன்ற சாதனங்களை வேறு ஒரு அறையில் வைத்து விட வேண்டும்.

இதன் மூலம், படுக்கச் செல்லும் முன்பு கடைசியாகவோ அல்லது காலை எழுந்தவுடன் முதன் முதலாகவோ இச்சாதனங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தவிர்க்கலாம். மேலும், இவற்றிலிருந்து பளிச்சிடும் ஒளியோ அல்லது அதிர்வலைகளோ தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

உடல் பரிசோதனை- வழக்கமான பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம். குறிப்பாக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் எலும்புருக்கி நோய் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது அதிமுக்கியமாகும்.

மேலும் ஃப்ளூ காய்ச்சல், நிமோனியா, பெர்டுஸ்ஸிஸ், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகிய நோய்கள் தாக்காமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை பற்றி மருத்துவருடன் கலந்து ஆலோசிக்கவும்.

மதுபானம்- உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே குறைவாக அருந்துவது சிறந்த யோசனையாகும். மேலும், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் எந்த வகை அல்லது எத்தனை முறை எடுத்துக் கொள்கிறோம் என்பதெல்லாம் பொருட்டல்ல. இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நலம்.

நண்பர்கள்- நல்ல சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மனதளவில் சிறப்பான நலம் கிடைக்கும். எங்கேனும் ஒன்றாகக் கூடி சமைத்தோ அல்லது திரைப்படத்திற்கோ சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும்.

அதற்காக எப்போதும் கூட்டத்தின் மத்தியில் சிறகடிக்கும் சமூக பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டியதில்லை. மனதுக்குப் பிடித்த சில நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும்- மூளைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். மூளையை திறம்படுத்த, அறிவையும், ஞாபக சக்தியையும் கூர்மையாக்கக் கூடிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புத்தகம் படித்தல், திரைப்படம் பார்த்தல், மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்களான செஸ் மற்றும் ஸ்க்ராபிள் ஆகியவற்றில் ஈடுபடுதல், புதிர் விளையாட்டுக்களான குறுக்கெழுத்து மற்றும் சுடோகு போன்றவற்றை நிரப்புதல் போன்றவை அறிவை கூர்மையாக்கக் கூடிய சில வழிகளாகும்.

வெளியுலகம்- சுத்தமான வெளிக்காற்றை சுவாசிப்பதும், சூரிய ஒளியில் செல்வதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடக்கூடியனவாகும். ஒவ்வொரு நாளும் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். அதிலும் காலைச் சூரியனின் ஒளி, மனநிலையை ஊக்கப் படுத்தக்கூடிய செரோட்டோனின் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

படுக்கையறை- ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நலமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு உதவுகின்றது. பாலியல் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. முதுமையடையும் பருவத்தின் அத்தியாவசிய மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.

ஆதலால் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வது அவசியம். சொல்லப்போனால், ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, உடல்நலம், மனநலம் மற்றும் உணர்வுகளின் மேம்பாடு ஆகியவற்றை அளித்து, ஆரோக்கியத்தின் அனைத்து கூறுகளுக்கும் நலம் பயக்கக்கூடியதாகும்.

மனப்பான்மை- சிறந்த மனப்பான்மையுடன் இருப்பது நம்மை பற்றி உயர்வாக நினைப்பதற்கு வழிவகுக்கும். அதற்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்ப வேண்டும். அனைத்தையும் உயர்வான நல்ல எண்ணத்தோடு நோக்குவது மனப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தன்னிறைவு கொள்ள வைக்கும்.

அதிலும் மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நன்றாக உணர்ந்தால், நல்ல உடல் நலத்தைப் பெறுவதற்கான செயல்களில் நம்மால் மிக எளிதாக ஈடுபட முடியும். 50-ல் வரும் முதுமை நிச்சயம் ஒரு சுமையல்ல, இதனை பிள்ளைகளும் உணர வேண்டும்.

Read more...

சுவர்களினூடாக காட்சிகளை அவதானிக்கும் Wi-Vi நவீன தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியன அறிமுகமாகின. தற்போது இவற்றின் அடிப்படையில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத சுவர்களினூடான காட்சிகளை துல்லியமாக அவதானிப்பதற்கு Wi-Vi எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.

கணனி விஞ்ஞானம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் MIT நிறுவனத்தினால் குறைந்த செலவில் X-ray யினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த Wi-vi முறைமை ஆகும்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com